வியாழன், 5 அக்டோபர், 2023

அன்றொரு நாள் அரங்கனுடன்...

காலை கோவில் திறக்கும் நேரத்துக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் சென்று விடுவது என்று தீர்மானம் செய்திருந்தோம். 

ஐந்தரைக்கு திறக்கும் என்றார்கள்.  சீக்கிரம் தரிசனம் முடித்து ஹேமா தம்பதியர் சஷ்டியப்த பூர்த்திக்கு ஆறே முக்கால் ஏழு மணிக்குள் சென்று விடலாம் என்று தீர்மானம் செய்தோம்.  நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.... 

எங்கள் ஜோடிக்குழு மாரியம்மன் கோவில் சென்று வருவதாய் உத்தேசித்திருந்தார்கள்.  நாங்கள் அதற்குள் விழா நடக்கும் இடம் வந்து விடலாம் என்றுதான் எண்ணி இருந்தோம்.

ஞாயிற்றுக்கிழமை நான் ஸ்ரீரங்கத்தில் இருப்பதாக Face Book ல் போட்டிருந்ததை பார்த்த ஜெயக்குமார் சந்திரசேகர் சார், 'ப்ரம்மா கோவில் சென்று வரலாமே' என்று சொல்லி இருந்தார்.  'நேரம் இருக்காது' என்று சொல்லி இருந்தேன். பிரம்மாவும் இதைப் படித்திருப்பார் போல...  எங்கள் சென்னை அலுவலகத்திலிருந்து வந்திருந்த நண்பர்கள் சிலரும் ப்ரம்மா கோவில் பற்றி சொல்ல, சென்னை திரும்பும் வழியில் நேரமிருக்கும் பட்சத்தில் செல்ல முடிவு செய்தோம்.


காலை எழுந்து குளித்து, ஐந்தேகாலுக்கே கோவிலில் இருப்பது போல சென்று விட்டோம்.  இருள் பிரியாத அந்த அதிகாலை நேரத்தில் தெருவில் நடப்பதும், கோவிலை நோக்கி  செல்கிறோம் என்று உணர்வும் சுகம்.  வழியில் நல்ல காப்பிக் கடை தென்பட்டால் காபி குடிக்கலாமா என்கிற எண்ணத்தைத் துறந்து கோவிலை அடைந்தோம்.  பார்த்தால், ஏற்கெனவே அங்கு ஐம்பது அறுபது பேர் வெளியில் வரிசையில் நின்றிருக்க, அவர்கள் எல்லாம் ஆன்லைன் புக்கிங் செய்தவர்கள் என்று அறிந்தோம்.

என்ன செய்வது, எப்படி உள் நுழைவது என்று யோசித்தபடி செருப்பு விடும் இடத்திற்கு வந்தோம்.  இலவச சேவை என்று தான் போட்டிருந்தார்கள்.  ஆனாலும் என்ன நடக்கும் என்றும் தெரியும்தானே!  பாதுகா பாதுகாப்பு சேவை செய்யுமிடத்தில் பெண்கள்தான் இருந்தார்கள்.  அவர்களிடம் சில விவரங்கள் கேட்டபோது அவர்களில் ஒருவர் எங்களைக் கேட்டுக்கொண்டு செல்போனில் ஒருவரை அழைத்தார்கள்!  அந்த வகையில் காளஹஸ்தி போல இங்கு அறிமுகமான இளைஞர் சக்தி.  எங்கள் இருவரையும் சிரமமின்றி உள்ளே அழைத்துச் சென்று வர ஐநூறு ரூபாய் பேசினார்.  ஒப்புக்கொள்ளக் கூடியதாக இருந்ததால் சம்மதித்தோம்.    ஆன்லைனாவது..  மான்லைனாவது..  'இவர்களை' 'அவர்களுக்கு' தெரிந்திருந்தது.   அருகே செல்லச்செல்ல தடுப்புகள் அளவாய் நகர்த்தப்பட,  நாங்கள் 'ஆன்லைன் புக்கர்கள்' நுழையும் முன்னரே உள்ளே நுழைந்து டிக்கெட் எடுக்கும் இடம் சென்றோம்.   சினிமா தியேட்டர் போல டிக்கெட் வாங்கி கொண்டுதான் உள்ளே செல்ல வேண்டும் போன்ற அமைப்பு.  சிறப்பு தரிசனம் 100 ரூபாய்.   கறாராய் ஒரே விலை.  டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே சென்றால்.... 

எங்களுக்கு முன்னரே உள்ளே ஒரு கியூ காத்திருந்தது.  ஓரளவு அருகில்தான் நின்றிருந்தோம் எனினும் நிறுத்தி வைத்து விட்டார்கள். எங்களுக்கு முன்னால் இருந்த இளைஞர் துஷ்யந்த் ஸ்ரீதர் அளவு இல்லாவிட்டாலும் அதில் பாதி அளவு ஞானம் உடையவராய் இருந்தார்.  ஆர்தடாக்ஸ் உடையில் அவரும், மனைவியும், எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை, மற்றும் தம்பியுடன் இருந்தார்.  அவர்கள் பேசிக் கொண்டு இருந்ததை (ஒட்டு) கேட்டபடி நின்றிருந்தோம்.  நாங்களும் அவர்களுடன் கொஞ்சம் உரையாடினோம்.  நிறையபேர் இங்கும் ஆந்திராவிலிருந்து வந்திருந்தார்கள்.  தெலுங்கில் சளபுளசளபுள என்று மாட்லாடிக் கொண்டிருந்தார்கள்.   காளஹஸ்தியாவது ஆந்திரா சமீபம்.  ஆனால் ஜம்புகேஸ்வரத்திலும், இங்கும் கூட ஏன் ஆந்திரா வாசிகள் அதிகம் தரிசனத்துக்கு வந்திருந்தார்கள் என்று தெரியவில்லை. 

காளை, குதிரை, ஆண்டாள் யானை ஆகியோர் உள்ளே வருவார்கள் என்று சொன்னார்கள்.  அவர்கள் பெருமாளை தரிசனம் செய்து சென்ற பின்னர்தான் எங்களுக்கு செல்ல அனுமதி கிடைக்கும் என்றார்கள்.

காத்திருந்தோம். 

காத்திருந்தோம்....



முதலில் காளை வந்தது.  பிறகு டக்டக்டக்டக்கென வெண்புரவி சிலிர்த்தபடி உள்ளே வந்தது. காளை உள்ளே சென்று கண்காணாமல் நின்றிருந்தாலும் புரவி குளம்பின் உலோக ஓசையுடன் கால் மாற்றி கால் வைத்து, தவிப்புடன் நின்றிருக்கும் காதலி போல் தலையை மறைத்தபடி நின்று கொண்டிருந்தது.  

புகைப்படம் எடுக்க முயன்றபோது அங்கிருந்த காவலாளிகள் தடுத்தனர்.  ஆனாலும் சிலர் புகைப்படம் எடுத்தபடிதான் இருந்தனர்.

ஆண்டாள் வரும்போது வீடியோ எடுக்க கேமிராவை செட் செய்து, அது உள்ளே நுழையும் தருணம் சட்டைப்பையில் வைத்து எடுக்க திட்டமிட்டிருந்தேன்.  ஆனால் சட்டைப்பையில் வைத்ததும் ரெக்கார்டிங் நின்று விட்டது பின்னர் தெரிந்தது.

ஆண்டாள் யானை உள்ளே வந்தது ஒரு இனிய, சிலிர்ப்பான அனுபவம்.  மேலதிகாரி, காவல் அதிகாரி என்று பலரும் காத்திருந்தனர்.  அவர்கள் எல்லாம் தினசரி இந்தக் காட்சியைக் காண்பவர்கள்.  ஆண்டாளின் யானையின் மணியோசை நெருங்கியபோது அனைவரும் பரபரப்படைந்தனர்.

கதவின் வழியே அந்த மாபெரும் உருவம் வந்து, திரும்பி, அடிமேலடி வைத்து வந்தபோது உடல் சிலிர்த்துப் போனது.  அந்த நிமிடம் அதற்கு குணம் மாறினால் எங்கள் கதியெல்லாம் என்ன ஆகும் என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் வந்தபோது முதுகுத்தண்டு சில்லிட்டது!  அங்கிருந்த தடுப்புக் கம்பிகளுக்குள் இங்கும் அங்கும் தள்ளி தடுப்பாலேயே எங்களை லாக் செய்து வைத்திருந்தார் காவலாளி.

யானையை வெளியில் அது நிற்குமிடத்தில் அருகில் பார்த்திருக்கிறேன்.  ஆனால் நம்மை நோக்கி வந்து நம் அருகே, வெகு அருகே திரும்பும் யானையை இப்போதுதான் முதலில் பார்க்கிறேன்.  அந்தக் கதவின் வழியே அது உள்ளே வரும்போது நேரே சுவரை ஒட்டி நின்று கொண்டிருக்கிறோம் நாங்கள்.  காதில் அறைந்தது அதன் மூச்சோசை.  அதன் சிறிய ஓரக்கண்ணால் என்னையே பார்பபது போல ஒரு பிரமை.  ஆனால் என்னையும் பார்த்தது!  அதன் கண்களில் இன்று நான் படும் பாக்கியம் எனக்கு...  பாகனைப் பார்த்தால் ஸ்ரீதரன் போல தெரியவில்லை.  பின்னர் கேட்டபோது அது ஆண்டாள் இல்லை, இன்னொரு யானை லஷ்மி என்றனர் சிலர்.  அவ்வளவு பெரிய உருவம், அவ்வளவு பலம் வாய்ந்த அந்த ஜீவன் சிறிய மனிதர்களின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு சொன்னபடி கேட்டு நடந்தது அதன் பெருந்தன்மை.  வாழ்வில் மறக்க முடியாத காட்சி.  மனிதனின் கடவுள் நம்பிக்கைக்கு அதுவும் இரை(றை)!

தினமும் அதை தரிசனம் செய்யும் காவலாளி, அதிகாரிகள் உட்பட அனைவருமே பிரமித்து ஆ வென பார்த்தார்கள் என்றால் என் போன்றவர்கள் எம்மாத்திரம்!  அது உள்ளே இடதுபுறம் திரும்பிச் சென்று எங்கள் கண்களிலிருந்து மறைந்ததது.  அப்புறம் இருக்கும் படியேறி உள்ளே சென்றதா என்பதை நான் அறியேன்.   நீளவாக்கில் குறுகிய படிகள்.  அதனால் கால் வைத்திருக்க முடியுமா, தெரியாது.  அரை மணி நேரத்தில் மூன்றும் ஒவ்வொன்றாக வெளியேறின.  மறுபடியும் சுவர்கள் சூழ்ந்த ஒரு கட்டிடத்துக்குள் யானையின் அருகாமை தரிசனம் சிலிர்க்க வைத்தது.  என்னைத் தவிர எல்லோரும் செல்லும் கையுமாக இருந்தார்கள்.  நான் செல்லை மறந்து, காணற்கரிய அந்தக் காட்சியை கண்களால் கைது செய்து மனதில் இருத்தி, சந்தோஷத்தை சொட்டு சொட்டாக பருகியபடி இருந்தேன்.  






ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும் சக்தி தன்னை அழைக்கச் சொல்லி இருந்தது நினைவில் இருந்தும் ஏனோ எனக்கு அழைக்கத் தோன்றவில்லை.  இன்னும் கொஞ்ச நேரம் காத்திருந்த பிறகு மெல்ல நகர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சென்றோம். இங்கும் ஆன்லைன் ரிசர்வேஷன் என்று கூறிக்கொண்டு சிலரை தடுப்பைத் திறந்து உள்ளே விட்டபடி இருந்தார்கள்.  

சீருடை உடுப்பில் இருந்த காவல்துறை அதிகாரிகளே சிலரை அழைத்து வந்து வரிசையின் இடையில் இணைத்துக் கொண்டிருந்தார்கள்.    பின்னர் சக்தியிடம் இதுபற்றி கேட்டபோது "நாங்கள் பரவாயில்லை ஸார்..  சீப்.  அவர்கள் பீஸ் ஐயாயிரம் ரூபாய்" என்றார்.

உள்ளே சென்று துளசி மாலையை கொடுத்ததும் எங்கள் கண்முன்னாலேயே அதை எதிரிலிருந்த திறந்த வெளியில் போட்டார்கள்.  அதைத் தவறு சொல்ல முடியாது.  அரங்கனின் முக தரிசனம் மட்டுமே கிடைத்தது.  தைலக்காப்பு என்றும் முழு தரிசனம் அக்டோபரில் கிடைக்கும் என்றும் சொன்னார்கள்.  எங்களுக்கு முன் நின்றிருந்த அந்த மூவர் கொஞ்சம் செல்வாக்கானவர்கள் என்பது சன்னதியில் அவர்களுக்கு கிடைத்த வரவேற்பில் தெரிந்தது.  அவர்களோடு பேசிக்கொண்டே கியூவில் நகர்ந்ததால், அவர்களோடு வந்தவர்கள் நாங்கள் என்று பட்டாச்சார்யார்கள் நினைத்திருக்கலாம்.  கொஞ்ச நேரம் நன்றாக நின்று அரங்கனை தரிசிக்க முடிந்தது.  கண்கள் ஏன் கலங்கின என்று மட்டும் தெரியவில்லை!  ஏதோ நம்மையும் மீறிய சுயபரிதாபம்!

ஒரு காலத்தில் எவ்வளவு சுதந்திரமாக மக்கள் இந்த தரிசனங்களை செய்திருப்பார்கள்..  இப்போது அரசாங்கம் உள்ளே நுழைந்து கட்டுப்பாடு, காவல், கம்பித்தடுப்பு, வரிசை, பாதுகாப்பு என்கிற பெயரில் பாடாய்ப் படுத்துகிறது.  காசு..  காசு..  காசு..

இங்கு நின்றிருந்தபோதே கொஞ்சம் கொஞ்சமாக பாஸின் கால்கள் வலிக்கத்தொடங்கி, நடக்கவே முடியாமல்  மிக மிக சிரமப்பட்டார்.  வெளியில் வந்து ஆண்டாள் சன்னதியை நோக்கி நடக்கவே முடியவில்லை.  இங்கும் தாயாரை தரிசித்துதான் அரங்கனை சேவிக்க வேண்டுமா, தெரியவில்லை.  எங்கள் போக்கில் நாங்கள் நடந்தோம். பேட்டரி வண்டிகள் ஹவுஸ் ஃபுல்லாய் தாண்டி சென்று கொண்டிருந்தன.   தன்வந்திரி சன்னதியில் தரிசனம் செய்யவேண்டும் என்றார் பாஸ். உறவினர் கொடுத்த பணம் ஒன்றை அங்கிருக்கும் உண்டியலிலும் போடவேண்டி....   அதைத் தாண்டிதான் தாயார் சன்னதி சென்று வந்திருந்தோம்.

மீண்டும் அதைத் தேடிக்கொண்டு வந்த வழி வந்தால் மறுபடி அதைத் தவறவிட,  பாஸின் நொண்டிய நடையைக் கண்டு இரக்கப்பட்ட ஒரு பேட்டரி டிரைவர் இரண்டு சீட்களை காலியாய் வைத்துக் கொண்டு வந்து எங்களை ஏற்றிக்கொண்டு அரங்கன் சன்னதிக்காய் மறுபடி செல்ல, வழியில் நாங்கள் தன்வந்திரி சன்னதி பற்றி கேட்க, வண்டியில் அருகிலிருந்த ஒரு பஞ்சக்கச்ச ஐயங்கார் மாமா, மாமி 'நீங்கள் ஏறினீர்களே அதன் பின்னால்தான் தன்வந்திரி சன்னதி' என்று கூற, பாஸின் கால்வலி தண்டனை போல மறுபடி இறங்கி வந்த வழியே எக்ஸ்டரா நடை நடந்தோம்.  பாவம் பாஸ்.

கோவிலுக்காய் வராமல், அதை இரண்டாம்பட்சமாக வைத்து வந்ததற்கா,  இல்லை வேகமாக தரிசனம் செய்து முடித்து, வேகமாகச் செல்ல வேண்டும் என்று நினைத்ததற்கான பலனா, இல்லை மறுபடி ஐநூறு ரூபாய் குறுக்கு வழி பலனா  என்று எங்களுக்குள் பேசியபடியே சென்றோம்.

========================================================================================================




பற்ற வைப்பதற்கு முன் ஒரு நிமிஷம்..!” என்ற தலைப்போடு, கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா சிகரெட்டை நிறுத்துவது பற்றி எழுதி இருக்கிறார்.  

==============

“மூச்சு ஆராய்ச்சி நிறுவனம் (ரெஸ்பிரேட்டரி ரிசர்ச்ஃபவுண்டேஷன்) சென்னை வடகிழக்கு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், டாக்டர் நரசிம்மன் அவர்கள் கிரானிக்அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசீஸ் (C.O.P.D) - பிடிவாதமான சுவாசத்தடை வியாதி) மனிதனைக் கொல்வதில், மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது என்று சொன்னார். இதய நோய், புற்றுநோய் போன்றவை மெள்ள மெள்ள குறைந்து வரும்போது ஸி.ஓ.பி.டி முதலிடத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறதாம்..

இந்தக் கூட்டத்தில் புகைப்பதை கைவிடுவது எப்படி என்கிற தலைப்பில் உரையாற்ற அழைத்திருந்தார்கள். இதற்கு நான் தகுதியான ஆள்தான். 1986 வரை ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் – ப்ளேயர்ஸ், பிறகு கோல்டு ப்ளேக், இறுதியாக வில்ஸ் ஃபில்டர் பிடித்தவன். அதை ஒரே நாளில் கைவிட்டவன்.

சிகரெட் பழக்கம் தற்செயலாகத்தான் ஏற்படுகிறது. குறிப்பாக வீட்டில் கட்டுப்பாடாக வளர்ந்த இளைஞர்கள் அதை ஒருவிதமான defiance (எதிர்ப்பு காட்டும் மனப்ப்பான்மை) ஆகப் பழகிக்கொள்கிறார்கள். ஸ்ரீரங்கத்தில் குடுமி வைத்துக்கொண்டு பிரபந்தம் சொல்லிக்கொண்டிருந்த நண்பன் வேலை கிடைத்து, டெல்லி வந்து குடுமியை நறுக்கிய கையோடு மகாவிஷ்ணு சங்கு சக்கரம் போல் கையில் ‘பனாமா’ பற்றவைத்துக் கொண்டான். ரிட்டயர்ட் ஆனப்புறம்தான் நிறுத்தினான்.

இக்கால இளைஞர்கள் பெண் சிநேகிதிகள் முன்னால் ஸ்டைலாக சிகரெட் பற்றவைத்து ஒரு இழுத்து இழுத்து விட்டுப் பேசிக் கொண்டே வார்த்தை வார்த்தையாக புகையை வெளிவிடுவது ரொம்ப ஸ்டைலாக இருக்கும். சில காதலிகளும் இதைக் கல்யாணம் வரை விரும்புவார்கள். பிள்ளை பிறந்ததும் அதன் தலைமேல் சிகரெட் புகை வாசனை வரும்போது பழக்கத்தை கைவிட்டே ஆகவேண்டும். இல்லையேல் சுளுக்கு.
என் சிகரெட் பழக்கம்… எம்.ஐ.டி. (M.I.T) ஹாஸ்டலில் வெள்ளிக்கிழமை மெஸ்ஸில் டின்னர் கொடுக்கும் போது ஒரு 555 சிகரெட் தருவார்கள். அப்போதெல்லாம் அதன் விலை நாலணா. அதை நண்பனிடம் கொடுத்து அவன் புகை வளையம் விடுவதை வேடிக்கை பார்ப்பேன். ஒரு நாள் நாமே குடித்துப் பார்க்கலாமே என்று தோன்றியதில் பழக்கம் ‘பச்சக்’ என்று ஒட்டிக்கொண்டது.

சிகரெட் பழக்கம் ஒரு சனியன். லேசில் நம்மை விடாது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் என்னுடன் அது இருந்தது. சில சமயம் சிகரெட் பிடிப்பதற்காகவே எதையாவது சாப்பிடுவேன். கொல்லைப்புறம் போவதற்கு சிகரெட் பிடித்தாக வேண்டும்.

சாப்பிட்டவுடன் கட்டாயம் பிடிப்பேன். சிந்தனா சக்தி வேண்டும் என்று வெத்து காரணம் சொல்லி பற்றவைத்து விரலிடுக்கில் வைத்து சாம்பலை சொடுக்குவேன். இதனால் பல சுவைகளை, வாசனைகளை இழந்தேன். இவ்வாறு அது என்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வபோது ‘ச்சே’ என்று தோன்றி நிறுத்திவிடத் தீர்மானிப்பேன். ஒவ்வொரு புதுவருஷமும் தவறாத வைராக்கியமாக சிகரெட்டை நிறுத்துவேன். அது சில சமயம் பிப்ரவரி வரி நீடிக்கும். சில சமயம் ஜனவரி 2ம் தேதி வரை.

பெங்களூரில் ஒரு முறை செக்கப்புக்கு போனபோது டாக்டர் பரமேஸ்வரன் “ரங்கராஜன், நீ சிகரெட் பழக்கத்தை கைவிட வேண்டும்” என்றார்.

“ஏன்?’ என்றேன்.

‘உன் ஹார்ட் சரியில்லை” என்றார்.

“எப்போதிலிருந்து விட வேண்டும்? என்று கேட்டதற்கு

‘நேற்றிலிருந்து” என்றார்.

“கைவிடாவிட்டால் என்ன ஆகும்?” என்றேன்.

“ஹார்ட் அட்டாக்… லங்கேன்சர்.. யூ ச்சூஸ்.. நீதான் எத்தனையோ படிக்கிறாயே… உனக்கு சொல்ல வேண்டுமா?”

இந்த முறை பயம் வந்து விட்டது. ஞாபகம் வைத்துக் கொள்வதற்குத் தோதாக ஆகஸ்ட் பதினைந்தைத் தேர்ந்தெடுத்து பெல்காலனி தெருநாய் ஜிம்மி உள்பட அனைத்து நண்பர்களிடமும், “நான் சிகரெட்டை நிறுத்திவிட்டேன்” என்று அறிவித்தேன்.

இது முக்கியம். யாராவது நான் புகைபிடிப்பதை பார்த்தால் உடனே உலகத்துக்கும் மனைவி மக்களுக்கும் தகவல் சொல்லிவிடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தினேன்.

சிகரெட் பழக்கம் என்பது பைனரி இதைத் தெளிவாக உணரவேண்டும். ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை. – சிகரெட் பிடிப்பவர், பிடிக்காதவர், அவ்வளவுதான். குறைவாக பிடிப்பவர்… எப்போதாவது பிடிப்பவர்… இதெல்லாம் ஏமாற்று வேலை.

கைவிடுவதாக இருந்தால் முழுவதும் கைவிட வேண்டும். இருபது சிகரெட்டிலிருந்து பத்து, பத்திலிருந்து 8 என்று குறைப்பதெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது.

முதல் தினம் நரகம். முதல் வாரம் உபநரகம். சிகரெட் இல்லாமல் உலகமே பாழாகி இருக்கும்… இந்த இம்சை தேவையா என்ற ஏக்கத்தைச் சமாளிக்க நிறைய ஐஸ்வாட்டர் குடிக்க வேண்டும். சிகரெட்டுக்கு பதிலாக பாக்கு, பான்பராக்என்று புகையிலையின் எந்த வடிவமும் கூடாது. வேறு ஏதாவது வேலையில் கவனம் செலுத்துவது உத்தமமானது. நீங்கள் விட்டுவைத்த புல்புல்தாரா வாசிப்பது, இயற்கை காட்சிகளை வரைவது, கவிதை எழுதுவது போன்ற பயனுள்ள பொழுது போக்குகளைத் தொடரலாம்.
உதடுகளில் லேசாக நடுக்கம் ஏற்படும் போதெல்லாம் குளிர்ந்த தண்ணீர் குடித்துவிட்டு "யார் தெச்ச சட்டை… எங்க தாத்தா தெச்ச சட்டை… தாத்தா தெச்சசட்டை சட்டைப்பைல பாத்தா ரெண்டு முட்டை” என்று தொடர்ந்து சொல்ல வேண்டும். பக்கத்தில் இருப்பவர்கள் புகார் செய்தால், “ஒரு வாரம் அப்படித்தான் இருக்கும்” என்று அவர்கள் மேல் பாயலாம். யாரையாவது அடிக்க வேண்டும் போல இருக்கும். அதற்கு வசதியில்லையென்றால் ஒரு மேளம் வாங்கிக் கொள்ளுங்கள்… கூடவே உதைப்பதற்கு ஒரு கால்பந்தும், சுழற்ற ஒரு சாவிச் சங்கிலியும் வைத்துக் கொள்ளலாம். (கண் ஜாக்கிரதை) ஒரு வாரமானதும் பழக்கம் லேசாக வாலைச் சுருட்டிக் கொள்ளும்.

நாட்களை எண்ணத் துவங்கலாம். தமிழ்ப்படங்கள் போல வெற்றிகரமான பத்தாவது நாள்… இன்று பதினைந்தாவது நாள்.. சூப்பர்ஹிட் ஐந்தாவது வாரம்.. இப்படி, மெள்ளமெள்ள நண்பர்களிடம், மனைவியிடம் பீற்றிக் கொள்ளத் துவங்கலாம். போஸ்டர் கூட ஒட்டலாம். ஆனால், இந்தக் கட்டத்தில் சிகரெட் குடிக்கும் நண்பர்கள் அருகே செல்வதும் மிதப்புக்காகப் பையில் குடிக்காமல் சிகரெட்வைத்துக் கொள்வதும் விஷப் பரீட்சைகள்.

பழக்கத்தை விட்ட நாற்பத்தெட்டாவது நாள் முதல் மைல்கல் தாண்டி விட்டீர்கள். ஒரு சிகரெட்டை எடுத்து அதைப் பற்ற வைக்காமல் மூக்கில் ஒட்டிப்பார்த்து விட்டு ‘ச்சீ நாயே’ என்று சொல்ல முடிந்து, விட்டு அழுகை வராவிட்டால் பரீட்சையில் பாஸ். இனியெல்லாம் சுகமே.

சிகரெட் பழக்கம் நம்முடன் அஞ்சு வருஷம் தேங்குகிறது என்று டைம் பத்திரிக்கையில் படித்தேன். அதாவது சிகரெட்டை நிறுத்துன அஞ்சு வருஷத்துக்குள் ஒரு சிகரெட் பிடித்தாலும் மறுதினமே பழைய ஞாபகம் உசுப்பப்பட்டு பத்தோ, இருபதோ வழக்கமான கோட்டாவுக்கு போய்விடுவீர்கள். அஞ்சு வருஷம் தாண்டிவிட்டால் பழக்கம் போய்விடுகிறது.”

=====================================================================

இணையத்தில் ரசித்த படம்...  காலாச்சார மாறுதலும், வியப்பான அதிர்ச்சியும்...


]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

ஒரு ஹோட்டலில் கடாய் பனீர் என்று ஆர்டர் செய்திருந்தோம்.  அதை அவர்கள் செர்வ் செய்த பாத்திரமே கடாய் வடிவில்..!


=====================================================================================================

2020 ல் வாட்சாப். செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், பேஸ் புக் எல்லாவற்றிலும் கொரோனா செய்திகளே கண்ணில் பட, அதை மறக்கடிக்க அப்போது 'வெட்டி ஆராய்ச்சி' என்கிற பெயரில் சிலவற்றை பேஸ் புக்கில் பகிர்ந்து வந்தேன்.  அவற்றில் ஒன்று...


[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[

பொக்கிஷம்  :-








][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]


நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 

செய்திகள் 05.10.23

- பிறந்தநாள் விழாவில் வைக்கப்பட்டிருந்த ஹீலியம் பலூன்களில் வெடித்து மூன்று குழந்தைகள் காயம். கேக் வெட்டும் இடத்தில் பல ஹீலியம் பலூன்கள் இருந்தன கேக்கில் மெழுகுவர்த்தி வைத்து தீபம் ஏற்றியதும் பலூன்கள் வெடித்ததில் குழந்தைகளுக்கு 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக காயம்.

- ஆறுமாத குழந்தை இறந்ததற்கு அதிக சத்தம் காரணமா? பிறந்து ஆறு மாதமே ஆன குழந்தைக்கு பால் புகட்டி உறங்கச் செய்த குழந்தை தூக்கத்திலேயே இறந்து விட்டது. அதற்கு காரணம் அவர்கள் வீட்டிற்கு அருகில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக அதிக ஓசையில் ஒலித்த பாடல்கள் தான் காரணம் என்று அந்த குழந்தையின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  

- முன்பு எப்போதும் இல்லாத அளவு கடந்த செப்டம்பரில் சாதாரண கார்கள் மற்றும் SUV கார்களின் விற்பனை அதிகரிப்பு. அதுமட்டுமின்றி சென்ற மாதத்தில் டீசல் விற்பனை குறைந்து பெட்ரோல் விற்பனை அதிகரிப்பு.

- இந்த வருடம் தீபாவளிக்கு குழந்தைகளை கவரும் வண்ணம் அவர்களுக்கு பிடித்த   மிக்கி மவுஸ், மோட்டு பட்லு போன்ற கார்டூன் பாத்திரங்கள் வடிவில் பட்டாசுகள் விற்பனைக்கு வருகின்றன.

121 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார்.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    ஸ்ரீ ரங்கம் தரிசனம் கண்டேன். ஸ்ரீ ரங்கநாதனை நாங்கள் சென்று போன வருடம் தரிசனம் செய்த அந்த நேரத்தை மறவாமல் (மறந்தால்தானே) நினைவில் கொண்டு வந்தது. அதை என் பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன். அது மெய்சிலிர்த்த ஒரு தருணம் அது இனி மீண்டும் ஒரு முறை கிடைக்க வேண்டுமெனவும் காத்திருக்கிறேன். கிடைப்பதற்கு அவன்தான் அருள வேண்டும். தங்களின் பகிர்வுக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரங்கனை தரிசித்த உங்கள் நினைவையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    ஸ்ரீ ரங்கனின் கோபுர தரிசனம் எழுந்ததும் கிடைத்தது மகிழ்ச்சி. மற்றும் உள்ளே குதிரை வழிபடுவது, மற்றொரு படம் என அனைத்துமே அழகு. , அங்கு நடப்பதை நீங்கள் நன்றாக எழுதியுள்ளீர்கள். நாங்களும் முதலில் முறையாக எங்கு சென்று வழிபடுவது எனத் தெரியாமல்தான் நேரே சென்று ரங்கனை சந்தித்தோம் தவிரவும் அது பெரிய கோவிலாகையால், சுற்றவும் இயலவில்லை. ஆனால் இந்த பணம் படுத்தும் பாடு இறைவனை மனம் ஒன்றி தரிசிக்க இயலாது செய்து விடுகிறதென்னவோ உண்மைதான்.

    /கொஞ்ச நேரம் நன்றாக நின்று அரங்கனை தரிசிக்க முடிந்தது. கண்கள் ஏன் கலங்கின என்று மட்டும் தெரியவில்லை! ஏதோ நம்மையும் மீறிய சுயபரிதாபம்!/

    அந்த நேரம் மட்டும் பணத்தையும், அதன் மதிப்பை மட்டுமே உணரும் மனிதர்களை விடுத்து இறைவனும் நம்மை நினைக்கிறானோ என எனக்கும் தோன்றும். கண்களையும், மனதையும் கலங்கச் செய்து விடுகிறான். அந்த சில நொடிகள் அற்புதமான தரிசனத்தை தாங்கள் கண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.

    அங்கு தங்கள் பாஸுக்கு கால் வலி வந்ததுதான் வருத்தமாக இருந்தது. பிறகு இறைவன் அருளால் குணமாகியிருப்பார் என நம்புகிறேன். பிறகு கோவிலை சுற்ற நேரமும், சுகவீனமும் இடம் கொடுத்தா?

    மிகுதி பகுதிகளை படித்து விட்டு வருகிறேன். கடமை அழைக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அக்கா.. பாஸின் கால் வலி ஒரு தொடர்கதை. அவருக்கு வேறு சில தொந்தரவுகள் உண்டு. தொடர்கின்றது. அரங்கனையும், திருப்பதி பெருமாளையும் பார்க்கும்போது மட்டும் கண்கள் கலங்குவது, மனம் விலகுவது ஏனென்று தெரியவில்லை.

      நீக்கு
  4. எனக்கு எதேச்சையாக 2010ல் விஸ்வரூப தரிசனம் கிடைத்தது. அப்போது மனைவியும் உடனிருந்தார். பையனைக் கூட்டிக்கொண்டு போகலையே என வருந்தினேன். அப்போது, துவாரபாலகருக்கு அருகில் நின்றிருந்தோம். ஆண்டாள் யானை படியேறி அங்குவந்து நின்றது. ரொம்பவே சிலிர்ப்பான அனுபவம். பிறகு ஓரிரு முறைகள் சென்றிருக்கிறோம்.

    சமீபத்தில் மன்னார்குடியில் விஸ்வரூப தரிசனம், செங்கமலம் யானை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஸ்வரூப தரிசனம் கண்டதில்லை.  யானையை மூடிய சுவருக்குள் அவ்வளவு கிட்டத்தில் பார்த்தது அதுவே முதல் முறை.

      நீக்கு
  5. யானை அருகில் நிற்கும்போதுதான் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது தெரியும்.

    அதுபோலச்்சிங்கத்தை அல்லது கரடியை நேருக்கு நேர் பார்த்தால்தான் நாம் எவ்வளவு பலகீனமானவர்கள் என்பது தெரியும் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. உண்மையிலும் உண்மை. ஆனால் இரண்டாவது உதாரணத்தில் நமக்கு உணர நேரம் இருக்காது!!!

      நீக்கு
  6. இறை தரிசனமே அவன் விருப்பப்பட்டால்தான் நடக்கிறது என்பது என் அபிப்ராயம்.

    கோவில்களில் கல் தரை, ரொம்ப நேரம் நின்றால் பாதவலி வருவது சகஜம். ஆனாலும் பாஸ் விஷயத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். வீட்டில் எம்சிஆர் செப்பல் பயன்படுத்தணுமா என மருத்துவரிடம் கேளுங்கள். எனக்குப் பிரச்சனை வந்தபோது கோவில் தளங்களில் வெறும்காலுடன் நடக்கக்கூடாது என்றார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இறை தரிசனமே அவன் விருப்பப்பட்டால்தான் நடக்கிறது என்பது என் அபிப்ராயம். //

      உண்மை.  2019 ல் திருப்பதி வாசல் வரை சென்று பெருமாளை தரிசிக்க முடியாமல் போனது நினைவுக்கு வருகிறது.  சில சமயங்களில் அலுத்துப்போகும் அளவு காத்திருந்தபின் கிடைக்கும் தரிசனம் மனதுக்கு ஒரு பெரிய நிறைவை தந்து கண்ணீர் வரவழைத்து விடுகிறது.  இது மனிதர்களின் காத்திருப்புக்குப் பொருந்தாது.

      பாஸ் வீட்டில் எம் சி ஆர் செப்பல் போடுகிறார்.  கிச்சனில் போடுவதில்லை!

      நீக்கு
    2. கோவில் தரை (கல் தரை) பாதங்களுக்குச் சரிப்படாது (ஏற்கனவே பிரச்சனை உள்ளவர்களுக்கு). நான் மன தைரியத்தில்தான் திருப்பதியில் (அங்க நால் வீதிகளிலும் செருப்பு போட முடியாது), மற்றும் கும்பகோணம் சுற்றியுள்ள பெரிய பெரிய பிரம்மாண்டமான கோவில்களில் வெறும் பாதங்களுடன் செல்வேன்

      நீக்கு
  7. திருப்பதியில் அவனருளால் அவனைச் சேவிக்கும்போது மனம் சிலிர்ப்படையும். அதிலும் வெள்ளிக்கிழமைகளில், துவாரபாலகர்களைத் தாண்டும்போது பச்சைக்கற்பூரம் மிக மிக அடர்த்தியான மணத்தில்.... அது ஒரு தனி அனுபவம். தொடர்ந்து ஐந்து நாட்கள் சேவித்துத் கோதும் என்ற திருப்தி தராத அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிலுக்கென்றே ஒரு மணம் உண்டு.  அந்த மணத்தால் சூழப்படும்போது மனம் மயக்குகிறது.  பரவசம் உண்டாகிறது.

      நீக்கு
    2. வெள்ளியன்று திருமண் காப்பு (பச்சைக்கற்பூரம்) சாத்துவார்கள். அதனால் மணம் மிக மிக அதிகமாக இருக்கும். அன்றைக்கு சாற்றுமுறை சேவை வழக்கமான 6 மணிக்கு அல்லாமல் 7 1/2 மணிக்கு மேல்தான் நடக்கும்.

      நீக்கு
  8. அது வெட்டி ஆராய்ச்சி இல்லை. தகவல் களஞ்சியும். ஒவ்வொரு வியாழனும் ஏதாவது புதுமையாகக் கிடைப்பது வியாழன் எபியை அர்த்தமுள்ளதாக்குகிறது.
    அடுத்த வாரம் வேறொரு புதுமையை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி சார்..  செய்தித்தாள் தொகுப்பை பேஸ்புக்கில் செய்திருந்தேன்.  கிரோனா காலத்தில்.  புதுமை...?  முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  9. கடாய் பனீரைப் பார்த்ததும், சமீபத்தில் பெங்களூர் கேஃப் என்ற பெரிய ஹோட்டலில், ஒரு பெரிய ஜிலேபி, அதனில் இட இரண்டு குழாய்களில் ரஃப்டி, படம் காண்பிக்க ஜிலேபி இருந்த தட்டில் நைட்ரஜனை இட்டு மூடி போட்டு மூடி என ஜிகினா வேலைகள்... 400 ரூபாய்.... அது மாத்திரம் வெட்டிச் செலவு என்று தோன்றியது. 20 ரூபாய் கொடுத்து ஜெயநகர் 9ம் பிளாக்கில் இதைவிடத் திருப்தியாகச் சாப்பிட்டது நினைவில் வந்துபோனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  சமயங்களில் எக்கச்சக்க காசு கொடுத்து உப்புசப்பின்றி சாப்பிடுவதைவிட சிறிய கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கும் பண்டம் ருசியாக இருக்கும்!

      நீக்கு
  10. ஜோக்குகள் சிரிப்பை உண்டாக்காத்தின் காரணம் என்னவாயிருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோக்குகள் என்கிற பெயரில் அவர்கள் துணுக்குகளை போடுவதால்!

      நீக்கு
  11. சிகரெட் பிடிப்பவர்களைக் கண்டாலே எனக்கு சிறுவயதிலிருந்து பிடிக்காது. அவங்க குழந்தை முகத்தில் புகையை ஊதட்டுமே எதற்கு பலரும் நிற்கும் பொதுவெளியில் ஊதறாங்க என்று நினைப்பேன்.

    சமீப காலமாக வெடி வெடிப்பவர்களைப் பற்றியும் அவ்வாறே எண்ணம் தொன்றும்.

    அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் செய்யும்படியான பழக்கங்களை நாம் ஏன் கடைபிடிக்கிறோம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான் எனக்கும்.  என் மாமா சிகரெட் பிடிக்க கம்பெனிக்கு என்னை அழைத்துக்கொண்டு பேசிக்கொண்டே நடப்பார், பிடிப்பார் முன்பு!

      நீக்கு
  12. பட்டாச வகை ஆபத்துக்களை குறைத்துக் கொண்டால் சிறார்களுக்கு நல்லது. அறிவார்ந்த பெரியவர்களுக்கோ கொண்டாட்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் வெடி சத்தம் அலர்ஜியாகத்தான் இருக்கிறது.

      நீக்கு
    2. சிறுவயதில் இருந்த கொண்டாட்டம் அப்புறம் இருப்பதில்லை. இப்போதெல்லாம் சிறுவயதினருக்கே அந்த கொண்டாட்டம் இருப்பதில்லை!

      நீக்கு
  13. இருள் பிரியாத அந்த அதிகாலை நேரத்தில் தெருவில் நடப்பதும், கோவிலை நோக்கி செல்கிறோம் என்று உணர்வும் சுகம். //

    டிட்டோ. அந்த சுகம் அலாதியானது. ஊரில் இருந்தவரை, திருவனந்தபுரத்தில் இருந்தவரை இதை அனுபவித்திருக்கிறேன். கிட்டத்தட்ட தினமும் எனலாம். அதிகாலை நடையே சுகம்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. காளை, குதிரை, ஆண்டாள் யானை ஆகியோர் உள்ளே வருவார்கள் என்று சொன்னார்கள். அவர்கள் பெருமாளை தரிசனம் செய்து சென்ற பின்னர்தான் எங்களுக்கு செல்ல அனுமதி கிடைக்கும் என்றார்கள்.//

    ஆஹா! முதல் மரியாதை! ரசித்தேன். பின்ன நமக்கு முன்னரே இவங்க எல்லாம் எவ்வளவு சேவை செய்திருக்காங்க இறைவனுக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. பரணீதரனின் கையெழுத்து அழகாக தெளிவாக இருக்கிறது.
    ஜோக் சித்திரக்காரர்களில் அவர் தான் சிறப்பான கையெழுத்து கொண்டவர் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லது தெளிவாக தன் பெயரை பொறிக்க விரும்பினார் போலும்!  (பரணீதரனா?  யார், எங்கே என்று கேட்பேன் என்று எதிர்பார்த்தீர்களோ?!)

      நீக்கு
  16. புரவி குளம்பின் உலோக ஓசையுடன் கால் மாற்றி கால் வைத்து, தவிப்புடன் நின்றிருக்கும் காதலி போல் தலையை மறைத்தபடி நின்று கொண்டிருந்தது. //

    சிரித்துவிட்டேன். ஆனால் வர்ணனையை ரசித்துச் சிரித்தேன். படமும்தான்!

    லக்ஷ்மி யானை வந்ததை வர்ணித்த இடத்தையும் மிகவும் ரசித்து வாசித்தேன், ஸ்ரீராம். அப்படியே நானும் அங்கு இருந்ததைப் போன்று நினைத்துக் கொண்டு வாசித்தேன்.

    ஆனால் யானைகளை நாம் ரொம்பவும் படுத்துகிறோமோ என்றும் தோன்றுவதுண்டு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் படுத்துகிறோம். அவைகளும் அன்புக்கு கட்டுப்படுகின்றன.

      நீக்கு
  17. யானையைப் பார்த்தாலே மனம் மகிழ்ச்சியடையும். இனம் புரியாத மகிழ்ச்சி. அந்த வகையில் நாலுகால், பறப்பன எல்லாமே அடங்கும். இயற்கையை ரசிக்காமல் இருக்க முடியுமா, ஸ்ரீராம் சொல்லுங்க! யானையின் அந்த மெகா சைஸ் அதன் சேஷ்டைகள் எல்லாமே தனி மகிழ்ச்சி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையின் முன் நாமெல்லாம் தூசு!

      கீதா

      நீக்கு
    2. இவைகளுக்கெல்லாம் மனம் என்ற ஒன்றும், அதில் எண்ணம் என்கிற ஒன்றும் இருக்குமா கீதா?

      நீக்கு
    3. கண்டிப்பாக இருக்கு ஶ்ரீராம்... சில அவற்றின் உடல் மொழி,.செய்கைகளில் தெரியுமே....அனிமல் சைக்காலஜி என்றும் இருக்கிறதே..

      கீதா

      நீக்கு
  18. பின்னர் சக்தியிடம் இதுபற்றி கேட்டபோது "நாங்கள் பரவாயில்லை ஸார்.. சீப். அவர்கள் பீஸ் ஐயாயிரம் ரூபாய்" என்றார்.//

    இம்மாதிரியான விஷயங்கள் என்னை மிகவும் யோசிக்க வைக்கும், ஸ்ரீராம். நம் மனதுள் இருக்கும் அந்த மாபெரும் சக்தி........கோயில்களில் திரு உருவமாய்...ஆனால் அங்கு இப்படிக் கையூட்டு! அங்கிருக்கும் இறைவன். இந்த கான்செப்ட் எனக்குப் புரிவதில்லை. இதற்கு எந்த கோர்ட்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த விஷயத்தில் நான் மாற்றி யோசிக்கிறேன் கீதா...  இன்றைய அரசாங்கத்தின் சுயநல, பேராசை நடவடிக்கைகள் இவர்களுக்கெல்லாம் இப்படி ஒரு பிழைக்கும் வாய்ப்பை வழங்கி இருக்கின்றன.  எனக்கு குறை சொல்லத் தோன்றவில்லை.

      நீக்கு
    2. இதில் குறிப்பாக அந்த ஐயாயிரத்தை வாசிச்சப்ப தோன்றியது.சொன்னேன்...

      கீதா

      நீக்கு
  19. கண்கள் ஏன் கலங்கின என்று மட்டும் தெரியவில்லை! ஏதோ நம்மையும் மீறிய சுயபரிதாபம்!//

    மனதுள் இருக்கும் சில வருத்தங்களின் வெளிப்பாடு? அல்லது பரவசம்.

    ஒரு காலத்தில் எவ்வளவு சுதந்திரமாக மக்கள் இந்த தரிசனங்களை செய்திருப்பார்கள்.. இப்போது அரசாங்கம் உள்ளே நுழைந்து கட்டுப்பாடு, காவல், கம்பித்தடுப்பு, வரிசை, பாதுகாப்பு என்கிற பெயரில் பாடாய்ப் படுத்துகிறது. காசு.. காசு.. காசு..//

    உண்மை.

    பாஸின் கால்களைத் தீவிரமாகக் கவனம் கொள்ள வேண்டிக் கொள்கிறேன் ஸ்ரீராம். தயவாய்.

    முதல் பகுதியின் கடைசி பத்தி - அப்படியெல்லாம் எதுவும் நினைக்கவே வேண்டாம் ஸ்ரீராம். அன்று என்ன நடந்ததோ நல்லதே நடந்திருக்கிறது அன்று தரிசனம் கிடைத்ததே மகிழ்வான விஷயம்தான், ஸ்ரீராம். Cause and effect சிலவற்றில் யோசிக்காமல் இருப்பதே நல்லது என்பது என் தனிப்பட்ட கருத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் மனதில் இருக்கும் உறுத்தல்கள்தான் காரணம்.  மனதின் உறுத்தல் கண்களில் வரும் நீரால் கழுவப் படுகிறதோ என்னவோ!

      நீக்கு
  20. சிகரெட் பற்றிய சுஜாதாவின் அனுபவங்கள் ப்ளஸ் அவர் சொல்லியிருப்பது எல்லாமே டிட்டொ. இதில் புகை இழுப்பவர்களை விட அதை சுவாசிப்பவர்களுக்கு இன்னும் பாதிப்பு அதிகம் என்பதை புகைக்கு அடிமையானவர்கள் உணர வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. நம்மால் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் ஏன் பாதிப்பை உண்டாக்க வேண்டும்? அதுவும் உடல் நல ரீதியாக. நமக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தார்கள்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் இன்பம் பிறருக்குத் துன்பம் என்பதை உணராத, அல்லது உணர்ந்தும் கவலைப்படாதவர்கள்!

      நீக்கு
  22. சில தொழிற்பெயர்கள்
    வேடிக்கையானவை. சர்க்கஸ் ரிங் மாஸ்டர் அதில் ஒன்று.

    ரிங் மாஸ்டரின் தற்பொழுதிய பெயர் என்னவாக இருக்கும் என்று யோசனை ஓடியது.

    சர்க்கஸே அருகிப் போன காலத்தில் ரிங் மாஸடராவது ஒன்றாவது?
    அரசியல்வாதிகள் நடத்தும் சர்க்கஸ்களே தூக்கலாக இருக்கும் பொழுது சர்க்கஸ்கள் எதற்கு என்கிறீர்களா? அதுவும் சரி தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வியும் நீங்களே... அதற்கு சரியான பதிலும் நீங்களே!

      நீக்கு
  23. என்ன என் பெயர் எ பி யில் அடிபடுது. நேற்று நெல்லை இன்று ஸ்ரீராம்.

    கூட்டம் என்றாலே அலர்ஜி. தற்போது கோவில்களில் கூட்ட நெரிசலுக்கு குறைவில்லை. சமயபுரத்தில் மொத்த பணத்தையும் இழந்து சில்லரைக் காசுகளில் சகோதரி வீட்டுக்கு வந்து ATM இல் காசு எடுத்த அனுபவம். அதை விட ஊர் திரும்ப வேண்டி புக் செய்திருந்த ட்ரெயின் டிக்கெட் களவு போனது தான் மிகவும் கஷ்டமாகி விட்டது. இது போன்று கன்யாகுமரியில் என்று பல கோயில்களிலும் பறி கொடுத்திருக்கிறேன். ராசி. (பணம் முழுதும் பாஸின் கைப்பையில் இருந்து திருடப்பட்டதால் எனக்கு அர்ச்சனை கிடைக்கவில்லை)

    சுஜாதா கட்டுரை பலமுறை படித்தது. 41 வருடம் புகை பிடித்தவன் நான். COPD தற்போதும் உண்டு.

    செய்தித்தாள்கள் பற்றிய செய்தி அறிந்தேன். நன்று.

    முதல் இரண்டு அரசியல் ஜோக்குகள் அருமை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்ன நல்லதொரு ஐடியா பற்றிச் சொன்னேன்!

      எனக்கும் கூட்டம் என்றால் மிகவும் அலர்ஜி.  நீங்கள் சொன்னதுபோல ஒரு சம்பவம் எங்களுக்கும் நடந்தது.  திருப்பதி போக (மறுபடியும் திருப்பபதி பெருமாள் கைங்கர்யம்) ரயில் டிக்கெட் ரிசர்வ் செய்து எடுத்துக் கொண்டு பஸ்ஸில் வந்த அப்பா, பிக்பாக்கெட்டில் அவற்றைத் தொலைத்து விட்டு பட்ட அவஸ்தை சம்பவம்.  அப்பா உடனடியாக செயல்பட்டு எப்படியோ அதற்கு டூப்ளிகேட் ஏற்பாடு செய்து விட்டார்!

      ஜோக்குகள் அருமை என்று சொல்லியிருப்பபது ஆச்சர்யம்.

      நீக்கு
  24. முடி திருத்தக அயர்ன் பாக்ஸ் ஜோக் எவ்வளவு காலத்திய பழசு? அதன் கால மாற்றங்களுடனான
    வேறுபாடு கொண்ட சிந்தனை தான் ஹேர் டிரையரோ? அந்தக் காலத்து பத்திரிகை ஜோக்குகளில் அந்த நேரத்து சிரிப்பைத் தாண்டி நிறைய செய்திகள்
    இருக்கின்றன தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைய T 20 கிரிக்கெட் மேட்சுகளில் நடுவே சியர் கர்ல்ஸ் வந்து ஆடுவதைப் பார்த்திருப்போம்.  இதைப் பற்றி எண்பதுகளிலேயே மதன் இதை கற்பனையில் ஒரு ஜோக்காய் வரைந்திருந்தார்.

      நீக்கு
  25. பற்ற வைக்கும் செய்தியில் இருப்பவரின் படத்தின் கீழ். சுஜாதா என்று குறித்திருக்கலாம்.

    எல்லாம் காரணமாகத்தான். ,:))

    பதிலளிநீக்கு
  26. பணத்தை (லஞ்சம்) கொடுத்து இறையை வணங்கும் இந்த நிலை மாற வேண்டும்.

    யாரை குறை சொல்வது ? அரசையா மக்களையா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. நமது தவறு..

      நம்மைத் தான் குறை சொல்லிக் கொள்ள வேண்டும்..

      நீக்கு
    2. //பணத்தை (லஞ்சம்) கொடுத்து இறையை வணங்கும் // - கில்லர்ஜி .. கேரளாவில் இத்தகைய போக்கு இல்லை. இருந்தாலும் இதுவும் கோயில் வருமானத்துக்கு வழி, அதிகாரிகளுக்கு புது இனோவா வாங்க உதவும் என்பதால் அனுமதிக்கிறாங்க போலிருக்கிறது.

      அது சரி... போக்குவரத்து, தியேட்டர் போன்ற பல இடங்களிலும் காசுக்கு ஏற்ற சிறப்பு இருக்கைகள் என்று இருக்கிறதே. இரயில் நிலையங்களில் காசு கொடுத்தால் ஏசி அறையில் காத்திருக்கலாம், காசு இல்லாவிட்டால் தரையில் காத்திருக்கலாம் என்றெல்லாம் மனித வித்தியாசம் உள்ளதே.. அது நியாயமாகப்படுகிறதா?

      நீக்கு
    3. தமிழரே அது பகட்டு வாழ்க்கை இருப்பவர் அனுபவிக்கட்டும்.

      இங்கு இறைவன் முன் அனைவரும் சமமாகணும்

      நீக்கு
    4. இனி பழைய நிலைக்கு மாற முடியுமா, மீள முடியுமா என்று தெரியவில்லை தேவகோட்டை ஜி.  அரசாங்கம் எனும் ஆமை இந்துக் கோவில்களுக்குள் மட்டும் புகுந்து விட்டது.

      நீக்கு
    5. கேரளாவில் (திருவண்பரிசாரம் போன்ற கோவில்களிலும்), என்னதான் பணம் இருந்தாலும் கோவிலில் எல்லோரும் சமமே. என்ன ஒண்ணு, நிறைய பிரசாதத்தை பணத்தைக் கொண்டு கோவில் கடைகளில் வாங்கலாம். கடவுள் தரிசனம் அனைவருக்கும் ஒன்றே. அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ரொம்பவே பரவசமாக இருக்கும். ஆண்டியும் அரசனும் இறைவன் சன்னிதிதானத்தில் ஒன்றே

      நீக்கு
    6. திருவண்பரிசாரத்தில் பிரசாதம் கிடையாதே...

      கீதா

      நீக்கு
  27. அந்த 'சிரமமின்றி அழைத்துப் போவோர்' கட்சிக்காரர்களோ என்று என் சந்தேகம். 'ஏன் ஸார் டிக்கெட் வாங்கினீங்க?
    நான் கூட்டிகிட்டு போயிருப்பேன்லே?' என்று வேறொரு கோயிலில் என்னிடம் சலித்துக் கொண்டவரும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்சிக்காரர் இல்லை ஜீவி ஸார்..  பிழைக்கத்தெரிந்த உள்ளூர் வாசிகள்.  கமிஷன் சரியாய் போய்ச்சேர்ந்தால் அங்கிருக்கும் அனைவரும் அவர்களுக்கு ஒத்துழைப்பார்கள்.  இது பற்றி மாரியம்மன் கோவில் விசிட்டில் எழுதுகிறேன்!

      நீக்கு
    2. எழுதுங்கள். அங்கும் என் சந்தேகங்களைக் கேட்கிறேன்.

      நீக்கு
  28. அமெரிக்க ஹிந்துக் கோயில்கள் தரிசன சிறப்புகள் செளகரியங்கள் பற்றி ஒரு புதன்கிழமை அப்பாதுரையை கட்டுரை எழுத கேட்டுக் கொள்ளுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஷயம் அவர் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டு விட்டதை நீங்களும் அறிவீர்கள்!

      நீக்கு
  29. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  30. /// சீருடை உடுப்பில் இருந்த காவல்துறை அதிகாரிகளே சிலரை அழைத்து வந்து வரிசையின் இடையில் இணைத்துக் கொண்டிருந்தார்கள்... ///

    இப்படியாக இவர்கள் பார்த்தது இருக்கட்டும்...

    அந்தரங்கம் எல்லாவற்றையும் அறிந்திருக்கும் அந்த ரங்கன் பார்த்திருப்பானோ!..

    இப்படியெல்லாம் நடக்கட்டும் என்று - அந்த விளையாட்டுப் பிள்ளை நினைத்துக் கொண்டு இருக்கின்றதோ என்னவோ!..

    அரவணை துயிலும் அரங்க நகர் அப்பனே..

    அரவணைத்துக் காத்திடுவாய் அடியோங்களையே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போனது போகட்டும் இனியாகிலும் நெஞ்சம்
      புனிதம் ஆகட்டுமே 
      புன்னகை புரிந்திடும் மன்னவன் பொற்பாதம் 
      கண்கள் காணட்டுமே...
      கண்களும் காணட்டுமே..

      நீக்கு
  31. கடாய் பனீர் இப்படித்தான் கடாயில் அது சூடாக இருக்க இப்படிப் பரிமாறுவாங்க. வீட்டில் செய்வதுண்டு. இரு இரு வகை ஒன்று கொஞ்சம் கெட்டியாக மற்றொன்று கிரேவியாக. உள்ளிருக்கும் காய் பனீர் துண்டுகள் கொஞ்சம் பெரிய அளவில் கட் செய்து போடுவது. இரண்டிற்குமே மேலே ஒரு பொடி செய்து தூவ வேண்டும். அதுவும் னைஸாக இல்லாத பொடி. கொர கொரன்னு...அந்த மணம் தான் அதற்குத் தனிச்சுவை.

    வாங்க நம்ம வீட்டுக்கு. செய்து தருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவரைப் பார்த்துப் பேசலாம் என்று வீட்டுக்குப் போனால் இவர் அடுக்களைக்குள் புகுந்து பனீர் கிரேவி பண்ணிக்கொண்டிருப்பாராம். அதுவரை நாம என்ன பண்ணறது? மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கணுமா இல்லை கூடவே உதவி செய்யணுமா?

      நீக்கு
    2. கடாய் பனீரை கடாய் போன்ற கப்பிலேயே போட்டு செர்வ் செய்யபப்ட்டிருபப்தை ரசித்தேன்!  அங்கு வந்தால் அங்கும் வருகிறேன்!

      நீக்கு
    3. //அங்கு வந்தால் அங்கும் வருகிறேன்!// - இங்கு வந்தால் இங்கும் வாருங்கள், குடும்பத்தோடு. நம் கீதா ரங்கனும் சேர்ந்துகொள்வார். ரஞ்சனி நாராயணன் மேடம் பயணம் செய்வாரான்னு தெரியலை.

      நீக்கு
    4. // இங்கு வந்தால் இங்கும் வாருங்கள், குடும்பத்தோடு. //

      ஓ.. தனியாக வந்தால் அனுமதி கிடையாதா?!!

      நீக்கு
    5. நெல்லை சிரித்து விட்டேன்....பின்ன உங்களுக்கு நீங்க வரும் முன்னரே செஞ்சு வைச்சா பிடிக்காதே!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  32. வெட்டி ஆராய்ச்சியா??!!!!!!!!! நல்ல தகவல்கள் ஸ்ரீராம். ஆனா என்ன நினைவுல இருக்கணுமே!

    கீதா

    பதிலளிநீக்கு
  33. ஜோக்ஸ் ஓகே....பக்கிரி ரிபீட் ஆகிருக்கு. மற்றொன்றும் ரிப்பீட்டோன்னு தோன்றுகிறது. அந்த முடியைப் படிய வைக்க அயர்ன்பாக்ஸ்..

    கீதா

    பதிலளிநீக்கு
  34. அரங்கன் தரிசனம் இந்த அளவிலாவது கிடைத்ததே என மகிழவேண்டியதுதான் வருங்காலம்........?

    பொக்கிசம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​சுஜாதாவின் 'திமலா' கதை படித்திருக்கிறீர்களா மாதேவி?

      நீக்கு
    2. திமலா வாசித்திருக்கிறேன், நான். அப்படி இனி ஆகிடுமா என்றும் தோன்றியது உண்டு.

      கீதா

      நீக்கு
  35. தலைப்பு அருமை.
    அதிகாலை வேளை அரங்கன் தரிசனம் அருமை. ஆனால் ஒரு சந்தேகம்
    திருச்சி போனது நண்பரின் மணி விழாவில் கலந்து கொள்ள . இரவு ஹோமத்தில் கலந்து கொள்ளவில்லை. காலை ஹோமத்தில் கலந்து கொண்டு திருமணம் பார்த்தீர்களா?

    மீனாட்சி கோவில், அரங்கன் கோவில் எல்லாம் அதிகாலை தரிசனம் கூட்டம் இருக்காது என்று சொன்னது அந்தக்காலம், இப்போது எல்லா நேரமும் கூட்டம் தான். எப்படியே கஷ்டப்பட்டு தரிசனம் செய்து விட்டீர்கள் அரங்கனை.

    பசு யானை, குதிரையை தரிசனம் செய்து விட்டீர்கள். யானையை பக்கத்தில் பார்த்ததும் மெய்மறந்து விட்டீர்கள். போட்டோ எடுத்து இருந்தால் நாங்களும் தரிசனம் செய்து இருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பு சிலாகிப்புக்கு நன்றி.  அரங்கனுடன் என்பதற்கு பதில் அரங்கனிடம் என்றிருந்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது!  நான் நினைத்த கால அளவு ஒன்று, நடந்தது ஒன்று.  ஆயினு விழாவுக்கு சென்று விட்டோம்!  யானையைப் படம் எடுக்க கெடுபிடி செய்தார்கள்.  அப்படியும் சிலர் எடுக்கத்தான் செய்தார்கள்.  நான்தான் பிரமிப்பில் பார்த்ததோடு சும்மா இருந்து விட்டேன்!

      நீக்கு
  36. இத்தனை வருஷங்களாக இங்கே இருந்தும் இன்னி வரை விஸ்வரூப தரிசனம் பார்க்கலை. இனி எங்கே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சாவூரில் அவ்வளவு வருஷம் இருந்தும் பெரிய கோவில் விஷயத்தில், சரசுவதி மகால், அரண்மனை போன்ற இடங்கள் பற்றி எனக்கும் இந்தக்குறை உண்டு!  இப்போ எண்ணையில் மட்டும் என்ன?  பல இடங்கள் பார்த்ததில்லை!

      நீக்கு
  37. என் கல்யாணம் திங்கட்கிழமை காலை ஏழரைக்குள்ளாக நடந்தது. அது வரை பந்தலில் கூட்டம் தாங்கலை. ஏழரைக்குப் பின்னர் நாங்க இருவரும் சாஸ்திரிகள், எங்க இருவரின் அப்பா/அம்மாக்கள் தான். எல்லோரும் ஊர் சுத்திப் பார்க்கப் போயிட்டாங்க. அதுவும் ரங்க்ஸீன் சொந்தங்கள் பலரும் முதல் தரமாக் கிராமத்தை விட்டு வந்தாங்க. அவங்களூக்கு எல்லாமே ஆச்சரியமா இருந்தது. நீங்க ஹேமா சஷ்டி அப்த பூர்த்திக்குனு வந்துட்டு எல்லோருமா ஊர் சுத்தினதைப் படிச்சப்போ இது எனக்கு நினைவில் வந்தது. :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறையபேர் அப்படிதான்.  விசேஷத்துக்கு வருவது ஒருபுறம்.  அப்படியே ஊர் சுற்றி பார்ப்பதும் நடக்கும்!

      நீக்கு
  38. பற்ற வைப்பதற்கு முன் ஒரு நிமிஷம்..!” என்ற சுஜாதா எழுதிய கட்டுரையை படித்து சிகரெட்டை.
    செய்தி தாள் ஆராய்ச்சி நல்ல விஷ்யம் தான்.வெட்டி ஆராய்ச்சி இல்லை.

    நகைச்சுவை கொஞ்சம் .
    செய்திகள் வாசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பற்ற வைப்பதற்கு முன் ஒரு நிமிஷம்..!” என்ற சுஜாதா எழுதிய கட்டுரையை படித்து சிகரெட் பிடிப்பதை விட்டவர்கள் இருந்தால் நல்லது.

      நீக்கு
    2. இந்தக் கட்டுரையைப் படித்து திருந்தியயவர்கள் இருப்பார்களா தெரியாது.  இது அவர் அனுபவம்.  எல்லோருக்கும் அனுபவங்கள் ஒரே மாதிரி இருக்கும் என்றும் சொல்ல முடியாதே கோமதி அக்கா..

      நீக்கு
  39. எங்க குடும்பத்திலேயே சிகரெட்டுக்குப் பலியானவங்க உண்டு. ;(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மாமாவின் மறைவுக்கு கொரோனா காரணமாயினும் சிகெரெட்தான் முக்கிய காரணம்.  அது நுரையீரலை ஏற்கெனவே பாதித்து வைத்திருந்தது.

      நீக்கு
  40. ஜோக்குகள் எல்லாம் பரவாயில்லை ரகம்.

    பதிலளிநீக்கு
  41. அதிகாலை கோபுர தரிசனம் படம், மற்றும் கோவில் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களூக்குத் தினம் தினம் இந்த தரிசனம் அரங்கன் அருளால் கிடைத்து வருகிறது. _/\_

      நீக்கு
    2. ஆம் கீதா அக்கா.  அதைப் பற்றி பதிவிலேயே எழுதி இருக்கிறேனோ இல்லையோ?!

      நீக்கு
  42. வெட்டி ஆராய்ச்சியும் தேவை தான். கடாய் பனீர் இப்போல்லாம் பண்ணூவதே இல்லை.பானுமதியின் நியூஸ் ரூமில் இந்தத் தரம் புதிய செய்திகள்.

    பதிலளிநீக்கு
  43. உங்களது தரிசன அனுபவம் பிரமிப்பாக இருந்தது...

    பதிலளிநீக்கு
  44. ஒரு புதன் கேள்வி. ரங்கனை அரங்கன் என்று சொல்கிறார்கள். ராமனை இராமன் என்று சொல்கிறார்கள். ஏன் அராமன் என்றோ இரங்கன் என்றோ சொல்வதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வியை கேஜிஜி கொத்திக் கொண்டு போயிருப்பார் என்று நம்புகிறேன்!

      நீக்கு
  45. வணக்கம் சகோதரரே

    சுஜாதா கட்டுரை நன்றாக உள்ளது. சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் தொகுப்பாக செய்திகளை அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
    ஏதோ நூறாக வர வேண்டிய ஆவலுடன் ஒரு அவசரத்துடனான கருத்து. :)))

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.. நீங்கள் நூறாக்கினீர்கள். நெல்லை 101, நான் 102!

      நீக்கு
  46. வணக்கம் சகோதரரே

    புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்காக சுஜாதா அவர்கள் எழுதிய கட்டுரை அருமை. இங்கு ஒரு இரவு சென்னை செல்லும் பயண நேரத்தில் பேருந்து நிலையத்தில் ஸ்டைலாக உடையணிந்த ஒரு பெண் தன் நண்பருடன் பேசிக் கொண்டே ஸ்டைலாக புகைப்பிடித்து கொண்டிருந்தார். பேருந்து வரும் வரை அவர்தான் எனக்கு பொழுது போக்கு. மனம் கஸ்டபட்டது. என்ன செய்ய? அவர் விருப்பம் அதுவாக இருக்கும் பட்சத்தில் நாமென்ன செய்ய முடியும்.?

    ஜோக்ஸ் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்று கமலா அக்கா... முன்பெல்லாம் தியேட்டருக்கு சென்றாலே சிகரெட் வாடை அடிக்கும். இப்போதெல்லாம் அபப்டி இல்லை. எங்காவது ஒருவர் புகை பிடித்தாலே சுற்றி இருக்கும் இடம் முழுக்க வாடை அடித்து காட்டிக் கொடுக்கிறது!

      நீக்கு
  47. ஹேமா தம்பதியர்க்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரோக்கிய சமையல் செய்முறைகள் எழுதுவான்க...அவங்க இருவரும் இறைவனின் அருளுடன் ஆரோக்கியமாக மகிழ்வாக வாழ்ந்திட வாழ்த்துகள்..

      கீதா

      நீக்கு
  48. சுஜாதாவின் சிகரெட்டை விட்ட படலம்.. பாவம், மனுஷன் ரொம்பத்தான் கஷ்டப்பட்டிருக்கிறார். எனக்கும் உண்டு அந்த அனுபவம். விடுவதற்கு இவ்வளவு வேதனைப்படவில்லை. அதைப்பற்றியும் கொஞ்சம் எழுதலாம். கிரிக்கெட் உலகக்கோப்பைவேறு, வேறுபக்கம் இழுக்கிறது.. இப்படி ஏகப்பட்ட டைவர்ஷன்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிரிக்கெட் பற்றி மட்டும் எழுதாமல் நடுவே கொறிக்க, கடிக்க என்று இப்படியும் பதிவுகள் போடலாமே...!

      நீக்கு
    2. லாம்... அவ்வப்போது முயற்சிக்கிறேன் ஸ்ரீராம்.

      நீக்கு
  49. காளை, குதிரை, யானை எல்லாம் கோயில் சன்னதிக்கு உள்ளேயே வருகின்றனவா? அல்லது பிரகாரம் வரையிலுமா? ஆச்சரியமாக உள்ளது. எத்தனையோ முறை யானைகளைப் படமாக்கியிருக்கிறேன், ஜூம் லென்ஸ் உதவியோடு. கேமரா பார்த்து போஸ் கொடுத்துள்ளன. ஆனால் அருகில் செல்ல மிகவும் பயப்படுவேன்:). கைபேசியில் படமெடுக்காது கண்ணால் காட்சிகளை உள்வாங்கியது சிறப்பு. கால் வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு பெரிய கோயில்களில் நீண்ட நேரக் காத்திருப்பு, நீண்ட நடைகள் சவால்தான்.

    /பற்ற வைப்பதற்கு முன்../ விழிப்புணர்வை ஏற்படுத்தும் பகிர்வு. சுவாரஸ்யமாகவும் மனதில் நிற்கும்படியும் சொல்லியிருக்கிறார் சுஜாதா.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!