புதன், 18 அக்டோபர், 2023

ஜூனியர் டெக்னிகல் ஸ்கூல்

 

 பானுமதி வெங்கடேஸ்வரன் :

நவராத்திரியில் விஞ்சியிருப்பது 

பக்தியுணர்ச்சியா?

அழகுணர்ச்சியா?

சுவையுணர்ச்சியா?

# அழகு, சுவை, பக்தி என்ற வரிசை சரியாக இருக்கும். அழகுக்குத்தான் முதலிடம்.

& ஏதோ பட்டிமன்றத் தலைப்பு போல இருக்கு. 

வாசகர்கள் ஒவ்வொரு தலைப்பிலும் தங்களின் வாதங்களை இங்கே கருத்துரையாக பதியலாம். நடுவர் ஆங்காங்கே தன் கருத்துகளை வழங்குவார். 

கீதா சாம்பசிவம் : 

சின்ன வயசில் கடவுளைக் கும்பிடும்போது பெரியவங்க பயம் காட்டி பக்தியை வளர்த்தாங்களா? நீங்க பயந்திருக்கீங்களா?

# என்னைப் பொறுத்தவரை, யாரும் பயமுறுத்தி பக்தி உணர்வை வளர்க்க முயலவில்லை. கடவுள் என்றால் சர்வ வல்லமை கொண்ட உயர் சக்தி என்ற நம்பிக்கை வலுவாக மனத்துக்குள் இருந்தது.  எனவே கடவுளை பயம் ஏதும் இல்லாமல், ஒரு நம்பிக்கையுடன் வணங்குகிற மனப் போக்கு (கேட்டால் கிடைக்கும்)  இருந்தது. 

& அப்பா எனக்கு பல பக்தி கதைகள் சொல்லி வளர்த்தார். அவர் பூஜை செய்யும்போது நாள் தவறாமல் அவர் எதிரில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன். சின்னச் சின்ன ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுத்தார். அவற்றை எல்லாம் இன்றும் நான் பூஜை செய்யும்போது சொல்கிறேன். பயம் காட்டி பக்தியை ஊட்டவில்லை. கடவுள் விஷயத்தில் நான் பயந்தது இல்லை. 

எல்லாம் அவன் செயல் என்பது தப்பித்தலா? அல்லது பக்தியின் எல்லையா?

# எல்லாம் கடவுள் செயல் என்பது நம் கையில் எதையோ மாற்றி அமைக்க இயலாத போது உண்டாகிற ஞானோதயம். அதில் பக்தி உணர்வைக் காண இயலாது.

& நம்மால் இயன்றதை செய்து முடித்துவிட்டு, பிறகு ' மீதி எல்லாம் அவன் செயல் என்று விட்டுவிட வேண்டும்' ஒன்றுமே செய்யாமல் எ அ செ என்று விடக்கூடாது. குரோம்பேட்டையில் எங்கள் குடும்ப டாக்டரின் அறையில், சுவற்றில் ஒரு படத்துடன் கூடிய வாசகம் : " I just dress the wounds; He only heals them." 

= = = = = = = = =

KGG பக்கம் : 

Junior Technical School (JTS) சேர்ந்ததும், முதல் நாள் முதல் வகுப்பு. முப்பது பேரும் ஆவலோடு காத்திருந்தோம். ராமமூர்த்தி என்ற ஆஜானுபாகுவான ஆசிரியர் வந்தார். ஆங்கிலத்தில் தன்னைப் பற்றி சிறிய அறிமுகம் செய்துகொண்டார். வகுப்பில் பாதி பேர்களுக்கு அவர் பேசியதில் சில வாக்கியங்கள் புரியவில்லை. 

பிறகு எங்கள் ஒவ்வொருவரையும், பெயர் என்ன, எந்த பள்ளிக்கூடத்தில் எட்டாம் கிளாஸ் படித்தோம், எந்த ஊர் என்ற விவரங்களை ஆங்கிலத்தில் சொல்லச் சொன்னார். 

அதன் பின் வருகைப் பதிவேடு எடுத்து ஒவ்வொரு பெயராக கூப்பிட்டார். 

ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு தினுசாக அட்டெண்டன்ஸ் குரல் கொடுத்தார்கள். 

ப்ரெசெண்ட் சார். 

ஆஜர் 

உள்ளேன் ஐயா 

எதுவும் சொல்லாமல் 'கை உயர்த்துதல்' போன்று பல வகை. 

ஆசிரியர் கடைசியில் புன்னகையுடன் சொன்னார்: "ஒவ்வொருவரும்  பெயர் அழைக்கப்பட்டவுடன் 'எஸ் சார்' என்று சொன்னால் போதும்." 

முதல் வகுப்பு ஆங்கிலப் பாடம். பாடப் புத்தகம் ஸ்டோருக்கு அதுவரை  வரவில்லை. அதனால், அவர் ஆங்கிலம் பற்றி - அதை பேசுவது எவ்வளவு எளிதாக செய்யலாம் என்பது பற்றி  கதைகள் கூறினார். பட்லர் இங்கிலீஷ் பற்றி கதை சொன்னார். 

நாலு காலு சார்,

நடுவுல வாலு சார்,

மில்க் சார் 

அப் சார் 

டவுன் சார். 

அதாவது ஆங்கில துரையின் பணியாளர் பாலை பூனை குடித்துவிட்டது என்று சொன்னதைப் பற்றிய கதை. 

அடுத்த ஒரு மணி நேரம் தமிழ்ப் பாடம். உயர்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்புப் புத்தகம்தான் எங்களுக்கும் என்று சொல்லி, முதல் பாடம் நடத்தப்பட்டது. 

அடுத்து கணக்கு. 

ஆசிரியர் வந்தார். சில கணக்குகள் ( எட்டாம் வகுப்பு பகுதி - ஆனால் ஆங்கிலத்தில். ) கணக்குகள் சில போர்டில் எழுதிக் காட்டி, சில கணக்குகள் எழுதிப் போட்டார். 

அதை நாங்கள் எங்கள் நோட்டில் எழுதிக்கொண்டவுடன், எங்களை அதை போடச் சொன்னார். 

ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கச் சொன்னார். 

ஒரு பையன் மெதுவாக எழுந்து, " சார். எல்லாமே இங்கிலீஷ்லதான் சொல்லணும், எழுதணுமா? " என்று கேட்டான். 

ஆசிரியர் : " ஆமாம். அதைத்தான் இந்தப் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் போது வெளியிட்ட விளம்பரங்களில் தெளிவாக எழுதியிருந்தார்களே! தமிழ்ப் பாடம் தவிர மீதி எல்லா பாடங்களும் ஆங்கிலத்தில்தான்." 

அக்கம்பக்கத்து சிற்றூர் மற்றும் கிராமங்களிலிருந்து வந்து சேர்ந்திருந்த மாணவர்களுக்கு இந்த தகவல் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 

அடுத்த பீரியட் - General Engineering. 

குமரேசன் என்ற ஆசிரியர் வந்தார். வருகைப் பதிவேடு - பெயர்கள் படித்து வருகை பதிவு செய்யப்பட்டவுடன், போர்டில் " CARPENTRY" என்று எழுதினார். பிறகு, வகுப்பில் அங்கும் இங்கும் நடந்தவாறே " carpentry is the art of making furniture like table, chair, bench, etc. In making furniture, wood is selected and worked with appropriate tools like hand saw, chisel, planer, etc. and ... 

எல்லோரும் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு அவர், இங்கும் அங்கும் நடந்துகொண்டிருந்தபோது கண்களை அவர் மீது வைத்து, முகத்தை இங்கும் அங்கும் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தோம். 

திடீரென்று சொல்லிக்கொண்டிருப்பதை நிறுத்திய அவர், எங்களைப் பார்த்து, " Are you not taking down what I am saying?  Take your notebook and write down what I am saying. "

பெரும்பாலான பையன்களுக்கு மயக்கமே வந்துவிட்டது. 

ஒரு பையன் கேட்டான் - " சார் போர்டுல எழுத மாட்டீங்களா? " 

இல்லை என்று தலை ஆட்டினார். 

" சார் அப்போ கொஞ்சம் மெதுவாக - டிக்டேசன் போல மெதுவா சொல்லுங்க. " 

அவர் சிரித்தபடி, " Since this is first class - I will dictate slowly. From next class you should learn to write to my speed. One more point is I won't talk in Tamil. " என்றார். 

( மீதி பிறகு) 

= = = = = = =

அப்பாதுரை இந்த மாதம் முழுவதும் வார இறுதி நாட்களில் பயணங்கள் போகவேண்டி இருப்பதால், இரண்டு மூன்று புதன்கிழமைகள் விடுப்பு கோரி விண்ணப்பம் அனுப்பியுள்ளார். 

இரண்டு மூன்று வாரங்களுக்கு வேறு வாசகர்கள் யாராவது கட்டுரை, கவிதை, விமரிசனங்கள் எழுதி அனுப்பலாம். புதன் வாசகர் பக்கத்திற்கு. 

= = = = = = =

 

65 கருத்துகள்:

  1. Junior Tech School நடைமுறைகள் புதிய மாணவர்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்திருக்கும்.எப்படி அவர்களால் காலம் தள்ள முடிந்தது என,று யோசிக்கிறேன்.

    எம்.எஸ்.ஸியின்போதும் நோட்ஸ் டிக்டேட் செய்த வகுப்புகளை நினைத்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். எங்கள் ஊரிலிருந்து தஞ்சாவூர் கல்லூரி ஒன்றில் சேர்ந்த பெண் ஒரே வாரத்தில் திரும்ப வந்துவிட்டார். என்ன காரணம் என்று கேட்டதற்கு பாடங்கள் எல்லாமே இங்கிலீஸ்ல நடத்துறாங்க; ஒன்றும் புரியவில்லை என்றார்.

      நீக்கு
  2. நவராத்திரியைச் சாக்காக வைத்து உறவினர்கள் வீட்டுக்குப் போவதும் வருவதும் நடக்கிறதே. சுற்றம் சார்ந்த நட்பு/பாச உணர்ச்சிபோல எனக்குத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே இந்த வருஷம் யாரும் வரவும் இல்லை. கூப்பிடவும் இல்லை. நான் மட்டும் தான் கூப்பிட்டுக் கொண்டு இருந்தேன். நேத்திக்குப் பரவாயில்லை ரகம். 3 பேர் வந்தார்கள்

      நீக்கு
    2. அழைக்கும்போது என்ன சுண்டல் என்று சொல்விவிட வேண்டும்!

      நீக்கு
    3. வாட்சன்பில் கண்ட கண்ட மெசேஜுக்குப் பதில், நவராத்திரி ஆரம்பிப்பதற்கு முன், ஒவ்வொரு நாள் சுண்டல்/வடை/இனிப்பு லிஸ்ட் அனுப்பினால் போகிறவர்களுக்கு சௌகரியமாக இருக்கும். அவ்வளவு தூரம் போய் கடலைப் பருப்பு சுண்டலுக்குப் பதில் மறுநாள் பயறு இனிப்புச் சுண்டலுக்குப் போயிருக்கலாமே என்று தோன்றும் அல்லவா?

      நீக்கு
    4. ஒரு காலத்தில் நான் தினமும் பதிவாகவே போட்டுட்டு இருந்தேனே! நெல்லை அப்போதெல்லாம் இல்லை. இப்போவும் எங்க கசின்ஸ் வாட்சப் குழுவில் என் அண்ணா/பெரியம்மா பையர் தினமும் போடுவார்.

      நீக்கு
    5. நெல்லை சுற்றி வர வாய்ப்புண்டு ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் தரும் போது சாப்பிடத்தான்...ஒரே நாளில் பல வீடுகள் ரொம்ப சிரமமாகிவிடும். சென்னையில் இருந்தவரை இந்த அனுபவம்...கூடவே அலுப்பும்...ஆகிவிடும். ட்ராஃபிக்ல வண்டில போய் வந்து என்று. ஒருகாலகட்டத்தில் எனக்கு அலுப்பு வரத் தொடங்கிவிட்டது. சாதாரண நாட்களில் என்ன ஏது என்று கூடக் கேட்க ஆள் இருக்கமாட்டாங்க இப்படியான சமயத்துல மட்டும் அழைப்புகள் வந்துவிடும்.

      கீதா

      நீக்கு
    6. கூடவே வம்பும்....வரும்

      கீதா

      நீக்கு
  3. இருக்கிற பத்துவகைச் சுண்டலை பல்வேறு வீடுகளிலும் செய்வதில் என்ன சுவையுணர்வு இருந்துவிட முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்து நாட்கள் சுண்டல் மட்டுமா? சில நாட்கள் மாறூமே. நான் சுண்டல் இல்லாமல் தவலை வடை, அப்பம், மைதா பிஸ்கட் போன்றவையும் கொடுப்பேன். அதோடு ஒவ்வொருத்தர் வீட்டுச் சுண்டலும் சுவையில் கட்டாயம் மாறூபடும்.

      நீக்கு
    2. அந்தக் காலத்தில் எனக்குப் பிடிக்காதது கொ க சுண்டல். பிடித்தது புட்டு, மிக்ஸர், அரிசி மிட்டாய் போன்றவை.

      நீக்கு
    3. சென்னா சுண்டல் எனக்குப் பிடிக்கும். இனிப்புச் சுண்டல்தான் என் விருப்பம்.

      நீக்கு
    4. கீதாக்கா சொன்னது போல் சுண்டல் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு சுவை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று செய்யலாம். சுண்டல் தவிர. சில வீடுகளில் வித்தியாசமாகவும் இருக்கும்.

      நெய்வேத்தியத்திற்கு சுண்டல் என்றால் விநியோகத்துக்கு வேறு செய்பவர்களும் உண்டு

      கீதா

      நீக்கு
    5. எல்லா வீடுகளிலும் ஒரே சுண்டல் என்றாலும் சுவை மாறுபடுமே. தவிர வெறும் சுண்டல் மட்டும் செய்து, அதை பேப்பரில் பொட்டலமாக மடித்து கொடுத்த நாட்களெல்லாம் மலையேறி விட்டன. இப்பொதெல்லாம் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிற்குச் செல்கிறோம். அங்கு பிரசாதம் என்று சுண்டலோடு சர்க்கரை பொங்கல்,அல்லது கேசரி, கலந்த சாத வகை ஒன்று, தயிர் சாதம், வடை, ஜாங்கிரி, போளி என்று ஏகப்பட்ட அயிட்டம்கள்.

      நீக்கு
  4. எல்லாம் அவன் செயல் என நினைத்துக்கொள்வது, நம் கையாலாகாத் தனத்தைப் புரிந்துகொண்டபின் ஏற்படும் விரக்தி என்று சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
  5. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. பதில்கள் சுவாரஸ்யம் ஜி இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. காலம் கார்த்தாலே வந்து தப்புத்தப்பா எழுதணூமேனு இருக்கு. ஆனால் இன்னொரு கணீனியை இப்போப் பயன்படுத்த முடியாது. நவராத்திரிக்குப் பின்னர் தான். :( இதிலே சுரதா வரதே இல்லை. :( ஆகவே சகிச்சுக்குங்க.

    பதிலளிநீக்கு
  8. நான் செக்ரடேரியல் கோர்ஸ் சேர்ந்த நினைவுகள் வருகின்றன. அங்கேயும் இப்படித் தான் எல்லாமே ஆங்கிலம். முதல் இரண்டு மாதங்கள் கஷ்டமாகத் தான் இருந்தது.

    பதிலளிநீக்கு
  9. அப்பாதுரை இந்தியாவில் இருக்காரா?

    பதிலளிநீக்கு
  10. நவராத்திரியில் பக்தி உணர்ச்சி இன்னமும் மாறவில்லை என்பதே எனக்குத் தெரிந்தது. கொலு வைப்பதில் பலரும் அழகுணர்ச்சியைக் காட்டுகின்றார்கள். சென்னையில் என் தம்பி வீட்டில் எல்லாம் பிரமாதமாக ஒளீ அலங்காரத்துடன் கொலு வைச்சிருக்காங்க. இங்கேயும் நம்ம ஆதி வெங்கட் பிரமாதமா வைச்சிருக்காங்க. நவராத்திரி கொலு போட்டிக்காக அவங்க வீட்டுக்கு இங்கே மங்கள்&மங்கள் கடையிலிருந்து நடுவர்கள் வந்துட்டும் போயிருக்காங்க.

    பதிலளிநீக்கு
  11. நான் கடந்த சில வருஷங்களாகவே லோகல் கலெக்ஷன் மட்டும் தான். எங்கும் போவதில்லை. சில கலெக்‌ஷன் வீடு தேடி வரும். இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
  12. நவராத்திரியில் விஞ்சியிருப்பது 

    ஸ்தோத்திரத்தில் பக்தி (பக்தி தான்..)

    பதுமைகளை எடுத்து கொலு வைப்பதில் - அழகு

    சுண்டல் இனிப்பு உப்புமா கிளறுபதில் - சுவை!..

    பதிலளிநீக்கு
  13. அப்பாதுரை
    ஐயா அவர்கள் விரைவில் தனது பகுதியை தொட்ங்கட்டும்..

    பதிலளிநீக்கு
  14. சிறுவயதில் பயம் காட்டி பக்தி எல்லாம் இருந்ததில்லை. பெற்றோர் வணங்குவது பார்த்து கோவில்களுக்கு சென்று வணங்கி வருவேன்.

    நவராத்திரி வீட்டு அளவுடன் சரி.ஒன்பதாம் நாள் மட்டும் அக்கம் பக்கம் பரிமாறுவோம்.

    தமிழில் படித்துவிட்டு ஆங்கிலத்திற்கு மாறும்போது சில மாதங்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. எட்டாம் கிளாசிலிருந்தே JTS ! I thought only 10th pass will be admitted in such schools/classes..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜே டி எஸ் : 9, 10, 11 ஆம் வகுப்புகளுக்கு பதிலாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. பிறகு அது ஆங்கிலம் & தமிழ் மூலம் படிக்கலாம் என்று தி மு க ஆட்சி காலத்தில் மாற்றம் வந்தது. அப்புறம் நீர்த்துப் போய் காணாமல் போய் விட்டது!

      நீக்கு
    2. நல்லதே பிடிக்காதவங்களா இருக்கையில் என்ன செய்ய முடியும்?

      நீக்கு
  16. டெல்லியில் எப்பப் பார்த்தாலும் இந்த வெள்ளை (குண்டு) சுண்டக்கடலையைப் பார்த்து, சுண்டலாக சாப்பிட்டு, பட்டூரே சோலே யில் சாப்பிட்டு.. அலுத்துவிட்டது. கருப்புக் கடலைதான் எனக்குப் பிடிக்கும். என்ன செய்வது? இந்த விஷயத்தையெல்லாம் ஐ.நா.விற்குக் கொண்டுபோக முடியுமா? அவர்களுக்கு ஏற்கனவே மிடில் ஈஸ்ட், ஐரோப்பா என மண்டை காய்ந்துகிடக்கிறது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கறுப்புக் கடலையிலும் சின்னச் சின்னதாக ஒண்ணூ வரும். அதான் ரொம்பச் சுவை.

      நீக்கு
    2. //டெல்லியில் எப்பப் பார்த்தாலும் இந்த வெள்ளை (குண்டு) சுண்டக்கடலையைப் பார்த்து, சுண்டலாக சாப்பிட்டு, பட்டூரே சோலே யில் சாப்பிட்டு.. அலுத்துவிட்டது. கருப்புக் கடலைதான் எனக்குப் பிடிக்கும்.// அதே அதே! டில்லி மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் காபூலி சன்னாதான். கருப்பு(கொ.கடலை)தான் எனக்கு பிடிச்ச சுண்டல்!

      நீக்கு
    3. சுவையான தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
  17. நவராத்திரியில் எனக்கு முக்கியமாகப் படுவது அழகுணர்ச்சிதான்.

    எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று. ஆர்வமும் கற்பனையும் உள்ளவர்களுக்கு இது அவர்களது திறனைக் கற்பனையில் செய்து மகிழ ரொம்ப வாய்ப்புகள் உண்டு. பாடுவது, கைவேலைகள் என்று. திருவனந்தபுரத்தில் இருந்தப்ப வைத்தேன் ஆனால் எனக்கு எக்சேஞ்ச் மேளா ஒத்துவராததால் பழக்கத்தை விட்டேன். என்னால் எதிருக்கு எதிர் என்று வைத்துக் கொடுக்க முடியாத நிலை என்பதால்.
    ஊர் ஊராக அதுவும் வீடு வீடாக மாறும் சூழல். வைப்பதில்லை. ஆனால் எனக்கு இப்பவும் பிடித்த விழா என்றால் நவராத்திரிதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. சின்ன வயசுல பயம் காட்டித்தான் பக்தி எல்லாம் ஊட்டப்பட்டது! உம்மாச்சி கண்ணை குத்திடுவார், உன்னை நரகத்துல தள்ளிடுவார் எண்ணைச் சட்டில போட்டுடுவார்னு. நானோ கேள்வி கேட்கும் ரகம். அதெப்படி அப்படினா உம்மாச்சி மோசமானவராச்சே. அப்ப ஏன் எனக்கு நான் நல்ல குழந்தையா இருக்கறப்ப எனக்கு கிஃப்ட் தரலை என்று கேட்டு நல்லா அடிவாங்கியிருக்கிறேன். ஆனால் அதே சமயம் ஒரு பயம் ரொம்பச் சின்ன வயதில் இருந்தது. அதன் பின் புத்தி வளர வளர சக்தியைப் புரிந்துகொள்ள கொள்ள அது ஒரு அற்புதமான விஷயம் எந்தச் சடங்குகளும் இல்லாமலும் அதனை உணரலாம் என்று புரிந்து கொண்ட நிலை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது! இதைத் தான் நான் கேட்டிருந்தேன். எனக்கும் என் மாமியார் வீட்டுக்கு வந்த புதுசிலே மகமாயி கண்ணக் குத்துவா, சூலத்தாலே முழியைப் பிடுங்கிடுவானு பயம் ஊட்டப்பட்ட பக்தியை எற்க மனசு ஒத்துக்காது. அப்பா/அம்மா வீட்டிலே வேறே மாதிரி. ஸ்லோகம் சொல்வது, பஜனைப்பாடல்கள் பாடுவதுனு இருக்கும். உம்மாச்சினா சிநேகிதர். தி/கீதாவைப் போல் நானும் எதிர்க்கேள்வி எல்லாம் கேட்டுட்டு அதிகப்ரசங்கி, பக்தியே இல்லைனு எல்லாம் பெயர் வாங்கினேன். இப்போதைய வாலிப வட்டமோ கோயிலைப் பொழுதுபோக்கும் இடமாகப் பார்ப்பது போல் இருக்கு. ஒரு சில வாலிப, வாலிபிகள் பக்தியிலே மூழ்கினாலும் பெரும்பாலும் ஈடுபாடு கம்மியோனு நினைச்சுப்பேன்.

      நீக்கு
    2. டிட்டோ கீதாக்கா. உம்மாச்சி சினேகிதர்!!! யெஸ்...

      இப்பவும் என்னைச் சொல்றவங்க இருக்காங்க எனக்கு இறை நம்பிக்கை இல்லைனு!!!! ஹாஹாஹா....

      கீதா

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  19. எல்லாம் அவன் செயல் என்பது தப்பித்தலா? அல்லது பக்தியின் எல்லையா?//

    இயலாமையில் வெளிப்படுவது. இல்லைனா தப்பிக்க...எந்த முயற்சியும் செய்யாமல் நடப்பதெலலம் அவன் செயல் என்று. மற்றொன்று நாம் தப்பும் செய்துவிட்டு அவன் செயல் என்று எப்படிச் சொல்ல முடியும். & சொல்லியிருப்பது போல்! நான் படித்த பள்ளியில் வாசகம் இருக்கும் Do your best. Leave the rest to God.
    கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!
    நலல்து நடந்தால் அவன் செயல்....கெட்டது நடந்தால் விதி!!! என்றுதான் பரவலாகச் சொல்லப்படுவது.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. One more point is I won't talk in Tamil//

    க்ளாஸ்ல டமால்னு சத்தம் கேட்டதா கௌ அண்ணா!!! Pin drop silence??!!! எல்லாரும் கீழ விருந்திருப்பாங்களே பேச்சு மூச்சில்லாம!!!

    அண்ணா எப்படி இவ்வளவும் அழகா நினைவு வைச்சிருக்கீங்க. எந்த பீரியர், ஆசிரியர்...இப்படி எடுத்தார் என்றெல்லாம்! அப்பவே , நாம ஒரு நாள் எழுதப் போறோம்னு டைரி எழுதி வைச்சீங்களோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் வித்தியாசமான ஆரம்ப நிகழ்வுகள் என்பதால் ஒவ்வொன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

      நீக்கு
  21. நவராத்திரியில் தினசரி லலிதா சஹஸ்ரநாம பாராயணம், கோவில் விசிட், உபவாசம்,தவிர வீட்டிற்கு வரும் பெண்களை அம்பாளாக பாவித்து தாம்பூலம் கொடுத்தல் என்று பக்தி சுவை நிலவுகிறது.
    விதம் விதமாக பிரசாதம் தயாரிப்பதால் ருசி உணர்வு வளர்கிறது.
    ஆனால் நவராத்திரி என்றாலே அதில் கோலோச்சுவது அழகுணர்ச்சிதான்! கொலுப்படி கட்டுவதிலேயே தொடங்கி விடும் அழகுணர்ச்சி!. கொலுப்படி அமிப்பது, அதில் துணி விரிப்பது, இப்போதெல்லாம் முன்பு போல் வெறும் வெள்ளை வேட்டியை விரிப்பதில்லை. கலர் காம்பினேஷனில் துணிகளை விரிப்பதில் தொடங்கும் அழகுணர்ச்சி, அதில் பொம்மைகளை அடுக்குவதில் தொடர்ந்து, பேக் ட்ராப், தோரணங்கள் என்று விரிந்து, விதம் விதமாக ரங்கோலி போடுவது, வீட்டுப் பெண்கள் தங்களையும் அலங்கரித்துக் கொண்டு, குழந்தைகளையும் அலங்கரித்து அதை முகநூலிலும், இன்ஸ்டாவிலும் பதிவேற்றுவது என்று கொடி கட்டி பறக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!