செவ்வாய், 10 அக்டோபர், 2023

சிறுகதை : தனியே தன்னந்தனியே - பானுமதி வெங்கடேஸ்வரன்

 தனியே தன்னந்தனியே..

பானுமதி வெங்கடேஸ்வரன் 


தோழியோடு பேசி முடித்து ஃபோனை கீழே வைத்து கிரிஜா ஒரு பெருமூச்சு விட்டாள். பின் தன் மருமகள் பக்கம் திரும்பி,"என் ஃபிரண்ட் மேகலா பஞ்ச துவாரகா போயிட்டு வந்தாளாம்" என்றாள்.

"அப்படியா? என்ற அவள் மருமகள் நித்யா  "யாரோடு போனார் மேகலா ஆண்ட்டி?" என்று கேட்டாள்.

"யாருமில்லை,தனியாகத்தான் போயிருக்கா"

"அப்படியா? தனியாளாகவா? பரவாயில்லையே.. தைரியம்தான்".

"என்ன பயம்னு கேட்கிறாள்" அங்கு வருகிறவர்களை ஃப்ரண்டு புடுச்சுக்க வேண்டியதுதான்" என்கிறாள் என்றவள் தொடர்ந்து "நீங்கதான் என்னை தனியாக போக விடுவதில்லை." என்று குறைபட்டுக்கொள்ள,

"தனியா எப்படி அனுப்ப முடியும்? சேஃப்டி முக்கியமில்லையா?"

"அதுக்கெல்லாம் ஒரு குறைச்சலும் இல்லையாம். நல்ல தரமான ஹோட்டலில் தங்க வைக்கிறார்களாம், ஏ.கிளாஸ் சாப்பாடாம்" கிரிஜா அடுக்கினாள்.

"ஏதாவது டூர் ஆபரேட்டரோடு போனாரா?"

"ஆமாம் "

"எந்த டிராவல்ஸ் என்று விசாரியுங்கள்" மருமகள் கூறியதும் கிரிஜா தன் தோழியை தொடர்பு கொண்டு அந்த டூர் ஆபரேட்டரின் தொலைபேசி எண், வெப்சைட் போன்ற தகவல்களை திரட்டி மருமகளிடம் கொடுத்தாள்.

அடுத்த சில நாட்கள் மருமகள் அந்த டூர் ஆபரேட்டருடன் பேசுவது தெரிந்தது.

"ஓ.கே. ஷ்யூர், ஃபிஃப்டி பர்செண்ட் அனுப்பனுமா? ஜி.பே. பண்ணலாமா?"
மருமகள் டூர் ஆபரேட்டரிடம் கன்ஃபர்ம் பண்ணுவது தெரிந்ததும் கிரிஜாவுக்கு மகிழ்ச்சி உள்ளூரியது.

மருமகள் நித்யா கிரிஜாவிடம் வந்து, " அடுத்த மாசம் ஃபர்ஸ்ட் வீக் லாங் வீக் எண்ட். கூர்க் போக நீங்க சொன்ன டூர் ஆபரேட்டரிடம் புக் பண்ணி விட்டேன். நீங்க தனியா இருப்பேள்தானே..? நான் கலாவிடம் சொல்றேன், ராத்திரி உங்களுக்கு துணையா வந்து படுத்துப்பா.. ரொம்ப தாங்ஸ்மா" என்றாள். பாவம் கிரிஜா தனியாக டூர் செல்ல ஆசைப்பட்டாள், இப்போது தனியாக வீட்டில் இருக்க வேண்டும்.

26 கருத்துகள்:

  1. கடைசியாக சுற்றுலா செல்வது மருமகளா ?

    இறுதியில் நல்லதொரு திருப்பம் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லையா தீர்மானம் எடுக்க....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியெல்லாம் ரொம்ப சீரியஸாக யோசிக்காதீர்கள், இது சும்மா ஜாலியாக ஒரு குட்டிக்க்க் கதை. அஷ்டே! நன்றி

      நீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. 70 களின் நடை..

    அப்போதெல்லாம் இப்படித்தான் கதைகள் இருக்கும்..

    நன்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 80,90,2000த்திலும் ஒரு பக்க கதைகள் இப்படிதான் இருக்கும். வளரவில்லை என்று கூறவில்லைதானே?

      நீக்கு
  4. //மருமகள் டூர் ஆபரேட்டரிடம் கன்ஃபர்ம் பண்ணுவது தெரிந்ததும் கிரிஜாவுக்கு மகிழ்ச்சி உள்ளூரியது.//

    கிரிஜா மருமகள் தன்னை பஞ்ச துவாரகா தனியாக அனுப்பி வைப்பார் என்று மகிழ்ச்சியுடன் இருந்தார்,

    இப்படி ஆகி விட்டதே !

    சிறு கதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. சிலரின் குணங்களை பிட்டு வைக்கிறது கதை.

    அய்யோ பாவம் கிரிஜா.

    பதிலளிநீக்கு
  6. சிறுகதை சிறிய கதை. நாகராஜனின் மைக்ரோ கதைகளை நினைவூட்டியது. மாமியாரை மிஞ்சிய மருமகள்!
    Jayakumar

    பதிலளிநீக்கு
  7. இஃகி,இஃகி,இஃகி, இந்த முடிவைத் தான் எதிர்பார்த்தேன். :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய வாசிப்பனுபவம் உள்ளவர்கள் எளிதில் யூகிக்க முடியும். நன்றி.

      நீக்கு
  8. ரொம்ப நாள் கழித்து பானுக்காவின் கதை. வழக்கம் போல் சிறிய கதை குமுதத்தின் ஒரு பக்க கதை போன்று!

    கதை முடிவு ட்விஸ்ட்....வாசிக்கறப்பவே கொஞ்சம் யூகிக்க முடிந்தது.

    உங்களாலதான் இப்படி, சின்ன கதை, நறுக்கென்று எழுத முடியும்.

    நன்றாக இருக்கிறது, பானுக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. சரி, கிரிஜாவின் பிள்ளை? வாய்ஸ் இல்லையோ?!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜிக்கு கூறியிருக்கும் அதே பதில்தான் உங்களுக்கும். :))

      நீக்கு
  10. என் கதையை வெளியிட்ட எங்கள் பிளாகிற்கு மனமார்ந்த நன்றி. இந்தக் கதை பிறந்த கதையை கூறி விடுகிறேன். மத்யமரில் பானுமதி ராமமூர்த்தி என்பவர் மாமியார், மருகளை வைத்து எழுதுவார். மருமகள் ஒன்று நினைக்க, மாமியார் அவளுக்கு பல்ப் கொடுப்பதை நகைச்சுவையாக சிறப்பாக எழுதுவார். அதற்கு கவுண்டர் கொடுப்பது போல மாமியாருக்கு மருமகள் பல்ப் கொடுப்பதாக எழுத நினைத்தேன். ஆனால் அவருடைய நகைச்சுவை எனக்கு கை வரவில்லை.
    படித்து கருத்திட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரி

    கதை சுருக்கென்று நன்றாக உள்ளது. இப்படி எழுதும் திறமை தங்களுக்கே உரித்தானது. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    இறுதியில் மாமியார் நினைத்தது மருமகளுக்கே கிடைத்து விட்டது. படித்து வருகையில் நடுவிலேயே முடிவு தெரிந்து விட்டது. கதையை படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!