ஞாயிறு, 22 அக்டோபர், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 17

 

வைரமுடி யாத்திரை மேல்கோட்டை செலுவநாராயணர் ஆலயம் பகுதி 17

இராமானுஜர், சோழ நாட்டை விட்டு கர்நாடகத்திற்கு வந்து (அப்போது இது ஹொய்சாளர்களின் பிரதேசம்) மேல்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் பன்னிரண்டு வருடகாலம் இருந்த தால், நிறைய மக்கள் வைணவத்தைத் தழுவினர். மற்றும் சோழ தேசத்திலிருந்து பல வைணவர்கள் (ஆயிரக்கணக்கானவர்கள்) இந்தப் பிரதேசத்திற்கு வந்தனர். அவர்கள் சந்ததியினரே  மாண்டியம் ஐயங்கார்கள் (மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்) என்று அழைக்கப்பட்டனர்.

வைணவர்கள் தற்போது கர்நாடகம் என்று அழைக்கப்படும் இடத்தில் பரவிக்கிடந்தாலும், அவர்களுக்கும், தமிழக வைணவர்களுக்கும் வித்தியாசத்தை என்னால் காண முடிகிறது.  வைணவர்கள் அனைவருக்கும் (தென் இந்தியாவில்), ஆழ்வார்களின் பாசுரங்களான நாலாயிர திவ்யப் பிரபந்தம்தான் இணைக்கும் நூல். வேதங்களுக்கு அடுத்தபடியாக அல்லது அதற்கு இணையாக இந்த த் திராவிட வேதம்தான் பொதுவான நூல், விஷ்ணு கோவில்களில் சேவிக்கப்படுவது (சைவத் திருமுறைகளை ஓதுபவர்கள் ஓதுவார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பொதுவாக எல்லா வைணவர்களும் நாலாயிர திவ்யப் பிரபந்தகளைச் சேவிக்கின்றனர்-ஓதுவது என்பதற்கான வைணவ பரிபாஷை).  கர்நாடகத்தில் உள்ளவர்கள் கன்னட எழுத்துருவில் இதனைச் சேவிக்கின்றனர். தெலுங்குப் பிரதேசத்தில் தெலுங்கு எழுத்துருவில் (நான் ஹிந்தி எழுத்துருவிலும் இந்த நூலைப் பார்த்திருக்கிறேன்). இருந்தபோதிலும், மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட்டுவிட்டதால், அவரவர்கள் தங்களை மொழிவாரியாகவே identify செய்துகொள்கின்றனர். முன்னெல்லாம், நான் சொல்வது அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக,  திருநெல்வேலி, தஞ்சை, சென்னை என்று பிரிந்திருந்தனர். அந்த அந்தப் பிரதேசத்துக்குரிய குணாதிசயம் உண்டு (அல்லது கற்பித்திருந்தனர். இது பற்றி கருத்துகளில் கேள்வி எழுப்பினால் எழுதுகிறேன்). கர்நாடக வைணவர்கள், தங்களை கன்னடியர் என்றே identify செய்துகொள்கின்றனர். இது சாதாரண politics என்றும் நாம் கொள்ள முடியும். இருந்தாலும், பழக்க வழக்கங்களில் நாம் பல வேறுபாடுகளைக் காண முடியும். (முதலில் உணவுப் பழக்கம்). பொதுவாக வைணவர்களுக்கு தமிழ் தெரியும். சரிஇப்போது செல்வ நாராயணர் கோவிலைப் பற்றிப் பார்ப்போம்.

இந்தக் கோவிலுக்குப் பல்வேறு நிவந்தங்களை, விஜய நகர அரசர்களும் பிற்பாடு மைசூர் அரசர்களும் அளித்திருக்கின்றனர். அதனால் செல்வச் செழிப்புடைய கோவில் இது. 15-16ம் நூற்றாண்டில் மைசூர் அரசர் ராஜ உடையார், ஸ்ரீரங்கப் பட்டினத்தைக் கைப்பற்றிய பிறகு வைணவத்தைத் தழுவினார். அவரது அரண்மனையில் இரண்டு விஷ்ணு கோவில்களும் கட்டினார்.  கோவிலில் ஒரு அருமையான தூணில் ராஜ உடையாருக்குச் சிற்பம் அமைத்திருக்கின்றனர். அவர் இந்தக் கோவிலுக்கு நிறைய வைரங்களுடன் கூடிய அழகிய தங்கக் கிரீடத்தை  வழங்கியிருக்கிறார். இது ராஜமுடி என்று அழைக்கப்படுகிறது. பிற்பாடு 18ம் நூற்றாண்டில், கிருஷ்ணராஜ உடையார் அரசரும் வைர வைடூரியங்களினால் ஆன கிரீடத்தை (இரண்டுமே உற்சவர் ஸம்பத்குமாரருக்கானது) அளித்திருக்கிறார். அது கிருஷ்ணராஜ முடி என்று அழைக்கப்படுகிறது.

இந்த இரண்டைவிட மிகப் பழமையானது வைரமுடிஎன்று அழைக்கப்படும் கிரீடம். அரசாங்க ஆவணங்களின்படி, இந்த மிக மிக விலையுயர்ந்த கிரீட த்தை யார் வழங்கினார்கள், எப்போது வழங்கப்பட்ட து என்பது தெரியாது. மிகப் பழங்காலத்தைச் சேர்ந்து இது என்பது மாத்திரம்தான் தெரியும். அதனைக் கொண்டு வைரமுடி ஹப்பா எனப்படும் வைரமுடி சேவை வருடத்திற்கு ஒரு நாள் விழாவாக நடந்துகொண்டிருக்கிறது. 

ஹொய்சாள மற்றும் விஜயநகர ஆட்சிக் காலத்தில்தான் மலையில் ஒரு கோட்டை கட்டப்பட்டதாம். விஜயநகர அரசர்களே கோவிலையும் புனர் நிர்மாணம் செய்திருக்க வேண்டும்.  இப்போதும் கோவில் மற்றும் ஊரின் புராதானத்தைக் காக்க, நான்கு மாட வீதிகளிலும் மாற்றங்கள் செய்ய முழு அனுமதி வேண்டும் என்கிறார்கள். சரி.. நாம் கோவிலில் உள்ள சிற்பங்களில் சிலவற்றை பார்ப்போம்.


தாயார் சன்னிதிக்கு முன்புறம் உள்ள மண்டபத்தில் ஒரு தூணில், கட்டைவிரலை விடச் சிறியதாக மிளகாழ்வார்சிற்பம் இருக்கிறது (இரண்டாவது படத்தில் இருப்பது). இதனைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று யாத்திரை நடத்துபவர் சொன்னார்.

தூணின் மூலையில் வீரனின் சிற்பம். அழகிய தூணில் கிடைத்த இடத்தில் கையில் உள்ள மஞ்சள்/குங்குமத்தைக் கொட்டி வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்களே. கோவிலுக்குச் செல்லும்போது சிறிய பேப்பரோ இல்லை சிறிய பிளாஸ்டிக் பையோ கொண்டு சென்று அதில் குங்குமத்தை வைத்து வீட்டிற்குக் கொண்டுவரலாம். அர்ச்சகர் மஞ்சள்/குங்குமம் தருவதுதான் நமக்கு நிறைவாக இருக்கும், ஆனால் அதில் இந்தப் பிரச்சனை இருக்கிறது. அங்கேயே ஒரு தட்டில் மஞ்சள்/குங்குமம் வைத்திருந்தால், சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டால் இந்தப் பிரச்சனை வராது என்றும் தோன்றுகிறது.


இந்தக் கற்றூண் என்னை மிகவும் கவர்ந்ததுபடிப்படியாக அமைக்கப்பட்ட தூணில் மேற்புறத்திற்குச் சற்றுக் கீழ் கல்லில் எப்படிச் செதுக்கியிருக்கிறார்கள் என்று பாருங்கள். மரத்தில்கூட சிற்பங்கள் செதுக்குவது சிறிது எளிது. கல்லில் சிறிது அதிகம் உளி பட்டாலும் பட் என்று உடைந்துவிடக்கூடிய அபாயம், அதுவரை செய்தது எல்லாமே வீணாகிவிடும். தூணில் கன்னட  எழுத்தில் கல்வெட்டுகள்.




கோவிலின் உள் பிரகாரத்தில் சுவரில் இருக்கும் கல்வெட்டுகள். (கன்னடம்)

மூலவர் செலுவநாராயணர்  (பாதத்தின் நடுவில் பீவி நாச்சியார் தெரிகிறதா?)

உற்சவர் செல்வப்பிள்ளை என்ற சம்பத்குமாரர் (இராஜமுடி அலங்காரத்துடன்)

செல்வநாராயணர் கோவில் தரிசனத்திற்குப் பிறகு மாலை காபிக்காக ஷெட்டிற்குப் போனோம். பிறகு எங்கு சென்றோம் என்பதை அடுத்த வாரத்தில் பார்ப்போம்

( தொடரும்) 

48 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    காலை எழுந்தவுடன் ஸ்ரீ செலுவநாராயணர் தரிசனம் கண்டு கொண்டேன். அற்புதமான படங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம். ஞாயிறு வெளியில் செல்கிறீர்களா?

      நீக்கு
  3. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நாள் இனிய நாளாக இருக்கட்டும் துரை செல்வராஜு சார்

      நீக்கு
  4. அதிகாலைப் பொழுதில்
    ஸ்ரீ செல்வ நாராயணர் தரிசனம்..

    ஓம் ஹரி ஓம்..

    பதிலளிநீக்கு
  5. /// அர்ச்சகர் மஞ்சள்/குங்குமம் தருவதுதான் நமக்கு நிறைவாக இருக்கும் ///

    இப்போது இங்கேயும் பெரும்பாலான கோயில்களில் நிறைய மாற்றங்கள்.. குங்குமம் துளசியை வெளி மண்டபத்தில் வைத்து விடுகின்றனர்..

    மூலஸ்தானத்தில் பட்டாச்சாரியர் ஒருவர் மட்டுமே..

    ஒவ்வொன்றையும் வந்து வழங்குவதற்கு இயலவில்லை..

    தீர்த்தம் சடாரியையும் சுய சேவைப் பிரிவு மாதிரி ஆக்கி விடலாம் என்றால் -
    என்றால்.. ???????????

    நடந்ததும் நடப்பதும் நாராயணன் செயல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /மூலஸ்தானத்தில் பட்டாச்சாரியர் ஒருவர் மட்டுமே/ - பல பெரிய கோவில்களில் ஒருவரே, பெருமாள் சந்நிதி/சிவன் சந்நிதி, தாயார் சந்நிதி/அம்பாள் சந்நிதி போன்ற பலவற்றையும் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

      அதுவும் தவிர, தீர்த்தம் சடாரி போன்றவை, அந்த அந்த பூசனைகள் முடிந்தால்தான் தருவார்கள். விஸ்வரூப தரிசனத்திற்குப் பிறகு பால் தருவார்கள் (தீர்த்தம் போல் ஒரு ஸ்பூன்). ஆராதனை முடிந்த பிறகுதான் தீர்த்தம் சடாரி கிடைக்கும். ஒருவரே இருக்கும் கோயில்களில் இதனைத் தருவதற்கு தாமதம் ஆகும். நாமே எடுத்துக்கொள்வது தகாது. அவர்களையே கவனித்தால், கையில் தீர்த்தம் கொண்டு சுத்தப் படுத்திக்கொண்டுதான் சடாரியைக் கையில் எடுப்பார்கள். பிறகு வைக்கும்போதும் கையை அலம்பிவிட்டுத்தான் வைப்பார்கள்.

      நீக்கு
  6. வைணவ மதத்தைத் தழுவினார்கள் என்றால் அது மதம் அல்ல என்று வைத்துக் கொள்வோம்.  அதற்கு முன்னால் அவர்கள் என்னவாக இருந்திருப்பார்கள்?  முன்னைக்கும் மாறிய பிறகுக்கும் என்ன வித்தியாசம் இருந்திருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவில் பல மதங்கள் இருந்தன. அறுவகைச்்சமயங்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம் என்றெல்லாம். குஜராத்தி, தமிழன், கன்னடன், தெலுங்கன்.... என்றெல்லாம் இல்லாமல் இந்தியர்கள் என்ற சொல்லில் அடக்குவது போல, வேத்த்தை ஏற்றுக்கொண்ட சமயங்கள் எல்லாம் இந்துக்கள் என்றாயிற்று.

      Bபிட்டி தேவா காலத்தில் ஹொய்சாள, கர்நாடகப் பகுதியில் ஜைன மதம் கோலோச்சியது.

      நீக்கு
  7. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை சேவித்தார்கள் என்று சொல்வது பொருத்தமாக இல்லை.  அபப்டி சொன்னால் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை அவர்கள் வணங்கினார்கள் என்கிற பொருளல்லவா வருகிறது?  வேறு பொருத்தமான வார்த்தை ஏதோ இருக்கிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம். இதற்கு முன்பும் எழுதியிருக்கிறேன். ஓதுவது என்ற வார்த்தை சைவத் திருமுறைகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. நாலாயில திவ்யப் பிரபந்தத்தை வாசித்தார்கள், படித்தார்கள் சொன்னார்கள் என்று எழுதுவதில்லை. Recitedஎன்ற வார்த்தைக்கு சேவித்தார்கள் என்று சொல்லும் வழக்கம்தான் உண்டு.

      நீக்கு
    2. கூகுள் செய்தால் ஓதுவது என்றுதான் வருகிறது.  இசைத்தார்கள் என்று சொல்லலாமோ   அல்லது பண் இசைத்தார்கள்.

      நீக்கு
    3. நாலாயிர திவ்ய பிரபந்தம் வரிசையாக எல்லாம் பாடி ஒலிநாடா, ஒலித்தட்டு இருக்கிறதா?  யார் பாடியது நன்றாய் இருக்கும்?

      நீக்கு
    4. ஓதுவது என்ற சொல் சரியானதுதான். ஆனால் வைணவர்கள், சேவிப்பது என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள்.

      பண் இசைப்பது என்பது பொருத்தமல்ல. வெறும் இசையில் பாடப்படுவதல்ல.

      அது சரி.... ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என,ற ஔவை மொழியின் அர்த்தம் என்ன?

      நீக்கு
    5. நாலாயிரம் பாடி என்ற வார்த்தையின் அர்த்தம் வேறு. இன்று இதுபற்றி எழுதுகிறேன் (கொஞ்சம் விளக்கமாக எழுத வேண்டும் என்பதால்)

      நீக்கு
    6. உயர் ஞான நூல்களை மனதால் சிந்தித்தாலும் வாயால் வாசித்தாலும்
      ஓதுதல் எனக் கொள்ளப்படும்..

      இன்று தொழுகை, ஓதுதல் என்றெல்லாம் நம்மவர்கள் பொதுவாகச் செல்வதில்லை..

      ஏதோ சிவனடியார் புண்ணியத்தில் திருவாசகம் முற்றோதல் என்ற வார்த்தை ஆலய வழக்கத்தில் உள்ளது..

      நீக்கு
    7. ஓதுவது என்கிற வார்த்தை ஏன் புறக்கணிக்கப் படுகிறது என்பதே என் கேள்வி.

      நீக்கு
    8. சேயன் அணியன்* சிறியன் மிகப்பெரியன்*
      ஆயன் துவரைக்கோனாய்* நின்ற மாயன்*
      அன்று ஓதிய* வாக்கதனைக் கல்லார்*
      உலகத்தில் ஏதிலராம்* மெய்ஞ்ஞான மில்.

      ஓதிய, ஓதுவார்கள் என்ற வார்த்தையெல்லாம் பல இடங்களில் திவ்யப் பிரபந்தத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 'வேதம் ஓதும் நல்லார்' என்றெல்லாம் வருகிறது. அதனால் அந்த வார்த்தை புறக்கணிக்கப்படுகிறது என்பதில்லை. வேதத்தை ஓதுகிறோம் என்றுதான் நாங்கள் சொல்வோம். வேதத்தைச் சேவிக்கிறேன் என்று சொல்வதில்லை. ஆனால் பிரபந்தம் என்று வரும்போது சேவித்தல் என்ற வார்த்தைதான் உபயோகிக்கிறோம். (வேதம் சொல்லப் போகலையா என்றும் உபயோகிப்போம்...ஆனால் பிரபந்தம் சேவிக்கச் செல்கிறோம் என்று சொல்வதுதான் வழக்கம்)

      நீக்கு
    9. அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும்,
      தோரணம் நிரைத்து* எங்கும் தொழுதனர் உலகே
      தொழுதனர் உலகர்கள்* தூபநல் மலர்மழை பொழிவனர்
      பெருமானைக் கைதொழுத பின்
      என்று பல்வேறு இடங்களில் பிரபந்தத்தில் 'தொழுது' என்ற வார்த்தை வருகிறது.

      ஆனால் வழக்கத்தில் இந்த வார்த்தைகள் புழங்கப்படுவதில்லை.

      நீக்கு
  8. உணவுப் பழக்கத்தில் என்ன வேறுபாடு?

    செல்வப்பிள்ளையா?  செல்லப்பிள்ளையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடும்பங்களுக்கிடையே செய்முறை, மசாலா வித்தியாசம் இருப்பதுபோல உணவுப் பழக்கமும் வேறு வேறுதான். கீதா ரங்கன் இதுபற்றி எழுதுவார் என எதிர்பார்க்கிறேன் (எந்த ஊரைப் பற்றி எழுதினாலும், எங்க ஊர் அது என்று எழுதுபவராயிற்றே அவர் எனச் சந்தேகம் கொள்ள வேண்டாம். அவர் நாரோயில் நாரீமணி)

      நீக்கு
    2. உணவுப்பழக்கங்கள் ஊரைப் பொறுத்து மாறுவது என்றால் விளக்கம் வேண்டாம்.  சார்ந்த சமயம் பொறுத்து (சைவம்-அசைவம் சொல்லவில்லை) மாறுகின்றன என்றால் விளக்கம் கேட்டேன்!

      நீக்கு
    3. // செல்வப் பிள்ளை தான்!.. //

      என்ன confirmation? மூன்று வைரமுடிகள் வைத்திருப்பதால் 'சம்பத்'குமாரர் செல்வப்பிள்ளையா?!   :))

      நீக்கு
    4. சமயத்தைப் பொருத்து உணவும் வேறுபடும். உதாரணமாக முருங்கைக்காய் சார்ந்த உணவுப்பொருட்கள், வெங்காயம், பூண்டு ஆகியவை (கோஸும் அதைச் சார்ந்தவைகளும்) வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் உபயோகிப்பதில்லை. வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்களும், கொஞ்சம் கடுமையான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுபவர்கள் ஆங்கிலக் காய்கறிகளான கோஸ், காலிஃப்ளவர், நூல்கோல், சோளம் என்று பலவற்றை உபயோகிப்பதில்லை. ஜைன சமயத்தைச் சார்ந்தவர்கள் மாலை 6 மணிக்கு மேல் உணவு எடுத்துக்கொள்வதில்லை, மண்ணின் கீழே விளைபவற்றை உட்கொள்வதில்லை என்று பல வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் காலவெள்ளத்தில் மாறிக்கொண்டிருக்கிறது. அதிலும் கடந்த 50 வருடங்களில் உணவுப் பழக்கத்தில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. (வட இந்திய உணவுகள், பிரியாணி, பர்கர், மைதா சேர்த்த பல்வேறு உணவுகள் நூடுல்ஸ்... கார்ன்ஃப்ளெக்ஸ்....) என் இளமைக்காலத்தில் வைணவ உணவைத் தவிர மற்றவற்றைச் சாப்பிட்டதில்லை (பரோட்டா சாப்பிடணும் என்ற ஆசை இருந்தபோதும்)

      நீக்கு
    5. செல்லப் பிள்ளையாய் இருப்பதால் செல்வப் பிள்ளை..

      செல்வப் பிள்ளையாய் இருப்பதால் செல்லப் பிள்ளை..

      வய்ர மொடி.. ல்லாம் ஆருக்கு ஓ..ணும் ஜாமீய்!..

      நீக்கு
    6. சம்பத் குமாரன்..
      செல்வப் பிள்ளை..
      ( செல்லப் புள்ளையாண்டான்)

      தானே தவமாய்
      தான் வருவான்..
      தன்னடி யார்க்கென
      தமிழாய் வருவான்..

      தமிழாய் வாழும்
      தவம் உடையார்க்கே
      தவழும் தளிராய்
      தினம் வருவான்..

      நீக்கு
    7. //தமிழாய் வாழும்
      தவம் உடையார்க்கே
      தவழும் தளிராய்
      தினம் வருவான்..// - இதைப் பற்றி எழுதவேண்டு என்பது என் எண்ணம் (with respect to Karnataka). எழுதுகிறேன்.

      நீக்கு
    8. ஸ்ரீராம், உணவுப் பழக்கத்தில் முருங்கை, முட்டைக்கோஸ், காலிஃபளவர், முள்ளங்கி, பீட்ரூட், சுரைக்காய், பீர்க்கங்காய், வெங்காயம் பூண்டு மசாலாக்கள் சேர்க்கமாட்டாங்க. மடத்து சாப்பாடுகளில் பட்டாணி கேரட் எதுவும் சேர்க்க மாட்டாங்க. பொதுவாக நாட்டுக்காய்கள்தான். அந்த நாட்டுக் காய்களிலும் கூட சில திவசத்திற்கு எடுக்க மாட்டாங்க.

      அரிசி இடிப்பது அதாவது ஈர அரிசி இடிப்பது, மெஷினில் கொடுத்து திரிக்கமாட்டாங்க. எந்தப் பொடிகளும் மெஷினில் கொடுத்து திரிக்கமாட்டாங்க. நான் சொல்வது தீவிரமாகப் பின்பற்றுபவர்கள்.

      கீதா

      நீக்கு
    9. நெல்லை - ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன். எனக்கு ஒரு கால் தின்னவேலி ஒரு கால் நாரோயிலு, ரெண்டு கையும் கேரளான்னு.....மத்தா ஊரெல்லாம் ஒரோரு விரலுக்குச் சொன்னமாக்கும்!!

      ஸ்ரீராம் கேட்டது உணவுப்பழக்கம் என்பது வைணவ சமயத்து உணவு.

      கீதா

      நீக்கு
    10. இப்போவெல்லம் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன கீதா ரங்கன். காய்ச்சியது, உப்பு சேர்த்தது மற்றும் processல் ஏற்கனவே வெந்ததும் உணவில் சேர்க்கமாட்டாங்க (ஜவ்வரிசி, அவல், சேமியா). உப்பு போட்ட எதையும் வெளியிலிருந்து வந்ததை சேர்த்துக்க மாட்டாங்க (அப்பளம், வடகம்.....) வாசனை எஸென்ஸ், நிறமி பலவற்றை சேர்க்கமாட்டாங்க. தலை சுத்துதா? ரொம்ப சுலபமா பின்பக்கத்தையும் பார்த்துக்கொள்ள முடியும்.

      நீக்கு
  9. தகவல்கள் சிறப்பு புகைப்படங்கள் மிகவும் அழகு கல்தூண் பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. மாண்டியம் ஐயங்கார்கள் வரலாறு அறிந்து கொண்டேன்.
    பழக்க, வழக்கங்கள் மாறுபட்டாலும் அவர்கள் பக்தி ஒன்றுதான்.
    ஆழ்வார்களின் பாசுரங்களான நாலாயிர திவ்யப் பிரபந்தம்தான் எல்லா வைணவர்களை இணைக்கும் நூல். அவர்களுக்கு தெரிந்த மொழியில் படிப்பது நல்லதுதான்.

    தூண் சிற்பங்கள் பல கதைகளை சொல்கிறது. கல் தூண்கள் மிக அழகாய் இருக்கிறது, நல்ல வேலைப்பாடுகள் .

    மூலவர் செலுவநாராயணர் (பாதத்தின் நடுவில் பீவி நாச்சியார் தெரிகிறதா?)
    மூலவர் செலுவநாராயணர் மிக அழகான தோற்றத்தில் இருக்கிறார்.
    பீவி நாச்சியார் தெரிகிறார்.

    வைரமுடி சேவை விழா விவரங்கள் அருமை.

    உற்சவர் இராஜ முடி அலங்காரம் அருமை.
    தரிசனம் செய்ய படங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.... கர்நாடகாவில், ஆந்திரா/தெலுங்கானாவில் பல தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி, அங்கேயே கிளைபரப்பி இருக்கின்றனர். (அவர்களில் வைணவர்கள் மற்றும் ஸ்மார்த்தர்கள் உண்டு) இப்போது உள்ள காஞ்சீபுர மடாதிபதியே தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர் என்று நினைக்கிறேன்.

      வைரமுடி விவரங்கள் ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  11. படங்கள் அழகு.
    சிற்பங்கள் மீண்டும் பார்த்து ரசிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  12. மூலவர் செலுவநாராயணர் (பாதத்தின் நடுவில் பீவி நாச்சியார் தெரிகிறதா?)//

    யெஸ்ஸு....

    படங்கள் அத்தனையும் அழகு. சிற்பங்கள் அந்தத் தூண் ரொம்பவே மனதைக் கவர்கின்றது. கீழே தனியாகத் தூண்களின் பகுதிகள் செம.

    தூணில் ஓரமாக விசிறி விரித்தது போல இருக்கும் டிசைன் ரொம்ப அழகு.

    படங்கள் எல்லாம் நல்லா எடுத்திருக்கீங்க நெல்லை

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!