ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 15 : நெல்லைத்தமிழன்

 

மா வைஷ்ணவதேவி கோவில், அஹமதாபாத்

திருப்பதி பாலாஜி கோவிலில் தரிசனம் முடிந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு அருகிலிருந்த  மா வைஷ்ணவதேவி கோவிலுக்குச் சென்றோம்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணோதேவி கோவில் மிகப் புராதானமானது. இந்தக் கோவிலுக்குச் செல்ல சுமார் 12 கிமீ தூரம் நடந்து சென்று வழிபடுகின்றனர் பக்தர்கள். அஹமதாபாத்தில் உள்ள வைஷ்ணவோதேவி கோவில், காஷ்மீரின் கோவிலைப் போன்றே ஒரு டிரஸ்டினால் 2007ல் வடிவமைக்கப்பட்டது. (நான் இன்னும் கஷ்மீர் செல்லவில்லை). ஒரு குன்றினைப் போன்ற வடிவுடைய இடத்தில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள், மனிதனால் வடிவமைக்கப்பட்ட மலைப்பாதை போன்று உள்ளதில் சென்று உச்சியில் உள்ள வைஷ்ணவோதேவி சன்னிதிக்குச் செல்லவேண்டும்.

ரொம்பச் சிறிய பாதை, குன்றின் கற்களைப் போன்று வடிவமைக்கப்பட்ட பாறைகளின் வழியே செல்கிறது. அது ஒரு வித்தியாசமான அனுபவம்.

கூட்டத்தைப் பொறுத்து தரிசன நேரம் மாறுபடும். எங்களுக்கு பதினைந்து நிமிடங்கள்தாம் ஆயிற்று. கோவிலின் தரைப்பகுதியில் பிரசாதக் கடைகளும் குளிர்பானக் கடைகளும் உண்டு. குஜராத்துக்கே உரிய டோக்ளா போன்றவற்றைப் பார்த்தேன்

வைஷ்ணவ தேவி கோவில் நுழைவாயில்

பாறைகளைப் போன்று வடிவமைக்கப்பட்டதன் இடுக்குகளின் வழியே பயணம். 


நடுவிலிருந்து பார்த்தால், கீழே சமதளம் அழகாகத் தெரிகிறது

உச்சியில் கோவில் கோபுரக் கொடி


ரொம்ப கஷ்டமாக இல்லாவிட்டாலும் மிகக் குறுகலான பாதை.

சன்னிதானத்திற்குச் சற்று முன்பு ஒரு ஹாலில் பல்வேறு தேவியரின் வடிவங்கள்


கர்பக்ரஹம் வைஷ்ணவ தேவி

லக்ஷ்மி, காளி, சரஸ்வதி தெய்வங்களின் திருமுகங்கள் இருக்கின்றன.

கீழிருந்து பார்த்தால் வைஷ்ணவதேவி கோவிலின் தோற்றம்

மதியம் 12:50க்கு அங்கிருந்து புறப்பட்டு, சுமார் 14 கிமீ தூரத்தில் இருந்த சபர்மதி ஆஸ்ரமத்தை அடைந்தோம்.

சபர்மதி ஆஸ்ரமம், அஹமதாபாத்

சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ஆஸ்ரம ம் 1915ல் நிறுவப்பட்ட து (1917).  இந்த இடத்தில் காந்தி நிறைய சுய பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஆஸ்ரமத்தை அமைத்தார். (இது காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன் நிகழ்ந்தது). இங்கு பசு வளர்ப்பு, கதர், தோட்டம் என்று பல்வேறு பணிகள் நிகழ்ந்தனஇந்த ஆஸ்ரமம், ஹரிஜன் ஆஸ்ரமம் என்று அழைக்கப்பட்ட து. அப்போது இது பொட்டல் காடாக இருந்ததாம் (ஒரு பக்கம் சுடுகாடும் இன்னொரு பக்கம் சிறையும் இருந்த இடமாம்ஒரு சத்யாக்ரஹி, எப்போதும் ஜெயிலுக்கும் அல்லது இறப்புக்கும் தயாராக இருக்கவேண்டும் என்று காந்தி நினைத்தாராம். இங்கு காந்தி 1917 முதல் 1930 வரை வாழ்ந்தார். இந்திய விடுதலைப் போராட்ட த்தில் முக்கியப் பங்கு வகித்த இடம் இது. இந்த இட த்திலிருந்துதான் புகழ் பெற்ற தண்டி யாத்திரையை காந்தி 1930ல் தொடங்கினார். (உப்பு சத்தியாக்கிரஹம். அது என்ன என்று யோசிப்பவர்கள் இணையத்தில் தேடவேண்டியதுதான்) பிரிட்டிஷாருக்கு எதிராக நாட்டின் சுதந்திரத்துக்கான நிகழ்வு அது. 60,000 வீரர்களைச் சிறைக்கு அனுப்பிய போராட்டம் அது.

இந்தியா விடுதலை பெறாமல் இந்த ஆஸ்ரமத்துக்குத் திரும்பமாட்டேன் என்று சபதம் செய்துகொண்டு தண்டி யாத்திரைக்குக் கிளம்பிய காந்தி, இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றும், சில மாதங்களிலேயே அவருடைய துர்மரணம் நிகழ்ந்ததால், இந்த ஆஸ்ரமத்திற்குத் திரும்பவே இல்லை.

இந்த ஆஸ்ரமத்தை அதன் நினைவுகள் மங்காமல், நிறைய புகைப்படங்களுடன், அந்த அந்த குடிலை மிக அழகாகப் பராமரித்து வைத்துள்ளனர். குஜராத் பாஜக அரசு (மோடி தலைமை) அமைந்தபோது சபர்மதி ஆற்றைச் சீரமைத்து, ஆற்றையும் சபர்மதி ஆஸ்ரமத்தையும் பார்க்கும்போது மிக அழகாக இருக்கும்படிச் செய்திருக்கிறார்கள். அந்த ஆஸ்ரமத்தின் நான் கண்ட காட்சிகள் இங்கு.  


நுழைவாயிலில் ஆஸ்ரமத்தைப் பற்றிய குறிப்பு

குஜராத்தியாக இருப்பதால், அந்த மொழி, நிலத்தில்தான் என் பயணம் தொடரவேண்டும். அதிலும் அஹமதாபாத், தலைநகராக இருப்பதால், என் பயணத்திற்கு, லட்சியத்திற்கு, பணமுள்ளவர்களின் உதவியும் கிடைக்கும் என்பதால் அஹமதாபாத்தில் ஆஸ்ரமம் அமைக்கிறேன் என்று சொன்னாராம் காந்தி.

உப்பு சத்தியாக்கிரஹத்தைக் குறிக்கும் 3D சிற்பம்

ஆஸ்ரமத்தை யார் யார் பார்வையிட்டார்கள் என்று ஒரு புகைப்படத் தொகுதி

காந்தியின் திருவுருவம் கண்ணாடிப் பேழையில்

இப்போது அவரது வாழ்க்கையை, நிகழ்வுகளைச் சுலபமாக நாம் விமர்சிக்க முடியும். ஆனால் அவர் ஒரு யுக புருஷர். 

பெரிய கூட்டத்தில் பேசும் எளிமையான காந்தியின் ஓவியம்

இதில் அனைவருமே காந்தி, தேச விடுதலை என்ற உணர்வால் ஈர்க்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும்.  ‘காந்திஎன்று மாத்திரம் போட்டாலே அவருக்கு தபால்தலை சென்று சேர்ந்துவிடுமாம். (இப்போ அட்ரஸை ஒழுங்காக எழுதினாலே, சேர்க்காமல் கீழே விட்டெறிந்துவிடுகின்றார்கள்)

சபர்மதி ஆஸ்ரமத்தில் இன்னும் காணவேண்டிய இடங்கள் இருக்கின்றன. அடுத்த வாரம் தொடரலாமா?

(தொடரும்) 

= == = = = = = = =

எங்கள் Blog வாசகர்கள் 

எல்லோருக்கும் 

எங்கள் 

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.! 

= = = = = = = = = = = = = = = = = =

 

48 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும்
    அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
    வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் கோமதி அரசு மேடம்

      நீக்கு
    2. வாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம். காலநிலை நல்லா இருக்கா?

      நீக்கு
  6. ///வடிவமைக்கப்பட்ட மலைப்பாதை போன்று உள்ளதில் சென்று உச்சியில் உள்ள வைஷ்ணவோதேவி சன்னிதிக்குச் செல்லவேண்டும்.. ///

    வைஷ்ணவி போற்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையாக வடிவமைக்கப்பட்ட கோவில்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      நலமாக உள்ளீர்களா? உங்களைத்தான் ஒரு வாரமாக பதிவுகளில் காணவில்லையே என நினைத்திருந்தேன். நீங்கள் மகன் ஊருக்கு போயிருப்பதை சென்ற உங்கள் பதிவின் கருத்தில் கண்டேன். சந்தோஷம். மகன் வீட்டில் அனைவரையும் கேட்டதாகக் கூறுங்கள். உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி சகோதரி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் கோமதி அரசு சகோதரி என அடிக்க நினைத்தும், வேறு எங்கோ கருத்துட்டும் பிழையாகி விட்டது. மன்னிக்கவும்.

      நீக்கு
    4. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      உங்கள் விசாரிப்பை தெரிவித்து விட்டேன்.
      உடம்பை பார்த்துக் கொள்கிறேன். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.

      நீக்கு
  7. ///ஒரு சத்யாக்ரஹி, எப்போதும் சிறைக்கும் அல்லது இறப்புக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று காந்தி நினைத்தாராம்.///

    அதனால் தான் அவர் மகாத்மா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ காந்தி இருந்து இந்த மாதிரி ஒரு கொள்கையோட கட்சி நடத்தினார்னா, அவரால் கவுன்சிலராகக்கூட, ஏன் போட்டியிடுபவர்களில் மூன்றாவதாகக்கூட வர இயலாது. நம் மக்கள் மனது அவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது.

      நீக்கு
  8. நினைப்பு எல்லாம். சரிதான்...

    நவகாளிப் படுகொலையில் ஒரு சார்பாக நின்றது தான்
    வேதனை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவர்க்கு அவரவர் நியாயங்கள். இதை நாம் இப்போது அலசி என்ன பயன்? தந்தை, எப்போதும் வலிமை குறைந்தவர்கள் பக்கம் இருப்பது போல.

      நீக்கு
  9. மா வைஷ்ணவதேவி கோவில் படங்கள் எல்லாம் அருமை.

    ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணோதேவி கோயில் போனது நினைவில் வந்து போனது. வருட பிறப்பில் அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். பாதபலம் தர சொல்லி நடந்து போய் தரிசனம் செய்தோம். இப்போதும் "கால்களுக்கு பலத்தை கொடு" என்று வேண்டி கொண்டேன் அன்னையிடம்.

    சபர்மதி ஆஸ்ரமம் படங்களும், விவரங்களும் அருமை.
    நேரில் பார்த்த உணர்வை தந்தன படங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம்... புது இடத்தில் செட்டில் ஆயாச்சா?

      பாதபலம் என்பது எனக்குமே குறைவாக இருக்கிறது. 2018லிருந்துதான் இந்தத் தொல்லை. இருந்தாலும் தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கணும் என்று நடக்கிறேன். அது தவிரவும் நடக்கவேண்டியிருப்பதால், சில நாட்களில் ஸ்டெப்ஸ் ரொம்பவே அதிகமாகிவிடுகிறது.

      நீக்கு
  10. /// இந்தியா விடுதலை பெறாமல் இந்த ஆஸ்ரமத்துக்குத் திரும்பமாட்டேன் என்று சபதம் செய்துகொண்டு தண்டி யாத்திரைக்குக் கிளம்பிய காந்தி, இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றும், சில மாதங்களிலேயே அவருடைய துர்மரணம் நிகழ்ந்ததால், இந்த ஆஸ்ரமத்திற்குத் திரும்பவே இல்லை.///

    அறம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அப்படி நடந்துவிடுகிறது. சொல் என்பதை மிகவும் ஜாக்கிரதையாக உபயோகிக்க வேண்டும்.

      நீக்கு
  11. வைஷ்ணவ தேவி தரிசனமும் சபர்மதி ஆஸ்ரம தரிசனமும் அருமை..

    ஞாயிற்றுக் கிழமை புத்தாண்டு நாளாக அமைந்தது வரப்பிரசாதம்..

    பதிலளிநீக்கு
  12. அஹமதாபாத் வைஷ்ணவி கோயில் R K புரம் டில்லி கோயிலை நினைவூட்டியது. படங்கள் நன்றாக உள்ளன. இன்றைய பதிவில் தான் நீங்கள் சாப்பிட்ட சாப்பாடைப் பற்றி கூறவில்லை. ஆகவே பதிவு உப்பு குறைவாக இருக்கிறது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார்... நான் பயணக் கட்டுரைகள் படிக்கும்போது அவங்க என்ன உணவு சாப்பிட்டார்கள் என்ற பகுதியை விருப்பத்துடன் படிப்பேன். உதாரணமா, இதயம் பேசுகிறது பத்திரிகை மணியன் அவர்கள் தன் ஜப்பான் பயணத்தைப் பற்றி எழுதும்போது, சாதம் கிடைத்தது, அதை வெறும்ன சாப்பிடுவதற்குப் பதிலாக கோகோ கோலா பானத்தை அதில் விட்டுக் கலந்து சாப்பிட்டேன், ருசியாக இருந்தது என்று எழுதியிருந்ததுதான் என் மனதில் படிந்தது, மற்றபடி ஜப்பானைப் பற்றி அவர் எழுதியிருந்தவை அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. என்ன சொல்றீங்க?

      நீக்கு
  13. /// வலிமை குறைந்தவர்கள் பக்கம் இருப்பது போல.///

    இது ஒத்துக் கொள்ள முடியாத ஒன்று..

    நியாயத்தின் பக்கம் இருந்திருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்க முடியாது நியாயத்தின் பக்கம் மாத்திரம் நின்றால் அன்பு கருணை இரக்கம் போன்ற குணங்களுக்கு விடை கொடுத்துவிட வேண்டியதுதான்

      நீக்கு
    2. அருமையான பதில் நெல்லை.
      அதுமட்டுமல்ல, அதைப் பரிசோதித்துப் பார்த்தவர்களாயே உணர்ந்து சொல்ல முடிந்த பதில்.

      நீக்கு
    3. மூன்று மகன்களைக் கொண்டிருந்த தந்தை. மூத்த மகன் மிக நல்ல நிலையில், நல்ல குணத்துடன். இரண்டாவது, எல்லா மகன்களும் தந்தைக்கு ஒன்றே என்று நினைத்த, ஆனால் நல்ல நிலையில் இருந்தவன். மூன்றாவது கொஞ்சம் சுமார் நிலையில் வாழ்ந்தவன். தந்தை மூன்றாவது மகனுடன் இருந்தார். தன்னுடைய வீட்டை (அது வாங்கியபோது 1 லட்சத்திற்கும் குறைவு என்றாலும் பிறகு கோடிகளில்), மூன்றாவது மகனுக்கு எழுதி வைத்தார். இரண்டாவது மகனுக்கு இதில் மிகுந்த வருத்தம். தந்தை நியாயம் செய்யவில்லை என்று நினைத்தான். ஆனால் தந்தை செய்தது சரிதான் என்று அவனுக்கு காலம் உணர்த்தியது. நியாயம் வேறு, தர்மம் வேறு.

      நீக்கு
  14. இன்னும் கொஞ்ச நேரத்தில்
    வேறு கருத்தொன்று வந்தாலும் வரலாம்!..

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    இரு தினங்களாக வெளியில் விஷேட வேலைகள் அதனால பதிவுலகத்திற்கு வர இயலவில்லை. இன்றும் தெரிந்தவர் வீட்டின் பூணூல் கல்யாணத்திற்கு மகன் குடும்பத்துடன் வந்துள்ளோம். பிறகு நிதானமாக நாளை தங்கள் பதிவை படிக்கிறேன். தாமதமாவதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனாலென்ன கமலா ஹரிஹரன் மேடம். எனக்கு சந்தோஷம்தான் நீங்கள் வெளியில் சென்றுவருவது

      நீக்கு
  16. ஆஹா. வைஷ்ணவி கோயில் நுழைவாயில் அற்புதம். வித்தியாசமானது. சிலவற்றை வார்த்தைகளில் எவ்வளவு விண்டுரைத்தாலும் புரியவைப்பது சிரமம்.
    இந்த மாதிரி பயணங்களுக்கு படம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர வைக்கிற படத்தில் ஒன்று இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்... சபர்மதி ஆஸ்ரமம் என்று நினைத்த உடனே நீங்க இன்றைய பகுதியைப் படிப்பீங்க (அடுத்த வாரமும்) என்று நினைத்தேன். வந்துவிட்டீங்க

      நீக்கு
  17. லஷ்மி, காளி, சரஸ்வதி --
    கர்ப்பக்ரஹ படத்திலிருக்கும் வைஷ்ணவி தேவியை
    மனத்திலிருத்தி வணங்கிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படித்தான் காஷ்மீரிலும் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அந்த உணர்வைக் கொடுத்தது இந்தக் கோவில் ஜீவி சார்.

      நீக்கு
  18. உப்பு சத்தியாகிரக 3D
    சிற்பம் பார்க்கும் பொழுதே மனதை நெகிழ்த்தியது. எனக்கோ வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம், பெரியவர் ராஜாஜி நினைவுகள்.
    ஏப்ரல் 13, 1930-ல் தான் அந்த சரித்திர நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ஆஸ்ரம சூழலே வித்தியாசமாக இருந்தது. இப்போ அழகு படுத்தியிருந்தாலும், அப்போது மிக எளிமையான ஆஸ்ரமமாக இருந்திருக்கவேண்டும்.

      கண்டிப்புடன் கூடிய தந்தை ஸ்தானத்தில் காந்தி. அவரது தொண்டர்கள், அவரது பக்தர்களாக இருந்திருந்தாலொழிய அவரைத் தலைவராக ஏற்றுப் பின் தொடர்ந்திருந்திருக்க முடியாது

      நீக்கு
  19. அடுத்த வார சபர்மதி ஆஸ்ரம தரிசனத்திற்குக்
    காத்திருக்கிறேன். உங்கள் அரிய பணிக்கு நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக வாருங்கள் ஜீவி சார். சபர்மதி ஆஸ்ரமம், இன்னொரு பயணத்தில் பார்த்த பிரயாக்ராஜ் (அலஹாபாத்) ஆனந்தபவன், போர்பந்தர் காந்தி பிறந்த இல்லம், தில்லியில் பார்த்த இந்திராகாந்தி வாழ்ந்த வீடு... இவையெல்லாம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. எனக்கு அவற்றைப் பார்க்கக் கிடைத்தது பாக்கியம்தான்.

      நீக்கு
  20. // நியாயம் வேறு, தர்மம் வேறு//

    நாணயத்தின் இருபக்கம் போல
    நியாயமும் தர்மமும் ஒன்று தான்...

    சட்டம் வேறு..
    தர்மம் வேறு!..

    நியாயம் என்பது சட்டமல்ல..
    சட்டம் என்பதும் நியாயம் அல்ல!..

    பதிலளிநீக்கு
  21. /// இன்னும் கொஞ்ச நேரத்தில்
    வேறு கருத்தொன்று வந்தாலும் வரலாம்!..///
    என்றேன்..

    வந்து விட்டது!..

    பதிலளிநீக்கு
  22. அதீத விவாதம் அன்பை அசைத்து விடும்!...

    பதிலளிநீக்கு
  23. நவகாளிக் கும்பலோடு குவைத்தில் வேலை பார்த்திருக்கின்றேன்...

    ரோஹிங்கியாக்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல...

    ஒரு பழமொழி இருக்கின்றது...
    அது வேண்டாம்..

    பதிலளிநீக்கு
  24. தர்மத்தில் நான்கு நிலைகள் உண்டு. இந்த நிலைகளை உணர்த்த வந்த பெருமாளின் அவதாரங்கள் தான் இராம, லஷ்மண, பரத,
    சத் ருக

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!