செவ்வாய், 9 ஏப்ரல், 2024

சிறுகதை : கதன குதூகலம் - துரை செல்வராஜூ

 கதன குதூகலம்

துரை  செல்வராஜூ 

*** *** *** *** *** ***

கதனகுதூகலம் 
இடியுடன் கூடிய மழையாய்
அந்த மண்டபத்தினுள்
பொழிந்து கொண்டிருந்தது..

இந்த மாவட்டத்தின் இளம் இசைச் சகோதரர்கள்..


அருமை.. அருமை..

தெருவில் போவோர் வருவோர்க்கு தொந்தரவு இல்லாமல் மண்டபத்திற்குள் மட்டும் இசை நிகழ்வு கேட்கும்படியான ஒலி அமைப்பு.. 

பெரியவர்கள் இசை மழையில் நனைந்திருக்க இளசுகள் உள்ளங்கைக்குள் மூழ்கியிருந்தார்கள்..

நகரின் பிரதானமான கடைத்தெருவில் கல்யாண மண்டபம்..

இது கடைத் தெருவா.. மக்கள் குடியிருக்கும் தெருவா.. இரண்டுமாக இருக்கும் இதைப் பற்றி எவருக்கும் தெரியாது..

இந்தத் தெருவிற்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் கூட கடைத் தெருக்கள் தான்.. இதைத் தவிர கடைத் தெருவின் இரு புறமும் கோயில்கள்..

காலகாலமாகவே இந்த ஊர்  - கடைத் தெருவிற்குள் தான் என்பது மூத்த குடிமக்களுக்குத் தெரியும்.. 

" அண்ணா.. சாப்பிடலாம் வாங்க!.. " 

இசை மழைக்குள் நனைந்திருந்த செந்தில் நாதன் விழித்து நோக்கினார்... 

வாத்தியார் மகன் கனிவுடன் நின்று கொண்டிருந்தார்..

ஆறாம் வகுப்பில் தமிழ் பாடம் நடாத்திய ஆசிரியரின் மகன் கல்யாண ராமன்..
கல்யாண ராமனுடன் ஐம்பது ஆண்டு கால நட்பு.. 

மகளின் திருமணம்..  நேற்று மாலையில் இருந்து ஓய்வில்லாமல் உபசரிப்பு களைத்திருந்தார் கல்யாண ராமன்.. 

அவரது கையைப் பற்றிக் கொண்ட செந்தில் நாதன்,

"உன்னை  மாதிரியே உன் மகனும்... நாங்க வந்ததும் எங்களுக்கு முதல் பந்தி ல உபசரிப்பு..  சந்தோஷமா சாப்பிட்டோம்.. " - என்றார்..

" அப்போ இன்னொரு காஃபி... " அருகில் இருந்த சகுந்தலாவின் விழிகள் -  'சக்கரை இருக்கு.. மறந்துடாதீங்க.. ' என்றன..

சில நிமிடங்களில் இரண்டு குவளை காஃபியுடன்  கேட்டரிங்  பெண் வந்து நிற்க, கூடவே கல்யாண ராமனின்  புன்னகை..

" உனக்கு ஏம்பா சிரமம்... "

" சிரமமா.. எனக்கா!. நிச்சயதார்த்தத்துக்கு எல்லாம் எங்க வீட்டுக்கு வந்து நல்லா செஞ்சுட்டு நாலு நாளைக்கு  முன்னால கீழ விழுந்து கால்ல சுளுக்கு.. அதோட வீட்ல இருக்காம முகூர்த்தத்துக்கு வந்திருக்காங்களே.. "

சொல்வது தன்னைத் தான் என்று புரிந்து கொண்ட சகுந்தலா - 

" அதெல்லாம் சரியாயிடுச்சு தம்பி.. லட்சக் கணக்கில செலவு பண்ணி வழவழ ன்னு பாசி பிடிச்ச மாதிரி  வீட்டுக்குள்ள தளம் போட்டு வைக்கிறாங்க..  என்னத்தைச் சொல்றது?.. யார்கிட்ட சொல்றது?.. " - என்றாள்..

அதற்குள் முகூர்த்த வேளை நெருங்கிடவே - 

" மெதுவா ரெண்டு பேரும் மணவறைக்கு வந்துடுங்க.. முதல் ஆசீர்வாதம் நீங்க தான் செய்யணும்.. " - என்றபடி மணமேடைக்கு விரைந்தார் கல்யாண ராமன்..

அடுத்த பதினைந்து நிமிடங்களில் மங்கள இசை முழங்க மாங்கல்ய தாரணம் ஆயிற்று..  

வேதியர்கள் அனைவருக்கும் புரியும்படி மந்திரங்களை எடுத்துச் சொல்லி வைபவத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.. 

அப்படியும் இப்படியும் படம் பிடிக்கின்ற சம்பிரதாயங்கள் முடிந்ததும் -
செந்தில் நாதன் தம்பதியர் மேடையில் இருந்து இறங்குவதற்கு கை வாகு கொடுத்ததோடு - அப்படியே உணவுக் கூடத்துக்கும்  அழைத்துச் சென்று மனம் நெகிழ வைத்தனர் இரு இளைஞர்கள்..

கல்யாண கலகலப்பு சற்றே குறைந்திருந்தது.. செந்தில் நாதன் தம்பதியர் விடை பெற்றுக் கொண்டு புறப்பட  - விடாப்பிடியாக குறுக்கே நின்றார் கல்யாண ராமன்... 

" முதல் அழைப்புக்கு பட்டுக்கோட்டை வரைக்கும் போய்ட்டு திரும்ப முடியாது ன்னு இங்கே மடத்துத் தெருவுல இருக்கிற சம்பந்தியோட தம்பி வீட்டுக்கு  பொண்ணும் மாப்பிள்ளையும் போய்ட்டு வர்றாங்க.. ராத்திரி நம்ம வீட்ல விருந்து.. அது முடிஞ்சதும் பிள்ளைகளுக்கு திருநீறு பூசி விட வேணாமா!. "

அதற்கு மேல் ஒன்றும் சொல்ல இயலவில்லை இருவருக்கும்..

" ரெண்டு பேருக்கும் மாத்து துணி எடுத்து வர சொல்லி சிவாவை அனுப்பியிருக்கேன்.. இப்போ வந்துடுவான் .. "

சிவா - சிவகுமார்.. கல்யாண ராமனின் மகன்..

கல்யாண ராமனிடம் புன்னகை... அதே நேரத்தில் மதியம் கை கொடுத்து உதவிய இரு இளைஞர்களும் " மாமா " - என்று வந்து நின்றனர்..

" வாங்க.. வாங்க.. இவங்க ரெண்டு பேரும் மாப்பிள்ளை முறை..  உன்னோட பேச்ணுமாம்.. இவருக்கு கல்யாணப் பிரச்னை.. அவருக்கு வேலை பிரச்னை..
நீங்க பேசிக்குங்க... " - சொல்லிவிட்டு வாத்தியார் மகன் நகர்ந்தார்..

" என்னப்பா?.. " - என்றார் செந்தில் நாதன் பரிவுடன்..

ஒரு வருசமாவே ரெண்டு பேருக்கும் காரியத் தடங்கல்.. நவக்கிரகக் கோயில் போய் தரிசனம் செஞ்சுட்டு வரச் சொல்றங்க..  இப்போ ஒரே நாள் ல ஒன்பது கோயில் ன்னு போறாங்களாம்... இதுல ஐயா உங்க கருத்து என்ன?.. வழி காட்டணும்.. "

இருவரில் மூத்தவன் கையைப் பற்றிக் கொண்ட செந்தில் நாதன் சொன்னார்.. 

" எதுக்கும் பயப்பட வேண்டாம்.. ஒரே நாள் ல ஒன்பது கோயில் ன்னு போறது ரொம்ப வருசமாவே நடக்குது.. "

சற்றே நிறுத்தி விட்டுத் தொடர்ந்தார்..

"பெரியவங்க சொல்லிக் கொடுத்தது  - என்ன ன்னா பரிகாரக் கோயில் இருக்கிற ஊர் ல ஒரு ராத்திரி அங்கே தங்கணும் ன்னு.. இன்னைக்கு அதெல்லாம் முடியுதோ இல்லையோ.. ஒரு முகூர்த்த நேரமாவது அந்தக் கோயில் ல தங்கிட்டு வரணும்.. இந்த ஒருநாள் ல ஒன்பது கோயில் சமாச்சாரம் எல்லாம் அவங்க அவங்க சொந்த விஷயம்.. நாம சொல்றதுக்கு என்ன இருக்கு?.. "

" ஒரு முகூர்த்தம் ங்கறது எவ்வளவு நேரங்க?.. "

" ஒரு முகூர்த்தம் ங்கறது ஒன்றரை மணி நேரம்.. நீங்க செவ்வாய் தோஷம் ந்னு வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போனா அங்கே  ஒன்றரை மணி நேரமாவது தங்கி இருந்தாத் தான் நல்லது.. திடுதிடு ந்னு போய்ட்டு திடுதிடு ந்னு வர்றது.. ஒரு மணி நேரத்துல வேற வேற கோயில்களுக்கு பரிகாரம் ன்னு  போறது எல்லாம் எப்படி சரியாகும்?..

" அப்போ என்னங்க செய்றது?.. "

" ஜோஸ்யருக்காக நீங்க  பரிகாரம் செய்யலை.. உங்களுக்காக.. உங்க வாழ்க்கைக்காக.. அதனால நீங்களே யோசிச்சு நல்ல வழிய தேர்ந்தெடுத்துக்குங்க.. "

" சரிங்க ஐயா.. " இருவர் முகத்திலும் மலர்ச்சி..

இருவரில் மூத்தவனை இளையவள் சுகன்யாவிற்காக  - சகுந்தலாவின் மனம் யோசிக்க ..

கல்யாண மண்டபத்தில்  ஆனந்த பைரவி நிறைந்து கொண்டிருந்தது...

ஃஃஃ

37 கருத்துகள்:

  1. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் .

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    கண் கவரும் ஒளிப்படத்துடன் அழகு செய்த சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. குலதீபனின் சீடர் (!) கள் போல் இருக்கின்றதே!!..

    பதிலளிநீக்கு
  6. நல்ல சம்பவங்கள். மனதுக்கு நிறைவு. சுபச் செய்திகளோடு கூடிய கதை, இந்தக் கல்யாண காலத்தில் மனநிறைவைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
  7. இந்தக் கதை அன்பின் ஸ்ரீராம் அவர்களது இல்லத்தின் மங்கலத்தை ஒட்டி எழுதப் பெற்றதாகும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அடுத்த சுபச் செலவு அவருக்கு விரைவில் கூடி வரும் என்று தோன்றுகிறது.

      நீக்கு
    2. அதற்கும் கதை எழுதி அனுப்பி விட்டேனே..

      அடுத்த வருடம் தொட்டிலும் கிலுகிலுப்பையும் தான்..

      நீக்கு
  8. நல்லது நடக்கும் இடத்தில் சுபச் செய்திகளுக்குப் பஞ்சமேது? ஒரு திருமணம் நடக்கும்போது இரண்டு மூன்று திருமணச் சந்திப்புகள்நடந்துவிடும் என்று சும்மாவா சொன்னார்கள்?

    பதிலளிநீக்கு
  9. @ அன்பின் நெல்லை..

    /// இந்தக் கல்யாண காலத்தில் மனநிறைவைத் தருகிறது.///

    தர வேண்டும்... அதற்காகவே எனது எழுத்துக்கள்...

    இருபது வயதுகளில் எத்தனையோ நண்பர்களுக்கு கிருமண வாழ்த்து எழுதிக் கொடுப்பதில் தனியொரு மகிழ்ச்சி...

    இப்போது எப்படி மனம் மாறிச் செல்லும்?..

    பதிலளிநீக்கு
  10. பரிகாரக் கோவில் தரிசனங்களைப் பற்றி எழுதியது சிறப்பு. ஒரு திவ்யதேசத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்தால் அது சிறப்பு. ஓடிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், உறவுகளைத் திருமணங்களில் சந்தித்து அளவளாவிச் சந்தோஷப்பட்டுக்கொள்வதைப் போல, திருத்தலங்களில் தரிசனமும் நடைபெற்றுவிடுகிறது. பத்து சதவிகித திவ்யதேசங்களில் மாத்திரம் எனக்கு இரவு தங்க நேர்ந்திருக்கிறது. திருப்பதி, அயோத்யா, நைமிசாரண்யம், குடந்தை ஆராவமுதன், திரு ஆதனூர், திருமோகூர், திருவில்லிபுத்தூர், ஆழ்வார் திரு நகரி, திரு ஆலி, திருவரங்கம், திருவல்லவாழ், திருக்குறுங்குடி, துவாரகை, பத்ரி, திருப்பிரிதி/ஜோஷிமட் போன்றவை அவற்றுள் சில

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய புண்ணியம்..

      திருச்செந்தூரில் ஒருமுறை இரவு தங்கியிருக்கின்றோம்..
      குல தெய்வக் கோயிலில் கடந்த சில வருடங்களாக இரவு தங்குகின்றோம்..

      இப்போது தான் வேலை வெட்ட்டி என்று ஏதும் இல்லையே..

      நீக்கு
    2. சமீபத்தில் திருமலையில் இப்படி மூன்று நாட்கள் வாய்த்தது....

      நீக்கு
    3. வேலை வெட்டி என்று ஏதும் இல்லையே என்று இன்னமும் கவலைப்படாதீர்கள். அப்படி இருக்க நேர்வதும் ஒரு பாக்யம். மனம் உயர்ந்தவற்றை நோக்கி இருக்க அது பயன்படக்கூடும்...

      நீக்கு
    4. // இப்படி இருக்க நேர்வதும் ஒரு பாக்யம். மனம் உயர்ந்தவற்றை நோக்கி இருக்க அது பயன்படக்கூடும்... ///

      ஆனாலும் நாற்பதாண்டுகள் உழைத்து விட்டு ஓய்வு என்று இருக்க முடியவில்லை..

      உடல் இன்னும் கொஞ்சம் தேறியதும் ஏதாவது செய்ய வேண்டும்...

      அன்பின் ஏகாந்தன் அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. இன்று (இப்போது) பெங்களூர் வந்துவிட்டதால் கதை படிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...  பெங்களூரு போயாச்சா?  வெயிலிலிருந்து தண்ணீர்ப் பஞ்சத்துக்கு...!!

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகள்.

    இந்த நல்ல நாளில் சுபமான முடிவுடன் நல்லதொரு கதையை தந்த சகோதரருக்கு மனமுவந்த நன்றிகள் பல.

    திருமணங்களில் நல்ல செய்திகளை பேசுவது, நல்ல முடிவுகள் எடுப்பது என அனைத்துமே இறைவனின் ஆசிர்வாதங்கள். அனைத்தும் நல்லபடியாக அமையட்டும். கதையிலும் சரி நிஜ வாழ்விலும் சரி, வாழ்க மணமக்கள். வாழ்க பல்லாண்டு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகள்..

    மகிழ்ச்சி... நன்றி..

    பதிலளிநீக்கு
  15. /// நல்ல நாளில் சுபமான முடிவுடன் நல்லதொரு கதையை தந்த சகோதரருக்கு மனமுவந்த நன்றிகள்..///

    தங்களது அன்பின் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  16. சில கருத்துக்கள் தலை மறைவாகி விட்டன.. கண்டு பிடித்துத் தர வேண்டும்..

    பதிலளிநீக்கு
  17. அடுத்த திருமணம் உறுதி ஆயிற்று வாழ்க வளத்துடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளுத்துக் கட்ட வேண்டியது தான்..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  18. @ ஸ்ரீராம்..

    ,
    /அது யார் அது?/

    இளம் கலைஞர்கள் சூர்யகாயத்ரி, ராகுல் வள்ளாள் ஆகியோரது இசை ஆசிரியர்..

    Dr.Kuldeep M Pai

    பதிலளிநீக்கு
  19. நல்லதோர் திருமண நிகழ்வு. மனதுக்கு இதமான கதை.

    மேலும் திருமணங்கள் கூடி வர ஆனந்த பைரவி இசைப்பது அருமையான முடிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகைக்கு கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி மாதேவி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!