வெள்ளி, 19 ஏப்ரல், 2024

வெள்ளி வீடியோ : துணை கொள்ள அவனின்றி தனியாக நடிக்கும் துயிலாத பெண்மைக்கு ஏனிந்த மயக்கம்

 இன்றைய தனிப்பாடல் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில், பி. சுசீலா குரலில் ஒலிக்கிறது.  அந்தக் காலத்துக்குச் சென்று அதிகாலையில் ரடியோ ஆன் செய்ததுபோல நினைத்துக் கொள்ளுங்கள்!

ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்
அனுதினம் ஓதிடும் மந்திரமாம்
ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்
அனுதினம் ஓதிடும் மந்திரமாம்
ஆறுதல் தந்திடும் மந்திரமாம்
சரவணபவ எனும் மந்திரமாம் - 
[ ஆறெழுத்தில் ஒரு ]

ஆறுமுகம் தரும் மந்திரமாம்
ஆறுமுகம் தரும் மந்திரமாம்
நல்ல அறிவித்த தந்திடும் மந்திரமாம்
ஆறுபடையின் திரு மந்திரமாம்
ஆறுபடையின் திரு மந்திரமாம்
நல்ல அன்பை வளர்க்கும் மந்திரமாம் - 
 [ ஆறெழுத்தில் ஒரு ]

நெஞ்சில் நினைக்கும் மந்திரமாம் நல்ல
நீதியைக் காக்கும் மந்திரமாம்
அஞ்செழுத்தால் பெற்ற மந்திரமாம்
அஞ்செழுத்தால் பெற்ற மந்திரமாம் - நல்ல
அறநெறி காட்டும் மந்திரமாம் 
 [ ஆறெழுத்தில் ஒரு ]

வஞ்சத்தை வெல்லும் மந்திரமாம் - நல்ல
வாழவைத் தந்திடும் மந்திரமாம்
வேலும் மயிலும் தொழும் மந்திரமாம்
வேலும் மயிலும் தொழும் மந்திரமாம் - நல்ல
வெற்றிகள் தந்திடும் மந்திரமாம் 
 [ ஆறெழுத்தில் ஒரு ]



====================================================================================================

1964 குரோதி வருடம்!  ஆம், சென்ற குரோதி வருடத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்.

இந்தப் படத்தில் சிவாஜி, என் டி ஆர், சோபன் பாபு, முத்துராமன், அசோகன், சாவித்ரி, தேவிகா, ஜெயந்தி என்று நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது.  ஒரு காதையில் வரும் சிறுவன் மாஸ்டர் ஸ்ரீதருக்கு அப்போதே 1000 ரூபாய் சம்பளம் அளிக்கபப்ட்டதாம்.  அந்தக் காட்சி ஒரே டேக்கில் ஓகே ஆனதாம்.

கண்ணதாசன் பாடல்களுக்கு மெல்லிசை இரட்டையர்கள் இசை.  இன்றைய பாடல் சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த 'கண்கள் எங்கே' என்னும் பி சுசீலா பாடிய பாடல். பாடலைப் பற்றி நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்து ரசிக்க வேண்டுமா என்ன!

கண்கள் எங்கே... நெஞ்சமும் எங்கே...
கண்ட போதே... சென்றன அங்கே...
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்ட போதே சென்றன அங்கே
கால்கள் இங்கே மேனியும் இங்கே
கால்கள் இங்கே மேனியும் இங்கே
காவலின்றி வந்தன இங்கே
ஆ... ஆ... ஆ...
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்ட போதே சென்றன அங்கே...
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்
ஆ... ஆ....
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கண்டு துடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கண்டு துடிக்கும்
துணை கொள்ள அவனின்றி
தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு ஏனிந்த மயக்கம்
ஆ... ஆ.... ஆ... ஆ....
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்ட போதே சென்றன அங்கே
கண்கள் எங்கே...
இனமென்ன குலமென்ன
குணமென்ன அறியேன்
குணமென்ன அறியேன்
ஆ... ஆ....
ஈடொன்றும் கேளாமல்
எனை அங்கு கொடுத்தேன்
குடை கொண்ட மதயானை
உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு
நான் இங்கு மெலிந்தேன்
ஆ... ஆ.... ஆ... ஆ....
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்ட போதே சென்றன அங்கே
கண்கள் எங்கே...

56 கருத்துகள்:

  1. அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று...

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்
    அனுதினம் ஓதிடும் மந்திரமாம்
    ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்
    அனுதினம் ஓதிடும் மந்திரமாம்
    ஆறுதல் தந்திடும் மந்திரமாம்
    சரவணபவ எனும் மந்திரமாம்..

    முருகா.. முருகா..

    பதிலளிநீக்கு
  4. /// கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
    கண்ட போதே சென்றன அங்கே...///

    ஆகா..

    பதிலளிநீக்கு
  5. /// கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
    கண்ட போதே சென்றன அங்கே...///

    ஆகா..

    பதிலளிநீக்கு
  6. அறன் எனப்பட்ட இல்வாழ்க்கைக்கு ஆறெழுத்து மந்திரமும் வேண்டும்...

    அங்கே சென்று நின்ற கண்களும் வேண்டும்...

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. ஆம்.  எனக்கும் வியப்பாகத்தான் இருந்தது.  சந்திரனாக வருவது சோபன் பாபுவாம்.

      நீக்கு
  8. கர்ணன் படத்துக்கு அப்படித்தான் இசை அமைத்தோம்.. இப்படித்தான் இசை அமைத்தோம்.. - என்று எங்காவது என்றாவது பொழிப்புரை விளக்கவுரை நடத்தப்பட்டது உண்டா?..

    தெரிந்தவர்கள் கூறவும்...

    பதிலளிநீக்கு
  9. /// சென்ற குருதி வருடத்தில்.. ///

    தமிழ்.. தமிழ்..

    பதிலளிநீக்கு
  10. பிரம்மாண்டமான கர்ணனின் வெற்றி சாதாரண வேட்டைக்காரனால் கெட்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் கர்ணன் வேட்டைக்காரனை விட இன்றளவும் பேசப்படும் படமாக இருக்கிறது.

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்ச நாட்களாக கமலா ஹரிஹரன் காணவில்லையே என்று இரண்டு நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன் நலம்தானே?

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். அனைத்து துயரங்களையும் முருகன் களைவான் என்ற நம்பிக்கையோடு முருகனை பணிவோம். முருகா சரணம்.

    இரண்டாவதாக கர்ணன் திரைப்பட பாடலும் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். தேவிகாவின் அழகு முகமும், கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பும் என்னை கவர்ந்தவை. பி. சுசீலா அவர்களின் இனிய குரலில் இந்தப்பாடலும் மிக அருமையாக இருக்கும். இனிமையான பாடல்களுக்கும், மேலும் படம் பற்றிய தகவல்களுக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா. சுசீலாம்மா குரலுக்கு கேட்கவா வேண்டும்?

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. இன்று பகிர்ந்த இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள்.
    கேட்டேன் இரண்டு பாடல்களையும் மகிழ்ச்சி, நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  15. குரோதி குரோதம் = குருதி

    பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை...

    அது அதிகமானால் இதில் தான் முடியும்...

    பதிலளிநீக்கு
  16. என் கணவர் விசிலில் கண்கள் எங்கே பாடலை அழகாய் பாடுவார்கள்.
    கர்ணன் படப்பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். அடிக்கடி கேட்ட பாடல்கள். பள்ளியில் கர்ண்ன் சினிமா அழைத்து சென்றார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...   முன்பு நானும் விசிலில் சில டியூன்கள் இசைப்பதுண்டு...   இப்போது டச் விட்டுப்போய் வெறும் காற்றுதான் வருகிறது!

      நீக்கு
  17. கர்ணனை மிளிரச் செய்ததில் மெல்லிசை மன்னர்களுக்கும் கவியரசருக்கும் பெரும் பங்கு உண்டு.

    பதிலளிநீக்கு
  18. ஆறெழுத்துக்காரன் என்னைக் காக்க வேண்டும். எந்தக் குறையும் இன்றி, இன்றைய பயணத்தையும் என்னுடைய கடமையையும் நிறைவேற்ற அருள் செய்ய வேண்டும்.

    சரவண பவ எனும் திருமந்திரம் தனை
    சதா ஜெபி என் நாவே... ஓம் சரவண பவ என்னும் திருமந்திரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணமும் பணியும் இனிதே நிறைவேற வாழ்த்துகள் நெல்லை.

      நீக்கு
  19. கர்ணன் படம், மெல்லிசை மன்னரையும் கவிஞரையும் தன்னுள் அழைத்துக்கொண்டு, காலத்தால் அழியாத பாடல்களைத் தரவைத்து நம் மனதை மயக்கிவிட்டது.

    இன்றைய இரு பாடல்களும் எனைக் கவர்ந்தவை. கர்ணன் படப் பாடல்களில் எதுதான் கவரத் தவறிற்று?

    பதிலளிநீக்கு
  20. மேட்டூரில் ஜெயராமன் என்று நினைவு. வேலிப் படப்பையில் தூக்கி வீசப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையைத் தன் மகளாக வளர்த்தார். பிராமணனாகப் பிறந்துவிட்டு ஊர் பேர் தெரியாத, அதுவும் பெண் குழந்தையை வீட்டுக்குக் கூட்டி வரலாமா என நியாயம் பேசுபவர்களின் கருத்தைக் கண்டுகொள்ளாமல். என்ன ஒரு மனது... வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதை எப்போதோ புரிந்துகொண்டுவிட்டார் அவர்.

    ஆனால் கர்ணன் கதையோ, பிறப்பில் உயர்வு, ஆனால் ஒஆழும் காலத்தில் தாழ்வு. அந்த வரலாற்றையே, கர்ணன் செய்த தவறுகள் எந்த மனநிலையில் எழுந்தவை என நாம் புரிந்துகொள்ள முடியும்.

    என்னே இறைவனின் லீலைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் முதலில் சொல்லி இருப்பது உங்களுக்குத் தெரிந்த ஒருவரின் வாழ்க்கை அனுபவம் என்று நினைக்கிறேன். கிரேட்.

      நீக்கு
  21. கீதா ரங்கன் (அக்கா) மாத்திரம்தான் லீவு போட வேண்டுமா? நான் போடக் கூடாதா?

    பதிலளிநீக்கு
  22. முதல் பாடல் முன் நின்று காக்கும் முத்துக்குமரன் பாடல். தனிழ்க் கடவுளுக்கு தமிழால் பாமாலை சூட்டி மகிழ்வதிலும் தனித்ததொரு இன்பம் தான். மனம் ஒன்றியதில் பக்தி மணம் கமழ்ந்தது.

    வாழிய தமிழ்;
    வாழிய நற்தமிழ் நாடு!

    பதிலளிநீக்கு
  23. இரண்டாவது பாடலின் பின்னணி இசை தூக்கலாக கண்ணனின் தாசன் பாடல் வரிகளுக்கும் தேவிகாவின் விரக தாபத்திற்கும் மெருகூட்டுவது அழகு.

    மணி கொண்ட கரமொன்று
    அனல் கொண்டு வெடிக்கும்
    (அப்படீன்னா?)

    மலர் போன்ற இதழ் இன்று
    பனி கண்டு துடிக்கும்

    குடை கொண்ட..
    மதயானை
    உயிர் கொண்டு நடந்தான்
    குறை கொண்ட உடலோடு
    நான் இங்கு மெலிந்தேன்.

    -- சென்றதினி மீளாது என்றான் யுகக்கவிஞன். இருந்த போதிலும் மனம் கேட்கிறதா?
    இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற புதுப் பொலிவோடு
    கதைகளில், கட்டுரைகளில் கவிதைகளில் நாம் இழந்து போனதை மீட்டெடுப்பது எப்படி என்பது தான் இக்கணத்துக் கேள்வியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே...   கரம் எப்படி அனல் கொண்டு வெடிக்கும்?  நல்ல கேள்விதான் ஜீவி ஸார்?

      நீக்கு
  24. இரண்டும் சிறப்பான பாடல்களே ஜி

    பதிலளிநீக்கு
  25. 'கண்கள் எங்கே?..' அருமையான பாடல். இதை சூப்பர் சிங்கர் ஜூனியர் சீஸன் ஒன்றில் காயப்படுத்தியுள்ளது வந்த ஒரு மலையாளி பெண் மிக அருமையாக பாடினாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளையதலைமுறை இசையில் தூள் கிளப்புகிறதுதான்.

      நீக்கு
  26. *கோயம்புத்தூரிலிருந்து என்று வர வேண்டியது காயப்படுத்தியுள்ளது என்று வந்துள்ளது

    பதிலளிநீக்கு
  27. கர்ணன் கதை வட இந்தியாவில் நடந்ததால் பாடல்கள் எல்லாம் ஹிந்துஸ்தானி மெட்டில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்களாம். பெங்களூர் சென்ற இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்,ராமமூர்த்தி கொடுத்த ட்யூன்களுக்கு கவியரசர் வரிகள் கொடுக்க, ஒரே நாளில் எல்லா பாடல்களுக்கும் இசையமைக்கப்பட்டதாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே நாளிலா என்று தெரியவில்லை.  ஆனால் பாடல்கள் யாவும் தேன்.

      நீக்கு
  28. இரண்டு பாடல்களுமே அருமையான பாடல்கள். கேட்டிருக்கிறேன். இரண்டாவது பிடித்தமான பாடலும் கூட.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!