நான் தரிசனம் செய்த கோயில்கள் – நெல்லைத்தமிழன்
ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 16
நல்ல மதிய நேரம். மரங்கள் சூழ்ந்திருக்கும்
அஹமதாபாத் சபர்மதி ஆஸ்ரமத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சுதந்திரப் போராட்ட காலத்தில் மிக
முக்கியமாக இருந்த இடம் இது. தேசப்பிதா காந்தி சுமார் 12 வருடங்கள் இந்த இடத்தில்
தங்கியிருந்து சுதந்திரப் போராட்த்திற்கான விதையையும், பல சந்திப்புகளையும்
நிகழ்த்தியிருக்கிறார்.
இவ்வளவு
முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலா நாம் தடம் பதித்திருக்கிறோம் என்ற வியப்பு மனதில்
தோன்றுகிறது.
ஆஸ்ரமத்தின் ஒரு பகுதியில் அழகுறப் பாயும் சபர்மதி நதி.
மரங்கள்
எங்கேப்பா என்பவர்களுக்கு,
பலர்
ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருந்ததால், அதிலும் சில வெளிநாட்டவர்கள், மரங்களைப் புகைப்படம்
எடுக்கவில்லை.
ஆனால்
வெயில் தெரியாதபடி அமைந்த மரங்கள் அடர்ந்த சூழல் அது.
இந்த இடத்தில்தான் காந்தியும் சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்த
மற்றவர்களும் காலையிலும் மாலையிலும் ப்ரார்த்தனைக்காகக் கூடுவார்களாம்.
கரை மிகவும் சீரமைக்கப்பட்டிருக்கிறது. கரை ஓரமாக
நடக்க ஏராளமான இடம்.
மஹாத்மா காந்தியும் கஸ்தூரிபாயும் சுமார் 12 வருடங்கள்
வாழ்ந்த வீடு.
காந்தி அமர்ந்து நூல் நூற்ற அறை. எத்தனையோ
தலைவர்கள் அவரை இந்த அறையில் சந்தித்திருக்கிறார்கள்.
இப்போதும் சிலர் அங்கு நூல் நூற்று, பழைய
நினைவுகளை மீட்கிறார்கள்.
நானும் சபர்மதி ஆஸ்ரமத்திற்குச் சென்றிருந்தேன் என்பதற்கான படம். ரொம்ப
சௌகரியமாகவும் அழகாகவும் இப்போது இருக்கிறது. ஒரு நல்ல
கேண்டீன் இருந்தால், (கூடவே ஏசியும்) ஆஸ்ரமத்திலேயே தங்கிவிடலாம்.
இதற்கு
முந்தைய யாத்திரையின்போது,
நாங்கள்
திருமூர்த்தி கோவிலுக்கும், அக்ஷர்தாம் கோவிலுக்கும் சென்றிருந்தோம். பேருந்து, நகரில் செல்வது கடினம்
என்பதால்,
அதற்காக
நாங்கள் இரண்டு வேனில் பயணம் செய்தோம். அந்தச் சமயத்தில்தான் அமெரிக்க
அதிபர் ட்ரெம்ப் (இப்போ எங்கேப்பா?) மோடி அவர்களைச் சந்திக்க
குஜராத் வந்திருந்தார்.
அஹமதாபாத்தில் எங்கள் வேன் சென்றபோது நான் கண்ட காட்சிகள்.
சீரமைக்கப்பட்ட சபர்மதி ஆற்றில் பயணிகளுடன் படகு. ஆற்றின்
கரை.
நாங்கள் முதலில் திருமூர்த்தி கோவிலுக்குச் சென்றோம். (அதாலத் மூன்றுகோவில்-Trimandir என்று அழைக்கப்படுகிறது) இது ஜைன, சைவ, வைணவ மத ஒற்றுமைக்காகவும், எல்லாக் கடவுள்களும் ஒன்றே என்பதைக் குறிப்பதற்காகவும் Dhதாதா பகவான் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட து. மிகச் சுத்தமாகவும் நேர்த்தியுடனும் கட்டப்பட்டிருக்கும் கோவில் இது. இங்கு கடவுளர்கள் சிலைகள் வெள்ளைப் பளிங்கினால் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோவிலுக்கு சுமார் 3 லட்சம் பேர், ஒவ்வொரு வருடமும் வருகிறார்கள்
பக்தர்களின்
உணவுத் தேவையையும் பூர்த்தி செய்யும் கோவில் இது. ரொம்பவே அமைதியான இடமாகத்
தோற்றமளித்தது இந்த இடம்.
ஒவ்வொரு
சன்னிதியிலும் நாம் அருகில் சென்று வணங்கும்படியாக அமைந்திருந்தது. கோவில் என்பதன் காரணம் என்ன? நாம் அமைதியாக, நம்மைப் படைத்த ஆண்டவனைத்
தியானம் செய்வதற்கும் அவனுடன் ஆத்மார்த்தமாகப் பேசுவதற்கும் ஆன இடம். பலர், கோவிலுக்குச் சென்று
அங்கு நாம் வேண்டுதல்கள் வைக்க்கூடாது, இறைவனுக்கு நமக்கு என்ன தரவேண்டும்
என்று தெரியும்,
நாம்
கேட்பது தகாது என்றெல்லாம் நமக்கு அட்வைஸ்களை அள்ளித் தெளிக்கிறார்கள். நம் பெற்றோரிடம் நாம்
கேட்பது தவறா?
நமக்குள்ள
உரிமை அது.
அவர்கள்
சரி என்று நினைத்தால்,
இல்லை
போனாப் போகுது,
நம்
குழந்தைதானே…கொடுத்தால் என்ன.. என்று நினைத்தால், சரி.. செய்த பாவங்களை
மன்னிக்கக் கேட்கிறது,
பாவம்
அதிகம்தான்..
இருந்தாலும்
அறியாப் பிள்ளை மன்னித்துவிடுவோம் என்று நினைத்தால், அதில் என்ன தவறு இருக்க
முடியும்?
(கடவுளர்களை மாத்திரம் படம் எடுக்கவில்லை. மற்றவர்கள் குறுக்கே சென்று கொண்டிருந்ததால், தனியாக எடுக்க மறந்துவிட்டேன் போலிருக்கிறது) வைணவத்திற்கான சன்னிதி, துவாரகாதீஷ், நாராயணர், திருப்பதி பாலாஜி.
அம்பாள், சிவன் சன்னிதிகள் (சைவம்). சிவலிங்கத்திற்கு மேலிருந்து நீர் வரும்படியாக அமைப்பு. படத்தில் சிறியதாகத் தெரிந்தாலும் பெரிய
சிவலிங்கம் அது. நானும் தீர்த்தம் விட்டேன்.
அக்ஷர்தாம் கோவில்.
அக்ஷர்தாம் கோவில் (குஜராத்), யோகி மஹராஜ் என்பவரால் மனதில் வடிவமைக்கப்பட்டு, பிரமுக் ஸ்வாமி மஹராஜ் என்பவரால் எழுப்ப்பட்ட து. 6000 மெட்ரிக் டன் சிவப்புக் கற்களால், உலோகங்கள் இல்லாமல் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோவில் இது. இதன் மூலவர், ஸ்வாமி நாராயணரின் யோக வடிவம். தங்கத்தினால் போர்த்தப்பட்ட சிலை. இந்தக் கோவில் பல்வேறு மண்டபங்களைக் கொண்டது. உள்ளே நுழைந்துவிட்டால் செல்லும் பாதையில் ஒவ்வொரு மண்டபமும் வரும். ஆங்காங்கே நிறுத்திவைத்துவிடுகிறார்கள். அடுத்த மண்டபம் champer ஆட்கள் சென்றதும், நம்மை அனுப்புகிறார்கள். ஒவ்வொரு சேம்பரிலும் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் காட்சிகள் என்று நம்மை ஒரு புது உலகத்திற்குக் கொண்டு செல்கிறது.
1981ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கோவிலில், 2002ல் இரண்டு தீவிரவாதிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கிட்டத்தட்ட 33 பக்தர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோவிலின் உள்ளே செல்ஃபோனுக்கு அனுமதி இல்லை. நான் பார்த்த, நினைவில் வைத்திருக்கும் காட்சிகளில் சிலவற்றை இணையத்திலிருந்து இங்கு கொடுத்துள்ளேன்.
கோவிலின் ஒவ்வொரு சேம்பரின் அழகும், அங்கிருந்த ஓவியங்கள் மற்றும் காட்சிப் பொருட்களின் அழகும் சொல்லி மாளாது. இந்தக் கோவிலில் சுமார் 2 மணி நேரம் செலவழித்தோம். இதன் தோட்டப் பகுதியும் மிக மிக அழகாக இருந்தது. இந்தக் கோவிலுக்கு நுழைவுக் கட்டணம் உண்டு. அஹமதாபாத் சென்றால் நிச்சயம் காணவேண்டிய கோவில். நாங்கள் சென்றிருந்த வேனுக்காக ஒவ்வொருவருக்கும் 200 ரூபாய் கொடுத்தோம்.
கோவில் தரிசனங்கள் முடிந்த பிறகு எங்கள் வேன் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று சேர்ந்தது. அப்போது சுமார் 4 ½ மணி. காபி மற்றும் இனிப்பு காரம் கொடுத்தனர். அதன் பிறகு இரவு 8 மணிக்கு உணவுக்கு வந்தால் போதும், அஹமதாபாத் கடைவீதிகளை ஆட்டோவில் சுற்றிப் பார்த்துவிட்டு, வாங்கவேண்டியவைகளை வாங்கிவிட்டுத் தங்கும் இடத்திற்கு வந்துவிடுங்கள் என்று சொன்னார்கள். அஹமதாபாத், துணிவகைகளுக்குப் பேர் போன இடமாயிற்றே. நாங்கள் கடைவீதிக்குச் சென்று புடவை போன்றவைகளை வாங்கினோம். யாத்திரையின் இடையில் இந்த மாதிரி வாங்கினால், நாம்தான் அவற்றைத் தூக்கிச் செல்லவேண்டியிருக்கும். இப்போதெல்லாம் எல்லாமே எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. இருக்கவே இருக்கிறது ஆன்லைன் பர்சேஸ். அதனால் யாத்திரையின் போது, எதையும் வாங்கக் கூடாது என்பது என் தற்போதைய ஞானம்.
இரவு 8 மணிக்கு
சுண்டைக்காய் வற்றல் குழம்பு, உருளை கட் கறி, வேப்பம்பூ
ரசம், சாதம்.
பிறகு அறையைக் காலி செய்து, எங்கள்
லக்கேஜை எல்லாம் ஏற்றியபிறகு இரவு 10 ¼ க்கு
எங்கள் பேருந்து அஹமதாபாத்தை விட்டு ஸ்ரீநாத் துவாரகா (நாத்துவாரகா
என்று அழைக்கப்படுகிறது) நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. 300 கிமீ
க்கும் அதிகமான தூரம். இரவு முழுவதும் பயணிக்கப்போகிறோம். ஏசி
பஸ்ஸில் அன்றைய அலைச்சலினால் நன்கு (?) தூங்கினோம். பயணத்தின்
இடையில் ரெஸ்ட் ரூமிற்காக நிறுத்துவார்கள். பேருந்துத்
தூக்கம் எப்போதும் அரைகுறைதான். எப்போது
ஸ்ரீநாத் துவாரகாவை அடைந்தோம், அங்கு என்ன
செய்தோம் என்பதை அடுத்த வாரம் காண்போம்.
(தொடரும்)
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்..
பதிலளிநீக்குதமிழ் வாழ்க..
கற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
தளிர் விளைவாகித்
தமிழும் வாழ்க..
///செய்த பாவங்களை மன்னிக்கக் கேட்கிறது,.. பாவம் அதிகம்தான்..///
பதிலளிநீக்குஅவனன்றி ஒரு அணு வும் அசைவதில்லை..
நம்ம பாவத்துக்கு அவனைக்ஆகாரணமாக்குவதா?
நீக்குசபர்மதி ஆஸ்ரமப் படங்கள் அருமை..
பதிலளிநீக்குதியாக சீலர்கள் உலவிய புண்ணிய பூமி..
உண்மைதான்.அது சரி. இப்போ ஏன் நாம் சுயநலக் கூட்டமாகிவிட்டோம்?
நீக்குஎழிலான படங்கள்.. சிறப்பான விவரக் குறிப்புகள்..
பதிலளிநீக்குவேறொன்றும் சொல்வதற்குத் தெரியவில்லை..
இதுவே மகிழ்ச்சி துரை செல்வராஜு சார்
நீக்கு/// இப்போதெல்லாம் எல்லாமே எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. இருக்கவே இருக்கிறது ஆன்லைன் பர்சேஸ்... ///
பதிலளிநீக்குஆன்லைன் பர்சேஸ்... இதுவும் சரியில்லை என்கின்றனர்..
ஆசையை விடு மனமே!..
என்னத்த ஆசையை விட்டு..
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஎப்போதும் போல் தங்களின் அருமையான ஞாயிறு தொகுப்பு, படங்களின் அழகு மனதை கவர்கிறது. சபர்மதி ஆசிரமத்தின் ரம்யமான இடங்கள், குறிப்பாக அமைதியாக ஓடும் சபர்மதி நதி கண்களுக்கு விருந்தாக உள்ளது. நல்ல விபரணத்துடன் எழுதியுள்ளீர்கள்.
/கோவில் என்பதன் காரணம் என்ன? நாம் அமைதியாக, நம்மைப் படைத்த ஆண்டவனைத் தியானம் செய்வதற்கும் அவனுடன் ஆத்மார்த்தமாகப் பேசுவதற்கும் ஆன இடம். பலர், கோவிலுக்குச் சென்று அங்கு நாம் வேண்டுதல்கள் வைக்க்கூடாது, இறைவனுக்கு நமக்கு என்ன தரவேண்டும் என்று தெரியும், நாம் கேட்பது தகாது என்றெல்லாம் நமக்கு அட்வைஸ்களை அள்ளித் தெளிக்கிறார்கள். நம் பெற்றோரிடம் நாம் கேட்பது தவறா? நமக்குள்ள உரிமை அது. அவர்கள் சரி என்று நினைத்தால், இல்லை போனாப் போகுது, நம் குழந்தைதானே…கொடுத்தால் என்ன.. என்று நினைத்தால், சரி.. செய்த பாவங்களை மன்னிக்கக் கேட்கிறது, பாவம் அதிகம்தான்.. இருந்தாலும் அறியாப் பிள்ளை மன்னித்துவிடுவோம் என்று நினைத்தால், அதில் என்ன தவறு இருக்க முடியும்?/
நல்ல விளக்கம். படித்து ரசித்தேன். இந்த மாதிரி எண்ணங்கள்தான் எனக்கும் தோன்றும். அதே மாதிரி மனமுருகி "அவனி"டம் கேட்கும் போது சில சமயங்களில் நிறைவேறாத விஷயங்களை தந்திருக்கிறான். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம். இன்று நிறைய எழுதமுடியவில்லை
நீக்குபடங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குதகவல்கள் சொல்லிய விதம் சுவாரஸ்யமாக இருந்தது தமிழரே....
நன்றி கில்லர்ஜி
நீக்குசபர்மதி என்பது அந்த ஆற்றின் பெயர். சரி. சபர்மதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வம் கூடுகிறது.
பதிலளிநீக்குஅஷர்தாம் கோயில் அமைப்பே அழகு.
பதிலளிநீக்குபடம்... படம்... படங்கள் இல்லையென்றால் இவற்றையெல்லாம்
பாத்திருக்க முடியுமா?
இந்தத் தொடருக்கு படங்கள் பெரும் பங்களித்திருப்பது உண்மை தான்.
ஹி..ஹி.. உருளை கட் கறி மீன்ஸ்?...
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதிருமூர்த்தி கோயில் உன்னதம். ஜைன, சைவ, வைணவ மத ஒற்றுமை வழிப்பாட்டுத் தலமாக திகழ்வது மனத்திற்கு நெருக்கமானது. இக் கோயிலில் வழிபடுவதற்காக ஆண்டிற்கு 3 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிற தகவல்.
பதிலளிநீக்குபதிவும், படங்களும் அருமை.
பதிலளிநீக்குசபர்மதி ஆசிரமத்தின் படங்கள் நேரில் பார்த்த மன நிறைவை கொடுக்கிறது.
அக்ஷர்தாம் கோவில் அழகாய் இருக்கிறது. படம் எடுக்க அனுமதி உண்டா அங்கு. டெல்லி அக்ஷர்தாம் கோவிலை படம் எடுக்க அனுமதி இல்லை.
//நாம் அமைதியாக, நம்மைப் படைத்த ஆண்டவனைத் தியானம் செய்வதற்கும் அவனுடன் ஆத்மார்த்தமாகப் பேசுவதற்கும் ஆன இடம்.//
உண்மை.
ஸ்ரீநாத் துவாரகாவை தரிசிக்க வருகிறேன்.
சபர்மதி ஆச்சிரமம் படங்கள் நன்றாக உள்ளன.
பதிலளிநீக்குஅக்ஷர்தாம் கோவில் தரிசித்தோம் கோவில் பற்றிய விபரங்களும் அறிந்தோம்.