வெள்ளி, 26 ஏப்ரல், 2024

வெள்ளி வீடியோ : கண்ணசைவில் மின்னல் விழ புன்னகையில் பூக்கள் விழ கையசைவில் வானம் விழ பெண்ணசைவில் நானும் விழவே காதல் வந்ததே

மதுரையில் இந்த வருடம் சித்திரைத் தேரோடி முடிந்து விட்டது.  அதை மறுபடி காட்சிப்படுத்தலாமே...

சூலமங்கலம் சகோதரிகள் குரலில் 'சித்திரை தேரோடும் மதுரையிலே' பாடல் இன்றைய பக்திப்பாடல்!

பாடலை எழுதியது கனகா கிருஷ்ணனாக  இருக்கலாம்.  இசை சூலமங்கலம் சகோதரிகளாகவே இருக்கலாம்.  எல்லாம் லாம் தான்!  யூகம்தான்.


சித்திரைத் தேரோடும் மதுரையிலே ஒரு 
பத்தரை மாத்துத் தங்கம் இருக்குதம்மா 
சித்திரைத் தேரோடும் மதுரையிலே ஒரு 
பத்தரை மாத்துத் தங்கம் இருக்குதம்மா 
இக்கரை மீதினிலே கண்கண்ட தேவி அம்மா 
இக்கரை மீதினிலே கண்கண்ட தேவி அம்மா 
முத்திரை பேராகும் மீனாட்சி தெய்வம் அம்மா 
முத்திரை பேராகும் மீனாட்சி தெய்வம் அம்மா   -  சித்திரை 

முத்தமிழும் வளர்ந்து வரும் நகரம் அம்மா 
முத்தமிழும் வளர்ந்து வரும் நகரம் அம்மா - அங்கே 
நித்தமும் ஓடிவரும் வைகை நதியும் ----------மா 
வித்தாகி விளைவாகி வடிவான அம்பிகையும் 
வித்தாகி விளைவாகி வடிவான அம்பிகையும் 
சத்தான பொருளனைத்தும் கொத்தாக தந்திடுவாள் 
சத்தான பொருளனைத்தும் கொத்தாக தந்திடுவாள்  - சித்திரை 

பாண்டிய மண்ணிலே பிட்டுக்கு மண்சுமந்த 
முக்கண்ணன் சொக்கேசன் புகழும் சிறந்திருக்கும் 
பாண்டிய மண்ணிலே பிட்டுக்கு மண்சுமந்த 
முக்கண்ணன் சொக்கேசன் புகழும் சிறந்திருக்கும் 
மூக்குத்தி அணிந்திருந்து அருளெல்லாம் அள்ளித்தரும் 
அன்னையாம் மீனாட்சி கருணையும் நிறைந்திருக்கும் 
அன்னையாம் மீனாட்சி கருணையும் நிறைந்திருக்கும்  - சித்திரை 


========================================================================================

பூவெல்லாம் உன் வாசம்.

2001 ; எழில் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் முதலில் ஜ்யோதிகா இடத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக இருந்ததாம்.  நல்லவேளையாக பின்னர் ஜ்யோதிகா ஒப்பந்தமானார்.

வித்யாசாகர் இசை அமைத்துள்ள இந்தப் படத்திலிருந்து 'புதுமலர் தொட்டுச் செல்லும் காற்றை நிறுத்து' பாடல் இன்று பகிர்கிறேன்.  ஆரம்ப இசையிலிருந்து உற்சாக ஊற்றாய் வரும் பாடல்.  இந்தப் பாடலின் காட்சியையும் நான் ரசிப்பேன் என்பதால் யு டியூபில் அடிக்கடி நான் பார்க்கும்/கேட்கும் பாடல்களில் ஒன்று.  ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடிய பாடல்.

அவள் மேலான காதலை எப்படி எல்லாம் வெளிப்படுத்தலாம்?  பல்வேறு பாடல்களில் பல்வேறு தினுசாய் பார்த்து, கேட்டிருக்கிறோம்.  இது வித்தியாசமான புதுமுறை!  வரிகளும், டியூனும், ஏன் அந்த நாட்டியமும் கூட சுவாரஸ்யம்.  இது மாதிரி காட்சிகளில் ஜோதிகா ரொம்பவே ஸ்பெஷல்.  அழகான, இளமையான அஜித்தும் ஸ்பெஷல்தான்.

மிகவும் ரசிக்க வைக்கும் காட்சி அமைப்புடன், ரசிக்க வைக்கும் டியூனுடன், ரசிக்க வைக்கும் சந்தவரிகளோடு ரசிக்க வைக்கும் பாடல். 

ரசித்து விட்டுச் சொல்லுங்களேன்.

திந்திதநா திந்திதநா திந்திதநா திந்திதநா
திந்திதநா திந்திதநா திந்திதநா நா … (2)
புதுமலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து
புதுகவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்து
கிசுகிசு கொண்டு செல்லும் கிளியை நிறுத்து காதல் வந்ததே
இரு முயல் கொடுக்கின்ற முத்தம் நிறுத்து
இருதயம் அடிக்கின்ற சத்தம் நிறுத்து
இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து காதல் வந்ததே
எனக்கு காதல் வந்ததே…
திந்திந்தநா திந்திந்தநா திந்திந்தநா திந்திந்தநா
திந்திந்தநா திந்திந்தநா திந்திந்தநா நா… (2)

கூவச் சொல்லாதே குயிலை நிறுத்து
ஆடச் சொல்லாதே அலையை நிறுத்து
காயச் சொல்லாதே நிலைவை கொளுத்து
முட்டி விழுகின்ற அருவி நிறுத்து
சுற்றி வருகின்ற பூமி நிறுத்து
பூமி துளைக்கின்ற புல்லை நிறுத்து

இந்த அகிலத்தின் ஓசைகள் நின்றுவிட வேண்டும்
அவள் விடும் சுவாசத்தின் சத்தம் மட்டும் வேண்டும்
நட்சத்திர மண்டலத்தில் ஓரிடம் வேண்டும்
நாங்கள் மட்டும் பேசிக்கொள்ள தனி மொழி வேண்டும்
கண்ணசைவில் மின்னல் விழ புன்னகையில் பூக்கள் விழ
கையசைவில் வானம் விழ பெண்ணசைவில் நானும் விழவே
காதல் வந்ததே காதல் வந்ததே காதல் வந்ததே காதல் வந்ததே
திந்திந்தநா திந்திந்தநா திந்திந்தநா திந்திந்தநா
திந்திந்தநா திந்திந்தாரா திந்திந்தநா நா… (2)

காதில் வேல் வீசும் கொலுசை நிறுத்து
சேதம் செய்கின்ற சிரிப்பை நிறுத்து
வாதம் செய்கின்ற வளையல் நிறுத்து
கண்கள் களவாடும் மின்னல் நிறுத்து
கதறி அழுகின்ற இடியை நிறுத்து
கத்தி எறிகின்ற மழையை நிறுத்து
அந்த இருவிழி தெறிக்கின்ற மின்னல்கள் வேண்டும்
இருவிழி பொழிகின்ற மழை மட்டும் வேண்டும்
அவளுக்கு நான் மட்டும் தெரிந்திட வேண்டும்
அவள் முகம் நான் மட்டும் அறிந்திட வேண்டும்
சிந்தி விழும் முதல் மழை வந்து விழும் முதல் அலை
எந்திரிக்கும் முதல் மலை சுந்தரிக்கு சொந்தமாகவே
காதல் வந்ததே காதல் வந்ததே காதல் வந்ததே காதல் வந்ததே

புதுமலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து
புதுகவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்து
கிசுகிசு கொண்டு செல்லும் கிளியை நிறுத்து காதல் வந்ததே
இரு முயல் கொடுக்கின்ற முத்தம் நிறுத்து
இருதயம் அடிக்கின்ற சத்தம் நிறுத்து
இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து காதல் வந்ததே
எனக்கு காதல் வந்ததே…
திந்திந்தநா திந்திந்தநா திந்திந்தநா திந்திந்தநா
திந்திந்தநா திந்திந்தநா திந்திந்தநா நா… (2)


28 கருத்துகள்:

  1. முதல் பாடல் தெய்வீக மணம் கமழும் மனத்திற்கு இசைவான பாடல்.

    மதுரை என்றாலே அன்னை மீனாட்சியின் அருளாட்சி பேறு கிடைத்த ஊரு என்பது தானே நினைவில் படிகிறது?
    கூடவே பிட்டுக்கு மண் சுமந்த பெருமானின் திருவிளையாடலும்.

    வாழ்க தெய்வீகம்!
    வளர்க பூவுலகம்!

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..

    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க

    பதிலளிநீக்கு
  6. சித்திரைத் தேரோடும் மதுரையிலே... -

    இந்தப் பாடலை விடியற் காலையில் கேட்க வேண்டும்..

    ஆகா!...

    பதிலளிநீக்கு
  7. சூலமங்கலம் அவர்களது குரல் வண்ணத்தில் தான்

    எத்தனை எத்தனை பொக்கிஷங்கள்!...

    பதிலளிநீக்கு
  8. இரண்டாவதான திரைப் பாடலை நான் கேட்டதேயில்லை..

    பதிலளிநீக்கு
  9. மதுரை திருவிழாவை இணையம் மூலம் தினம் பார்த்து வருகிறோம்.
    தேரோட்டம் தங்கை வீட்டுக்கு போய் வருடா வருடம் பார்ப்போம்.
    தேர் அன்று தங்கையும் பேசினாள்.

    இன்று பகிர்ந்த பாடல் மிக அருமை. அடிக்கடி கேட்ட பாடல்.
    அன்னை மீனாட்சி அனைவருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும்.
    அடுத்த பாடல் கேட்டு இருக்கிறேன். இன்று காட்சியும் கானமும் பார்த்தேன், கேட்டேன். நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. " சித்திரை தேரோடும் மதுரையிலே ".... பக்தி பாடல் கேட்டிருக்கிறேன். இப்பொழுதும் கேட்டேன்.

    இரண்டாவது படம் பார்த்ததில்லை. பாடல் கேட்டிருக்கிறேன். 'இலங்கையில் போரை நிறுத்து"....என்று வரும்.
    இனிய பாடல் காட்சிகளுடன் இன்று கேட்டேன்.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. முதல் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பக்திப்பாடல் அடிக்கடி கேட்டு மகிழ்ந்துள்ளேன். இப்போதும் கேட்டு ரசித்தேன்.

    இரண்டாவது திரைப்பட பாடல் அடிக்கடி கேட்டதில்லை. இப்போது கேட்டவுடன் ஒரிரு முறை கேட்ட நினைவு வந்தது. பாடலும், அதற்கேற்ற நடனமும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல பாடல்..இதற்கு முன் கேட்டதில்லை .. இது வித்யாசாகர் மாஸ்டர் இசையமைத்த ஒரு மலையாளப் பாடலின் பிரதிதான் ( சில மாற்றங்களுடன்) என்று தோன்றுகிறது. தமிழில் பாடல் வரிகள் வலிந்து திணிக்கப் பட்டது போல் இருப்பதால் மலையாள மூலத்தின் மாதுர்யம் இதில் சிறிதும் இல்லை. கவிஞர் கிரிஷ் புதன்சேரியின் வரிகளின் தனிச் சிறப்பு சுவையானது. கேட்டுப் பாருங்கள் https://youtu.be/mm-Lku01034

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமையான பாடல் ஒன்றை காட்டிக் கொடுத்ததற்கு நன்றி.  ஆனால் எனக்கு இந்தப் பாடலுடன் இதை சம்பந்தப் படுத்த முடியவில்லை.  'மைனாவே மைனாவே' என்றொரு பாடல் கேட்டிருக்கிறேன்.  அது நினைவுக்கு வந்தாலும் அதையும் சொல்ல முடியாது.  இது தனிரகம்.

      தமிழ்ப்பாடலில் சந்தங்கள் அடர்த்தியாய், கொத்துகொத்தாய் வருவதும் ஒரு கவர்ச்சி என்று எனக்குத் தோன்றியது!  டி ஆர் ஆர் பாணியில்லை!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!