வெள்ளி, 1 நவம்பர், 2024

அச்சமென்ன அச்சமென்ன எட்டிப் போடு உண்மையுள்ள நெஞ்சுக்கேது கட்டுப்பாடு

 

S. கோவிந்தராஜன் எழுதிய பாடலுக்கு T K ராமமூர்த்தி மற்றும் T A கல்யாணம் இசை அமைக்க பெங்களூர் A R. ரமணி அம்மாள் குரலில் ஒரு பாடல்.

முத்தான முத்துக்குமரா
முருகையா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா

முத்தான முத்துக் குமரா
முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா வா

நீ ஆடும் அழகைக் கண்டு
வேலாடி வருகுதைய்யா
வேலாடும் அழகைக் கண்டு
மயிலாடி மகிழுதையா

மயிலாடும் அழகைக் கண்டு
மனமாடி மகிழுதையா
மனமாடும் அழகைக் கண்டு
மக்கள் கூட்டம் ஆடுதையா
முத்தான முத்துக் குமரா
முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா வா
பன்னீரால் குளிக்க வைத்து
பட்டாடை உடுத்தி வைத்து
சந்தனத்தால் சாந்தெடுத்து
அங்கமெல்லாம் பூசி வைத்து

நீர் பூசி திலகம் வைத்து
நெஞ்சத்தில் உன்னை வைத்து
அன்று பூத்த மலராள் உன்னை
அர்ச்சிப்போம் வருவாயப்பா
முத்தான முத்துக் குமரா
முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா வா

====================================================================================================

தீபாவளிக்காக ஏதாவது பாடல் போடலாம் என்றால் ஏற்கெனவே எல்லாம் போட்டாச்சு.  எனவே தீபாவளி வாழ்த்துகளோடு மட்டும் நிறுத்திக் கொண்டு பரதன் பாடலுக்கு சென்று விடுவோம்.

மனோ பாடிய பாடல்.  காட்சியில் விஜயகாந்த்.  முன்பே சொல்லி இருக்கிறேன்.  விஜயகாந்தை எனக்குப் பிடிக்கும். இந்தப் பாடலில் கனத்த உருவமாயிருந்தாலும் சிக்கென ஆடுகிறார்.  முன்பு இந்தப் பாடல் காட்சி கிடைக்காமல் இருந்தது.  இப்போது கிடைக்கிறது.

படம் பரதன். வெளிவந்த ஆண்டு 1992.  வாலியின் பாடலுக்கு இசை இளையராஜா.  பாடல் 'போட்டதெல்லாம் வெற்றிக்கல்லு...' 

பாடல் வரிகளில் இரண்டு சரணங்கள் கொடுத்திருக்கிறேன்.  ஆனால் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் முதல் சரணம் மட்டுமே இருக்கிறது.  முழுப் பாடலும் கேட்க வேண்டுமெனில் இங்கு சென்று பார்க்கலாம்..  காட்சி இருக்காது.  கானம் மட்டும் கேட்கும்.

ரப்பபாரா ரப் ரப்பபாரா ரப்பப்
ரப்பபாரா ரப் ரப்பபாரா ரப்பப்
ரரரரா ரரரரா

போட்டதெல்லாம் வெற்றிக் கல்லு
கேட்பதெல்லாம் வாழ்த்துச் சொல்லு தமிழனே
ஆஹா போட்டி என்ன எட்டி நில்லு
தூற்றுவோரை விட்டுத் தள்ளு தமிழனே
கொட்டு கொட்டு முரசு கொட்டிப் பாடு
எட்டு திக்கும் கைகள் எட்டும் எட்டிப் பாரு
துணிவுடன் இனி

போட்டதெல்லாம் வெற்றிக் கல்லு
கேட்பதெல்லாம் வாழ்த்துச் சொல்லு தமிழனே
ஆஹா போட்டி என்ன எட்டி நில்லு
தூற்றுவோரை விட்டுத் தள்ளு தமிழனே

பட்டுத் தேகம் தேக்குப் போல
கட்டிக் காக்க திட்டம் போடு
நோய்கள் தானாக ஓடும்
வட்டில்லாத சிட்டுப் போல
மெட்டுப் பாடி வட்டம் போடு
காற்றும் பூ மாலை போடும்
அச்சமென்ன அச்சமென்ன எட்டிப் போடு
உண்மையுள்ள நெஞ்சுக்கேது கட்டுப்பாடு
கங்கை போல உள்ளம் கொண்டு
வெள்ளம் போல எங்கும் சென்று
கரைகள் கடக்கலாம்

போட்டதெல்லாம் வெற்றிக் கல்லு
கேட்பதெல்லாம் வாழ்த்துச் சொல்லு தமிழனே
ஆஹா போட்டி என்ன எட்டி நில்லு
தூற்றுவோரை விட்டுத் தள்ளு தமிழனே
கொட்டு கொட்டு முரசு கொட்டிப் பாடு
எட்டு திக்கும் கைகள் எட்டும் எட்டிப் பாரு
துணிவுடன் இனி

போட்டதெல்லாம் வெற்றிக் கல்லு
கேட்பதெல்லாம் வாழ்த்துச் சொல்லு தமிழனே
ஆஹா போட்டி என்ன எட்டி நில்லு
தூற்றுவோரை விட்டுத் தள்ளு தமிழனே

கிரிக்கட் ஆடு பேட்டை தூக்கி
விக்கட் வாங்கு பந்தை வீசி
வாடா நீயும் தான் பில்கேட்ஸ்
பாப் சாங் பாடு பீட்டுப் போட்டு
மைக்கேல் ஜாக்ஸன் ஆட்டம் போட்டு
ஓடு பி டி உஷா போல்
எந்த நாளும் எந்த ஏடும் உன்னைப் போற்றும்
இந்த நாட்டின் மன்னன் என்று மாலை சூட்டும்
சட்டம் போட்டும் திட்டம் போட்டு
கோழை தன்னை வீரன் என்று
ஆக்க முடியுமா

போட்டதெல்லாம் வெற்றிக் கல்லு
கேட்பதெல்லாம் வாழ்த்துச் சொல்லு தமிழனே
ஆஹா போட்டி என்ன எட்டி நில்லு
தூற்றுவோரை விட்டுத் தள்ளு தமிழனே
கொட்டு கொட்டு முரசு கொட்டிப் பாடு
எட்டு திக்கும் கைகள் எட்டும் எட்டிப் பாரு
துணிவுடன் இனி

போட்டதெல்லாம் வெற்றிக் கல்லு
கேட்பதெல்லாம் வாழ்த்துச் சொல்லு தமிழனே
ஆஹா போட்டி என்ன எட்டி நில்லு
தூற்றுவோரை விட்டுத் தள்ளு தமிழனே


17 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் என் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் இரண்டு பாடல்களுமே நன்றாக உள்ளது. இரண்டையுமே இப்போதுதான் கேட்டு ரசிக்கிறேன்.

    /நீ ஆடும் அழகைக் கண்டு
    வேலாடி வருகுதைய்யா
    வேலாடும் அழகைக் கண்டு
    மயிலாடி மகிழுதையா

    மயிலாடும் அழகைக் கண்டு
    மனமாடி மகிழுதையா
    மனமாடும் அழகைக் கண்டு
    மக்கள் கூட்டம் ஆடுதையா/

    முருகனை நினைத்து பாடும் மகிழ்வும் , ஆடும் அழகும் கொண்ட வரிகள் நன்றாக உள்ளது. பெங்களூர் ரமணி அம்மாளின் சிறப்பான தமிழ் உச்சரிப்பில், அருமையான குரல் வளத்தில் பாடல் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இரண்டாவதாக வெளியிட்ட திரைப்பட பாடலும் இப்போதுதான் கேட்டேன். பரதன் பனம் இப்பத்தான் கேள்விபடுகிறேன். எனக்கும் விஜயகாந்த் அவர்களின் கண்களின் அசைவுகள் மிகவும் பிடிக்கும். சிலருக்குத்தான் கண்கள் இப்படி அழகாக அமையும்.

    வாலி அவர்கள் இயற்றிய வரிகளை ரசித்தேன்.எனக்கு பாடகர் மனோ அவர்களின் குரல் சமயத்தில் எஸ். பி. பியை நினைவுபடுத்தும். பாடலும் காட்சியும் நன்றாக உள்ளது. காட்சியில்லாத பாடலை பிறகு கேட்டு ரசிக்கிறேன். இன்றைய பாடல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு மனோ குரலுக்கும், எஸ்பிபி குரலுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க தெரியும். மனோ பாடல்களில் நிறைய நல்ல பாடல்கள் இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று. ஒரு ஊக்கப்படுத்தும் பாடலாக இது நன்றாக இருக்கும்.

      நீக்கு
  4. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  5. பெங்களூர் ரமணியம்மாள் சூலமங்கலம் சகோதரிகள்
    டி எம் எஸ் சீர்காழியார் இன்னபிற தமிழிசைப் பாடகர்கள் எல்லாம் இத்தமிழ் மண்ணிற்குக் கிடைத்த வரப் பிரசாதங்கள்..

    இவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்..

    பதிலளிநீக்கு
  6. இரண்டாவது பாடலைக் கேட்டதே இல்லை..

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    முதல் பாடல் கேட்டு ரசித்த பாடல். இரண்டாம் பாடல் கேட்ட நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட். இரண்டாவது பாடல் இப்போது கேட்டீர்களா ?எப்படி இருந்தது?

      நீக்கு
  8. முதலாவது பாடல் கேட்டிருக்கிறேன் அருமையான பாடல்.
    இரண்டாவது பாடல் இப்பொழுதுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது பாடல் ரசிக்கும் படி இருந்ததா? நன்றி மாதேவி.

      நீக்கு
  9. இரண்டு பாடலும் கேட்டு இருக்கிறேன் ஜி
    முதல் பாடல் மிகவும் பிடித்தமானது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!