பருப்பு அடை
தஞ்சாவூர் கைப்பக்குவம் இந்த அடை .
பச்சரிசி 50 கிராம்
புழுங்கல் அரிசி 50 கி
பாசிப் பருப்பு 50 கி
முழு உளுந்து 50 கி
துவரம் பருப்பு, 50 கி
கடலைப் பருப்பு 50 கி
இவற்றை தனித்தனியே நன்றாகக் கழுவி சுத்தம் செய்து ஒன்றாகப் போட்டு சரிக்குச் சரி தண்ணீர் விட்டு ஐந்து மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
மிக்ஸியில் மிளகு, ஓமம் ஒரு துண்டு இஞ்சி, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து ஊற வைத்திருக்கும் பருப்பில் முக்கால் அளவை மட்டும் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்
மீதம் இருக்கும் பருப்பை ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
இரண்டாவது தடவையாக ஒன்றிரண்டாக பருப்பு அரைக்கும் பொழுது அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி தேவையான உப்பு, அரை தேக்கரண்டி பால் பெருங்காயத் தூள் - சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அரைத்திருக்கின்ற் மாவு சற்று இறுக்கமாக இருக்க வேண்டும்.
இந்த மாவுடன் கையளவு தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய மல்லித் தழை கறிவேப்பிலை கலந்து கொள்ள வேண்டும்
பெரிய வெங்காயம் இரண்டை மெலிதாக நறுக்கி இதனுடன் நன்கு பிசறிக் கொள்ளவும். வெங்காயத்தின் நீர் கசிவால் மாவு தளதளப்பாக ஆகி இருக்கும்..
இத்துடன் கைப்பிடி அளவு முருங்கைக் கீரையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது அடை செய்வதற்கான மாவு தயாராக உள்ளது.
இந்த மாவு வடை போல் இறுக்கமாக இல்லாமலும் தோசை மாவு போல தளர்வாக இல்லாமலும் சரியான பக்குவத்தில் இருப்பது அவசியம்.
நடுவில் சற்று குழிவாக இருக்கும் தோசைக் கல்லில் அடை வார்க்க வேண்டும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடு படுத்தி அதில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு தயார் செய்து வைத்திருக்கும் மாவை இரண்டு கரண்டி எடுத்து வட்டமாக வார்த்து
முன்னும் பின்னும் சிவந்து வரும் வரை மிதமான தீயில் புரட்டி விட்டு எடுத்தால் தஞ்சாவூர் அடை..
இத கார சாரமா செய்யணும்ன்னு சொல்வாங்களே...
காரம் உடம்புக்குக் கெடுதல்.. ன்னு நாம தான் வற மிளகாய சேர்க்கறதில்லையே... உங்களுக்கு வேணும் ன்னா மிளகு ஓமம் ரெண்டுக்கும் பதிலா வற மிளகாய இஷ்டம் போலச் சேர்த்துக்கலாம்...
இது சிறுவர்களுக்கும் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்குமானது.. நோயாளர்கள் மருத்துவர் ஆலோசனையின் பேரில் இந்த ஆரோக்கிய அடையை வாரம் இரண்டு நாள் சாப்பிடலாம்..
உங்கள் நலம் உங்கள் கையில்..
ஃஃஃ
நல்ல குறிப்பு, துரை அண்ணா.
பதிலளிநீக்குஅடையில் நம் வீட்டில் பச்சரிசி சேர்ப்பதில்லை. முழு பயறு முழு உளுந்து சேர்த்து செய்வதுண்டு. தேங்காய்ப்பூ, சோம்பு சேர்ப்பது பாண்டியில் இருந்தப்ப கற்றுக் கொண்டது. அப்பலருந்து சேர்க்கிறேன்.
ஓமம் சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஜீரணத்திற்கும் உதவும். சேர்த்ததில்லை இதுவரை. அப்படியும் செய்து பார்த்துவிடலாம்.
முருங்கைக் கீரை கிடைக்கும் சமயம் வாங்கிவிடுவதுண்டு ஆனால் அதை ஆய்வதுதான் நேரம் எடுக்கிறது.
கீதா
முருங்கைக் கீரை ஆய்வதற்கு ஒரு குறிப்பு பார்த்திருந்தேன். செய்தித்தாளுக்குள் முருங்கைக்கீரை பரவலாக வைத்து மூடி வைத்து விட்டால் - செய்தித்தாளை இரண்டாகப் பிரித்து நடுவில் முருங்கைக் கீரையை முடிந்தவரை பரவலாக வைத்து செய்தித்தாளை மூடி வைத்து விட்டால் - சில மணி நேரங்களுக்கு பிறகு அதை எடுக்கும்போது தனித்தனி இலைகளாக இருக்கும் என்று...
நீக்குகீதா ரங்கன்.. சோம்பு, ஓமம் அடையிலா? கொஞ்சம் விட்டால் உடம்புக்கு நல்லதுன்னு சொல்லி வேப்பிலை கிராம்பு பட்டை கருஞ்சீரகம்லாம் சேத்துடுவீங்க போலிருக்கு. உங்க வீட்டுக்கு வரும்போது நீங்க இருப்பீங்களான்னு கேட்பதற்கு முன் அடைக்கு மா அரைக்கலையேன்னு கேட்டுக்கணும் போலிருக்கு
நீக்குஆமாம் ஸ்ரீராம் நானும் பார்த்திருந்தேன். பேப்பருக்குள் வைத்து அதை குளிர்சாதனப்பெட்டியிலும் வைத்துவிட்டால் உதிர்ந்துவிடும் என்று. அது உதிர்கிறது என்றாலும் சில பல நாம் பார்த்து உதிர்க்க வேண்டுமாக இருக்கு இதை அடுத்த கருத்தாகப் போட அடித்து வைத்திருந்தேன் அனுப்பாமல்...
நீக்குகீதா
ஹாஹாஹா நெல்லை, வரப்ப கேட்டுட்டே வாங்க!!!! ஹிஹிஹிஹி கண்டிப்பா நீங்க வரீங்கனா மெனு வேறு விதமாகத்தான் இருக்கும் கீரை ஸ்மூதி, ஒரு ஸ்பூன் மில்லட், 1 ரூபாய் சைஸ் கம்பு அலல்து சோள ரொட்டி அல்லது சிறுதானிய தோசை அதுவும் ஒரு ரூபாய் சைஸ் தான். போனா போறதுன்னு சோம்பு போடாத மசால் வடை அதுவும் ஒன்றே ஒன்றுதான்!!!!!!!!!
நீக்குஓமம் நான் சேர்த்ததில்லை. சொல்லிருக்கிறேனே. துரை அண்ணா சேர்த்துச் செய்யும் முறை சொன்னதும் ஓ இப்படியும் ட்ரை பண்ணலாமோன்னு யோசித்தேன் அவ்வளவுதான்...
கீதா
ஓமம், சோம்பு இவை இரண்டுமே உடலுக்கு நன்மை அளிப்பவை..
நீக்குதனித்தனி யாகவேனும்
உணவில்
சேர்த்துக் கொள்வது அவரவர் விருப்பம்..
இதைப் பற்றி நமது தளத்தில் விரிவாகப் பேசுகின்றேன்.
மகிழ்ச்சி
நன்றி..
வணக்கம் சகோதரரே
நீக்குமுருங்கை கீரை ஆய்வதற்கான குறிப்பு அருமை. நானும் எங்கோ இதுபோல் படித்துள்ளேன்.
செய்தி தாளில் செயதிகளை படித்த கலவரத்தில்/அசதியில் களைப்படைந்து அது தானாகவே உதிர்ந்து விடும் போலும்.:)) ஹா ஹா ஹா.
நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நெல்லைத்தமிழன் என்ன ஜொன்னாலும் ஜொள்ளட்டும்... என் இனம் கீதா நீங்கள் ஹா ஹா ஹா ஏனெனில், கபேட்டைத் திறந்து பார்ப்பேன்.. இருக்கும் பருப்பெல்லாம் சேர்த்து தோசைக்கு வைப்பேன்:).. அதுபோல கபேர்ட்டைத் திறப்பேன்.. உடம்புக்கு நல்லதென நினைக்கும் அனைத்தையும் சேர்த்து ரசம் வைப்பேன் ஹா ஹா ஹா:)))..
நீக்குநெல்லைத்தமிழன் சொன்னதிலிருந்து இப்போ ரசத்துக்கு வேப்பம்பூவும் சேர்க்கிறேன்:)
வெளிநாட்டில் முருங்கை இலையைத் துப்பரவாக்கவே தேவையில்லை, ஏனெனில் பொலித்தீன் பாக் இல்தான் வரும் கட்டு. பாக் ஐ திறந்தால் இலை வேறு காம்பு வேறாக வரும் ஹா ஹா ஹா ஆனால் இலை பச்சைப் பசேலென நன்றாக இருக்கும் தெரியுமோ...:)
நீக்குஅதிரா வேப்பம் பூ ரசம் என்று தனியாகவே செய்வதுண்டு கூடவே மோர் ரசத்திலும் சேர்ப்பதுண்டே. எபியில் பதிவு இருக்கும் நான் போட்டது!
நீக்குகீதா
கில்லர்ஜியைக் காணவில்லையே என்று கேட்டிருந்தேன் அவர் மிகவும் பிஸியாக இருப்பதாகத் தெரிந்தது. அவரது பதில் இதோ
பதிலளிநீக்கு//செட்யூல்ட் பதிவுகள்தான் வந்து கொண்டு இருக்கிறது. பதில் சொல்லக்கூட நேரமில்லை இன்றும் டூட்டி. காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் வேலை. கம்பெனி டிரைவர் விடுமுறையில் போனதால் அவரது வேலையையும் நான் செய்ய வேண்டிய சூழல் இரண்டு மாதங்கள் தாமதமாகும் எனது செட்யூல் டிசம்பர் வரையில் உள்ளது. மன்னிக்கவும் முடிந்தால் நண்பர்கள் வசம் அறியப்படுத்துக//
கீதா
நானும் நினைத்தேன். அவர் நிலை புரிகிறது.
நீக்குவேலைப்பளு அதிகம் இருப்பது நல்லதுதான். கில்லர்ஜி க்கு வாழ்த்துகள்
நீக்குஅரபு நாடுகளில்வேலைப்பளு என்பது இயல்பானது
நீக்குவேலை நல்லது தான்.
என்றாலும் கில்லர் ஜி அவர்களுக்கு
தெய்வம் துணை இருக்கட்டும்..
ஆஆஆ நானும் ஓசிச்சேன்ன்..:)
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குஅனைவருக்கும் நல்வரவு..
பதிலளிநீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக. வருக
நீக்குநல்வரவு..
மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான குறிப்பு!
பதிலளிநீக்குதங்களுக்கு
நீக்குநல்வரவு..
மகிழ்ச்சி.. நன்றி
தஞ்சாவூர் கைப்பக்குவம் கண்டேன் நன்று.
பதிலளிநீக்குஆனால் தஞ்சை கும்பகோணம் எங்குமே இந்த அடையைச் சுவைத்ததில்லை
இது வீட்டின் கைப் பக்குவம்...
நீக்குகடைக் காரர்கள் செய்ய மாட்டார்கள்
நெல்லை
அவர்களுக்கு நன்றி
மகிழ்ச்சி..
சத்தான ஆரோக்கியமான அடை சமையல்.
பதிலளிநீக்குநாங்களும் செய்வதுண்டு. ஓமம் சேர்த்ததில்லை. செய்து பார்க்கிறேன்.
ஓமம் என்பது அற்புதமானது..
நீக்குமுறையாக உணவில் சேர்த்துக் கொண்டால் நமக்கு எவ்விதத் தொல்லையும் இல்லை..
மகிழ்ச்சி..
நன்றி மாதேவி..
இன்றைக்கு எனது தந்தையாருக்கு திதி, திரு ஐயாற்றில் வைதிக கர்மங்களைச் செய்து விட்டு நாலு பேருக்கு உணவளித்துடன் பசுக்களுக்கும் இயன்றதைச் செய்து விட்டு சற்று முன் தான் வீட்டிற்குத் திரும்பினோம்..
பதிலளிநீக்குஇரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவருக்கு அருளும் வைத்தார் கரப்பவர் தங்கட்கெல்லாம் கடு நரகங்கள் வைத்தார் - என்பது திரு ஐயாற்றில் அப்பர் பெருமானின் திருவாக்கு..
என்னிடம் தக்க பொருளாதாரம் தற்போது இல்லை என்பதை இறைவனும் அறிவான்..
நன்றி.. நன்றி..
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவுக்கு தங்கள் செய்முறையான அடை பக்குவம் நன்றாக உள்ளது. படங்களும் அழகாக இருக்கிறது. அடை குறிப்பு எடுத்துக் கொண்டேன். நானும் அடைக்கு புழுங்கல் அரிசியுடன் அதில் பாதி அளவு பச்சரிசி சேர்ப்பேன். உடன் நாலு பருப்பும் உண்டு. ஒமம், பெருஞ்சீரகம், இஞ்சி சேர்த்ததில்லை. அதற்கு பதிலாக பெருங்காயம் சேர்ப்பேன். பாசிப்பருப்பு தோசைக்குத்தான் (பெசரட்) இஞ்சி சேர்ப்பேன். உங்களைப் போல நா னும் இப்படி ஒரு தடவை சேர்த்து செய்து பார்க்கிறேன். தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகையும் கருத்தம் மகிழ்ச்சி..
நீக்குநன்றி
நலம் வாழ்க
அடை குறிப்பு சிறப்பு. நான் இதுவரை ஓமம், சோம்பு சேர்த்ததில்லை. இஞ்சி சேர்ப்பேன்.
பதிலளிநீக்குஅடை தட்டும் காலங்கள் முடிந்து விட்டன. இது வார்க்கும் காலம். அப்படி வார்க்கும் பொழுது நடுவில் ஓட்டை போட வேண்டும். தவிர நீங்கள் நல்லெண்ணெய் பயன் படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். எங்கள் வீட்டில் அடை வார்க்கத் தேங்காய் எண்ணெய்தான். It is my all time favourite.
நல்லெண்ணெய் ஒரு வகையில் மருந்து தானே..
நீக்குஅதனால் தான் குறிப்பிட்டேன்...
ஆனால் இப்போதைய சூழ்நிலையில் சேர்த்துக் கொள்வது இல்லை..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி
நலம் வாழ்க
தஞ்சாவூர்ப் பருப்பு அடை சூப்பராக இருக்குது. சத்தான அடை.
பதிலளிநீக்குமகிழ்ச்சி
நீக்குநன்றி அதிரா..
ஆனாலும் குறிப்பில் ஒரு சிறு பொருட்பிழை உள்ளதூஊஊஊஊஊ:)).. படத்தில பாசிப்பயறு இருக்குது ஆனால் பாசிப்பருப்பு என எழுதிட்டீங்களே துரை அண்ணன்... அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுதே.. ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஎன்ன செய்யிறது..
நீக்குஅண்ணனுக்கும் வயதாகி விட்டதே..
தவறு கண்டு பிடிக்கவும் ஒருவர் வேண்டாமா...
மகிழ்ச்சி..
நன்றி அதிரா
பதிவிற்கு வ்ருகையளித்த அனைவருக்கும் நன்றி..
பதிலளிநீக்குநன்றி..