சனி, 2 நவம்பர், 2024

Positive மற்றும் நான் படிச்ச கதை




===================================================================================================

நான் படிச்ச கதை 
ஜீவி 

                                                                                     
 நிக்கி

து ஒரு நாயின் கதை தான்.

கதை என்றால் மனிதர்களைப் பற்றித் தான் இருக்க வேண்டுமா, என்ன?  ஏன், ஒரு நாயைப் பற்றி இருக்கக் கூடாதா, என்ன?

இது நிக்கியின் கதை.  ஆமாம், நிக்கி என்பது ஒரு நாயின் பெயர் தான்.  இந்தக் கதையின் நாயகியின் பெயர் தான்.  ஏன் ஒரு நாய் ஒரு கதைக்கு நாயகியாக இருக்கக் கூடாதா, என்ன?..   ஒரு குப்பத்தில் ஜனித்து, சாக்கடையில் புரண்டு, தெருக்களில் திரிந்து, ஒரு சுற்று வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட்ட,  மீண்டும் குப்பத்திற்கே வந்து சேர்ந்து விடும் நிக்கியின் கதை உருக்கமானது.

நாய்களிலும் ஆண்--பெண்  பேதம் உண்டு போலும்.  அதனால் தான் இத்தனை கஷ்டங்களையும் அனுபவிக்க நேர்ந்ததோ என்று மனம் குமைகிறது.  இல்லை,  தெரு நாய்களுக்கும் ஜாதி நாய்களுக்கும் வித்தியாசம் காட்டும் மனித  சீராட்டல் தான் காரணமோ?..

எதுவாயினும் இருக்கட்டும்.   பாவம்,  நிக்கி என்று அதன் மேல் பரிதாபமே மேலோங்குகிறது. 

பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை தான்.  தன் மனதிலேயே வைத்துக்கொண்டிராமல்  நிக்கியின் பரிதாபத்தை நம்மிடமும் பகிர்ந்து கொண்ட ஜெயகாந்தனுக்கும் தான்.  


     
நன்றி:  சிறுகதை.காம்

24 கருத்துகள்:

  1. இன்றைக்குப் பகிரப்பட்ட நாயின் கதை சுவாரசியம்தான். ஒவ்வொரு ஜீவனின் வாழ்க்கையிலும் இன்ப துன்பம் சகஜம்தானே.

    பொதுவா நாம் பார்க்காத குப்பம், சேரி, கசகச வாழ்க்கை, ஏழை மனிதர்கள், உழைக்கும் வர்க்கம் என்று எழுதக்கூடிய ஜெயகாந்தன், ஏழை நாயைப் பற்றி எழுதியதில் வியப்பில்லை.

    அவருடைய வர்ணனைகள், எதிலும் ஜாதி வித்தியாசம் பார்க்கும் மனித மனம் ரசிக்கும்படி இருந்தது. கதையைப் பதிப்பித்திருந்தவர்கள் ஒரே ஒரு எழுத்துப் பிழையையும் செய்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான கருத்துப் பகிர்வு நெல்லை. இந்தக் கதையைப் பகிர்ந்து கொண்டதின் தொடர்ச்சியாக வந்தப் பின்னூட்டங்கள் எல்லாம் அவரவர் பார்த்த பார்வைகளின் அடிப்படையில் பிரமாதம். வாழ்க்கை அதன் போக்கிற்கிடையே நம்மையும் உள்ளடக்கி யோசிக்க வைப்பது தான் அதன் சிறப்பு. கீழே பாருங்கள்.

      நீக்கு
  2. பாசிடிவ் செய்தியைப் படித்ததும், ஒரு காலத்தில் ஐந்து ரூபாய் மருத்துவராக இருந்து சேவை செய்து, பிறகு அரசியலில் நுழைந்தபிறகு தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு பணக்கார்ராகவும், பல சொத்துக்களுக்கு அதிபதியாகவும் ஆகிவிட்ட மருத்துவர் இராமதாஸ் அவர்கள் நினைவுக்கு வருகிறார்.

    பதிலளிநீக்கு
  3. "இன்று ஒரு தகவல் " போன்று ஒரே ஒரு பாசிட்டிவ், மற்றும் ஜீவி சாரின் பரிந்துரை.

    இந்த நிக்கி கதை வாசித்த ஒன்று தான். ஜெயகாந்தன் கதைகள் நேரடி வருணனையாக இருக்கின்ற ஒன்று. ஒரு குறும்படம் பார்த்த அனுபவம். ஒரு யதார்த்தம் இருப்பதால் கதையில் ஒன்ற முடிகிறது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதாசிரியர் ஆச்சு -- வாசகர்கள் ஆச்சு என்று ஒதுங்கி விடுவதில் ஆய பயன் இது தான்.

      ஒன்றை வாசித்ததின் விளைவாய் ஒவ்வொருவர் சிந்தனையும் அவரவர் அனுபவத்தில் வெளிப்படுவது
      அதற்கான நேர்த்தியுடன்
      இயல்பாக அமைந்து விடுவதின் அழகே தனி தான்!
      நன்றி, ஸார்.

      நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. பாசிட்டிவ் செய்தி மிக நல்ல விஷயம். இது இப்படியே தொடரவும் வேண்டும், மனம் மாறாமல், சலிப்படையாமல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஜீவி அண்ணா பகிர்ந்திருக்கும் கதையை எப்படி வாசிப்பில் தவறியது என்று யோசிக்கிறேன் அதுவும் நாலுகால் செல்லம் பற்றிய கதை. வாசித்துவிட்டு வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஜீவி அண்ணாவின் முன்னுரையில் சொல்லியிருப்பது போல் நாயிலும் சாதி பார்ப்பதுண்டு. தெரு நாய் என்றால் கேவலம், உயர் ரகம் என்று சொல்லி விற்கப்படும் சீமை வகைகள்தான் உசத்தி. இப்படியும் மனிதர்கள்!!!!

    ஆண் நாய்தான் பெரும்பாலும் விரும்பி வளர்க்கப்படுபவை!!!!.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்டியாய் நாம் பகிரும் அறிமுகத்தை
      வைத்துக் கொண்டால் போதும். இருக்கவே இருக்கு கதையை வாசிக்க சிறுகதைகள்.காம் போன்ற தளங்கங்கள். நீங்களும் இந்தப் பகுதிக்கு நிறைய பகிரலாம் என்பதற்காகத் தான் இப்படி. முயற்சி செய்து பாருங்களேன், சகோ. நன்றி.

      நீக்கு
  8. கதை என்னென்னவோ உணர்வுகளை எழுப்புகிறது. யதார்த்தமான கதை அதை எழுதியவிதமும் சொல்ல வேண்டுமா? ஜெயகாந்தன்!
    கதையோடு ஒன்றி வாசிக்க முடிந்தது, காட்சிகள் மனதில் விரிய.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீழே பாருங்கள்,
      நம் யோசனைகள் இன்னும் தொடர்கின்றன. பங்கு கொள்ளலாமே!
      .

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்தி அருமை. செய்தி ஒன்றே எனினும் நல்முத்தாக ஜொலிக்கிறது. அவர்கள் இருவரும் எடுத்த முடிவு சிறப்பானது. மணமக்கள் இருவரும் நலமுடன் பல ஆண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வும் அருமை. நாயிலும் ஜாதி இருப்பது உண்மைதான். அதை மனிதன்தான் அதற்கும் கற்பிக்கிறான்.

    கதை மிக நன்றாக இருந்தது. படிக்கும் போது நிக்கியின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளும் போது, நம் கண்களிலும் கண்ணீர் வந்தது.

    பிரபல எழுத்தாளரின் நல்ல சிறப்பான எழுத்து நடை கதையை தொய்வில்லாமல், ஒரே மூச்சாக படிக்க வைத்தது. இறுதியில் அதன் நிலையை நினைத்து மனமும் வருந்தியது ஆனால், இது அதற்கென விதிக்கப்பட்ட வாழ்வியல் சாபம்..! வேறு என்ன சொல்வது?

    கதையை மிகவும் ரசித்து வாசித்தேன். இக்கதையை வாசிக்கத் தந்த சகோதரர் ஜீவி அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாபம் நாயாய் பிறந்ததா, அப்படிப் பிறந்ததும் குப்பத்தில் பிறந்ததா, அல்லது அதற்கு வாய்த்த வாழ்க்கை இப்படி ஆனது தானா என்று என்னை யோசிக்க வைத்தமைக்கு நன்றி சகோதரி.

      தொடர்ந்த யோசனைகள் தொடர்வது தான் அதன் சிறப்பு.
      வாருங்கள். தொடர்ந்து பேசலாம். நன்றி.

      நீக்கு
  11. பாச்சி என்ற ஆ மாதவனின் கதை இப்பகுதியில் இடம் பெற்றது நினைவிருக்கிறதா ஜீவி சார்?

    பாச்சி செத்துப் போனாள்.


    இப்படித்தான் கதையே ஆரம்பிக்கிறது.
    அதே போன்று கதையின் கடைசி வரியும்


    பாச்சி செத்துப் போனாள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெஸி ஸார்!
      பாச்சியையும் தாராளமாக கீழே உள்ள லிஸ்ட்டில்
      சேர்த்து யோசிக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது!
      உங்கள் யோசனைக்காக.

      நீக்கு
    2. பாச்சி அருமையான கதை.

      நானும் செல்லம் பற்றிய ஒரு கதையை ஆனால் வேறு ஒரு கோணத்தில் எழுதி......வைத்து....அப்படியே இருக்கிறது. காணாமல் போகும் செல்லம்...அதன் முடிவு என்ன என்பதான கதை.....இப்போதெல்லாம் பகிர்வதற்கான ஆர்வம் இல்லாமல் கிடக்கும் கதைகள் என் ஃபோல்டரில் இருக்கின்றன.

      கீதா

      நீக்கு
  12. கமலா ஹரிஹரன் அவர்கள் சொல்லியிருக்கும் ---

    'இறுதியில் அதன் நிலையை நினைத்து மனமும் வருந்தியது. ஆனால் இது அதற்கென விதிக்கப்பட்ட வாழ்வியல் சாபம்' --

    என்ற வரிகள் என்னை ரொம்ப நேரம் யோசிக்க வைத்தது. வாசித்தவுடன் சட்டென்று கடந்து போக விடாத வரிகள்...

    சொல்லப் போனால் அகலிகைக்கு கூட இதான். ஒரு முனிவரின் மனைவியாய் இருப்பது ரொம்பவும் கஷ்டமான வாழ்க்கை சூழ்நிலை. அவரது நியம நிஷ்டைகளுக்கு ஏற்றவாறு பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும். ஒன்றில் கூட தவறி விடக்கூடாது.

    அதே நேரத்தில் ஒரு முனிவருக்கு மனைவி என்பது சமூகத்தில் மிக உயர்ந்த நிலை. அவ்வளவு லேசில் வேறு யாருக்கும் அமைந்து விடாத பாக்கியம். இப்படி அமைவதற்கு அவள் என்ன புண்ணியம் பண்ணினாளோ என்று ராஜ குலப்பெண்கள் கூட நினைத்து மரியாதை செலுத்துகிற புராண காலம் அது!

    அப்படிப்பட்ட பெண்ணிற்கு இப்படியா நேர வேண்டும்?

    --என்று யோசனை நீண்டு கொண்டே போயிற்று..

    இது பற்றி தொடர்ந்து யோசிக்கக்கூடிய யாராவது கருத்து பகிர்ந்தால் சிந்தனைக்கு ஒரு வடிகால் கிடைக்கும்.
    யாராவது தொடருங்களேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவயானி, சர்மிஷ்டை நினைவும் வந்தது

      நீக்கு
    2. இந்த சாபம் முதலிய வார்த்தைகளையும் அதை நம் வாழ்வில் தொடர்புப்படுத்திப் பார்த்துக் கொள்வதும் அவரவர் மன நிலை, நம்பிக்கைகள் பொருத்து,.

      நான் பொதுவாக அப்படி பாவ புண்ணியங்கள் என்று நினைத்துப் பார்ப்பதில்லை. ஒரு போதும் நினைப்பதில்லை.

      நாம் ஏதோ பாவம் (முன் ஜென்மம் எட்சட்ரா) செய்துவிட்டோமோ? இல்லை தப்பு செய்துவிட்டோமோ என்று சுயகழிவிரக்கத்திற்கு உட்படுத்திக் கொண்டால், சிலருக்கு அது மன ரீதியான பிரச்சனைகளை விளைவிக்கும். அப்படியான கேஸ்களை நான் பார்த்திருக்கிறேன்.

      சிலருக்கு அதை எடுத்துக் கொண்டு அப்படியே கடந்து செல்லும் திறனும் இருக்கும்.

      சிலர் - இப்போதைய வாழ்க்கையில் தவறு செய்திருப்பதாக நினைத்தால் அதனால் தான் சில துயரங்கள் என்று நினைத்தால் மனம் நல்ல உறுதியாகத் திடனாக இருந்தால் சுய பரிசோதனை செய்து அதற்கான தீர்வுகளைத் தெரிந்தெடுத்து செயல்படுத்துவதுண்டு இல்லை என்றால் அதை ஏற்றுக் கடந்து செல்வதுண்டு.

      அதனால் இது அவரவர் மன நிலை சார்ந்த ஒன்று என்பது என் தனிப்பட்டக் கருத்து

      கீதா

      நீக்கு
  13. நிக்கி
    பாச்சி
    என்பதெல்லாம் வெறும் பெயர்களல்ல.
    உயிர் சுமந்து உலவிய ஜென்மங்கள்.

    வள்ளுவர் சொல்கிறார்:

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொல்லா
    செய்தொழில் வேற்றுமை யான்

    பிறப்பு என்பது எல்லா உயிர்களுக்கும் ஒன்றே.
    சிறப்பு என்பது அதனதன்
    செயல்பாடுகளில் மாற்றம் இருப்பதே.

    அது அதன் செயல்பாடுகளே
    அது அதன் வினைப்பயன்
    என்றால்
    அது அதன் ஜென்மம்
    கடைத்தேறுவது
    எக்காலத்தில் ஐயா?

    பதிலளிநீக்கு
  14. பாசிட்டிவ் தகவல் மிகவும் சிறப்பு. இந்த விஷயம் தொடர்ந்து நடக்க வேண்டும்.

    நிக்கியின் கதை படித்திருக்கிறேன். மீண்டும் ஒரு முறை படிக்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  15. நிக்கியின் கதை படித்திருக்கிறேன். மீண்டும் படித்தேன்.

    பெண்ணையும் குழந்தையையும் பிரிந்து நிக்கி படும் வேதனை படிக்கும்போது துயருர வைத்தது.

    இறுதியில் ஜாதி என்ன என முடித்திருக்கிறார் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!