என் சித்தப்பா பையன் தன் மகனின் திருமணத்தை பெங்களூர் அருகே ஹரப்பனஹள்ளியில் வைத்திருப்பதாகச் சொன்னபோது அது ஏதோ ஏலங்கா, எலெக்ட்ரானிக் சிட்டி என்பதெல்லாம் போல பெங்களுருக்குள்ளேயே சற்று அருகில் இருக்கும் இடம் என்றுதான் எண்ணினேன் - ஒரு சென்னைக்காரனாய்.ஆனால் அது பெங்களூருவையும் தாண்டி முன்னூறு கிலோமீட்டருக்கு மேல் போக வேண்டிய இடம் என்று பின்னர் தெரிந்தது. மேலும் அந்த ஊரில் அருகில் தங்குமிடங்களும் கிடையாது என்பதும் தாமதமாக தெரிந்தது. அவர்களும் சொல்லவில்லை. சென்று பார்த்த பின்தான் பக்கத்தில் கடைகள் கூட கிடையாது என்று தெரிந்தது. அவசரத்துக்கு மொய்க் கவர் கூட வாங்க முடியாது. திருமணத்துக்கு வந்திருந்த ஓரிருவர் சிகரெட்டுக்கு அலைந்தது பார்க்கக் கண்கொள்ளா காட்சியாய் இருந்தது. அட, அதுதான் அப்படி என்றால் சிகரெட் இரண்டு பாக்கெட் வைத்திருந்த ஒருவர் நிலை வேறு வகை. அவர் லைட்டர் வேலை செய்யவில்லை. தீப்பெட்டி வாங்க கடை இல்லை. என்னிடம் சொன்னதும் அவரை நான் கிச்சனுக்கு அழைத்துச் சென்று 'மேச்பாக்ஸ் கொடுங்க' என்று கேட்டேன். அவர்கள் இரண்டு லைட்டரை எடுத்துக் காட்டினார்கள்! அப்புறம் ரிஸப்ஷனிலிருந்து தீப்பெட்டி வாங்கிக் கொடுத்தேன்!
அவருக்கு மொய்க்கவரும் நான்தான் கொடுத்தேன். நான் சென்னையிலிருந்து கிளம்பும்போதே என் வழக்கப்படி முதல் நாளே மொய்க்கவர் தயார் செய்து பணம் போட்டு எழுதி ஒட்டி வைத்து விட்டேன். என் வழக்கப்படியே இரண்டு மூன்று எக்ஸ்ட்ரா மொய்க்கவரும் எடுத்துக் கொண்டேன். சேவை! கடைசி நிமிடத்தில் ஞாபகத்துக்கு வந்து அலைபாய்வோருக்கு உதவியாக இருக்கும்!
சென்னையிலிருந்து பெங்களூர் முன்னூறு கிலோமீட்டர். பெங்களூருவிலிருந்து ஹரப்பனஹல்லி முந்நூற்று ஏழு கிலோ மீட்டர் என்றது கூகுள் மேப். போகும்போது கூகுள் மேப் தனது வழக்கமான குறும்பையும் காட்டியது!
ஒவ்வொருவர் ஓரொரு வழியைத் தேந்தெடுத்திருக்க, நானும் என் சகோதரரும் ஷேரிங் வழியை தேர்ந்தெடுத்தோம். காரில் போவது என்று முடிவானது. தெரிந்த டிரைவரைக் கேட்டபோது அதிகம் சொன்னார். ஒன் டிராப் டாக்சியைக் கேட்டபோது கொஞ்சம் சகாயமாக இருந்தது. நம் காரையே எடுத்துக் கொண்டு போனால் இன்னும் சௌகர்யம்தான். ஆனால் காருக்கு இங்கு சென்னையில் தேவை இருந்தது.
நம் காரில் செல்வதாக இருந்தால் என்ன ஆகும் என்று கேட்க நான் பேசிய சில ஆஸ்தான வாடகை ஓட்டுனர்கள் மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு முடிவு அறிய ஆவலாக இருந்தார்கள். டிரைவர் பேட்டாவில் குறைத்துக் கொள்ளவும் தயாராக இருந்தார்கள்.
முதலில் பேசிய ஒன் டிராப் டாக்சிக்காரர் அவரே வந்து விடுவதாகவும் இன்னும் சகாயமாகவும் செய்து தருவதாகச் சொன்னார். எனினும் மறுபடி வேறு ஒன் டிராப் நம்பர்களில் பேசியபோது அவர்கள் இவர் சொன்னதைவிட அதிகம்தான் சொன்னார்கள். எனவே திருப்பதியையே - அதுதான் அவர் பெயர் - நம்புவதென முடிச்சாச்சு. அவரும் 'கொஞ்சம் முன்னாடியே சொல்லுங்க.. காரை சர்விஸ் விட்டு ரெடியா வைக்கணும்' என்று சொல்லி இருந்தார். சொன்னோம்.
ஒரு ஒப்புநோக்கு பார்வையில் இவர் சொன்ன கட்டணம் மிகவும் குறைவு என்பதால் நம்பிக்கை வைக்கலாமா என்றும் சந்தேகம் வந்தது. வேறு வழியில்லை. இவர் வரவில்லை என்றால் கடவுள் சித்தம் என்று ஹரப்பனஹல்லி போவதையே கேன்சல் செய்து விட வேண்டியதுதான் என்று தீர்மானித்தோம். வீட்டிலும் சில கடைசி நிமிட சிரமங்கள், தடங்கல்கள் இருந்தன.
கிளம்பும் நாளும் வந்தது. அதிகாலை மூன்று மணிக்கு கிளம்புவதாக திட்டம். காலை இரண்டு மணிக்கு எழுந்து தயாராகையில் நினைவூட்டலுக்கு அலைபேச தொடர்பு கொண்டால் இரண்டரை மணிக்கே அங்கிருப்பேன் என்று சொன்ன திருப்பதி ஃபோனை எடுக்கவில்லை.
நாங்கள் குளித்து, காஃபி குடித்து, உடை மாற்றி பெட்டியுடன் தயாராகி விட்டோம்.
மணி மூன்றானது. மூன்றேகால் ஆனது... அவர் போனையே எடுக்கவில்லை.
==================================================================================
மறைப்புக்கு வைத்திருந்த
மனத்திரை
மக்கிப்போய் மடங்கி
விழுகிறது காலப்போக்கில்
எவ்வளவு காலம் மறைந்திருக்க முடியும்
என்று
எதிர்நீச்சல் போட்டு
எக்காளத்துடன் வெளிவருகின்றன
உண்மை குணங்கள்
பண்பு முகமும் பாச முகமும்
காணாமல்போய்
பசப்பு முகம் தெரிகிறது
அறுந்து விழுந்த திரையின்
பின்னே
===========================================================================================
பேஸ்புக்கிலிருந்து ரவிக்குமார் ரவி என்பவர் பதிவிலிருந்து..
ஒரு நாள் காலை பொழுது..
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காலை சிற்றுண்டி முடித்துவிட்டு, கோட்டைக்கு கிளம்ப ஆயுத்தமாகிறார். அப்பொழுது தலைவருக்கு அறிமுகமான ஒருவர் தன்னுடன் முருகேசன் (பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவரையும் அழைத்துகொண்டு தலைவரை காண வருகிறார். அவர்களை பார்த்த மக்கள் திலகம், "முதலில் சாப்பிடுங்கள். பின்னர் எதுவானாலும் பேசிக்கொள்ளலாம்" என்கிறார்.
அவர்கள் உணவருந்தி முடித்தபின் "சரி இப்ப சொல்லுங்கள். என்ன விசயமாக என்னை பார்க்க வந்தீர்கள். என்னால் ஏதாவது காரியம் ஆகவேண்டுமா?" என வினவுகிறார். வந்தவர் "அண்ணே இவர் பெயர் முருகேசன். தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை வச்சிருக்காரு. அதில் ஒரு சிக்கல், கடை சற்று நடை பாதையை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது.
இதை காரணமாக வைத்துக் கொண்டு, இவருக்கு ஆகாத சிலர் அதிகாரிகளை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த கடையை நம்பி தான் இவரது குடும்பமும் உள்ளது. வேறுவழியில்லாமல் உங்களிடம் அழைத்துவந்தேன்" என்கிறார் தயங்கியபடி.
தலைவர் சில நொடி யோசித்துவிட்டு புன்னகையுடன் "என்னால் முடிந்ததை செய்கிறேன்" என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார். இந்த பதிலை கேட்டு வந்தவர்களின் முகம் வாடிப்போகிறது. அதன் பின் மூன்று நாட்கள் கோட்டையில் இருந்து வீட்டிற்கும், வீட்டிலிருந்து கோட்டைக்கும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே செல்கிறார். போகும் போழுதும், வரும் போதும் அந்த பீடா கடையை கவனித்துக்கொண்டே செல்கிறார்.
ஆக்கிரமிப்பு இருந்தாலும் பீடா கடையினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று அறிந்த மக்கள் திலகம், முதல்வராக இருந்து கொண்டு ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு எப்படி போடமுடியும் என்பதையும் உணர்ந்தவர்தானே அவர்.
அடுத்த நாளும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே எம்.ஜி.ஆர் செல்கிறார். பீடா கடை அருகே வந்ததும், பத்து மீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்த சொல்கிறார். அதிகாரிகளுக்கோ குழப்பம். திடீரென்று நிறுத்த சொல்கிறாரே என்று. பின் காரின் கதவை தானே திறந்துகொண்டு, பீடா கடையை நோக்கி வேகமாக தனக்கே உரித்தான அந்த கம்பீர நடையில் நடக்கிறார் . தலைவர் நம்ம கடையை நோக்கி வருகிறாரே என்று முருகேசனுக்கு பதற்றம், குழப்பம், பயம். செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.
பீடா கடையை அடைந்த தலைவர், "என்ன முருகேசா இப்போல்லாம் தோட்டத்து பக்கம் ஆளையே காணோம். தொழில் எப்படி போகுது?" என்று ரொம்ப நாள் பழகிய நண்பர் போல் முருகேசனுடன் உரையாடுகிறார். முருகேசன் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திருத்திருவென முழிக்கிறார். "சரி ஏதாவது உதவி வேணும்ன்னா தோட்டத்துக்கு வா" என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி கோட்டைக்கு சென்றுவிடுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர் சென்ற அடுத்த நொடியே விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது.
"முருகேசன் தலைவருக்கு வேண்டப்பட்டவரா?"
"அவரே இறங்கி வந்து முருகேசன்கிட்ட பேசுனாரா?"
"சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் நண்பர்களாம்"...
என்று ஆளாளுக்கு தாங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். தொல்லை கொடுத்த அதிகாரிகள் பலருக்கும் பயம் தலைக்கேறியது. வேண்டாதவர்கள் என்று சொல்லப்பட்ட பலரும் முருகேசனை பார்த்து சலாம் போட்டதுடன், பின்னாளில் அவர் கிட்டேயே சிபாரிசுக்கு வந்த கதையெல்லாம் நடந்தது. புரட்சித்தலைவர் நினைத்திருந்தால் தொல்லை கொடுத்தவர்களை போனில் அழைத்து சொல்லியிருக்கலாம், அதெல்லாம் ஒரு முதல்வருக்கோ, தலைவருக்கோ தகுதியான குணமல்ல. வேறு யாராக இருந்திருந்தால், இதெல்லாம் ஒரு விஷயமா என்று மறந்தே போயிருப்பார்கள். இல்லையெனில் போனில் மிரட்டியிருப்பார்கள்.
அதிகாரிகளுக்கும் சொல்லாமல் , ஆக்கிரமிப்பை அகற்றவும் சொல்லாமல் அந்த பீடா கடைக்காரருக்கு உதவிய வல்லமை இவரை தவிர யாருக்கு வரும்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் பெயர் தான் தமிழ்நாட்டை ஆளும்... என்பதில் சிறிதும் அய்யமில்லை.
புரட்சித்தலைவர் எம்ஜியார் அவர்களின் புத்தி கூர்மையை பறைசாட்டும் சிறிய நிகழ்வு தான் இது. ஆனால் இதுதான் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
=====================================================================
எனக்குப் பிடித்த புத்தகம்
திரு லா. ச. ராமாமிருதத்தின் எழுத்துதமிழுக்கும் தமிழனுக்கும் புதிது கதையுலகத்தின் இளங்கதிரவன் அவர் ,தமிழ் சொற்களிலேயே சொல்வதானால், அவருடை எழுத்து 'நானின் நானைக் கண்டுவிட்டது.'
"வார்த்தையில் வெளிப்படையாக இல்லாத அர்த்தத்தை எப்பொழுதும் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும் அவர் எழுத்துக்கள். சிந்தனை லயத்தில் சில பகுதிகள் கவிதையாகக் கனியும்: பொருட் செறிவில் தேன் துளிர்க்கும். அவை சொற்களின் கவிதை கூட அல்ல, எண்ணங்களின் இசையே யாகும் என்று, பதிப்புரையில் திரு மாசிலாமணி அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மையே!
'அஞ்சலி' என்ற இந்தச் சிறுகதைத் தொகுயிலே ஐந்து பஞ்ச பூதக் கதைகள்' அடங்கியுள்ளன.
அவை தரங்கிணி (தண்ணீர்), ஜம தக்னி (நெருப்பு). பூரணி (நிலம்), காயத்ரீ (காற்று), ஏகா (வான்) என்ற வரிசையில் அமைந்துள்ளன.
தரங்கிணி
திரையிறங்கிவரும் இருளில் ஜலம் வெள்ளைச் சிரிப்புச் சிரிக்க, வானில் ஓரிரண்டு நட்சத்திரங்கள் மூச்சுவிடத் தொடங்க, நடையோரம் நெளிந்து வளைந்து நிமிர்ந்த தென்னைகளின் மட்டைகள் சாமரமாடி அசைய, கண்களில் நீர் தளும்ப, தரங்கிணி ஜலத்தை அப்படியே ஆலிங்கனம் செய்துவிடுபவள் போன்று இரு கைகளையும் விரித்துக்கொண்டு நிற்க, அவள் கணவனோ, மார்மேல் சுட்டிய கைகளுடன் அவளது முகத் தில் ஆடும் நிழல்களைக் கண்டு அதிசயித்திருக்க. அவனது தோள்மீது சாய்ந்து, அவனது தோள்களை இறுகப் பற்றிக்கொண்டு, "என்னைப் பைத்தியம்னு நினைச்சுக்க மாட்டேளே?"என்ற கேள்வியுடன் சுதைத் தலைவி அறிமுகப் படுத்தப் படுகிறாள். தரங்கிணி கதையைச் சொல்ல கணவன் பதில் பேசாத சிகரட்டை பற்ற வைக்க, எரிச்சலுடன் 'வெடுக்'சென அவள் அதைப் பற்றி எறிய, இருளில் அதன் நுனிப் பொறி கரணம் அடித்துத் தூரத்தில் விழுந்து அவிய, தரங்கிணியின் பிறந்து வளர்ந்த அதிசயக் கதை விரிகின்றது.
அவள் கணவன் 'உம்' கொட்டிக்கேட்பதைப் போலவே நாமும் அசையாது ஆடாது கதையைக் கேட்கிறோம். " ஏன் உங்களுக்குச் சிரிப்பாயிருக்கா?!" என்று அவள் கேட்சு, "இல்லை. இன்பமாயிருக்கிறது உன் சொல்வதெல்லாம் சொல், சொல்!" என்று அவன் சொல்வது போலவும் நாமும் சொல்கிறோம்.
'இன்னிக்கோ, நாளைக்கோன்னு ' நிறை வயிறாய் இருந்த தரங்கிணியின் தாயார் ஆற்றோரத்துப் புதரிலே பிள்ளையைப் பெற்றுவிட்டு, காவேரியம்மனுக்கே அவளை அர்ப்பணித்து வீட்டு மறைகிறாள்.
தந்தையோ சங்கீதப் பித்துப் பிடித்தவராயும், தெருக் குப்பையிலே கிடந்த வைத்திய புத்தகத்து மூலிகையைத் தேடியவராயும் ஊரெல்லாம் அலைந்து, மனைவியைப் பறிகொடுத்துவிட்டு எங்கோ போய்விட, பக்கத்தாத்துராதாவும். எதிர்த்தாத்து சீதாவும் பாத்திரம் தேய்க்கும் செங்கமலமுமாக வளர்க்க, ஆற்று ஜலம் மாதிரி எப்படியெப்படியோ, ஒரு சமயம் ஒடுங்கி-ஒரு சமயம் பெருகி, ஒரு சமயம் ஒதுங்கி, ஒரு சமயம் நெருங்கி எல்லார் கைப்பட எல்லாம் சொல்லும்படி வளர்ந்து, பெரியவளாகிறாள். திடீரென்று அவள் மாமா மாத்ரு பூதம் ஐயர் ஒரு பையனைத் தரங்கிணிக்குக் கைப் பிடித்துத் தருகிறார்.
பத்தாண்டுகள், காலத்தை உதைத் துக் கொண்டே உருளுகின்றன. குழந்தைச் செல்வம் கிட்டாத தரங்கிணி ஏங்கிப் புழுங்குகிறாள். இரண்டாந்தாரம் மணந்து கொள்ளச் சொல்லி வெகு கணவனிடம் சமார்த்தியமாய்ச் சத்தியம் வாங்கிவிட, கணவன் தன்னை அறியாமல் ஏமாற்றப்பட்டது அறிந்து, ஆத்திரப்பட்டு ஒதுங்கி அவளைத் தள்ளிப் போக, அவள் எட்டடிக்கு எட்டிப் போய் விழுந்து, முதுகெலும்பு முறிந்து மூளை குழம்பிப் பிதற்றி, எட்டு மாதங் களுக்குப் படுத்த படுக்கையாகி, பிழைத்ததே புனர் ஜன்மமாய் எழுந் திருக்கிறாள். கணவன் வேலை நிமித்தமாய் வேற்றுர் போகிறான்.
திடீரென்று தரங்கிணி தான் இருந்த தவம் நிறைவேறியதை அறிகிறாள். கண்கள் செருகுகின்றன. வயிற்றைக் குமட்டுகின்றது. குடு குடு'வெனக் குறடோரம் ஓடுகிறாள். நெற்றியில் வேர்வை துளிர்க்கின்றது. பக்கத்து வீட்டு மாமி அருகிலே வந்தவள் தரங்கிணியின் முகத்தை இரு கைகளாலும் வழித்து நெற்றியில் நெறித்துக் கொள்கிறாள். சொடக்குகள் சொட சொட வென்று உதிர்கின்றன.
தரங்கிணியின் உள் உதயத்தின் தகதகப்பில் அவள் கண்கள் தாழ்ந்து பார்வை மங்குகின்றது. அவள் தன் வசத்தில் இல்லை. மேஜைக்கு எதிரே நாற்காலியில் அமர்ந்து கணவனுக்கு. "உங்களுக்கு இந்த சமயத்தில் என்ன எழுதறதுன்னு தெரியலை... உங்களுக்கு நான் இப்போ சொல்லணும்னு ஆசைப்படற விஷயங்கள் என்கிட்ட இருந்து எழும்பற வேகத்திலேயே என்னை அமுக்கறது... நான்..." என்று தொடரும் முன் "போஸ்ட்" என்ற கூவலுக்கு பின்வந்து முன்னால் விழுந்த கணவனின் கடிதம் அவளை கட்டியிருந்த மந்திரத்தை அவிழ்க்கிறது.
கடிதத்தை எடுத்துக் கொண்டு தென்னந்தோப்பைத் தாண்டி ஆற்றங்கரை போகிறாள். ஓரங்களில் மஞ்சள் தடவப்பட்ட கடிதம். கடிதத்தைப் பிரிக்க, பூவிதழ்கள் இரண்டும் அட்சதையும் மடியில் சிதறுகின்றன.
கடிதத்தைப் படிக்க முடியவில்லை. தண்ணீரைப் பார்த்தபடியே சிலையாகி விடுகிறாள். அர்ச்சனைப் புஷ்பங்கள் போல் அவள் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் உதிர்ந்தவண்ணம் இருக்கின்றன.
உணர்ச்சிகளைத் தொட்டு மன அரங்கில் வண்ணக் கோலமெழுப்பும் ஓவியனின் கைதேர்ந்த தூரிகையின் துணி யில் மின்னும் வண்ணக் குழம்பின் வடிவமே ஒரு சிறு கதையாகப் பரிணமித்திருப்பதைத் தரங்கிணியில் காண்கிறோம்.
- சி.என் எம் ஆதவன், எனக்குப் பிடித்த புத்தகம், ஆனந்த விகடன், 1959.
==========================================================================
தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில், நேற்று அதிகாலை 3 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்று, நடைமேடை அருகே, தனியாக அழுதபடி சுற்றி வந்தது. இதை பார்த்த, பரங்கிமலை ரயில்வே போலீசார், குழந்தையை மீட்டனர். ரயில் நிலையத்தில் வந்திருந்த பயணியரிடம் குழந்தை குறித்து கேட்டபோது, குழந்தை குறித்து எவருக்கும் தெரியவில்லை. இதையடுத்து, ரயில் நிலையத்தில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற ரயிலில் இருந்து ஒருவர், குழந்தையை இறக்கி விடுவது பதிவாகி இருந்தது.
=========================================================================================
பழைய ஜோக்ஸ்..
ஹரப்பனஹல்லி பிரயாணம்... ஆரம்பமே நன்று. மிகவும் சிறிய பகுதியாக ஆரம்பித்திருக்கிறது.
பதிலளிநீக்குஎம்ஜிஆர்.. அவருக்கு பிறருக்கு உதவும் குணம் இயல்பாகவே வாய்த்திருந்திருக்கிறது.
வாங்க நெல்லை.. ரொம்ப எழுதினால் போரடித்து விடுமே என்று சிறிய பகுதியாக வந்திருக்கிறது. MGR ஒரு வித்தியாசமான அற்புதம்.
நீக்குஎவ்வளவு நாட்கள்தாம் முகமூடியுடன் திரிய முடியும்? கழன்றுவிழும் நேரம் என ஒன்று வரவேண்டும் அல்லவா?
பதிலளிநீக்குஎனக்குப் பிடித்த புத்தகம் விமர்சனத்தின் எழுத்து நடை எத்தனை பேருக்குப் பிடித்திருக்கும்?
எல்லோருமே பலமுகங்கள் அணிந்து கொண்டிருக்கிறோம். எந்த முகம் எந்த நேரம் கழன்றுவிழும் என்பது சஸ்பென்ஸதான். சிலரால் கடைசிவரை முகமூடியுடனேயே கழித்துவிட்டு முடிகிறது!
நீக்குஎனக்குப்பிடித்த புத்தகம்.. நம்ம சனிக்கிழமை நான் படிச்ச கதை மாதிரி பகுதி. இது 1959 ல் விகடனில் வந்திருந்திருக்கிறது. அப்போதைய எழுத்து நடை இப்படித்தானே இருக்கும்? இதை நான் பேஸ்புக்கில் போட்டதும்,, லாசராவின் புதல்வர் இதை உடனடியாக ஷேர் செய்தார்.
குழந்தையை விட்டுவிட்டுச் செல்லுமளவு அவருக்கு என்ன நிர்பந்தமோ கஷ்டமோ. பாவம் இருவரும்.
பதிலளிநீக்குஇன்றைய நகைச்சுவைத் தேர்வுகள் மிக நன்று.
// என்ன நிர்பந்தமோ கஷ்டமோ. பாவம் இருவரும். //
நீக்குஎன்ன நெல்லை பாவம் என்கிறீர்கள்... பிளாட்பாரம் தெரியும் வயதா அந்தக் குழந்தைக்கு? நகர்ந்து வந்து யாரும் பார்க்காத நேரத்தில் டிராக்கில் விழுந்தாலோ, ரயிலில் அடிபட்டாலோ என்ன ஆகியிருக்கும்? நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்குகிறது.
"இல்லை ஒரு பிள்ளையென ஏங்குவோர் பலரிருக்க.. இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்ல மகனே" பாடல் வரி நினைவுக்கு வருகிறது.
மாபாவிகள். கல்மனசுக்காரர்கள். கொடுஞ்செயல் காரர்கள்.
நான் மேட்டூரில் வேலை பார்த்தபோது நடந்த சம்பவம் நினைவுக்கு வருது. குழந்தையைக் கொலை செய்வதைவிட ஒழுங்காக எங்காவது விட்டுவிடுவது நல்லது (ஆனால் பாவம் அந்தக் குழந்தை. விட்டுவிட்டுச் செல்பவனின் பாவம் ஆயுளுக்கும் தீராது)
நீக்குஇந்த மாதிரியான தருணங்களில் மீட்ட போலீஸ்காரர்கள் குழந்தையை எத்தனை நாள் வைத்திருக்கமுடியும்?என்னதான் செய்வார்கள் அவர்களும்..
நீக்குகொலைகாரர்கள். இதயமற்றவர்கள்.
நீக்குவாங்க ஏகாந்தன் ஸார்...
நீக்குஎங்காவது அனாதை இல்லங்களில் சேர்க்கக் கூடும். விருப்பமிருந்தால் அவர்களில் யாராவதே கூட வளர்க்கலாம்.
எங்களூருக்குத்தான் வருகிறீர்கள் என்றதும் பார்க்க வாய்ப்பிருக்குமோ என கூகிளிட்டால் நீங்கள் செல்லுமிடம் 300 கிமீக்கும் அதிகமாக்க் காட்டியதும் நம்பமுடியவில்லை. இங்குள்ள உறவினர்கள் பலருமே, பெங்களூர் எனச் சொல்லிவிட்டாலும் ஒவ்வொருவர் இருக்குமிடம் போக வர, ஐநூறு - அறுநூறு ரூபாய்க்குமேல் ஆட்டோவில் ஆகிவிடும்.
பதிலளிநீக்குபார்க்க வாய்ப்பிருந்திருந்தால் நானே வந்திருப்பேன். அதோடு கே ஜி ஒய் மற்றும் அத்தையை பார்க்க முடியாமல் வந்ததில் எனக்கு வருத்தம்.
நீக்குஎங்கள் பயணம் இறுக்கமானது... அதாங்க டைட்டானது! நேரம், அதிகம் செலவழிக்க முடியாமல் போனது.
பெங்களூரு எல்லையைத் தாண்டும்போது உங்களை, கீதா ரெங்கனை, ராமலக்ஷ்மியை, ரஞ்சனி அக்காவை என்று எல்லோரையும் நினைத்துக் கொண்டே தாண்டினேன்.
கமலா அக்காவையும் நினைத்தேன். அவர் ஒரு மர்ம மனுஷியாய் எங்கிருக்கிறார் என்று சொல்லாமல் இருக்கிறார்! ஆர் ஆர் நகரா, ஆர் கே நகரா... அங்கு இருக்கிறார் என்பதே சமீபத்தில்தான் தெரிந்தது!
ஹரப்பனஹல்லி 600 கி மீ ஒரே நாளில் காரில் பயணமா? முட்டிக்கு முட்டி வலிக்குமே!
பதிலளிநீக்குசிகெரெட் --- பாலச்சந்தரின் வறுமையின் நிறம் சிவப்பு என்று நினைக்கிறேன், ஓரு விரல் கிருஷ்ணா ராவ் ஒரு சிகரெட்டை வைத்துக்கொண்டே ஓசியில் சிகெரெட் பிடித்துவிடுவார். அது நிழலாக உதித்தது.
MGR செய்தது சரி என்று சொல்வதிற்கில்லை. ஆனாலும் அப்போதைக்கு ஒரு தாற்காலிக தீர்வு எனக் கொள்ளலாம்.
கேப்டன் குக் ஜோக் நெப்போலியன் எந்த யுத்தத்தில் தோற்றார் கேள்விக்கு பையன் எழுதிய விடை நினைவில் வந்தது.
அய்யய்யோ வியாழக்கிழமை என்று ஒப்பேற்றப்பட்ட பதிவு.
Jayakumar
வாங்க JKC ஸார்... ஆம். 610 கிலோ மீட்டர் ஒரே நாளில் தொடர்ந்து... என்னவோ வலி ஏதும் தெரியவில்லை. மனம்தான் காரணமா, தெரியவில்லை!
நீக்கு//சிகெரெட் --- பாலச்சந்தரின் வறுமையின் நிறம் சிவப்பு என்று நினைக்கிறேன், ஓரு விரல் கிருஷ்ணா ராவ் ஒரு சிகரெட்டை வைத்துக்கொண்டே ஓசியில் சிகெரெட் பிடித்துவிடுவார். அது நிழலாக உதித்தது.//
புரியவில்லை. எதற்கு இது?
MGR அவர் பாணியில் தீர்வு கண்டிருக்கிறார் என்று சொல்லலாம். முருகேசன் பெயரை அவர் நினைவில் வைத்திருந்தது ஆச்சர்யம். அல்லது உதவியாளர் நினைவூட்டி இருக்கலாம்! கேப்டன் குக் ஜோக் அப்புறம் பல்வேறு வடிவங்களில் வந்து விட்டது. காபி அடிப்பது தெரியாமல் அடித்திருக்கிறார்கள்! ஊர் மாற்றி, பேர் மாற்றி!
ஒப்பேற்றப்பட்ட பதிவா? மத்லப்?
//சிகெரெட் --- பாலச்சந்தரின் வறுமையின் நிறம் சிவப்பு என்று நினைக்கிறேன், ஓரு விரல் கிருஷ்ணா ராவ் ஒரு சிகரெட்டை வைத்துக்கொண்டே ஓசியில் சிகெரெட் பிடித்துவிடுவார். அது நிழலாக உதித்தது.//
நீக்குபுரியவில்லை. எதற்கு இது?
//திருமணத்துக்கு வந்திருந்த ஓரிருவர் சிகரெட்டுக்கு அலைந்தது பார்க்கக் கண்கொள்ளா காட்சியாய் இருந்தது. அட, அதுதான் அப்படி என்றால் சிகரெட் இரண்டு பாக்கெட் வைத்திருந்த ஒருவர் நிலை வேறு வகை//
சிகெரெட் வாங்க காசில்லை. தீப்பெட்டி உண்டு. முதலில் சிகரெட் பிடிப்பவரிடம் போய் நின்று தீபெட்டியில் தட்டிக்கொண்டே பரிதாபமாக பார்ப்பார். சிகெரெட் பிடிக்கும் ஆள் இவருக்கு சிகெரெட் தானம் செய்வார். அடுத்து இவர் கொஞ்சம் தள்ளி வேறு ஒரு சிகெரெட் பிடிப்பவரிடம் போய் சிகெரெட்டைக் காட்டி பற்ற வைக்க தீ கேட்பார். அவர் எரியும் சிகரெட்டை தந்தவுடன் அவரிடம் உள்ள சிகரெட்டை பத்தவைக்காமல் அவர் கொடுத்த சிகரெட்டை நாலு இழப்பு இழுத்திட்டு திரும்ப கொடுப்பார். ஆக சிகரெட்டும் பிடித்தாயிற்று ஒரு சிகரட்டும் லாபம்.
Jayakumar
ஓ... அதற்கா இது?
நீக்குஆனால் ஐயையே.. இவர் இழுத்ததை அவர் இழுப்பார், அப்புறம் மறுபடி இவர் இழுப்பாரா?
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம். பேத்தி நலம்தானே? மறுபடி ஆளைக் காணோம்?
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குஇப்போது பேத்தி நலம். ஆஸ்பத்திரிக்கு மருத்துவரிடம் சென்று பேத்தியின் கைக்கட்டை அகற்றி வந்தோம். இப்போது பரவாயில்லை கூடிய விரைவில் மணிக்கட்டு எலும்பு இணைந்து விடும் இனி கைக் கட்டு தேவையில்லை என்றார் மருத்துவர். ஆயினும், அந்த கையால் வெயிட் ஏதும் எடுக்காமலும், அந்தக் கையை கீழே ஊன்றாமலும், கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். என எச்சரிக்கை தந்து அனுப்பி விட்டார். அதனால், மேலும் எங்களின் கவனிப்பு அவள் மேல் அப்படியேதான் உள்ளது. விரைவில் கை பழையபடிக்கு திரும்ப வேண்டும். இத்தனை நாள் கை பாரத்துடன் வளைய வந்தாள்.பாவம்..!
இன்னமும் நானும் பதிவை படித்து விட்டு வருகிறேன்.காலை டிபன் சப்பாத்தி கடை முடிந்து கொஞ்சம் சமையல் வேலைகள் காத்திருக்கின்றன. . முடித்து விட்டு வருகிறேன். தங்களின் அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கவலை வேண்டாம். பேத்திக்கு கை சரியாகி விடும். பேத்தியே கவனமாக இருக்கக் கூடும்.
நீக்குகாலை டிஃபன் சப்பாத்தியா? சூப்பர். தொட்டுக்க?
ஹரப்பனஹள்ளி பயணம் மாரத்தான் போன்று! கடைசில புறப்படும் முன் டென்ஷன் தருணங்கள். ஃபோன் எடுக்கவில்லை என்றால் ரொம்பவே டென்ஷனாகியிருந்திருக்கும்.
பதிலளிநீக்குtight travel....
நீங்க முதலில் கேட்டப்ப நானும் கூகுள் பண்ணிப் பார்த்தப்ப அது என்னவோ இக்கட, பன்னேருகட்டா சைட்லனு சொல்லி புலிப்படமும் காட்டிச்சா....ஆஹா ஸ்ரீராம் சரியா காட்டுக்குள்ள மாட்டிகிடப் போறாரோன்னு தோன்றியது/
அப்புறம், நீங்க மற்ற விவரங்கள் சொல்லி விஜயநகரம் என்றெல்லாம் சொன்னதும் கணினியில் பார்த்தப்பதான் ஆ...இம்மாந்தூரம்னு தெரிந்தது.
அடுத்த பகுதி படங்களோடு வரும்னு நினைக்கிறேன்.
கீதா
கீதா
வாங்க கீதா... ஆமாம், வீட்டிலிருந்து புறப்படுவதற்கு படம் எதற்கு என்று எடுக்கவில்லை!! அடுத்த வாரம் கொஞ்சம் கொஞ்சம் படங்கள் வரும்! காட்டுக்குள் சென்று வந்தேன்தான்! சொல்றேன்...
நீக்குகவிதை சூப்பர்.
பதிலளிநீக்குநாடக உலகில் நாமும் நடிகர்கள்தானே! எல்லா இடங்களிலும் நடிக்கலைனாலும் ஒரு சில இடங்களில் ஆக வேண்டியிருக்கிறது.
ஆனால் ரொம்ப ஆத்தெண்டிக்காக இருந்துவிட்டாலும் பெயர் ரப்சர் ஆவதும் உண்மை அந்த ரப்சருக்குப் பயப்படாதவங்க மட்டும்தான் அப்படி இருக்க முடியும்.
கீதா
இப்படி திரை விலகும் என்று நான் நினைக்கவில்லை கீதா!
நீக்குஎம் ஜி ஆரின் இப்படியான சாதுரியமான உதவிகள் ஆச்சரியம்தான்.
பதிலளிநீக்குஎம் ஜி ஆரைப் பற்றி சரோஜாதேவி புகழாரம் சூட்டியிருந்ததை எதிலோ பார்த்த நினைவு.
கீதா
ஆனால் கூடவே ஒன்று தோன்றியது. இதுவும் சரியல்ல. தற்காலிகமான தீர்வு என்றாலும். கடை எங்கிருக்கு என்று பார்த்திருக்கிறாரே. அப்ப அவரது கடையை சற்றுத் தள்ளியோ இல்லை அங்கேயெ வேறு இடத்தில் அமைக்க உதவியிருக்கலாம் என்றும் தோன்றியது. ஆக்ரமிப்பு தவறு என்று சுட்டிக் காட்டி. இப்படிச் செய்வது, எம் ஜி ஆருக்கு வேண்டியவர் எனவே ஆக்ரமிப்பை அகற்றக் கூடாது என்று தோன்றிவிடும் இது பலருக்கும் சாதகமாகிவிடும்.
நீக்குகீதா
இல்லை கீதா.. அதற்குதான் அவர் இரண்டு நாள்நோட்டமிட்டு, உதவி இருக்கிறார். போக்குவரத்துக்கு அந்தக் கடை இடைஞ்சலாயில்லை என்று, தானே நேரில் பார்த்து, பின்னர்தான் உதவி இருக்கிறார்.
நீக்குலா ச ரா வின் எழுத்து அற்புதமான ஒன்று. ஆழ்ந்த எழுத்தும். புரிந்து கொள்ள சிலருக்குச் சிரமமாக இருக்கலாம். அற்புதமான எழுத்தாளர். வித்தியாசமான எழுத்தும் கூட.
பதிலளிநீக்குதரங்கிணி அசத்தல். அவள் பிறந்தது போன்று அவள் குழந்தையும்! இவள் என்ன செய்வாளோ என்று ஆர்வம் எழுகிறது.
அடுத்தாப்ல ஜமதக்னி வருமா?, ஸ்ரீராம்
கீதா
ஹா.. ஹா... ஹா.. காபி செய்வதே கஷ்டமாயிருக்கு கீதா.. இந்த நான் படிச்ச கதை வித்யாசமாயிருக்கு இல்ல? இங்கே இன்னும் கொஞ்சம் லா சாராவின் எழுத்து மேஜிக்கை சுட்டி எழுதி இருக்கலாம்.
நீக்குதாம்பரம் சானடோரியம் செய்தி மனதை வருத்திவிட்டது. இப்படி எத்தனைக் குழந்தைகளை ஈவு இரக்கமில்லாமல் விடுகிறார்கள் படுபாவிகள்.
பதிலளிநீக்குஅதற்கு மேலே சற்று பொருத்த்டமான லா ச ரா கதை!
கீதா
மனதை என்னமோ செய்த செய்தி அது.
நீக்குஆமாம், எதிர்பாராத விதமாக இரண்டும் பொருத்தமாக அமைந்து விட்டது.
இவள் தன் கணவனை மறுமணம் செய்து கொள்ளச் சொல்கிறாளே தவிர, இவள் அவரிடமிருந்து விலக வேண்டிய அவசியமில்லையே... இல்லையா?
ஜோக்ஸ் ரசித்தேன், ஸ்ரீராம். புன்னகைக்க வைத்தன.
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குஹரப்பனஹள்ளி தொடரவிருக்கிறதா.. என்னடா ’தொடரும்’-ஐக் காணலியே என்று பார்த்தேன்.
பதிலளிநீக்குஹிஹிஹி... அதெல்லாம் சொல்றதில்லை. படிச்சவங்க அவ்ளவுதான்னு நிம்மதியா இருக்கும்போது அடுத்த வாரமும் அதைத் தொடர்ந்து திகிலூட்டுவேன்!
நீக்கு