Thank you JKC Sir
=========================================================================================
வயசானா என்ன... வாழ்க்கையை ரசிக்கிறோம்
இயற்கையை ரசிக்கலாம்இனிமையுடன் வாழலாம் கோவிந்தசாமி, 78, தெக்கலுார் : ''இன்னும் இன்பம் ஆயிரம் இருக்குது; ஏனோ மனம் தான் ஏற்க மறுக்குது; இறுக்கம் நிறைந்த மனதை திறந்து, எண்ணிப்பார்த்தால் எல்லாம் இன்பமே...''இது எனது சொந்தக்கவிதை; எனக்கு கதை, கவிதை படிப்பது, எழுதுவதில் ஆர்வமுண்டு. மூத்த குடிமக்களை பொறுத்தவரை, பலருக்கு பாதுகாப்பு வளையமாக பென்ஷன் உள்ளது; பலர், ஆயுள் வரை உழைத்துக் கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு இணை, துணை நோய்கள் என்பதும், கூடவே பயணிக்கும். முதுமையை பொருட்படுத்தாமல் உணவு பழக்கம், உடற்பயிற்சி, இசை கேட்பது, இயற்கையை ரசிப்பது என, தங்களை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். முதியவர்கள், தங்கள் குடும்பத்துடன் ஆண்டுக்கொரு முறை, சுற்றுலா சென்று வருவது நல்லது; கடைசி காலத்தை நிம்மதியாக கழிக்க, தங்கள் பெயரில் சொத்து வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.50 வயதுக்கு மேல்தான்உற்சாகம் குறையக்கூடாது
உழைப்பும் படிப்பும்உயர்வைத் தரும் நாகசுப்பிரமணியன், 77, எழுதுபொருள் அங்காடி உரிமையாளர், திருப்பூர்: மனைவி வரலட்சுமி, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து விட்டேன். அப்பாவிடம் மளிகை கடையில் வேலை செய்து சம்பளம் வாங்கிய பணத்தில் ஸ்டேஷனரி கடையை சிறியதாக துவங்கினேன். சீனா, ஜப்பான், தைவான், ஐரோப்பியா நாடுகளுக்கு தனியாக பயணம் செய்து சில இயந்திரங்களை முதன் முதலாக வாங்கி மக்கள் தேவைகளை பூர்த்தி செய்தேன். உழைத்தால் உயரலாம்; படித்தால் சிறக்கலாம். உழைப்பும் படிப்பும் இருந்தால் நல்ல நிலைக்கு வர முடியும். எந்த வேலையை செய்தாலும், உண்மையாகவும் நேர்மையாகவும் செய்ய வேண்டும். தொழிலில் லாபம் என்பது நாம் நிர்ணயம் செய்வது இல்லை; இறைவன் உறுதி செய்வது. நமது வேலைகளை சரியாக செய்ய வேண்டும். அதிகாலையே எழுத்து பணிகளை சீராக செய்ய முயல வேண்டும். வயது முதிர்வு என்பது எண்கள் மட்டும் தான். நாம் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது.
====================================================================================================
மாஸ்க்கிலாமணி
கதையாசிரியர்: சேட்டைக்காரன்
சேட்டைக்காரன் வளைத்தளம் <======
என்னுடைய முன்னுரைக்கு மாற்றாக கடுகு சார் சேட்டைக்காரனின் நூலுக்கு எழுதிய தாளிப்பு அல்லது முன்னுரை இக்கதைக்கு பொருந்தும் என்பதால் அதை இங்கு தருகிறேன். ஆக இரட்டை புலவர் போல இரட்டை நகைச்சுவை.
ஓரு வேண்டுகோள். இக்கதை கொரோனா காலத்தில் எழுதப்பட்டது என்பதை நினைவில் கொண்டு வாசிக்கக் கோருகிறேன். பதிவு கொஞ்சம் நீளம் அதிகம் அதனால் படங்கள் இல்லை.
கடுகு அகஸ்தியன் வலைத்தளம் <======
1. சேட்டைக்காரன் எழுதிய மொட்டைத்தலையும் முழங்காலும்.
இது சேட்டைக்காரனின் புத்தகத்திற்கு நான் எழுதும் முன்னுரை. பொதுவாக முன்னுரை என்பது பாராட்டு உரையாகத்தான் இருக்கும். அதுவும் படிக்காமலேயே பல முன்னுரைகள் எழுதப்படுவதும் உண்டு. நானும் சேட்டையின் கதைகளைப் படிக்காமல் இருந்திருக்க வேண்டும். அப்போது அட்டகாசமான பாராட்டுரை எழுதி இருப்பேன். இன்டர்நெட்டில் எதையோ வேட்டையாடிக் கொண்டிருந்தபோது சேட்டையின் வலையில் அகப்பட்டுக் கொண்டேன்.
அவரது கதை/கட்டுரைகளைப் படித்தேன். படிக்கப் படிக்க சிரிப்புத் தாங்க முடியவில்லை. வயிற்றெரிச்சலையும் தவிர்க்க முடியவில்லை. பொறாமைதான் காரணம். அவரது சரளமான நடையும், வரிக்கு வரி வரும் நகைச்சுவை வெடிகளும் என்னை அசத்திவிட்டன. பல சமயம் சட்டென்று வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.
அதுவும் அவர் அள்ளித் தெளித்திருக்கும் ஏராளமான உபமானங்கள் எல்லாம் சூப்பர். கீழ்ப்பாக்கத்தில் ஐம்பது வருஷம் சர்வீஸ் போட்ட ஆசாமி மாதிரி சிரித்தேன்.
சேட்டைக்காரனுக்கு சிலேடையும் அனாயாசமாக வருகிறது. தன்னைத்தானே எள்ளி நகையாடுவதும் பிரமாதமாக இருக்கிறது.
அவர் கட்டுரைகளைப் படித்தபோது எனக்குத் தோன்றியது: இந்த ஆசாமி வலைப்பூவில் எழுதக் கூடாது; பொதுஜனப் பத்திரிகைகளில் எழுத வேண்டும் என்பது என் கருத்து, அவா, விருப்பம், யோசனை, அறிவுரை, வேண்டுகோள், கட்டளை.
* வெரிகுட்! இவ்வளவு கோட்டை விட்டும் எங்க ஒட்டகப் பண்ணையிலே முதலீடு பண்ணனும்னு உங்களுக்கு எப்படித் தோணிச்சு?”
“பணத்தை விட்ட இடத்துலேதானே சார் பிடிக்கணும்? சரவணபவனிலே சாப்பிட்டுட்டு வசந்தபவனிலே போயா வாய் கொப்பளிக்க முடியும்?"
* “நாளைக்கு வரச்சொல்லும்மா! டயர்டா இருக்கு, நான் கொஞ்ச நேரம் பல்லு விளக்கப்போறேன்!”
*”அதாவது, ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒவ்வொரு சம்சாரம்னு சொல்ல வந்தேன். என் சம்சாரம் பேரு கோதை, உங்க சம்சாரம் பேரு ராதை!”
* பீர்க்கங்கரணைத் தண்ணித்தொட்டிக்கு பீட்டர் இங்கிலாண்டு சட்டை போட்டுவிட்டது போல, ஆல்ப்ஸ் மலையிலிருந்து உருண்டுவந்த ஐஸ்பாறை போன்று உருண்டையாக ஒருவர் என்னை நெருங்கினார்.
* ”என் வாழ்க்கையிலேயே இப்பத்தான் முதமுதலா டம்ளர்லே உப்புமா சாப்பிட்டிருக்கேன்,” என்று மனைவியை மனமுவந்து பாராட்டியவன்.
*அதை ஆஞ்சநேயர் சாப்பிடுவாரு; என்னை மாதிரி நோஞ்ச நேயர் எப்படி சாப்பிடறது?
* எனது நாக்கு அடைமழை பெய்த ஆதம்பாக்கம் சாலைபோல ஊறத்தொடங்கியது.
முன்னுரையை எழுத ஆரம்பிக்கும்போது சேட்டையை அதிகம் புகழக் கூடாது என்று தீர்மானத்துடன்தான் துவங்கினேன். அவரது நகைச்சுவை என் தீர்மானத்தைத் தவிடுபொடியாக்கி விட்டது.
சேட்டைக்காரனை நான் சந்தித்தது இல்லை; அவருடன் பேசியதும் இல்லை! சேட்டையின் எளிமையான, சரளமான, யாரையும் புண்படுத்தாத, எப்போது படித்தாலும் சிரிப்பு வரவழைக்கக் கூடிய கதை, கட்டுரைகளை நான் எழுதிய கட்டுரைகளைவிட அதிகம் ரசித்துப் படித்தேன்; ரசிகனானேன்
மேலும் பல உயரங்களைத் தொட்டு, கொடிகட்டிப் பறப்பார் சேட்டை என்பதில் எனக்குக் கடுகளவும் சந்தேகமில்லை.
Kadugu
மாஸ்க்கிலாமணி
கதையாசிரியர்: சேட்டைக்காரன்
கை நிறைய பையுடன் கடைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த மாசிலாமணிக்கு, அதிமுக்கியமான ஒரு சந்தேகம் எழுந்தது; எதற்குக் கடைக்குப் போகிறோம் என்பதே அது. சென்றமுறை, கடலைப்பருப்புக்குப் பதிலாக பொரிகடலையும், பாமாயிலுக்குப் பதிலாக பினாயிலும் வாங்கி வந்ததன் விளைவாக இரண்டு நாட்களுக்கு காப்பிக்குப் பதிலாக ரவா கஞ்சி குடிக்க நேரிட்ட துயரம் இன்னும் அவரது தொண்டையிலிருந்து ஒரு அங்குலம்கூட கீழே இறங்காமல், அழிச்சாட்டியமாக அங்கேயே எக்ஸிபிஷன் போட்டு அப்பள ஸ்டால் நடத்திக் கொண்டிருந்தது.
மாசிலாமணியின் சதக்தர்மிணி, மன்னிக்கவும், சகதர்மிணி குசலகுமாரி என்ற குஷி, பெட்ரூமில் உள்பக்கம் தாள்போட்டுக்கொண்டு, யூட்யூப் பார்த்தபடி குச்சுப்படி பயிற்சி பண்ணிக்கொண்டிருந்தாள். ஏற்கனவே குடியிருந்த பழைய வீட்டில் குஷியின் குச்சுப்பிடி காரணமாக மச்சுப்படி உட்பட கட்டிடத்திலிருந்த காரையெல்லாம் உதிர்ந்ததால், கொஞ்ச நாளைக்கு எல்லாரும் மலைக்கள்ளன் எம்ஜியாரைப் போல கயிற்றை உபயோகித்துத்தான் மாடிக்குச் சென்று வந்து கொண்டிருந்தார்கள். ஆகவே, பூகம்பமே வந்தாலும் அதிராத புத்தம்புது டெக்னாலஜியில் கட்டப்பட்ட குடியிருப்பில் கொள்ளை விலை கொடுத்துக் குடிவந்திருந்தார் மாசிலாமணி.
என்னதான் ’தில்’லான ஆசாமியாக இருந்தாலும், மனைவியின் தில்லானாவுக்குத் தொந்தரவு செய்வது, மைதாமாவு தோசை என்ற மாபெரும் ஆபத்துக்கு வித்திடும் என்பதை அறிந்தவர் என்பதால், சத்தம்போடாமல் கதவைச் சாத்திவிட்டு, லிஃப்டு வழியாகக் கீழே வந்து, மெயின்கேட்டை நெருங்கினார்.
”யோவ், நில்லுய்யா!” என்று ஒரு குரல்கேட்கவே, திரும்பிய மாசிலாமணி, ஒரு செக்யூரிட்டி தன்னை நோக்கி வேகமாக வருவதைக் கண்டார்.
”யாருய்யா நீ, அபார்ட்மெண்ட்ஸ்ல துணிப்பை சேல்ஸ் பண்றியா?” என்று அந்த செக்யூரிட்டி கேட்டதும், மாசிலாமணிக்குக் கோபம் மூக்குக்கு மேல், கிட்டத்தட்ட முன்மண்டை வரை வந்தது.
பல்குத்தும் குச்சிக்குப் பாவாடை கட்டினாற்போல, தொளதொளவென்ற யூனிபாரம் அணிந்திருந்த அந்த செக்யூரிட்டி மாசிலாமணியை நெருங்கி வந்து நின்று முறைத்தார்.
”யோவ், வாயிலே என்ன கொழுக்கட்டையா வைச்சிருக்கே? எப்படிய்யா உள்ளே வந்தே?” என்று அந்த செக்யூரிட்டி கேட்டுக் கொண்டிருந்தபோதே, அபார்ட்மெண்ட் மேனேஜர் ஒப்பனிங் சீனில் வரும் ஹீரோவைப் போல எங்கிருந்தோ குதித்தோடி வந்தார்.
”யோவ் செக்யூரிட்டி, அவர் யாரு தெரியுமா?” என்று நெருங்கி வந்தார் மேனேஜர். “இவரு புதுசா வீடுவாங்கி குடிவந்திருக்காருய்யா. மரியாதையாப் பேசு.”
அந்த செக்யூரிட்டி டென்ஷனில் அட்டென்ஷனுக்கு மாறி சல்யூட் அடித்த சத்தத்தைக் கேட்டு, எட்டாவது மாடியிலிருந்த புறாக்களெல்லாம் பயந்து எக்மோர் ஸ்டேஷனுக்குக் குடிபெயர்ந்தன.
”மேனேஜர், என்னைப் பார்த்து துணிப்பை சேல்ஸ் பண்றியான்னு கேட்கிறாரு இந்தாளு,” என்று பொருமினார் மாசிலாமணி.
”அடப்பாவி,” என்று மேனேஜர் தலையில் கைவைத்தார்.
”யோவ் மேனேஜர், அவன் தப்பு பண்ணினதுக்கு எதுக்குய்யா என் தலையிலே கைவைக்கறீங்க?” என்று உறுமினார் மாசிலாமணி.
”சாரி சார், பதட்டத்துல எது என்னோட தலைன்னு தெரியாமக் குழம்பிட்டேன்,” என்று வருந்திய மேனேஜர், செக்யூரிட்டி பக்கம் திரும்பினார்.
“எல்லாம் உன்னாலே வந்தது! சார் என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா? கவர்மெண்டுல அண்ட்ராயர் செகரட்டரியா இருக்காரு!”
”யோவ் மேனேஜர், உன் வாயை பாமாயில் போட்டுக்கழுவுய்யா! அது அண்டர் செகரட்டரி; அண்ட்ராயர் செகரட்டரி இல்லை.” எரிந்து விழுந்தார் மாசிலாமணி.
”அண்டர் செகரட்டரின்னா பேஸ்மெண்டுலதான் ஆபீஸா சார்?” என்று பவ்யமாகக் கேட்டார் மேனேஜர்.
”ஆண்டவா,” மாசிலாமணிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “என்னய்யா இங்கே செக்யூரிட்டியும் சரியில்லை; மேனேஜரும் சரியில்லை. இந்த அப்பார்ட்மெண்ட் ரொம்பத் தப்பார்ட்மெண்ட்டா இருக்கும் போலிருக்கே.”
”கோவிச்சுக்காதீங்க சார்,” என்று கைகூப்பினார் மேனேஜர். “வந்ததுலேருந்து எப்பவும் மாஸ்க் போட்டுக்கிட்டுத்தான் நடமாடுவீங்க. இன்னிக்கு மாஸ்க் போடாம வந்திருக்கீங்களா, எனக்கே அடையாளம் தெரியலை.”
”என்னது? மாஸ்க் போடலியா?” மாசிலாமணி அதிர்ந்தார். “நல்லாப் பார்த்துட்டுச் சொல்லுய்யா. நெஜமாவே நான் மாஸ்க் போடலியா?”
”இதுக்கெல்லாமா பொய் சொல்லுவாங்க? என் பொஞ்சாதி தங்கலட்சுமி மேலே சத்தியமா நீங்க மாஸ்க் போடலை சார்.”
”ஐயையோ!” அலறினார் மாசிலாமணி. “வழக்கமா கடைக்குப்போயி என்ன சாமான் வாங்கணும்கிறதைத்தான் மறப்பேன். இன்னிக்கு மாஸ்க் போடவே மறந்திட்டேனா?”
“அப்படீன்னா இன்னிக்கு என்ன சாமான் வாங்கணும்னு ஞாபகம் வைச்சிருக்கீங்களா சார்? வெரிகுட்!”
”சும்மாயிருய்யா,” மாசிலாமணி சலித்துக்கொண்டார். “நானே என்ன வாங்கணும்னே தெரியாம எந்தக்கடைக்குப் போறதுன்னு குழம்பியிருக்கேன். ஆனாலும், ஆண்டவன் ஒரு மனுசனை இப்படியெல்லாமா சோதிக்கிறது?”
”இதுக்கெல்லாம் ஆண்டவன் என்ன சார் பண்ணுவாரு?” என்று பரிதாபமாக்க் கேட்டார் மேனேஜர். “சார், முக்குக்கடையிலேதான் அஞ்சு ரூபாயிலிருந்து அம்பது ரூபா வரைக்கும் மாஸ்க் தொங்க விட்டிருக்கானே? ஒண்ணு வாங்கிட்டுப் போறதுதானே?”
”வெரிகுட்!” மாசிலாமணி மெச்சினார். “மேனேஜர்னதும் நான்கூட தப்பா நினைச்சிட்டேன். ஆனா நீங்க ரொம்ப உண்மையிலேயே புத்திசாலி.”
”யோவ் செக்யூரிட்டி,” மேனேஜர் மீண்டும் அந்த செக்யூரிட்டி பக்கம் திரும்பினார். “இனிமேல் சார்கிட்டே மரியாதையா நடந்துக்கணும் தெரியுதா? ஏழாவது மாடிக்குக் குடிவந்திருக்காரு சார்! இவர் பேரு மாஸ்கிலாமணி..ச்சீ.. மாசிலாமணி!”
”இனிமே ஜாக்கிரதையா இருப்பேன் சார்,” என்று பணிவன்புடன் கைகுவித்தார் செக்யூரிட்டி.
”என்னத்தை ஜாக்கிரதை? நீ அடிச்ச சல்யூட்டுல உன் பேண்ட் அவுந்து விழுந்திருச்சு. ரிஸைன் பண்ணிட்டுப் போனவன் யூனிஃபாரத்தையெல்லாம் போட்டுக்காம இனிமேலாவது ஜாக்கிரதையா இரு,” என்று அறிவுரைத்த மாசிலாமணி, காம்பவுண்டை விட்டு வெளியேறி கடையை நோக்கி நடந்தார்.
மாஸ்க் போடுவதை மறந்த விஷயம் அதற்குள் மறந்துபோய்விடவில்லையென்பதால், முக்குக்கடைக்குள் நுழைந்தார்.
”சார்,” கடைக்காரர் அலறினார். “மாஸ்க் போட்டுக்கிட்டு உள்ளே வாங்க சார்.”
”மாஸ்க் வாங்கத்தான் உள்ளே வரணும்.”
”உள்ளே வரணும்னா மாஸ்க் போடணும் சார்.”
”மாஸ்க் இல்லேன்னுதானே மாஸ்க் வாங்க உள்ளே வர்றேன்.”
“மாஸ்கே வாங்கணும்னாலும் மாஸ்க் இல்லாம உள்ளே வந்து மாஸ்க் வாங்க முடியாது.”
”யோவ் வெளக்கெண்ணை முண்டம்!” மாசிலாமணி பையிலிருந்து ஒரு பத்து ரூபாயை கடைக்காரரை நோக்கி வீசியெறிந்தார். “இதுக்கு ஒரு மாஸ்கை எடுத்து விட்டெறி! நான் கேட்ச் புடிக்கிறேன்.”
கடைக்காரர் ஒரு மாஸ்க்கை எடுத்து எறிய, மாசிலாமணி அதைக் கரெக்டாகக் கேட்ச் பிடித்தார்.
”சூப்பர் சார், ரோஹித் ஷர்மாவைவிட நல்லாவே கேட்ச் புடிக்கறீங்க,” என்றார் கடைக்காரர்.
’ரோஹித் ஷர்மா எப்பவாச்சும் பூந்திக்கரண்டி, பூரிக்கட்டையைக் கேட்ச் புடிச்சிருந்தாத்தானே?’ என்று மனதுக்குள் எண்ணியவருக்குச் சட்டென்று பொறிதட்டியது.
’யுரேகா! பூரிக்கட்டை…பூரி…ஞாபகம் வந்திருச்சு… நான் கடைக்குப் போய் வாங்க வேண்டியது கோதுமை மாவும், கோல்ட்வின்னர் எண்ணையும்! யெப்பா ரோஹித் ஷர்மா… நீ இன்னும் பத்து வருசத்துக்கு டெஸ்ட் மேட்ச் ஆடணும் சாமி..’
மறதி வருவதற்குள் மாஸ்க்கை அணிந்துகொண்ட மாசிலாமணி, திருவருட்செல்வர் சிவாஜிபோல சிங்கநடை போட்டார்.
வழக்கமாக மளிகை சாமான் வாங்க தான் செல்லுகிற அந்த டப்பார்ட்மெண்டல், மன்னிக்கவும், டிப்பார்ட்மெண்டல் ஸ்டோருக்குள் நுழைய முற்பட்டபோது, அங்கிருந்த செக்யூரிட்டி மாசிலாமணியை நிறுத்தினார்.
”சார், ஒரு நிமிஷம்! சூடு இருக்கான்னு பார்க்கணும்.”
”என்னய்யா இது, இன்னிக்கு எல்லா செக்யூரிட்டிகளும் ஒரு மார்க்கமாவே இருக்கீங்க. யாரைப் பார்த்துய்யா சூடு இருக்கா, சொரணை இருக்கான்னு கேட்கறே?”
“சாரி சார், டெம்பரேச்சர் கன் வேலை பண்ணலை. அதான், உடம்புல சூடு இருக்கான்னு கேட்டேன் சார்.”
”உடம்புல சூடு இருக்கிறதுனாலதான்யா கடைக்கு வந்திருக்கேன். இல்லாட்டி கண்ணம்மாபேட்டைக்குக் கொண்டுபோயிருப்பாங்கய்யா.”
”ஐயோ சார், காய்ச்சல் இருக்கான்னு கேட்டேன் சார்!”
”அதை எங்கிட்டே ஏன்யா கேட்குறே? உனக்குக் காய்ச்சல் இருக்கான்னு பார்க்க நான் என்ன டாக்டரா? நான் அண்ட்ராயர்…ச்சீ, அண்டர் செகரட்டரிய்யா!”
“சார்” அந்த செகரட்டரி அழாதகுறையாக கைகூப்பினார். “ நீங்க உள்ளே போங்க சார்!”
ஒருவழியாகக் கடைக்குள் சென்று வாங்க வேண்டிய பொருட்களை மறக்காமல் வாங்கிக்கொண்டு வெற்றிப்பெருமிதத்துடன் வீட்டை நோக்கி நடந்தார். காம்பவுண்ட் அருகே மேனேஜரும், இன்னொருவரும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
”அந்த ஏழாவது மாடியிலே புதுசா குடிவந்த ஆள் யாருன்னு எனக்குத் தெரிஞ்சே ஆகணும்,” இரைந்து கொண்டிருந்தார் அந்த மனிதர். “தொம்முதொம்முன்னு ஒரே சத்தம். ரெண்டு ட்யூப்லைட் ஃபியூஸ் ஆயிருச்சு. இன்னிக்கு என்னடான்னா நல்லா ஓடிட்டிருந்த சீலிங் ஃபேன் நின்னுருச்சு. அந்தாளு மட்டும் என் கையிலே கிடைச்சான், அவனைக் கொலை பண்ணிருவேன்.”
”ஏய்ய்ய்!” மாசிலாமணியின் ரத்தம் கொதித்து, காதுவழியாக ஆவி பறந்தது. “எவண்டா கொலை பண்றவன்? தில்லிருந்தா வாடா பார்க்கலாம்.”
திரும்பிப்பார்த்த மேனேஜர்,’ யோவ் யாருய்யா நீ? சம்பந்தமில்லாத மேட்டர்ல எதுக்கு நுழையறே? இவரு புதுசா குடிவந்திருக்காரே, மாசிலாமணி, அவரைப்பத்திப் பேசிட்டிருக்காரு!”
”யோவ் மேனேஜர், நான்தான்யா மாசிலாமணி. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிகூட பேசிட்டிருந்தோமேய்யா?”
“சார் நீங்களா? மாஸ்க் போட்டிருக்கீங்களா, அதான் அடையாளம் தெரியலை.” என்று தலையை, அதாவது அவரது சொந்தத்தலையைச் சொறிந்தார் மேனேஜர்.
”படுத்தாதீங்கய்யா,” பொறுமையின்றிக் கூச்சலிட்டார் மாசிலாமணி. “முதல்ல மாஸ்க் போடாம அடையாளம் தெரியலை; இப்போ மாஸ்க் போட்டா அடையாளம் தெரியலியா?”
”அது இருக்கட்டும் மிஸ்டர் மாசிலாமணி,” அந்த நபர் குறுக்கிட்டார். “ நீங்கதானே ஏழாவது மாடியிலே குடிவந்திருக்கீங்க? உங்க வீட்டுல யாராவது குதிச்சுக் குதிச்சு விளையாடறாங்களா? ஏன் இவ்வளவு சத்தம்?”
”நீங்க ஆறாவது மாடியிலே இருக்கீங்களா?” கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி கேட்டார் மாசிலாமணி.
“நான் கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கேன் சார்,” அந்த நபர் உறுமினார். “என்ன சார் நடக்குது உங்க வீட்டுல?”
“லூசாய்யா நீ?” கொதித்தார் மாசிலாமணி. “ஏழாவது மாடியிலே என் பொஞ்சாதி குச்சுப்புடி ஆடினா, கிரவுண்ட் ஃப்ளோர்ல எப்படியா கேட்கும்?”
“சார்,” மேனேஜர் குரலைத்தாழ்த்தினார். “கிரவுண்ட் ஃப்ளோர் கூட பரவாயில்லை சார். பக்கத்து பில்டிங்ல கவுன்சிலர் குடியிருக்காரு. உங்க வொய்ஃப் குச்சுப்புடி சத்தம் கேட்டு, நம்ம பில்டிங்க்ல என்னமோ வேலை நடக்குதுன்னு சந்தேகப்பட்டு மாமூல் கேட்க வந்திட்டாரு சார்!”
”ஐயையோ!” மாசிலாமணி வாயடைத்துப்போனார்.
”மாசிலாமணி சார்,” அந்த நபர் குழைந்தார். ‘ஒரு புருஷனோட மனசு இன்னொரு புருஷனுக்குத்தான் புரியும். என்னதான் லக்ஸுரி அபார்ட்மெண்ட்னாலும் குச்சுப்புடி ஆடறதெல்லாம் ரொம்பவே ஓவர். குழந்தை குட்டிங்க இருக்காங்க; ஹார்ட் பேஷண்ட்ஸ் இருக்காங்க. இந்த லாக்டவுணுக்கு அப்புறம் ஒவ்வொரு பிளாக்லயும் குறைஞ்சது ரெண்டு வீட்டுலயாவது யாராவது கர்ப்பமா இருக்காங்க. இந்த அபார்ட்மெண்ட் செகரட்டரின்னுற முறையிலே சொல்றேன். விஷப்பரீட்சையெல்லாம் வேணாம் சார்.”
”அடாடா, நீங்கதான் செகரட்டரியா?” என்று ஆதங்கத்துடன் கேட்டார் மாசிலாமணி. “செகரட்டரின்னா கையிலே ஒரு டார்ச் லைட்டோ, ஸ்க்ரூ டிரைவரோ வைச்சிட்டிருக்கணும் சார். அதான் நம்ம பண்பாடு! இல்லாட்டி எப்படி அடையாளம் தெரியும்?”
பேசிமுடித்துவிட்டு, வீடு திரும்பியவர் கதவைத்தட்டிவிட்டு, மாஸ்க்கைக் கழற்றிவிட்டுக்கொண்டார். கதவைத் திறந்த குஷி…
“என்னங்க, மாஸ்க் போட்டுக்கிட்டுப் போகலியா?” என்று கேட்டார்.
அடுத்த நொடி…
ஏழாவது மாடியிலிருந்து தொப்பென்று ஏதோ விழும் சத்தம் கேட்டது.
– பெப்ரவரி 2021
ஊசிக்குறிப்பு.
அன்ட்ராயர் செகரட்டரி மாஸ்கிலாமணி-மாசிலாமணியின் ஒரு நாள் காலை கூத்தை ரசித்தீர்களா? மாஸ்கிலாமணி மாசிலாமணியின் கேரக்டரை கொஞ்சம் சீர்படுத்தி அப்புசாமி சீதாப்பாட்டி தொடர் போன்று எழுதியிருக்கலாம். நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும்.
இதுவரை தன் பெயரோ முகமோ காட்டாத சேட்டைக்காரன் இதோ முதன் முதலாய் உங்கள் பார்வைக்கு
வெளிச்சம் போட்டு காட்டியவர்
https://veeduthirumbal.blogspot.com/2012/08/blog-post_27.html
==============================================================================
ஸ்ரீராம் ஆகிய என் குறிப்பு :
இவருக்கு நானும் நண்பன். நாங்கள் ஒருமுறை சந்தித்து பேசி இருக்கிறோம். இப்போதும் FaceBook ல் Active ஆக இருக்கிறார். பா ஜ க தமிழக அணித்தலைவர் நயினார் நாகேந்திரன் கல்லூரியில் இவர் வகுப்புத் தோழர். நடுவில் ஒரு ப்ராஜெக்ட் பற்றி பேசினோம். ஏனோ அது அப்படியே தொடராமல் நின்று விட்டது!
=================================================================================================

சேட்டைக்காரன் வலைத்தளத்தை முன்பு படித்திருக்கிறேன். சரளமான நகைச்சுவையோடு எழுதுபவர். பிறகு என்னவோ பல வலைத்தளங்களைத் தொடர்வதே இல்லாமலாகிவிட்டது.
பதிலளிநீக்குஅவரது பதிவைப் பகிர்ந்ததற்கு நன்றி. கடுகு சாரின் எழுத்தும் அவருக்குப் பாராட்டாக அமைந்தது சிறப்பு.
வேணு ஜி இப்போதெல்லாம் அரசியல் பதிவுகளாக போட்டுத் தள்ளுகிறார் முகநூலில்
நீக்குஆன்மீகம் இளைய தலைமுறை வழியாகப் பரவுவதற்கு அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்குப்்பாராட்டுகள்.
பதிலளிநீக்கு60 வயதாகிவிட்டது என்பதையே மனதுக்குக் கொண்டுசெல்லக்கூடாது. ஆச்சு அறுபது வயசு, ரிடர்மென்ட் ஆகிவிட்டதால் பொழுது போகலை என்று சொல்பவர்கள் அருகிலேயே நான் செல்லமாட்டேன்.
வீட்டில் ஈஸிசேர் வாங்காமல், இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!
நீக்குதியா சூப்பர்.
பதிலளிநீக்குஅவருடைய பாட்டிக்குதன முதலில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
இந்தக் கலை என்றில்லை, எந்தக் கலையில் குழந்தைகள் ஆர்வம் காட்டினாலும், வீட்டின் சப்போர்ட் ஊக்கம் மிக முக்கியம்.
முதலில் அம்மா, அப்பா. அடுத்தாப்ல பாட்டி தாத்தா.
எனவே பாட்டி தாத்தாக்களே, பேரன் பேத்திகளோடு இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது தயவாய் குழந்தைகளுக்கு நல்லதைச் சொல்லிக் கொடுத்து, கதைகள் சொல்லி, அவங்களோடு விளையாடி, பேசி, அவர்களின் ஆர்வங்களை ஊக்கப்படுத்துங்கள். குழந்தை வளர்ப்பில் அம்மா, அப்பா முதல் வளையத்தில் என்றால் அடுத்து தாத்தா பாட்டி.
பெற்றோர் அன்புடன், கூடவே தாத்தா பாட்டி அன்பில், அரவணைப்பில் வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் நன்றாக இருப்பார்கள்.
எனவே, குழந்தைகள் வளர்ந்தாச்சு, இனி எதுக்கு நாங்க உதவணும்? எங்க வாழ்க்கை என்று இல்லாமல், உங்கள் வாழ்க்கையையும் பார்த்துக் கொண்டு, பெற்ற குழந்தைகளோடு இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் உங்கள் அன்பை அவர்களுக்கும் கொடுத்து, பேரன் பேத்திகளுக்கும் கொடுங்கள். வாய்ப்பு கிடைத்தால் என்பதையும் நோட் பண்ணிக்கோங்க.
பேரன் பேத்திகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
எனக்கு நம் வட்டத்தில் வரும் நம் பாட்டிகள் கீதாக்கா, கோமதிக்கா, ரஞ்சனிக்கா, பானுக்கா, கமலாக்கா, மாதேவி எல்லாரும் நினைவுக்கு வந்தார்கள்!
கீதா
கூட்டுக் குடும்பம் வரம்.
நீக்குபுஷ்பராஜ் ஆறுமுகம் பற்றி எதிலோ எங்கேயோ வாசித்தேனே.
பதிலளிநீக்குஅதானே! யாருக்கு வயசாச்சுன்றேன்!!? வயதானாலும் வயதாகிவிட்டது போன்று நினைக்காமல் இருக்கவேண்டும். உடலுக்குத்தான் வயது. மனதிற்கு இல்லை. மனம் அப்படி இருந்தால் உடலும் தானாகவே இளமையாகிவிடும்!
கீதா
மனதுக்கு என்றும் வயதாவதில்லை!
நீக்குசேட்டைக்காரன் எங்க ஊர்க்காரர் வடிவீஸ்வரம் கிராமம். நான் எம் ஏ படித்த கல்லூரியில் அவரும் படித்திருந்திருக்கிறார். ஒரு வேளை முன்னப்பின்ன இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அப்போது எனக்கு அவரைப் பரிச்சயம் இல்லை.
பதிலளிநீக்குரொம்ப சேட்டை பண்ணுவாராம் கல்லூரியில் அவரே சொல்லியிருக்கிறார்!
வலைப்பக்கம் வந்த பின் ஆவி, கணேஷ் பாலா இவங்க கூட நட்பு ஏற்பட்டப்பதான் பரிச்சயமானார். நல்ல நகைச்சுவையாளர். ஜாலி நபர்.
கீதா
'வீட்டுல எலி வெளில புலி' என்றொரு படம். அதில் எஸ் வி சேகர் தனது மானேஜர் ஜனகராஜ் வீட்டுக்குப்போய் அவர் மனைவியிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் காட்சி நினைவுக்கு வருகிறது!
நீக்குபதிவுகள் மிகவும் நகைச்சுவையுடன் இருக்கும். பட் பட்டென்று தெரிக்கும் நகைச்சுவை. சொல்லாடல் அவருக்குக் கை வந்த கலை அதை வைத்தே நகைச்சுவையில் புகுந்து விளையாடுவார். கொஞ்சம் கிரேஸி ஸ்டைல் எனலாம்.
பதிலளிநீக்குஆனால் இக்கதை அவரது திறமையை அவ்வளவு வெளிப்படுத்தவில்லை என்பது என் அபிப்ராயம். வழக்கமான அவரது நகைச்சுவை வெளிப்படவில்லையோ என்று தோன்றியது.
கடுகு சாரின் அணிந்துரை கிடைக்கப் பெற்றது பாக்கியம். அழகாக எழுதியுள்ளார். உண்மையும் அதுதான். அதுவும் கடைசி வரி.
கீதா
உவமானம் அவரின் ஸ்பெஷல். நான் அவரைப் பார்த்து அதேபோல் முயற்சித்து ஒன்று எழுதினேன். அது எது என்று தெரியவில்லை!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க.. வணக்கம். __/\__
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
குழந்தை தியாவின் திறமைகள் வியக்க வைக்கின்றன. இந்த வயதில் 114 மேடை ஏறி தான் கற்ற திறமைகளை வெளிப்படுத்தும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
வயதை ஒரு பொருட்டாக நினைக்காமல், மனதளவில் இளமையாக இருக்கும் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதை பகிர்வும் அருமை. நல்ல நகைச்சுவையான கதை. சி லஇடங்களில், நானும் மனம் விட்டு சிரித்தேன். கதாசிரியர் சேட்டைக்காரன் அவர்களது கதைக்கு முன்னுரை தந்து பெருமைபடுத்திய கடுகு சார் அவர்களது எழுத்தும் சிறப்பாக உள்ளது. சகோதரர் சேட்டைக்காரன் அவர்கள் கூறியது போல இரட்டை நகைச்சுவையாளர்கள் சேர்ந்திசைத்துத் தந்த சிரிப்பு மழையாக இன்றைய கதைப்பகிர்வு அமைந்திருக்கிறது. பகிர்வுக்கு சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.