29.8.25

இருவரல்ல ஒருவராக இணைந்திருக்கவோ இங்கு இடையில் வந்த தென்றலுக்கு விடை கொடுக்கவோ

 

இன்னும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாத  காதல் காலம் இருக்கிறது பார்த்தீர்களா?  அது ரொம்ப சுவாரஸ்யமான காலம்.  சுகமான சோகங்கள், அன்பான கோபங்ககள், ஆசையான ஏக்கங்கள் என்று கலந்து கட்டி வரும் டீன் மயக்கம்.

நமக்கே நாம் காதலில்தான் இருக்கிறோமா என்று சந்தேகம் வரும்.  ஏக்கம் வரும்.

அந்த மாதிரி ஒரு சூழலில் ஜெமினியும் சாவித்திரியும்.  கண்ணுக்கினிய சாவித்ரி, இளைய ஜெமினி.  காதல் அப்படத்துக்கு இந்தப் படத்துக்கு ஈடு இணை இருக்காது.  ஒரு காட்சியில் ஜமுனாவுடன் ஜெமினியை கற்பனை செய்து பார்த்து சாவித்ரி கட்டிலில் குப்புறப் படுத்து அழுவார்.  அந்தக் காட்சி அப்படியே குஷி படத்தில் காப்பியடிக்கபப்ட்டது.  ஜோதிகா விஜய் மும்தாஜை விபரீதமாக அக்கற்பனை செய்து அதே மாதிரி கட்டிலில் குப்புறப்படுத்து விம்முவார்!

இன்று பகிரும் இந்தக் காட்சியைப் பார்த்துதான் பாஹுபலியில் பிரபாஸக்கு அடிபட்டது மனதில் வலிக்க, அவர் தூங்க வேண்டும் என்று அனுஷ் பாடுவார்.  "கண்ணா நீ தூங்கேடா" என்று பாடுவார்.  சில வாரங்கள் முன் பகிர்ந்திரும்னுதேன்.  இங்கு  ஜெமினிக்கு அடிபட்டது சாவித்ரிக்கு மனதில் வலிக்க அவருக்கு வலி சரியாக சாவித்ரி பாடும் பாடல்.

மிஸ்ஸியம்மா.  மிக அழகான படம்.  எத்தனைமுறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.  மிக இனிமையான பாடல்கள் கொண்ட படம்.

மாயமே நான் அறியேன்   எஸ். ராஜேஷ்வர் ராவ் இசையில் பி லீலா பாடிய பாடல்.  எழுதியிருப்;பவர் தஞ்சை ராமையாதாஸ்.

மாயமே நானறியேன் ஓ….
ண் மதி ராஜா வெண்ணிலா ராஜா
மாயமே நானறியேன் ஹோ….ஓ…
ண் மதி ராஜா வெண்ணிலா ராஜா
மாயமே நானறியேன்

 அழகு நிலாவே உனது மகிமையை
அழகு நிலாவே உனது மகிமையை
அறிந்திருந்தாலும் அனுபவியேனே
அறிந்திருந்தாலும் அனுபவியேனே
மறைந்தே தூவிடும் கலையின் ஜோதியே
மறைந்தே தூவிடும் கலையின் ஜோதியே
மறைமுகமாகவே நானறிவேனே

 மாயமே நானறியேன் ஹோ….ஓ…
ண் மதி ராஜா வெண்ணிலா ராஜா
மாயமே நானறியேன்

 கண்ணில் களிக்கமிடும் கதிரலையாலே
கண்ணில் களிக்கமிடும் கதிரலையாலே
கரைந்திட உள்ளமே கனிந்தேனே
கரைந்திட உள்ளமே கனிந்தேனே
அன்பையே கோரி அருகினில் யாரோ
அன்பையே கோரி அருகினில் யாரோ
அழைப்பது போலே நான் உணர்ந்தேனே

 மாயமே நானறியேன் ஹோ….ஓ…
தன் மதி ராஜா வெண்ணிலா ராஜா
மாயமே நானறியேன்

=============================================================================================

திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், வசனகர்த்தா திரு கலைஞானம் பேட்டியிலிருந்து - ஒரு கிசுகிசு!

கோயில் கூட்டமாக ஆஞ்சநேயர் எதிரே ஒரு வீட்டின் முன்பு நின்றிருந்தார்கள். விசாரித்தபோது... அது டி.ஆர்.மகாலிங்கம் வீடு எனச் சொன்னார்கள்.தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பற்றி பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்டு வந்தார்.ஏதோ ஒரு காரணத்தால் லட்சுமி காந்தன் கொலை செய்யப்பட, பாகவதரும், என்.எஸ்.கே.வும் அந்த வழக்கில் சிக்கிக்கொண்டனர். இதனால் பாகவதர் புகழ் மங்கி வந்தது. பாகவதர் போலவே பாடும் திறன் கொண்ட டி.ஆர்.மகாலிங்கம்,

'ஸ்ரீவள்ளி', 'நாம் இருவர்' படங்கள் மூலம் சினிமா மார்க்கெட்டைப் பிடித்திருந்தார். அதனால் தினமும் ஓரிரு முறை தன் வீட்டு பால்கனியில் நின்று ரசிகர்களைப் பார்த்து கையசைப்பாராம் டி.ஆர்.மகாலிங்கம்.

'மகாலிங்கம் நம்ம மாவட்டத்துக்காரராச்சே.(சோழவந்தான்) அவரைப் பார்த்துப்புடணும்' என்ற ஆவலில் கூட்டத்தில் ஒருவனாக பால்கனியைப் பார்த்தபடி நின்றிருந்தேன்.

அப்பப்பா... என்னவொரு பரவசம். நடிகை எஸ்.வரலட்சுமியுடன் ஜோடியாக பால்கனியில் தோன்றிய மகாலிங்கம் கூட்டத்தைப் பார்த்து கையசைத்தார். வரலட்சுமியும் கையசைத்தார். சில நிமிடங்களுக்குப் பின் உள்ளே சென்றுவிட்டார்கள்.ஏதோ சாதித்துவிட்ட திருப்தியில் கூட்டம் கலைந்தது.

டி.ஆர்.மகாலிங்கம், எஸ்.வரலட்சுமி குறித்து சுவாரஸ்யமான செய்திகள் உண்டு. ஒலிபெருக்கி இல்லாமலேயே கிலோமீட்டர் தாண்டி ஒலிக்கும்படி பாடும் வல்லமை பெற்றவர் கிட்டப்பா பாகவதர். அதே திறமை கொண்ட மகாலிங்கம், கிட்டப்பாவின் புகழை எட்டினார் நாடக உலகில். இப்படி இசையால் சினிமாவில் ஹீரோவானார். இதே இசைத்திறமை எஸ். வரலட்சுமிக்கும் உண்டு. இருந்தாலும் திரையுலகம் அவரை கதாநாயகியாக்கவில்லை. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் டாகவே வந்தார். கற்றாரை கற்றார் காமுறுவதுபோல்... இவர்கள் இருவரும் இசையால் நட்பு வயப்பட்டார்கள். தனது மகன் பெயரில் 'சுகுமார் புரொடக்ஷன்ஸ்' எனும் நிறுவனத்தை தொடங்கி "மச்ச ரேகை' படத்தை தயாரித்து நாயகனாக நடித்த மகாலிங்கம் அதில் எஸ். வரலட்சுமியை படம் தோல்வி.மீண்டும் 'மோகன சுந்தரம்' கதாநாயகியாக்கினார். படத்தை தயாரித்து இதுவும் தோல்வி. மீண்டும் 'சின்னத்துரை' படத்தை தயாரித்தார் வரலட்சுமியை ஜோடியாக்கி னார் . வரலட்சுமியை ஜோடியாக்கி மகாலிங்கம். இதுவும் தோல்விதான்.

இப்படியிருந்தது அவர்கள் நட்பு. மகாலிங்கம் வீட்டிலேயேதான் வரலட்சுமி இருப்பார். திருமதி மகாலிங்கமும் மனப்பூர்வமாக வரலட்சுமியை மதித்தார்.

ஆனாலும் இவர்களைப் பற்றி அப்போதைய சினிமா பத்திரிகைகள் கிசுகிசு எழுதவில்லை. காரணம்... 'லட்சுமிகாந்தன் கொலை' பாதிப்புதான்.

பின்னாளில் எஸ்.வரலட்சுமி, 'என் வாழ்க்கையில் நான் சந்தித்ததெல்லாம் துரோகமும்,ஏமாற்றமும்தான்' என என்னிடம் மனம்விட்டுப் பேசுவார்

என்றோ... மகாலிங்கத்திடம் கடனை வசூலிக்க நான் போவேன் என்றோ... அப்போது நினைத்தாவது பார்த்திருக்க முடியுமா? அதையெல்லாம் அந்தந்த சமயங்களில் சொல்கிறேன்.

'மச்சரேகை'யில் இருவரும் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் ... பால்கனில் அவர்களைப் பார்க்கிறேன். ஒரு தேவகுமாரனை ஒரு தேவதையுடன் சேர்த்து பார்த்துவிட்ட பிரம்மை எனக்கு. முதன்முதலாக நான் நேரில் தரிசித்த நட்சத்திரங்கள் இவ்விருவரும்தான்.

==========================================================================================

A K சுப்பிரமணியன் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த படம் வீட்டு மாப்பிள்ளை.  AVM ராஜன், சாவித்ரி, பிரமீளா நடித்திருந்த இந்தப் படத்துக்கு இசை A M ராஜா.  

வாலியின் பாடல்.  A M ராஜா மற்றும் ஜிக்கி பாடியுள்ள பாடல்.  பாடியுளளவர்கள் பெயர் வரிசையில் மலேசியா வாசுதேவ் என்று காணபப்டுகிறது.  அவர் இதில் என்ன பாடல் பாடினார் என்று பார்க்க வேண்டும்.  குமாஸ்தாவின் மகள் படம்தான் அவரின் முதல் பாடல் இடம்பெற்ற திரைப்படம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

A M ராஜா இனிமையான, திறமையான இசை அமைப்பாளர்.

A M ராஜா : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்……
ஜிக்கி  : ஆ…ஆ…..ஆ..அ……ஆஹ்……ஆ…..

ஜிக்கி : ராசி நல்ல ராசி
உன்னை மாலையிட்ட மங்கை மகராசி
ராசி நல்ல ராசி
உன்னை மாலையிட்ட மங்கை மகராசி
உன் கை ராசி

A M ராஜா : ராசி நல்ல ராசி
உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி
உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி
உன் கை ராசி…..

A M ராஜா : ராசி நல்ல ராசி
உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி
உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி
உன் கை ராசி…..

ஜிக்கி : நீ பறித்த பூவில் நல்ல கள்ளிருந்தது
அதை நீ குடிக்க வந்த போது முள்ளிருந்தது
நீ பறித்த பூவில் நல்ல கள்ளிருந்தது
அதை நீ குடிக்க வந்த போது முள்ளிருந்தது

A M ராஜா : போக போக பூவின் உள்ளம் மாறிவிட்டது
போக போக பூவின் உள்ளம் மாறிவிட்டது
காயம் பட்ட மேனி தொட்ட போது ஆறிவிட்டது
காயம் பட்ட மேனி தொட்ட போது ஆறிவிட்டது

A M ராஜா : ராசி நல்ல ராசி
உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி
உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி
உன் கை ராசி…..

A M ராஜா : மீனிருக்கும் கண்களுக்குள் நானிருக்கவோ
இதழ் மலரும் போது மயங்கி வந்து தேனெடுக்கவோ
மீனிருக்கும் கண்களுக்குள் நானிருக்கவோ
இதழ் மலரும் போது மயங்கி வந்து தேனெடுக்கவோ

ஜிக்கி : இருவரல்ல ஒருவராக இணைந்திருக்கவோ
ஓ……இருவரல்ல ஒருவராக இணைந்திருக்கவோ
இங்கு இடையில் வந்த தென்றலுக்கு விடை கொடுக்கவோ
இங்கு இடையில் வந்த தென்றலுக்கு விடை கொடுக்கவோ

ஜிக்கி : ராசி நல்ல ராசி உன்னை
மாலையிட்ட மங்கை மகராசி
உன் கை ராசி

A M ராஜா : ராசி நல்ல ராசி
உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி
உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி
உன் கை ராசி…..

இருவர் : அ…ஆ….ஆ….ஆ…..ஆஹா…..
ம்ம்…..ம்ம்….ம்ம்……ம்ம்ம்ம்ம்ம்….

15 கருத்துகள்:

  1. இன்றைய இரண்டு பாடல்களும் சூப்பர் பகிர்வு

    என் காலத்துக்கு முந்தையது என்றாலும் கேட்டிருக்கிறேன். அம்மாவுக்கும் பிடித்த பாடல்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை! என் தாத்தா மிகவும் விரும்பி கேட்கும் பாடல்கள். அவர் நினைவாகத்தான் நானும் இதை பகிர்ந்தேன். ஆலங்குடியில் இருந்து ஸ்ரீராம்!

      நீக்கு
  2. படங்கள் தொடர்ந்து எடுத்து கஷ்டப்பட்டு சம்பாதித்ததை இழந்த திரையுலகினர் அனேகம். நேற்றுதாற் ஏவிஎம் ராஜனைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்

    அப்போதே மதமாற்றக் கும்பல் ஆக்டிவாக இருந்திருந்தால் மகாலிங்கம் போன்றவர்களுக்கும் பணத்தை அள்ளிக்கொடுத்து மதமாற்றம் செய்திருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  3. அப்போது இல்லை என்றும் உங்களால் உறுதியாக கூற முடியுமா நெல்லை? இருந்திருக்கும் . நமக்குத் தெரிந்திருக்காது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்க வாய்ப்பு குறைவுன்னு நினைக்கிறேன். இப்போதான் மதுராவை அடைந்தோம்

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. இரண்டு பாடல்களும் பிடித்த பாடல் . அருமையான பாடல்கள் ஶ்ரீராம் நன்றி

    பதிலளிநீக்கு
  6. ஆலங்குடியில் இருக்கும் ஸ்ரீராமிற்கு!!!!!!! ஹாஹாஹா உங்களால் இப்ப மாற்ற முடியாது என்று தெரியும் இருந்தாலும்...

    //'சுகுமார் புரொடக்ஷன்ஸ்' எனும் நிறுவனத்தை தொடங்கி "மச்ச ரேகை' படத்தை தயாரித்து நாயகனாக நடித்த மகாலிங்கம் அதில் எஸ். வரலட்சுமியை படம் தோல்வி.மீண்டும் 'மோகன சுந்தரம்' கதாநாயகியாக்கினார். படத்தை தயாரித்து இதுவும் தோல்வி.//

    'சுகுமார் புரொடக்ஷன்ஸ்' எனும் நிறுவனத்தை தொடங்கி "மச்ச ரேகை' படத்தை தயாரித்து நாயகனாக நடித்த மகாலிங்கம் அதில் எஸ். வரலட்சுமியை கதாநாயகியாக்கினார். படம் தோல்வி. மீண்டும் 'மோகன சுந்தரம்' படத்தை தயாரித்து இதுவும் தோல்வி.

    இப்படி வர வேண்டுமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  7. முதல் பாடல் அதிகம் கேட்டதில்லை என்றாலும் கேட்டதுண்டு. கேட்கும் போது ரசித்த, ரசிக்கும் பாடல்.

    என் சித்திப்பாட்டி பாடித்தான் இந்தப் பாட்டு திரைப்படப் பாடல் என்று தெரிந்தது. அவங்க எல்லாம் ரொம்ப நல்லா பாடுவாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ராசி பாட்டு நிறைய கேட்டிருக்கிறேன். அக்காலத்து பாடல்களில் பாருங்க பின்னிசை தாண்டி அழகாக கேட்கும் குரல்கள் சொற்கள் புரியும் அளவில் உச்சரிப்பு.
    இரண்டுமே மிக அருமையான பாடல்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அந்த காலக் கிசுகிசு இப்போது எதற்கு?...

    பதிலளிநீக்கு
  10. இனிய பாடல்கள்.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  11. கிசுகிசு என்ற வார்த்தையை பரப்பி விட்டது அந்த வார இதழ் தானே..

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் இரண்டுமே அருமையான பாடல்கள். வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்துப் பாடல்கள். அதுவும் மிஸ்ஸியம்மா படப் பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆகிய பாடல்கள். பாடல்கள் பகிர்வுக்கும், அதன் விளக்கத்துற்கும், புரபல நடிகர் டிஆர் மஹாலிங்கம் அவர்களைப் பற்றிய தகவல்களுக்கும் மிக்க நன்றி. எல்லாவற்றையும் படித்தும், பாடல்களையும் ரசித்து கேட்டுக் கொண்டேன். நன்றி.

    ஆலங்குடி பிரயாணம் நல்லபடியாக இறை தரிசனம் கிடைத்திருக்குமென நினைக்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!