நெல்லைத்தமிழன் :
இனி நோயாளிகளை 'மருத்துவப் பயனாளிகள்' என்று அழைக்கவேண்டும் என்று அரசு சொல்கிறதே. இனி திருடர்களை, 'செல்வப் பயனாளி' என்று அழைக்கவேண்டுமா? கொலைகாரர்களை, 'விரைவில் உயிர் பறிக்கும் தொழிலாளி' என்றால் சரியாக இருக்குமா? ஆமாம் 'செல்வத்தை நகர்த்துபவர்' என்பது கொள்ளைக்காரனுக்குச் சரியாக வருமா?
# பெயர் மாற்றம், சிலை அமைத்தல், மணிமண்டபங்கள் இவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதில் திருப்தி அடைபவர்கள் நிறைய இருப்பார்கள் போலும்.
(கொள்ளைக்காரர்களை செல்வத்தை பறிப்பவர்கள் என்று தானே சொல்ல வேண்டும் ?)
இன்னமும் பிளாகில் பலர் சர்க்கரைப் பொங்கல் எப்படி செய்வது, வெண் பொங்கல் எப்படிச் செய்வது என்றெல்லாம் செய்முறைகள் போடறாங்களே. இவற்றிலெல்லாம் ஒவ்வொரு வீட்டிற்கும் என்ன என்ன வித்தியாசங்கள் வந்துவிடப்போகிறது?
# சோறு வடிப்பது எப்படி என்று புத்தகம் போட்டால் விற்கும் காலத்தில் போய் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்களே !
# ஒருவரை நம் மனம் மதித்தால் அவரது சொல்லுக்கு நம்மிடம் ஒரு கூடுதல் மரியாதை இருப்பது இயல்பானது தான். Packaging a product தத்துவம்
& இன்னொருவரை இறக்குவதற்கு கூட இருக்கலாம்!
இரக்கிறவர்கள், சரியானவர்கள்தானா என்று கவனிப்பது நம் வேலையா அல்லது அவர்களுக்கு தானம் செய்வது நம் கடமையா?
# இரப்போர்க்கு இல்லை என்னாது ஈதல் அறம் என்று நமக்கு போதித்திருக்கிறார்கள். மோசடிகள் அதிகமாகி விட்ட இந்த நாட்களில் இரப்பவர்களையும் சரிபார்த்துத்தான் தானம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஏமாளி என்ற பட்டத்தை யார் விரும்புவார்கள் ?
& நடிகர் ராம்கியின் சமீபத்திய பேட்டியில் அவர் எங்கே யாசகர்களைப் பார்த்தாலும் ஏதாவது கொடுத்து விடுவாராம். நண்பர்கள் இந்த யாசகர்கள் போலி, குழந்தையை வாடகைக்கு எடுப்பார்கள் என்று சொன்னபோது கூட, தர்மம் செய்வது என் விருப்பம். நான் விரும்புவதைச் செய்கிறேன். அவர்கள் அதை எப்படி செய்கிறார்கள் என்று பார்க்க மாட்டேன் என்று சொல்லி இருந்தார். ஏற்க முடியாத கருத்தாக இருந்தது!
சில இனிப்பு தயாரிப்பாளர்கள், மிக அதீத விலையில் ஆன்லைனில் இனிப்புகளை விற்கிறார்கள். எப்படி இவ்வளவு கொள்ளையடிக்க இவர்களுக்கு மனம் வருகிறது என்று தோன்றுகிறது. உதாரணமா, இருட்டுக்கடை அல்வா, அங்கு போய் வாங்கினால் கிலோ 400 ரூபாய். ஆன்லைனில், 400 கிராமே 550 ரூபாய். இது போல பல கடைகள். இப்படி பணம் வாங்கினால் அது செரிக்குமா?
# இந்த மாதிரி விலையில் பெரும் பங்கை கொண்டு வந்து கொடுக்கும் நிறுவனங்கள் எடுத்துக் கொள்வதாகத் தெரிகிறது. அரை கிலோ அல்வா நீ போய் வாங்கி வந்தால் உனக்கு 150 ரூபாய் அதிக செலவாகும். அதில் 80 ரூபாயை எனக்குக் கொடு என்பது தான் இதற்கான தர்க்க ரீதியான காரணம்.
அதிகம் விலை வைத்தால் அந்தக் காசு செரிக்குமா என்ற கேள்விக்குப் பல பரிமாணங்கள் உண்டு. 'வாங்குபவர் ஒப்புக்கொள்ளும் வரை விலையை உயர்த்திச் சொல்லு' என்பதுதான் சாதாரணமாக கார்ப்பரேட் மனப்பாங்கு. அந்த லாபத்தில் ஓரளவு நம் கைக்கு வந்து சேரும் போது நமக்கு அது அநீதியாகத் தெரிவதில்லை.
& உள்ளூரிலேயே ஸ்விக்கி, ஜோமேட்டோவில் வாங்கும்போது ஆகும் கூடுதல் செலவு பற்றி அறிவீர்களா? எவ்வளவு வித்தியாசம் என்று பார்த்திருக்கிறீர்களா?
பானுமதி வெங்கடேஸ்வரன் :
உங்கள் சின்ன வயதில் உங்கள் தாத்தா,பாட்டியைப் பார்த்து நீங்கள் சிரித்தது போல உங்கள் பேரக்குழந்தைகள் உங்களைப் பார்த்து சிரிக்கும் விஷயம் உண்டா? அதே போல உங்கள் சின்ன வயதில் வீட்டுப் பெரியவர்கள் அதட்டிய விஷயங்களுக்காக நீங்கள் சிறியவர்கள் இப்போது அதட்டுவது/விரட்டுவதுண்டா?
# ஒரு சோகமான விஷயம் என்னவென்றால் நான் எனது தாத்தா பாட்டிகளுடன் இருந்ததே இல்லை. அவர்கள் ஒன்று முன்பே காலமாகி விட்டார்கள் அல்லது இருந்த ஒரு தாத்தா அதிகம் தொடர்பில் இருந்தது இல்லை.
ஆனாலும் இப்போதும் என் பேரக் குழந்தைகள் (?) (எல்லாம் 28 வயதுக்கு மேல்.) என்னை பார்த்துச் சிரிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான்.
சினிமாவில் நீங்கள் ரசித்த நடன போட்டிக் காட்சிகள் எவையெவை?
# வ.வா தவிர வேறு இருப்பதே தெரியாது.
சிவாஜி கணேசன் ஏதோவொரு படத்தில் ஆடியிருப்பதாக நினைவு. வெகு சாதாரணம்.
& கமலின் சில நடனங்கள், பிரபுதேவா, ஆனந் பனாபி ஆகியோரின் நடனங்கள், ஹிந்தியில் ஆஷா ப்ரேக், மும்தாஜ், மாதுரி தீக்ஷித் போன்றோரின் நடனங்கள் ரசிக்கத்தக்கவை.
பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நன்றி சொன்னதுண்டா?
# பெற்றோர்களுக்குச் சொன்னதில்லை. மற்றவர்களுக்குப் பலமுறை சொன்னதுண்டு.
& சொல்வதுண்டு.
= = = == = = =
படமும் பதமும்
நெல்லைத்தமிழன் :
தாய்லாந்தில் அலுவலகத்தின் சார்பில் ஒரு கான்ஃபரன்ஸில் கலந்துகொண்டேன். ஒரு விதிவிலக்காக, சென்னையில் இருந்த மனைவியையும் அங்கு வரச் சொன்னேன் (காரணம், எனக்கு வருடாந்திர விடுமுறை எடுக்க அப்போது அவகாசமில்லை. அதனால் கம்பெனியில் மனைவிக்கான டிக்கெட்டை இப்படி எடுத்துக்கொள் என்று சொன்னார்கள்). பல்வேறு இடங்களையும் கலாச்சாரத்தையும் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. சொகுசுப் படகில் நாங்கள் (கான்ஃபரன்சுக்கு வந்திருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்) சென்றபோது, அங்கு மசாஜ் செய்துகொள்ளும் வாய்ப்பும் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு படம்தான் இது.
மஞ்ச கமெண்ட் ம&:
ஹூம்! இதெல்லாம் நான் Travel XP சானல்ல (World Best SPA) பார்த்து ஜொள்ளு விட்டதோட சரி. ஆனாலும் இவருக்கு மச்சம் ஜாஸ்தி!
அதற்கு முந்தைய நாள், கடலில் Coral, Color fishes பார்க்கலாம் என்று சொன்னவுடன் நான் கடலுக்குள் (படகிலிருந்து) இறங்கிவிட்டேன். அந்த அனுபவம் தனி. இருந்தாலும் ரிஸ்க் என்பது இருக்கிறதுதானே.
நால்வரும் ஆடிய விளையாட்டு ஊறுகாய் பந்து! (Pickle ball)
புதன் புத்தன் புதன் ஆகியது, (புத்தன் = புதிய). உலகம் சுற்றும் வாலிபன் (நெல்லை) தயவில் பிகினி ஆண்ட்டி, மசாஜ் கேர்ள்ஸ் என்று ஒரே குமுதம் தான். ஆனால் அரசு பதில்கள் போன்று பதில்கள் அமையவில்லை.
பதிலளிநீக்குJayakumar
நன்றி!
நீக்குஜெயகுமார் சார்.. நான் சந்தித்த சிலவற்றை எழுதினால் கேஜிஜி சார் அனுபவத்தை வெளியிடுவார். படங்கள் பற்றிச் சொல்வதற்கில்லை
நீக்கு//ஹூம்! வாழ்க்கையில் மூன்று மணி நேரம் வெட்டியாக உட்கார்ந்து 2000 ரூபாய் செலவழித்த ஒரே பிரகிருதி நான்தான்! //
பதிலளிநீக்குஓய்வடைவதற்கு முன் ஆபீஸில் மூன்று மணி நேரம் வெட்டியாக உட்கார்ந்திருந்து 2000 ரூபாய் சம்பாதித்ததற்கு பின் விளைவோ?
:))))
நீக்குஇன்றைய பகுதி எல்லாமே ரசிக்கும்படி இருந்தது. கடைசிப் பகுதி கௌதமன் சாருடையதா?
பதிலளிநீக்குKGG பக்கம்?
நீக்குஸ்விக்கி ஸொமட்டோ வில் விலை அதிகமா? அதுல விலை பார்க்கக்கூடாது. சௌகரியத்துக்கான விலை அது. இருட்டுக்கடை மாதிரி கொள்ளையில்லை என்பது என் எண்ணம்
பதிலளிநீக்குஅப்படியும் இருக்கலாம்!
நீக்குஅன்னைக்கு டக்குனு எங்களுக்கெல்லாம் ஆர்டர் பண்ணிட்டீங்க அதுவே நீங்கள் போய் வாங்கிட்டு வரணும்னா எவ்வளவு நேரம் வீண். பயணத்தில் பணம் வேஸ்ட் இல்லையா?
நீக்கு???? oh you mean Zepto order?
நீக்குஸ்விக்கியில் எல்லா உணவகங்களிலும் கமிஷன் கேட்பதில்லை. சில குறிப்பிட்ட உணவகங்களில் மட்டுமே/ அதோடு டிப்ஸ் கொடுப்பதும் நாம் கொடுக்க வேண்டிய பணத்தில் சேர்த்துடுவாங்க. 150 ரூபாய்க்கு உணவு வாங்கினால் 15 ரூபாயிலிருந்து 30 ரூ வரை டிப்ஸ் இருக்கும். மொத்தம் 180 பணம் கொடுக்கச் சொல்லுவாங்க. ஆகையால் நான் ஸ்விகி டெலிவரி செய்பவர்களுக்குத் தனியா எதுவும் கொடுத்ததில்லை/ கொடுக்கவும் மாட்டேன்.
நீக்குபடம் எடுக்கலையா... ஐ.. கதை... - இல்லை.. உண்மையைத்தான் எழுதியிருக்கேன். போட்டோ எடுக்கணும்னு எண்ணம் வந்தாலோ இல்லை வரவேற்கிறோம் என்ற எண்ணம் வந்தாலே பெண்களுக்குத் தெரிந்துவிடும் என நினைக்கிறேன். அவங்க நுண்ணறிவு அப்படி
பதிலளிநீக்குஅதே, அதே!
நீக்குநெல்லையின் பய்ணங்களும் அனுபவங்களும் வியக்க வைக்கின்றன. ஆனாலும் அவர் குணம் மாறாமல் அப்படியே கலாசாரத்தைக் கடைப்பிடிக்கும் மனிதராகவே தொடர்ந்து கொண்டிருப்பதற்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாராட்டுகள், ஆசிகள் நெல்லை.
நீக்குநடிகர் ராம்கியின் கருத்தில் உண்மை இருக்கிறது. பத்து பேருக்கு தானம் செய்தால் ஒரு உண்மையானவர் இருந்துவிட்டால்
பதிலளிநீக்குஆம், சரிதான்!
நீக்குநாங்க நூறு, இருநூறுக்குச் சில்லறையாக மாற்றிக் கொடுத்துடுவோம். யாரானும் ஒருத்தர் அல்லது இருவரிடம் கொடுத்துப் பகிர்ந்து கொள்ளச் சொல்லிடுவோம்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குகந்தா முருகா சரணம்
நீக்குநீரைக் காய்ச்சுவது எப்படி என்பதும் அற்புதமே...
பதிலளிநீக்கு:)))))
நீக்குஅதுதானே? அழல் அமுதத்தை மறக்க முடியுமா?
நீக்குவீட்டுக்கு வீடு என்ன?..
பதிலளிநீக்குஒரே வீட்டிற்குள்ளும் மனதிற்கு மனம் கைக்கு கை என்று சர்க்கரைப் பொங்கல் சுவையில் மாறுபடுவதுண்டு..
ஆம்!
நீக்குஉண்மை. என் மாமியார் செய்யும் சர்க்கரைப் பொங்கலில் பாசிப்பருப்பு மட்டுமில்லாமல் கடலைப்பருப்பும் அரை வேக்காடில் சேர்ப்பாங்க. நறுக், நறுக் எனக் கடிபடும். அதோடு பாலே விட மாட்டாங்க. பெயருக்கு ஒரு கரண்டி தான். ஆனால் எனக்கோ 200 கி அரிசிக்குப் பாசிப்பருப்பு மட்டும் பாதிக்குப் பாதி வறுத்து கொண்டு குறைந்தது அரை லிட்டருக்கும் மேல் பால் ஊற்றி வேக வைத்தால் தான் அது சர்க்கரைப் பொங்கல்னு சொல்லுவேன். முந்திரிப்பருப்போடு திராக்ஷைப்பம், ஜாதிக்காய் நெய்யில் வறுத்து, குங்குமப் பூ, பச்சைக்கற்பூரம்னு வாசனைப் பொருட்களும் சேர்த்தால் தான் பொங்கல் பண்ணினாப்போல் இருக்கும்.
நீக்குகீதா அக்கா நீங்கள் செய்வது அக்காரவடிசல். அதற்குதான் பால் சேர்க்க வேண்டும். சர்க்கரை பொங்கலுக்கு கிடையாது. என் புகுந்த வீட்டில் கூட சர்க்கரைப் பொங்கலுக்கு ப.பருப்போடு கொஞ்சம் கடலைப் பருப்பும் சேர்ப்பார்கள்.
நீக்குபுதன் நாள் ரசனை.
பதிலளிநீக்குநெல்லைத் தமிழன் படங்களுடன் சுவாரசியம்.
Kgg பக்கம் பேரன்களுடன் கழித்த இனிய பொழுது கண்டோம்.
நன்றி.
நீக்குஉண்டாகப்பட்டவர்க்கு
பதிலளிநீக்குகோடானுகோடி..
ராம்கி சொல்வது அவரளவில் சரியே...
ஆம், ஆம்!
நீக்குஇங்கே பக்கத்தில் காவிரி நதிக்கரையில் தானப் பயனாளிகள் பத்தரை மணிக்குப் பிறகு சாப்பாட்டுக்கான சீட்டு கேட்கின்றனர்.. உணவகத்தினுள் சென்று சாப்பாட்டுக்கான சீட்டுகளை வாங்கிய என்னை உணவகத்தினுள்ளேயே நுழைந்த தானப் பயனாளிகள் சிலரது கூச்சல்..
பதிலளிநீக்குஎனக்கும் எனக்கும் என்று..
ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்.. என்பதே எனது சூழ்நிலை... இப்படியாக
நான் இரண்டு சீட்டுகளை வாங்கிக் கொடுத்து விட்டு நகர்ந்தபோது பின்னால் இருந்து வசவுகள்... எவ்வித சலனமும் இன்றி உணவக நிர்வாகி..
கோயிலுக்குள் நுழைந்த போது எனக்குள் ஞானம்..
நெல்லை தமிழர் மாதிரி கௌதம் ஜி மாதிரி பத்து பேர் வந்து சாப்பாட்டுக்கான சீட்டுகளை தானம் செய்தால் தானம் வாங்கியவரின் கதி ?..
அந்தச் சீட்டுகளில் அன்றைய தேதியும் இருந்தது.
சாப்பாட்டுக்கான சீட்டுக்களில் மறு விற்பனை உள் குத்து இருப்பதாக பட்சியின் குரல்..
தர்மம் செய்யப் போய் ஏமாந்து விட்டாயே.. என்று ரெண்டு நாட்களாக மனதிலில் இரைச்சல்...
நல்ல விடை கொடுங்களேன்!.
சரியாகப் புரியவில்லை.
நீக்குyessssssu
நீக்குஉணவகத்தினுள்ளேயே சூழ்ந்து கொண்டனர் யாசகப் பயனாளிகள்..
பதிலளிநீக்குஅதாவது, உணவகத்தில், நாம் காசு கொடுத்து வாங்கும் சாப்பாட்டு டோக்கனை அவர்கள் இலவசமாக கொடுக்கச் சொல்லி நம்மிடம் கேட்கிறார்களா?
நீக்குசாப்பாட்டு சீட்டு தான் வேண்டும் என பிடிவாதம்
நீக்குகாலை எட்டு மணிக்குக் கூட காலை உணவை ஏற்பதில்லை.. மதிய சாப்பாட்டிற்கான டோக்கனை வாங்கிக் கொடுக்கச் சொல்லி யாசகம்.
பதிலளிநீக்குஒருவன் கையில் பத்து டோக்கன் சேர்ந்து விட்டால் அதை பாதிக்குப் பாதி பணமாக மாற்றிக் கொள்வது.
புரிகிறதா தொழில் நுட்பம்!?.
படமும் பதமும்
பதிலளிநீக்குஇப்படியும் இருக்கலாம்.
படமும் பயமும்
உண்மையில் மருத்துவப் பயனாளிகள் யார்?!
பதிலளிநீக்குதீவிர சிகிச்சை பலனளிக்கா விட்டால் பயன் யாருக்கு?.
பதிலளிநீக்குஇப்படியே போனால் எது எதற்கோ பயனாளி என்று சொல்லியாக வேண்டும்
பதிலளிநீக்குஎங்க அண்ணன் நெல்லை .....enjoy maadi தான் ஹாஹாஹா...கை கொடுக்க மாட்டென்னுட்டு தோள் கொடுத்து..ஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
நெல்லை இதுக்கு மசாஜ் பயனாளிகள்..ஓ மசாஜ் ஆங்கிலம்....தமிழ்ல என்ன?
நீக்குகீதா
முகநூலில் வரும் பிக்கில்ஸ் காமெடி எனக்கு மிகவும் பிடிக்கும். ஊறுகாய்ப் பந்துனு படிச்சதும் அதான் நினைவில் வந்தது.
பதிலளிநீக்குகேஜிஜிக்குப் பயனாக இல்லைனாலும் அவர் பேரன்கள், மகன் ஆகியோருக்குப் பிடிச்சிருக்குமே அந்த விளையாடும் இடம்.
பதிலளிநீக்குஎங்க சின்ன வயசிலே தாத்தா, பாட்டியைப் பார்த்து வியந்திருக்கோம். சிரித்ததில்லை. எங்க காலத்தில் எல்லாம் பெரியவங்களைக் கேலி செய்து சிரிக்க முடியாது. பெற்றோர் கண்டிப்பு அதிகமாக இருக்கும். தாத்தா, பாட்டிக்கு உதவிகள் செய்வோம். அவங்க எங்களை அதட்டி வேலை வாங்குவாங்க. அம்மாவின் அம்மா என் பெரியம்மா பெண், நான், என் மூத்த மாமா பெண் மூவருக்கும் அன்றாட வேலைகளைப் பிரிச்சுக் கொடுப்பார். யாரும் வேலை செய்வதிலிருந்து தப்பிக்க முடியாது.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகேளவிகளும் , பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநெல்லைத்தமிழன் படஙு்களும் விவரங்களும் அவர் அனுபவங்களை சொன்ன விதமும் அருமை.
கெளதமன் சார் பேரன்களுடன் மகிழ்வாய் சென்ற இடங்களில் எடுத்த காணொளிகள், பகிர்ந்து கொண்ட விவரங்கள் அருமை.
பேத்திகள் மூவருமே அம்பேரிக்கக் குடிமக்கள். அவங்க கஷ்டப்பட்டுத் தமிழைப் புரிஞ்சுக்குவாங்க என்பதால், நான் அவங்க அம்பேரிக்க ஆங்கிலத்தைக் கஷ்டப்பட்டுப் புரிஞ்சுக்கறதாலேயும் சிரிக்க நிறையவே விஷயம் இருக்கும். நான் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசி வாய்ஸ் மெசேஜ் கொடுத்துடுவேன். அவங்களும் ஆங்கிலத்தில் பதில் கொடுப்பாங்க. கு.கு. கஷ்டப்பட்டுத் தமிழில் ஏதானும் ஒரு வார்த்தை பேசும். ஆனால் சத்யவான், சாவித்ரி பத்தி, லிட்டில் கிருஷ்ணா, நவராத்திரிக் கொலு, தீபாவளி, கார்த்திகை தீபம், பொங்கல், (இந்தியாவின் தாங்க்ஸ் கிவிங் டே நு அறிமுகம் செய்திருக்கேன். அதுக்கு இவற்றில் பரிச்சயம் உண்டு. ஆர்வமாய்க் கேட்டுக் கொள்ளும்
பதிலளிநீக்குஅதற்கு முந்தைய நாள், கடலில் Coral, Color fishes பார்க்கலாம் என்று சொன்னவுடன் நான் கடலுக்குள் (படகிலிருந்து) இறங்கிவிட்டேன். அந்த அனுபவம் தனி. இருந்தாலும் ரிஸ்க் என்பது இருக்கிறதுதானே.//
பதிலளிநீக்குஉங்க பக்கத்துல இருக்கறவரும் உங்களை மாதிரி கன்னி முயற்சியா இல்லை கைடா?
ஆழம் இருக்குமே இல்லையா? கால்கள் தரையைத் தொடும்படி இருக்காதே.
நல்ல அனுபவம்.
கீதா
நெல்லை, படங்கள் எல்லாம் சூப்பர்.
பதிலளிநீக்குஉங்கள் அனுபவங்களும்தான்!!!!!!!!!!!!!!!!!!! குறிப்பாக......ஹாஹாஹாஹாஹா
கீதா
நெல்லை, ஒவ்வொரு வீட்டிலும் வித்தியாசப்படும் ஏன் ஒரே வீட்டிலேயே கூட அதுவும் கர்நாடகா பொங்கலுக்கும் தமிழ்நாட்டுப் பொங்கலுக்கும் வித்தியாசம் உண்டு.
பதிலளிநீக்குவடக்கே கிச்சரின்னு அதுல காய்கள் போட்டுச் செய்வதுண்டே.
சரி உங்களை இழுக்காம விட மாட்டேன்.....எனக்குத் தூக்கம் வராது.....தோசை எல்லார் வீடுகளிலும் செய்வதுதான் அதுவும் காலம் காலமாக,....ஆனால் ஹோட்டல் தோசைன்னு நீங்க ஆர்வமாகச் சாப்பிடறீங்களே!!!!!!
கீதா
கௌ அண்ணா 2000 உங்களுக்கு வேஸ்டாகத் தோன்றலாம். (சும்மா பத்தி ஒரு அழகான ஃபார்வேர்ட் எபி வாட்சப் குழுமத்தில் வந்திருந்தது இங்க அதை கோட் பண்ணிக்கலாம்)...உங்கள் அனுபவங்கள் சூப்பர். அதுவும் பேரன்களோடு 10னிமிடம் விளையாடினீங்களே அது நல்ல தருணம் இல்லையா!
பதிலளிநீக்குஆனால் குழந்தைகளுக்கு இப்பலாம் என விளையாட இடம் இருக்கு? நாம் விளையாடின கிட்டிம்புல், பாண்டி, ஓட்டம் எல்லாம் இப்ப எங்க விளையாடுவது? பெரிய அபார்ட்மென்ட் கம்யூனிட்டிகளில் இருக்கும். ஆனால் அங்கு எல்லாராலும் குடியேற முடியாது.
இது எப்பவாச்சும்தானே செலவு...
கீதா
கௌ அண்ணா, பிக்கிள் பால் என்பது, டேபிள் டென்னிஸ், பேட்மின்டன், டென்னிஸ் மூன்றும் கலந்த ஒன்று என்று நினைக்கிறேன். பந்துகளில் ஓட்டைகள் இருக்கே. அப்புறம் paddles கட்டியாக இருந்ததா?
பதிலளிநீக்குகீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
இன்றைய பதிவு அருமை. கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. சகோதரர் நெல்லைத்தமிழர் அவர்கள் பகிர்ந்த படங்களும், அதன் விளக்கங்களும் நன்றாக உள்ளது.தைரியமாக அவர் கடலில் குதித்து ரிஸ்க் எடுத்தமைக்கு பாராட்டுக்கள்.
தங்கள் பக்கத்து அனுபவங்களும், சுவாரஸ்யமாக உள்ளது. ஆனால் விளையாடுவதற்கு உண்டான கட்டணம் அதிகந்தான். ஆனாலும் உங்கள் குடும்பம் முழுவது ம் மகிழ்ந்து விளையாடி இருப்பார்கள்.
இதுபோல், நாங்கள் குடும்பத்துடன் மைசூர் செல்லும் வழியில் ஒரு தீம் பார்க் சென்றோம் அங்குள்ள நீர் விளையாட்டுகளில் குழந்தைகள் விளையாட ஆர்வமாக கலந்து கொண்டனர் அதில் எனக்கென்று 1000 ரூபாய்க்கு மேல் எடுக்கப்பட்ட கட்டணம் வேஸ்ட்தான். ஒரு போட்டோகிராபராக அவர்களை படம் எடுத்தபடி மதியத்திலிருந்து மாலை வரை அங்கு சுற்றி வந்தேன். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
JKC Sir சொன்னது போல புதனின் புது அவதாரத்தை வரவேற்கலாம். ஆனால் ஒரு சின்ன பிரச்சனை வியாழனுக்கும் பதனுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய் விடும். கேள்வி பதில்கள் ஸோ ஸோதான். அதற்கு உங்களை ஒன்றும் சொல்ல முடியாது, கேள்விக்கு ஏற்றபடிதானே பதில்கள் இருக்கும். நெல்லை, பா.வெ. தவிர மற்றவர்களும் கேள்வி கேட்க வேண்டும். சிறந்த கேள்விக்கு பரிசு உண்டு என்று அறிவித்து பாருங்களேன்.
பதிலளிநீக்குவெட்டியாக எங்கே இருந்திருக்கிறார்கள்? புகைப்படம்,வீடியோஎடுத்திருக்கிறீர்கள், அதைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு