7.12.25

ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் மியூசியம்-லண்டன் 3/3 :: நெல்லைத்தமிழன்

 

நான் லண்டனில் ‘நம்பினால் நம்புங்கள்’ மியூசியத்தில் கண்டவற்றை புகைப்படத் தொகுப்பாக உங்களுடன் கடந்த இரண்டு வாரங்களாகப் பகிர்ந்துகொண்டிருந்தேன். அதன் இறுதிப் பகுதி இந்த வாரம்.

இந்த வாரத்தில் ஆரம்பத்தில் சில பல படங்கள் தண்டனை சம்பந்தப்பட்டது. இப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்வதற்காக இவற்றைத் தொகுத்து அங்கு காட்சியப்படுத்தியிருக்கிறார்கள்.

தற்காலங்களில் இந்த மாதிரி கொடூர தண்டனைகளெல்லாம் கிடையாது. சௌதியில் மாத்திரம் இன்னமும், பொதுவெளியில் குற்றவாளியின் தலையை வெட்டும் தண்டனை இருக்கிறது. அமெரிக்காவிலும் பிலிப்பைன்ஸிலும் கொடூர கொலையாளிக்கு மின்சாரத்தினால் கொல்லும் வழக்கம் இன்னும் இருக்கிறது. நம்ம ஊரில், ரொம்ப நாளாக ஆராய்ந்து, கொலைக்குற்றம் செய்தான் என்று தெரிந்தாலும் பலவித வாய்ப்புகள் (மேல் கோர்ட், அதற்கும் மேல் கோர்ட் என்று பல படிகள் பிறகு கருணை மனு…..) கொடுத்து பிறகு, மக்கள் எல்லோரும் அவன் செய்த குற்றத்தை மறந்த பிறகு, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவாங்க.  அரபு தேசங்களில் குற்றம் செய்தால் தண்டனை நிச்சயம். அதிலும் கொலைக்குற்றம் செய்தால் உடனே சிறை, பிறகு கோர்ட் நடைமுறைகள் எல்லாம் முடிந்த பிறகு நிச்சயம் உயிரை எடுத்துவிடுவார்கள். ஜாமீன், சுறாமீன் போன்ற தகிடுதத்தங்களுக்கு அங்கு இடமே கிடையாது. 

சாலையில் வாகனத்தில் செல்லும்போது யார் மீதாவது மோதி, இறப்புக்கு அல்லது அங்கஹீனத்துக்குக் காரணமாக ஆகிவிட்டால், அந்த நிமிடமே சிறைதான். அவர்கள் இஸ்லாமிய சட்டப்படி, ஒரே ஒரு வாய்ப்பு இருக்கிறது. இறந்தவர்களின் மிக நெருங்கிய உறவினர் அல்லது பாதிக்கப்பட்டவர் நஷ்டஈடு பெற்றுக்கொண்டு குற்றவாளியை மன்னிக்கலாம் (நஷ்ட ஈடு பெறாமலும் அதனைச் செய்யலாம்). அப்போதான் குற்றவாளி தப்பிக்கமுடியும். மற்றபடி, நான் இவ்வளவு பெரியவன், பணக்காரன், எனக்கு அவரைத் தெரியும் இவரைத் தெரியும் என்ற கதையெல்லாம் அங்கு நடக்காது.

பிறகு ஒரு சந்தர்ப்பத்தில், நான் துபாய் சென்ற புதிதில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை எழுதுகிறேன்.


ஐரோப்பாவிலும் ஸ்பெயினிலும் அதிகமாகப் பேசும் (வளவளப்பு இல்லை, கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரத்தை எதிர்த்துப் பேசுபவர்கள்) பெண்களின் முகத்தில் இத்தகைய முகமூடிகள் மாட்டிவிடப்பட்டன. வாய்ப்பகுதியில் இரண்டு கத்திபோன்ற கம்பிகள் செல்லும். நாக்கை இப்படியும் அப்படியும் அசைக்கமுடியாது. காது நீண்ட வடிவமாகச் செய்திருப்பதன் காரணம், அவர்களை கழுதைகள் என்று குறிப்பிட.


சீனாவில் குற்றவாளிகளைத் தண்டிக்கும் முறை. இதனை நரக நெருப்புத் தண்டனை என்று சொல்லலாம்.  குற்றவாளியை இரும்புத் தூணில் இப்படி படத்தில் இருப்பதுபோலக் கட்டிவைத்துவிட்டு, கீழே இரும்பு அடுப்புக்குள் நெருப்பை மூட்டுவது. தூண் எவ்வளவு சுடும் என்பதைக் கற்பனை செய்துகொள்ள வேண்டியதுதான்.  (அட… அவங்கள்லாம் நாகரீகமற்றவர்கள். கொடூரமானவர்கள். இந்தியாவில் அப்படியெல்லாம் கிடையாது என்று நினைப்பவர்களுக்காக. நம் தமிழகத்தில் ஈர மாட்டுத் தோலை குற்றவாளிகளின் உடம்புடன் ஒட்டி நன்றாகக் கட்டிவிடுவார்கள். மாட்டுத் தோல் காயக் காய  மனிதத் தோலை உரித்துவிடும். நம்ம அப்பா கூட, தோலை உரிச்சுப்புடுவேன் என்று நம்மை மிரட்டியிருப்பாரே)


குற்றவாளிக்குத் தண்டனை தரும்போது, அவன் கண்கள் இறக்கும் தருவாயில், யார் நம்மைத் தண்டிக்கிறார்கள் என்று தெரியக்கூடாது என்பதற்காக இத்தகைய முகமூடிகளை தண்டனையை நிறைவேற்றுபவர்கள் அணிந்துகொள்வார்கள். இது 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த முகமூடி. நம்ம ஊரில் கொலைக் குற்றவாளிக்கு முகமூடியை அணிவித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.


பெண்களைத் தங்கள் உடைமைப் பொருட்களாகக் கருதியதால் மேல் நாட்டில் உபயோகப்படுத்தப்பட்ட பூட்டுகள். பொதுவாக இவற்றை தங்கள் மனைவிக்கு உபயோகித்தவர்கள் போர் வீரர்கள், தளபதிகள். இது பற்றி ஒரு நகைச்சுவை படித்திருக்கிறேன். இங்கு சொன்னால், சென்சார் செய்துவிடும் அபாயம் இருக்கிறது.  இந்தியாவில் படையெடுத்துவந்த முகலாயர்கள் தங்கள் அரண்மனை அந்தப்புறத்தில் பாதுகாப்புக்காக நிறுத்திய வீரர்கள் அனைவருமே திருநங்கைகள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அரச இரத்தத்தில் வேறு கலப்பு இருக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை அது. 


16ம் நூற்றாண்டு, ஜெர்மனியைச் சேர்ந்த குற்றவாளிகளுக்கான இரும்பு முள் செருப்பு இது. பாதத்தை அசைத்தால் ஆயுள் முழுவதும் நடக்க முடியாதபடி பாதம் பாழ்பட்டுவிடும். தூக்கி நடப்பதற்கும் முடியாத கனமான இரும்புச் செருப்புகள் இவை. 


குற்றவாளிகளைக் கொலை செய்யும் இந்த எலெக்ட்ரிக் சேரைக் கண்டுபிடித்தது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பல் வைத்தியர். ஆல்ஃப்ரட் 1881ல் கண்டுபிடித்த இந்த மின்சார நாற்காலி தண்டனை, அமெரிக்காவிலும் மற்றும் பிலிப்பைன்ஸிலும்தான் உண்டு. ஆமாம்.. கொடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தருவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?


பல வீடுகளுக்கே மின்சாரம் இல்லை. இதுல ஆளைக் கொல்ல மின்சாரமா?


மங்கோலியன் பட்டினிக் கூண்டு.  இதில் அடைக்கப்பட்ட ஒருவர் உயிருடன் வெளியில் வர இயலாது.

தண்டனைக்கு உரிய கருவிகள்லாம் ஓகேதான். ஆனால் தவறு செய்யாத ஒருவனுக்கு இத்தகைய தண்டனைகளைத் தவறுதலாகக் கொடுத்துவிட்டால்? வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று ஓடும் உலகமல்லவா இது.


சிறைத் தண்டனைக் கைதிகளை ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு இந்த கழுத்து அமுக்கியை உபயோகித்தார்கள். இதனை சிறைக்கைதிகளின் கழுத்தில் மாட்டிவிட்டால், அவனால் ஓடிவிட முடியாது.

தண்டனைக் கருவிகளைப் பார்த்து மனசு உடைந்து போயிருப்பீங்க. இங்கிலாந்துல குற்றவாளிகளின் தண்டனைக்கு இன்னும் பலவித முறைகள் வைத்திருந்தாங்க. அவற்றில் சிலவற்றை நான் லண்டன் டவர் சென்றிருந்தபோது பார்த்தேன். அவைகளை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன்.  இனி வேறு படங்களைப் பார்ப்போம்.

ஒலிம்பிக் போட்டிகளைத் துவக்கும்போது உபயோகப்படுத்திய வெவ்வேறு டார்ச்சுகள். பார்க்க சட் என்று வாட்கள் போலத் தோற்றமளிக்கின்றன. இதனைப் பார்க்கும்போது, குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி அவர்கள் ஒரு ஒலிம்பிக் போட்டியைத் துவக்கி வைக்க இத்தகைய டார்ச்சைக் கையிலேந்திக்கொண்டு வந்தபோது அவருடைய கை கட்டுப்படுத்த முடியாமல் ஆடிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.


டாய்லெட் பேப்பர் கம்பெனி, தன் விளம்பரத்திற்காக, டாய்லெட் பேப்பரை உபயோகித்து திருமண உடையைத் தயாரிக்கும் போட்டி வைத்தது. அதற்காக வந்த சில உடைகள். இவை எல்லாமே டிஷ்யூ பேப்பரினால் செய்த உடைகள். (ரொம்ப அழகாத்தான் இருக்கிறது. நான் உடைகளைச் சொன்னேன். ஆமாம் இவங்க வெளில நடந்து போகும்போது பெரிய மழை வந்துவிட்டால் என்ன செய்வாங்க? இவங்க என்ன செய்வாங்கன்னு எனக்குச் சொல்லத் தெரியலை. ஆனால் ஆண்கள்லாம் உடனே ரோட்டுக்கு வந்துடுவாங்க என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்)


நான் ரொம்ப குண்டா இருக்கேன் என்ன பண்ணறதுன்னு யாரும் புலம்பாதீங்கப்பா. கண்ணதாசன் சொன்னதுபோல, உனக்கும் மேலே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.


1926ல் பிறந்து 32 வருடங்கள் வாழ்ந்த, மிசௌரியைச் சேர்ந்த ஏர்ல் ஹூக்ஸ் என்பவர், 6 வயதிலேயே 92 கிலோவாக இருந்தாராம். பிறகு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து 485 கிலோவை அடைந்தாராம். நினைக்கவே நடுங்குகிறது. இதுபோல குண்டாக இருந்த ஒரு பெண்மணியின் உருவமும் பார்த்தேன். இங்கு பகிரவில்லை.


தந்தத்திற்காக யானையைக் கொல்லும் வழக்கம் காலம் காலமாக இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான தந்தங்களைக் கொண்ட ஆண் யானையின் எலும்புக்கூடு. தும்பிக்கை ஆரம்பிக்கும் இடத்தில் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட துளை இருக்கிறது. தோல் பொருட்கள், தந்தம் மற்றும் விலங்குகளைக் கொன்று அதன் உறுப்புகளை உபயோகித்துச் செய்யப்படும் ஆடம்பரப் பொருட்களை உபயோகிப்பவர்களுக்கு அந்தப் பாவத்தில் பங்கு இல்லாமலா போய்விடும்? Fur எனப்படும், கதகதப்புக்காக முயல் ஆடு போன்ற பல விலங்குகளிடமிருந்து பெறப்படும் முடியினால் தயாரிக்கப்பட்ட உடையை அணிபவர்கட்கும் அந்தக் கதிதானே.


அமேசான் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினருக்கு இந்த நெக்லெஸ்தான் விலையுயர்ந்த ஆபரணம். ஆமாம் அதில் என்ன ரத்தினங்களைக் கோர்த்திருக்கிறார்கள் என்று நினைக்கறீங்க? மனுஷப் பற்கள் 37. அது சரி. கீழே என்ன, காய்ந்த அத்திப்பழ மாலையான்னு யோசிக்கிறீங்களா? இது சாலமன் தீவுகளில் வாழ்ந்த ஒருவித பறவையின் இறகினால் ஆன 3 மீட்டர் சுற்றளவுள்ள பெல்ட். இதனைப் பரிசாகக் கொடுத்து திருமணத்திற்கு மணமகளைப் பெறுவார்கள்.  காலம் எவ்வளவு மாறிவிட்டது பாருங்க. இப்போ பரிசா எதை வேணும்னாலும் கொடுக்கலாம் என்று நினைத்தாலும் (அவற்றில் மானம் வெட்கம் சூடு சுரணையும் உண்டா என்று கேட்டால் எனக்குத் தெரியவில்லை) திருமணத்திற்குச் சம்மதம் சொல்லும் பெண்கள் குறைந்துவிட்டார்கள். 


இறந்தவர்களைப் புதைக்க விதவிதமான சவப்பெட்டிகள் உண்டு. ஆனால் கழுகு போன்ற சவப்பெட்டிகள் கானா நாட்டில், சமூகத்தில் பெரிய அந்தஸ்து உள்ளவர்களுக்கு மாத்திரம்தானாம். 

 இறப்பிலும் சமூக அந்தஸ்து குறுக்கே வரும். இது எல்லா தேசத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதுதான்.  பிலிப்பைன்ஸில், முன்பு, இறந்தவர்கள் சமூக அந்தஸ்தோடு இருந்திருந்தால், அவர்களது முகத்தில் தங்கத்தினாலான மெல்லிய முகமூடி அணிவித்துத்தான் புதைப்பார்கள். (கண் பகுதி திறந்திருக்கும்) சில நேரங்களில், கண், மூக்கு, வாய் போன்றவற்றிர்க்கு மாத்திரம் தங்க ரேக்குகளால் மூடியிருப்பாங்க. அப்படிச் செய்தால் கெட்ட ஆவிகள் இறந்தவர்களின் உடலில் புகாதாம். கீழே கொடுத்துள்ள முகமூடி உதாரணத்திற்குக் கொடுத்திருக்கிறேன். இரண்டாவது படத்தில் உள்ள மாதிரி முகமூடி பிலிப்பைன்ஸ் மியூசியத்தில் பார்த்தேன். ஆனால் அந்தப் பகுதிகளில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.

பிலிப்பைன்ஸ் நாட்டின் இறந்தவர்களுக்கான தங்க முகமூடி

மேலே உள்ளது இமயமலையில் வாழ்ந்த திபெத்தியர்கள் உபயோகித்த மண்டையோட்டுக் கிண்ணம். இறந்தவர்களின் மண்டையோடுகளை உபயோகித்து அலங்காரமாகச் செய்யப்படும் கிண்ணத்தை புனிதச் சடங்குகளின்போது மது போன்றவற்றை அருந்த உபயோகிப்பார்களாம். அது இறந்த முன்னோர்களின் ஆசியைக் கிடைக்கச் செய்யுமாம்.  (உடனே இதை நம்பி உங்க முன்னோர்களின் மண்டையோடுகளைத் தேடிக் கிளம்பிடாதீங்க. நம்மிடம் உள்ள பொதுவான வழக்கம், சரம உடலை எரித்துவிடுவதுதான்)

இதை எழுதும்போது என் வாழ்வில் நடந்த நிகழ்வு நினைவுக்கு வருது. நான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நினைவுக்கு புகைப்படம் எடுத்துவிடுவேன் என்று சொல்லியிருக்கிறேன். என் அப்பா மறைந்ததும், (இரவு 9 மணிக்கு இறந்தார்) மறுநாள் காலை 11 மணிக்கு நான் இறுதிச் சடங்குகளுக்கு வீட்டுக்கு வந்துவிட்டேன்.  என் அப்பாவின் உடலைக் கிடத்தியிருந்தார்கள். புகைப்படம் எடுத்துக்கொள்ளணும் என்று நினைத்தேன். உறவினர் ஒருவர் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று சொல்லிட்டார். அதை நினைத்து இப்போதும் எனக்கு வருத்தம்தான்.  


ஜப்பானியர்கள் உபயோகித்த ரெயின் கோட்.  இரண்டாவது படத்தில் உள்ளது நாகாலாந்து பழங்குடியினர் உபயோகித்த எலும்பு மாலை/பெல்ட். கொலை செய்த எதிரியின் எலும்பை எடுத்து அலங்காரப் பொருளாக்கி அந்த பெல்டில் கோர்த்துக்கொள்வார்களாம். எத்தனை அலங்காரப் பொருட்கள் இருக்கிறதோ அத்தனை பேரை அவர்கள் கொன்று தின்றிருக்கிறார்கள் என்பது பொருள். உங்களுக்குத் தெரியுமா? இந்த நாகாலாந்து இனப் பழங்குடியினரை யாருமே  (வெளியாட்கள்) போரிட்டுவெற்றதில்லையாம்.


இந்தப் பகுதியில், முடிந்தால் தைரியமாக இந்தப் பாலத்தைக் கடந்து செல்லுங்கள் என்று எழுதியிருந்தது. அதனைச் சுற்றி அமைக்கப்பட்ட கூரையால், தலை சுத்தி விழாமல் இதனைக் கடப்பது கடினம். 

இது மிரர் மேஸ் (mirror maze) எனப்படும் பாதை. ஒளிபுகா கண்ணாடிகளாலானது. ஒவ்வொரு முக்கோண அறையிலும் மூன்று கதவுகள் இருக்கும். இந்தப் பகுதியில் நுழைந்தவுடன், எதிர்படும் இரண்டு கதவுகளில் ஏதேனும் ஒன்றைத் திறந்துகொண்டு செல்லவேண்டும். இப்படி பல அறைகளில் தட்டுத் தடுமாறி கடைசியில் வெளியே வரவேண்டும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இது இருக்கும். எனக்குமே மிகவும் பிடித்திருந்தது. 

கண்ணாடி அறையில் மூன்று கதவுகள் (பிரதிபலிக்கும் கண்ணாடி) இருப்பது தெரிகிறதா?

கண்ணாடி வியூக அறையில் நான். 

இதைத் தவிர, லேசர் ரேஸ் என்ற பகுதி இருந்தது. அங்கு பல கோணங்களில் லேசர் ஒளி வந்துகொண்டிருந்தது. அதன் மீது படாமல் தாண்டி அந்த இடத்தைக் கடக்கவேண்டும். சில இடங்களில் ஒளியைத் தவழ்ந்துதான் கடக்கணும். ஆனால் நான் அதனை முயற்சிக்கவில்லை.


சாலைகளில் ஓட்ட முடியுமென்றால் இத்தகைய சிறிய கார்கள் நமக்குப் போதாதோ?


சென்ற மூன்று வாரங்களாக ‘நம்பினால் நம்புங்கள்’ மியூசியத்தில் நான் பார்த்த சிலவற்றைப் படங்களுடன் பகிர்ந்துகொண்டேன். இவை உங்களுக்குப் புதியனவாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். 

எப்போதும் கோயில், சிற்பங்கள், யாத்திரைகள் என்று எழுதினால், படிப்பவர்களுக்கும் போரடிக்க ஆரம்பித்துவிடும். அதனால் இடையிடையே இந்த மாதிரி குறுந்தொடர்களையும் அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன். உங்களுக்கும் புதிதாக் ஒன்றைத் தெரிந்துகொண்ட மாதிரி இருக்கும்.

மீண்டும் இன்னொரு தொகுப்பில் சந்திப்போம்.

= = = = = = = = =

66 கருத்துகள்:

  1. நம்பிட்டேன், நெல்லை. வரேன்...கொஞ்சம் அப்பால.

    வேலைகள், சிந்தனைகள் கூடிடுச்சா இல்லை நான் ஸ்லோடவுன் ஆகிட்டேனா தெரியலை...நேரம் துரத்துகிறது.

    வரேன் ஒவ்வொண்ணா பார்க்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா... அதிசயமாக காலையிலேயே வந்திருக்கீங்களே. நீங்கதானா

      நீக்கு
    2. ஹாஹாஹா நானேதான்! நானே நானா யாரோதானா!!!!

      கீதா

      நீக்கு
  2. நம்ம ஊரில், ரொம்ப நாளாக ஆராய்ந்து, கொலைக்குற்றம் செய்தான் என்று தெரிந்தாலும் பலவித வாய்ப்புகள் (மேல் கோர்ட், அதற்கும் மேல் கோர்ட் என்று பல படிகள் பிறகு கருணை மனு…..) கொடுத்து பிறகு, மக்கள் எல்லோரும் அவன் செய்த குற்றத்தை மறந்த பிறகு, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவாங்க.//

    அதைச் சொல்லுங்க. என்ன கேஸுப்பான்னு கேட்கணும் அந்த அளவுக்குப் போகும்.

    அது சரி, அந்த அண்ணா யுனிவெர்சிட்டி கேஸ் என்னாச்சு நெல்லை?

    எல்லாரும் மறந்துட்டாங்கல்ல?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா யூனிவர்சிடி கேஸா? நாவரசுவைத் துண்டு துண்டாக வெட்டிக் கொன்றவனே பாதிரியார் வேலைக்கு ஆஸ்த்ரேலியா போய் ஜாலியா இருக்கான் பாதிரியாராக. இதுல அண்ணா யூனிவர்சிடியாம்

      நீக்கு
    2. ஆ!!!!! அப்ப இங்க குற்றம் செஞ்சுட்டு வெளிநாட்டுக்குப் போய் தப்பிச்சுடலாம்னு சொல்றீங்க...ஹாஹாஹாஹா அதானே நடக்குது!

      கீதா

      நீக்கு
  3. பதில்கள்
    1. சரணம் சண்முகா. இப்போது திருப்பதி சென்றுகொண்டிருக்கிறேன் மூன்று நாட்கள் பயணமாக

      நீக்கு
    2. திருப்பதி பயணம் வெங்கடேசன் அருளால் இனிதாக நிறைவேறட்டும் வெங்கடேசா சரணம்.

      நீக்கு
  4. இப்படியான கொடும் தண்டனை முறைகளை 80 ல் கல்கண்டு தமிழ்வாணன் புத்தகங்களில் படித்திருக்கின்றேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். நான் தண்டனைக்கு உபயோகப்பட்டவைகளை நேரில் பார்த்துவிட்டேன்

      நீக்கு
  5. அரபு நாட்டு சட்டங்கள் கடுமையானவை..

    அருமை...

    தாறுமாறாக தேர் ஓட்டி விபத்து
    ஏற்படுத்திய மகனையே தேர்க்காலில் இட்டு நசுக்கிய நாடு...

    இன்னும் எத்தனையோ நீதிகள்...

    எல்லாமும் நீர்த்துப் போகச் செய்து விட்டனர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீர்த்துப் போகவைத்தது நீதிபதிகள் மாத்திரமா? அரசுக்கு இதில் பொறுப்பு இல்லையா? அவங்களும் காரணம்.

      நீக்கு
    2. //தாறுமாறாக தேர் ஓட்டி விபத்து
      ஏற்படுத்திய மகனையே தேர்க்காலில் இட்டு நசுக்கிய நாடு...//
      விபத்து ஏற்படுத்தி கன்றுக்குட்டியை கொன்றதற்காக (involuntary calfslaughter ) மகனைக்கொன்றது முற்றிய மன நோய். இதெல்லாம் நீதில சேர்த்தியா? சரியாப்போச்சு.

      நீக்கு
    3. தற்போதைய மாஃபியாவிலும் இத்தகைய நீதி உண்டல்லவா?

      நீக்கு
    4. ஒரு பூனைக்குட்டியை குச்சியால் அடித்துத் துன்புறுத்தினால் நம் மனம் பூனைக்கு இரங்காதா? துன்புறுத்துபவன் மனிதன் என்று எண்ணுவோமா இல்லை அதே குச்சியால் இரண்டு விளாசுவோமா?

      நீக்கு
  6. பயங்கரமான ஞாயிற்றுக்கிழமை

    பதிலளிநீக்கு
  7. அகால நேரத்தில் வீட்டுக் கதவைத் தட்டியதற்காக
    தன் கையை இழந்தவன் பொற்கைப் பாண்டியன்...

    இன்றைக்கு யாராவது ஒருவர்?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போற வர்றவங்க வீட்டுக்கு வந்து கையைப் பிடித்து இழுத்தால் போகலைனா கையை இழக்க நேரிடும் இந்தக் காலத்துல

      நீக்கு
    2. //அகால நேரத்தில் வீட்டுக் கதவைத் தட்டியதற்காக
      தன் கையை இழந்தவன் பொற்கைப் பாண்டியன்// உண்மையிலேயே இந்த காரணத்துக்காக தன் கையை ஒருவன் வெட்டிக்கொண்டால்
      அவனுக்கு மன நல மருத்துவம் கண்டிப்பாக தேவை.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. குழந்தை கீழே விழுந்து அடி பட்டுக்கொண்டு அழறது. அப்போ தாய் என்ன செய்வா? (தமிழகத் தாய்). உடனே தரையை இரண்டு தட்டுத் தட்டி, பெண்ணை அடிச்சயா என்ன பண்றேன் பார் என்பாள். குழந்தை அழுகையை நிறுத்திடும். இப்போ அத்தகைய தாய்கள் பைத்தியம்னு சொல்லமுடியாதில்லையா? அதீத உணர்ச்சி நதர்சனத்தை மறக்கடிக்கும், அமாவாசை அன்று நிலவு வரும் என்று சொன்னதுபோல்

      நீக்கு
  8. இதோ -
    நானே பெரிய அயோக்கியன்...

    பதிலளிநீக்கு
  9. அது சரி, அந்த அண்ணா யுனிவெர்சிட்டி கேஸ் என்னாச்சு நெல்லை?

    எல்லாரும் மறந்துட்டாங்கல்ல?

    கீதா ///

    ஆகா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பிரச்சனை வந்தால் முந்தைய பிரச்சனை மறந்துவிடும்

      நீக்கு
  10. பதில்கள்
    1. என்ன செய்ய? காலம் கலிகாலம். அதற்கு ஏற்ற அரசு இயந்திரங்கள்

      நீக்கு
  11. அரபு தேசங்களின் தண்டனைகள் இங்கும் வர வேண்டும் என்று நினைப்பதுண்டு, நெல்லை. குறிப்பாக இந்தப் பாலியல், கொள்ளை போன்ற குற்றங்களுக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இவ்வளவு பெரியவன், பணக்காரன், எனக்கு அவரைத் தெரியும் இவரைத் தெரியும் என்ற கதையெல்லாம் அங்கு நடக்காது.//

      இது இதுதான் இங்கு வர வேண்டும்.

      கீதா

      நீக்கு
  12. தண்டனைக்கான படங்களைப் பார்க்கறப்ப, மற்ற நாடுகளிலும் கருடபுராணம் ஃபேமஸ் போல!!! என்று தோன்றியது!

    அந்நியன் நினைவுக்கு வந்தது.

    ஆமாம் நம்ம ஊரில் சில குற்றவாளிகளை முகமூடி இட்டு அழைத்துச் செல்வதுண்டு.

    தூக்குத் தண்டனையின் போது அவர்களுக்கு முகத்தை மறைத்துவிடுவார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஒவ்வொரு தண்டனையும் பயப்பட வைக்கிறது.

    இந்த பயம் வந்தால் குற்றங்கள் மிகவும் குறையும் அல்லது இல்லாமல் ஆகும்.

    ஆனால் அதையும் விட சுய ஒழுக்கம் கட்டுப்பாடு இருந்துவிட்டாலே நல்லது. அப்படி எதிர்பார்க்க முடியாதே. ஒவ்வொரு மனிதனின் மனம், வளரும் விதம் சூழல் என்று எத்தனையோ இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. (ரொம்ப அழகாத்தான் இருக்கிறது. நான் உடைகளைச் சொன்னேன்.//

    ஹாஹாஹாஹா என்ன சொல்ல வந்தீங்கனு சொல்லிப்புடலாமே!!!!!

    // ஆமாம் இவங்க வெளில நடந்து போகும்போது பெரிய மழை வந்துவிட்டால் என்ன செய்வாங்க? இவங்க என்ன செய்வாங்கன்னு எனக்குச் சொல்லத் தெரியலை. ஆனால் ஆண்கள்லாம் உடனே ரோட்டுக்கு வந்துடுவாங்க என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்)//

    ஹாஹாஹா ஆனால் டிசு பேப்பர் டக்கென்று ஈரம் உறிஞ்சினாலும் கிழியாத வகையிலும் இருக்கிறதே நான் அதை அடுக்களையில் பயன்படுத்துவதுண்டு. ஒரு வேளை அதுவா இருக்குமா?

    ஆனால் டாய்லெட் டிஷு டக்கென்று தண்ணீரை உரியும் ஆனால் கிழியாதாக இருகும் ஒரு சுற்றா சுற்றியிருப்பாங்க? பல சுற்று தடிமனாகச் செய்திருப்பாங்க

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, உடையைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.

      கீதா

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. டிஷ்யூ விஷயத்தை விளக்கி என் மனதை ஏமாற்றமடையச் செய்துவிட்டீர்கள் ஹா ஹா ஹா

      நீக்கு
    4. டிஷ்யூ விஷயத்தை விளக்கி என் மனதை ஏமாற்றமடையச் செய்துவிட்டீர்கள் ஹா ஹா ஹா

      நீக்கு
  15. பாவம் நெல்லை, அந்த குண்டான மனிதர்கள். அவர்களுக்கு ஏதோ ஒரு உடல் பிரச்சனையினால்தான் இப்படி இருக்காங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன பண்றது சொல்லுங்க. இறைவன் அப்படிப் படைத்துவிடுகிறான். வத்தலா இருந்தாலும் நல்லாருக்காது

      நீக்கு
  16. சவப்பெட்டிகள் கூட கலைநயமாக இருக்கின்றன!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அதில் ஒரே ஒரு குறை. இறந்தவர் தனக்கு இப்படி அழகாக அமைச்சிருக்காங்களே என்று சந்தோஷப்படமுடியாது

      நீக்கு
  17. attention! படம் நல்லாருக்கு, நெல்லை! Stand at ease படம் இருந்தா போடுங்க!!! ஹாஹாஹாஹா...

    ஒவ்வொரு நாட்டின் மக்களின் நம்பிக்கைகள் தான் எத்தனை எத்தனை! மண்டை ஓடுகள் கிண்ணங்களாவது அதுவும் கலை நயத்தோடு!!

    மிரர் மேஸ் படங்கள் சூப்ப்பர்.

    //சாலைகளில் ஓட்ட முடியுமென்றால் இத்தகைய சிறிய கார்கள் நமக்குப் போதாதோ?//

    போதுமே...இதைத்தானே முன்ன சொன்னேன் ஒரு படத்துக்கு. அப்ப நீங்க என்ன சொன்னீங்கனா......இதுக்கு ஜஸ்ட் ஆப்போசிட் ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  18. நிஜமாகவே எல்லாமே ரசித்தேன் நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அக்கா. அக்காவா மாமியா ஹா ஹா ஹா

      நீக்கு
  19. நான் அயோக்கியன் என்று உண்மையை
    ஒத்துக் கொண்டால் நெல்லை சிரிக்கின்றார்...

    இதை என்ன என்பது?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞானத்தில் மிகப் பெரியது நம்மை அறிந்து நாம் இப்படி என எளிமையாக எண்ணுவது. அடியார்க்கும் அடியேன் என்பது தாத்பர்யம். வாழ்க்கையில் எத்தனையோ தவறுகளை எல்லோருமே அனேகமாகத் தெரிந்தே செய்கிறோம். இதில் நீங்கள் என்ன நான் என்ன?

      நீக்கு
  20. தண்டனை படங்கள் எல்லாம் பார்க்க பயமாக இருக்கிறது . அந்நாடுகளில் குற்றம் செய்பவர் இவற்றை மறந்திருப்பார்களோ ? அல்லது அதைவிட மனது வன்மையாக இருக்குமோ?

    ரிசு பேப்பர் உடை அழகாகத்தான் இருக்கிறது.
    " ஆண்கள்லாம் உடனே ரோட்டுக்கு வந்துடுவாங்க..." ஹா...ஹா....

    மீகவும் குண்டான மனிதர்கள் அவர்களை பார்க்கும்போது பரிதாபம் தோன்று
    ம் .
    பல படங்களை எமக்கு காண தந்துள்ளீர்கள் அருமை கண்டு கொண்டோம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள். ரசித்தமைக்கு புதிதாக ஒன்றை தெரிந்துகொண்டமைக்கு நன்றி

      நீக்கு
  21. //இறந்தவர்களின் மிக நெருங்கிய உறவினர் அல்லது பாதிக்கப்பட்டவர் நஷ்டஈடு பெற்றுக்கொண்டு குற்றவாளியை மன்னிக்கலாம் (நஷ்ட ஈடு பெறாமலும் அதனைச் செய்யலாம்). அப்போதான் குற்றவாளி தப்பிக்கமுடியும். மற்றபடி, நான் இவ்வளவு பெரியவன், பணக்காரன், எனக்கு அவரைத் தெரியும் இவரைத் தெரியும் என்ற கதையெல்லாம் அங்கு நடக்காது.//
    பணக்காரன் பணத்தை வாரி வீசி பாதிக்கப்பட்ட குடும்பத்தின் 'மன்னிப்பை' பெற்று விடுகிறான். இது போய் பெரிய நீதியாம். படு அபத்தம். மகா கேவலம். குழந்தைக்கு கூட இந்த சட்டத்தில் உள்ள அநீதி புரியும்.

    அது மட்டுமல்ல. கயவர்கள் குடும்பத்தில் ஒரு நல்லவன் இருந்தால், அதுவும் அவர்களுடைய கெட்ட நடவடிக்கைகளுக்கு தடையாகவோ ஆபத்தானவனாகவோ இருந்தால், அவன் செத்துப்போவதில் அவர்களுக்கு இப்போது இரட்டிப்பு மகிழ்ச்சி.

    அப்பா அம்மா இல்லாத குடும்பத்தில், சொத்துக்கு அடித்துக்கொள்ளும் இருவரில், ஒருவர் இப்படி விபத்தில் செத்துவிட்டால், அடுத்தவருக்கு இரட்டிப்பு கொண்டாட்டம்.

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவாழிமார்பன் சார்.. இது மிகச் சரியான நீதி. நாம் பாரதத்தில் இதை நடைமுறைப்படுத்தணும். திருமலையில் இருக்கிறேன். இதற்கு விளக்கமா பதில் எழுதணும். நான் 25 வருடங்கள் கல்ஃபில் வாழ்ந்தவன். நிச்சயம் பதில் எழுதறேன்

      நீக்கு
    2. தவறுதலா வண்டி ஓட்டும் போது ஆள் மேல மோதறீங்க. அவருக்கு அடிபட்டுவிடுகிறது. உடனே ஜெயில். ஜாமீன் பேச்சே கிடையாது. கேஸ் நடந்து தீர்ப்பு வரும். ஆள் போனா அவ்ளோதான். மரணத்துக்கு மரணம். கைக்கு கை என்பது பொதுவான நீதி. கோபம்லாம் ஆறின பிறகு பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவு, மனைவி அல்லது மகள் போன்று.. லாயர் மூலமா அவங்களை அப்ரோச் செய்து தன்மையா பேசி ஏதேனும் செட்டில்மென்டுக்கு, இதற்கு இரத்தப் பணம் என்று பெயர். ஒத்துக்க ரிக்வஸ்ட் பண்ணி சம்மதித்தா அந்த ப்ராஸஸ் கோர்ட் மூலமா நடந்து வெளில வரலாம். எதையும் வாங்கிக்காம மன்னிக்கலாம் தவறி நடந்ததுன்னு அவங்க நினைச்சு மன்னிக்க நினைத்தால். என்ன கொடுத்தாலும் மன்னிக்காத கேஸ்கள் உண்டு. உதாரணத்தோடு ஊர் வந்ததும் எழுதறேன்.

      நீக்கு
  22. /// வாழ்க்கையில் எத்தனையோ தவறுகளை எல்லோருமே அனேகமாகத் தெரிந்தே செய்கிறோம். இதில் நீங்கள் என்ன நான் என்ன?..///

    நல்லவேளை...
    இப்போது தான் நிம்மதி

    ஓம் அச்சுதாய நம
    ஓம் அனந்தாய நம
    ஓம் கோவிந்தாய நம

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு சார். அனைவரும் ஒன்றே

      நீக்கு
  23. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  24. ‘நம்பினால் நம்புங்கள்’ மியூசியத்தில் பார்த்த காட்சிகளில் தண்டனை காட்சிகள் மிகவும் கொடூராமாக இருக்கிறது. நானும் சில மியூசியத்தில் இந்த மாதிரி தண்டனை காட்சிகளை படமாக்கி வைத்து இருக்கிறேன்.
    சிலவற்றை முன்பு பதிவு செய்து இருக்கிறேன்..

    கழுகு சவபெட்டி, தங்கமுகமூடி, மண்டையோட்டு கிண்ணம் எல்லாம் மனிதர்களின் ஆசைகளை சொல்கிறது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசைக்கு அளவேது கோமதி அரசு மேடம். இந்த கொடூரங்கள் நடந்தவைகளின் சாட்சி

      நீக்கு
  25. மிரர் மேஸ், கண்ணாடி வியூக அறை எல்லாம் பார்க்க வேன்டியவைதான். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பிடிக்கும் தான்.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் தமிழரே...
    தண்டனை மிகவும் கொடூரமாகத்தான் இருக்கிறது.
    மரணதண்டனையை ஆதரிப்பவன் நான் ஆயினும் இப்படி மின்சாரத்தால் கொல்வதை ஏற்க மனம் தடுக்கிறது.

    //விலங்குகளைக் கொன்று அதன் உறுப்புகளை உபயோகித்துச் செய்யப்படும் ஆடம்பரப் பொருட்களை உபயோகிப்பவர்களுக்கு அந்தப் பாவத்தில் பங்கு இல்லாமலா போய்விடும்?//

    நிச்சயம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி. தண்டனை கொடுத்தாலும் அதிலும் மனிதாபிமானம் இருக்கணும்.

      நீக்கு
  27. தண்டனைகளைப் பற்றி படிக்க முடியவில்லை, தாண்டி மிரர் மேஸ் வந்து விட்டேன். Mirror maze must be interesting.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mirror Maze interesting ஆ இருந்தது. லேசர் ஒளில படாம அறையைத் தாண்டுவதை பசங்க ரசித்திருப்பாங்க. தண்டனைகள் வாழ்க்கையின் ஒரு பகுதி ஆனால் இவை மனித மனத்தின் குரூரத்தைக் காட்டுகின்றன

      நீக்கு
  28. வணக்கம் நெல்லைத்தமிழர் சகோதரரே

    பதிவு அருமை. நம்பினால் நம்புங்கள் பகுதியான இன்றைய பகுதி படங்கள் மிக பயங்கரமாக உள்ளது. கொலை செய்யும் முன் இத்தகைய பயங்கரமான தண்டனைகள் தனக்கு பிறகு எப்படியும் உண்டென உணர மாட்டார்களா? அப்படியும் அவர்கள் அதைச் செய்கிறார்கள் என்றால், அந்த நிமிடத்தில் அவர்களின் மன உளைச்சல் தரும் கொலைவெறி எப்படியிருக்குமென நினைக்கிறேன். நினைக்கவே மனது சங்கடபடுகிறது.

    கொலை தண்டனை கருவிகள், பல விதமான முகமூடிகள், டிஸ்யூ பேப்பரில் செய்த பெண்களின் உடைகள், கடக்க முடியாத பாலம், ஒளி உமிழும் மூன்று வித அறை அமைப்பை கொண்ட கண்ணாடி அறை , என அனைத்தையும் ரசித்தேன். ஒவ்வொன்றிக்கும் நீங்கள் தந்த விளக்கங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. படிக்கையில் எத்தனை விஷயங்கள் என ஆச்சரியமாக உள்ளது. இந்த நம்பினால் நம்புங்கள் மூன்று பகுதிகளையும் படங்களுடன் நன்றாக தொகுத்து விளக்கமாக தங்கள் பாணியில் அருமையாக எழுதி படித்து ரசிக்க வைத்து விட்டீர்கள். உங்களின் இத்திறமை வியக்க வைக்கிறது. நாங்களும் பல விஷயங்களை தெரிந்து கொண்டோம். நன்றி.

    இதை வெளியிட்ட ஞாயிறன்று நாங்கள் குடும்பத்துடன் வெளியில் சென்று விட்டதால் என்னால் உடனடியாக பதிவுக்கு வர இயலவில்லை. தாமதமானதற்கு மன்னிக்கவும். இன்று காலை அமர்ந்து விட்டுப்போன பதிவுகளை படித்து கருத்துரைகள் தருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!