கேள்வி பதில்கள் :
நெல்லைத்தமிழன் :
ஒரு ரிசெப்ஷன் உணவுக்கு இப்படி விஸ்தாரமாக ஏகப்பட்ட ஐட்டங்கள் கொடுப்பது ஆடம்பரமா? இல்லை விருந்தினர்களின் உடல் நலனைக் கெடுக்கவா? இல்லை வெற்று பந்தாவா? இல்லை சாப்பிடுபவர்களுக்கு வயிறு இல்லை அதற்குப் பதிலாக வண்ணான் சால்தான் இருக்கிறது என்ற நினைப்பா?
# ஆடம்பரம் மட்டுமே.
வர வர திருமண விருந்து ஏன் ரொம்பவே ஆடம்பரமாகவும், கேடரர்கள் மாத்திரம் அதன் மூலம் பெரும் பயன் அடைவதாகவும் இருக்கிறது? முன்பு பஞ்ச காலத்தில் இருந்ததுபோல அரசின் கட்டுப்பாடு தேவையா இல்லை, கேடரர்களுக்கு 90 சதம் வரி விதிக்கணுமா?
# காசு இருக்கிறது, ஆடம்பர ஆசையும் இருக்கிறது. வாரி இறைக்காமல் வேறென்ன செய்வார்கள் ? அரசிடமே ஏராளமான தவறுகள் இருக்கும் இந்த காலத்தில் அரசு வந்து என்ன செய்துவிட முடியும் ? கேடரர்களை சரியாக மதிப்பிட்டு, சரியான வரி விதித்து, அதைப் பெறுவது மிகக் கடினம்.
3. திருமணம் என்பது எல்லோரும் சந்தோஷப்படும் ஒரு நிகழ்வா இல்லை, புகைப்படம் எடுப்பவர், கேடரர், மண்டபம் வைத்திருப்பவர், மேடை அலங்காரம் செய்பவர் போன்றவர்களை பணக்காரர்களாக ஆக்கும் ஒரு நிகழ்வா?
4. திருமணத்துக்கு அநாவசியமாகச் செய்யும் செலவை, அப்படியே பெண்ணுக்கோ பையனுக்கோ பணமாகக் கொடுத்துவிட்டால் அது அவர்களது புது வாழ்க்கைக்கு உதவியாக இருக்குமா இருக்காதா?
5. திருமண நிகழ்வுக்கு புகைப்படக்காரர்கள் செலவாக பல லட்சங்கள் செலவழிப்பதற்குப் பதில், நான்கு ஏழை மாணவர்களிடம் செல்ஃபோன் கொடுத்து படங்களை எடுத்துத் தரச் சொல்லி அதற்குப் பதிலாக அவர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுப்பது அவர்களுக்கு உதவிகரமாக இருக்குமா இருக்காதா?
# 3, 4, & 5. கேட்க நன்றாக இருக்கிறது செய்யத்தான் ஆள் இல்லை. ஓரளவுக்கு மேல் வசதி வாய்ப்புகள் அதிகமாகி விட்டதும் கூட இதற்கு ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன். நல்லது என்று நாம் ஒன்றை செய்ய முனைந்தால் அதில் நம்மை ஏமாற்றுபவர்கள் இருப்பதையும் கண்டு மனம் வெதும்பிப் போய் விடுகிறது.
கே. சக்ரபாணி சென்னை 28:
நம் நாட்டில் இருந்து ஜப்பான், சிங்கப்பூர் , அமெரிக்கா , துபாய். ஆகிய வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ளவற்றை ரசித்துவிட்டு வருகிறார்களே தவிர அங்கெல்லாம் உள்ள discipline ஐ இங்குவந்தவுடன் எவ்வளவு. சதவிகிதம் பேர் கடைபிடிக்கிறார்கள்?
# பார்த்ததிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு திருந்துவது என்று ஒரு மனப்பான்மை இருக்குமானால் நம் நாட்டில் பார்த்து திருந்துவதற்கு எவ்வளவோ இருக்கின்றனவே. வெளிநாடுகளுக்குப் பயணம் போவது, உல்லாசத்திற்காக மட்டுமே. அதுதான் உல்லாசப் பயணம் ஆயிற்றே.
என்னதான் பிள்ளைகள் பரீட்சையில் சரியாக விடைகளை எழுதினாலும் அவர்களின். விடைத்தாள்களை. திருத்தும்போது ஆசிரியர்களுக்கு அப்போது உள்ள மனநிலை (mood) ம் மார்க்குகள் வாங்குவதில் ஒரு அங்கம் வகிக்கிறது சரியா?
# ஒரு ஊகமாகச் சொல்வதானால், நீங்கள் சொல்வது சரி என்று தான் தோன்றுகிறது .
விரைவில் செயற்கை நுண்ணறிவு மூலமாக பரீட்சைத்தாள்களைத் திருத்தும் வசதி வரும் என்று நம்புவோமாக.
AI ஆல் உருவாக்கப்பட்ட பெண்கள் எல்லோருமே அழகாக இருக்கிறார்களே! அப்போ. AI ஒரு ஆணா?
# Artificial என்றாலே செயற்கை. ஆண்களின் அறிவு செயற்கையானது என்று நான் சொல்ல மாட்டேன். பெண்களுக்கு, தான் மட்டுமே அழகு என்றுதான் தோன்றும் என்றும் நான் நினைக்க மாட்டேன்.
& அப்படியா சொல்கிறீர்கள்? இதோ Meta AI உருவாக்கிய பெண்ணைப் பாருங்கள்!
ஏ ஐ யிடம் எது எப்படி கேட்கிறோமோ, அது அப்படி கிடைக்கும். 'அவளுக்கென்று ஒரு மனம்' போல, 'ஏ ஐ க்கென்று ஒரு மனமோ மூளையோ' கிடையாது!
பானுமதி வெங்கடேஸ்வரன்:
பாட்டுப் பாட, படம்,வரைய, நடனம் ஆட, மேடைப்பேச்சு, நடிப்பு போன்ற பல நுண் கலைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது, கதை எழுத இப்படிப்பட்ட பயிற்சி எதுவும் அளிக்கப்படுவதாக தெரியவில்லையே? எ.க.எ. என்று ரா.கி.ரங்கராஜன் ஆரம்பித்தார். ஆனால் எ.க.எ. வுக்கு reach இருந்ததாகத் தெரியவில்லை.
# நல்ல கதை படிப்பதில் இருக்கும் அளவுக்கு ஆர்வம் கதை எழுதுவதில் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். கதை நன்றாக எழுதுவது சொல்லித் தெரியாத கலையாக இருக்குமோ ?
ராகிர புத்தகத்தைப் படித்து கதை எழுதுபவர் எண்ணிக்கை பெருகியதாகத்தான் தோன்றுகிறது. ஃபார்முலா கதைகள் நிறைய வருகின்றனவே. குமுதம் கதைகளைப் பார்க்கவில்லையா?
தரையில் இறங்கும் விமானங்கள் கதையில் மாலியின் புல்லாங்குழல் கச்சேரியைக் பற்றி,"இப்போதே செத்துப் போயிட மாட்டோமானு தோணித்து.." என்று எழுதியிருப்பார்.(நல்ல விதமாகத்தான்) எந்த கச்சேரியாவது கேட்டு அப்படி உணர்ந்திருக்கிறீர்களா?
# விவரிக்க முடியாத அளவுக்கு ஆனந்தப் பரவசம் அனுபவித்தது உண்டு. " இப்பவே இந்த க்ஷணமே உயிர் விட்டுவிடலாம் " என்று ஏதோ ஜானகிராமன் கதையில் படித்ததுண்டு. அனுபவிக்கவில்லை.
(நான் நேரில் கேட்ட ஒரே மாலி கச்சேரி வெகு சாதாரணமாக இருந்தது என் துரதிருஷ்டம். அவரது கடைசி இந்தியக் கச்சேரி).
& கச்சேரி கேட்பதைவிட வேறு வேலை இல்லை; குடும்பம், குழந்தைகள் இல்லை என்றால், நல்ல கச்சேரி கேட்கும்போது அப்படி நினைக்கலாம்! ஆகவே அப்படி எல்லாம் ரசிக்க எனக்கு வாய்ப்பு இல்லை!
= = = = = = = = = = = =
படமும் பதமும்
நெல்லைத்தமிழன் :
சமீபத்தைய பயணத்தில், கெங்கேரி அருகிலிருந்த ஒரு உணவகத்தில் முள்பாகல் தோசை கிடைக்கும் என்று போட்டிருந்தார்கள். இது மிகவும் ஃபேமஸானது. சிறிய குழிவான தோசைக்கல் (7-8 இஞ்ச் இருக்கலாம்) வரிசையாக இருக்கிறது. அதை நன்கு துடைத்துவிட்டு, தோசை செய்பவர், இறைவனைத் தியானித்ததைப் பார்த்தேன். பிறகு அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி, கடாயின் உள்பக்கவாட்டிலும் மாவைப் பரத்திவிடுகிறார்.
சிறிது நேரத்தில் அதன் மீது நந்தினி நெய்யைப் பீய்ச்சியடிக்கிறார் (இங்க பெங்களூர்ல நல்ல பெரிய ரெஸ்டாரண்டுகளில் நெய்யை அளவுக்கு அதிகமாக தோசையில் ஊற்ற அஞ்சுவதில்லை. கலப்படமே செய்யமாட்டார்கள். எனக்குத்தான், இவற்றைச் சாப்பிட்ட உடனேயோ இல்லை ஒரு நாளுக்குள்ளாகவோ மாரடைப்பு வராமல் எப்படி கஸ்டமர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று தோன்றும்). பிறகு ஒரு தட்டைப் போட்டு மூடிவிடுகிறார்.
தோசை முறுகலாக ஆகட்டும். தட்டைப் போட்டு மூடியாகிவிட்டது. கொஞ்சம் காத்திருப்போம்.
வெறும் முள்பாகல் தோசையா? அப்படியே அதன் மீது ஒரு சட்னியைத் தடவி எடுத்துவிடுவோம். மசால் தோசையா? அதன் மீது மசாலை வைப்போம் என்று வைத்துவிடுகிறார்.
படத்தில் தோசை மீது மசாலா தெரிகிறதா? உடனே எடுத்துவிடுவதில்லை. கொஞ்சம் நேரம் காத்திருக்கிறார்.
பார்த்தீர்களா? முறுகலான நெய் சேர்த்த முள்பாகல் தோசை ரெடி. எனக்கு இதில் Bபாத் தோசை என்று ஒன்று பிடிக்கும். வேறு ஒன்றுமில்லை. முள்பாகல் தோசையின் உள்ளே எலுமிச்சை சாதம் வைத்துத் தருவார்கள், ஆந்திராவில் எம்.எல்.ஏ பெசரட் போல - ஆந்திராவில், அடையின் நடுவே உப்புமா வைத்துத் தந்தால் அது எம்.எல்.ஏ பெசரட். என்ன விநோத ரசனை என்கிறீர்களா? எனக்குத்தான் Bபாத் தோசை மிகவும் பிடிக்கும் என்று சொல்லிவிட்டேனே.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குநன்றி + வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய புதன் கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. திருமணம் அனைவரின் வாழ்விலும் ஒரு மறக்கவியலாத நிகழ்வாக வருவது. அதற்கு இப்போது போல் ஆடம்பரங்கள் தேவையில்லை. ஆனாலும் என்னசெய்வது? மாறி வரும் மனிதர்களின் மனபாங்கினைப் பார்த்து, காலமும் கண்களை மூடியபடி மாறித்தான் வருகிறது. காலத்தின் மீது பழியை போட்டபடி மனிதர்களும் தாம் மாறி விட்டதை நிரூப்பிக்கிறார்கள்.
கருப்புதான் அழகு என வாதிடுபவர்களும் உண்டே..! ஒருவரின்மனதின் அழகை காண முடியாத போது, நம் கண்கள் காணும் அழகுதான் அப்போதைக்கு உயர்வாக இருக்கிறது.
படமும் பதமும் பகுதியில் சகோதரர் நெல்லைத் தமிழர் அறிமுகப்படுத்திய தோசைக் கடை படங்கள் நன்றாக உள்ளது. தோசைகள் காலை நேரத்தின் இயல்பான பசியை தூண்டுகிறது. (அதுவும் நான் இன்று தூக்கம் வராமல் அதிகாலையிலிருந்தே( விட்டுப்போன) பதிவுகளை பார்த்துக் கருத்துக்களை தந்த வண்ணமிருக்கிறேன்.) குறைந்தளவு ஒரு காப்பியாவது தயாரித்து அருந்த வேண்டும். சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் சாண்டாகிளாஸ் பொம்மை படமும் அருமை.
தங்கள் பக்கமும் ரசனையாக உள்ளது. துப்பறியும் நிபுணர் களை அலசிய விதம் நன்று. பல எழுத்தாளர்களின் துப்பறியும் ஜோடிகளை நினைவுக்கு கொண்டு வந்து விட்டீர்கள். அனைத்தையும் படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுக்கு நன்றி.
நீக்குதோசை பசியைத் தூண்டுதா? சாம்பாரும் மி பொடியும் தே.சட்னியும் சேர்ந்தால்தானே தோசை சாப்பிடும்படியா இருக்கும். தனியா சாப்பிட்டாலே ஓகே என்பது இட்லி, பொங்கலுக்கு மாத்திரமே பொருந்தும்.
நீக்குஎன்னது? இட்லியைத் தனியாக சாப்பிடுவதா! இதுவரை கேள்விப்பட்டதில்லை!!
நீக்கு//என்னது? இட்லியைத் தனியாக சாப்பிடுவதா! இதுவரை கேள்விப்பட்டதில்லை// அதானே.. ?
நீக்குகச்சேரியோ அல்லது சில நிகழ்வுகளோ மனதில் பரவசத்தைக் கொண்டுவரும்.
பதிலளிநீக்குஇப்போதே செத்துப் போயிடலாமா என்ற எண்ணம் வாழ்க்கையில் மிகுந்த துன்பப்படுபவர்களுக்குத்தான் வரும் என்று நினைக்கிறேன்.
ஆம்; அதே!
நீக்குஅதை அப்படி புரிந்து கொள்ளக் கூடாது. சந்தோஷமா இருக்கும் போதே வாழ்க்கை முடிந்து விடாதா? என்ற எண்ணம். சாப்பாட்டில் எனக்கு பிடித்த ஐட்டத்தை கடைசியாக சாப்பிடுவது என் பழக்கம், அதைப்போல.
நீக்குமெட்டா ஏஐ உருவாக்கிய பெண்..... நிறம் எப்படி ஒரு பெண் அழகா இல்லையா என்று தீர்மானிக்கும்?
பதிலளிநீக்குபடுக்கையிலிருந்து எழும் எந்தப் பெண்ணும் மெட்டா ஏஐ பெண் போலத்தான் இருப்பார்.
ஒன்று கவனித்திருப்பீர்கள். அழகின்மையால் திருமணம் ஆகவில்லை என்று ஒரு பெண்ணுமே இருக்கமுடியாது. அவளுடைய ராஜகுமாரனுக்கு அவள் அழகாக்கத்தான் தோன்றுவாள்.
சரிதான்!
நீக்குகேஜிஜி பக்கம்... நல்ல புத்தகங்களில் அடிக்கோடிடுவதைக் கண்டிருக்கிறேன். டைம் பாஸ் துப்பறியும் புத்தகத்திலா? நல்லா எழுதியிருக்கீங்க.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகதை எழுத பயிற்சி...... எல்லாச் செயல்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டால் திறமை வந்துவிடும். ஆனால் இயல்பான திறமை இருந்து, கடும் பயிற்சி கொடுக்கப்பட்டால் மிகுந்த உயரத்திற்குச் செல்ல முடியும் அல்லது குறைந்தபட்சம் ஜொலிக்க இயலும்.
பதிலளிநீக்குஇதனால்தான் டெண்டுல்கர், ஶ்ரீகாந்த் அடைந்த உயரத்தை, பயிற்சி அளிக்கப்பட்ட அவர்களின் வாரிசுகளால் அடையமுடிவதில்லை..
நல்ல கருத்து.
நீக்குவெளிநாடுகள் டிசிப்ளின்....... இந்தியர்கள் மனப்பான்மை, பொதுவா உள்ளூரில் உருப்படாதே.. வெளிநாட்டிற்குப்்போனால் அங்குள்ள சட்டங்களை ஒழுங்காகப் பின்பற்றும் குடிமகனாக இரு என்பதுதான். இன்னொன்று, அவர்களின் சுயநலம். தன் வீடு நல்லா இருக்கணும், பொது இடம் சுத்தமா வச்சுக்கறது என் வேலை இல்லை. அதனால்தான் வீட்டைப் பெருக்கி குப்பையை ரோட்டில் வீசுவாங்க, குழந்தைகளை, நாய்களை வெளியில் அசிங்கம் பண்ண வைப்பார்கள். தங்கள் குழந்தை, நாய்தானே, நடுவீட்டில் அசிங்கம் பண்ணட்டும் என நினைக்கமாட்டார்கள்.
பதிலளிநீக்குசரியான கருத்து.
நீக்குஆசிரியர்களுக்கு அப்போது உள்ள மனநிலை.... எல்லா மனிதனும் தன் மனநிலையைக் கொண்டுதான் ரியாக்ட் செய்வான். இதற்கு விதிவிலக்குகள் வெகு அபூர்வம். இருந்தாலும் ஆசிரியர் நீதிபதிகள் தங்கள் செயல் இன்னொருவனின் வாழ்க்கையை மாற்றும் என்ற உணர்வோடுதான் அணுகுவார்கள் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஎங்க வீட்டில் கவுச்சி பண்றாங்க, வீட்டுக்கு வராதே என்று சொன்ன நண்பர்களைச் சந்தித்திருக்கிறேன். வெஜ் சமோசாவுக்குப் பதிலா சிக்கன் சமோசா கொடுத்தது பெரிய விஷயமா என்று சொன்ன எங்கள் ஸ்டோர் மேனேஜரையும் பார்த்திருக்கிறேன் (பஹ்ரைனில்). மனநிலைதான் காரணம்.
உண்மைதான்!
நீக்குநெல்லை, இப்படி எல்லாம் உணவு வைத்தால் ....உணவு வீணாகப் போவதுதான் கூடுதல். இல்லைனா வயிற்றுக்குள் போய் அவஸ்தைகள் தான் ஒரு சிலருக்கு இது அத்தனையும் வயிற்றுக்குள் போகுமாக இருக்கலாம் பிற அவஸ்தைகளை அவர்கள் கருத்தில் கொள்ளாமல் இருக்கலாம்.
பதிலளிநீக்குஆனால் என்னைப் பொருத்தவரை இது தேவையில்லை. தன் ஸ்டேட்டஸை சொல்லும் விதத்திலான கல்யாணங்கள். இல்லைனா பிற கல்யாணங்களை ஒப்பிட்டு தான் அதில் உசத்தியாக இருக்கணும் என்ற மனப்பான்மை. எதுவுமே நல்ல மனப்பான்மை இல்லை. தேவையற்ற ஆடம்பரம் என்பது என் தனிப்பட்டக் கருத்து. என்னதான் மனுஷங்க காலம் மாறி வந்தாலும் நாம் நம் எண்ணங்களில், கொள்கைகளில் நிலை நின்றால் நல்லது. ஆனால் இளையதலைமுறை அதற்கு ஒத்துழைக்க வேண்டும்!!!!!
கீதா
ஆம், அதே, அதே!
நீக்குதிருமண நிகழ்வு, திருமணத்துக்கு ஜோசியம் பார்க்கறது போன்ற அபத்தப் பூனைகளுக்கு சமுதாயப் பெரியவர்கள் மணி கட்டாமல் தூங்கிக்கொண்டிருப்பதுபோல நடிப்பது அபத்தத்தின் உச்சம்.
பதிலளிநீக்குஆம்.
நீக்குநெல்லை, சமீபத்தில் நீங்களும் பார்த்திருப்பீங்க காணொளிகள், உணவுத் தொழில் எவ்வளவு பெருகியிருக்கு....அதில் நடக்கும் சில பரிவர்த்தனைகள் பற்றியும் ஆரோக்கியம் பற்றியும் இப்ப ஹோட்டல்/ உணவுத் துறையில் முன்னில் இருப்பவங்க கூடி அரங்கம் நடத்தப்பட்ட காணொளிகள்
பதிலளிநீக்குஅதுல ஒவ்வொருத்தர் சொல்றதும் ஹோட்டல் பிஸினஸ் பத்தி சொல்றதும் சிலது பகீர்.
இங்க பெங்களூர் பொருத்தவரை அது போடு போடுன்னு போடுது. மக்கள் என்னத்த கொடுத்தாலும் சாப்பிடத் தயாராக இருக்காங்க.
கீதா
:)))
நீக்குஎன்ன பண்ணறது கீதா ரங்கன். பெண்கள்லாம் நல்லா சமைச்சாங்கன்னா, குறைந்தபட்சம் வாயில் வைக்கும்படியா சமைச்சாங்கன்னா ஏன் ஹோட்டல் தொழில் பெருகும்? ஹோட்டல்ல போயி காராபாத், உப்புமா சாப்பிடறாங்கன்னா அதைவிட வீட்டு நிலையை எப்படிச் சொல்ல முடியும்?
நீக்குநினைச்சேன் என்னடா இந்த நெல்லைய காணலியே நம்ம காலை இழுக்கன்னு! இழுக்கலைனா அந்த நாள் நாளாவே இருக்காதேன்னு!!!!!!!!!!!!!!!!!!
நீக்குசரி அண்ணே, நீங்க சென்னைக்குப் போனா எங்க போறீங்களாம்!!!!!!!!!!!!!!!!
கீதா
மனைவி, எப்போதும் அவங்க பண்ணி அவங்க சாப்பிடறதுனால, மாறுதலுக்கு ஹோட்டல் போகலாம். உப்புமா தோசை காராபாத இட்லிக்கு ஹோட்டல் போனா?
நீக்கு:)))
நீக்குகல்யாணங்களிலும் கேட்டரிங்க் இப்ப ஃபேமஸ் ஆகுது.
பதிலளிநீக்குஅது அவங்க பிஸினஸ் வாழ்வாதாரம்....அதைச் சொல்ல முடியாது ஆனால் யதார்த்தத்தில் மக்களிடையே ஒரு மனப் போக்கைப் பாதிக்கிறது என்பது உண்மை.
அத்தனை பைசா கொடுத்து அதாவது தன் சக்திக்கு மீறியும்...நடத்துவது என்பது கேள்விக்குறி.
கீதா
உண்மை.
நீக்குபிஸினெஸ் வாழ்வாதாரம்... இந்த மனப் போக்கு தவறு. சாராயம் கஞ்சா விக்கிறவனும் பிஸினெஸ் நோக்கில்தான் செய்யறாங்க. மக்கள் மனப்போக்கினீல்தான் தேங்காச் சட்னில முந்திரி சேத்து முந்திரி சட்னி, தயிர்்சாத்த்துல முந்திரிப் பருப்புன்று சர்கஸ் மாதிரி கேட்டரிங் பிசினெஸ் போயிடுச்சு
நீக்குநெல்லை, வயிற்றுப் புழைப்புக்காகத்தானே ரோட்டோரம் இட்லி போடுறாங்க பாட்டிகள் பெண்மணிகள் இளைஞர்கள்...எனவே அத்தொழிலைச் சொல்லலை.
நீக்குஇப்ப ஒரு கம்பெனியில் பணிபுரிபவன் தன் வருமானம் கூடினால் தன் வாழ்க்கையின் தரத்தை உயர்த்த நினைப்பான் தானே அது போல இதுவும் ஒன்று.
இதுக்குச் செய்யவே கூடாத தொழிலை ஏன் ஒப்பிடறீங்க.
நீங்க சொல்ற ஒரு பாயின்ட். பிஸினஸ் நோக்கில்னு சொன்னது. ரைட்டு. பிஸினஸ்னு இறங்கினால் பிஸினஸ் மைன்ட் தான் வரும். அதுல இலவசமா யாரும் தர மாட்டாங்க. இதுல நல்லவிதமா கேட்டரிங் செய்யறவங்களும் இருக்காங்க நான் சமீபத்துல ரொம்ப ஃபேமஸ் ஆகி, மோடிக்கும் சமைச்சவர், ஹெலிகாப்டர்ல வந்து இறங்கறவரைச் சேர்க்க மாட்டேன்!!!!!!! அது பக்க பிசினஸ். ஹைஃபை கேட்டகரி. ஒன்னுமே இல்லாததுக்கு புகழ்....அது எல்லாம் இதில் சேர்த்தி இல்லை, நெல்லை நான் சொன்னதில்.
கீதா
// அது பக்க பிசினஸ். ஹைஃபை கேட்டகரி. // ஹைஃபையா அல்லது ஹை-டெக் ஆ?
நீக்குஅது பக்கா பிஸினஸ் கேட்டகரி - hi-fi rich
நீக்குகீதா
முருகா சரணம்
பதிலளிநீக்குஓம் சரவணபவ !
நீக்குஹாஹாஹா கௌ அண்ணா, நெல்லை கல்யாணம் சாப்பாடுன்னு சொன்னதும் 'சரவணபவ' ந்னு கூப்பிட்டீங்களா. நெல்லை ஓடிடுவார்...
நீக்குகீதா
கௌதமன் சார்தட்டச்சு செய்ய நினைத்தது ஓம் சரவண பவன்.
நீக்குஓம் முருகா! ( இப்போ 'முருகன் இட்லி கடை' என்று சொல்லிவிடுவார்களோ !)
நீக்குதிருமணம் என்பது ஆடம்பரமாகி வருகிறது என்பதுதான் உண்மை.
பதிலளிநீக்குஎனக்கு உடன்பாடில்லாத விஷயம். ஆனால் நான் இங்கு பொதுவெளியில் சொன்னால் என் கருத்து எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்ற சந்தேகம் வருது.
கீதா
நியாயமான கருத்து.
நீக்குதிருமணத்துக்கு அநாவசியமாகச் செய்யும் செலவை, அப்படியே பெண்ணுக்கோ பையனுக்கோ பணமாகக் கொடுத்துவிட்டால் அது அவர்களது புது வாழ்க்கைக்கு உதவியாக இருக்குமா இருக்காதா? //
பதிலளிநீக்குகண்டிப்பாக...இதை நான் பல கருத்துகளில் இங்கேயேதான் சொல்லியிருக்கிறேன்.
சிம்பிளாக முடித்துவிட்டு குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அது அவர்களின் எதிர்காலத்திற்கும் உதவும்.
ஆனால் இக்கருத்தையும் நான் சொல்வது சரியாக இருக்காது என்னால் முடியாது என்பதால் அதைப் பொதுவாக நான் சொல்கிறேன் என்று எடுத்துக் கொள்ளப்படலாம்.
கீதா
மணமக்கள் இருவருமே பணக்கார வாரிசுகள் என்றால் .. ?
நீக்குசொல்லவே வேண்டாம், கௌ அண்ணா..... ஊருக்கே பந்தல் போட்டுடுவாங்க!!
நீக்குகீதா
:))) நீல விதானத்து நித்திலப் பூப்பந்தல் (சிலப்பதிகாரம் - கண்ணகி கோவலன் திருமணம் )
நீக்குபுகைப்படக்காரர்கள் பற்றியும் எங்கள் வீட்டில் யோசித்ததுண்டு. நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தை.
பதிலளிநீக்குகீதா
இப்போது சில இளைஞர்கள் ஆல்பம் வேண்டாம் என்று கூறி விடுகிறார்கள். சாப்பாட்டில் ஆடம்பரம் என்பது பற்றியும் பேசத்தொடங்கியிருக்கிறோம், பேசிப்பேசி மாறும்.
நீக்குஇன்று சற்றே மனக்குழப்பம்..
பதிலளிநீக்குநாளை சந்திக்கலாம்...
மனக்குழப்பங்கள் யாவும் அகல மலை மீது இருக்கும் முருகன் அருளட்டும்.
நீக்குநன்றி ஜி
நீக்குஎன்னாச்சு துரை அண்ணா,
நீக்குகீதா
வெளி நாட்டில் வசிப்பவர்களே கூட இங்க வரும் போது ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அதைப் பின்பற்றுவது இல்லை. தாங்கள் பின் பற்றாமல் நம்ம நாட்டைக் குறை சொல்வதும் பார்க்கிறேன். இது சரியான மனநிலை இல்லை.
பதிலளிநீக்குகற்பதற்கு நிறைய இருக்கு ஆனால் கற்பதில்லை என்பதே யதார்த்தம்.
இங்கு இப்போதுதான் பொதுவெளியில் அதாவது மக்கள் வசிக்கும் இடங்களில் பொதுக்கழிவறைகள் வந்துகொண்டிருக்கின்றன. சுத்தமாகவும் இருக்கு 5 ரூ கட்டணம். ஏனென்றால் பலருக்கும் குளிரில் நடைப்பயிற்சி செய்யும் போது இயற்கை உபாதைகள் வந்து தொலைக்கும் அப்ப வீட்டுக்குப் போவதற்குள் கஷ்டமாகிடுமே. சில பார்க்குகளிலும், சில பொது இடங்களிலும் கழிவறைகள் இருக்கின்றன.
கீதா.
ஆம், உண்மை.
நீக்கு
பதிலளிநீக்குசில திருமணங்களில் பப்பே முறையில் விருந்து நடத்துவதை செய்கிறார்கள். அப்படியாகும்போது வேஸ்ட் குறையும். ஆனால் அது போன்ற விருந்திலும் பலர் தேவைக்கு அதிகமாக எடுத்து ப்ரூஸி பிடிக்காமல் தட்டில் மிச்சம் வைத்து கொட்டுவதையும் கண்டிருக்கிறேன்.
ஒரு காலத்தில் பெர்ரி மேசன், அகாத கிறிஸ்டி, ஷேர்லக் ஹோம்ஸ் என்று தேடி தேடி படித்தது நினைவிற்கு வந்தது. அதிலும் திருவனந்தபுரத்துக்கு வந்ததற்கு பின்
Ellery Queen Mystery Magazine
என்ற ஒன்றை பப்ளிக் லைப்ரரியில் எடுத்து படிக்கும் பைத்தியக்கார ஆர்வமும் இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.
Jayakumar
உண்மைதான். தேடித் தேடி மர்ம நாவல்கள் படித்தது ஒரு காலம். அப்போதெல்லாம் தொ(ல்)லைக்காட்சி, ஸ்மார்ட் ஃபோன் போன்ற distractions கிடையாது.
நீக்குபஃபேயினால் உணவு அதிகமாக வீணாகும். பரக்காவெட்டி மாதிரி தட்டை நிரப்பிக்கொண்டு, பாதியைத் தூரப்போட்டு, புதுத் தட்டைத் தேடுபவர்கள்தான் அனேகம். அது தவிர, ஏதோ உலகத்தையே மாற்றப் போகிறவர்கள் மாதிரி அடுத்தவன் போய் உணவு வாங்கிட்டு வரணுமே என்ற பிரக்ஞை இல்லாமல் ஆங்காங்கே குழுக் குழுவாக அரட்டை அடித்து உணவைச் சிந்தி, அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள்தாம் அனேகம்.
நீக்குயெஸ்ப்ஃபே ல பலரும் வேஸ்ட் பண்ணுவாங்க...
நீக்குகீதா
வருகின்ற கூட்டத்தினரைப் பொருத்த விஷயம்.
நீக்குவிருந்து என்ற பெயரில் உணவை வீணாக்குவது
பதிலளிநீக்குஇன்றைய நாகரிகம்
ஆம்.
நீக்கு///பொதுக்கழிவறைகள் வந்துகொண்டிருக்கின்றன. சுத்தமாகவும் இருக்கு 5 ரூ கட்டணம்.///
பதிலளிநீக்குஎந்த ஊரில்??
இங்கே நாற்றத்தினுள் சென்று வருவதற்கு
பத்து ரூபாய்.
அவர் சொல்வது பெங்களூரில்.
நீக்குஆமாம் துரை அண்ணா இங்கு பெங்களூரில்.
நீக்குநாங்கள் குடியிருக்கும் பகுதியில் புதியதாகக் கடைகளுக்கு அருகில், கட்டியிருக்காங்க. சில பூங்காக்களிலும் இருக்கு
கீதா
விரைவில் செயற்கை நுண்ணறிவு மூலமாக பரீட்சைத்தாள்களைத் திருத்தும் வசதி வரும் என்று நம்புவோமாக.//
பதிலளிநீக்குஅது திறனுள்ளதாக உருவாக்கப்பட்டால் மட்டுமே சரியா இருக்கும்னு தோன்றுகிறது.
இல்லைனா, இப்ப நாம போடும் இன்புட்டில், ஒரு சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு படங்களாகவோ தகவல்களாகவோ கொடுத்துத் தள்ளுவது போல ஆகிவிடும்!
கீதா
செ நு பற்றி இப்போதைக்கு எனக்கு
நீக்குஅதிக தகவல்கள் தெரியாது. இப்போ என்னுடைய
பெரிய பேரன் (மகளின் மகன்) செ நு சப்ஜெக்ட் இஞ்சினீரிங்
படிப்பு படித்து வருகிறான். பிறகு அவனிடமிருந்து
விவரங்கள் தெரிந்து கொள்கிறேன்.
செ நு நல்லதும் இருக்கு அண்ணா. பெரும்பான்மை ரோபோக்களில் செ நு புகுத்திதானே நடக்க வைக்கறாங்க. தோசை வார்க்க வைக்கறாங்க. அதைக் கொண்டு தர வைக்கறாங்க....
நீக்குஎதிர்காலத்தில் செ நு மற்று மெ நி நிறைய வரும்.
கீதா
வரவேற்போம்!
நீக்குகதை எழுதும் பயிற்சி கொஞ்ச நாள் முன்ன பயிற்சிப் பட்டறைன்னு எங்கேயோ வாசித்த நினைவுக்கு
பதிலளிநீக்குஆன்லைனில் இருக்கு அக்கா. குழந்தைகளுக்கு, மாணவர்களுக்கு, பெரியவங்களுக்குன்னு சில தளங்கள் இருக்கின்றன.
குழந்தைகளுக்கு இது தமிழில், ஆங்கிலத்திலும் இருக்கு
https://www-planetspark-in.translate.goog/creative-writing/story-writing-for-class-5?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc&_x_tr_hist=true
Vedantu - மாணவர்களுக்கு
பயிற்சி வகுப்புகள் சில தளங்கள் நடத்துகின்றன
கீதா
நல்ல தகவல்கள்.
நீக்கு"இப்போதே செத்துப் போயிட மாட்டோமானு தோணித்து.." என்று எழுதியிருப்பார்.(நல்ல விதமாகத்தான்) எந்த கச்சேரியாவது கேட்டு அப்படி உணர்ந்திருக்கிறீர்களா?//
பதிலளிநீக்குஇது நல்ல வரியா என்று சொல்லத் தெரியலை பானுக்கா.
சில இசைக்கச்சேரிகள் நம்மை ஒரு பரவச நிலைக்குக் கொண்டு செல்லும். சில இயற்கைக் காட்சிகள் உட்பட.
ஆனால் அதை அனுபவித்து சந்தோஷப்படுவதை விட்டு இப்படி நினைப்பது என்பது சரியாகப் படவில்லை பானுக்கா.
இன்னும் அதை அனுபவிக்க வேண்டும் என்று தோன்றினால் அது சரி என்று படுகிறது. மீக்கு இப்படித்தான் தோன்றும். இன்னும் பார்க்க வரணும் கேட்கணும்....என்று.
கீதா
ஆம், கரெக்ட்
நீக்குபெங்களூர் மக்கள் கொடுத்து
பதிலளிநீக்குவைத்தவர்கள்...
ஆனாலும் இங்கும் ரோட்டோரத்தில்்பைப் திறப்பவர்கள் பலர் உண்டு,
நீக்கு:))))
நீக்குஇன்றைய கேள்வி பதில்கள் நன்றாக இருந்தன.
பதிலளிநீக்குதிருமண ஆடம்பரம் என்பது தம்மை உயர் ஸ்தானத்தில் காட்டுவதற்காக செய்யப்படுவதுதான் என்று கருதுகிறேன்.
நெல்லைதமிழன் அவர்களின் தோசை படங்கள்நன்றாக உள்ளன.
சன்ரா யோகா செய்யும் பொம்மை வித்தியாசமானது.
துப்பறியும் கதைகள் பற்றி கூறியது நன்றாக இருந்தது.
நன்றி.
நீக்குகௌ அண்ணா உங்கள் பக்கம் ரொம்ப சுவாரசியம்.
பதிலளிநீக்கு//அந்த பாணியை பின்பற்றி, விவேக் & ரூபலா (ராஜேஷ் குமார்) பரத் & சுசீலா (பட்டுக்கோட்டை பிரபாகர்) கதைகளில் கூட அப்படி ஒரு யுக்தியை பின்பற்றி எழுதியிருப்பார்கள். //
யெஸ் ...
கீதா
நன்றி.
நீக்குஅப்படி இருக்கும்போது அவர்கள் எழுதிய கட்டுரைகளில் இந்த துப்பறியும் நிபுணர் கோடுகள் இட்டு எதைக் கண்டுபிடித்திருப்பார் என்று யோசித்து மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். //
பதிலளிநீக்குஅண்ணே! ஒரு வேளை அவர் மஃப்டி ல இருந்த துப்பறியும் போலீஸோ எ
ஆ! முந்திரிக்கொட்டை கர்சர் வெளியிடுவில் போய் குதித்து உட்கார்ந்து பப்ளிஷ் பண்ணிவிட்டது...
நீக்குபோலீஸோ என்னவோ!!!!
கீதா
அவர் போலீசாக இருந்திருந்தால் அது இன்னமும் பங்கம். ஏற்கெனவே யாரோ ஒரு நிருபர் எழுதிய கட்டுரையில் அடிக்கோடுகள் இட்டு தேடும் மடையர் சிரிப்புப் போலீசாகத்தான் இருந்திருப்பார்!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்.
நீக்குகேள்விகளும் , பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதிருமணங்களில் அதிக அயிட்டங்கள் செய்து இலை முழுவதும் வைத்து அது வீணாக போவது வருத்தம் தான். எல்லா கல்யாணவீடுகளிலும் ஆனாலும் அது வழக்கமாக மாறி விட்டது.
அது போல புகைப்படம், வீடியோ எடுக்கும் முறைகளும் மாறி விட்டது.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குநெல்லைத்தமிழன் முள்பாகல் தோசை செய்முறை படங்களுடன் அருமை.
பதிலளிநீக்குபானுமதி வெங்கடேஷ்வரன் அனுப்பிய யோகா செய்யும் சாண்டாகிளாஸ் பொம்மை அழகு.
பாராட்டுக்கு அவர்கள் சார்பில் நன்றி!
நீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குகெளதமன் சார் பகிர்வும் நன்றாக இருக்கிறது. துப்பறியும் கதைகள் முன்பு படித்த நினைவுகள் வந்து போனது
பதிலளிநீக்குஎல்லா பத்திரிக்கையிலும் நிருபர் எழுதிய கட்டுரைகளை படித்த நபர் உண்மையை கண்டு பிடித்து இருப்பாரோ!.
:))))
நீக்குஅழகு என்பது பார்ப்பவர் கண்களில் அல்லவா இருக்கிறது.
பதிலளிநீக்குஇந்தப் பெண்ணுக்கு என்ன குறை? பாலசந்தர் பட ஹீரோயின் போல குண்டு முகமும், வண்டு கண்களுமாக இருக்கிறார். அழகற்ற பெண் என்றதும் கருப்பு நிறத்தவளாக அமைத்திருக்கும் AIயை வெறுக்கிறேன்.
பகிரப்பட்டுள்ள படம் அழகற்ற பெண் என்ற அர்த்தத்தில்
நீக்குபகிரப்பட்டது அல்ல. ஏ ஐ யிடம் யார் என்ன கேட்கிறார்களோ
அது கிடைக்கும். ஏ ஐ தன்னிச்சையாக எதையும் படைக்காது
என்ற பாயிண்ட் எடுத்துரைக்கத்தான்.
முன்பாகக் என்பதூ ஒரு கர்நாடகத்தில் ஒரு இடம். அங்கு வார்க்கப்படும் தோசை சிறப்பு. நம் பக்கத்தில் மணப்பாறை முறுக்கு போல. முல்பாகல் தோசையில் ஜவ்வரிசி சேர்ப்பார்கள் என்று நினைக்கிறேன். நடுவில் சற்று குண்டாகவும், ஓரங்களில் crisp ஆகவும் இருப்பதுதான் இதன் சிறப்பு.
பதிலளிநீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்கு/(நான் நேரில் கேட்ட ஒரே மாலி கச்சேரி வெகு சாதாரணமாக இருந்தது என் துரதிருஷ்டம். அவரது கடைசி இந்தியக் கச்சேரி). /
பதிலளிநீக்குஅட! எனக்கும் அந்தக் கச்சேரி அட்டெண்ட் செய்த ஞாபகம். நான் நேரில் கேட்ட ஒரே மாலியின் கச்சேரி....1986.....க்ருஷ்ணகான சபா.....மன்னார்குடி ஈஸ்வரன் மிருதங்கம்....த்வாரம் மங்கத்தாயாரு வயலின். ரமணி மாலிக்குப் பின்புறம் மேடையில் அமர்ந்திருந்தார். மாலி இடைவெளி விடும்போதெல்லாம் கும்பலின் ஒரு புறம் "we want Ramani" என்று அவ்வப்போது கோஷம் மாலியின் மூடை இன்னும் மோசமாக்கியிருக்கலாம். ஆரம்பித்து ஒண்ணரை மணி நேரத்துக்குள்ளேயே மங்களம் வாசித்து விட்டார் மாலி.
அந்தக் கக்கேரியைத்தான் நீங்கள் கடைசிக் கச்சேரி என்று குறிப்பிடுகின்றீர்களோ?
ஆம். நிறைய வாசித்து புத்தாண்டு வாழ்த்து சொல்ல வேண்டுகோள் சபா நிர்வாகிகளே வைத்தனர். "எனக்கு என்னவோ போலிருக்கிறது வாசிக்க முடியவில்லை" என்று சொல்லி தடால் என்று முடித்துவிட்டார். அவருடைய வெள்ளைக்கார சிஷ்யை/ரசிகை பின்னால் இருந்தார். மாலி சில நாட்களிலேயே காலமானார். (ரமணி ரமணி என்று ரசிகர்கள் கத்தியதாக நினைவில்லை. மாலி கச்சேரி என்றால் பக்க வாத்தியம் உட்பட எல்லா ருமே கப் சிப் என்று மிக்க பய சக்தியாக இருப்பார்கள். இல்லாவிட்டால் அவர் சட்டக் என்று முடித்து விடுவார். கிறுக்கு ஜீனியஸ்)
பதிலளிநீக்குபய பக்தி சக்தி ஆகிவிட்டது !
பதிலளிநீக்குகருத்துரை பதிந்த எல்லோருக்கும் நன்றி.
பதிலளிநீக்கு