"அப்படி ஒன்றும் பயப்படும்படியான ஆளரவமற்ற இடமாக இருக்காது என்று தோன்றியது...."
இப்படி முடித்திருந்தேன் சென்ற வாரத்துக்கு முதல் வாரம்...
ஆனால் போகப் போக அப்படியும் இருந்தது. கூகுள் மேப்பை நம்பி ஓரிடத்தில் போய் நின்றதும் அந்த இடத்தில் கோவில்கள் எதுவும் காணாததால் அங்கிருந்த டீக்கடையில் விசாரித்தேன்.
"மேப்பை நம்பி வந்தீங்களா? நிறையபேர் இப்படிதான் வந்து மாட்டிக்கறாங்க.. கொஞ்சம் முன்னாடியே அஞ்சூர்னு ஒரு ஊர் போர்ட் இருந்திருக்கும். அங்கே ரைட் எடுத்திருக்கணும். ஆனால் பரவாயில்லை, அதுவும் நல்லதுக்குதான். அப்படி வழியா போனா ரெண்டு கிலோமீட்டர் இறங்கி நடக்கணும். இப்போ இப்படியே நேரா போங்க...அந்தப் பக்கம் ஒரு பைபாஸ் வரும்.. அதுல ரைட் எடுத்து கொஞ்ச தூரம் போய் ரைட் எடுங்க.. உங்களுக்கே அங்க இங்கதான் ரைட் எடுக்கணும்னு தெரியக்கூடிய அளவுல ஒரு ஆர்ச் இருக்கும்?
"நன்றிங்க... உங்க பேர்?"
"செந்தில்குமார்" சொல்லி விட்டு தன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு போய்விட்டார். புகைப்படம் எடுக்கிறேன் என்பது அவருக்கு ஓரளவு புரிந்து கொண்டார் என்றே நினைக்கிறேன். நல்ல விஷயம்தானே அவரைப்பற்றிச் சொல்லி இருக்கிறேன்... கோபித்துக் கொள்ள மாட்டார்!
நாங்கள் அவர் சொன்னபடியே புறப்பட்டு சென்றாலும் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ஆங்காங்கே ஓரிரு கிராமத்து வாசிகளையும் விசாரித்தபடி அவர்கள் சொன்னபடியே பைபாஸ் அடைந்து, வலப்பக்கம் திரும்பி, ஆர்ச் கண்டு, மறுபடி வலப்பக்கம் திரும்பி உள்ளே சென்றோம். இப்போது பாதை இன்னமும் குறுகி, போகப்போக கட்டடங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது.
அப்படியே சென்று கொண்டிருந்ததில் கோவில் கோபுரம் கண்ணில் பட்டது. கோவில் பற்றிய விவரங்கள் சென்ற பகுதியிலேயே சொல்லி இருந்தேன்...
இமயமடக்கொடியம்பை ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் திருக்கோவில் திருஇடைச்சுரம், திருவடிசூலம் கிராமம், செங்கல்பட்டு வட்டம், காஞ்சீபுரம் மாவட்டம்.
"திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலம். இங்கே உள்ளே இருக்கும் சுவாமி ஸ்வயம்பு மரகதலிங்கம்.
திருஞானசம்பந்தருக்கு சுவாமியே போய் மோர் கொடுத்து, அவர் பசி தீர்த்து இங்கு அழைத்து வந்து பாட வைத்த தலம்.
கௌதம ரிஷி சனத்குமாரர்கள் எல்லாம் இங்கு வந்து வழிபட்டு போன திருத்தலம்.
சுவாமி மட்டும் இங்க சுயம்புவாக உருவாகி 3000 ஆண்டுகள் ஆகின்றன."
வெளியே சின்ன சன்னதிகள் உள்ள விநாயகர் மற்றும் சுவாமிகள் சிலையில்லாமல் இருக்கின்றன அல்லது சிலைகள் வெண் துணியால் மூடப்பட்டிருக்கின்றன. மராமத்துப் பணிகள் நடக்கின்றதோ என்னவோ.
திருஇடைச்சுரம் - (திருவடிசூலம்) ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறுஇறைவர் திருப்பெயர்: ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர். இறைவியார் திருப்பெயர்: கோபரத்னாம்பிகை, இமயமடக்கொடி. தல மரம்: வில்வமரம் - (Vilvam or Bael Tree) தீர்த்தம் : அக்கினி தீர்த்தம் வழிபட்டோர்:அம்பாள், அப்பர், சேக்கிழார், சனற்குமாரர், கெளதம ரிஷி, பிருங்கி ரிஷி ஆகியோர். Sthala Puranamபார்வதிதேவி பசுவடிவில் பால் சொரிந்து இறைவனை வழிபட்டத் தலம்.
வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த ஒரு பசு சரியாகப் பால் தரவில்லை. இடையன் பசுவைக் கண்காணித்த போது புதருக்குள் சென்று பால் சொரிவதைக் கண்டான். ஊர் மக்களுடன் சென்று பார்த்த போது சிவபெருமான் மரகதலிங்கமாகச் சுயம்புவாகக் காட்சி கொடுத்தார். அவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டனர். ஞானம் தரும் பாலைப் பூஜை செய்து கொண்டதால் சிவபெருமானுக்கு ஞானபுரீஸ்வரர் என்று பெயர். சிவபெருமானே இடையன் உருவில் திருஞானசம்பந்தரை அழைத்து வந்து காட்சி கொடுத்தார் என்று ஒரு செய்தி உண்டு
திருமுறைப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. வரிவள ரவிரொளி (1.78). 2. அப்பர் - சிந்தும் புனற்கெடில (6.7.10). 3. சேக்கிழார் - சென்னி இள மதி (12.28.1125,1126 & 1128) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம் Specialitiesதொண்டை நாட்டுப் பாடல் பெற்றத் தலங்களில் இது 27வது தலமாகும்.மக்கள் வழக்கில் தற்போது "திருவடிசூலம்" என்று வழங்குகிறது.
மலைகள் சூழ்ந்த இயற்கை சூழலில் கோயில் அமைந்துள்ளது.கருங்கல் கட்டமைப்புடைய பழைமையான திருக்கோயில்; கருவறை அகழி அமைப்புடையது.பிரகாரத்தில் பிரம்மாண்டேஸ்வரர் சன்னதி உள்ளது கோயிலில் நால்வர் பிரதிஷ்டை உள்ளது.மூலவர் - மரகத (பச்சைக்கல்) சிவலிங்கத் திருமேனி; சுயம்பு மூர்த்தி. தீபாராதனையின்போது தீபம் மரகத மேனியில்பட்டு பிரகாசிப்பது மனதிற்கு நிறைவைத் தருகிறது.
இத்தல சம்பந்தர் தேவாரப் பதிகம் முழுவதிலும் மரகதலிங்கத்தின் அழகு புகழ்ந்து பாடப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.சோழ அரசன் குலோத்துங்க சோழதேவன் ஆட்சியில் ஜயங் கொண்ட சோழ மண்டலத்திலுள்ள களத்தூர்க் கோட்டத்தின் பகுதியான வளநாட்டிலுள்ள திருவிடைச்சுரம் என்று(335 of 1908) குறிக்கப்பட்டுள்ளது.
இறைவன் பெயர் திருவிடைச்சுரமுடைய நாயனார்; திருவிடைச்சுரம் உடையார் என்றும், வழங்கப்பெறும். இங்கு ஜனனபுரீசுவரர் கோயில் ஒன்று உள்ளது. மேலும் கோவர்த்தன அம்பாள் திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் உருவம் நிறுவ, பெருந்தண்டிலத்திலுள்ள கருப்பக்கிருகம் கட்டப்பட்டதையும் கூறுகிறது(346 of 1908). இந்த இறைவி கருப்பக்கிருகத்திற்கு விளக்குப்போட, ஆவன செய்யப்பட்டுள்ளது(347 of 1906). மகாமண்டலேசுவர குமார ஜலகராஜ திருமலையதேவ மகாராயரால் விளக்குக்காகவும் படையலுக்காகவும் நிலம் கொடுக்கப்பட்டது(337 of 1908). பிள்ளையார் நீலங்கநாயனாரைப் பற்றி(342 of 1908) விவரிக்கின்றது. ஏனையவை விளக்கிற்காகவும் பிறவற்றிற்காகவும் பொன், நிலம், ஆடுகள், பசுக்கள் இவைகள் அளிக்கப்பட்டமையை அறிவிக்கின்றன.முந்தைய தலம்<திருக்கச்சூர் (கச்சூர்) ஆலக்கோயில் அடுத்த தலம்>திருக்கழுக்குன்றம்Contact Addressஅமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
செங்கற்பட்டு - திருப்போரூர் சாலையில் இத்தலம் உள்ளது. "திருவடிசூலம்" பேருந்து நிறுத்தத்திலிருந்து உள்ளே 1-கி. மீ. சென்றால் ஊரை அடையலாம். வாகனங்களில் கோயில் வரை செல்லலாம்.
தொடர்பு :
044 - 27420485, 09444523890
Related Content திருக்கச்சூர் (கச்சூர்) ஆலக்கோயில், மருந்தீசர் தல வரலாறு Read more திருக்கழுக்குன்றம் திருக்கோயில் தல வரலாறு Read more அச்சிறுபாக்கம் (அச்சரப்பாக்கம்) ஆட்சீஸ்வரர் திருக்கோயில்
உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் தெரிகிறது பாருங்கள் அந்த இடத்துக்குள் செல்லவேண்டும் ஈஸ்வரரையும், அம்பாளையும் தரிசிக்க...
உள்ளே இருபத்தைந்து வயதுக்குள் மதிக்கத்தகுந்த குருக்கள் இருந்தார். முகத்தில் தேஜஸ் தெரிந்தது. செல்போன் பார்த்துக் கொண்டிருந்தவர், உள்ளே வந்து கற்பூரம் காட்டி வரலாறு சொன்னார். செல்லில் ரெகார்ட் செய்து கொண்டேன். லிங்கேஸ்வரரை நான் படம் எடுப்பது பார்த்து 'படம் எடுக்காதீர்கள்' என்றதுக் சன்னதி உள்ளே செல்லை அதோடு உள்ளே வைத்து விட்டேன்.
கோபரத்னாம்பிகை இமயமடக்கொடிஉடனுறை ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர் சன்னதியை வலம் வரும்போது எடுத்த வீடியோ...
கீழே உள்ள படம் அடுத்து நாம் செல்லவிருக்கும் இடம்... முன்னோட்டம்!
============================================================================================
கனவுகள் சொல்வது என்ன ?
கனவுகளை பற்றியும் அவற்றால் ஏற்படும் பலன்களைப் பற்றியும் இன் னும்கூட விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். இவர்கள் கனவு களைப் பற்றிக் கண்டுபிடித்திருக்கும் சில புதிய உண்மைகளைக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
கனவுகள் ஏற்படுவதால்தான் பலருக்கு வாழ்க்கை என்பது இன்பமுள்ளதாக இருக்கிறது. விழித்திருக்கும்போது சோர்வுடன் இருப்பவர்கள்கூட கனவுகள் காணும் போது உற்சாகமாக இருக்கிறார்கள். தாம் விழித்திருக்கும்போது சாதிக்க முடியாத செயல்களைக் கூட கனவில் செய்து முடிப்பதாகக் கண்டு மகிழ்ச்சி யும் மனக்கிளர்வும் அடைகிறார்கள். உண்மையில் வாழ்க்கையில் தோல்வி யடைபவர்கள்கூட கனவில் வெற்றி களைக் காணமுடிவதால் நீண்ட நேரம் இவர்கள் தூங்குகிறார்கள்.
சிலருக்குக் கனவுகள்கூட வண்ண வண்ணமாகத் தோன்றுகின்றன. இப் படி பலவகை வண்ணங்களில் கன வுகள் தோன்றினால், இவர்களுக்கு வாழ்க்கை அமைதியாக இருக்கிறது என்று பொருள். பெண்களுக்குதாம் அடிக்கடி வண்ணங்களில் கனவுகள் தோன்றுகின்றன என்று கண்டறியப் பட்டிருக்கிறது. வண்ணங்களில் கனவு காணும் பெண்கள் பெரும்பாலும் வெற்றியடைபவர்களாக இருப்பார் கள்.
வாழ்க்கையில் பிரச்னைகளை எதிர்த் துச் சமாளிக்க அஞ்சுபவர்களுக்கு கனவுகளில் இந்தப் பிரச்னைகள் தோன்றுகின்றன. கனவுகளில் இவர்கள் பிரச்னைகளைக் கண்டு ஓடமுடிவ்தில்லை பிரச்னைகளுக்கு அஞ்சி மது அருந்து பவர்கள்கூட கனவுகளில் பிரச்னைகள எதிர்க்க வேண்டிய நிலைமை ஏற்படு கிறது. அப்போது சில தீர்வுகள் தோன்றுகின்றன. இதைப் படுத்தி வாழ்வில் உயரமுடியும். அச்சம் தரும் கனவுகள் ஏற்பட்டால். இவர்கள் பிரச்னைகளே வேண்டாம் என நினைப்பவர்கள் என்று பொருள். பயன்
சிலருக்குக் கனவுகள் தெளிவாக நினைவிருக்கும். ஆனால் விழித்திருக்கும் போது நடக்கும் நிகழ்ச்சிகள் அடிக்கடி மறந்துபோகும். அப்படியானால் இவர் களுக்கு ஞாபகசக்தி குறைவு என்று சொல்லிவிடமுடியாது. இப்படிப் பட்டவர்கள் புதாக ஏதாவது கண்டு பிடிக்கிம் ஆற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள்.
பல வாழ்க்கையில் புரியாத பிரச்னைகளுக்குக் கூட கனவுகளில்தாம் விடை கிடைக்கும். தாம் கண்ட கனவுகளுக்கு என்ன பொருள் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். தூங்கும்போது கூட நமது மூளை மட்டும் தூங்கு வதில்லை. ஆகையால் தூக்கத்தில்கூ நாம் வாழ்க்கை நடத்துகிறோம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
1987. கல்கண்டு
============================================================================================
சுஜாதா நண்பர் சுஜாதா பற்றி

ஸ்ரீரங்கத்து நினைவுகள்
------------------------------ -----------------
ஒரு நாள் .கிளாஸ் பீரியட்லே ராஜு !( சுஜாதா ) மல்கோவா மாம்பழம் முழுசா சாப்பிடணும் போல இருக்கு ! என்றேன்.
அதுதான் வடக்கு வாசல் மார்கெட்லே இருக்கே ! உன்னோட வீட்டுக்குப் பக்கம் .என்றார் .
இருக்கு ராஜு ! என் அப்பா வாங்கிண்டு வந்தார். வீட்லே முழுசா தர மாட்டாங்க !எல்லாம் நறுக்கி கடைசில கொஞ்சம் கிடைக்கிறது " என்றேன், மறு நாள் எங்க வடக்கு உத்திரவீதி பிரண்ட்ஸ் என் கிட்டே நம்ம வையாபுரி தோட்டத்திலே காவேரியே தொட்டுண்டு நிறைய கொத்து கொத்தா தொங்கறது ! உனக்குத்தான் நீஞ்ச தெரியுமே ! வரியா ! என்று சொன்னாங்க .
அடுத்த நாள் ராஜு விடம் சொன்னேன். இத பாரு சங்கரா! வீணாமாட்டிக்காதே! வையாபுரி நமக்கு தெரிஞ்சவந்தான் ! ஆனா அவன் அப்பா ரொம்ப கோபக்காரர்னு சொல்லுவான். உனக்கு நீஞ்ச தெரிஞ்சாலும் மாட்டிண்டே டிராயரை உருவி அம்மாமண்டபத்துலே கட்டி வச்சுருவாங்க ! காவேரி வேற புல்லா போறது !அந்த பசங்க கூட போகாதே " என்று அட்வைஸ் பண்ணினான்.
நான் சரின்னு சொன்னாலும் அவங்க என்னை கூட்டிக் கொண்டு போய்ட்டாங்க .அந்த மேலூர் போற வழியிலே மாங்காய் பாதி பழம் பாதி காய் ஆக நிறைய தொங்கிக் கொண்டிருந்தது . எங்க லீடர் சொன்னான்னு அவங்க மூணு பேரும் பறிச்சு தண்ணீரிலே குதிச்ச சத்தம் கேட்டு காவக்காரன் ஓடிவர ,இழுப்பும் சுழலும் அவங்களை வேகமாக தண்ணீரில் கொண்டு போகுது.அவங்க மூணு பேரும் அம்மாமணடபம் படித்துறையில் காவல்காரன்கிட்டே மாட்டிக் கிட்டாங்க!
நானு பயந்துபோய் , தண்ணீரோட போக , பக்கத்துலே அமலாஸ்ரம
படித்துறையில் பாதிரியார் என்னை இழுத்து கரையிலே ஏத்தி , நெறய
புத்திமதி சொல்லி அனுப்பிச்சார். நான் மாட்டிக்கலே! ஈரத்துணியோட
வீட்டுக்குப் போய் நல்லா திட்டு வாங்கினேன்.
சொன்னா கேட்கணும் ! மாம்பழத்துக்கு ஆசை பட்டு , சாமியார் இழுத்துப்
போடலேன்னா கல்லணைக்கு போயிருப்பே ! இனிமே இந்த ரிஸ்க்
எல்லாம் எடுக்காதே ! . .இது ரங்கராஜன் அட்வைஸ்.
அப்புறம் ஸ்கூல் லே ராஜு உடனே வையாபுரியே வரவழைச்சு "என்ன சங்கரு! உனக்கு மாம்பழம் வேணும்னு என்கிட்டே சொல்லி இருந்தா ஒரு பையிலே போட்டு கொடுத்திருப்பேன் .அனாவசியமாசுழலிலே மாட்டிக்க தெரிஞ்சியே"!
என்று வையாபுரியின் அன்பான அறிவுரை .
ராஜுவும் அவங்க உன்னோட தோட்டம் என்கிறதினாலே வந்தாங்க !
இலேன்னா வந்திருக்க மாட்டாங்க ! என்று சொல்லி அவனை அனுப்பிச்சான்.
அப்புறம் என்னிடம் " நீ வீட்டுக்கு போகும் போது என் வீட்டுக்கு வா ! என் அண்ணா உன்னை பாக்கணும்னு சொன்னார் என்றான்.
நான் போனேன்.
என்னடா ! சங்கர் ! மாங்காய் அட்வென்ச்சர் எல்லாம் பண்றே !
அப்படியே நீயும் தண்ணிலே கல்லணைக்கு காணாம போய் இருப்பே ! இனிமே இந்த மாதிரி எல்லாம் பண்ணாதே ! என்று அட்வைஸ் பண்ணிட்டு என்கையில் ரெண்டு பெரிய மல்கோவா மாம்பழம் கொடுத்தார் .
தேங்க்ஸ் அண்ணா ! என்று சொல்லிட்டு கீழ வாசல் வெள்ளை கோபுரம் கீழ உத்திர வீதி குழாய் கிட்ட நின்னு ஒரு முழு பழத்தையும் தோலோட சாப்பிட்டு வீட்டுக்கு போனேன்.
அடுத்த நாள் ரங்கராஜனிடம் நிறைய தேங்க்ஸ் சொன்னேன்.
அவர் சொன்னது . "எப்பவுமே கரெக்டா போ ! மாம்பழம் பெரிசு இல்லே ! லைப் பெரிசு ! எதுவும் யோசிச்சு கரெக்ட் டெசிஷன் எடு !
அது அந்த வயதில் எவ்வளவு நிதானம் ! எவ்வளவு சமயோஜிதம் !
இவர் உலகப் புகழ் பெறும் ஒரு உன்னத மனிதர் என்பதற்கு இது போன்ற அனுபவங்கள் உண்மையை தெரிவிக்கிறது !
அவருடன் நான் இருந்த நாட்கள் இறைவனால் தரப் பட்டவை !
அவர்தான் அருமை நண்பர் "சுஜாதா" என் பள்ளித் தோழர்
- சங்கரன் அஸ்வதி -
இது மீள் பதிவானாலும் என் மனதில் என்றும் இருப்பவை
சங்கரன் அஸ்வதி முகநூல் மத்யமர்
===============================================================================
என் To be மருமகள் ஊரிலிருந்து அவள் வீட்டு ஜன்னலில் ஒரு பறவை வந்து அமரும் படம் அனுப்பி இருந்தாள். மலையடிவாரத்தில் ரம்யமான சூழ்நிலையில் அமைந்திருக்கும் அவர்கள் வீடு. படம் பார்த்ததும் எனக்குத் தோன்றியதை எழுதி அவளுக்கு அனுப்பி விட்டு, என் தங்கைக்கும் அனுப்பினேன். தங்கை உடனே கவிதையாலும், படத்தாலும் கவரப்பட்டு தன் வாட்ஸாப்பில் அதை ஸ்டேட்டஸாக வைத்து கௌரவித்தாள்!
என்ன வேண்டுமாம்
எட்டிப் பார்க்கும்
சுட்டிப் பறவைக்கு?
ஓரக்கண்ணால் கள்ளப்பார்வை
பார்த்து
அலகு திறந்து
அழகு வாய் காட்டி
கால் மறைத்து
கவ்வி நின்று
குறும்பு செய்தால்
திறந்து விடுவார்களோ
கதவை?
கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்த்தபோது அது கோபித்துக் கொண்டதுபோல திரும்பி உட்கார்ந்திருந்ததாம்!
=================================================================================
பொக்கிஷம், ஜோக்ஸ், துணுக்ஸ்...
சிரிப்பு வெடி!







.jpg)




















காலை வணக்கம்.
பதிலளிநீக்குநமது அண்ணன் ஈஸ்வர ஸ்தல புராணம், போகும் வழி, மஹிமையெல்லாம் அற்புதமா சொல்லி நம்மை ஆற்றுப்படுத்துகிறார். தலைப்பு: மோகத்தின் நிறங்களை இருளில் நீர் காண முடியாதே.
இதுல இன்னொரு வேடிக்கை என்னன்னா, 'மோகத்தின் நிறங்களை' என்றதும் காம தகனம் சமாச்சாரமும், 'நீர்' என்ற சொல்லை Water என்று அர்த்தப்படுத்திக்கொண்டு, ஒருக்கால் இதுவும் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்று (அப்பு ஸ்தலம்) என்று ஏதாவது பதிகத்தில் வருகிறதா என்று மண்டையை பிய்த்துக்கொண்டேன்!
ஹா.. ஹா.. ஹா... வாங்க TVM, முதற்கண் அந்த விளம்பர வாசகம், வகை என்னை கவர்ந்தது. இரண்டாம்கண்.. ! ... இடைசுரம் என்று தலைப்பு கொடுத்தா பத்து பேர் வருவாங்க... இது இன்னும் முப்பது பேரை அழைத்து வரும்! ஹிஹிஹி...
நீக்குClickbait, et tu Engalblog?! Lol
நீக்கு:))
நீக்குபாடல் பெற்ற தலத்தை நோக்கிய பயணம், கோவில், திருவிடைச்சுரநாதர் படங்கள் மனதைக் கவர்ந்தன. அமைதியான கோயில். கொஞ்ச நேரம் அங்கே இருந்தீர்களா இல்லை காலில் வெந்நீர் கொட்டிவிட்டதுபோல அடுத்த கோயிலை நோக்கிச் சென்றீர்களா?
பதிலளிநீக்குவாங்க நெல்லை.. நல்ல போதுமான நேரம் எடுத்துக் கொண்டு அமர்ந்திருந்தோம். பிரகாரச் சுற்று காணொளி பார்த்தீர்களா? அதற்கொரு பாடல் சேர்க்க நினைத்து மறந்து விட்டது! நேரமில்லை!!
நீக்குசங்கரனின் எழுத்து நடையே நல்லா இருக்கு. எனக்கும் மாம்பழத்தை முழுதாகச் சாப்பிடத்தான் பிடிக்கும். ஒரு சல வெரைட்டிகள் தவிர மற்ற எல்லா மாம்பழங்களின் தோலையும் விடுவதில்லை.
பதிலளிநீக்குஎனக்கும் அவ்வண்ணமே... இரண்டு முறை சொல்ல வேண்டுமா? அதாவது தோல் விஷயத்திலும் அவ்வண்ணமே!
நீக்குTo be மருமகள்... வார்த்தை குழப்புகிறது. அடுத்த பையனுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதா?
பதிலளிநீக்குகவிதையும் படமும் ரசிக்கும்படி இருந்தது
ஆம். 26 ஏப்ரல், அல்லது ஜூனில் திருமணம் இருக்கலாம்.
நீக்குகனவுகள் சொல்வது... விஷயம் இல்லாமல் சுத்தப்பட்ட பகுதி இது. ரசிக்கும்படி இல்லை, உண்மையைச் சொல்லாத்தால்.
பதிலளிநீக்குகனவில் எக்சாமுக்குப் படிக்கவில்லையே, என்று பயந்து முழித்துக்கொண்டு, அட்டா நாமதான் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறோமே என நிம்மதி அடைந்திருக்குறேன். பறப்பதுபோல பல முறை கனவு வந்ததுண்டு. என்னால் பறக்கமுடியும் என நம்பினேன்.
பின்னே தமிழ்வாணன் எழுத்துகளை இப்போது படித்தால் எப்படி இருக்கும்? அதுதான்.
நீக்குசில சமயங்களில் எனக்கு இப்போது நாம் கனவிலிருந்து விழித்து எழுந்து மூன்றாம் வகுப்புக்கு செல்ல ஸ்கூல் கிளம்பப் போகிறோம் என்று நினைபபதுண்டு. ஏனென்றால் அந்த நேரம் எனக்கு அப்படி ஒரு கனவு வந்திருந்தது!
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம். அனைவரும் பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதிருஇடைச்சுரம் ஞானபுரீஸ்வரர் கோவிலைப் பற்றிய விளக்கங்களுடன் இன்றைய வியாழன் கதம்பம் நன்றாக உள்ளது.
இமயமடக்கொடியம்பை ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் திருக்கோவில். அம்பாள் பெயரே மிக அழகாக இருக்கிறது. சிவ தரிசனம் பெற்றேன். காணொளிகளும், படங்களும் நன்றாக உள்ளது. 123 சுட்டிகளிலும் சென்று படித்து வந்தேன். திருஞான சம்பந்தருக்கு அருளிய ஈஸ்வரர் அதுபோல் நம்மையும் அழைத்தால் சென்று தரிசிக்க முடியும். உங்களுக்கு அந்தப் பேறு கிடைத்துள்ளது. அதனால் அத்தகைய பேறு பெற்ற உங்களையே வணங்கிக் கொள்கிறேன்.கோவிலின் விபரங்களையும், அழகையும் சொல்லிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மனிதனை வணங்குதல் கூடாது. அதுவும் அற்ப மானிடனாம் என்னை.
நீக்குசன்னதியை சுற்றி வந்தீர்களா?
மனித உருவத்திற்குள்தான் இறைவனும் இருக்கிறான். கோவில், கோவிலாகச் சென்று இறைவனை தரிசிக்கும் பேறு பெறுபவர்கள் இறைவனின் ஒரு அம்சங்கள். சன்னதியை சுற்றி வந்தேன். கோவில் பிரகாரம் பெரியதாகவும், அழகாகவும் உள்ளது. கோவில் குருக்களின் பேச்சையும் மீறி உங்கள் செல் இறைவனை காணும் பேற்றை எங்களுக்குத் தந்து விட்டதும் அந்த இறைவனின் அருள்.
நீக்குமதுரையில் வசித்தபோது வாரத்துக்கு இரண்டு முறை தல்லாகுளம் பெருமாள் கோவில் செல்வேன். அப்போது சண்முகநாதன் என்ற ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்திருப்பார். அவர், நான் உட்பட யாரைக் கண்டாலும் "வணக்கம்.. ஆத்மா ஆத்மாவை வணங்குகிறது" என்பார். அப்போது கிண்டலாக சிரிப்போம். இப்போது அவர் பெருமை புரிகிறது.
நீக்குஎன்னைவிட அதிகமாக நெல்லைதான் கோவில் கோவிலாக சுற்றுகிறார்- அதுவும் உண்மையான பஜ்ஜியுடன்... சே... நம்ம புத்தி போகுதா பாருங்க... உண்மையான பக்தியுடன்! குருக்கள் சந்நதிக்குள்தான் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றார். வெளிப்ரகாரங்கலில் எடுக்க எல்லா கோவில்களிலும் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
ஆம்.. நம் நட்பான பதிவர்களில் நெல்லைத்தமிழர் சகோதரரும் உண்மையான பக்தியுடன் பல கோவில்களுக்குச் சென்று பதிவுகளை விபரமாக தருபவர்தான். அப்போது அவரையும் நான் மானசீகமாக வணங்கிக் கொள்வேன். நம் சகோதரி கோமதி அரசு அவர்களும் அப்படித்தான் நிறைய கோவில்களுக்கு சென்றவர். இப்போதும் சென்று கொண்டிருப்பவர். ஆன்மிகம் அறிந்தவர். "ஆலயம் தொழுவது சாலவும் நன்றல்லவா.? எனக்கும் சிறுவயதில், கடமைகள், குடும்பப்பற்று, ஆசைகள் என மனம் கலங்கித்தான் இருந்தது. இப்போது நிறைய கோவில்களுக்குச் செல்ல மனம் விரும்புகிறது. அதனால் கோவில்களுக்குச் சென்று இறைவனை தரிசித்தவர்களை மனதால் வணங்குகிறேன். நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகனவுகளைப்பற்றிய பகுதி நன்று. பெரும்பாலும் கனவுகள் சிலவற்றை தவிர்த்து, பல எழுந்ததும் மறந்து விடுகிறது. நமக்கு, நாமே, இல்லை வீட்டில் பிறருக்கும் சொல்லி உணர்த்தக்கூட இயலாமல் போய் விடுகிறது. கனவுகள் அனைவருக்கும் ஒரு தீராத பிரச்சனைகள்தாம்.
பறவையும், கவிதையும் அழகு. அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம். பெரும்பாலும் கனவுகள் மறந்து விடும். இறைவன் நமக்கு சிலவற்றை உணர்த்தி விட்டு பின்னர் மறக்க வைத்து விடுவான் போலும். கவிதையை ரசித்ததற்கு நன்றி.
நீக்குஎசப்பாட்டு
பதிலளிநீக்குகதவைத் திற
உனக்கும் ஒரு சேதி
தூது அனுப்பியவர்
யார் என்று
சொல்லவும் வேண்டுமோ?
ஹாஸ்ய வெடி ஹா ஹா
ராக்கெட் ஜோக்கில் ராக்கெட்டா வெடியா? எந்த சிவகாசி ராக்கெட்டுக்கு தலையில் தீ கொளுத்துகிறார்கள்?
தேர்தல் கவிதை நன்றாக உள்ளது.
Jayakumar
வாங்க JKC ஸார்.. ஆமாம், தூது அனுப்பியவர் யாராக்கும்?! மற்றவற்றையும் ரசித்ததற்கு நன்றி .
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய தலைப்பில் வார்த்தைப்பிழையோவென முதலில் நினைத்தேன். அது துணையெழுத்தின் தவறென தோன்றிய போதும், பதிவின் இறுதியில் துணையெழுத்து அழைத்துச் சென்றது ஒளி விளம்பரத்தை நோக்கி.
திருஞான சம்பந்தரை இடையன் வேடத்தில் வந்து தயிர் தந்து பருகச்சொல்லி அவரின் களைப்பைப் போக்கி, தன் கோவில் தரிசனத்தையும் காணத்தந்து பல பாடல்களைப் பெற்ற இறைவனும் ஒரு துணைஎழுத்தன்றோ.? அவன் துணையின்றி ஒரு அணுவும் அசையாது என்பதை நாம் உணர்ந்தும், "மோகம், மேகமாக இருக்குமோவென்ற ஒரு மனத்தடுமாற்றம்.ஏன் வரவேண்டும்.? " ஏனெனில், துணையாக வந்தவரை பரிபூரணமாக உணர நாம் ஞானசம்பந்தர் போல ஞானம் பெற்றவர்களில்லையே..!! ஒளிப்பிழம்பான இறைவனையும் எவ்வாறு எப்பிறவியில் இப்படி சிந்தையொன்றி காணப்போகிறோம்..! நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீங்கள் எப்போதுமே வித்தியாசமான அர்த்தங்களைக் கண்டுபிடித்து வார்த்தைகளில் விளையாடுபவர். இப்போதும் அப்படியே... ஆனால் இறைவன் துணை எழுத்தா, முதல் எழுத்தா?
நீக்குமுதலாக நின்று துணையாக வருபவன். துணையாக வருபவனை புரிந்து கொள்ளாமல், எப்போதும் முதலாக இருப்பதற்கு மட்டுமே விரும்புகிறவர்கள் மனிதர்கள்.
நீக்குமுதலாக நின்று துணையாக வருபவன் இறைவன் என தட்டச்சு செய்தேன். (இறைவன் மாயமானவன்தானே..! அதனால் எழுத்துருவில் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து விட்டான். :)).)
நீக்குபுரிகிறது கமலா அக்கா... இந்தக் கோவிலை உண்மையான பக்தியுடன் இறைவனை நினைத்து அணுகிய உங்களை வணங்குகிறேன்.
நீக்குநேற்று திருக்கார்த்திகை. வீட்டிலேயே வழிபாடு. சிவ சிந்தனைகள். இன்று அருமையான விபரங்களுடன் கூடிய ஒரு பழமையான சிவன் கோவிலைப் பற்றிய கட்டுரை. இன்றும் சிவ தரிசனம் தங்களால் காண முடிந்தது. அதற்கு தங்களுக்கு என் அன்பான நன்றி. 🙏.
நீக்குமிக்க நன்றி கமலா அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசுஜாதா அவர்களைப்பற்றி அவரின் நண்பர் எழுதிய பதிவு நெகிழ்வு. சிறுவயதின் பயமில்லாத செய்கை, பின்விளைவுகளை பற்றி எப்போதும் யோசிக்காது. நல்ல எழுத்து நடை.
ஜோக்ஸ் அனைத்தும் நன்றாக உள்ளது. இறுதியில் உள்ளது எப்போதோ படித்ததாக நினைவு. இப்போதும் படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம் கமலா அக்கா, அவர் எழுதியதைப் படிக்கும்போது எனக்கு என் அனுபவம் நினைவுக்கு வந்தது!
நீக்குஇன்றைய பதிவில் எல்லாமே சூப்பர். மிகவும் இரசித்தேன்.
பதிலளிநீக்குஹிஹிஹி.... நன்றி KGG.
நீக்குஸ்ரீராம், தலைப்பு கவர்ச்சி.
பதிலளிநீக்குஅருமையான கோவில். ஆட்கள் குறைவாக வந்து போனாலே அக்கோவில் அழகாக அருமையாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட எண்ணம். எனக்கு அப்படியான கோவில்கள் ரொம்பப் பிடிக்கும். ஸோ இக்கோவில்.
முதல் வீடியோ அழகு....போகும் வழி பச்சை மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
கீதா
வாங்க கீதா... நன்றி. விளம்பரத்தின் முதல் வரி.. அதாவது விளக்கை அணைக்காதீர் ஐதான் தலைப்பாக வைக்க முதலில் நினைத்தேன்!
நீக்குஇமயமடக்கொடியம்பை ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் திருக்கோவில் திருஇடைச்சுரம், திருவடிசூலம் கிராமம்,//
பதிலளிநீக்குபெயர்களே மனதைக் கொள்ளை கொள்கின்றதே!!
இக்கோவிலைக் குறித்துக் கொண்டுவிட்டேன். போக முடியுதோ இல்லையோ...
கோவில் முகப்புத் தோற்றம் ஆஹா!
கீதா
ஆமாம்.. பெயர்.. அதுவும் அம்மனின் பெயர் அமர்க்களம்.
நீக்குதலபுராணம் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்கு//வெளியே சின்ன சன்னதிகள் உள்ள விநாயகர் மற்றும் சுவாமிகள் சிலையில்லாமல் இருக்கின்றன அல்லது சிலைகள் வெண் துணியால் மூடப்பட்டிருக்கின்றன. மராமத்துப் பணிகள் நடக்கின்றதோ என்னவோ.//
அப்படித்தான் தோன்றுகிறது, ஸ்ரீராம்.
இரண்டாவது வீடியோவும் சூப்பர். படங்கள் பிரமாதமாக வந்திருக்கின்றன.
பாடப் பெற்ற பழம் பெரும் தலம் படங்களே சொல்கின்றன...
இதை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். படிக்க முடிகிறதா?//
முதல்ல ஓரம் கட்டி என்பதைப் பார்த்ததும் ஆ என்று தோன்ற அப்புறம் பிரித்துப் போட்டிருப்பதுப் புரிந்துவிட்டது. கொஞ்சம் தான் வாசிக்க முடிகிறது திருவிடைசசூலம்...ஞானபுரீஸ்வரர்....கும்பாபிஷேகம்....ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுடன் உதவியுடன் , கிருபானந்தவாரியார் சுவாமிக...இவ்வளவுதான் இது போதுமே நாமே புரிந்து கொண்டுவிடலாம்.
குறிப்புகள் வைத்துக் கதை எழுதக்கூடியவங்க நாம இதையும் கட்டிவிட மாட்டோம்??? ஹிஹிஹிஹி
கீதா
உண்மைதான்.. அதே அளவுதான் நேரிலும் படிக்க முடிந்தது. லிங்க வடிவத்தின் கீழ் பாகம்.. அதன் பெயர் மறந்து விட்டது.. அதுவும் வெளியில் வீசப்பட்டிருக்கிறது.. அப்போ உள்ளே இருக்கும் லிங்கேஸ்வரர் பழமையானவர்தானா என்பது சந்தேகம் வருகிறது...
நீக்குஎனக்குக்கனவுகள் வருவதே அபூர்வமாக இருக்கிறதே!! கனவுகள் மற்றும் நம் மனம் பற்றி Sigmund Freud புத்தகம் எப்போதோ வாசித்த நினைவு,.கொஞ்சம் தான்...
பதிலளிநீக்குபல வாழ்க்கையில் புரியாத பிரச்னைகளுக்குக் கூட கனவுகளில்தாம் விடை கிடைக்கும். //
கதை எழுத எனக்குச் சில விஷயங்கள் அல்லது கதையில் நான் ஏற்கனவே எழுதியதை இப்படி எழுதினால் நல்லாருக்குமோ என்றது போன்றவை காலையில் நான் எழும் போது மனதில் வரும். உடனே எதிலேனும் போட்டு வைக்க வேண்டும் என்று நினைத்து சிலப்போ முடிகிறது சிலப்போ முடியாமல்...ஆனால் கனவுகள் வந்திருக்காது..
அப்ப நினைத்துக் கொள்வேன் மனதில் உள்ளவை தூக்கத்தில் ப்ராசஸிங்க் நடக்கிறதோ....அது நல்லதில்லையே உறங்கும் போது மூளை ரெஸ்ட் எடுக்க வேண்டுமே ஹைப்பராக இருந்தால் எண்ணங்கள் மோதிக் கொண்டிருந்தால் நல்லதில்லையே என்றும் தோன்றும். தூக்கம் நல்ல தூக்கம் இல்லை...
கீதா
முக்கால்வாசி நேரம், கனவுகள் காலையில் எழும்போதே மறுபடி மனசுக்குள், மனதின் ஆழத்தில் சென்று புதைந்து கொள்கின்றன. எனவே நினைவுக்கு வராது. சில அதிகப்ரசங்கி கனவுகள் மட்டும் நினைவில் இருக்கும்!!!
நீக்குஅவ்வப்போது தோன்றுவதை உடனே உடனே எழுதி வாய்க்கா விட்டால் அப்படியே மறந்து விடும்! ஆனால் கதைக்கு நாம் நினைக்கும் கருக்கள் கனவாக வருவதற்கு சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு! ஒன்று பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் போகாத இடம் பற்றி கனவுகள் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் வருவதில்லை. பழகாத மனிதர்களும் அப்படியே!
அனைவருக்கும் காலை வணக்கம். சங்கரன் அஸ்வதி(மத்யமர்) சுஜாதாவின் நண்பரா? NAM என்னும் நார்த அமெரிக்க மத்யமர் குழுவில் இருக்கிறார். 90+ வயதில் காலையில் கனடாவில் பிரேக்ஃபாஸ்ட், மதியம் லஞ்ச் அமெரிக்கா, இரவு இந்தியாவில் தாலி என்று உலகம் சுற்றும் வாலிப வயோதிகராச்சே..? intresting!
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... ஆமாம், நான் மற்றவர்கள் பதிவுகளை படிக்கிறேன்,. அதில் தெரிந்து கொண்டது இது.
நீக்குஉங்கள் பறவைக் கவிதையும், சந்தானம் என்பவரின் தேர்தல் கவிதையும் சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி பானு அக்கா.
நீக்குகனவுகள் கருப்பு வெள்ளையில்தான் வரும் என்பார்கள். ஆனால் எனக்கு வண்ணக்கனவுகள் வந்திருக்கின்றன.
பதிலளிநீக்குஜோக்ஸ் எல்லாமே அருமை! அதிலும் அந்த பாம்பு வாணம் ஜோக்ஸில் பெரியவரின் முக பாவம் ஒண்ணாங் கிளாஸ்!
நீக்குகனவுகள் கருப்பு வெள்ளையில் வருமா, வண்ணத்தில் வருமா என்று என்னால் வகைப்படுத்த முடியாது. கனவு வரும். அவ்வளவுதான்! நன்றி பானு அக்கா.
அதிர்ஷ்டம் பற்றிய நகைச்சுவை துணுக்கை படித்ததும் சிறு வயது ஞாபகம் வந்தது. அண்டங் காக்கைகளை ஒன்று மட்டும் தனியாக இருப்பதை பார்த்தால் சோகம், இரண்டு பார்த்தால் மகிழ்ச்சி(one for sorrow, two for joy) என்பதையெல்லாம் நம்பிய என் கடைசி அக்கா, ஒரு அண்டங் காக்கையைப் பார்க்க நேரிட்டால் தான் மட்டும் பார்க்காமல் என்னையும் பார்க்கச் சொல்லி கெஞ்சுவாள். அதாவது தனியாக இருக்கும் அண்டங் காக்கையை பார்க்கும் தோஷம் இரண்டு பேர்கள் அதைப் பார்த்தால் நீங்கி விடுமாம்.. அதெல்லாம் மூட நம்பிக்கைகள், அப்படியெல்லாம் கிடையாது என்று மறுத்து விடுவேன்.
பதிலளிநீக்குபரிகாரங்களை நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம். ஒருவகையில்பலலதுதான். அனாவசிய மனக்குழப்பங்கள் இருக்காதே...
நீக்கு