ஜெகதீச சந்திர போஸ்
ஸ்ரீராம்
"ஆ.. வலிக்கிறது" - ரத்தக்கண்ணீர் சிந்தியது பீட்ரூட்.
நறுக்கியவன் காதில் அது விழுந்திருக்க வாய்ப்பில்லை. உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக் கொண்டிருந்தது.
கொஞ்ச காலத்துக்கு முன்னால், தான் செடியில் இருந்தபோது நடந்த சம்பவமும், உரையாடலும் அரைமயக்கத்தில் நினைவுக்கு வந்தது.
"ஆ.. என் பிள்ளை.. என் பிள்ளையைப் பறித்து விட்டார்கள்" நடுங்கித் துடித்தது செடியின் தண்டு.
உடலின் அசைவினால் கவனம் கலைந்த பீட்ரூட் செடி குனிந்து தண்டு மகளை பார்த்தது.
"வளர்ந்து வாலிபனாகி வளப்பமாக இருக்கிறானே என்று காலைதான் கர்வமடைந்தேன்... இதோ பிரித்துச் சென்று விட்டார்கள்..." தண்டிலிருந்து இரண்டு துளி நீர் - கண்ணீர் - வெளிப்பட்டு பிடுங்கப்பட்டு மண்ணில் இருந்து வெளிவந்திருந்த வேரின் மீது தெறித்தது.
"நாமெல்லாம் அழகா கூட இல்லையே.. அப்புறம் ஏன் பாட்டி?".. கேள்வியை முடிக்க முடியாமல் துக்கப்பட்டது இலை..
"நம்மளையும் கொன்னுடறாங்க...." விம்மல் வந்தது.
"நாமெல்லாம் வளர்வதே அவர்களின் உணவுக்குதான்?"
"என்ன செய்வாங்க பாட்டி?" இதைப் பார்த்துக் கொண்டிருந்த பிடுங்கப்படாத பக்கத்து செடியின் இலை, தன் குடும்பத் தலைமையிடம் கேட்டது. அதிலிருந்த இந்த பீட்ரூட் கவலையுடன் தாயைப் பார்த்தது.
"முதலில் தலையையும் காலையும் வெட்டி ஓரமாகப் போடுவார்கள். அந்த வலி இருக்கும்போதே ரத்தம் சிந்தச் சிந்த தோலையெல்லாம் உரிப்பார்கள்"
கேட்கும்போதே உடல் நடுங்கியது. செடியின் வர்ணனை தொடர்ந்தது.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்ற செடிகளின் இலைகள், பீட்ரூட் எல்லாம் நடுங்கின.
"பிறகு துண்டு துண்டாக வெட்டுவார்கள். ஆனால் இந்த நிலையில் வலியெல்லாம் தெரியாத அளவு மயங்கி இருப்போம். ரத்த விளாறாய் கிடப்போம். உணர்வெல்லாம் போயிருக்கும்...."
"வலிக்காதா பாட்டி?"
"அப்புறம்? தனக்கும் இந்த நிலை சீக்கிரம் வருமோ என்ற பயம் தனது குரலில் அப்போது இருந்ததை நினைத்துப் பார்த்தது பீட்ரூட் .
"அப்புறம் என்ன நடந்தால் என்ன... எல்லாம் முடிந்து விடும்.
"அப்படி என்னதான் செய்வார்களோ...."
"அதில் என்ன சுவாரஸ்யம் உனக்கு.. எப்போதாவது "திங்க"க்கிழமையில வரும். பார்த்துக்கோ..."
"இதெல்லாம் மாறாதா?"
"இயற்கையின் விதி மகளே.. ஒன்று இன்னொன்றுக்கு உணவாவது இயற்கையின் சுழற்சி. உயிர் இருக்கிறது என்று நன்றாகத்தெரியும் உயிரினங்களையே வெட்டி சாப்பிடுவார்கள்.. நாமெல்லாம் எம்மாத்திரம்? நாம் அழுவது கூட அவர்களுக்குத் தெரியாது.."
"அவங்க தங்களைத் தாங்களே சாப்பிட மாட்டார்களா?"
"அதுவும் ரொம்ப அபூர்வமாக உண்டு. ரொம்ப ரொம்ப அபூர்வம். வேறு வழியில்லாதபோது அப்படி செய்த மனிதர்களும் உண்டு.. "
"அவங்க தங்களைத் தாங்களே சாப்பிட மாட்டார்களா?"
"அதுவும் ரொம்ப அபூர்வமாக உண்டு. ரொம்ப ரொம்ப அபூர்வம். வேறு வழியில்லாதபோது அப்படி செய்த மனிதர்களும் உண்டு.. "









தனித்தனியாக பீட்ரூட்டைப் பறிக்கிறார்களா என்ன?
பதிலளிநீக்குஇனி பீட்ரூட்டை நறுக்கும்போது இந்தப் பதிவு நினைவுக்கு வந்து தொலைக்கப்போகுதே
வாங்க நெல்லை. இது ஒரு கற்பனைதானே? பறிக்கப்பட்டவைகளில் பிழைத்த ஒன்றும், பலியான ஒன்றும் என்று கொள்க !
நீக்குகுரங்கை நினைக்கும்போது மருந்து சாப்பிடற ஞாபகம் வருதா?!!
பீட்ரூட் மண்ணுக்கு அடியில் தானே விளையும். கிழங்கு வகையைச் சேர்ந்தது. ராஜஸ்தான், குஜராத்தில் வீட்டுத் தோட்டத்தில் போட்டிருக்கும். கொஞ்சம் சோகையாகத் தான் வந்தது. இந்த வகையைச் சேர்ந்த நூல்கோல், காரட், டர்னிப், ஷல்கம் ஆகியவை எல்லாம் சுமாராக விளைந்தன. இவற்றில் காரட் நல்ல சாகுபடி கண்டது. காலிஃப்ளவர், முட்டைக்கோஸெல்லாம் பூச்சி அரித்து வீணாகி விட்டன. முள்ளங்கி பரவாயில்லை ரகம். அம்பத்தூர் வீட்டில் கூட முள்ளங்கி, காரட்டெல்லாம் போட்டோம். கோழி வந்து மண்ணை நோண்டி வீண் பண்ணிட்டுப் போயிடும். ராஜஸ்தான், குஜராத் ராணுவக் குடியிருப்புக்களில் அந்தப் பிரச்னை இல்லை.
நீக்குகாலிஃப்ளவர் பூமிக்கு அடியிலா வரும்? நூல்கோலும் டர்னிப்பும் ஒன்றுதானா?
நீக்குகாலிஃப்ளவர், முட்டைக்கோஸ் இரண்டுமே செடியின் நடுவில் மொத்தமாக வரும். செடியை அப்படியே பிடுங்கித் தண்டுகளை அகற்றிவிட்டுப் பூவையும், கோஸையும் எடுத்துக்கலாம். ஆனால் காலிஃப்ளவரில் சீக்கிரமாகப் பூச்சி வந்துடும். அதான் பிரச்னை. முட்டைக்கோஸ் செடியில் பார்க்கையில் பச்சைப் பசேல் என இருக்கும்.
நீக்குஹிந்தியில் காலிஃப்ளவரை ஃபூல் கோபி எனவும் முட்டைக்கோஸை பந்த் கோபி எனவும் சொல்வார்கள். இன்னிக்கு இங்கே எனக்குச் சின்னச் சின்னக் குட்டி முட்டைக்கோஸ் (ப்ரஸல்ஸ்) சின்ன உ.கி. ரோஸ்ட் மாதிரிப் பண்ணிக் கொண்டேன். சில சமயம் அந்த வெளிநாட்டுக் காய்களின் தனிப்பட்ட வாசனை வரும். அப்போத் தான் சாப்பிடக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இப்போல்லாம் காலிஃப்ளவர் கூட அவ்வளவாப் பிடிக்கலை.
நீக்குஇன்று இங்கும் முட்டைகோஸ் கறிதான். வெங்காயம் போட்டு! எனவே பாஸ் அதைத் தொடவில்லை. அதுசரி, முட்டைகோஸை எப்படி உ கி மாதிரி ரோஸ்ட் செய்ய முடியும்?
நீக்குThis is not cabbage. Actually it is Brussels. Sprouted brussels. சின்னச் சின்னதாய் சின்ன உருளைக்கிழங்கு அளவுக்கு உருண்டையாய் இருக்கும். இதிலும் பெரிய முட்டைக்கோஸ் போலச் சின்னத் தண்டு இருந்தாலும் அதோடு போட்டு ரோஸ்ட் பண்ணலாம். முன்னரே தெரிந்திருந்தால் படம் எடுத்திருப்பேன். நினைவில் இல்லை. இன்னொரு நாள் படம் எடுத்துப் போடறேன். த்னித்தனியாக சி.உ.கறி போல வரும். வெங்காயமும் போடலாம். இன்னிக்குச் செவ்வாய்க்கிழமை, எனக்கு ஜன்ம விரத நாள் என்பதால் போடலை. :)
நீக்குஸ்ரீர்ங்கத்தில் கிடைப்பதாக ஆதி வெங்கட் சொல்லி இருக்கார். ஆனால் நான் பார்க்கலை.
நீக்குநான் பார்த்தவரையில் ஒரு செடியில் ஒரு பீட்ரூட் தான் வந்திருந்தது. காரட்டெல்லாம் இரண்டு, மூன்று சேர்ந்திருக்கும். டர்னிப், நூல்கோல், ஷல்கம் மூன்றும் ஒரே குடும்பம் என்றாலும் நூல்கோல் கொஞ்சம் தோல் கடினமாக இருக்கும். டர்னிப்பெல்லாம் தோல் மென்மையாக இருக்கும். ஷல்கம் வெளிறிப் போன பீட்ரூட் நிறத்தில் இருக்கும். சுவை அதிகம். ராஜ்மா பண்ணும்போது அதில் ஷல்கம் சேர்த்துப் பண்ணினால் சுவை கூடும்.
நீக்குவல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல திபதிவுக்கு எடுத்த படங்களை வைத்து செவ்வாயை நிரப்பிவிட்டீர்களே
பதிலளிநீக்குதிங்களுக்கு என்று குறிப்பாக எடுக்கவில்லை. நறுக்கும்போது ரத்தம் சிந்தும் பீட்ரூட், 'ஆ வலிக்கிறது' என்று பேஸ்புக்கில் ஒற்றை வார்த்தையாய் போடலாம் என்று எடுத்து, ஆ வலிக்கிறது அப்படியே டெவலப் ஆகி டெவலப் ஆகி இவ்ளாம் பெரிசா பேஸ்புக்ல போட வேண்டாம்னு முடிவு பண்ணி, ஒரு வியாழன்ல சேர்க்கலாம்னு நினைக்கறப்போ... அப்பா... மூச்சு வாங்குது.. கொஞ்சம் இருங்க.,.. தண்ணி குடிச்சுக்கறேன்... கடக்... கடக்... கடக் ... அப்பாடி... ம்ம்ம்... எங்க விட்டேன்? ஆங்.. வியாழன்ல சேர்க்கலா,ம்னு நினைச்சப்போ செவ்வாய் அம்போன்னு தனிமைப்பட்டுக் கிடந்தது. அதில் போட்டு நிரப்பி விட்டேன்!!
நீக்குஹிஹிஹி...
ஹா ஹா ஹா. நல்ல கற்பனை. நானும் இப்படியான கற்பனைகளில்தான் மூழ்கி விடுவேன்.( என் சமையல் பதிவுகள் எழுதும் போது.)
நீக்குமனம் ஓடுகிறதே... கைகள் வேலை செய்ய, மனம் கற்பனையில் சஞ்சரிக்கறது. போர் அடிக்காமல் பாஸுக்கு உதவ வேண்டுமே...
நீக்குஉண்மை. இந்த கற்பனைகள் இல்லாவிட்டால், மனித வாழ்க்கையில் ருசி ஏது..?
நீக்குஇதை மட்டுமே ருசியாக்கி விட்டால் உணவேது?!!
நீக்குநல்ல வளமான கற்பனை. ஆனால் நான் கல்யாணம் ஆகி வந்தப்போ பீட்ரூட்டெல்லாம் ஓர் அதிசயமாக இருந்ததால் அடிக்கடி சமைப்பேன். பின்னர் என்னவோ பிடிக்காமல் போயிடுத்து. அதிகம் வாங்கினதில்லை. பெண் வீட்டிலும், பையர் வீட்டிலும் இது விருப்ப உணவு. பீட்ரூட்டை வில்லை வில்லையாக நறுக்கி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஊற வைச்சு அவனில் பேக்கிங் மாதிரிப் பண்ணுகிறார் பையர். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கெல்லாம் இப்படித் தான் சமைக்கிறாங்க. பீட்ரூட் பண்ணிய நாளில் அமாவாசை என்பதால் நான் சாப்பிடவில்லை. மற்றபடி சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேனையெல்லாம் வறுவல் போல் வந்திருந்தது.
நீக்குநல்ல வளமான கற்பனை என்று கதையைத்தான் சொல்லி இருக்கிறீர்கள் என்று நம்பி நன்றி சொல்கிறேன்!!!! பீட்ரூட் உங்கள் பையர் செய்யும் முறையை நானும் செய்து பார்க்க முயல்கிறேன்.
நீக்குவாத்யாரே, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் உங்களுக்கு நெருங்கிய உறவோ? ;-)
பதிலளிநீக்குவாங்க ஆசானே... எள்ளி நகையாடாமல் இருந்தால் ஒன்று சொல்வேன்... வாடிய பயிரைப் பற்றிக் கவலைப்பட்ட வள்ளலாரை நான் அறியேன்.
நீக்குஇராமலிங்க ஸ்வாமிகள் என்ற பெயரில் அறிந்திருக்கக்கூடும்.
நீக்கு'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்...'
என்று சொல்லியதோடு நிற்காமல், அவர் 1867ஆம் ஆண்டு வடலூரில் நிறுவிய சத்ய தர்ம சாலையில், இன்று வரை அணையா அடுப்புடன் அன்னதானம் நடக்கின்றது! இந்தப்பதிவுக்கு ஏற்ற கருத்தை மட்டும் சொல்லியிருக்கிறேன். அவரது ஆன்மீக dimension சொல்லில் அடங்காதது; சமயங்களைத்தாண்டியது...
ஓ.. அப்படியல்ல..
நீக்குவள்ளலாரை மனப்பாடப்பபகுதியாகத்தான் அறிவேன், முழுவதும் படித்ததில்லை என்று சொல்ல வந்தேன் குரு...
LOL. Got it, sorry. My sense of humor is pretty low, as we see here :-)
நீக்கு__/\__ இதில் ஒன்றுமில்லை வாத்யார்.
நீக்குமின் தமிழில் வள்ளலாரைப் பற்றி முழுத் தொகுப்பு ஒன்று எழுதி வெளியிட்டேன். அதையே சிவனடியார்கள் என்னும் தலைப்பில் என்னோட "என் பயணங்களில்" என்னும் வலைப்பக்கம் விரிவாக வெளியிட்டிருக்கேன். அதில் பல சிவனடியார்களைப் பற்றிக் காணக்கிடைக்கும்.
நீக்குகீதா அக்கா.. வைணவர்கள் பெரும்பாலும் சிவனடியார்கள் பற்றி படிக்க மாட்டார்கள்!
நீக்குஅப்படிச் சொல்ல முடியாது. நம் நெல்லையாரே அப்படி எல்லாம் இல்லை. அதோடு எனக்கு ஒரு இனிய சகோதரர்/நண்பர் இருக்கார், தேவராஜன் என்னும் பெயரில். முகநூலில் "தேவ்" என்னும் பெயரில் எழுதுவார். ஸ்ரீவைணவர். திருநெல்வேலிப்பக்கம் சொந்த ஊர்/கிராமம். இருபது வருடங்களாகத் தெரிந்தவர். பன்மொழிப் புலவர். அவருக்குத் தெரியாத இதிஹாச, புராண, வரலாறுகள் இல்லை. ஜெயின், புத்த மதம், வைணவம், சைவம், சாக்தம், அத்வைதம் என எதை எடுத்துக் கொண்டாலும் ஆணித்தரமாகச் சான்றுகளுடன் எடுத்துச் சொல்லுவார். இவருடைய சில/பல பதிவுகள் முகநூலில் தடை செய்யப்பட்டிருக்கின்றன என்றாலும் மீண்டும் மீண்டும் எழும் ஃபீனிக்ஸ் பறவையைப் போல் வந்து விடுவார். முக்கியமான வரலாற்றுப் புராண சமாசாரங்கள், முக்கியமாய் ராமாயண, மஹாபாரதத்தில் வல்லவர்/ எதைக் குறித்து எழுதினாலும் எனக்கு அதில் tag போட்டிருப்பார்.
நீக்கு"அருட்பெரும் ஜோதி! தனிப்பெரும் கருணை! " என கூகிளில் தேடினீர்களெனில் சுமார் 20 பதிவுகள் வள்ளலாரைப் பற்றியது கிடைக்கும். விருப்பமும், ஆர்வமும் இருந்தால் படிக்கலாம்.
நீக்குகொன்றால் பாவம்; தின்றால் போச்சு! பயிரைப்பிடுங்கியவன் செய்த பாவம், தின்ற புண்ணியவான் உங்களால் சரி செய்யப்பட்டுவிட்டது. ;-) ;-)
பதிலளிநீக்குஅது சரி.. மனசுக்கு நிமமதி.. அப்போ ப்ரிஜ்ல வச்சுருக்கற பீட்ரூட்டை எடுத்து கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டு விடலாம்ங்கறீங்க....!
நீக்குஆமாம், அந்த சொலவடை.... இன்னா வடை? சொலவடை!கொன்றால் பாவம்; தின்றால் போச்சு.. உண்மையில் எதற்கு ஏற்பட்டது?
கோரா கேள்வி போல கேட்கிறேன் என்று பார்க்காதீர்கள். விக்கிபீடியா போல நீங்கள் எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருக்கிறீர்கள்! நீங்கள் ஒரு நடமாடும் சாட்ஜிபிடி
'கொன்றால் பாவம் தின்றால் போச்சு' என்பது தமிழ் நாட்டில் புத்த மதம் செழித்திருந்த பொழுது அவர்களை கேலி செய்து வழங்கிய ஒன்று. பௌத்த மத கோட்பாட்டின்படி அஹிம்சை தவறு. அசைவம் சாப்பிடக்கூடாது. ஆனால் இந்து மதத்திலிருந்து பௌத்த மதத்திற்கு மாறியவர்களுக்கு மாமிசம் சாப்பிடாமல் இருக்க முடியாமல் யாரையாவது விட்டு மிருகங்களை கொல்ல சொல்லிவிட்டு அல்லது வேட்டையாடிவிட்டு அதை சாப்பிடுவார்களாம். அதாவது மிருகங்களை கொன்றால்தான் பாவம், தின்றால் கிடையாது. என்பதைத்தான் 'கொன்றால் பாவம், தின்றால் போச்சு' என்று கேலியாக குறிப்பிட்டனறாம்.
நீக்குவாங்க பானு அக்கா... உங்கள் விளக்கத்துக்கு நன்றி. கேலியாகத்தான் சொல்லப்பட்டதா அது?!
நீக்குஇன்னொரு பார்வை: நீங்களே சொல்லியிருக்கிறபடி, "இயற்கையின் விதி மகளே.. ஒன்று இன்னொன்றுக்கு உணவாவது இயற்கையின் சுழற்சி." அப்படி உணவுக்காகக்கொல்லாமல், வெறுமே கொள்ளும் இன்பத்துக்காக (gaming ) கொல்வது மிகத்தவறானது; பாவம் (sin ).
நீக்குஒவ்வொரு உயிரினமும், பல மில்லியன் ஆண்டுகளில் evolve ஆனவை அல்லவா? எனவே, evolutionல் கீழ் நிலையில் உள்ளதையே கூடுமானவரை உண்ணவேண்டும். அது கிடைக்காதபோது மட்டுமே அதை விட உயர் நிலையில் உள்ளதை உண்ணலாம். அதனால்தான் நாம் புல் (தான்யம்) உண்கிறோம்; புலால் உண்பதில்லை. உண்பதற்கு தாவரங்களே கிடைக்கவில்லை; பால் பொருளும் இல்லை என்றால், உயர் அறிவாகிய நாம் பட்டினி கிடந்து சாகக்கூடாது; அப்போது மாமிசம் உண்ணலாம்; அதிலும், lesser evolved first. (ஏ-டு)ஆக்டோபஸ், டால்பின், குரங்கு முதலியவை அறிவுநுட்பம் மிகுந்தவை; ஆகவே கூடாது. மனிதனின் frontal cortex வளர வளர, morality & ethics வளர்கிறது.
அட.. நம் உணவுப் பழக்கங்களில் இவ்வளவு எத்திக்ஸ் இருக்கிறதா? ஆனால் இதையெல்லாம் யார் யோசிக்கிறார்கள்? பின்பற்றுகிறார்கள்?
நீக்குஅனைவரும் ஏற்கனவே அறிந்ததை ஏன் சொல்லுகிறேன்? மறை கழன்றுதான் போய்விட்டிருக்கிறது. படுக்க போகவேண்டியதுதான் :-)
நீக்குதிவாமா அண்ணா டிட்டோ! உங்க கருத்தின் சாராம்சத்தைச் சொல்ல வந்தேன் உங்க கருத்தைப் பார்த்துவிட்டேன்.
நீக்கு//அனைவரும் ஏற்கனவே அறிந்ததை ஏன் சொல்லுகிறேன்? மறை கழன்றுதான் போய்விட்டிருக்கிறது. படுக்க போகவேண்டியதுதான் :-)//
அடடா! இப்படி எல்லாம் என் சொல்றீங்க. எல்லாருக்கும் தெரிஞ்சு இருந்தாலும் நாம் நம் கருத்தைச் சொல்றோம் நம் பாணியில்....அவ்வளவுதான்...திரும்பத் திரும்ப ஒவ்வொருவரும் சொல்லும் போதுதானே அது மனதில் பதியும்...அப்படி எடுத்துக்கலாமே!
அது சரி சூரியன் மறையும் தேசத்துல இருக்கீங்களா!!
நான் 'சூரியன் உதித்த' இடத்தில் இருக்கீங்கன்னு நினைச்சேன்.
கீதா
ஆஹா... அலுப்பு தென்படுகிறதே...
நீக்கு// படுக்க போகவேண்டியதுதான் :-) //
மேலும் நீங்கள் இந்தியாவில் இல்லை போலிருக்க்கிறதே...
மனிதனின் frontal cortex வளர வளர, morality & ethics வளர்கிறது.//
நீக்குசூப்பர்....உளவியலில் நியூரோ உளவியலில் இதனை வாசித்திருக்கிறேன்
என் பெயர் போடறதுக்குள்ள என் கர்சருக்கு ரொம்ப அவசரம் வெளியிட்டுவிட்டது,
நீக்குகீதா
கோரா கேள்வி போல கேட்கிறேன் என்று பார்க்காதீர்கள். விக்கிபீடியா போல நீங்கள் எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருக்கிறீர்கள்! நீங்கள் ஒரு நடமாடும் சாட்ஜிபிடி //
நீக்குடிட்டோ!
கீதா
ஆம். முப்பதாண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கிறேன். உள்ளூரில் விலை போகாத மாட்டை வெளியூரில்தான் எதையாவது சொல்லி தலையில் கட்ட வேண்டும்.
நீக்குபுத்திசாலிகள் எங்களுக்கு வேண்டாம் என்கிறது தமிழகம். சிந்திக்கத் தெரியாதவர்கள் தான் வேண்டுமாம்!
நீக்கு//"அவங்க தங்களைத் தாங்களே சாப்பிட மாட்டார்களா?"
பதிலளிநீக்கு"அதுவும் ரொம்ப அபூர்வமாக உண்டு. ரொம்ப ரொம்ப அபூர்வம்.// அபூர்வமாமே? அரசியல்வாதிகள் அத்தனை பேரையுமா மறந்துவிட்டீர்கள்?
'மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை'
அது உவமை. உண்மையிலேயே மனிதனைச் சாப்பிட்டவர்கள் பற்றி பல வருடங்களுக்கு முன் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ஒரு ஆர்டிக்கிள் வந்திருந்தது. மேலும் விபத்தில் சிக்கி பனிமலையில் மாட்டிக் கொண்டவர்கள்...
நீக்குமேலே சொன்ன விதி (law ) தான் இங்கும். கூட வந்தவன் பட்டினியால் இறந்து விட்டான்; நாம் நம் உயிரையும் கொடுத்து அவனைக்காப்பாற்றி இருப்போம்; முடிந்திருந்தால். நம் யத்தனங்களையும் மீறி அவன் இறந்து விட்டான். வேறு உணவே கிடைக்கப்போவதில்லை. நாம் பட்டினி கிடந்து சாக வேண்டுமா? நாம் இயற்கை விதிகளை மதிப்பவராயின், கூடாது.
நீக்குஅருட்பெருஞ்சோதி இதை ஏற்பாரா? ஜெயின் சமூகத்தவர்கள் நடக்கும் பாதையில் கூட உயிரினங்கள் எதுவும் பாதிக்கப்படக் கூடாது என்று மயில் தோகையால் சீர் செய்து கொண்டே நடப்பார்கள் இல்லையா?
நீக்குஅட! நான் கீழ சொல்லிட்டு இங்க நம்ம தத்துவ திவாமா அண்ணா என்ன சொல்றார்னு பார்த்தேன் கூடவே இங்க உங்க கருத்து!!! அருட்பெருஞ்சோதி பற்றி!!
நீக்குஜெயின் சமூகத்தினர் பூமிக்கு அடியில் உள்ளது எதையும் சாப்பிட மாட்டாங்களே
கீதா
உண்மையே. நான் மடையானாதலால் உலகை அறிவால் பார்க்கிறேன்; அவர்கள் அருளால் பார்க்கிறார்கள்.
நீக்குஅருளால் எவையும் பார் என்றான் - அத்தை
அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்
இருளான பொருள் கண்டதல்லால் - கண்ட
என்னையும் கண்டிலேன் என்னேடி தோழி
- தாயுமானவர்.
//தத்துவ திவாமா// LOL அட ராமா!! இது எப்போதிருந்து?
நீக்குகோச்சுக்கிட்டிங்களா என்ன!
நீக்குதத்துபித்துவ திவாமா என்பதே சரி.
நீக்கு:-))
நீக்குஹாஹாஹா என்னண்ணே இப்படிக் கேட்டுப்புட்டீங்க. தத்துவம் இருந்தாதான் வாழ்க்கையை ஓட்ட முடியும்! அதனால் அதைப் பெருமையா எடுத்துக்கோங்க! திவாமாண்ணா.
நீக்கு////நான் மடையானாதலால் உலகை அறிவால் பார்க்கிறேன்;//
தத்துவம் கொஞ்சமாச்சும் தெரிஞ்சுக்கிட்டாதான் அறிவார்த்தமாவும் யோசிக்க முடியும்!
கண்மூடித்தனமாக இல்லையே!! அதுதானே நல்லது.
கீதா
தத்துபித்துவ திவாமா என்பதே சரி.//
நீக்குஹாஹாஹா....நான் சின்னப் பிள்ளையா இருந்தப்ப என் கூட இருந்தவங்க எல்லாம் என்னைத் தத்துவப்பித்து ன்னு கேலி பண்ணுவாங்க. ....என் உலகத்துல இருப்பேன்!!!!!! அவங்களுக்குத் தெரியலை நான் உள்ளாற எப்படின்னு!!!
கீதா
//கோச்சுக்கிட்டிங்களா என்ன!// அவ்வளவு எளிதாக உங்களை மகிழ விட்டுவிடுவோமா என்ன? :-) :-)
நீக்குஅறிவியல் உண்மைகளின் படி, புத்தியை அனுசரிக்கும் வரை ஒரு உண்மை. புத்தியை தாண்டி, அகங்காரத்தை தாண்டி மெய்யறிவுக்கு போக முற்படும்போது, ஆயுள் முழுதும் சேர்த்து வைத்த அறிவைத்தூக்கி கடாச வேண்டியதுதான்! அங்கு அருள் மட்டுமே செல்லுபடி ஆகும். இதைத்தான் தாயுமானவர் பாடல் சொல்கிறது. மாணிக்க வாசகரும், 'கற்றாரை யான் வேண்டேன்! கற்பனவும் இனி அமையும் ' என்று தெள்ளத்தெளிவாக சொல்கிறார். அபர வித்யா, அவித்யா!!! மங்களம்.
__/\__ என்னிடம் பதில் இல்லை.
நீக்குஜெயின் சமூகத்தவர்கள் இல்லை. ஜெயின் சாதுக்கள். வளாகத்திலும் பலர் இருக்கிறார்கள். ஐந்து வீட்டுக் கதவைத் தட்டுவார்கள். உடன் அவர்கள் தட்டில் பிக்ஷை இட்டால் (ஜெயின் சமூகத்தவர் வீடுகளில்) வாங்கிக்கொள்வர். அனைத்தையும் கலந்து சாதுக்கள் உண்பர். அவர்கள் உடைமை, சுத்தம் செய்யும் மாப்பு, பாத்திரம் விசிறி.
நீக்குஉங்கள் அபார்ட்மென்ட்டிலேயே வசிக்கிறீர்களா? அட...
நீக்குகோச்சுக்காதீங்க... கொசு கடித்தால் என்ன செய்வார்கள்!
ஶ்ரீராம் chatgpt ஏய் விட gemini க்கு free frontal cortex கொஞ்சம் evolved என்று.தோன்றுகிறது.....ஹாஹாஹா...
நீக்குகீதா
எனக்குத் தெரிந்து பல ஜெயின் சமூகத்தவர்களும் இந்தக் கோட்பாட்டைக் கடைப்பிடிக்கிறார்கள். ஜெயின் சமூகம் அதிகம் உள்ள ராஜஸ்தான், குஜராத்திலும் பார்த்திருக்கேன். மாலை ஆறு மணிக்குள்ளாக உணவு முடிஞ்சுடும். அவங்க நம்மைச் சாப்பிடக் கூப்பிட்டாலும் ஆறு மணிக்குள்ளாகப் போகணும். கிழங்கு வகைகள், வெங்காயம், பூண்டு சேர்க்காமல், (இன்னும் சிலர் பால் பொருட்கள் கூடச் சேர்ப்பதில்லை) சமையல். விமானப் பயணங்களில் கூட நானும், நம்ம ரங்க்ஸும் ஜெயின் உணவு தான் தேர்ந்தெடுப்போம். சாத்விக உணவாகக் கிடைக்கும். இப்போவும் நான் கேட்பது ஜெயின் உணவு தான் விமானப் பயணத்தில்.
நீக்குவாங்க கீதா அக்கா... எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, இப்படி சப்பென்று சாப்பிட அசாத்திய நாக்கு உறுதி வேண்டும்!
நீக்குஇங்கே கெட்டியான முட்டைக்கோஸ் வருது. அதில் வாசனை அதிகம் வராது. அதிலேயே கறி, கூட்டு, சில சமயம் சாதம்னு பண்ணிப்பேன். இம்மாதிரி விதம் விதமாகப் பண்ணிக்கையில் நாக்குக்கு ருசியாகவே இருக்கே!
நீக்குஇதைத் தவிரவும் வெஜிடபுள் சாதம், கிச்சடினு பண்ணிப்பேன். தக்காளி சாதம் பெரும்பாலும் இருக்கும். ஆகவே நமக்கேற்றாற்போல் மெனுவை மாத்திண்டால் எல்லாம் சுகமே. ஆனாலும் ராத்திரிகளில் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கு. இங்கே பெரும்பாலும் சப்பாத்தி தான். தொட்டுக்கப் பண்ணுவதில் சில/பல சமயங்கள் பிரச்னை. பையர், மருமகளுக்குப் பூண்டு தேவை. எனக்கு வெங்காயம், பூண்டு நோ. ஆகவே கூடவே ஒரு தால் பண்ண வேண்டி இருக்கும். சில நாட்கள் நான் ஊறுகாய், புளி மிளகாயை வைத்துக் கொண்டு ஓட்டிடுவேன். இல்லைனா இருக்கவே இருக்கு ப்ரெட், பட்டர், ஜாம். கோவைக்காய், சுரைக்காய் நாங்க சாப்பிட மாட்டோம். ஆகவே தோசை மாவு இருந்தால் அன்னிக்கு அவங்களுக்கு ரொட்டியும் கோவைக்காய் அல்லது சுரைக்காய் சப்ஜியும். நான் ஆறரை மணிக்கே இரண்டு தோசையை வார்த்துச் சாப்பிட்டு விடுவேன். :)
நீக்குமோர்க்கூட்டு செய்யலாம்.
நீக்குநான் பண்ணும் கூட்டுக் கொஞ்சமாகப் பாசிப்பருப்பு மட்டும் போட்டுத் தேங்காயெல்லாம் அரைக்காமல் பண்ணுவது. ஆகவே மோர்க்கூட்டு பண்ணுவதில்லை. மிக்சி பிரச்னை. இங்கே உள்ள வோல்டேஜிற்கு இவங்க வைச்சிருக்கும் அம்பேரிக்காவின் மாடலான மிக்சி, கிரைண்டர் சரியா இல்லை என்பதால் பெரிய பெரிய ஸ்டெபிலைசர் வைத்துத் தான் ரைஸ் குக்கர், வாக்வம் க்ளீனர், மிக்சி, ஃப்ரிஜ் எல்லாம் போடணும். எதுக்கு வம்புனு நான் மிக்சியெல்லாம் பயன்படுத்துவதில்லை. அம்பேரிக்காவில் எல்லாம் சுலபமாக இருந்தது. ஓமம் போட்டு மோர்ச்சாறு/மோர் ர்சம் பண்ணிப்பேன் எப்போவானும்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஸ்ரீராம், அட்டகாசமான கற்பனை!
பதிலளிநீக்குபீட்ரூட்டின் ரத்தக்கண்ணீரை பாவம் என்றேன் ஆனால் உங்கள் எழுத்தை ரசித்தேன்!
கமலாக்காவையும் என்னையும் நினைத்துக் கொண்டேன்!!!!!
காய்கள் நறுக்கும் போது இப்படிக் கற்பனைகள் விரியும் நிறைய....அதைப் பதியும் முன் நம்ம முன்னோடி கமலாக்கா இப்ப நீங்க இருக்கும் போது ......
எனவே ஹைஃபைவ் சொல்லிக் கொண்டே ரசிக்கிறேன்!
(beet - beat - root - route) பீட் ரூட்டை மாத்துப்பா!!!! தப்பிச்சுருவோம்னு அதுங்களுக்குள்ள பேசிக்குமோ?
கீதா
வேர்கள் மண்ணோடிருந்தாலும், காய் என்னவோ வாயோடுதான்!!! ஹா.. ஹா.. ஹா...
நீக்குவாங்க கீதா... நன்றி.
வணக்கம் சகோதரி
நீக்கு/காய்கள் நறுக்கும் போது இப்படிக் கற்பனைகள் விரியும் நிறைய..../
உண்மை. உண்மை. இப்படி மனதில் ஏற்படும் உண்மைகளை சொல்லும் போதும் மனதுக்கு இதமாகத்தான் இருக்கும். ஆனால், இவையெல்லாம் இப்படியாக நினைப்பது நிஜம் என உணர்ந்து விட்டால், எந்த உணவும் நம் பசிக்கும் வயிற்றை நிரப்பாமல் போய் விடும். "காற்றடைத்த பையடா" எனச் சொன்னாலும், அந்த காற்றை மட்டுமமே உட்கொண்டால், மனிதர்கள் அனைவருமே முற்றும் துறந்த துறவியாக விடலாம். அது சாத்தியமில்லை என்பதால்தான் ஆதி மனிதன் வேட்டையாடி, இலை செடி கொடி, காய் கனி மிருகங்களை உணவாக்கிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறான் . ஒரு விதத்தில் இது படைத்தவனின் கட்டளை போலும். அவனுக்கு அழகியலில் அதிக மோகம்...!இன்றைய பதிவு நிறைய சிந்தனைகளை தோற்றுவிக்கிறது. உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உணவில்லாமல் போய்விடுமோ இப்படி எல்லாம் சிந்தித்தால்...
நீக்குபயமாகத்தான் இருக்கிறது..
பாருங்கள் நம் மனம் எவ்வளவு வேகமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறது என்று!
வள்ளலார் என்ன நினைத்திருப்பார்? என்ன சாப்பிட்டிருப்பார் என்று யோசிக்க வைக்கிறது, ஸ்ரீராம்
நீக்குகீதா
மருந்து போல் உணவுண்டிருப்பார்!
நீக்குஉணவே மருந்து என்றுதான் ஆயுர்வேத வைத்தியம் சொல்கிறது.
நீக்குபீட்ரூட்டை போஸ்ட்மார்ட்டம் நன்றாகச செய்து விட்டீர்கள் ஸ்ரீராம். நீங்க பாஸ் ஆயிட்டீங்க
பதிலளிநீக்குகீதா
பாஸ் மட்டும் இல்ல distinction ஏ வாங்கிட்டீங்க போங்க
நீக்குகீதா
போஸ்ட்மார்ட்டமா? ஆ...!
நீக்குdistinction,,,, நன்றி கீதா.
'திங்க' வை எப்படிச் 'செவ்' வாய் ஆக்கலாம்னு உங்க கிட்ட கத்துக்கலாம் ஸ்ரீராம்....கற்பனை சிறகடிக்குது!
பதிலளிநீக்குகீதா
ஹா.. ஹா... ஹா.. கமலா அக்கா பாணியில் எழுதி இருக்கிறீர்கள்.
நீக்குசூப்பர் சகோதரி..! நான் நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள். தங்களதும் என் நினைப்பும், ஒன்றானதில் மகிழ்ச்சி. நன்றி சகோதரி.
நீக்கு"திங்களை" இப்படி கற்பனை கலந்த கதையாகிய "செவ்வாயாக்கி" , இந்த காய்க்கு மட்டும் ஏன் இந்த நிறம்..? என" புதன் கேள்வியாக்கி", எப்போதுமே கதம்பங்களின் மலர்ச்சர கலர்களாக பிரகாசிக்கும் "வியாழனில்" இக்காயைப்பற்றிய தகவல்களையும் இணைத்து ஒரு கதம்ப மாலையாக்கி, "செக்கச்சிவந்தன இதழ்கள்" என்ற பாடலுடன் "வெள்ளியாக்கி",ரூட் மாறாத நல்ல செய்திகளுடன், ஏதேனும் பீட்ரூட் தகவல்களையும் இணைத்து" சனிக்கிழமையாக்கி" , (இது அறிவு சார்ந்த கிழமை என்பதால் இக்கிழமைக்கான மரியாதையை சனிக்கிழமை என்றே தர வேண்டும்...) ) செங்குழம்பாக காலையில் சூரியன் பிரகாசிக்கும் வேளைக்கு முன்பாகவே, இறையைப் பற்றிய செய்திகளுடன், ஒளியுடன் பிரகாசிக்கும் "ஞாயறிலும்," அதனுடன் ஒப்பிடும் வண்ணம் அமைந்திருக்கும் இந்தக்காயை (பீட்ரூட்) இடம் பெறச் செய்து, இப்படி வாரம் முழுவதும் இக்காய்க்கு சிறப்புத் தரலாம். ஏனெனில் இது நம் "குடும்ப நட்புகளுடனான" இரத்த பந்தம் சம்பந்தம் உடையவை.
கொஞ்சம் ரத்தக்கறை படிந்த கத்தியை கண்டதும், நான் பெரிதான ரம்பம் போட்டு விட்டேனோ..? கற்பனை சிறகடித்து, சிறகடித்து வெகு தொலைவிற்கு பறக்க ஆரம்பித்து விட்டது. மன்னிக்கவும்.
ஹா... ஹா... ஹா... வார நாட்கள் ஏழையும் கொண்டு வந்து விட்டீர்கள். ஒருநாள் யாரோ என்ன பாடம் சொல்லித் தந்தாரோ என்று பாடம் எடுத்து விட்டீர்கள்.
நீக்குபாடலின் முதல் வரியை பதிலோடு சேர்த்து அழகாக சொல்லி விட்டீர்கள். இங்குதான் வெள்ளியில், விடிவெள்ளியாக நீங்கள் பிரகாசிக்கிறீர்கள். 👌.
நீக்கு__/\__
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகாலையில் எழுந்ததும் ரத்தக்களறியான கதை. கதையல்ல..! இது நிஜம். படங்கள் கதையுடன் இணைந்து நிஜமென்பதை நிரூப்பிக்கின்றன.
/நாமெல்லாம் அழகா கூட இல்லையே.. அப்புறம் ஏன் பாட்டி?".. கேள்வியை முடிக்க முடியாமல் துக்கப்பட்டது இலை../
" நீ ரொம்ப விசனப்படுகிறாய்..! நீயும் ஒருநாள் அவர்களின் உணவுக்கு வழியாகி விடுவாய்..! உங்களையும் ஒருநாள் பறித்து, சுத்தப்படுத்தி, (தாங்கள் பாடுபட்டு வளர்த்த ஆடு, கோழிகளைப்போல..!) பொடிதாக அரிந்து, பருப்பு முதலான தானியங்களுடன் சேர்த்து ஒரு உணவாக்கிக் கொண்டு விடுவார்கள் இந்த மனிதர்கள். இவர்களின் இந்த குற்றங்களுக்கு எந்த ஒரு நீதிமன்றமும் கிடையாது. ஏனெனில் இங்கு நீதிபதிகளே ஒரு மனிதர்கள்தாம் . ஆகையால் தைரியமாக இரு.. உலகில் பிறந்தவை ஒரு நாள் மரணத்தை சந்தித்துத்தான் ஆக வேண்டும்." என்று இலைகளைப்பார்த்து தத்துவ வியாக்கியானம் செய்த செடி தன் இயல்பான மௌனத்திற்கு திரும்பி, தன் சோகத்தை மறை(ம)க்க தவத்தில் ஆழ்ந்தது.
அதன் ஆழ்ந்த தியானத்தை கலைக்கவே சற்றைய பொழுதில் மனிதர்கள் வந்து விடுவார்கள் என்பதையும் சிறிது நேரத்தில் மனம் உணர்ந்தது.
கதை தொடரும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா... பாருங்க... உங்கள் கற்பனையும் ஓடுகிறது பாருங்கள்.. சூப்பர்.
நீக்குஜெகதீஸ சந்திர போஸ் - நீங்களும் அவரைப் போல விஞ்"ஞானி' ஆகிட்டீங்க!!!!!!
பதிலளிநீக்குஅவர் தாவர உடலியலில் துறையில் முன்னோடி!
பாருங்க தலைப்பு எப்படிப் பொருத்தமாகிடுச்சுன்னு!!!!!
கீதா
நான் தலைப்பை இப்படி நினைத்து வைக்கவில்லை!!! அவர்தான் முதலில் கண்டறிந்தார் என்பதால்!
நீக்குஉங்களை retire ஆக்கி சமயலறைக்கு அனுப்பியது தப்பு இப்படி கத்தியை வைத்துக்கொண்டு கொலை செய்துவிட்டு அதை படம் பிடித்து பதிவாக்கியது பெரிய தவறு.
பதிலளிநீக்குபீட்ரூட்டில் மண் வாசனை இருக்கும். ஆகவே துண்டுகளாக நறுக்கி பொரியல் செய்வதை விட துருவி (அல்வாக்கு செய்வது போன்று) பொரியல் செய்தால் மண்வாசனை போய்விடும். இது அனுவபவத்தில் கண்டது.
Jayakumar
ஹா.. ஹா.. ஹா... இப்படி நான் எதிர்பார்க்கவில்லை! வாங்க ஜெயக்குமார் ஸார்..
நீக்கு/ஆகவே துண்டுகளாக நறுக்கி பொரியல் செய்வதை விட துருவி (அல்வாக்கு செய்வது போன்று) பொரியல் செய்தால் மண்வாசனை போய்விடும். இது அனுவபவத்தில் கண்டது./
நீக்குஆகா. பயனுள்ள நல்ல தகவல்கள்.. இப்போது தெரிந்து கொண்டேன். நன்றி சகோதரரே.
என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. நான் துருவுவது போலவே (பொடியாக)_ நறுக்குவேன்!
நீக்குதுருவதற்கும் பொடியாய் நறுக்குவதற்கும் , நசுக்கி சேர்ப்பதற்கும், கசக்கிசேர்பதற்கும் நிறைய வித்யாசங்கள் உண்டு.
நீக்குஇஞ்சி டீயில் இஞ்சியை தட்டித்தான் போட வேண்டும்.
தேங்காயை துருவி சட்னி அரைத்தால் தான் சட்னி ருசிப்படும்.
கசூரி மேதியை கசக்கிதான் சேர்க்க வேண்டும்.
இப்படி சில எழுதி விளக்கப்படாத குறிப்புகள் சமையலில் ஏராளம்.
Jayakumar
__/\__
நீக்குஜே கே அண்ணா... உங்களையும் சமையலறைக்குள் விட்டதூ தப்பு!!!!!!! ஹாஹாஹா...பின்ன இப்படி எங்களுக்கு tough கொடுக்கறீங்களே
நீக்குகீதா
:-))
நீக்கு