ஒரு வித்தியாசத்திற்கு செய்த உளுந்து சேர்க்காத தோசை. இட்லி அரிசியும் வெந்தயமும் அரைத்து உடன் சுட்ட தோசை.
ஒரு டம்ளர் இட்லி அரிசி ஊற வைக்கப்பட்டது.
ஊறிய அரிசியுடன் சுமார் கால் டம்ளருக்கும் குறைவாக வெந்தயம் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கப்பட்டது.
அரைத்த மாவை சூடான தோசைக்கல்லில் செட் தோசை போல் வார்த்தெடுத்து
பச்சை கார சட்னியுடன்
சூடாக பரிமாறப்பட்டது.
பச்சை சட்னியில் அடங்கிய /அரைத்த பொருட்கள்.
புதினா, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், இஞ்சி, பொட்டுக்கடலை கொஞ்சம். உப்பு.
கடுகு உளுந்து தாளித்து சட்டினியில் சேர்க்கப்பட்டது.
தோசை பரவாயில்லை. கொஞ்சம் வெந்தய கசப்பு இருந்தாலும் ஓகே. சட்னி கொஞ்சம் சொதப்பி விட்டது. இஞ்சியோ பொட்டுக்கடலையோ ஏதோ ஒன்று சுவையை மாற்றி விட்டது.
========================================================================================
பாஸிட்டிவ் செய்தி :
நேர்மையின் இன்னொரு பெயர் பத்மா
'ஒரு கிராம் திருகாணி வாங்கவே பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும் காலம் இது. ஆனால், தன் கண் முன்னால் 45 பவுன் தங்கம் மின்னியபோதும், அது அடுத்தவர் உழைப்பு என்று ஒதுக்கித் தள்ளிய ஒரு உன்னத மனுஷியைப் பற்றித்தான் ஊரே பேசிக் கொண்டிருக்கிறது!" சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான பத்மா. சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளராகப் பணிபுரியும் இவர், தினமும் அதிகாலையில் தெருக்களைத் தூய்மைப்படுத்தும் பணியைச் செய்து வருகிறார். வழக்கம் போல ஒருநாள் தி.நகர் மகாராஜா சந்தானம் தெருவில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது, குப்பை மேட்டிற்குள் ஒரு கவர் கிடப்பதைக் கண்டார்.
தினமலர்






காலை வணக்கம், உணவுப்பிரியர்களே!
பதிலளிநீக்குபசுமைப்புரட்சி!! பச்சைத்தமிழரின் பச்சைமாவு வெந்தய தோசையும் பச்சை சட்னியும் பச்சை மையில் பதிவு!!
"பச்சதான் எனக்குப் பிடிச்ச கலரு" என்று பாட்டே பாடி விடலாம் போலிருக்கே!
நீக்குவாங்க, சூர்யா!
நீக்குஅடுத்தமுறை கொஞ்சம் பச்சை பட்டாணி, பச்சைப்பயறு, பச்சை கர்ப்பூரம் (அட ராமா!) இதுகளையும் சேர்க்கலாமா? யாராவது பச்சை கொடி காட்றாங்களான்னு பார்ப்போம்.
//அடுத்தமுறை கொஞ்சம் பச்சை பட்டாணி, பச்சைப்பயறு, பச்சை கர்ப்பூரம் (அட ராமா!) இதுகளையும் சேர்க்கலாமா? யாராவது பச்சை கொடி காட்றாங்களான்னு பார்ப்போம்.// அன்புடன் ஒரு ஆலோசனை: இது போல தினமும் உருப்படாத கோமாளி கமெண்ட்களை எழுதுகிறவர், தன் பெயரை 'திருவாழிமார்பன்' என்பதற்கு பதிலாக, 'திருவாழத்தான்' என்று மாற்றிக்கொண்டால் பொருத்தமாக இருக்கும்; செய்வாரா?
நீக்குவணக்கம் திரு.
நீக்குபச்சை பயறு தோசை - பெசரட்டு இப்பகுதியில் முன்பே வந்துவிட்டது.
உலுவா என்பது வெந்தயத்தின் பெயர் மலையாளத்தில் ! ஆக தோசையில் உலுவா உண்டு உளுந்து இல்லை.
Jayakumar
தோசைல பச்சைக் கற்பூரம் சேர்க்கணுமா? யாராவது பச்சை பச்சையாத் திட்டிடப் போறாங்க.
நீக்குநான் வெல்லப் பாயசம், சர்க்கரைப் பொங்கலுக்கு பச்சைக் கற்பூரம் சேர்ப்பேன். சட்னு கோயில் பிரசாத வாசனை வந்துவிடும்.
//தோசைல பச்சைக் கற்பூரம் சேர்க்கணுமா? யாராவது பச்சை பச்சையாத் திட்டிடப் போறாங்க.// :-) :-)
நீக்குதிருவாழத்தான்னு நம்ம வீட்டுல அடிக்கடி திட்டற பெயர், திவாமா. ரெண்டாவது திருவாழத்தான்னு ஒரு எழுத்தாளரின் புனைபெயர். ஸோ மாத்தினீங்கனா....ஹிஹிஹிஹி
நீக்குகீதா
ஏன் பச்சைக்கற்பூரம் சேர்க்கக் கூடாதுன்றேன்... நெல்லை....திவாமா அவர் சொல்ற தோசைல வெல்லம் போடச்சொல்ல மறந்துவிட்டார்!!! அப்படி வைச்சுக்குவோம்...வெல்லம் போட்டா பச்சைக்கற்பூரம் சேர்த்துடலாமே!!! உம்மாச்சிக்குப் படைச்சா மாதிரியும் ஆகிடும்!
நீக்குகீதா
//திருவாழத்தான்னு ஒரு எழுத்தாளரின் புனைபெயர். // வடை போச்சே!! அது சரி, திரு வாழ் அத்தான் அப்டீன்னு பிரிச்சிருவாங்களோ?!
நீக்குஇது ஒண்ணும் புதிய செய்முறை அல்ல. எங்க வீட்டில் அடிக்கடி பண்ணுவது தான். ஆனால் என்ன வித்தியாசம்னா வெந்தயத்தைத் தனியாக ஊறவைத்து முதலில் அதைப் போட்டு நன்கு ஜலம் தெளித்து அரைத்தால் கிட்டத்தட்ட உளுந்து விழுது போலவே வரும். பின்னர் அரிசியையும் போட்டு நன்கு அரைத்து உப்புப் போட்டுக் கலந்து விட்டு புளிக்க வைத்து வார்த்தால் தோசை மணம் ஊரைத் தூக்கும். அரைத்த உடனே தோசை வார்த்தால் கொஞ்சம் இல்லை, ரொம்பவே சுமார் தான். அந்த அரைத்த வாசனை போகாது. புளிப்பு இல்லாததால் தோசை கடுக்கும். இல்லைனா இரவே ஊறவைச்சுட்டு காலையிலே அரைத்துக் கொண்டும் வார்க்கலாம். அது கொஞ்சம் பரவாயில்லை ரகம்.
நீக்குஹாஹாஹாஹா....அத்தான் மனசுல இருக்கும் 'திரு' யார்ன்னு கேள்வி வந்துருச்சுன்னா!!!!!
நீக்குகீதா
//தோசைல வெல்லம் போடச்சொல்ல// பிரசாதத்தை ஒன்றும் சொல்லக்கூடாது. இருந்தாலும் சாதா தோசை மாவில், வெல்லம் சேர்த்து அரைத்து ஒரு கோயிலில் இனிப்பு தோசை பிரசாதமாகக் கொடுத்தார்கள் (எனக்குக் கொடுக்கலை. அந்த ஸ்பெஷல் பிரசாதம் இன்னொருவர் எனக்குச் சிறிது கொடுத்தார்). திருப்பதில.
நீக்குஉளுந்து சேர்க்காமல் நல்லா வந்ததா? வெந்தய வாசனை தோசைக்கு நல்லா இருக்கும். வெந்தயம் கொஞ்சம் அதிகமா சேர்த்த தோசைக்கு புளிமிளகாய் ரொம்ப நல்லாருக்கும்.
பதிலளிநீக்குஇந்தச் சட்னில இஞ்சி மல்லி புதினா காம்பினேஷன்தான் டவுட்டு
நெல்லை நல்லாருக்கும் இந்த தோசை. நம்ம வீட்டில் மட்டுமில்ல பல வீடுகளிலும் அடிக்கடி செய்வது ...வெந்தய தோசைன்னு
நீக்குநீங்க சொல்ற புளிமிளகாய்கோம்போ தான் நம்ம வீட்டில் ஊரில்.
சரி கீழ போறேன் ஜெ கே அண்ணாவுக்குக் கமென்ட் போட வேண்டாமா??!!!
கீதா
என் மாமியார் உளுந்தே சேர்க்க மாட்டார் நெல்லை. தோசை பஞ்சு பஞ்சாக உள் கூடு கட்டிக் கொண்டு வரும். வெந்தயம் சேர்ப்பதையும் அதை அரைப்பதையும் பொறுத்து இருக்கு இது. ஆனால் நம்ம வீட்டில் நம்மவருக்கு உளுந்து சேர்க்கலைனா பிடிக்காது என்பதால் அரிசியோடு கைப்பிடி உளுந்தையும் ஊற வைச்சுடுவேன். வெந்தயம் வழக்கம் போல் தனியாக ஊறவைச்சு கிரைண்டரில் முதலில் அதை அரைத்துக் கொண்டு பின்னர் அரிசி/உளுந்துக் கலவையைப் போட்டு அரைச்சு எடுப்பேன். தோசை இதுவும் நன்றாக இருக்கும்.. எனக்கெல்லாம் வெந்தய தோசைன்னா வெங்காயச் சட்னி தான் பிடிக்கும். ஆனால் ரங்க்ஸுக்கு வெங்காயச் சட்னி பிடிக்காது என்பதால் தக்காளிச் சட்னி அல்லது தேங்காய்ச் சட்னி தான். மிளகாய்ப் பொடியோடும் சாப்பிடலாம். ரொம்பவே நன்றாக இருக்கும். இதில் கடைசியாக மிகுந்திருக்கும் மாவில் குழிப் பணியாரங்கள் செய்துடலாம். தனியாக அரைக்க வேண்டாம். என்னதான் அரைச்சாலும் மிக்சியில் வெந்தயம் அரைபடுவது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும்.
நீக்குகீசா மேடம் எழுதியதைப் படித்தவுடன், நல்ல பசி வந்துவிட்டது. சாப்பிடவேண்டியதுதான். வெந்தயத் தோசை, அடைக்கு புளிமிளகாய் ரொம்பவே சூப்பரா இருக்கும்.
நீக்குதோசையம்மா தோசை
பதிலளிநீக்குஅரிசி மாவு தோசை
உளுந்தில்லா தோசை
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணனுக்கு இரண்டு
எனக்கு மட்டும் ஒன்னு
Jayakumar
தோசைப்பாட்டு ப்ரமாதம், சாரே!
நீக்குஎப்படியோ இந்த புகழ்பெற்ற தோசைப்பாட்டு தெரியாமலே சிறுவயதைத் தாண்டிவிட்டேன். ஒருக்கால் முந்தைய தலைமுறையில் பள்ளிப்பாடமாக இருந்திருக்குமோ?
தோசைப் பாட்டில் அவர் மறந்த வரி,
நீக்குதோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
இந்தப் பாட்டிலேயே தெரியுதா? ஆணாதிக்கம் அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கிறது என்று?
இந்தப் பாட்டிலேயே தெரியுதா? ஆணாதிக்கம் அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கிறது என்று?//
நீக்குநெல்லை, வம்பு தொடங்கிட்டீங்க!!!...நான் சொல்லத் தொடங்கினேன்னு வைங்க!!!! பச்சை பச்சையா ....ஹாஹாஹா
கீதா
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஉளுந்தில்லா தோசை... விதம் விதமாய் யோசிப்போம்.
பொதுவாகவே எங்கள் வீட்டில் தோசை மாவு அரைக்கும்போது வெந்தயம் சேர்த்தே தான் அரைப்பது வழக்கம்.
தொடரட்டும் புதிய முயற்சிகள்.
தோசையில் மயங்கிய எல்லோரும் 48 பவுன் நகைகளை மிகவும் நாணயமாக போலீசாரிடம் ஒப்படைத்த பத்மாவை மறந்து விட்டார்கள். பத்மாவிற்கு நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும்.
பதிலளிநீக்குவெந்தய தோசைக்கு மாவு அரைத்தவுடன் வார்க்க மாட்டோம். கொஞ்சம் மாவு புளித்தால்தான் நன்றாக இருக்கும். மெல்லிசாக வார்க்கக் கூடாது, குண்டாக வார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குyessu!
நீக்குதோசை அம்மா தோசை
பதிலளிநீக்குஅம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணனுக்கு ரெண்டு
பாப்பாவுக்கு ஒண்ணு
ஆக மொத்தம் பத்து
கொடுக்க கொடுக்க ஆசை
எடுக்க போனால் பூசை
முழு பாடலும் இப்படித்தான் வரும் என்று நினைவு.
அரிசி மாவும் உளுந்த மாவும்
நீக்குஅரைச்சு சுட்ட தோசை
னு வரும்
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவெந்தய தோசை இதை அரைத்தவுடன் செய்யாமல் கொஞ்சம் புளிக்க வைத்து செய்தால் மெத் என்று பஞ்சு போன்ற தோசை கிடைக்கும். அதை கனமாக ஊற்றினாலும் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஇதற்கு தக்காளி சட்னி நன்றாக இருக்கும். மாவு புளிக்காமல் பச்சை சட்னியில் தக்காளியோ, புளியோ வைக்காமல் அரைத்து இருக்கிறீர்கள் அதுதான் சுவை இல்லை.
செய்முறை படங்களுடன் உளுந்து இல்லா தோசை நன்றாக இருக்கிறது பார்க்க.
தோசை அம்மா தோசை
பதிலளிநீக்குஅம்மா சுட்ட தோசை
அரிசிமாவும், உளுந்தமாவும் கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூன்று
அண்ணனுக்கு இரண்டு
பாப்பாவுக்கு ஒன்று
தின்ன தின்ன ஆசை
இன்னும் கேட்டால் பூசை
என்று பாடல் வரிகள் வரும் நான் அதை பாடும் போது பேரன் கேட்பான்
உன்னும் கேட்டால் கொடுக்க வேண்டியதுதானே? ஏன் பூசை(அடி) கொடுக்கனும் என்பான்.
அவன் தமிழ் கற்றுக் கொள்ளும் போது அவர்கள்கொடுத்த புத்தகத்தில் தோசை பாடல் கொஞ்சம் மாற்றம் ஆனது, பாடலில் கடைசி வரி
தின்ன தின்ன ஆசை இன்னும் கேட்டால் தோசை என்று முடியும்.
நிலா நிலாஓடி வா பாடல் வரிகளும் மாறி இருந்தது.
பத்மாவின் நேர்மையை பாராட்டி வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குபிறர் பொருளுக்கு ஆசை படாத அவரின் நல்ல குணத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்தியில் 47பவுன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த திருமதி பத்மா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரது நேர்மைக்கு தலைசாய்த்த வணக்கங்கள்.
இன்றைய திங்களின் அடையாளமாக சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் வெந்த தோசையின் மணம் இங்கு வரை வீசுகிறது. இரவு இதை அரைத்து வைத்து விட்டு மறுநாள் காலையில் வார்த்தால் தோசையின் மணம் இன்னும் கூடும்.மாவு மிகவும் புளிப்பாகியும் விடக்கூடாது. எப்போதுமே வெந்தயம் சேர்த்தால் மாவை சற்று பொங்கி வரச் செய்யும் இட்லி மிளகாய்போடியும் இதற்கு சுவையாக இருக்கும். சட்னிகளில் எதுவுமே இதற்கு துணைதான். எப்போதுமே நம் விருப்பந்தானே உணவுக்கு துணையாகிக் போகிறது.
தோசை பாடல்கள் அருமை. "தின்ன தின்ன ஆசை, திருப்பி கேட்டால் பூசை." என்று வரும். அந்தக்கால இந்தப் பாட்டிலேயே "சிறு குடும்பம் முக்கியத்துவம்" கூறப்பட்டுள்ளது. அதுவும் பத்து தோசைகள்தான் என்ற உணவு கட்டுப்பாடு வேறு. அத்தோடு "தோசை கணக்கின் விபரங்களில் குழந்தைக்கு ஊட்டப்படும் கணக்குப்பாடம்" என்ற அறிவு பாடல் வேறு. நானும் எங்கள் வீட்டு சிறு குழந்தைகளுக்கு இப்பாடலை புகட்ட முயன்றுள்ளேன். இனி வரும் காலங்களில் எப்படியோ.? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
"வெந்தய தோசை" என எழுதியது மாறி விட்டது. மன்னிக்கவும்.
நீக்குஅது சரி... பெண்டிர் உண்டி சுருக்கி... என்பதால் பெண்களுக்கு மாத்திரம் குறைந்த தோசைகளா? இந்தக் கேள்வி உங்களுக்கு அப்போ மனசுல எழவில்லையா?
நீக்கு45 பவுன் கீழ இருந்தது. திரும்ப கொடுக்கும்போது தன்னோட இரண்டு பவுனையும் சேர்த்துக் கொடுத்தாங்களான்னு கேட்கமாட்டேன். தட்டச்சுத் தவறுதான்.
நீக்கு//இந்தக் கேள்வி உங்களுக்கு அப்போ மனசுல எழவில்லையா?// இதெல்லாம் எனக்குத் தோணும். தோணி இருக்கு. அப்பா திட்டும்போதெல்லாம் நான் எதிர்த்துத் தான் நிற்பேன். கல்யாணம் ஆகி இது என்ன பாடு படுத்துமோனு சொல்லிண்டே இருப்பார்.:))))))
நீக்குஆனால் எங்க பெரியப்பா வீடு(அப்பாவோட அண்ணா) தாத்தா வீடு (அம்மாவோட அப்பா) இங்கெல்லாம் சாப்பிடவோ, புத்தகங்கள் படிக்கவோ, விளையாடவோ எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இயல்பாக இருக்கலாம்.
நீக்கு/45 பவுன் கீழ இருந்தது. திரும்ப கொடுக்கும்போது தன்னோட இரண்டு பவுனையும் சேர்த்துக் கொடுத்தாங்களான்னு கேட்கமாட்டேன்./
நீக்குஹா ஹா ஹா. காலை நேரத்தில் எழுந்தவுடன் தூக்க கலக்கத்திலிருந்த கண்கள் மங்கலாகி மூளைக்கு தவறுதலாக 45 ஐ 47 என்ற செய்தியை கொடுத்து விட்டது. அது கண்டிப்பாக கண்களின் தட்டச்சுப் பிழைதான். இப்போது மறுபடியும் பதிவில் சென்று படித்து தெளிவுற்றேன். திருத்தத்தை சொன்னதற்கு நன்றி. ஒரு கிராமே இப்போது என்ன விலை விற்கிறது.? இதில் மேலும் இரண்டு பவுன் என்றால், நினைத்துக் கூட பார்க்க முடியாத பிழை. நன்றி.
/அது சரி... பெண்டிர் உண்டி சுருக்கி... என்பதால் பெண்களுக்கு மாத்திரம் குறைந்த தோசைகளா? இந்தக் கேள்வி உங்களுக்கு அப்போ மனசுல எழவில்லையா?/
நீக்குஅப்போதும் மனதில் எழுந்தது.வீட்டிலும் அதற்கு விளக்கம் கேட்பேன். அப்போது ஆண்களுக்கு அதிகம் வெளி வேலைகள், உழைப்பு, சம்பாத்தியம் என்ற முன்னுரிமைகள் நிறைய இருந்தன. அதனால் அவர்கள் பங்கு சற்று கூடுதல்தான். மேலும் ஒரு மரியாதை எப்போதும் அவர்களுக்குத் தர வேண்டுமென்று சொல்லி வளர்ந்தவர்கள் பெண்கள். இன்னமும் தொட்டில் பழக்கந்தான் எங்களுக்கு என நான் நினைக்கிறேன்.நான் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னும் எங்கள் புகுந்த வீட்டு ஆண்கள் வெளியிலிருந்து வந்தால் எழுந்து நிற்பேன். அவர்கள் அமர்ந்திருக்கும் போது, சரிசமமாக அமர்ந்து உரையாடியது கிடையாது. ஆனால், இப்போது அனைத்தும் தலைகீழ்தான். கணவனை பெயர் சொல்லி அழைப்பதுடன் டேய் என அழைப்பது பெண்களின் பெருமையாகப் போய் விட்டது.( ஏதோ என் மனதில் உள்ளவற்றை கூறுகிறேன். தற்காலப் பெண்கள் மன்னிக்கவும்.) இதைப்பற்றி விவாதித்தால் நிறைய உள்ளது. மொத்தத்தில் காலத்தின் மேல் பழியை போட்டு விட்டு நகர்ந்து விடுவதே நல்லது.
//டேய் என அழைப்பது பெண்களின் பெருமையாகப்// ஹா ஹா ஹா. என் அண்ணன் மனைவி, அண்ணனை பெயர் சொல்லி அழைத்ததையே என் பெற்றோர் விரும்பவில்லை. ஆனால் தற்காலத்தில் எல்லாமே மாறிவிட்டது. மரியாதை மனசில் இருந்தால் போதும் என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ. ஆனால் நான் ஒன்றை மாத்திரம் என் மனைவியிடம் ஸ்டிரிக்டா சொல்லிட்டேன். எனக்காக சாப்பிடக் காத்திருக்கக்கூடாது. உடனே சாப்பிட்டுவிடணும். பாக்கி இருக்கு என்று அடுத்த வேளையில் சாப்பிடக்கூடாது. காலத்தின் மீது பழியைப் போட்டுக் கண்டுகொள்ளக்கூடாது. அவ்ளோதான்.
நீக்குமனைவி வேலைக்கே போகாமல் வீட்டில் இருந்தாலும் வீட்டு வேலைகளைக் கட்டாயமாய்க் கணவன் ஒரு முறையாவது செய்யணும் என்பது இப்போதைய பெண்களின் கட்டாயமான உரிமைப்போராட்டம். தினம் தினம் சமைப்பதையும் அவர்கள் விரும்புவதில்லை. கணவனைப் பெயர் சொல்லியோ, "டேய்" எனக் கூப்பிடுவதையோ இன்றைய நாட்களில் புதிதாகப் பார்ப்பது இல்லை. சுமார் 20 வருடங்களுக்கும் மேல் பழக்கத்தில் வந்து விட்டது.
நீக்குஜெ கே அண்ணா தோசை சூப்பரா வந்திருக்கு இது இப்படித்தான் இழுத்தால் கொஞ்சம் கடினமாக இருக்கும் ..லைட்டாதான் தேய்க்க முடியும் மாவு ஊற்றியதும்.
பதிலளிநீக்குஅண்ணா இதற்கு பூண்டு சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் சூப்பரா இருக்கும்
பூண்டு சட்னி பூண்டை கொஞ்சம் நசுக்கி கொஞ்சம் எண்ணையில் நன்றாக கோல்டன் கலரில் வதக்கிக் கொண்டு அதோடு உப்பு, (சிவப்பு மிளகாயும் போட்டு நுணுக்கி.. - அப்பொடியையும் காரத்திற்கேற்ப கலந்து இடி உரலில் போட்டு தட்டி வைத்துக் கொண்டால் இப்படித் தொட்டுக் கொள்ள நல்லாருக்கும். இந்தச்சிவப்பு மிளகாயும் மல்லியும் சம அளவில் கலந்து பொடித்து வைத்திருப்பேன் எதற்காவது சேர்த்துக் கொள்ள சாம்பார் குழம்பு என்று. இதையும் இந்தப் பூண்டுப் பொடியில் சேர்த்தால் நல்லாருக்கும்னு நம்ம ஸ்ரீராம் அவரது நட்பு வீட்டில் செய்ததைச் சொல்லியிருந்தார். அதைச் சேர்த்தும் செய்யலாம் தொட்டுக் கொள்ள நல்லாருக்கும்.
நம் வீட்டில் வெந்தய தோசை அடிக்கடி செய்வோம். மாவை நார்மல் இட்லி மாவு பொங்கி வ்ரும் வரை வைப்போமில்லையா அப்படிப் பொங்க வைத்துச் செய்வோம்.
இன்னொரு வகை - இட்லி அரிசி, வெந்தயம் இதே அளவு,
கூட கால்கப் துவரம் பருப்பு.
துவரம்பருப்பு போடறப்ப சட்டுனு புளித்துவிடும் மாவு எனவே மாவு பொங்கியதும் செய்துவிடலாம் ...
கீதா
மீனாக்ஷி அம்மாளின் "சமைத்துப் பார்" புத்தகத்தில் இந்தத் துவரம்பருப்புப் போட்ட தோசை முறை வந்திருக்கும். செய்து பார்த்தேன். அவ்வளவாய் போணி ஆகலை. :( பின்னர் விட்டுட்டேன்.
நீக்குபாசிட்டிவ் செய்தி நல்ல செய்தி! பத்மா அவர்களைப் பாராட்டுவோம்!
பதிலளிநீக்குகீதா
ஜெ கே அண்ணா, மாவு கொஞ்சம் புளிக்க வேண்டும். அடுத்து தோசையை மேலே கருத்தில் சொன்னது போல தேய்க்கக் கூடாது கொஞ்சம் குண்டாக ஆனா மிகவும் மெத்து மெத்து என்று சாஃப்டாக வரும்.
பதிலளிநீக்குகீதா.
45 பவுனோ 48 பவுனோ தங்கம் தங்கம் தானே! அதைக் கையில் கிடைத்ததும் காவல்துறையிடம் ஒப்படைத்து உரியவர்களிடம் சேர்ப்பிக்கச் செய்த திருமதி பத்மாவுக்கு உளம் கனிந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்கு@கீதா மாமி, நீங்கள் சொல்லிய முறையில் தான் மாவு அரைக்கப்பட்டது. முதலில் ஊற வைத்த வெந்தயம், பின்னர் அரிசி (இடுக்கி புழுங்கல் அரிசி) சேர்த்து மிக்ஸி யில் அரைத்து 1/2 மணி நேரம் கழித்து வார்க்கப்பட்டது. வார்த்தெடுத்தவர் மனைவி.
பதிலளிநீக்குJayakumar
இடுக்கி இட்லி என்று மாற்றிக்கொள்ளவும்.
நீக்குஒரு சாதா வெந்தய தோசை இத்தனை பின்னூட்டங்களை பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. மிக்க நன்றி. புளிக்காத தோசை என் அம்மா இரவு உணவாக அவ்வப்போது செய்வதுண்டு என்பதால் எனக்கு பழக்கம் உள்ள ஒன்று தான்.
பதிலளிநீக்குஒரு சின்ன ரகசியம் சொல்ல மறந்துட்டேன். தோசை நான் ஸ்டிக் தவா வில் வார்த்தெடுக்கப்பட்டது.
பிரிஜில் வைத்திருந்த புதினா அவிந்து போய் இருந்தது என்பதாயிருக்கும் சட்னியின் ருசி மாறியதற்கு காரணம்.
புளியா தோசை எனப்படும் அன்றே அரைத்து அன்றே வார்க்கும் தோசை நானும் அடிக்கடி பண்ணுவேன். இதுக்குத் தான் புளி மிளகாய் ரொம்பவே பொருத்தமாக இருக்கும். எங்க வீட்டில் புளியா தோசைக்கு அரைத்தால் கட்டாயமாய்ப் புளி மிளகாய் உண்டு. ஆனால் புக்ககத்தில் எல்லாத்துக்கும் தேங்காய்ச் சட்னி, சாம்பார் தான். தென்னந்தோப்பு இருந்ததாலும் நிலங்கள் இருந்ததாலும் பருப்பு வகைகள், தேங்காய்க்குப் பஞ்சமில்லை. அதனால் கவலையே இல்லாமல் தேங்காய் உடைப்பாங்க. :))))
பதிலளிநீக்குபச்சரிசி தோசைக்கும் நான்கு கிண்ணம் அரிசிக்கு ஒரு கிண்ணம் உளுந்து போட்டு, அரைக்கிண்ணம் வெந்தயம், அரைக்கிண்ணம் அல்லது ஒரு கிண்ணம் அவல் போட்டு ஊற வைத்து அரைத்து வார்க்கலாம். கர்நாடகாவில் குறிப்பாய் மங்களூரில் இப்படி அரைச்ச மாவில் வார்க்கும் தோசைகளே மஞ்சள் பொடி போட்டு செட் தோசைகளாகப் பண்ணுகின்றனர். இதுக்குத் தொட்டுக்கக் குருமா. மெத், மெத்தென்றிருக்கும். இதைத் தவிரவும் கர்நாட்காவின் பிரபலமான "பெண்ணே தோசே" என்ற முழுக்க முழுக்க வெண்ணெய் சேர்த்து வார்க்கப்படும் தோசையும் நன்றாக இருக்கும். இன்னிக்கு "தோசாயணம்" விரிவாக நடக்கையில் ஸ்ரீராம் எங்கே என்பதை தி/கீதாவோ, பானுமதியோ, நெல்லையோ தான் சொல்லணும்.
பதிலளிநீக்குகாணாமல் போனவர்கள் பட்டியலில் ஸ்ரீராமோடு தம்பி துரையும் சேர்ந்திருக்கார். இரண்டு பேரும் எங்கே போனாங்க?
பதிலளிநீக்கு