25.5.26

"திங்க"க்கிழமை : பழ (நேந்திரன் பழம்) இடியாப்பம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி 

  

பழ (நேந்திரன் பழம்) இடியாப்பம்

 

தலைப்பைப் பார்த்ததும், ஐயையே பழ இடியாப்பமா என்று ஓடிப் போக நினைப்பவர்கள், தூர நின்று எட்டிப் பார்ப்பவர்கள் எல்லாரும் நீங்க செய்யறீங்களோ இல்லையோ பதிவை மட்டும் பார்த்துவிட்டுப் போங்களேன்! சும்மா வாசிப்பதில் என்ன குறையப் போகுது இல்லையா?!! சொல்லுங்க!!

கேரளம் மற்றும் கன்னியாகுமரில பிரபலமான ஓர் உணவு. 

எடுத்துக் கொள்ளும் அரிசி மாவிற்கு ஏற்ப பழங்களின் எண்ணிக்கை. எனவே உங்களுக்குத் தேவையான அரிசி மாவைக் கப்பில் அளந்து கொண்டு - ஒரு கப் மாவு என்றால் பழத்தின் சைசைப் பொருத்து 1 அல்லது 1 1/2.

நான் 1 1/2 கப் மாவு எடுத்துக் கொண்டதற்கு 2 பெரிய பழங்கள் எடுத்துக் கொண்டேன். மாவும் பழமும் சம அளவிலும் எடுத்துக்கலாம். நான் எடுத்துக் கொண்ட அளவிற்கு 3/4 கப் துருவிய தேங்காய். ஏலக்காய்ப் பொடி 1/2 ஸ்பூன். சுக்குப் பொடி 1 ஸ்பூன். 2 ஸ்பூன் நெய்.

பழங்களை ஆவியில் வேக வைத்துக் கொண்டு மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். மசிந்திருக்க வேண்டும். இதில் தண்ணீர் சேர்க்கத் தேவை இருக்காது. வேண்டியிருந்தால் ரொம்பக் கொஞ்சமாக விட்டுக்கலாம் ஆனால் என் செய்முறையில் நான் இதில் தண்ணீர் சேர்க்கமாட்டேன்.

இடியாப்ப மாவு வைத்திருந்தீங்கனா வறுத்துக் கொள்ள வேண்டாம். இல்லை என்றால் அரிசி மாவை கொஞ்சம் வறுத்துக் கொள்ள வேண்டும். சிவக்க வறுக்கத் தேவையில்லை. இந்த மாவில் ஒரு சிட்டிகை உப்பு போட்டுக் கலந்து வைச்சுக்கோங்க.

சாதாரணமாக ஒரு கப் மாவிற்கு ஒரு கப் தண்ணீர் கொதிக்க வைத்துக் கலப்போம். ஆனால், இங்கு பழமும் சேர்க்கப் போவதால் தண்ணீர் எடுத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கலந்து கொள்ளலாம்.

முதலில் மாவில் ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி எல்லாம் கலந்துவிட்டு பழத்தைப் போட்டு நல்லா கலந்துக்கோங்க. பழமே போதுமாக இருந்தால் அப்படியே விட்டுவிடலாம்.

வெண்ணை காய்ச்சி நெய்யாக்கிய பாத்திரத்திலேயே தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொண்டேன்.
2 ஸ்பூன் நெய் மேலே ஊற்றி...
இப்படி நன்றாகக் கலந்து உருட்டி 

இல்லைனா ஒரு 1/4 - 1/2 கப் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து அப்படியே கொட்டி விடாமல், கொஞ்சம் கொஞ்சமாக விட்டு நன்றாகக் கலந்து, ரெண்டு ஸ்பூன் நெய்யும் சேர்த்து பந்து போன்று உருட்டிக் கொண்டுவிடலாம். 

எந்த நாழியில், இடியாப்ப அச்சில் பிழிந்தாலும் கடைசியில் கொஞ்சம் மாவு பிழிய முடியாமல் குழலில் இருக்கும் இல்லையா அதை  உருட்டி தேங்காயோடு பிரட்டி இடியாப்பத்தோடு வேக வைத்து விடுவதுண்டு. பழக் கொழுக்கட்டை !!! இதுவும் கேரளத்தில் பிரபலம்தான். அப்படி மீந்த மாவை உருட்டி வேக வைத்த கொழுக்கட்டை ஒன்று தட்டின் நடுவில்

அதன் பின் இட்லி தட்டு அல்லது இடியாப்பத் தட்டில் கொஞ்சம் நெய்யோ தேங்காய் எண்ணையோ தடவிக் கொண்டு கொஞ்சம் தேங்காய் தூவிக்கோங்க, இந்தக் கலவையை இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து இடையிலும் கொஞ்சம் தேங்காய் தூவிக் கொண்டு பிழிந்து விட வேண்டியதுதான். நான் இப்ப இடியாப்பம்/சேவை பிழியும் மெஷின் வைத்திருப்பதால் அதில் பிழிந்தேன். குக்கர், அல்லது இட்லி கொப்பரை எது உங்களுக்கு வசதியோ அதில் இந்தத் தட்டு ஸ்டாண்டை வைத்து 10 நிமிடம் ஆவியில் வைத்து எடுத்தால் பழ இடியாப்பம் ரெடி. 

இதற்குத் தொட்டுக் கொள்ள, வெல்லம் போட்ட தேங்காய்ப்பால் நல்லாருக்கும். ஆனால் பழம் போட்டிருப்பதால் அதுவே கொஞ்சம் தித்திப்பாக இருக்கும்.

நான் வெல்லம் சாப்பிட முடியாது என்பதால் காய்கறி தேங்காய்ப்பால் கலந்த ஸ்ட்யூ செய்துவிடுவதுண்டு. (சொதி அல்ல)

என் தங்கை வந்திருந்த போது கேழ்வரகு மாவில் பழ இடியாப்பம் செய்திருந்தேன். அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதைப் படம் எடுக்க விட்டுப் போச்!

=========================================================================================

இடுக்கண் களைந்த கலைஞர் 


கலைஞரின் ஆட்சியைக் கடுமையாக விமரிசித்து தினமணி நாளேட்டில் அவ்வப்போது தலையங்கக் கட்டுரைகள் வெளியாவது உண்டு. இது கலைஞருக்குச் சற்று எரிச்சலை ஏற்படுத்தி இருந்தது. அதை ஒரு வகையான கோபம் என்று கூடச் சொல்லலாம். அப்போதெல்லாம் சாவி அவர்கள்தான் கலைஞர் அவர்கள் திருப்தி அடையும் வகையில் சமாதானம் பேசி விட்டு வருவது வழக்கம்.

கலைஞர் அவர்களின் ஆட்சி மாறி எம்.ஜி.ஆர். தலைமையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபோது எம்.ஜி.ஆர். படத்தை தினமணி கதிர் அட்டையில் போட வேண்டும் என்று நிர்வாகம் சாவியிடம் கேட்டுக் கொண்டது. ஸ்பெஷல் ஆபீசர் ராமகிருஷ்ணன் எம்.ஜி.ஆர். படத்தைக் கதிர் அட்டையில் வெளியிட வேண்டும் என்பதில் ரொம்பக் குறியாக இருந்தார். சாவியிடம் நைச்சியமாகப் பேசி காரியத்தைச் சாதிக்கப் பல உபாயங்களைக் கையாண்டார்.

"அட்டையில் யார் படத்தைப் போடுவது என்பது அப்பத்திரிகையின் ஆசிரியருக்குள்ள உரிமை. அதில் யாரும் தலையிடுவதை நான் விரும்பவில்லை. தினமணி கதிர் அட்டையில் எம்.ஜி.ஆரின் படத்தை நான் வெளியிட மாட்டேன். என்னையும் மீறி அப்படி ஒருவேளை அவர் படம் கதிரில் வெளியாகுமானால் அதற்கடுத்த வாரம் நான் கதிர் ஆசிரியராக இருக்கமாட்டேன்" என்று ராமகிருஷ்ணனிடம் கண்டிப்பும் கறாருமாகச் சொல்லி விட்டார் சாவி.

'எம்.ஜி.ஆர். படத்தை அட்டையில் வெளியிட வேண்டும் என்று நிர்வாகமும் தொடர்ந்து சாவி அவர்களுக்குப் பல்வேறு முனைகளிலிருந்து நிர்ப்பந்தம் தந்து கொண்டே இருந்தது. இதில் மிகவும் தீவிரம் காட்டியவர் ஸ்பெஷல் ஆபீசர் ஆர்.ராமகிருஷ்ணன்.

"இதோ பாருங்கள்! எத்தனை முறை யார் மூலம் வந்து கேட்டாலும் என் பதில் ஒன்றேதான். நான் ஆசிரியராக இருக்கும்வரை தினமணி கதிர் அட்டையில் எம்.ஜி.ஆரின் படம் வராது" என்று ஒரே அடியாக மறுத்து விட்டார் சாவி.

இதற்கிடையில் சாவி அவர்கள் தம் குடும்பம் தொடர்பான ஒரு முக்கிய வேலையாக அமெரிக்கா செல்ல வேண்டியதாயிற்று. தாம் ஊரில் இல்லாதபோது சூழ்ச்சி நடக்கும் என்பது சாவிக்குத் தெரியாததல்ல. ஆனாலும் அவர் அமெரிக்கா போக வேண்டிய கட்டாயம் இருந்ததால் புறப்பட்டுச் சென்றார்.

எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சிறப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் அவர்களிடம் சொல்லி அனுமதி பெற்ற பிறகே சாவி அமெரிக்கா போனார். திரு. ராமகிருஷ்ணனும் எந்த ஆட்சேபனையும் சொல்லாமல் சந்தோஷமாகவே அனுப்பி வைத்தார்.

இதுதான் தக்க தருணம் என்று எண்ணி சாவி ஊரில் இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு தினமணி கதிர் அட்டையில் எம்.ஜி.ஆர். படத்தைப் போட நிர்வாகம் முடிவு செய்துவிட்டது. அதே சமயம் கூடவே சாவி அவர்களையும் பதவியிலிருந்து நீக்கிவிடுவது என்றும் முடிவு எடுத்தது.சாவி ரிடயர் ஆகவேண்டிய வயதைக் கடந்து, மேலும் இரண்டாண்டுகள் ஆகிவிட்டதால் அதையே ஒரு சாக்காகச் சொல்லி அவரைப் பதவியிலிருந்து நீக்கி இருப்பதாக வீட்டுக்குக் கடிதம் அனுப்பி விட்டார்கள்.

சாவி தினமணி கதிரிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு எம்.ஜி.ஆர். அட்டைப்பட விவகாரம்தான் ஒரே காரணம் என்று சொல்லத் தேவை இல்லை."


இது ராணிமைந்தன் எழுதிய சாவி 85 புத்தகத்தில் இருக்கிறது.  அமெரிக்காவிலிருந்து திரும்பிய சாவியை வரவேற்க்க கூட ஆளில்லாத நிலையில் கலைஞர் ஆளனுப்பி சாவி அவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் அவருக்காக தான் ஒரு பத்திரிகை ஆரம்பிப்பதாகவும் சொல்லி ஆற்றுப்படுத்தினார்.

38 கருத்துகள்:

  1. ராணி மைந்தன் கட்டுக்கதை நம்பக்கூடியதாக இல்லை.
    இந்தியன் எக்ஸ்பிரஸ் மிகப் பெரிய நிருவனம். அது இந்த மாதிரியான
    விஷயங்களில் இந்த அளவு தாழ்ந்த நிலையில் இறங்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெருவனங்களெல்லாம் உண்மை கருத்துக் கணிப்பை வெளியிடத் தயங்கி, எண்களை ஆளும் கட்சிக்கு ஏற்ற மாதிரி மாற்றுங்கள் எனச் சொன்னதை இந்தத் தேர்தலில் பார்த்தோமே ஜீவி சார்.

      நீக்கு
  2. குங்குமத்திலிருந்து விலகி சாவி பத்திரிகைக்கு ஆசிரியரானாரே?..
    இதற்கும் ஒரு ' கதை' இருக்குமோ?..
    ரவி பிரகாஷைக் கேட்டால் தெரியும்.

    பதிலளிநீக்கு
  3. ​பழ இடியாப்பம் நன்றாக வந்துள்ளது. செய்து பார்க்க தூண்டுகிறது.

    ஜீவி சார் சொன்னது போன்று எம் ஜி ஆர் செய்தி கற்பனையோ என்று தோன்றுகிறது

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா, நன்றி. உங்களுக்கும் அக்காவுக்கும் இனிப்பு சாப்பிடலாம் என்றால், இதற்கு வெல்லம் கலந்த தேங்காய்ப்பால் அல்லது தேங்காய் வெல்லம் கலந்து தொட்டுக் கொள்ள ரொம்ப நல்லாருக்கும். அப்படியே சாப்பிடவும் கூட நன்றாக இருக்கும்.

      பழத்தோடு அரைக்கும் போது வெல்லமோ, சர்க்கரையோ கூடச் சேர்த்து செய்தால் இனிப்பாக இருக்கும். அப்படியே சாப்பிட நல்லாருக்கும். பழம் நல்ல தித்திப்பாக இருந்தால் அதுவே போதும் நம் வீட்டில் அப்படியேதான் செய்தேன்.

      நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
  4. பழ இடியாப்பமா? கற்பனையே பண்ண முடியவில்லையே? அசட்டுத் தித்திப்பாக இருக்காதா? அவர்கள் பழம் பூரி என்று நேந்திரம் பழத்தில் பஜ்ஜியே செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
    2. பிடிச்சவங்க சாப்பிடலாம் அவ்வளவே

      கீதா

      நீக்கு
    3. அது பழம்பொரி இல்லையோ? நானும் நேந்திரம்பழ இடியாப்பம் கேட்டதில்லை.

      நீக்கு
  5. எம்.ஜி.ஆர். தனக்கு ஆதரவாக ஒரு பத்திரிகை வேண்டும் என்று நினைத்த பொழுது மணியனை ஆசிரியராகக் கொண்டு 'இதயம் பேசுகிறது' தொடங்க, கருணாநிதி சாவியை ஆசிரியராகக் கொண்டு குங்குமத்தை தொடங்கினார் என்பார்கள். உண்மை தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாவியும் கருணாநிதியும் நெருங்கிய நண்பர்கள் என்பதைப் போலவே மணியனும் எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்கள்.. இருவருக்குமே பத்திரிகை உலகில் ஆனந்த விகடனில் இருந்தப்போத் தொடங்கிய போட்டி நீண்ட காலம் நீடித்தது.

      நீக்கு
  6. பழ இடியாப்பம் - யோசிக்கக் கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது! :) ஆனாலும் பழம் பஜ்ஜி செய்யும்போது இடியாப்பமும் செய்யலாம். தவறில்லை. சுவைத்ததில்லை. நேந்திரம் பழ சீசனும் இங்கே முடிந்துவிட்டது. அடுத்த முறை கிடைத்தால் முயற்சிக்கலாம்.

    சாவி கதை - ஒன்றும் சொல்வதற்கில்லை. ஜீவி ஐயா சொல்வது போல, திரு ரவி பிரகாஷ் அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம் - சாவி உடன் பல வருடங்கள் பணி புரிந்தவர் என்பதால்.

    பயணம் காரணமாக முந்தைய பதிவுகள் படிக்க இயலவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக படித்து விடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்ஜி. பிடிச்சவங்க சாப்பிடலாம்

      கீதா

      நீக்கு
  7. பழ இடியாப்பம் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்ய இயலவில்லை.

    சேவையில் அபூர்வமா இனிப்பு சேவை சாப்பிட்டிருக்கிறேன். அதுவுமே சர்க்கரைப் பொங்கலுக்கு மாற்று, ஆனால் உதிரி உதிரியாக என நினைத்துக்கொள்வேன்.

    மாம்பழ சீசன் என்பதால் மாம்பழ இடியாப்பம் செய்முறையை எதிர்பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை, பிடிச்சா சாப்பிடலாம்

      கீதா

      நீக்கு
    2. மாம்பழ சீசன் - ஓ செய்துவிடலாமே

      கீதா

      நீக்கு
  8. நேற்று வீட்டில் சேவை புளிசேரி... யம்மி

    அதற்கு முந்தைய தினம் தேங்காய் சேவை.

    இப்படி வித விதமா இருக்க நேந்திரன் இடியாப்பமா? பழம்பொரியே எனக்கு ஒரு மாதிரி இருக்கும். இருந்தாலும் புது செய்முறை. இது மாத்திரம் போணியாகாது என்பதால் அதற்கு முன்பு வெறும் இடியாப்பம் செய்திருந்தது முதல் படம் காட்டிக்கொடுத்துவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிடிச்சவங்க சாப்பிடலாம் நெல்லை அவ்வளவே. படங்களை ஒழுங்காகப் பாருங்க நெல்லை., வெறும் இடியாப்பம் செய்யலை. எங்க வீட்டில் போணியாகும். முதல் படம் பழம் கலப்பதற்கு முன்னர் இவ்வளவு எடுத்துக் கொண்டேன்னு காட்டும் படம்

      கீதா

      நீக்கு
    2. இல்லை.. இடியாப்பத்தோடு இருந்த வெள்ளைக் கலரை (தட்டில்) வெறும் இடியாப்பம்னு நினைத்தேன். அது துவிய தேங்காய்னு இப்போ புரிந்தது

      நீக்கு
  9. சாவிக்கு, தான் கருணாநிதி ஆதரவாளன், நெருக்கம் எனக் காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம். மணியன் எம் ஜி ஆர் ஆதரவாளராகிருந்ததால். அதனால் இந்தக் கதையை உலவ விட்டிருப்பார் ராணிமைந்தன் மூலம். கருணாநிதிக்கு தன்னை ஆதரிப்பவர்களைப் பிடிக்கும், அதிலும் எம்ஜிஆருக்கு எதிராக என்பதால் நெருக்கம் காண்பிப்பதுபோல இருந்திருப்பார். உபயோகம் ஆனதும் கழற்றி எறிந்திருப்பார்.

    பதிலளிநீக்கு
  10. அவர்வந்து பிரார்த்தித்த பின், எல்லோருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும் என்று அருள் கொடுக்கலாமா இல்லை நாமே அப்படி அருளிவிடலாமா என இறைவனையே குழப்புகிறாரே. அவர் எங்கே

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. பழ (நேந்திரன் பழம்) இடியாப்பம் செய்முறையும் குறிப்பும், படங்களும் நன்றாக இருக்கிறது கீதா.
    இடியாப்ப மாவும் இருக்கிறது பிள்ளைகள் வர போகிறார்கள் செய்து பார்த்து விடுகிறேன். எனக்கு இனிப்பு சேவை பிடிக்கும் . தேங்காய் , பழம் இதில் இருக்கும் இனிப்பே போதும் என்று நினைக்கிறேன். சர்க்கரை கலந்தால் மேலும் இனிப்பாகி விடும்.

    காரம் வேன்டுமென்றால் காய்கறி தேங்காய்ப்பால் கலந்த ஸ்ட்யூ செய்துவிடலாம். மருமகள் நன்றாக செய்வாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளைங்களுக்குப் பிடிக்கும்னா செஞ்சு கொடுங்க கோமதிக்கா. ஆமாம் பழத்தில் இருக்கும் இனிப்பே போதும்.

      சிலர் சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து செய்யறாங்க. ஊரில் இருந்தப்ப வீட்டில் நம்மவருக்கு இனிப்பு ரொம்பப் பிடிக்கும் என்பதால் அப்படிச் செய்ததுண்டு. தொட்டுக் கொள்ளவும் வெல்லம் கலந்த தேங்காய்ப்பால் அல்லது வெல்லமும் தேங்காயும் கலந்தது இதுவும் நல்லாருக்கும். இடியப்பம் இடையில் தேங்காய்ப்பூ போடுவதால் சுவை நல்லாருக்கும் ஏலக்காய் வாசனையுட்ன

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    2. காரம் வேன்டுமென்றால் காய்கறி தேங்காய்ப்பால் கலந்த ஸ்ட்யூ செய்துவிடலாம். மருமகள் நன்றாக செய்வாள்.//

      நான் அதுதான் செய்தேன் கோமதிக்கா.

      நன்றி அக்கா

      கீதா

      நீக்கு
  13. சேவை மிஷின் படம் போட்டு இருக்கலாம் கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா அன்று செய்யும் போது கூட யாரும் இல்லை. மெஷின் பயன்படுத்தும் போது வேறொருவர் எடுத்தால் சரியா இருக்கும் ஒற்றைக்கையால் எடுப்பது சிரமமாக இருகும் இல்லைனா செல்ஃபி மோடில் எடுக்கணும் எனக்கு பொதுவெளியில் அப்படிப் போடுவதில் விருப்பமில்லை. அடுத்த முறை செய்யும் போது மெஷின் பிழிவது எடுத்துப் போடுகிறேன் கோமதிக்கா

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    2. செய்யும் போதுசெல்ஃபி மோடில் படம் எடுப்பது கஷ்டம் தனியாக மிஷினை எடுத்து போடலாம்.

      நீக்கு
    3. அது எடுக்கலாம் அக்கா. அது எப்படி இயங்குகிறது என்று எடுத்துப் போட நினைத்தேன், கோமதிக்கா. எடுக்கிறேன்....அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதையும்

      கீதா

      நீக்கு
  14. எங்கள் ப்ளாக் வலைக் குடும்ப நட்புகளுக்கு வணக்கம், வாழ்க வளமுடன்
    என் பேத்திக்கு (என் மகளின் மகள்) திருமண உறுதி செய்தல் நிச்சயதார்த்தம் வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது .

    அதற்கு உங்கள் ஆசிகளை, வாழ்த்துகளை வேண்டுகிறேன்.
    நாளை ஊருக்கு போகிறேன். நாளை முதல் வலை பக்கம் வர முடியாது முடிந்த போது வருகிறேன்.
    நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனமார்ந்த வாழ்த்துகள், பேத்திகும் மாப்பிள்ளைப் பேரனுக்கும். பிரார்த்தனைகளும், கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    2. நன்றி கீதா, உங்கள் வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும்.

      நீக்கு
    3. மனமார்ந்த வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

      நீக்கு
    4. மனமார்ந்த வாழ்த்துகளும் ஆசிகளும்.

      நீக்கு
  15. சாவி அவர்கள் கலைஞரிடம் நட்பு பாராட்டியதால் இப்படியான நெருக்கடியா? இப்படியான விஷயங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்குமோ?

    பத்திரிகையில் அரசியல் கட்டுரைகள் வரலாம் ஆனால் பத்திரிகையே அரசியல் சார்ந்து இருப்பது சரியில்லை இல்லையா? ஆனால் அதுதானே யதார்த்தத்தில் நடக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கால கட்டத்தில் பத்திரிகை உலகில் ஒரு பெரிய சண்டையே நடந்தது எனலாம். வெளியே யாரும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கலையே தவிர சாவி, குங்குமம் இரண்டும் ஒரு பக்கம் எனில் இதயம் பேசுகிறது, தாய் இவை இரண்டும் இன்னொரு பக்கம். என்றாலும் சாவி, குங்குமம் ஆகியவற்றின் தரத்தை மற்ற இரு பத்திரிகைகளும் எட்ட முடியலை. சாவி வெளியே வந்த பின்னர் தினமணி கதிரின் தரமும் முற்றிலும் மாறிப் போய்ப் பின்னர் பத்திரிகையையே நிறுத்திட்டாங்க.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!