சென்ற வாரம் ஸ்ராத்தத்தின் போது வாங்கி வந்த காய்கள் நேற்று வரை வந்து விட்டன! இன்னிக்குக் காய் இல்லை. கொஞ்சம் போல் காரட்டுகளும் ஒரு கைப்பிடி அவரைக்காயும் தான் இருந்தது. நம்மவருக்கு உடனே குஷி வந்துடுமே. நான் போய்க் காய்களெல்லாம் வாங்கிண்டு அப்படியே மத்தியானத்துக்குக் குழம்பு, ரசம், கறி, கூட்டும் வாங்கிடறேன். நீ சாதம் மட்டும் வை! நேத்திக்கே கை வலினு சொன்னியே! இன்னிக்குச் சமைக்க வேண்டாம்னு சொல்ல எனக்குள் உத்வேகம். பின்னே? நான் சமைக்கிறேன். நீங்க ஒண்ணும் போய் அலைய வேண்டாம் என்று பெரிய முட்டுக்கட்டையாய்ப் போட்டேன். இன்னிக்கே சந்தைக்குக் காய்கள் எல்லாம் வந்திருக்காது. நாளையிலிருந்து தான் வழக்கமான முறையில் இருக்கும்னு சொன்னேன். ஆனால் அவர் கிளம்பிட்டார்.
நான் தீர்மானமாக நீங்க காய் வாங்கி வந்தாலும் நான் பனீர் புலவ் தான் இன்னிக்குப் பண்ணப் போறேன் என்று சொல்லி விட்டேன். சரி, ஆனால் கொஞ்சம் ரசம் வேண்டும் எனக்கு என்றார். தொட்டுக்க அப்பளம் வாட்டிக்கலாம், இல்லாட்டியும் வாழைக்காய் வறுவல் இருக்குனு நானும் சரினு சொல்லிட்டேன். ஆனால் அவரால் சந்தைக்கே போக முடியாமல் வண்டி படுத்தி எடுத்துக் கடைசியில் வீட்டுக்கு வந்துட்டார். இஃகி,இஃகி,இஃகி!
நான் திட்டம் போட்ட படி பனீர் புலவ் செய்தேன். அதுக்குக் காய்கள் வேண்டும்னு எல்லாம் இல்லை. வெங்காயம் இருந்தாலே போதும். ஆனால் காரட் வாங்கிப் பல நாட்கள் ஆகி விட்டதால் அதைத் தீர்க்கணும்னு காரட்டுகளை எடுத்துக் கொண்டேன். பச்சைப் பட்டாணி இல்லை; அதனால் என்ன? காய்ந்த பட்டாணியை நேற்றே எதுக்கும் இருக்கட்டும்னு ஊற வைச்சிருந்தேன். அதை நன்கு கழுவிக் கொண்டு சிறிது உப்புச் சேர்த்துக் குக்கரில் வேக வைத்தேன். இல்லைனால் பட்டாணிக் கல்லைப் போல் உட்கார்ந்திருக்கு!
அதற்குள்ளாகப் பனீரை எடுத்து அலம்பித் துண்டுகளாக்கிக் கொண்டு அதில் மஞ்சள் பொடி, கொஞ்சமாக மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, (தேவையானால் கரம் மசாலாப் பொடி) ஜீரகப் பொடி, உப்பு ஆகியன சேர்த்து நன்கு கலந்து வைத்தேன். வீட்டில் அதிர்ஷ்டவசமாக பாஸ்மதி அரிசி இருந்தது. அதை ஒரு சின்னக் கிண்ணம் எடுத்து நன்கு கழுவி விட்டுப் பின்னர் நீரை வடிகட்டிக் கொண்டு இரண்டு தேக்கரண்டி நெய்யை விட்டு அரிசியை வறுத்துவிட்டு அரிசி எடுத்த கிண்ணத்தாலேயே ஒன்றேகால் கிண்ணம் நீரை அதில் விட்டு அரிசியை ஊற வைத்தேன்.
இதெல்லாம் ஆவதற்குள்ளாகப் பட்டாணி வெந்து விட்டதைக் குக்கர் அறிவிக்க, ரசத்துக்கும், மோருக்கும் வெறும் சாதம் அரை ஆழாக்கு வைத்துவிட்டு ஈயச் செம்பில் ரசத்தையும் வைத்தேன். பின்னர் வந்து 2 பெரிய வெங்காயம், காரட் ஒன்று பொடியாக நீளவாட்டில் நறுக்கிக் கொண்டேன். தக்காளி சேர்க்கலை. வீட்டில் தக்காளியும் இல்லை. கொத்துமல்லி, புதினா எதுவும் இல்லை. நல்லவேளையாகப் பச்சை மிளகாயும், இஞ்சியும் இருந்தன. அதைப் பொடியாக நறுக்கிக் கொண்டேன். பச்சை மிளகாய் இரண்டைப் பிளந்து வைத்துக் கொண்டேன்.
படங்களுக்கு நன்றி கூகிளார்அடுப்பில் குக்கரை வைத்துக்கொஞ்சம் எண்ணெய்/வெண்ணெய் சேர்த்துக் காய வைத்துக் கொண்டேன். ஜீரகம், சோம்பு, முழு மிளகு வகைக்கு ஒரு தேக்கரண்டி போட்டுத் தாளித்து லவங்கப்பட்டை ஒரு துண்டு பச்சை ஏலக்காய் 2, ஒரு கிராம்பு போட்டுக் கொண்டேன். பச்சை மிளகாய், இஞ்சியைப் போட்டுக் கொஞ்சம் வதக்கிக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு அது வதங்க ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டேன். வெங்காயம் வதங்கியதும் காரட்டைப் போட்டு வதக்கினேன். காரட் கொஞ்சம் வதங்கியதும் அரைத் தேக்கரண்டி மஞ்சள் பொடி, கால் தேக்கரண்டி மிளகாய்ப் பொடி(காரம் அதிகம்) ஒரு தேக்கரண்டி தனியாப் பொடி, கால் தேக்கரண்டி கரம் மசாலாப் பொடி போட்டுக் காய்களோடு நன்கு கலக்கும்படி வதக்கிக் கொண்டேன். எல்லாம் நன்கு கலந்ததும் நீரோடு ஊற வைத்திருக்கும் அரிசியை அப்படியே அதில் சேர்த்தேன். மேற்கொண்டு நீர் வேண்டாம். பாஸ்மதி அரிசி அதிகம் நீர் தாங்காது. தேவையான உப்பைச் சேர்த்தேன். ஏனெனில் பட்டாணியில் கொஞ்சம் உப்புப் போட்டிருக்கோம். பனீருக்கும் கொஞ்சம் உப்புச் சேர்த்திருக்கோம். ஆகவே குறைவான உப்பே போதும்.
கொத்துமல்லித் தழை, புதினா இருந்தால் காரட், வெங்காயம் வதக்கையில் பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கலாம். அல்லது பச்சையாகக் கடைசியில் மேலே தூவலாம். இரண்டுமே இல்லை. குக்கரை மூடித் தணித்தே அடுப்பை எரிய விட்டு நன்கு மேலே ஆவி வந்ததும் வெயிட்டைப் போட்டேன். சிறிது நேரத்தில் ஒரு விசில் வர அடுப்பை உடனே அணைத்து விட்டேன். இதற்கு நடுவில் ஒரு வாணலியில் அல்லது பிடித்தமானால் நான் ஸ்டிக் தோசைக்கல்லில் நெய்யை விட்டுக் கொண்டு மசாலா சேர்த்து ஊற வைத்திருக்கும் பனீர் துண்டுகளை நன்கு ப்ரவுன் நிறம் வரும் வரை பிரட்டிக் கொள்ள வேண்டும். அதிகம் பிரட்ட வேண்டாம். ரப்பர் மாதிரி ஆயிடும். இங்கே குக்கர் திறந்ததும் வறுத்த பனீர்த் துண்டுகளை அதில் சேர்த்துக் கொத்துமல்லி, புதினா போடுவதானால் போட்டுவிட்டு மெதுவாகக் கிளறணும். அரிசி உடையாமல் கிளறிக் கொடுக்கணும்.
இதை வெங்காயப் பச்சடி, காரட் பச்சடி, வெள்ளரிக்காய்ப் பச்சடி, தக்காளிப் பச்சடி ஆகியவற்றோடு சாப்பிடலாம். பண்ணும்போதோ, சாப்பிடும்போதோ இதைப் பதிவாகப் போடும் எண்ணமே இல்லை. ஆனால் சாயந்திரம் திடீர்னு தோன்றிய ஓர் உந்துதலில் மிச்சம் இருக்கும் புலவைப் படம் எடுத்துக் கொண்டேன். மற்றப் படங்கள் வழக்கம் போல் எடுக்கலை. ஹிஹிஹிஹி. கீழே மிச்சம் இருக்கும் பனீர் புலவ். பனீர் எங்கேனு கேட்காதீங்க! பொறுக்கிச் சாப்பிட்டுட்டேன்! :)))))
இன்று செய்த பனீர் புலவ் படம்
எல்லாப்படங்களையும் ஒழுங்கா எடுத்திருந்தால் எ.பி.க்குத் திங்கக்கிழமைப் பதிவுக்கு அனுப்பி இருப்பேன். இதையே "எண்ணங்கள்" வலைப்பக்கம் போட நினைச்சு அப்புறமா இங்கேயே போடலாம்னு போட்டுட்டேன். யாருக்கெல்லாம் முடியுதோ வந்து சாப்பிடுங்கப்பா!
=====================================================================================
========================================================================================





பனீர் புலாவ்... ஆஹா... சாப்பிட்டு எவ்வளவோ மாதங்களாகிவிட்டன.
பதிலளிநீக்குவாங்க நெல்லை... மருமகள் கைவண்ணத்தில் நான் சமீபத்தில் கூட சாப்பிட்டேனே..!!
நீக்குநல்ல வேளை... பசி மயக்கத்துல கேரட்டையும் ஒண்ணொண்ணாச் சாப்பிட்டுவிட்டேன்... வெறும் புலாவ்தான் இருக்குன்னு சொல்லலை.
பதிலளிநீக்குஇன்று செய்த என்பது இப்கோதா அல்லது பதிவு எழுதினபோதா,
பதிவு எழுதியபோது...
நீக்குஎன்னிக்கு எழுதினேனோ நினைவில் இல்லை. இங்கே ஸ்ரீராமுக்கு அனுப்பியே அநேகமாக ஒரு மாதத்துக்கும் மேல் இருக்குமோ?
நீக்குமிக்ப் பழைய நடிகர் காக்கா ராதாகிருஷ்ணனை, தேவர் மகன் மற்றும் வடிவேலுடன் கூடிய காமெடி ஆகியவற்றை வைத்துத்தான் சட் என நினைவுக்கு வருது.
பதிலளிநீக்குஎனக்கும் தேவர் மகன்தான் நினைவுக்கு வந்தது. உத்தமபுத்திரன், மனோகரா பாட்னரா படங்களிலும் காமெடி ரோல் செய்திருக்கிறார். அந்தக் காலத்தில் இவருக்கும் குலதெய்வம் ராஜகோபாலுக்கும் கொஞ்சம் குழம்பும் - எனக்கு!
நீக்குஅதேபோல காக்கா ராதாகிருஷ்ணைப் பார்த்தல் எனக்கு சமீபத்தில் மறைந்த என் மாமா ஞாபகம் வரும்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குவாங்க வெங்கட். வணக்கம். நல்லதே நாடுவோம்.
நீக்குபனீர் புலவ் விவரங்கள் நன்று. தில்லியில் இருந்த வரை விதம் விதமாக ருசித்தாயிற்று. இப்போது வட இந்திய உணவு வகைகள் சாப்பிடத் தோன்றுவது இல்லை. குறிப்பாக பாஸ்மதி அரிசி கொண்டு சமைக்கப்படும் உணவுகள்.....
பதிலளிநீக்குஏனோ எனக்கும் பாஸ்மதி பிடிப்பதில்லை!
நீக்குகாக்கா ராதாகிருஷ்ணன் - முந்தைய படங்கள் பார்த்தது இல்லை. வடிவேலுவும் அவரும் இருந்த சில காமெடி காட்சிகள், தேவர் மகன் படம் என ஒரு சில படங்களே நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குஅந்தக் கால படங்களில் காமெடி ரோல் நிறைய செய்திருக்கிறார்.
நீக்குகாக்கா ராதாகிருஷ்ணன் கேள்வி தானே தவிர்த்துப்பார்த்ததில்லை. அந்தக் காலப் படங்களில் பார்த்திருப்பேன். ஆனால் அவ்வளவெல்லாம் அடையாளம் தெரியாது.
நீக்குமனோதத்துவங்கள் நன்று. குறிப்பாக அழமுடியாதவன் பலவீனமானவன் என்பது.
பதிலளிநீக்குநான் தூக்கத்துக்கு பார்த்துக் கொண்டேன்.
நீக்குமேலே சொன்ன மனோதத்துவ காரக்டர்கள் சிலர் எங்க வீட்டிலேயே உண்டுனாலும் எனக்கு எதுவும் பொருந்தவில்லை.
நீக்குசில வார்த்தைகளை உச்சரிக்கும் பொழுது அதிலிருந்து விலகல் கொண்டோர்க்கு 'உவ்வே'யும் முகச்சுளிப்ப ஏற்படுவது சகஜம் தான்.
பதிலளிநீக்குஇப்பொழுது விஷயத்திற்கு
வருவோம்.
'புலவ்' என்ற வார்த்தை எப்படி, எதனால் வந்தது?
யாரோ ஒரு "புலவ"ர் வார்தையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்! வாங்க ஜீவி ஸார்!
நீக்குபுலாவ் பிரியாணி ஒற்றுமை வேற்றுமைகள்?
பதிலளிநீக்குபுலாவ் என்பது சைவம், பிரியாணி அசைவம்?
Jayakumar
சைவ பிரியாணி உண்டே... வெஜ் பிரியாணி!
நீக்குஅது சரி, போயும் போயும் கீதாம்மா திங்கற கிழமை தீட்டலுக்கு இதை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது தான் விடை தெரியாத கேள்வி.
நீக்குநான் எங்கே தேர்ந்தெடுத்தேன். எப்போவோ பண்ணினது. இதை என்னோட சாப்பிடலாம் வாங்க! பதிவில் போட்டிருந்தேன்னு நினைக்கிறேன். திடீர்னு ஸ்ரீராம் "திங்க"ற கிழமைக்குப் பதிவுகள் தேறலைனதும் இது கிடைச்சது. அனுப்பினேன். அம்புடுதேன்.
நீக்குபுலவு, வறுத்த சாதம் போன்றவை எல்லாம் அந்தக் காலத்திலேயே அதாவது சுமார் 200 ஆண்டுகள் முன்னிருந்தே தமிழகத்தில் வழக்கத்தில் இருந்திருக்கு. என்னிடம் ஒரு பழைய சமையல் புத்தகம் சேமிப்பில் இருக்கு. ஆனால் இன்னொரு லாப்டாப்பில். அதிலிருந்து சிலவற்றை நானுமே முன்னர் என்னோட வலைப்பக்கத்தில் எழுத ஆரம்பித்திருந்தேன். பின்னர் ஏனோ நின்னு போச்சு. அந்த லாப்டாப்பை எடுத்துப் பார்க்கணும்.
நீக்குநான் அறிந்தவரையிலும் புலவ் என்பது மசாலாப் பொடிகள் சேர்த்து வறுத்த சாதம். காய்கள் போடலாம், போடாமலும் இருக்கலாம். வெறும் முளைக்கட்டிய தானியங்கள் சேர்த்தும் பண்ணலாம். ஆனால் பிரியாணி என்பது "தம்" கட்டி மட்டுமே பண்ணுவது. அடியில் ஒரு அடுப்பில் தீ எரியும். மேலே பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் பிரியாணியை வேகவிட்டுட்டு. மேலே ஒரு தட்டைப் போட்டு மூடிச் சுத்தி கோதுமை மாவைப் பிசைந்து பாத்திரத்துக்கும் தட்டுக்கும் நடுவில் இடைவெளி தெரியாமல் பூசிவிட்டு மேலே தட்டிலும் தணலைப் போட்டு வைப்பார்களாம். வாசனை வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிட்டு ஆறியதும் திறப்பார்கள் எனப் படிச்சேன். இப்போவும் ஹைதராபாதில் இந்த "தம்" கட்டும் முறை உண்டுனு கேள்வி.
நீக்குஇவர் தான் காக்கா ராதாகிருஷ்ணன் என்று அடையாம் காட்டினால் இந்தத் தலைமுறையினருக்கு சுலபமாகப் புரியும்.
பதிலளிநீக்குவசூல் டாக்டர் எம்.பி.பி.ஸ் சினிமாவில்,
ஆஸ்பத்திரியில் தன்னிலை மறந்து படுத்த படுக்கையாய் இருக்கும் நோயாள்
டாக்டர் படிப்பு மாணவர் கமல் ஆலோசனையின் பேரில் ஒரு கேரம் போர்ட் வரவழைத்து இரண்டு பேரை அதில் விளையாட வைத்து அவர்கள் விளையாடும் பொழுது கேரம் போர்டில் காயின் தட்டும் (தனக்கு பழக்ஜப்பட்ட)
ஒலி கேட்டதும் 'டக்',கென்று எழுந்து தானும் கேரம் போர்ட் ஆட தயாராவாரே அந்த நோயாளி கேரக்டர் தான் பழம் பெரும் நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன்.
ஹிந்தியில் சஞ்சய் தத் நடிச்சுப் பார்த்தேன். இரண்டுமே. ஆனால் தமிழில் வந்தது பார்த்தது இல்லை. ஆதலால் காக்காய், குருவி யாரையும் தெரியலை. :)
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குநலமே வாழ்க
பதிலளிநீக்குபுலால் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து உருவானவையே புலவு, புலால் என்ற வார்த்தைகள்...இவை மருவி வந்திருக்கின்றன...
பதிலளிநீக்குஇவை தமிழ்ச் சொற்களே...
புலாவ் எனும் நிணச் சோறும் நம்முடையதே...
வெஜ் புலாவ் என்பது தவறானது
பிரியாணி என்பது நிணச் சோற்றுக்கான வேற்று மொழிப் பெயர்..
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குபனீர் புலவ் செய்முறை , படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. சார் இருக்கும் போது எழுதிய பதிவு என்று நினைக்கிறேன். சார் இப்போதும் இருப்பது போலவே இருக்கிறது.
பதிலளிநீக்குஆமாம், அதுவும் அவர் வண்டியெல்லாம் எடுத்துப்போன காலம். மேலும் நானே வீட்டில் சமைத்த காலமும் கூட. :(
நீக்குபனீர் புலவு எனும் தவறான சொற்பிரயோகத்தை
பதிலளிநீக்குமதிப்புக்குரிய அக்கா எதன் அடிப்படையில் தேர்ந்தெடுத்தார்கள் ?..
அப்படி எல்லாம் நினைச்சுப் பார்க்கலை. என்ன பெயர் வைக்கிறதுனு பார்த்தப்போ ஏதோ யூ ட்யூபிலே இந்தப் பெயரில் ஒரு பதிவு வந்திருந்ததுனு நினைக்கிறேன். அப்படியே அதையே நானும் எடுத்துக் கொண்டேன். மத்தபடி இதை எல்லாம் யோசிக்கவே இல்லை. :)))
நீக்குஊன் அடிசில் என்பதும் பிரியாணியே...
பதிலளிநீக்குவேறு யாராவது புதியவர் எனில் பேசாமல் போயிருப்பேன்...
பதிலளிநீக்குஅக்கா அவர்களது பதிவு என்பதால் தான்...
அதனால் என்ன? பரவாயில்லை தம்பி. நான் எந்தவிதமான பொருளுடனும் இந்தப்பெயரைத் தெரிவு செய்யவில்லை. :)
நீக்குகாக்கா ராதாகிருஷ்ணன் அவர்கள் பழைய படங்களில் குறிப்பாக மனோகரா படத்தில் , கலைவாணர்படங்களில் இருப்பார், நல்லதம்பி கலைவாணர் படம் தொலைகாட்சியில் பார்த்தேன் , நல்ல சிரிக்க வைப்பார்.
பதிலளிநீக்குபம்மல்.கே சம்பந்தம் என்ற கமல் படத்தில் நடித்தார் கேரம் போர்ட் விளையாடுவார், கிரேஷி மோகனின் அப்பாவாக நடித்தார்.
மனோதத்துவம் பகிர்வு படித்தேன்.
முதல் கருத்து சரிதான் என்று நினைக்கிறேன், மற்றவர்களை சிரிக்க வைப்பவர்கள் சோகத்தை மறைத்து கொண்டு இருப்பார்கள் என்பார்கள்.
மனோத்த்துவத்தில் உள்ள ஒரு விஷயமும் எனக்கு இல்லையே... இதற்கு என்ன காரணமாயிருக்கும்?
பதிலளிநீக்குஎனக்கும் எதுவும் இல்லை. ஆனால் முதல் கருத்தில் எங்க வீட்டில் உறவில் சிலர் உண்டு. ஒண்ணுமே இல்லாததுக்குச் சத்தம் போட்டுச் சிரிப்பாங்க.
நீக்குசமீப வருடங்களில் நான் உணவை எடுத்துக்கொண்டு தனியாக அமர்ந்து உண்ணும் வழக்கம் வைத்திருக்கிறேன். இதற்கு மனோத்த்துவம் என்ன சொல்கிறது?
பதிலளிநீக்குதனிமையை விரும்புகிறீர்கள். அதுக்கு மேலே என்ன சொல்லுவது?
பதிலளிநீக்கு// சென்ற வாரம் ஸ்ராத்தத்தின் போது வாங்கி வந்த காய்கள் நேற்று வரை வந்து விட்டன! இன்னிக்குக் காய் இல்லை. கொஞ்சம் போல் காரட்டுகளும் ஒரு கைப்பிடி அவரைக்காயும் தான் இருந்தது. நம்மவருக்கு உடனே குஷி வந்துடுமே. நான் போய்க் காய்களெல்லாம் வாங்கிண்டு அப்படியே மத்தியானத்துக்குக் குழம்பு, ரசம், கறி, கூட்டும் வாங்கிடறேன். நீ சாதம் மட்டும் வை! நேத்திக்கே கை வலினு சொன்னியே! இன்னிக்குச் சமைக்க வேண்டாம்னு சொல்ல ..// குழம்பி விட்டேன். இப்போதுதானே மாமாவுக்கு வருஷாப்தீகம் முடிந்தது, மாமா காய் வாங்க கிளம்பினாரா?? பழைய பதிவா? ஸ்ரீராமாவது தெளிவு படுத்தியிருக்கலாம்.
பதிலளிநீக்குபுலவு மிக நன்றாக இருக்கிறது போலிருக்கிறது, போட்டவுடன் பல பேர் வந்து விட்டார்களே?
பதிலளிநீக்குகாக்கா ராதாகிருஷ்ணன் தேவர் மகன் படத்தில் சிவாஜியின் சகோதரராக, நாசருக்கு அப்பாவாக நடித்திருப்பார்.
பதிலளிநீக்கு