நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
9.6.13
8.6.13
பாசிட்டிவ் செய்திகள் ஜூன் 1,2013 முதல், ஜூன் 8 2013 வரை.
எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
1) பெட்ரோல் வேண்டாம், டீசல் வேண்டாம், காந்தம் மூலம் இயங்கும் பைக்! 11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடிப்பு.
பெட்ரோல், டீசல் இல்லாமலேயே காந்தம் மூலம் இயங்கும் பைக் இன்ஜினைக் கண்டுபிடித்து இருக்கிறார், கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் வெங்கடேஷ்.
''தற்போது உள்ள சவாலான விஷயம் பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக மாற்றுவழி. அதற்கான முன் உதாரணம்தான், காந்த விசையின் மூலம் இயங்கும் இந்த இன்ஜின். இது அதிக வெப்பத்தை வெளிவிடாது, குறைந்த எடையுடையது, அதிக இடத்தையும் ஆக்கிரமிக்காது. மின்வெட்டுக்கும தீர்வாகிறது. இதனை ஜெனரேட்டராகவும் பயன்படுத்தலாம். இந்த இன்ஜினுக்குள் ஏற்படும் காந்த விசையின் அளவுக்கு ஏற்ப மின்சாரத்தையும் தயாரிக்கலாம்'' என்கிறார் வெங்கடேஷ் மேலும் 'தான் ஒரு இயற்கை விஞ்ஞானி’ என்கிறார் வெங்கடேஷ்.
2) சென்னை: "கடும் நெஞ்சுவலியிலும், மின்சார ரயிலை நிறுத்தி, பயணிகளை பாதுகாத்து விட்டு, மாரடைப்பால் இறந்த டிரைவருக்கு, விருது வழங்கி கவுரவிக்கப்பட வேண்டும்' என, ரயில்வே வாரியத்திற்கு, தெற்கு ரயில்வே, பரிந்துரைத்துள்ளது.
கடந்த மாதம், 23ம் தேதி,
கும்மிடிப்பூண்டியிலிருந்து, சென்னை சென்ட்ரலுக்கு, புறநகர் மின்சார ரயில்
வந்து கொண்டிருந்தது. இதில்,1,300 பேர் பயணம் செய்தனர். ரயிலை டிரைவர்
மனோகர், 48வயது, இயக்கினார். ரயில், கவரப்பேட்டை நிலையத்தை கடந்து சென்ற சிறிது
நேரத்தில், டிரைவர் மனோகருக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. கடும்
நெஞ்சுவலியிலும், ரயிலை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, எதிரில் வரும்
டிரைவரிடம் உதவி கேட்கும் வகையில், ரயில் இன்ஜின் முன்பகுதியில் உள்ள,
எமர்ஜென்சி விளக்கை எரிய விட்டார்; பின், மாரடைப்பால் இறந்தார். ரயிலை
பாதுகாப்பாக நிறுத்தி விட்டு, இறந்த டிரைவரின் பணியினை பாராட்டி, தெற்கு
ரயில்வே மூலம், "வீர வணக்கம்' செலுத்தப்பட்டது. அவரது குடும்பத்திற்கு
தேவையான உடனடி உதவிகளும் வழங்கப்பட்டன. பணியில் இருந்த போது இறந்தால்
வழங்கப்படும், துறை ரீதியான சலுகைகளும் விரைவாக வழங்கப்பட நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொறுப்பாக கடமையாற்றியதை கவுரவிக்கும் விதமாக,
டிரைவர் மனோகருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட வேண்டும் என, ரயில்வே
வாரியத்திற்கு, தெற்கு ரயில்வே பரிந்துரைத்துள்ளது.
3) ஈரநெஞ்சங்களின் நற்பணிகள் பற்றி முன்னரேயும் படித்துப் பகிர்ந்திருக்கிறேன். இப்போது இன்னொன்று.
கடந்த 13/07/2010 அன்று கோவை காந்திபுரம்
திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் 55 வயதுள்ள ஒரு பெண் மனநிலை
பாதிக்கப்பட்ட நிலையில், உடலில் உடைகூட இல்லாமல் கோவை காந்திபுரம்
பகுதியில் இருந்தார் . இவரை ஈரநெஞ்சம் மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள்
மூலமாக கோவை அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.அன்பாலயம்
மறுவாழ்வு இல்லத்தில் தேவியை நல்ல முறையில் பராமரித்து வந்த நிலையில்,
ROBERT BOSCH கம்பெனி உதவியுடன் மருத்துவர் ரமணி அவர்களின் சிகிச்சையில் ,
கடந்த மூன்று வருடத்திற்கு பிறகு தேவிக்கு சுயநினைவு திரும்பியது . அதனை
அடுத்து அவருக்கு தான் யாரென்றும், தன் மகன் யாரென்றும் நினைவு
திரும்பியது. தான் தேவி , தன்னுடைய மகன் கணேஷ் என்கின்ற ரகு என்றும் அவர்
கோவை செல்வபுரம் பகுதியில் வசிப்பவர் என்று இருந்த இடத்தையும் கூறினார்.
இதன் மூலமாக தேவியின் மகன் ரகுவை அழைத்து கேட்கும் போது தேவி என்பவர்
என்னுடைய தாயார் தான் நானும் என் அம்மாவும் மட்டும் தான் எங்கள் வீட்டில்
இருந்து வந்தோம் கடந்த 5 வருடங்களாக அவர் காணவில்லை, எங்கு தேடியும்
கிடைக்கவில்லை , போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் கிடைக்கவில்லை என்றும்
அவர் கூறினார் தனது அம்மா கிடைத்த மகிழ்ச்சியில் திரு.ரகு மூன்று வருடமாக
அம்மாவை பராமரித்து வந்த அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்திற்கும், சாலையில்
பரிதாபமாக இருந்த தனது அம்மாவை காப்பகத்திற்கு அழைத்து வந்து சேர்த்த
ஈரநெஞ்சம் அமைப்பிற்க்கும் , மருத்துவ சிகிச்சைக்கு உதவிய ROBERT BOSCH
கம்பெனி மற்றும் Dr. ரமணி அவர்களுக்கும் மனதார ரகு நன்றியை
தெரிவித்துக்கொண்டார். அதனை அடுத்து தேவி அம்மாவை இன்று 05/06/2013
துடியலூர் காவல் நிலையத்தின் முன்னிலையில் அவருடைய மகன் ரகுவிடம்
ஒப்படைக்கப்பட்டது. சாலையில் மிகவும் பரிதாபமான நிலையில் இருந்த தேவி
அம்மாவிற்கு உறவு கிடைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் உங்களோடு
பகிர்ந்துக்கொள்கிறது.
4) ரவி சக்சேனா. காசிபூர் டீ
விற்பனையாளர். மாதத்தில் 20 நாள் உழைத்து எட்டாயிரம் ரூபாய் வரை
சம்பாதிப்பவர். மிச்ச பத்து நாட்கள் பொதுச் சேவைக்குச் செலவிடுகிறார்,
உறவினர்களின் 'பிசினசைப் பார், உன் பிழைப்பை முதலில் பார்' என்னும்
எதிர்ப்பையும் மீறி!
என்ன பொதுச் சேவை? பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களை நல்ல தனியார்
மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சையளிக்க உதவுவது. அவருக்கும் விவரம்
தெரியாமல்தான் இருந்ததாம் யதேச்சையாக சில வருடங்களுக்குமுன் ஆஸ்துமாவால்
அவதிப்பட்ட ஒரு முதியவருக்கு உதவப் போய், முதன்முதலாக தனியார்
மருத்துவமனைக்குள் நுழைந்து மிரண்டிருக்கிறார். பிறகு தனியார்
மருத்துவமனைகளில் பத்து சதவிகித உள்நோயாளிகளையும், 25 சதவிகித
வெளிநோயாளிகளையும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு ஒதுக்க
வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு இவருக்குத் தெரிந்ததாம்.
டெல்லியில் இதுபோன்ற உத்தரவு 4பெற்ற 8 தனியார் மருத்துவமனைகள்
இருக்கின்றனவாம். இவர்கள் அரசின் அரசாங்கத்திடமிருந்து குறைந்த விலையில்
நிலம் பெற்றவர்கள். ஒருசில மருத்துவமனைகள் ஒத்துக் கொள்கின்றனவாம். ஒரு
மருத்துவமனை கிட்னி பிரச்னை ஒன்றில் ஒருவருக்கு, 26 லட்ச ரூபாயை தள்ளுபடி
செய்தாலும், இன்னொரு மருத்துவமனை வயிற்றில் புற்றுநோய் இருந்த ஒருவருக்கு
உதவி செய்யாமல், அப்புறம் வழக்குப் போட்டு நடவடிக்கை எடுத்த பிறகு ஒத்துக்
கொண்டதாம்.
7.6.13
4.6.13
மனவரிகள் 6 2013
காலம் காலமாக
சொல்வதுதான்...
நேற்று நீ சொன்னதைத்தான்
இன்று நான் சொல்கிறேன்...
நீ காதல் என்கிறாய்
நான் கவிதை என்கிறேன்..
பொய்க்குதான் எத்தனை பெயர்கள்...
சொல்வதுதான்...
நேற்று நீ சொன்னதைத்தான்
இன்று நான் சொல்கிறேன்...
நீ காதல் என்கிறாய்
நான் கவிதை என்கிறேன்..
பொய்க்குதான் எத்தனை பெயர்கள்...
**********************************************************
காற்று
காதலைப் போலவே வீசுகிறது
ஊடல் கொண்ட
மதியங்களின் கோப தருணங்களில் வெப்பமாக,
இரவுகளின் இனிமையில் சுகமாக..
காதலைப் போலவே வீசுகிறது
ஊடல் கொண்ட
மதியங்களின் கோப தருணங்களில் வெப்பமாக,
இரவுகளின் இனிமையில் சுகமாக..
****************************************************************
காற்றில் கலந்த
காதலின் வாசம்
பூமியெங்கும்
நேசப் பிரவாகம்
காதலின் வாசம்
பூமியெங்கும்
நேசப் பிரவாகம்
********************************************************************
நிலவில்
நீரிருக்கிறதோ இல்லையோ
(குளத்து)
நீரில்
நிலவு இருக்கிறது!
நீரிருக்கிறதோ இல்லையோ
(குளத்து)
நீரில்
நிலவு இருக்கிறது!
3.6.13
சுஜாதாவைப் பிரிய நினைத்த சுஜாதா - படித்ததன் + எண்ணங்களின் பகிர்வு
லேசான, மிக லேசான திடுக்கிடலை ஏற்படுத்திய கட்டுரை. 2/6/13 தேதியிட்ட
தினகரன் நாளிதழின் இணைப்பான வசந்தத்தில் ப்ரியா என்பவரால்,
பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் மனைவியை - ஒரிஜினல் சுஜாதாவை - எடுத்த பேட்டி.
'இவருமா' என்று நினைக்க வைத்தது. சொன்னவரையும் சொல்லலாம். சொல்லப் பட்டவரையும் சொல்லலாம்.
குறைகள் பட்டியலால் அல்ல. அவற்றை அம்பலத்தில் விட்டதால்! யாரிடம் குறையில்லை.. மஹாகவி பற்றிகூட இப்படிச் சில செய்திகள் உண்டு. குறைகள் வெளியே தெரியாமல் மறைக்கப் படவேண்டும் என்று சொல்லவில்லை. இந்த உணர்வுகள் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் இருக்கும். ஒரு பிரபலத்தின் குறைகளை பொதுவில் பேச இப்போது என்ன தேவை வந்தது என்ற கேள்வி வந்தது.
(ஆனால் ஒன்று. ஒரு செய்தியைத் தரும்போது 'அழுதான்' என்று சொல்லலாம். 'நீண்ட நேரம் அழுத்கொண்டே இருந்தான்' என்று சொல்லலாம். 'கண்ணீர் விட்டுக் கதறி 'கோ' என்று அழுதான்' என்று சொல்லலாம். ப்ரெசென்ட் செய்வதில் இருக்கிறது சூட்சுமம். சில பேட்டிகளில் சில குறிப்பிட்ட வரிகளை பரபரப்புக்காக 'ஹைலைட்' செய்திருப்பார்கள்)
நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சுயத்தை இழக்கும் மனைவிகள், தங்கள் திறமைகளை, தங்கள் சந்தோஷங்களை, கணவர்களுக்காகத் தியாகம் செய்கிறார்கள். எந்த அளவு என்று நம்முடைய பெண் வாசகர்கள் பகிர நினைத்தால், பகிர்ந்து கொள்ளலாம்.
கணவர்கள் இழப்பதில்லையா? விட்டுக் கொடுப்பதில்லையா?
இருபக்கமும் உண்டு. நினைக்கும் எல்லாவற்றையும் பகிரவும் முடியாது!
மனைவியின் திறமைகள் கணவர்களுக்கு லேசான பொறாமையைக் கொடுக்குமோ... மற்றவர்கள் அவர்களைப் பாராட்டினால் தாங்கிக் கொள்ள முடியாமல் போகுமோ..? சமீபத்திய பிரபல பாடகியின் கணவர் தற்கொலை நினைவுக்கு வருகிறது.
சமீபத்தில் என்னுடன் பேசிக் கொண்டிருந்த ஒரு உறவினர் தன அம்மா தங்களுக்கெல்லாம் பார்த்துப் பார்த்துப் பரிமாறி, சாப்பாடு போடும் அம்மா, என்ன சாப்பிடுகிறார் என்று தெரியாமல் போனது, பாதிநாள் அவர்கள் சரியாகவே சாப்பிட்டதில்லை போல என்று இன்று தெரிகிறது' என்றார். அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதே அருகிலிருந்த என் மனைவி, 'மனைவிகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று கணவர்கள் பார்க்கிறார்களா' என்று கேட்டார். 'நாமல்லாம் சேர்ந்துதானேப்பா சாப்பிடறோம்?' என்றேன். 'லஞ்ச் சரி, நைட்டு?' என்று யோசிக்க வைத்தார்.
பிரபலமானவர்களின் மனைவிகள் இழப்பது சற்று அதிகமோ? அல்லது, பிரபலங்கள் என்பதாலேயே இவை அதிகம் கவனிக்கப் படுகின்றனவோ........
குறைகள் பட்டியலால் அல்ல. அவற்றை அம்பலத்தில் விட்டதால்! யாரிடம் குறையில்லை.. மஹாகவி பற்றிகூட இப்படிச் சில செய்திகள் உண்டு. குறைகள் வெளியே தெரியாமல் மறைக்கப் படவேண்டும் என்று சொல்லவில்லை. இந்த உணர்வுகள் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் இருக்கும். ஒரு பிரபலத்தின் குறைகளை பொதுவில் பேச இப்போது என்ன தேவை வந்தது என்ற கேள்வி வந்தது.
(ஆனால் ஒன்று. ஒரு செய்தியைத் தரும்போது 'அழுதான்' என்று சொல்லலாம். 'நீண்ட நேரம் அழுத்கொண்டே இருந்தான்' என்று சொல்லலாம். 'கண்ணீர் விட்டுக் கதறி 'கோ' என்று அழுதான்' என்று சொல்லலாம். ப்ரெசென்ட் செய்வதில் இருக்கிறது சூட்சுமம். சில பேட்டிகளில் சில குறிப்பிட்ட வரிகளை பரபரப்புக்காக 'ஹைலைட்' செய்திருப்பார்கள்)
நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சுயத்தை இழக்கும் மனைவிகள், தங்கள் திறமைகளை, தங்கள் சந்தோஷங்களை, கணவர்களுக்காகத் தியாகம் செய்கிறார்கள். எந்த அளவு என்று நம்முடைய பெண் வாசகர்கள் பகிர நினைத்தால், பகிர்ந்து கொள்ளலாம்.
கணவர்கள் இழப்பதில்லையா? விட்டுக் கொடுப்பதில்லையா?
இருபக்கமும் உண்டு. நினைக்கும் எல்லாவற்றையும் பகிரவும் முடியாது!
மனைவியின் திறமைகள் கணவர்களுக்கு லேசான பொறாமையைக் கொடுக்குமோ... மற்றவர்கள் அவர்களைப் பாராட்டினால் தாங்கிக் கொள்ள முடியாமல் போகுமோ..? சமீபத்திய பிரபல பாடகியின் கணவர் தற்கொலை நினைவுக்கு வருகிறது.
சமீபத்தில் என்னுடன் பேசிக் கொண்டிருந்த ஒரு உறவினர் தன அம்மா தங்களுக்கெல்லாம் பார்த்துப் பார்த்துப் பரிமாறி, சாப்பாடு போடும் அம்மா, என்ன சாப்பிடுகிறார் என்று தெரியாமல் போனது, பாதிநாள் அவர்கள் சரியாகவே சாப்பிட்டதில்லை போல என்று இன்று தெரிகிறது' என்றார். அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதே அருகிலிருந்த என் மனைவி, 'மனைவிகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று கணவர்கள் பார்க்கிறார்களா' என்று கேட்டார். 'நாமல்லாம் சேர்ந்துதானேப்பா சாப்பிடறோம்?' என்றேன். 'லஞ்ச் சரி, நைட்டு?' என்று யோசிக்க வைத்தார்.
பிரபலமானவர்களின் மனைவிகள் இழப்பது சற்று அதிகமோ? அல்லது, பிரபலங்கள் என்பதாலேயே இவை அதிகம் கவனிக்கப் படுகின்றனவோ........
எழுத்தாளர்கள் பிரபலமானவர்கள் என்றில்லை, எல்லாக் கணவர்களும் யோசிக்க வேண்டிய நேரம் இது.
அந்தக் கட்டுரையின் முக்கியப் பகுதிகள் இங்கே...(அங்கே படிக்காதவர்களுக்காக - இணையத்திலேயே தினகரன் நாளேடு, வசந்தம் படிக்க முடிகிறது)
" ..............................
இந்த மனநிலையை மனைவியான என்னிடமும் செலுத்தினார். நான் சாப்பிட்டனா....தூங்கினனா...
குடும்பத்தைத் தாண்டிப் பெண்கள் வெளில வரக்கூடாதுனு நினைப்பார். இதுக்குக் காரணம், அவர் வளர்ந்த விதம்.
அவரோட உலகம் ரொம்பச் சின்னது. ஸ்ரீரங்கத்ல பாட்டி வீட்லதான் வளர்ந்தார். அந்த அக்ரஹாரம்தான் அவருக்கு எல்லாம். அதைத் தாண்டி அவர் சின்ன வயசுல வந்ததில்லை. வளர்ந்தபிறகு கூட மனதளவுல அந்த அகரஹாரப் பையனாத்தான் இருந்தார்.
ஆனா எங்க வீட்ல அப்படிக் கிடையாது. பெண்களுக்கு எல்லா உலக விஷயமும் தெரியணும், அவங்களும் படிக்கணும்னு நினைச்சாங்க. அப்படித்தான் என்னை வளர்த்தாங்க. எங்க தாத்தா ஆங்கிலேயர் கிட்ட வேலை பார்த்தவர். அதனால எங்கம்மாவுக்கு ஆங்கிலத்தையும், அறிவியலையும் தாத்தா ஸ்பெஷலா ஒரு ஆங்கிலோ இந்திய டீச்சரைப் பிரைவேட்டா நியமிச்சு படிக்க வச்சார்.
என் தங்கை டாக்டருக்குப் படிச்சுட்டு அமெரிக்காவுல இருக்கா. ஒரு தம்பியும் அமெரிக்கால செட்டிலாயிட்டான். இன்னொரு தம்பி சென்னைல நல்ல வேலைல இருந்து ரிடையர் ஆகியிருக்கான்.
இப்படிப்பட்ட குடும்பத்துலதான் 20 வருஷங்கள் வளர்ந்தேன். திடீர்னு கல்யாணமாகி வேறொரு சூழல் அமைந்சதும் முதல்ல ஒண்ணும் புரியலை. கிட்டத்தட்ட பத்து வருஷங்கள் ரொம்பச் சிரமப் பட்டேன். அப்புறம் என் கணவரோட உலகம் எனக்கு பழகிடுச்சு. அவரோட உலகத்துக்குத் தகுந்த உயிரினமா வாழ ஆரம்பிச்சேன்.
பலநாட்கள் அம்மா மடில படுத்து அழுதிருக்கேன். திரும்பி வந்துடறேன்னு கதறிருக்கேன். ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழ முடியாது அட்ஜஸ்ட் பண்ணிக்கன்னு சொன்னாங்க. அந்த காலகட்டம் அப்படி. அதுவே இன்றைய சூழ்நிலையா இருந்திருந்தா எங்கம்மா கிட்ட யோசனை கேட்டிருக்க மாட்டேன். குழந்தைகளோட தனியா வந்திருப்பேன்...
அவருக்கு மனைவி குழந்தைகள் மேல அன்பு இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா, அதை வெளிப்படுத்தத் தெரியாது. வெளிப்படுத்தாத அன்பால யாருக்கு என்ன பயன்? உறவுன்கர சக்கரம் சுழல அன்புதானே அவசியம்? அவரை முழுசாப் புரிஞ்சிக்க எனக்குப் பத்து வருஷங்களாச்சு. அதுக்குப் பிறகு, என்னோட சுயத்தை விட்டுட்டு, அவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும் வாழ ஆரம்பித்தேன். அவருக்கு ரெண்டு பைபாஸ் சர்ஜரி நடந்தது. அதனால அவரால எங்கயும் போக முடியாது. துணையா நான் இருந்தேன்.....
எங்களுக்கு ரெண்டு பசங்க. ரெண்டு பேருமே அமெரிக்காவுல வேலை பார்த்துகிட்டு இருந்தாங்க. அவர் காலமானதும் பெரியவன் சென்னைக்கு வந்துட்டான். சின்னவன் அமெரிக்காவுலதான் இருக்கான். எனக்கு வர்ற மருமகள் தமிழ்ப்பெண்ணா இருக்கணும்னு ஆசைப் பட்டேன். அது நடக்கலை. பெரியவன் பஞ்சாபிப் பெண்ணையும், சின்னவன் ஜப்பானியப் பெண்ணையும் விரும்பிக் கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. ஆனா ரெண்டு மருமகள்களுமே தங்கமானவங்க.. என்னைக் கைல வச்சுத் தாங்கறாங்க.....
இதுவரைக்கும் கணவன், மாமனார், மாமியார், அம்மா, அப்பா, பிள்ளைகள்னு மத்தவங்களுக்காகவே வாழ்ந்துட்டேன். இப்பதான் எனக்காக வாழ ஆரம்பிச்சுருக்கேன். கோயில், யாத்திரைகள்னு பொழுது போகுது. அமெரிக்காவுல இருக்கற சின்னவன் வீட்டுக்கும், தம்பி, தங்கைகள் வீட்டுக்கும் போய் வர்றேன்...விருப்பப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். என்னோட நேரங்கள் எனக்கானதா செலவாகுது. பெரிய எதிர்பார்ப்புகள் எனக்குக் கிடையாது. அதனாலேயே சந்தோஷமா இருக்கேன். ஏன்னா, எதிர்பார்ப்பு இருந்தாதான் ஏமாற்றம் ஏற்படும். என் வாழ்க்கை எனக்குக் கத்துக் குடுத்த பாடம் இது..."
என்று சொல்லும் திருமதி சுஜாதா கடைசிவரை யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம். இவர் விலங்கியல் துறையில் பட்டப் படிப்பு முடித்தவராம்.
2.6.13
1.6.13
பாசிட்டிவ் செய்திகள் மே 25, 2013 முதல் ஜூன் 1, 2013 வரை
எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
கடந்தவாரம் பாசிட்டிவ் செய்திகள் இருந்திருக்கும்.
நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ / மாணவிக் கண்மணிகள் செய்தி கூட பாசிட்டிவ்தான். 'எங்கள்' கண்ணில் பட்டவரை ( மறுபடியும்.... எங்கள் கண்ணில் பட்டவரை.. ) வேறு பாசிட்டிவ் செய்திகள் கடந்த வாரம் கண்ணில் படவில்லை.
* சென்னையை வாட்டி வதைத்த கத்திரி வெய்யில் விடை பெற்று சென்றது.
* உக்கிரம் வக்கிரம் ஆயிற்று.
* தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை.
* சென்னையை வாட்டி வதைத்த கத்திரி வெய்யில் விடை பெற்று சென்றது.
* உக்கிரம் வக்கிரம் ஆயிற்று.
* தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





