Wednesday, May 12, 2010

பத்மா பாட்டு.

நான் பார்த்த பிரபுதேவா படம் ஒன்றில் ஒரு சுவையான காட்சி ஞாபகம் வருகிறது. கௌசல்யா பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார். 

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி ......."
திடீர் என்று பவர் கட் (அட இந்த சமாச்சாரம் அந்தக் காலத்திலேயும் இருந்துருக்கு!)
ஆனா - என்ன ஆச்சரியம்! பி சுசீலா குரல் மட்டும் பாடல் நின்ற இடத்திலிருந்து தொடர்ந்து ஒலிக்கும், வீட்டிற்கு வெளியில் இருந்து! 

கௌசல்யா திகைத்துப் போய் கதவைத் திறந்தால் அங்கே சாட்சாத் பி சுசீலா - புன்னகையுடன் அந்தப் பாடலைப் பாடியபடி நின்றுகொண்டு இருப்பார். மெய் சிலிர்க்கும், கௌசல்யாவுக்கும், நமக்கும். 

பத்மா அவர்கள் என்னதான் இது அவர் பாடியது என்று சொன்னாலும், எங்களுக்குக் கொஞ்சம் சந்தேகமாகத் தான் உள்ளது. 'ஒருவேளை இது பி சுசீலா அவர்கள் பத்மா வீட்டிற்கு வந்த சமயம் பாடியதோ?' என்று. 

(நீங்களும் கேட்டுப் பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.)

57 comments:

அநன்யா மஹாதேவன் said...

Excellent voice quality Padma! very Nice singing!

அநன்யா மஹாதேவன் said...

இந்த போஸ்டு லோடாறதுக்கு ரொம்ப டைம் எடுக்குது. ப்ளேயரும் ரிஃப்ரெஷ் பண்ணினாத்தான் வேலை செய்யறது. ப்ளீஸ் நோட்!

சந்ரு said...

பகிர்வுக்கு நன்றிகள்

வானம்பாடிகள் said...

ரொம்ப நல்லாருக்கே:)

Madhavan said...

it was P Susila's voice only..
-- that much close..

பத்மநாபன் said...

///ஒருவேளை இது பி சுசீலா அவர்கள் பத்மா வீட்டிற்கு வந்த சமயம் பாடியதோ// அதே...அதே ரீப்பீட் பாராட்டு.... எங்கள் பிளாக் விரைவில் வலைப்பூ சூப்பர் சிங்கர் போட்டி அறிவித்து விடும்.....

ஜெகநாதன் said...

உருக்குகிறது பத்மாவின் குரல்..!
காற்று அப்படியே கைப்பற்றி அழைத்துச் செல்லும்​போல! ​நேர்த்தியான பதிவு!!
வாழ்த்துக்கள் பத்மா!!
நல்ல குரல்வளம் உங்களுக்கு!

விஜய் said...

Excellent Voice
&
Good Sruthi

Wishes to Padma

Vijay

SUREஷ் (பழனியிலிருந்து) said...

சந்தேகப் புத்தி சந்தேகப் புத்தி

meenakshi said...

பத்மா, இது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. ஸ்ருதி விலகாம ரொம்ப நல்லா பாடி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

'எங்கள்'உங்கள் குடும்ப நண்பர் விஷ்ணு பாடி இருப்பதும் அருமை. என்னோட வாழ்த்தையும் கொஞ்சம் அவருக்கு சொல்லிடுங்க.

padma said...

ஐயோ எனக்கு ரொம்ப shy ஆ இருக்கே .நெஜம்மாவே போஸ்ட் பண்ணிடீங்களா?கடவுளே

padma said...

ரொம்ப நன்றி .தைரியமா போஸ்ட் பண்ணினதுக்கு .பாராட்டியவர்களுக்கும் மிக்க நன்றி

ரிஷபன் said...

அருமையான குரல்.. வாழ்த்துகள்..
அப்படியே பி. சுசீலாவை நகல் எடுத்த மாதிரி..

மணிஜீ...... said...

நெஜமாவே கம்பி பாகு

இராமசாமி கண்ணண் said...

அருமையான குரல் வளம். பகிர்வுக்கு நன்றி.

முகுந்த் அம்மா said...

padma kalakkal

சே.குமார் said...

very nice voice.

super.

Keep it up.

Congrats

D.R.Ashok said...

பிரமாதம்...

பல திறமை இருக்குங்க உங்களுக்கு, என்னைய மாதிரியே :)))

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை


பகிர்விற்கு நன்றி

கே.ஆர்.பி.செந்தில் said...

நல்ல குரல் வளம், வாழ்த்துக்கள்

Geetha Achal said...

பத்மா...அருமையான குரல்...வாழ்த்துகள்...

விஜய் said...

யாரும் பயப்பட வேண்டாம்

நானும் பாடி அனுப்ப போறேன்

விஜய்

padma said...

வாங்க விஜய்
நல்வரவு
எனக்கே பயப்படல .........

ஜெய்லானி said...

சூப்பர் அதே வாய்ஸ். இன்னொரு சுசிலா ..

விஜய் said...

@ பத்மா

இதெல்லாம் ரொம்ப ஓவரு. எவ்ளோ சூப்பரா பாடி இருக்கீங்க

நிஜமாவே ரொம்ப இனிமையாய் இருந்தது உங்கள் குரல்.

(நான் ஒரு Guitarist, கொஞ்சம் கொஞ்சம் மியூசிக் தெரியும்)

விஜய்

meenakshi said...

விஜய், கிட்டார்ல ஒரு பாட்டு வாசிச்சு அனுப்புங்களேன்.

ரவிஷா said...

அருமையான குரல்! Voice culture training எடுத்தால் உச்சஸ்தாயிலும் ஸ்ருதி பிசகாமல் பாட முடியும்! வாழ்த்துக்கள்!

ஹேமா said...

வாவ்....பத்மா.மயக்கும் குரல்.பிசகாத ஸ்ருதி.
குரலுக்குக்கேற்ற பாடல் தெரிவு தோழி.பாராட்டுகள்.

மயில்ராவணன் said...

நல்லா இருக்கு குரல்வளம்.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

அருமை ,அருமை ,அருமை,
நல்லாயிருக்குங்க .
ரசித்தேன்.
வாழ்த்துக்கள் .

padma said...

எல்லாருக்கும் ரொம்ப நன்றிங்க .நெஜம்மா இது ஒரு விளையாட்டுத் தனமா தான் அனுப்பினேன் . நெறைய பேர் கேட்டுருக்கீங்க .சுசிலான்னு சொல்றதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் .அதெல்லாம் நம்பிடுவோம்மா என்ன ? எனினும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி.எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம். அதை தந்த எங்கள் ப்ளாக் குழுவினருக்கு நன்றி .

uma said...

super padmaja very good voice

ஜெரி ஈசானந்தன். said...

இந்திய இசையுலகம் ஒரு இசைக்குயிலை மிஸ் பண்ணிவிட்டது.

ஜெரி ஈசானந்தன். said...

பத்மா..நம்பவே முடியல...என் மனைவியை அழைத்தும் காட்டினேன்.பாராட்ட வார்த்தைகள் இல்லை.

விஜய் said...

@ மீனாக்ஷி

கண்டிப்பாக முயல்கிறேன் சகோதரி

நன்றி

விஜய்

geetha santhanam said...

பத்மா, கலக்கிட்டீங்க. நல்ல குரல், பாவம்(bhavam), modulations. வாழ்த்துக்கள்.--கீதா

சுந்தர்ஜி said...

மொதல்ல சொல்ல வேண்டியது நல்ல குரல் பத்மா ஒங்களோடது.ஆனா அங்கங்க தம் விட்டுட்றீங்க. கொஞ்சம் பயமும் தெரியுது.ஆனா ப்ரமாதமா மயக்கவைக்கும் குரலில் மயங்கினேன் நான்.சபாஷ் பத்மா.

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பரொம்ப ரொம்ப நல்லா இருக்கிறது பத்மா.
என்னுடைய பாடல் இது.அதாவது எங்கள் காலத்தில் திருமணமான
புதிதில் வந்த படத்தின் பாடல்.
மிக மிக இனிமையாய்ப் பாடியிருக்கிறீர்கள்.

சி. கருணாகரசு said...

மிக மிக மிக அருமை!
வாழ்த்துக்கள்.

ஆடுமாடு said...

சூப்பர் பத்மா மேடம்.

கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு!

வாழ்த்துகள்.

OOS said...

paadal migaum nandraga irrunthatu
by next counter clerk

அப்பாவி தங்கமணி said...

சான்சே இல்ல பத்மா... அப்படியே மெய் மறக்க வெச்சுடீங்க...எனக்கும் பாடி அனுப்பலாம்னு தான் ஆசையா இருக்கு (ரெம்ப மோசமா இருந்த பெனால்டி எல்லாம் கேக்க மாட்டீங்களே?)

பா.ராஜாராம் said...

பத்மா,

"the talented"

கவிதை,அப்புறம் பின்னூட்டம். (எங்கு பார்த்தாலும் நிற்க வைக்கிறது.)

இப்போ, குரலும்.

கொடுப்பினை மகள்ஸ்!

பா.ராஜாராம் said...

விஜய்,

அவசியம் செய்ங்க. உங்களை பார்த்தும் வியக்கிறேன் பங்கு. உங்க profile!

போக, செஸ். போக, கிடார்.போக குரல்..

இன்னும் என்ன மக்கா?

பாட்டு அனுப்பிய பிறகு மறக்காமல் தளத்தில் ஒரு குரல் விடவும். great!

எங்கள் said...

அப்பாவி தங்கமணி, பாடலை அனுப்புங்கள். காத்திருக்கிறோம்.

Sabarinathan Arthanari said...

நல்லா இருக்குங்க

தொடருங்க

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

நல்லா இருந்தது! என் பெண்ணும் பாடுவாள்.கூடிய விரைவில் அவள் பாடலுடன்....

thenammailakshmanan said...

அருமை எங்கள் ப்லாக் நல்லா இருக்கு ..அற்புதம் பத்மா

நேசமித்ரன் said...

கவிழ்த்த மணற் கடிகாரத்தில் மணல் விழும் துல்லியம்

அபாரம்

வாழ்த்துகள் பத்மா!

padma said...

மறுபடியும் இங்க வந்து அனைவருக்கும் நன்றி சொல்கிறேன் . முதல் நன்றி எங்கள் ப்ளாக் நண்பர்களுக்கு தான் .வந்து கேட்டு பாராட்டிய அனைவருக்கும் மனம் கனிந்த நன்றி .ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கு

Cable Sankar said...

நிஜம்மாவே ரொம்ப நல்லாருக்கு வாய்ஸ்

padma said...

நன்றி சங்கர் சார்

sakthi said...

அருமை
அருமை
அப்பா என்ன ஒரு இனிய குரல்
ரசித்தேன் மா

எங்கள் said...

நன்றி சக்தி!

Srimangai(K.Sudhakar) said...

அபாரம்! உங்கள் எழுத்தை மரத்தடியில் கண்டிருக்கிறேன். என்னமா பாடறீங்க?!
கைவண்ணம் அங்கு கண்டேன். குரல்வண்ணம் இங்கு கண்டேன்!

Srimangai(K.Sudhakar) said...

அருமை!.நல்ல rich ஆன குரல்-ங்க. நீங்க மரத்தடி குழுமத்தில இருந்தீங்கதானே? அங்கே உங்கள் எழுத்துக்களைப் படித்ததாக நினைவு.

Shyam s said...

I love this voice. ஒரு நாள் யாரோ என்ற வரிகளிலேயே இவர் யார் என யோசிக்க வைத்து விட்டீர்கள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!