\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
=========================================================================================================
*எழுதியது இப்படித்தான்!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
......................
உண்மையிலேயே எப்படித்தான் இத்தனை நன்றாகவும் இவ்வளவு அதிகமாகவும் எழுதிக் குவித்தார்களோ என்று காலஞ்சென்ற பிரபல எழுத்தாளர்கள் பலரைப் பற்றி வாசகர்கள் எண்ணியெண்ணி வியக்கிறார்கள்.
அந்தக் கடின உழைப்பு ஒருநாளில் வந்ததல்ல. பல்லாண்டுகள் நாள்தோறும் தொடர்ந்து எழுதியதால்தான் அத்தனை படைப்புகளை அவர்களால் படைத்து வாசகர்களை பிரமிக்க வைக்க முடிந்தது.
இன்று கணிப்பொறி வசதி இருக்கிறது. எழுதித் தள்ளலாம். எழுதியவற்றை முன்பின்னாக மாற்றி வரிசைப்படுத்தலாம். பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். எளிதாய்ப் பிரதி எடுக்கலாம்.
முன்னர் கையெழுத்தில் எழுதிய எழுத்தாளர்களுக்கு இந்த வசதி எல்லாம் கிடையாது. ஆனாலும் இன்று எழுதுபவர்கள் வியக்கிற அளவு, அன்று எழுதியவர்கள் எழுதிக் குவித்தார்கள். தரமாக எழுதியதோடு அதிகமாகவும் எழுதினார்கள்.
தீபம் நா. பார்த்தசாரதி தம் ஐம்பத்து நான்கு வயது ஆயுளுக்குள் எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட பெரிய பெரிய படைப்புகளை எழுதித் தற்காலத் தமிழிலக்கியத்தை அணி செய்தார்.
அவர் எதையும் ஒரு தடவைக்குமேல் மாற்றி எழுதியது கிடையாது. காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து விடுவார்.
பல் துலக்கிக் காப்பி குடித்துவிட்டு, கணக்குப் பிள்ளை மேசைமுன் அமர்ந்து அந்த மேசையில் காகிதத்தை வைத்துக் கொண்டு பேனாவால் எழுதத் தொடங்கினால் சுமார் மூன்று மூன்றரை மணிநேரம் அவரது அன்றைய எழுத்துப் பணி நடக்கும்.
ஒரு சிறுகதையோ, தொடர்கதையின் ஓர் அத்தியாயமோ முழுவதுமாக எழுதி முடித்துவிட்டுத்தான் இடத்தை விட்டு எழுவார். நாள்தோறும் எழுதியவர் அவர்.
பிறகு தன் நாய் சீசருடன் நடைப் பயிற்சிக்குச் செல்வார். (குமுதம் நிருபர் பால்யூ, நா.பா.வின் நாயைப் பற்றிக் குமுதத்தில் துணுக்கு வெளியிட்டார்.)
நடைப்பயிற்சி முடிந்து திரும்பிவந்த பிறகு, தான் அன்று எழுதியதை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்ப்பார்.
ஏதாவது சிறிய திருத்தங்கள் இருக்குமானால் அந்த இடத்தில் மட்டும் அம்புக் குறி போட்டோ பிளேடால் சுரண்டி எழுத்துகளை எடுத்துவிட்டோ திருத்தத்தைச் சேர்த்து விடுவார். பெரும்பாலும் திருத்தங்களே இருக்காது.
தன் எழுத்தை அவர் கையாள்கிற முறை, ஏதோ வானத்திலிருந்து வந்த பவித்திரமான பிரசாதத்தை பக்தியோடு கையாள்வது மாதிரி இருக்கும். அவர் எழுத்தின்மேல் அவருக்கு அத்தனை மதிப்பு, நம்பிக்கை. எடிட்டிங் என்ற பெயரில் தன் எழுத்தில் யாரும் கைவைப்பதை அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகத்திற்குத் தொடர்புகொண்டு, `படைப்பு தயாராக இருக்கிறது, பணியாள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்` என்று தொலைபேசியில் தகவல் சொன்னார் என்றால், அன்றைய எழுத்துப் பணி அதோடு நிறைவு பெற்றுவிட்டது என்று பொருள். இப்படி ஒவ்வொரு நாளும் எழுதியவர் அவர்.
ஆனால் எழுத்தாளர் சுஜாதாவின் போக்கு வித்தியாசமானது. நான் நா.பா., சுஜாதா இருவரிடமும் பணியாற்றியிருக்கிறேன். சுஜாதா தன் எழுத்தை எடிட் செய்ய வேண்டிய தேவையிருந்தால் எந்தச் சிணுக்கத்தையும் வெளிப்படுத்த மாட்டார்.
`நீங்க தான் எடிட்டர், நீங்கதான் எடிட் பண்ணணும். எழுதினவனே எடிட் பண்றது சிரமம். நீங்க என்னை விட நல்லா எடிட் பண்ணுவீங்க!` என்று தன் எழுத்தை எடிட் செய்ய முழு உரிமை கொடுப்பார் அவர்.
நா.பா.வின் கையெழுத்து முத்துமுத்தாய் அச்சுக் கோத்தது போல் இருக்கும். தமது பொன்விலங்கு நாவலில் கதாநாயகியான மோகினியின் கையெழுத்தைப் பற்றி, `தேர்ந்து பழகின கை பூத்தொடுத்தது மாதிரியான கையெழுத்து` என்று நா.பா. வர்ணிப்பாரே? அந்த வர்ணனை அப்படியே அவர் கையெழுத்துக்கும் பொருந்தும்.
தம்மைச் சார்ந்தவர்களின் கையெழுத்தும் திருத்தமாக இருக்க வேண்டும் என்று நா.பா. எதிர்பார்ப்பார். தீபம் சார்பாக அதில் பணிபுரிபவர் எந்த எழுத்தாளருக்குக் கடிதம் எழுதினாலும், அந்தக் கையெழுத்தே தீபத்தின்மேல் ஒரு மரியாதையைத் தோற்றுவிக்க வேண்டும் என நா.பா. எண்ணுவதுண்டு.
தீபம் அலுவலகத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்த ஒரு துணையாசிரியரின் கையெழுத்து மிகவும் சுமார். அவர் ச என்ற எழுத்தை எழுதினால் அதைச் சரியாக எழுதாமல் சற்றே வளைத்து விடுவார். அது `க`வைப் போல் தோற்றமளிக்கும்.
சகரத்திற்கும் ககரத்திற்கும் வித்தியாசம் காண முடியாத கையெழுத்து அவருடையது.
சொல்லிச் சொல்லிப் பார்த்தார் நா.பா. அவர் தம் கையெழுத்தைத் திருத்திக் கொள்வதாக இல்லை. ஒருநாள் நா.பா.வுக்குக் கடும் கோபம். `என்னய்யா இவ்வளவு சொல்கிறேன்? தொடர்ந்து இப்படியே எழுதுகிறீர்களே? உங்களுக்குச் `சா - வே வராதா?` என்றார்!
பிறகுதான் அவர் சொன்ன வாக்கியத்தின் விபரீத அர்த்தம் அவருக்குப் புரிய அவர் திகைத்தார். அவரால் கண்டிக்கப் பட்டவர் உள்பட அனைவரும் சிரித்து மகிழ்ந்தோம்.
நா.பா. கையெழுத்தைப் போலவே அழகான கையெழுத்து வல்லிக்கண்ணன், தி.க.சி. இருவருக்கும் உண்டு. அவர்கள் தங்கள் அழகிய கையெழுத்தால் நாள்தோறும் குறைந்தது பத்து கடிதமாவது எழுதிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களின் பாராட்டுக் கடிதங்களைப் பெற்ற இளம் எழுத்தாளர்கள் அடைந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் கொஞ்ச நஞ்சமல்ல.
நா.பா. கையெழுத்துக்கு நேர் எதிரானது பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான துமிலன் கையெழுத்து. தினமணிகதிரின் முன்னாள் ஆசிரியர் அவர்.
ஒருமுறை அவர் எழுதிய கட்டுரையில் ஒரு வார்த்தை புரியாததால் அது என்ன என்று அவரிடமே கேட்டேன்.
`நான் எழுதிய பிறகு அது என்ன என்று எனக்கே புரியவில்லை, உங்களுக்கு என் கையெழுத்து பரிச்சயம் என்பதால் உங்களிடம் அந்த வார்த்தை என்ன என்று கேட்டுக்கொள்ளலாம் என்றல்லவா நினைத்தேன்?` என்றார் அவர்!
ஜெயகாந்தன் ஒரு படைப்பை முழுமையாக முதல் முறையிலேயே எழுதிவிட மாட்டார். பத்திரிகைக்குப் படைப்பை அனுப்பி , அதன் அச்சுக் கோக்கப்பட்ட முதல் பிரதியைக் கேட்டு வாங்குவார்.
பிறகு, படைப்பின் இரு பக்கங்களிலும் ஆங்காங்கே வார்த்தைகளை எழுதி எழுதிச் சேர்ப்பார். அவர் படைப்பின் இறுதி வடிவம் வருவதற்குள் இதுபோல் பலமுறை அவர் வார்த்தைகளைச் சேர்த்துக் கொடுப்பார்.
அவரின் முதல் பிரதி ஐந்து பக்கங்கள் இருந்தால், நிறைவுப் பிரதி சுமார் எட்டுப் பக்கங்களாக வளர்ந்து மாறியிருக்கும். அவர் படைப்பு புதிய பிரகாசத்தோடு ஒளிவீசும்.
ஒருவர் தாம் எழுதியதை எப்படியெல்லாம் மெருகேற்றி உயர்த்த முடியும் என்பதை ஜெயகாந்தனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
ஜெயகாந்தன் தம் சிறுகதைகளின் நிறைவுப் பகுதியை ஒரு வேகத்தில் முதலிலேயே எழுதிவிட்டு, பிறகு சிறுகதையின் தொடக்கப் பகுதிகளை எழுதுவதுண்டு என்று சொல்லியிருக்கிறார்.
என் இனிய நண்பரும் கொல்லிப்பாவை என்ற சிற்றிதழின் ஆசிரியரும் தினமணி முன்னாள் துணையாசிரியருமான கவிஞர் ராஜமார்த்தாண்டன் ஒருமுறை ஜெயகாந்தனைப் பேட்டி கண்டார்.
அந்தப் பேட்டியில் `சிறுகதை என்பது உரைநடையால் ஆக்கப்படும் கவிதை` என்று சொன்னார் ஜெயகாந்தன். அந்தக் கூற்று அவர் சிறுகதைகளுக்கு முற்றிலும் பொருந்தும். அவர் சிறுகதைகள் ஒவ்வொன்றுமே உரைநடைக் கவிதைகள் தான்.
லா.ச.ராமாமிருதம் தன் படைப்புகளையெல்லாம் ஒருமுறை அல்ல, பலமுறை, சிலநேரம் பத்துப் பதினோரு முறைகூட மாற்றியும் திருத்தியும் எழுதுவதுண்டு என்று சொல்லியிருக்கிறார். அவர் ஒரே முறையில் எழுதிய படைப்பு என்று எதுவுமில்லை.
பூரணத்துவத்தை நேசிப்பவர் அவர். அதனால்தானோ என்னவோ அவர் படைப்புகள் மின்னல் கீற்றாக ஆங்காங்கே பளிச் பளிச் என ஒளிவீசும் தத்துவ தரிசனங்களோடு படிப்பவர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும்.
தி. ஜானகிராமன் எழுதுவது ஒரே ஒருமுறைதான். அதுவே முழுமையான நிறைவுப் பிரதிபோல இருக்கும். தினமணிகதிரில் அவர் எழுதிய `செம்பருத்தி` தொடர்கதை, `அபூர்வ மனிதர்கள்` கட்டுரைத் தொடர் எல்லாமே கதிர் அலுவலகத்தில் வந்து அமர்ந்து அங்கேயே எழுதிக் கொடுத்ததுதான்.
எழுதியபிறகு எடிட் செய்ய வேண்டாமா என்று கேட்பேன் நான். தன் தலையைத் தொட்டுக் காட்டி, சிந்திக்கிற போதே எடிட் செய்து கொண்டுவிட்டேன் எனச் சொல்லிப் புன்முறுவல் பூப்பார் அவர்.
மேலே மின்விசிறியின் ஒலி, சுற்றிலும் பணியாளர்கள் பேசுகிற ஒலி, பலரின் நடமாட்டம், மிஷின் சப்தம் எதுவும் அவரை பாதிக்காது. அத்தனைக்கும் நடுவில் உட்கார்ந்துதான் தன் அபூர்வ இலக்கியத்தைப் படைத்தார் அவர்.
சுற்றிலும் உள்ள சப்தங்கள் உங்களை பாதிக்காதா என்றால், நாம் மன ஒருமைப்பாட்டோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் எந்த சப்தமும் நம் காதிலேயே விழாது என்பார் நகைத்துக் கொண்டே.
பொதுவாக தொடர்கதை எழுத்தாளர்கள் அந்தந்த வார அத்தியாயத்தை அந்தந்த வாரம்தான் எழுதி அனுப்புவார்கள். ஆனால் ராஜம் கிருஷ்ணன், ர.சு. நல்லபெருமாள் இருவரும் இந்தப் போக்கிற்கு விதிவிலக்கு.
அவர்களிடம் தொடர்கதை கேட்டால் கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொண்டு முழுக் கதையையும் முழுமையாக எழுதி அனுப்பி விடுவார்கள்.
பத்திரிகைகளுக்கு அது மிகவும் வசதி. முன்கூட்டியே அத்தியாயங்களை கோபுலு, மாருதி, மணியம்செல்வன் போன்ற ஓவியர்களுக்கு அனுப்பி ஓவியம் வாங்கி வைத்துக் கொள்ள முடியும். பத்திரிகையாளர்களின் கடைசி நேரப் பரபரப்பு கொஞ்சம் குறையும்.
ராஜம் கிருஷ்ணன் தனது `மண்ணகத்துப் பூந்துளிகள், பாதையில் பதிந்த அடிகள்` போன்ற தொடர்களை நான் தினமணிகதிரில் பணிபுரிந்தபோதுதான் எழுதினார். தினமணியில் என்னுடன் பணிபுரிந்த நண்பர் சிகாமணி, ராஜம் கிருஷ்ணனின் கள ஆய்வுகளுக்கு உடன் சென்று உதவியிருக்கிறார்.
ர.சு. நல்லபெருமாளின் `தூங்கும் எரிமலைகள்` என்ற முற்பட்ட சமூகத்தினரின் பிரச்னைகளைப் பேசும் சமூகத் தொடர்கதை, `மருக்கொழுந்து மங்கை` என்ற சரித்திரத் தொடர்கதை இரண்டுமே நான் தினமணிகதிரில் பணிபுரிந்த காலத்தில் தொடராக வந்து பெரும்புகழ் பெற்றன.
பி.வி.ஆர். வாராவாரம் தொடர் அத்தியாயத்தை எழுதி அனுப்புகிறவர். முழு வெள்ளைத் தாளில் எழுதாமல் அதன் பாதிக் காகிதத்தில் எழுதி, அந்தப் பாதித் தாள்களைப் பக்க எண் போட்டு குண்டூசியால் இணைத்து அனுப்புவார்.
ஏன் பாதிக் காகிதத்தில் எழுதுகிறீர்கள் என அவரைக் கேட்டேன்.
`நான் காலையில் எழுந்ததும் அத்தியாயத்தை எழுதி விட்டு நடைப் பயிற்சிக்குப் போவேன். பின் திரும்பி வந்து நான் எழுதியதைப் படித்துப் பார்த்துத் திருத்துவேன். அதிகத் திருத்தங்கள் இருக்கும் பக்கத்தை மட்டும் பிரதியெடுத்து முன்னுள்ளதை நீக்கிவிட்டு புதுப் பிரதியை இணைப்பேன்.
முழுக் காகிதத்தில் எழுதினால் முழுக் காகிதத்தையும் அல்லவா பிரதியெடுக்க வேண்டும்? என் மறு உழைப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவே இந்த ஏற்பாடு!` என்றார் அவர்!
மிகச் சில எழுத்தாளர்கள் சொல்லி எழுதியவர்கள். நூற்றுப் பதினேழு நாவல்களை எழுதிய வை.மு. கோதைநாயகி தன் தொடக்க கால நாவல்களைப் பட்டம்மாள் என்ற தன் தோழியிடம் சொல்லி அவர் மூலம்தான் எழுதச் செய்தார்.
காரணம் அப்போது வை.மு. கோதைநாயகிக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது! பேச மட்டும்தான் தெரியும். தன் எழுத்து பிரபலமாகவே பின்னர் தன் கணவர் உதவியுடன் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார் அவர்.
சொல்லி எழுதியவர்களில் மிக முக்கியமான எழுத்தாளர் கவியரசு கண்ணதாசன். இலக்கணக் கட்டோடு கூடிய மரபுக் கவிதைகளைக் கூட அவர் கடகடவெனச் சொல்லி எழுதச் செய்தார் என்றால் அவரின் ஆற்றல் வியக்க வைக்கிறது.
தினமணிகதிரில் சாவி ஆசிரியராக இருந்தபோது அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புகழ்பெற்ற தொடர், தன் உதவியாளரிடம் அவர் சொல்லி எழுதியதுதான்.
இப்போது சொல்லி எழுதும் செயலி வந்துவிட்டது. அதைக் கணிப்பொறியில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் நாம் சொல்லச் சொல்ல, நாம் சொல்வதை அது எழுதிக் கொடுத்துவிடுகிறது.
சொல்லி எழுதும் எழுத்துப் பரம்பரைக்கு வியாசர்தான் முன்னோடி. அவர் சொல்லிச் சொல்லி விநாயகர் எழுதியதுதானே மகாபாரதம்?
எழுத்தாளர்கள் பத்திரிகையின் பக்க நெருக்கடிகளைப் புரிந்து கொள்ளாமல் சிரமம் தருவதும் உண்டு. முப்பது பக்கங்களுக்கும் குறைவாக மாதந்தோறும் வெளிவரும் ஒரு சிற்றிதழுக்கு ஓர் எழுத்தாளர் குறுநாவல் ஒன்றை அனுப்பி விட்டார்.
அந்தச் சிற்றிதழில் பக்கங்கள் மிகவும் குறைவு என்பதால் குறுநாவலை வெளியிட வாய்ப்பே இல்லை.
அதன் ஆசிரியர், பக்க அளவு மிக அதிகமாக உள்ளதால் குறுநாவலை வெளியிட இயலவில்லை என்ற குறிப்போடு எழுத்தாளருக்கு அந்தப் படைப்பைத் திரும்ப அனுப்பினார்.
இதுவல்ல செய்தி. இதன் பிறகு வருவதுதான் செய்தி. அந்த எழுத்தாளரிடமிருந்து உடனே ஒரு கடிதம் வந்தது. அதில் அவர் எழுதியிருந்தது இதுதான்:
`என் குறுநாவலை வெளியிட இயலவில்லை என்று திரும்ப அனுப்பி விட்டீர்கள். நன்றி. உடனே என் சந்தாத் தொகையையும் திரும்ப அனுப்ப வேண்டுகிறேன்!`
எழுத்தாளர் சிட்டி பி.ஜி. சுந்தரராஜன் குறும்புப் பேச்சுக்குப் புகழ்பெற்றவர். அவர் வணிக ரீதியாக வெற்றி பெற்ற ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியரைச் சந்தித்தார்.
அந்தப் பத்திரிகை ஆசிரியர் `எங்களுக்கென்று ஒரு பாணி இருக்கிறது. அந்தப் பாணியில் அமைந்த சிறுகதைகளைத் தான் நாங்கள் வெளியிடுவோம்!` என்று பெருமிதத்துடன் தெரிவித்துக் கொண்டார்.
அதற்கு சிட்டி சொன்ன பதில் இலக்கிய உலகில் புகழ்பெற்றது. சிட்டி என்ன சொன்னார் தெரியுமா?
`நல்லது. உங்கள் பாணிக் கதைகளையே தொடர்ந்து வெளியிடுங்கள். ஆனால் அவ்வப்போது நல்ல கதைகளையும் வெளியிடுங்களேன்!`
எழுத்து மட்டுமல்ல, எழுத்துலகமும் சுவாரஸ்யமானது தான்!
(நன்றி: ஓம் சக்தி தீபாவளி மலர் 2024)
===============================================================================================================
பொக்கிஷம் :
ஆங்காங்கே முகநூலில், இணையத்தில் பார்த்த சிலபல மதன் ஜோக்ஸை இந்த வாரம் வெளியிடுகிறேன். ரிப்பீட்ஸ் இருக்கலாம். ஆனாலும் ரசிக்கலாம்!
திருப்பூர் கிருஷ்ணன் கட்டுரையில் பகுதி வரை படித்திருக்கிறேன். மீதி பிறகு படிக்கிறேன். நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குஇந்த வியாழனின் மிகுந்த சுவாரஸ்யமான பகுதி அது.
நீக்குகாலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்... வணக்கம்.
நீக்குரும் ரும் ரும்...
பதிலளிநீக்குபுறாக்களின் மூச்சு விடும் ஒலியோ என்னவோ..
இருக்குமோ...
நீக்குபுறாக்களால் நமக்கு வீஸிங் வரும் என்பது போக அதற்கே நிரந்தர வீஸிங் பிரச்சனையோ...!!
மூட நம்பிக்கை என்றதும் எனக்கு வலது பக்கத்தில் கால் தடுக்கினாலோ கண் துடித்தாலோ நல்ல சகுனம் என்று தோன்றும். கல்லூரியில் பரீட்சு அன்று, கடைசியாக ஹாலுக்கு நுழைவதற்கு முன்பு புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருக்கும்போது, மச்சி நல்லா படிச்சிருக்கயா என இடது தோளில் தட்டி என்னிடம் வசவு வாங்கிய நண்பர்கள் உண்டு.
பதிலளிநீக்குஇப்போதும் கோகுமிடம் பற்றி வீட்டில் உள்ளவர்கள் கேட்டால் சொல்வதில்லை. அதுபோல் அனேகமாக எல்லா முறையும் நினைத்த உணவுக் காம்பினேஷன்கள், கிச்சன் வேலை ஆரம்பித்தபிறகு முழுமையாக மாறிவிடும். கிச்சனுக்குள் நுழையும்போதுதான் என்ன பண்ண வேண்டும் என எனக்கு கடவுள் குறிப்பு தருவார் என வீட்டில் சொல்லிவிடுவேன்.
வெளியில் கிளம்பும்போது எங்கே போறீங்க என்று கேட்டால் என் அப்பாவுக்கு வெகு கோபம் வரும். அவரிடம்தான் அந்த பழக்கத்தைப் பார்த்தேன். எனக்கு அதில் பெரிய பயம், அவர்ஷன் கிடையாது.
நீக்குஅதேபோல பல வருடங்கள் முன்பு நான் அஷ்டமி அன்றுதான் ரேஷன் கார்ட் புதுப்பித்தேன். கூட்டமில்லாமல் இருந்தது!
உங்கள் இடது தோள் நம்பிக்கை ஆச்சர்யம்.
இடது தோள் என்றல்ல... இடப் பகுதியில் தடுக்கினாலே கெட்ட சகுனம் என்ற நம்பிக்கை. இது எந்த அளவுக்கு ஆகிவிட்டது என்றால், கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவுடன் இடது கண் துடித்தாலோ இல்லை இடது பக்க சகுனங்கள் தோன்றினாலோ நிச்சயம் இந்தியாதோற்றுவிடும், அதோடு தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிடுவேன். இந்தியா வெல்லுமா தோற்குமா என்பது பல நேரங்களில் சகுனங்கள் மூலம் (அனுமானங்களினால் அல்ல) தெரியும்.
நீக்குஉங்கள் மனதில், ரோகித் சர்மா கேப்டனாகவோ இல்லை பிளேயராகவோ இருக்கும் வரை, மேட்ச் பார்க்காமலேயே இந்தியா தோற்றுவிடும் என நினைப்பது புரிகிறது. விராட், ரோஹித் போன்றோரை கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் கிளம்பமாட்டார்கள் போலிருக்கு.
K. L.ராகுலை விட்டு விட்டீர்கள்.
நீக்குரிபீட்ஸ் இருந்தாலும் இந்த வார ஜோக்ஸ் மிகவும் ரசிக்கும்படி இருந்தது
பதிலளிநீக்குஆம். அனைவரும் ரசிப்பீர்கள் என்று தெரியும்.
நீக்குபெங்களூருவில் அரசுத்துறை தேர்வுகளின் வினாத்தாள் எந்த மொழியில் இருக்கும்?
பதிலளிநீக்குஆங்கிலத்தில்? அல்லது கன்னடத்தில்.
நீக்குமொழிபெயர்ப்பு செயலிகள் மூலம் மொழிபெயர்த்ததினால் என்று குறிப்பிட்டிருப்பதால் இந்த சந்தேகம்..
நீக்குஓ.... அதுவா... கூகுளில் மொழி பெயர்த்தால், முழிபெயரும்! ஜுனூன் தமிழ் போல இருக்கும்!
நீக்கு'முற்பட்ட சமூகத்தினரின் பிரச்னையைப் பேசும் சமூகத் தொடர்கதை' -- அட! அப்படிப்பட்ட முற்பட்ட சமூகம் எதுவாக இருக்கும்?
பதிலளிநீக்குதேவர், வன்னியர்...அப்புறம் பிராமண சமுதாயம்...
நீக்கு
அபாய நம்பிக்கையோ, மூட நம்பிக்கையோ ஒரு சில நம்பிக்கைகளுக்கு காரணம் கிடைப்பதில்லை. சகுனம் போன்ற நம்பிக்கைகள் மெத்தப் படித்தவர்களிடமும் உண்டு. இதை ஜோதிடமும் அங்கீகரிக்கிறது.
பதிலளிநீக்குமுதல் முறையாக ஒரு புதிய ராக்கெட் விண்ணில் செலுத்த முற்படும்போது நாட்டின் பிரதமர் அல்லது குடியரசு தலைவர் போன்ற தலைவர்கள் அதைக் காண விருப்பம் கொள்வர். அச்சமயம் அவர்கள் கண்ட்ரோல் ரூமில் இருந்தால் அந்த ராக்கெட் தோல்வியில் முடியும், இது இந்திரா காலத்தில் இருந்து, வாஜபாயீ, மோடி என்று தொடர்கிறது. இதுவும் தற்செயலா அல்லது கடவுள் செயலா என்பது புரியவில்லை. சிவன் மோடியின் மார்பில் அழுததை கண்டிருப்பீர்கள்.
எனக்கும் சில மூட நம்பிக்கைகள் உண்டு. செவ்வாய் அன்று முக்கிய காரியங்களை செய்ய முற்படமாட்டேன்.
பாரதியார் கையெழுத்து படிக்கக்கூடிய நிலையில் உண்டு என்றாலும் பின்னர் தான் பொறுமையாக பெரிது படுத்தி படிக்க வேண்டும்.
புறாக்கள் கவிதைக்கு உள்ள படம் முதலில் ஒன்றுமே புரியவில்லை. பெரிது படுத்தி பார்த்தபின்பு தான் புரிந்தது. புறாக்கள் மற்ற புறாக்களை காகங்களைப் போல் அழைப்பதில்லையே தவிர அவைகளும் கூட்டமாக தீனி தின்பதை தடுக்க முயல்வதில்லை. எங்களுடைய வீட்டிற்கு 2 புறாக்கள் வரும் அவை பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை கண்டிருக்கிறேன்.
//- டோக்கியோ: துணி துவைக்கும் இயந்திரம் போல, 15 நமிடங்களில் மனிதர்களை சுத்தப்படுத்தக்கூடிய வாஷிங் மெஷின் உருவாக்கி அசத்தி உள்ளது ஜப்பான் நிறுவனம். [9-12-24]//
இந்தியாவில் அது 2014 லேயே வந்து விட்டது. விற்பனை தான் செய்யவில்லை. (நையாண்டி தான்).
செய்திகள் நிறைய. கொஞ்சம் செய்திகளை எடிட் செய்திருக்கலாம். உதாரணமாக சிறுவர்கள் விடுதியில் இருந்து ஓடிப்போவது போன்றவை.
ஜெயபாரதி என்று ஒரு இயக்குன ர் இருந்தார் என்பதே புதிய செய்தி.
நந்தன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தது வியப்புதான்.
நானும் கேரளத்திற்கு முதல் முறையாக வந்ததால் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தில் உறுப்பினர் ஆனவன் தான். வருடங்கள் உருண்டோடியபோது தான் உண்மையான கம்யூனிஸ்ட என்று யாரும் கிடையாது என்பது புரிந்தது. அங்கேயும் autocracy
அர்ச்சகர் பற்றிய செய்தியில் உள்ள படம் மதுரைக்கோவில் போன்றல்லவா தோன்றுகிறது. அரியலூர் தானா? இப்படி அலங்காரமாக இருக்கிறது?
எழுத்தாளர்கள் எப்படி எழுதினார்கள் என்ற திருப்பூர் கிருஷ்ணன் கட்டுரை தரும் விவரங்கள் புதிது. பிச்சமூர்த்தி முதல் எஸ் ரா வரை என்று எழுதியவர் ( ???) இது போன்ற சிறு விவரங்களையும் சேர்த்து மறு பதிப்பு வெளியிடுவார் என்று நினைக்கிறேன்.
ஜோக்குகள் இன்றைய பதிவிற்கு மெருகூட்டுகின்றன ரிப்பீட் இருந்தாலும்.
Jayakumar
அதிலிருக்கும் ஜெயகாந்தன் பற்றிய செய்திகளை படித்து நேற்றைய பதிவோடு சரி பார்த்தால் சரி..
நீக்குநான் சொன்ன பழக்கம் என் மனம் செய்து கொண்ட ஏற்பாடு... அது ஏன் அப்படி நினைக்கத்தோன்றியது என்பது கேள்விக்குறி!
நீக்குஆம். இந்த நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கும் இருபிப்பது விந்தை. இதை நேரடியாகக் காண வரும் பிரதமரை வேண்டாம் என்றும் சொல்ல முடியாத தர்மசங்கடம்!
செவ்வாய் முருகனுக்கு உகந்த நாள் என்று நினைத்து நாங்கள் ஒதுக்குவதில்லை ஆயினும் நிறையபேர் செவ்வாய் அன்று எதிலும் ஈடுபடுவதில்லைதான்.
உண்மைதான் புறாக்களும் பாகிர்ந்து உண்கின்றன. எங்கள் வீட்டில் எப்போதும் ஒவ்வொன்றாய் வந்து சாப்பிட்டு விட்டு போகும்! அதைவைத்து எழுதினேன்! காக்கைக்கு போடும் சோற்றை இது களவாடுவதால் சற்று கோபம் வரும்!!
நான் முதலிலிருந்தே செய்திகள் சேகரிப்பதால் சில செய்திகள் எந்த நாளில் நடந்தது, அல்லது இது பழசாச்சே என்று தோன்றும் என்பதால் இந்த முறை தேதியும் இட்டேன்!
எடிட் செய்தால் செய்தி என்ன சொல்ல வருகிறது என்று புரியாத என்பதால் முக்கிய இடத்தை மட்டும் வெளியிட்டேன். பாசிட்டிவ் செய்தி அல்லாத இந்த வகை செய்திகளும் கதை படிப்பது போல ஒரு சுவாரஸ்யம். "கோவென்று அஃதறி அழுதார் என்று தினத்தந்தி படிப்பிப்பதை ரசிப்போம் அல்லவா.. அதுபோல...
ஜெயபாரதி புகழ்பெற்ற இயக்குனர்தான். நந்தன் செய்தி சற்று பழசு. முன்னரே எடுத்து வைத்து, தொலைந்துபோய் மறுபடி கண்டு எடுத்தேன்!
// கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தில் உறுப்பினர் ஆனவன் தான் //
நீங்களுமா... ஜீவி ஸாரும்!
மதுரையா, அறியலூரா... படித்தது கவர்ந்ததால், பகிர்ந்து விட்டேன். சமயங்களில் உண்மையான ரிசல்ட் இங்கு கிடைத்து விடும் அல்லவா?!!
திருப்பூர் இதை புத்தகமாக வெளியிடுவார் என்று தோன்றவில்லை. ஆனால் அந்தக் கட்டுரை வெகு சுவாரசியம்.
ஜோக்ஸை அரசிப்பீர்கள் என்று நம்பியது வீண்போகவில்லை.
நன்றி JKC ஸார்.
ஹையோ ஹையோ "பிச்சமூர்த்தி முதல் எஸ்ரா வரை" ஜீவி சார் எழுதியது!
நீக்குகெசட் ரேங்க் கிடைத்தவுடன் தொழிற்சங்க உறுப்பினர் பதவியை கைவிட்டேன்.
Jayakumar
ஹிஹிஹிஹிஹி...
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம். தஞ்சையில் மழை நிலவரம் என்ன?
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குநேற்று எனக்கு ஏற்பட்டிருந்த உடல் நலக் குறைவை எபியில் சொன்னதும் ஆறுதலும் தேறுதலும் அளித்த நல்ல உள்ளங்களை இருகரம் கூப்பி வணங்கிக் கொள்கின்றேன்..
பதிலளிநீக்குஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்கும் ஸ்ரீராம் ஜி அவர்களுக்கும் கௌதம் ஜி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
இப்பொழுது உடல் உபாதை குறைந்திருக்கின்றது..
ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தே இருக்கின்றது..
ஆனாலும் என்ன பிரச்னை?..
அம்பாள் அவளே அறிவாள்!..
வணக்கம் சகோதரரே
நீக்குதங்கள் உடல்நலம் இப்போது நன்றாக இருப்பதாக சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இனி கவலை வேண்டாம். இறைவன் துணையாக இருப்பார்.
சிலசமயம் ஏதோ குறைபாட்டினால், நம் உடல் சில உபாதைகளை சந்திக்க நேரும் போது சிறிது கவலையுடன் ஒரு விதமான பயமும் வருவது உண்மைதான்..! நானும் இப்போது அடிக்கடி இந்த பயத்தில் கவலையில் தத்தளிக்கிறேன் . அப்போது இறைவன்தான் நமக்குத் துணை. அவன் பாதங்களை பூரணமாக சரணடைந்து நம்முள் ஏற்பட்ட மாறுதல்களை கூறினால், அவன் அதை சரியாக்கி நம் தளர்ச்சியை அகற்றுகிறான். அது போல் நம் உறவுகளுக்கும், நட்புக்களுக்கும் ஏற்படும் இன்னல்களையும் அவ்விதமே அவன் போக்குகிறான். இது என் அனுபவத்தில் நடக்கிறது.
நான் என்றுமே அவனை மறவாதிருக்க வேண்டுமெனத்தான் தினமும் வேண்டிக் கொள்கிறேன். 🙏. நன்றி சகோதரரே. நலமே நடக்கட்டும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உடல்நிலை முற்றிலும் சரியாக பிரார்த்திக்கிறேன் செல்வாண்ணா..
நீக்குசகோ துரை செல்வராஜூ அவர்கள் உடல் நிலை சரியாக பிரார்த்தனைகள்.
நீக்குமூலதனம் நூல் நல்ல நூல், நல்ல சிந்தனை, ஆனால் கவைக்குதவாது என்பது என் அபிப்ராயம். அதைப் படித்துவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர், நடந்தே கட்சி அலுவலகத்துக்குச் சென்றிருந்தால், படித்ததனால் பயன் ஏற்பட்டது என நினைக்கத் தோன்றியிருக்கும்.
பதிலளிநீக்குஏசி அறையில் சொகுசு மெத்தையில் படுத்துக்கொண்டு, ஏழைகளைப் பற்றிச் சிந்தித்து கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவருக்கும், பாடாவதி படம் என்று விமர்சனங்களெல்லாம் வெளிவந்து, இன்றே கடைசி, நாளையிலிருந்து ஓடிடியில் அல்லது இந்தியத் தொலைக்கீட்சியில் முதல் முறையாக வெளிவருகிறது எனத் தெரிந்துகொண்டும் தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பவருக்கும் என்ன வித்தியாசம்?
சில சமயங்களில், அல்லது அவ்வப்போது உங்களிடமிருந்து தேங்காய் உடைப்பது போல வரும் கருத்துகளைக் கண்டு வியப்பேன் நெல்லை.
நீக்குஇப்பவும்...
:))))
நீக்குஎழுத்தாளர்களைப் பற்றிய திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய பகுதி மிகவும் சுவாரசியமாக இருந்தது.
பதிலளிநீக்குஇருந்தாலும் எழுத்தாளர்களுக்கு நிறைய ஈகோ உண்டு எனத் தோன்றுகிறது. நாலு படங்களில் கதாநாயகனாக நடித்துவிட்டு நாட்டைக் காக்க கட்சி தொடங்கி முதல்வராக ஆகப் போகிறேன் என்பவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை. ஹா ஹா ஹா
எனக்கும் தோன்றும் நெல்லை... (ஜீவி ஸார் தூங்கப் போயிட்டார் இல்ல?!)
நீக்கு:)))). :))))
நீக்குகுடிசை ஜெயபாரதி போன்ற படைப்பாளிகளைக் கண்டு வியக்கிறேன். ஆனால் ஆளில்லாத கடையில் டீயை ஆற்றுவதில், பணம் போடும் தயாரிப்பாளர்களை போண்டி ஆக்குவதில் என்ன பயன்?
பதிலளிநீக்குஇதுவும் தேங்காய் உடைக்கும் கருத்துதான். ஆனால் நல்ல படங்கள் என்றால் என்ன என்றோ, தரம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றோ சொல்ல ஒரு தர நிர்ணயம் வேண்டும் அல்லவா?
நீக்கு
உண்மைதான் ஸ்ரீராம்.... ஒரு தர நிர்ணயம் வேண்டும். அது சொந்தக் காசில் இருந்திருந்தால் பெட்டராக இருந்திருக்குமோ? ஜெயபாரதியைக் குறை சொல்லவில்லை.
நீக்குஇதுபோல கேபி அவர்கள், கடைசிப் படமாக (படமில்லாமல் இருந்தபோது) பிரகாஷ்ராஜ் கொடுத்த வாய்ப்பில் (தயாரிப்பில்) ஒரு படம் டைரக்ட் பண்ணி, அவர் டச் என்று கிளைமாக்ஸை மிக மோசமாக வைத்து படத்தைக் காலி பண்ணியதையும் நினைத்துப்பார்க்கிறேன்.
:(((
நீக்குஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் இருந்ததது. அதைத் தாண்டி அவர்கள் கை வைத்ததெல்லாம் முடிந்தன!
நீக்குஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் இருந்ததது. அதைத் தாண்டி அவர்கள் கை வைத்ததெல்லாம் தோல்வியில் முடிந்தன!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகாலையில் எழுந்தும், இவ்வளவு நேரம் என் மொபைலில் சார்ஜ் ஏற்றியதில் வருவதற்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது.
இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதியில் நீங்கள் சொல்வது போல் சின்னவயதில் அப்படி ஒரு எண்ணங்கள் அனைவருக்கும் இருந்திருக்கின்றன.
/இப்படி எல்லாம் அபாயகரமான டீல் இயற்கையோடு அல்லது கடவுளோடு போடுவேன்/
நானும் போட்டிருக்கிறேன். இப்போதும் ஏதாவது நினைத்தது நடக்க வேண்டுமானால், "வானத்தில் உன் வாகனமான கருடனாக வந்தாவது நான் இருக்கிறேன் உனக்கு என்று தைரியம் கூறு." என்று பெருமாளை பிரார்த்தனை செய்கிறேன். அப்படி ஒரு சமயம் ஒரு செயலுக்காக யதேச்சையாக கருடன் என் கண் முன்னால் வட்டமிட்டுக் பறந்திருக்கிறது. ஆனால், அவ்விதம் நினைத்ததை "அவன்" முடிக்கவில்லை என்ற ஆதங்கம் வந்த போது, நம் விதிப்பயனை""அவன்"ஏற்கனவே நிர்ணயத்திருக்கும் போது, எப்படி மாற்ற முடியும் என்ற வேதாந்தம் வந்து மனம் சமாதானபட்டுப் போகும்.
உங்கள் கவிதை நன்றாக உள்ளது. புறாக்களின் பேச்சை நன்றாக கணித்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .
//அவன் முடிக்கவில்லை//- எனக்கு 2018ல் ஏற்பட்ட பெரும் பிரச்சனை, அவனை எவ்வளவு வேண்டிக்கொண்டும், பலர் சொல்லிய பரிகாரங்கள் செய்தும் தீரவேயில்லை, இன்றுவரை. என்ன செய்வது? அதற்கேற்ற விதி மற்றும் நேரம் அமைந்தால்தான் அவனே தீர்க்கமுடியும் போலிருக்கிறது.
நீக்குஇராமன், தன்னைச் சரண்டைந்தவர்களிடம் பட்சபாதம் பார்க்காமல், சந்தேகப்படாமல் உடனே ஏற்றுக்கொள்கிறான், வேண்டியதை உடனே நிறைவேற்றுகிறான். ஆனால் பரதாழ்ஒஆன் வேண்டிக்கொண்டதை மாத்திரம் (அயோத்திக்கு வந்து அரசனாகு) உடனே நிறைவேற்றவில்லை. பதினான்கு வருடங்கள் காக்க வைக்கிறான். பரதனுக்கே அப்படி என்றால் நாமெல்லாம் (சுயநலத்துக்காக, தனக்காக வேண்டிக்கொள்பவர்கள்) எம்மாத்திரம்? இப்படி நினைத்து ஆறுதல் பட்டுக்கொள்கிறேன்.இந்த ஜென்மத்தில் கிடைக்காவிட்டாலும், அடுத்த ஜென்மத்தில் பிரயத்தனம் இல்லாமல் கிடைக்கும் என நம்புகிறேன்.
வணக்கம் சகோதரரே
நீக்கு/பரதாழ்வார் வேண்டிக்கொண்டதை மாத்திரம் (அயோத்திக்கு வந்து அரசனாகு) உடனே நிறைவேற்றவில்லை. பதினான்கு வருடங்கள் காக்க வைக்கிறான். பரதனுக்கே அப்படி என்றால் நாமெல்லாம் (சுயநலத்துக்காக, தனக்காக வேண்டிக்கொள்பவர்கள்) எம்மாத்திரம்? இப்படி நினைத்து ஆறுதல் பட்டுக்கொள்கிறேன்.இந்த ஜென்மத்தில் கிடைக்காவிட்டாலும், அடுத்த ஜென்மத்தில் பிரயத்தனம் இல்லாமல் கிடைக்கும் என நம்புகிறேன்./
தங்களுடையது உண்மையான வார்த்தைகள்தான் . அன்பு பரதன் அழைத்தும் வரவில்லை என்பது போக, ஸ்ரீராமர் தான் ஒரு தெய்வ அவதாரமானவர் என தெரிந்திருந்தும், மனிதராக பிறந்து வாழ்ந்து வருகின்ற ஒரு அவசியத்தை உணர்ந்தவராய் தனக்கென வகுத்திருக்கும் பாதையை மாற்றியமைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதுதான் ஒரு மனித வாழ்வின் நிதர்சனம் என்பதை நமக்கும் உணர்த்தியுள்ளார். 🙏. இறைவனே இப்படியான காலகட்டங்களில் சோதனைகளை எதிர் கொள்ளும் போது நாம் எவ்வளவு சாதாரண மனிதர்கள். எனக்கும் உங்கள் எண்ணங்களை போன்ற எண்ணங்கள்தாம் மனதில் ஓடும்.
பிறவி பெருங்கடல் என்பது உண்மையானால், "அடுத்த பிறவியிலாவது பிறந்ததிலிருந்து வாழ்நாள் முழுவதும் உன்னையே( உன்னை மட்டுமே)நினைத்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தை தந்து விடு.." என அவனிடம் பிரார்த்தனைகள் செய்த வண்ணம் உள்ளேன். ஆனால் இதுவும் ஒரு பேராசைதான். புரிகிறது. ஆனால், ஆசைக்கும் அளவென்பது இல்லையே..! நன்றி சகோதரரே
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விதியை நானும் நம்புவதுண்டு கமலா அக்கா. ஆனால் இந்த முயற்சிகள் எல்லாமே நம் மன ஆறுதலுக்குதானே! கருடன் கேட்டபடி வட்டமிட்டு பறந்தது ஆச்சர்யம் அளிக்கிறது. சில சமயங்களில் அற்புதங்களை நம்ப முடிவதில்லை. அவற்றை தற்செயல் லிஸ்ட்டில் சேர்த்து விடுவோம்!
நீக்குஅவ்வளவுதான் நம் நம்பிக்கை.
ஊர்கூடி மழைவேண்டி பிரார்த்தனை செய்தபோது ஒரே ஒரு சிறுமி மட்டுமே குடையோடு சென்றாளாம்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகாக்கை இடம் வலமாக பறப்பது, வெளியில் செல்லும் போது பூனை குறுக்கே வராமல் இருப்பது இல்லை எங்காவது வெளியில் புறப்படும் போது கால் படிகளில் இடறுவது , காலணிகள் போட்ட பின் அடுத்த அடி வைக்கும் போது சறுக்குவது, இதையெல்லாம் சகுணத்தடை என்றுதான் இன்னமும் கருதுகிறோம். உடனே வீட்டின் உள்ளே வந்து ஒரு வாய் தண்ணீராவது அருந்தி விட்டு மீண்டும் பயணிக்க யத்தனிக்கிறோம்.
இதுபோல்தான் ஒரு நல்ல விஷயங்களுக்காக நம் மனதில் உதிக்கும் பல விஷயங்களும் தப்பில்லை என்பது என் அனுமானம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உட்கார்ந்து தண்ணீர் குடித்தால் இயற்கையோ, விதியோ ஏமாந்து விடுமா என்ன! நம் மன ஆறுதல்!
நீக்குகொசுத்தொல்லை தீர, வீட்டு வாசலில் 'கொசுக்கள் உள்ளே வரக்கூடாது' என்று எழுதி வைத்தால், அவை சரி என்று சென்று விடுமா என்ன!!
காலை சாமிக்கு விளக்கேற்றும்போது ஏற்றிய விளக்கு உடனே அணைந்து விடும். திரியை நிரடிவிட்டு ஏற்றவேண்டும். அல்லது ஏதோ காரணத்தால் இப்படி ஆகும். இது நம் தவறுதான் என்று தெரிந்தும் அன்று முழுவதும் வெளியில் சொல்ல முடியாத ஒரு சஞ்சலம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்!
நீக்கு/கொசுத்தொல்லை தீர, வீட்டு வாசலில் 'கொசுக்கள் உள்ளே வரக்கூடாது' என்று எழுதி வைத்தால், அவை சரி என்று சென்று விடுமா என்ன!!/
நீக்குஹா ஹா ஹா. அவையும் எழுத படிக்க கற்றிருந்தால், இல்லை கற்க வேண்டுமென நம்மால் நிர்பந்தப்பட்டிருந்தால் ஒரு வேளை அது இங்கிதம் புரிந்தபடி, நம்மை தொந்தரவு செய்யக் கூடாதென்று அகன்று விடும். ஆனால், அவைகளுக்கும் மொழி பிரச்சனை வந்து திண்டாடி போகும். பாவம்..!
ஒரு திரைப்படத்தில், (சகாதேவன், மகா தேவன்.. என்ற படமோ.!!! படம் பெயர் நினைவில்லை. ஆனால் அதில் சிக்கனத்திற்கு பெயர் போனவராக எஸ். வி. சேகர் நகைச்சுவையாக நடித்திருப்பார்.) நடிகை மனோரமா அவர்கள் ஒரு சர்க்கரை நிறைந்த பாட்டிலில் உப்பு என்று எழுதிவைப்பார். அவர் கணவராக வரும் நடிகர் வெ. ஆ. மூர்த்தி அவர்கள் "இது ஏன் இப்படி..? என்பதற்கு எறும்புகள் வந்து இதைப்படித்து விட்டு உப்பு என அகன்று விடும் என்பார். நாம் இப்படி பேசும் பொழுது அது நினைவுக்கு வருகிறது. :))
/விளக்கேற்றும்போது ஏற்றிய விளக்கு உடனே அணைந்து விடும். திரியை நிரடிவிட்டு ஏற்றவேண்டும். அல்லது ஏதோ காரணத்தால் இப்படி ஆகும். இது நம் தவறுதான் என்று தெரிந்தும் அன்று முழுவதும் வெளியில் சொல்ல முடியாத ஒரு சஞ்சலம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்!/
அது உண்மை.. கற்பூரம் அணைவது, ஏற்றிய விளக்கு அணைவது என்ற சகுனங்கள் எத்தனை நாளானாலும் மனதை அலைக்கழிக்க வைக்கும். அதிலிருந்து மீள்வது சற்று சிரமம்தான். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நிஜமாகவே அது ஒரு அபாயகரமான டீல், ஸ்ரீராம்.
பதிலளிநீக்குசிலருக்கு, இப்பழக்கம், பெரியவங்க ஆன பிறகும் கூடத் தொடர்கிறது. அது எத்தனை அழுத்தம் கொடுக்கிறது என்பதை நான் கண் கூடாகக் கண்டிருக்கிறேன். கண்டு வருகிறேன். அவங்க கூட இருக்கறவங்களுக்கும் அந்த அழுத்தம் பரவும் அதாவது அப்படிப்பட்டவங்களை மேனேஜ் செய்வது!!!!!!!!
ரயில் டிக்கெட் புக் பண்ணுவதிலிருந்து....ரயில்வேல போய் சொல்லவா முடியும்...நம்பர மாத்துங்கப்பான்னோ, இல்லை விழாக்கள் தேதியை மாத்துங்கப்பான்னோ?!!!
கீதா
ஆமாம் கீதா.. நம் மனதின் ஆபத்தான பகுதியோடு நாமே விளையாடும் விளையாட்டு. நம் தன்னம்பிக்கையை நாமே இறக்கிக் கொள்ளும் முயற்சி!
நீக்குநானும் பல காரியங்களை ராகு காலத்தில் தொடங்கமாட்டேன், வெளியில் கிளம்புவதும் அப்படித்தான். ஆனால் அது பெரிய பிரச்சனை. முக்கியமான விஷயங்களுக்கும் அப்படிப் பார்க்க ஆரம்பித்ததில் என்னால் அதை விட முடியவில்லை, ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கும் அதனால் கஷ்டம்.
நீக்குஎன் மனைவி ஹோரை, யோகம் எல்லாம் பார்ப்பார்.
நீக்குநமக்கு நல்ல நண்பனும் எதிரியுமே நம்மனம் / எண்ணங்கள் தான்! எப்படிப்பட்ட நட்பைத் தெரிந்தெடுக்கிறோம் என்று சொல்லப்படுமோ அதே போன்றுதான் எப்படிப் பட்ட எண்ணங்கள் என்பதே..
பதிலளிநீக்குகீதா
உண்மை, உண்மை!
நீக்குபாரதியின் எழுத்தை வாசிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது பெரிதாக்கினால் இப்படி அப்படியும் நகர மாட்டேங்குது கணினியில்.
பதிலளிநீக்குகீதா
பெரிதாக்கினாலும் சற்று கடினமாகத்தான் இருக்கும்! :))
நீக்குபுறாக்களைக் கூர்ந்து கவனிச்சிருக்கீங்க, ஸ்ரீராம். சூப்பர்!
பதிலளிநீக்குஆமாம் அவங்க பகிர்ந்துக்க மாட்டாங்க. ஆனால் கும்பலா வந்து கும்பலாவே அமர்ந்து சாப்பிடுவாங்க.
கீதா
கூர்ந்தெல்லாம் கவனிக்கவில்லை கீதா. காக்கைக்கு சோறு வைத்தால் காத்திருந்த காக்கையைக் கூட சாப்பிடவிடாமல் துரத்தி இது சாப்பிடுகிறது. அவ்வப்போது அதன் இந்த முனகல் / உறுமல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறியாது!!
நீக்குஅட! தமிழ்நாடு போலீஸை, ஸ்காட்லான்ட் போலீஸாக்கும்னு நிறைய டலயாக் வருமே இப்ப தில்லி போலீஸும் லிஸ்டில் சேர்ந்திருச்சு போல...
பதிலளிநீக்குவாழைப்பழத்துக்குச் சண்டை!!!!! சுவாரசியமான செய்தி. வனத்துறை வந்து பிடிச்சுட்டுப் போச்சே!!!
ஹையோ மொழிபெயர்ப்புச் செயலி மூலமா....கொடுமைடா சாமி...மொழி பெயர்ப்பாளர்கள் கிடைக்காமலா போய்ட்டாங்க!
ஏங்க படிச்சவங்க படம் எடுக்கறப்ப மொபைல் எண் கூடவா பார்த்து எடுக்கமாட்டாங்க? சரி அப்படியே கொடுத்தாலும் ஃபோன் கம்பெனிகளில் இருந்து ஒரு டம்மி ஃபோன் நம்பர் எடுத்து யூஸ் பண்ணிட்டு உடனே அதை க்ளோஸ் பண்ணிடலாமே ...இல்லைனா நம்பர காட்டியிருக்கவே வேண்டாமே...வாய்ஸ் கூட அந்த இடத்தில சைலன்ஸ்ல போட்டிருக்கலாமே.....ஏங்க எவ்வளவோ ஐடியாஸ் இருக்கறப்ப இப்படியா....ரியலிட்டின்னு ரொம்ப ஓவரா சீன் வைக்கக் கூடாது!!!!
செந்தில்குமார் - அதே! வெளங்கிடும்!!!
அமரன் செய்தி கீழ வந்த பிறகு அந்தச் செய்தியும் பார்த்தாச்சு. அதிருக்கட்டும் நஷ்ட ஈடு எம்புட்டு கொடுத்தாங்களாம்?!!!!!
கீதா
வாராவாரம் செய்திகள் பகுதியில் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் சுவாரஸ்யமான செய்திகள் எது என்று வாசகர்களைக் கேட்கலாமா என்று யோசிக்கிறேன்!
நீக்குஇயக்குனர் ஜெயபாரதி பகுதி ரொம்ப நெகிழ்ச்சி....
பதிலளிநீக்குகீதா
ஆமாம். காம்ப்ரமைஸ் செய்யாத / செய்ய முடியாத பத்திரிகையாளர், இயக்குனர்.
நீக்குநந்தன் குறித்து வாசித்திருக்கிறேன். காரில் வருவது தெரியக் கூடாது என்று வேறு ஒரு இடத்தில் பார்க் செய்வதற்குப் பதிலாக பஸ்ஸிலேயே போயிருக்கலாமே என்று எனக்குத் தோன்றியது!!
பதிலளிநீக்குகீதா
அட, ஆமாம் இல்ல!! ஆமாம்தான்!
நீக்குசிவாலயம் மிக மிக அழகா இருக்கு பிரமிக்க வைக்கிறது கலை நயம் அமைப்பு...
பதிலளிநீக்குபாவம் அர்ச்சகர்!
கீதா
ஆமாம், பாவம். அறமில்லா துறையால் எந்த பயனும் இல்லை!
நீக்குதன் எழுத்தை அவர் கையாள்கிற முறை, ஏதோ வானத்திலிருந்து வந்த பவித்திரமான பிரசாதத்தை பக்தியோடு கையாள்வது மாதிரி இருக்கும். அவர் எழுத்தின்மேல் அவருக்கு அத்தனை மதிப்பு, நம்பிக்கை. //
பதிலளிநீக்குசூப்பர்....!!! மிகவும் ரசித்தேன் பெருமதிப்பும் அவர் மீது.
//எடிட்டிங் என்ற பெயரில் தன் எழுத்தில் யாரும் கைவைப்பதை அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. //
சுஜாதா சிணுங்கியதில்லை என்று சொல்வதில் இது எந்தவகை எடிட்டிங்க் என்று தெரியலையே....எழுத்துப் பிழை சொற்பிழை என்றால் ஓகே...எழுதியதையே மாற்றவும் ஒத்துக் கொண்டிருப்பாரா?
நா பாவின் செல்லம் பற்றி பால்யூ எழுதியது கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்....
கீதா
சில சமயம் சுஜாதா ஒத்துக்க கொண்டிருக்கிறார் என்று படித்த நினைவு. ஆனால் அவரை கேட்காமல் செய்திருக்க மாட்டார்கள்! நா பா செல்லம் பற்றி பால்யூவின் கட்டுரை கிடைத்தால் பகிருங்கள்.
நீக்குஅவர் சொன்ன வாக்கியத்தின் விபரீத அர்த்தம்//
பதிலளிநீக்குஅதையும் சொல்லியிருக்கலாமே...நாமும் ரசித்திருப்போமே
//ஒருவர் தாம் எழுதியதை எப்படியெல்லாம் மெருகேற்றி உயர்த்த முடியும் என்பதை ஜெயகாந்தனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். //
லாசரா
இந்த வகைதான் நானும்... ஆனால் அவங்க எல்லாம் அசாத்திய திறமை படைத்தவர்கள்...
நான் போட்டு வைச்சு திருத்தோ திருத்துன்னு திருத்தினாலும் அது பாட்டுக்குத் தூங்கிட்டே இருக்கும்...அவுட் டேட்டட் கூட ஆகிடும்!!!!!
நம்ம ஸ்ரீராம், நாபா, தி ஜா வகை!!!!!
//நாம் மன ஒருமைப்பாட்டோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் எந்த சப்தமும் நம் காதிலேயே விழாது என்பார் நகைத்துக் கொண்டே. //
வியந்து போனேன்.
பி வி ஆர் - அடுத்த வியப்பு
அதை விட பிரமிப்பு கோதை நாயகி, கண்ணதாசன்,,,,
//நல்லது. உங்கள் பாணிக் கதைகளையே தொடர்ந்து வெளியிடுங்கள். ஆனால் அவ்வப்போது நல்ல கதைகளையும் வெளியிடுங்களேன்!`//
ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்!!
நிஜமாகவேஎ ழுத்துலகம் சுவாரசியம்!!!
ஸ்ரீராம் இதைத்தானே இங்குப் பகிர நினைச்சீங்க இல்லையா?
சுப்பர் பகுதி! இன்றைய பகுதியில் ரொம்ப ரசித்த பகுதி.
கீதா
ஆமாம் கீதா.. இதைதான் நான் இங்கு பகிர நினைத்து உங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று வாரங்களாக மிஸ் ஆகிக் கொண்டிருந்தது!
நீக்குபொக்கிஷம் ஜோக்ஸ் மதன் செம...ஏல்லாமே சிரிப்புனா.....சத்தமாகச் சிரித்துவிட்டேன்.... பேன் வழுக்கி விழுந்துவிடும்ன்றது!!!
பதிலளிநீக்குகீதா
__/\__
நீக்குமதன் அவர்களது நகைச்சுவை சித்திரங்கள் 1970, 80, 90 களுக்கு அழைத்துச் சென்றன..
பதிலளிநீக்கு__/\__
நீக்குவீட்ல பால் இல்லையாம்!...
பதிலளிநீக்குஅப்படியும் ஒரு ஆரோக்கியமான காலம் இருந்திருக்கின்றது..
__/\__
நீக்குமிகவும் கனமான பதிவு இன்றைக்கு..
பதிலளிநீக்குபோங்க செல்வாண்ணா... ஒவ்வொரு வாரமும் அப்படிதான் சொல்றீங்க.. தஞ்சைப் பக்கம் மழை நிலவரம் எபப்டின்னு கேட்டிருந்தேனே...
நீக்குதங்களது ஒலிப்பேழை திறந்து கேட்க இயலாதபடிக்கு எனது கைத்தல பேசியில் அடைசல்..
பதிலளிநீக்குமனதுக்கு இதமாகத் தான் பேசியிருப்பீர்கள் என்று இருந்து விட்டேன்..
நள்ளிரவில் இருந்தே மழை..
இப்போது தான் இங்கே மழை ஓய்ந்து இருக்கின்றது..
வாய்ஸ் மெசேஜில் உங்கள் உடல் நலம் விசாரித்திருந்தேன்.
நீக்குமகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்
மூட நம்பிக்கை என்ற பல நம்மிடம் இருக்கிறது. இப்போது உள்ள தலைமுறைகள் நம்மை கேலி செய்கிறார்கள். ஆட்டோவின் கண்ணாடியை ஸ்ரீ செய்தால் எல்லாம் சரியாகி விடுமா என்று கேலி செய்கிறார்கள்.
பதிலளிநீக்குஉங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
நிறைய செய்திகள் அனைத்தையும் படித்தேன்.
பொக்கிஷ பகிர்வுகள் அருமை."காதுகிட்டே வந்து முணு முணுக்காதே!"
நகைச்சுவை சிரிப்பை வரவழைத்து விட்டது
ரசனைக்கு நன்றி கோமதி அக்கா.
நீக்குகுடிசை ஜெயபாரதி சிறு வயது பழைய படம் நினைவுக்கு வந்து வயதான ஜெயபாரதியை ஒத்து கொள்ளவில்லை. நிறைய மாறுதல் தோற்றத்தில்.
பதிலளிநீக்குவயதாகிறதே.... முதுமை வந்து விட்டதே...
நீக்குபானுமதி வெங்கடேஸ்வரன் தொகுத்து வழங்கும் செய்திகள் சில அறிந்தவை சில படிக்காத செய்திகள். நன்றி.
பதிலளிநீக்குசெய்திகள் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
நீக்கு// மேலே மின் விசிறியின் ஒலி, சுற்றிலும் பணியாளர்கள் பேசுகிற ஒலி, பலரின் நடமாட்டம், மிஷின் சப்தம் எதுவும் அவரை பாதிக்காது.//
பதிலளிநீக்குகுவைத்தில் பேருந்தில் கொடுக்கப்பட்ட டிக்கெட்டில் ஐயப்பனைக் குறித்து பாட்டெழுதி அறைக்குத் திரும்பியதும் ஒழுங்கு செய்து கொள்வேன்.
அதற்காக தரமான எழுத்தாளன் என்று நினைத்துக் கொளவதற்கில்லை...
திறமைதான்.
நீக்குபுறாப்பாட்டு
பதிலளிநீக்குஅழகு..
அருமை...
நன்றி.
நீக்குரும் ரும் ரும்...
பதிலளிநீக்குவாரும் வாரும் வாரும்
வண்ணக் கவியைக்
கேளும் கேளும் கேளும்
வான முகடுகள்
எங்கெங்கும்
கூடித் திரிவோம்
நாங்கள்...
வளர் தமிழ்க் கவியில்
அன்றும் என்றும்
நாங்கள்..
துர்க்குணம்
ஏதும் இல்லாத
புள்ளினம் நாங்கள்
நாங்கள்...
காற்றில் பறந்து
திரிந்தாலும்
களவாடி எதையும்
தின்பதில்லை...
காதலுக்கு எமை
வைத்த மானிடமே
கண்ணியத்தில் எமை
மறந்தனையே
வாரும் வாரும் வாரும்..
ஆனந்தச் சிறகினை
விரித்தே பறந்து
அன்பை விதைப்போம்...
வாரும் வாரும் வாரும்
ரும் ரும் ரும்..
அருமை.
நீக்குதொகுப்பு நன்று.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு