புதன், 4 டிசம்பர், 2024

என்னைக்காவது சாமியாராப் போயிடலாம் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?

 

நெல்லைத்தமிழன் : 

1.  சின்ன வயசுல எல்லா இடத்திலும் எல்லாவற்றையும் ருசிச்சோம். ஆனால் இப்போ, செய்யற இடம், உபயோகப்படுத்தும் எண்ணெய், சுத்தமா இருக்காங்களா என்று பல்வேறு காரணிகள் பார்த்துட்டு, அடப்பாவி இதையா நாம சின்ன வயசுல சாப்பிட்டோம் என்று தோன்றுகிறதே..எதனால்?   

#   தற்போது சுத்தம், சுகாதாரம் பற்றிய கவலைகள் அதிகமாகிவிட்ட காலகட்டம்.  வாய்க்காலில் பல் தேய்த்து வாய் கொப்பளித்து, குளத்துத் தண்ணீரை குடித்த தலைமுறையைச்சேர்ந்த எனக்கு இந்த வகைக் கவலைகள் வருவதில்லை. 

2. என்னைக்காவது சாமியாராப் போயிடலாம் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?    

# அவ்வப்போது பல முறை தோன்றியிருக்கிறது.‌

3.  சின்ன வயசுல வீட்டில் திருடியிருக்கீங்களா?    

# பெரிய வயசுலேயே திருடி - வருந்தியுமிருக்கிறேன்.‌

4. இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான், அதை இருக்கிறவன் எண்ணிப் பார்க்க மறந்துட்டான் என்ற பாடலைக் கேட்கும்போது, எதற்கு டயட், நடை என்றெல்லாம் உடலை வருத்திக்கணும் எனக்குத் தோணும். உடற்பயிற்சிகள், டயட் போன்றவற்றைப் பற்றி உங்கள் கருத்து என்ன?  

# உடற்பயிற்சி , டயட் இரண்டுமே மனதை வழிப்படுத்தும் என்று திடமாக நம்புகிறேன்.

5.  முந்தைய தலைமுறைல, தீபாவளிக்கு அவங்களே டிரெஸ் எடுத்துக் கொடுப்பது போல, பெண்ணையும் பார்த்து திருமணம் செய்துவச்சாங்க, அதனால் ஒன்றும் குறைந்த மாதிரித் தெரியலை. இந்தத் தலைமுறையோ இண்டர்வியூ போல ஏகப்பட்ட கேள்விகள் அவங்களுக்குள்ளேயே கேட்டுக்கிட்டு, கொஞ்ச நேரம் - மாதங்கள் எடுத்துக்கிட்டுத்தான் சரின்னு சொல்றாங்க. தற்போதைய இந்த முறை சரின்னு நினைக்கறீங்களா?

# தற்காலத் திருமணங்கள் ஏற்பாடு - நடைமுறை குறித்து எனக்குப் பல எதிர்க் கருத்துக்கள் உண்டு.

6) படத்தைப் பார்த்து கண் கலங்கிவிட்டேன், அழுதுவிட்டேன் என்றெல்லாம் சொல்றாங்களே இந்தக் காலத்திலும். அதெல்லாம் டுபாக்கூரா இல்லை யாருக்கேனும் ஜால்ரா தட்டறாங்களா?  

# இளவயதில் புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்ட காட்சிகளால் உணர்ச்சி வசப்பட்டது உண்மை எனினும், இந்த வகை தகவல்கள் மிகைப்படுத்திச் சொல்லப்படுபவைதான். மிகை என்பது மனித இயல்பு.

7) தமிழ் இலக்கியங்களை முக்கியப் பாடமாகவும், தமிழ் பத்தாம் வகுப்பு வரை படித்திராவிட்டால் தமிழக அரசு வேலை கிடையாது என்று சொல்லும் துணிவும் ஏன் தமிழக அரசுக்கு இல்லை?

# தமிழாசிரியர்களின் இயலாமையா மாணவர்களின் அசிரத்தை / அறிவின்மையா தெரியவில்லை தற்காலம் மாணவர்களின் தமிழறிவு அடிமட்டத்தில் இருக்கிறது.  வலைதளக் கருத்துப் பதிவேற்றங்களில் காணப்படும் மகா மட்டமான பிழைகள் இதை உறுதி செய்கின்றன.

8) எப்போது (எந்த வயதில்) நாம் ருசிக்காகச் சாப்பிடுவதை விட்டுவிட்டு, அந்த அந்த வேளைக் கடமையை முடிக்கணுமே என்று சாப்பிட ஆரம்பிக்கிறோம்?

#    இறுதிவரை மனிதர்கள் ருசிக்கு அடிமைகள்தாம்.

9) யூடியூபர்கள் பிறர் போட்டிருக்கும் ரெசிப்பியைப் போலவே நிறைய ரெசிப்பிக்களைப் போடுகிறார்களே. இதற்கு காப்புரிமை கிடையாதா?

# மிகப் பரவலாக தெரிந்த ஒன்றுக்கும் காப்புரிமை எப்படிப் பெற முடியும் ?

10) கம்யூனிகேஷன் இல்லாத 18ம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்பு, எப்படி காதலித்திருப்பார்கள்? அல்லது இலக்கியத்தில் மாத்திரமே காதல் இருந்திருக்குமா?

# ஆதிமுதல் ஆண்-பெண் என்று ஆனமுதல் காதலும் இருந்து வருகிறது. இயற்கை விதி ஆயிற்றே!

கே சக்ரபாணி, சென்னை 28 : 

ஐ பி எல்  கிரிக்கெட் போட்டிக்கு  விளையாட்டு வீரர்களை  கோடிக்கணக்கில் ரூபாய் குடுத்து ஏலம் எடுக்கிறார்களே இது எந்த விதத்தில் நியாயம்? சூதாட்டம் போல் இருக்கிறதே. இதை ஏன் மத்திய அரசு தடுக்கவில்லை? அவர்கள் என்ன  ஆடுமாடுகளா, வியாபாரப் பொருளா? விளையாட்டை  விளையாட்டாக செயல்படுத்தவேண்டும். வியாபாரம் ஆக்கக்கூடாது. 

# கிரிக்கெட் வியாபாரமாக மாறி வெகுகாலம் ஆகிறதே ! அதை ஆர்வமாகப் பார்க்கும் மக்கள் தொகை மிகப் பெரிது.  அதன் விளைவுதான் இதெல்லாம்.  மக்கள் பார்ப்பதில்லை என்று ஆனால் தானாக சரியாகிவிடும்.

50 விருந்து 350 கோடி வரை நடிகர்கள் சம்பாதிக்க வில்லையா அது போலத்தான் இதுவும்.

சீனா   ரஷ்யா   ஜப்பான்  போன்ற நாடுகளெல்லாம்  கிரிக்கெட் விளையாட்டை  ஆடவில்லையே  அதைப்பற்றி. 

# நமது கிரிக்கெட் பைத்தியம் பிரிட்டிஷாரின் நன்கொடை.

= = = = = = = =

KGG பக்கம்: 


திருமதி மீனாக்ஷி கௌதமன். 

இந்த உலகிற்கு வந்த தேதி : ஜனவரி 22 - 1955. 

இந்த உலகை விட்டு மறைந்த தேதி : நவம்பர் 28 - 2024. 

= = = = = = = = = = = =

62 கருத்துகள்:

  1. ​முக நூலிலும் மற்றும் பதிவிலும் பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி சொன்ன கௌதமன் சார் இரங்கற் செய்தியை கூறநேர்ந்ததற்கு அனுதாபங்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கே உடனுக்குடன் நன்றி தெரிவிக்க இயலாமல் போனதற்கு இதுதான் காரணம்.

      நீக்கு
  2. அன்பு கெளதமன்,
    செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அன்னாரின் இழப்பைத் தாங்குகிற மனோவலிமையை இறைவன் தங்களுக்கு தந்து அருளப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. கேஜிஜி சார்... எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல், தன்னளவில் வைத்துக்கொண்டு வாழ்கிறீர்கள். இந்த ஸ்திதப்பிரக்ஞை வருவது கடினம்.

    உங்களுக்கு இந்தத் தருணத்தில் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப தாமதமாக்க் கேள்விகள் அனுப்பவில்லையே, அடுத்த வாரத்திற்கான கேள்விகளையும் இப்போதே வெளியிட்டுவிட்டாரே, ஏன் மற்றவர்கள் பதிலளிக்கவில்லை என்றெல்லாம் என் மனதில் எழுந்த எண்ணங்கள், கேஜிஜி பக்கம் என்ற தலைப்பைப் பார்த்து, இந்த நேரத்திலும் பகுதியை வெளியிட்டிருக்கிறாரே என்று தோன்றியது.

    இதையும் கடந்துபோகும் தைரியத்தை இறைவன் தரட்டும்.

    பதிலளிநீக்கு
  5. மஹாபாரத்த்தில் குருஷேத்திரப் போர், பிறகு பாண்டவர்கள் அரசாட்சியை ஏற்றுக் கொள்வது வரை விறுவுறுப்பாகப் படித்த எனக்கு, பிறகு ஒவ்வொரு இலையாக, கிருஷ்ணன் உட்பட, உதிரும் நிகழ்வுகளைப் படிக்கும்போது மனது வருத்தமுறும். வாழ்க்கை வரலாறு என்ற பக்கங்களில் இவற்றையும் உள்ளடக்கித்தானே எழுதமுடியும் என்பது நிதர்சனம் என்றாலும், நம் மனது இவற்றை சாதாரணமாக்க் கடந்து போவது கடினம்,

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் கௌதமன் சகோதரரே

    இன்றைய பதிவில் முதலில் தங்கள் பக்கம் பார்த்து மனம் கலங்கி விட்டேன். தங்களுடைய இழப்பை காலத்தால்தான் சரி செய்ய இயலும். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். தங்கள் துணைவியாரின் ஆன்மா சாந்தி அடையவும், தங்களுக்கு இந்த துயரை தாங்குகிற மனவலிமையை இறைவன் தந்தருளவும் இறைவனை மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு


  8. கெளதம் ஜி

    செய்தி அறிந்து மனம் திடுக்கிடுகின்றது....

    தங்களது
    அன்புத் துணையின் இழப்பைத் தாங்குகிற மனவலிமையை இறைவன் தங்களுக்கு தந்தருளட்டும்....

    பதிலளிநீக்கு
  9. துக்கமும் துயரமும் சோகமும் இங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டு இருக்கின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடமைகளை செவ்வனே முடித்துவிட்டவர்களின் இயற்கை மரணம் என்பது துக்கமோ துயரமோ அல்லது சோகமோ இல்லை என்பது என் கருத்து. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. கேஜிஜி சார்.. உங்கள் கருத்து சரிதான் என்றாலும் கூடப் பயணித்தவரின் பிரிவு என்பது தனிப்பட்ட துயரம்தான். கடமையைச் செவ்வனவே முடித்துவிட்டாலும் காலம்/காலன் மனிதரைக் காக்க வைப்பதன் காரணம் என்ன?

      நீக்கு
    3. பூர்வ ஜன்ம வினைகள் என்றுதான் தோன்றுகிறது. ஒவ்வொரு ஜோதிடப் புத்தகத்திலும், ஜனவரி 22 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று எழுதுகிறார்கள். இனிமேல் என் மனைவிக்கு வலிகள் இல்லை; வேதனை இல்லை, மனக் கஷ்டம், கிடையாது என்று நம்புகிறேன்.

      நீக்கு
    4. கௌ அண்ணா உங்க கருத்தை அப்படியே டிட்டோ செய்கிறேன்.

      ஆமோதிப்பதோடு, மிகவும் யதார்த்தம், பக்குவம் என்றும் சொல்வேன்.

      கீதா

      நீக்கு
  10. அடடா! மிகவும் வருத்தமான செய்தி KGG. Sir. பாசத்திற்குரிய சகோதரர், மனைவி இருவரையும் அடுத்தடுத்து இழந்திருக்கிறார்கள். தனிமையைத் தாங்கிக் கொள்ளும் திடத்தை இறைவன் உங்களுக்கு அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  11. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
    அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  12. கெளதமன் சார் துணைவியார் மறைந்த செய்தி அறிந்து மிகவும் மனம் வருந்துகிறது.
    அவர்களுக்கு அஞ்சலிகள்.
    குடும்பத்தினர் அனைவருக்கும் மன ஆறுதலை தர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    அவர்களின் சிரித்தமுகம் மனதில் பதிந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  13. திரு.கெளதமன் அவர்களுக்கு மிகுந்த அனுதாபங்கள். இத்துயரில் இருந்து அவரும் அவரது குடும்பத்தினரும் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  14. திரு.கெளதமன் அவர்களுக்கு மிகுந்த அனுதாபங்கள். இத்துயரில் இருந்து அவரும் அவரது குடும்பத்தினரும் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  15. //துக்கமும் துயரமும் சோகமும் இங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டு இருக்கின்றன//

    கடந்த ஐந்து மாதங்களாக உறவு முறைகள் நுட்ப வட்டாரங்களில் ஏழெட்டு இறுதிப் பயணங்கள்..

    விடியற் காலையில் துயரம் ஊற்றி எழுதப்பட்ட கதைகளில் விலகி இருப்பதற்கு இது காரணம்..

    வெல்லுகின்ற சொற்களும் கொல்லுகின்ற சொற்களும் இருக்கின்றன..

    எவையென்று தெரிந்து ஏற்றுக் கொள்ள மனம் தான் மறுக்கின்றது...

    பதிலளிநீக்கு
  16. ஆழ்ந்த அஞ்சலிகள்.

    கௌ அண்ணா, இதுவும் கடந்து போகும். புனரபி ஜனனம் புனரபி மரணம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. நெல்லை சின்ன வயசுல ஊர்ல தண்ணிய காய்ச்சியா குடிச்சோம்? கிணத்துல இருந்து இறைத்துக் குடிப்போம் நாங்க. குளத்துல நீஞ்சும் போது தண்ணி மூக்குலயும் வாய்லயும் புகுந்து குடிச்சதுண்டு. ஒண்ணும் ஆகலை. மிஞ்சிப் போனா ஒரு ஜுரம் வரும். சிவப்பு மருந்தோ பச்சை மருந்தோ குடிப்போம். ஒரு ஊசி. ஈ எஸ் ஐ ஆஸ்பத்திரில...தொண்டைக்கட்டுக்கு வயலட் கலர்ல ஒரு மருந்தை குச்சி நுனில கட்டின பஞ்சுனால எடுத்து தொண்டைல தடவுவாங்க...அம்புட்டுத்தான்...
    இப்ப அதே ஊருக்குப் போனா கூட, நீஞ்சிக் குளிச்சா கூட, வீட்டுல தண்ணி காச்சிதான் குடிக்கணும் இல்லைனா கேன் தண்ணி. எங்க போனாலும் கைல தண்ணி ஃப்ளாஸ்க்.

    திருவந்தபுரத்துல இருந்தவரை தண்ணிய காய்ச்சிக் கூடக் குடிச்சதில்லை. மகன் பிறந்த பிறகும் கூட. ஆயுவேத மருத்துவர் சொல்லியதுண்டு, ஊருக்குப் போறப்ப மகனுக்குக் கிணத்துத் தண்ணிய கொடுங்கன்னு. நல்ல இன்யூனிட்டி வரும் என்று. மகனுக்கும் அப்படித்தான் செய்தேன்.

    கோயம்புத்தூர் வந்து எல்லாமுமே மாறியது. காய்ச்சி வடிகட்டி....

    இப்ப நம்முடைய விழிப்புணர்வு காரணமா இல்லை, ஒவ்வொரு நோய் வரும் போதும் மருத்துவர்களின் எச்சரிக்கையாலா தெரியலை.

    ஆனா இப்பவும் கூட குக் கிராமத்துல பாட்டிகள் நம்ம வயதுக்காரங்க எல்லாம் தண்ணிய அப்படியேதான் குடிக்கறாங்க.

    மண்ணுலதான் குழந்தைங்க விளையாடறாங்க...ஏன் இங்கயுமே பாலத்துக்கடியில நாடோடிக் குடும்பங்கள் என்ன சுத்தம் பார்க்கறாங்க...ஆனா அவங்க நல்ல ஆரோக்கியமா இருக்காப்ல தெரியறாங்கதான் இல்லை அப்படி நம்ம கண்ணுக்குத் தெரியுதோ என்னவோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை... அப்போ நமக்கு knowledge அறிவு இல்லை. இப்போ பல காணொளிகள்ல, செய்யற இடம் கந்தர்கோளமாக இருப்பதையும், எஞ்சினிலிருந்து வரும் பழைய ஆயில் போன்ற எண்ணெயில் பொரிப்பதையும், சுத்தம் என்ற ஒன்றே இல்லாமல் தயாரிப்பதையும் பார்க்கும்போது, சாப்பிட நினைக்கவே அலர்ஜியா இருக்கு

      நீக்கு
    2. எல்லாவற்றிற்கும் மனதுதான் காரணம் என்று நினைக்கிறேன். ஆஹா இது உடம்புக்கு ஆகாது என்று டி வி டாக்டர் சொல்லிவிட்டாரே என்று நினைத்தால், மனம் உடனே அதை உடலுக்கு அப்படியே செய்துவிடும். நிறைய இது பற்றி பிறகு வாய்ப்பு கிடைக்கும்போது எழுதுகிறேன்.

      நீக்கு
  18. என்னைக்காவது சாமியாராப் போயிடலாம் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? //

    ஹாஹாஹா நிறையவே தோன்றியிருக்கு....இப்பவும். மனதளவில் ஞானம் வந்தாலே சாமியார்தான். சாமியார் என்ற அடையாளச் சொல் கூடத் தேவையில்லை.

    மஞ்சள் காவித் துணி கட்டியெல்லாம் இல்லை...சாமியாராவதற்கு இதெல்லாம் எதுவும் தேவை இல்லை. இப்படி அணிவது கூட்டம் சேரலாம்.

    நெல்லை, பொதுவாகச் சொல்வது சாமியாராகணும்னா கல்யாணம் பண்ணிக்காமத்தனியாகப் போவது தனி இடத்தில் இருப்பது என்று.

    தேடல் என்பது இருந்தால் போதும் ஆன்மீகம் என்பது வேறு சாமியார் என்பது வேறு. நான் சொல்வது ஆன்மீக ஞானம். அதுக்கு எந்தக் கூடாரமும் தேவை இல்லை, கார் தேவையில்லை. கூட்டம் தேவையில்லை. அடையாளங்கள் தேவையில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் குடும்பத்தில் இருந்து கொண்டே இதை அடையலாம் மனப்பக்குவமும், தேடிப் புரிந்து கொள்ளலும்,

      கஷ்டங்கள் வர வர நாம புடம் போடப் போட அந்த அனுபவங்களே நமக்கு நிறையக் கற்றுத் தரும் provided அதைக் கூர்ந்து நோக்கிப் புரிந்துள்ளும் கற்கும் அறிவு இருந்தால்.....நம்மை evolve ஆக்கிக் கொண்டே போகும் மனம் இருந்தால்

      கீதா

      நீக்கு
    2. //வீட்டில் குடும்பத்தில் இருந்து கொண்டே இதை அடையலாம் மனப்பக்குவமும், தேடிப் புரிந்து கொள்ளலும்,// அப்படீல்லாம் அடைய முடியாது. நாம தேடித்தான் போகணும், அதுவும் தனியா. சாமியார் என்ற சொல்லின் அர்த்தம், காவி நிறமல்ல, தனியாகத் தேடத் துவங்குவது, சொத்து, பணம், பொருட்களைக் கூடவே வைத்துக்கொள்ளாதது

      நீக்கு
    3. காவி கட்டாத துறவி வாழ்க்கை பற்றி நான் அடிக்கடி யோசிப்பது உண்டு.

      நீக்கு
  19. சின்ன வயசுல பைசா எதுவும் திருடினது இல்ல....தின்பண்டங்கள் நாங்க பசங்க எல்லாரும் திருடுவோம்!!!!! பாட்டி ஒளிச்சு வைப்பாங்களே! அது சுவாரசியமான நாட்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் திருடியிருக்கேன் ஹா ஹா... அம்மா மறுநாள் என் கழற்றி வைத்த டிரௌசரில் எறும்புகள் மொய்ப்பதை வைத்துக் கண்டுபிடிப்பார்.

      நீக்கு
    2. சிரித்துவிட்ட்டேன்...

      கீதா

      நீக்கு
  20. நெல்லை உங்க 4 வது கேள்வியில் கொஞ்சம் நெகட்டிவிட்டி இருக்கோ!!?,

    என்னடா பொல்லாத வாழ்க்கை...சலிப்பு...

    என்னிக்காச்சும் ஒரு நாள் எல்லாருமே இந்த உலகிற்கு டாட்டா பைபை காட்டத்தான் போறோம். ஆனா இருக்கும் வரை ஆரோக்கியமா இருக்கணும். இல்லைனா கூட இருக்கறவங்களுக்கும் கஷ்டம நமக்கும் கஷ்டம்....சந்தோஷம் வேண்டும் இல்லையா? குடும்பம் இல்லைனாலுமே எத்தனை பேர் தனிமையை துக்கமா பார்க்காம சலிப்படையாம, தங்களைச் சந்தோஷமாக வைத்துக் கொண்டிருக்காங்க. ஆரோக்கியத்தோடு. அதைப் பார்த்து நாம கத்துக்கணும்.

    நாம இருக்கும் வரை நம்மைச் சுத்தி உள்ளவங்களுக்குக் கஷ்டம் கொடுக்காம கண்ணை மூடணும் கூடியவரை, டயட், நடை என்றெல்லாம் இருந்து அதையும் மீறி ஏதேனும் வந்தால் நம் கையில் இல்லை. ஆனா இதெல்லாம் இல்லாம உடம்புக்கு வந்து கூட இருக்கறவங்க நமக்காகச் செய்யணும்னா முதல் கேள்வி உடம்பை ஒழுங்கா பாத்துட்டிருந்தா நல்லாருந்திருக்கும் இல்லையான்னு...

    இதில் மனமும் உட்படும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்மறை இல்லை. ஆனால், இனிப்பு, நல்ல உணவு, பிடித்தமானவைகள் இவைகளைச் சாப்பிடாமல் இப்போது எடையை (ஆரோக்கியத்தை??) இலக்காக வைத்துக்கொண்டால், இன்னும் ஐந்து பத்து வருடங்கள் கழித்த பிறகு, கொடுத்தாலும் சாப்பிட முடியாதே...ஐயையோ..முன்னமேயே சாப்பிட்டிருக்கணுமோ என்று தோன்றுமோ?

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன் நெல்லை!!

      கீதா

      நீக்கு
    3. கீ ரெ கருத்துகள் மிகவும் சரி.

      நீக்கு
  21. 5. பெரிசா பேசணும்.....ஏற்கனவே கருத்துகள் பெச்சாகிடுச்சு ...ஹிஹிஹி

    6. சில படங்கள் கதைகள் நாம் ஆழ்ந்து வாசிக்கும் போது பார்க்கும் போது உணர்வுகள் வெளிப்படும் தான். அதுவும் நம்மை அறியாமலேயே....டுபாக்கூர்னு சொல்ல முடியாது. மனித மனம்.

    கட்டுரை எழுதுபவர்கள் மிகைப்படுத்தி எழுதலாம் . உதாரணத்துக்கு தமிழ்நாடே அழுதது....உலகமே அழுதது கண்ணீர் விட்டது. நெஞ்சு விம்மியது, இப்படி சொல்றதில்லையா அப்படி...

    9. நெல்லை, ரெசிப்பிக்கு எல்லாம் காப்புரிமை பெற முடியாது என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தமிழ்நாடே அழுதது....உலகமே அழுதது கண்ணீர் விட்டது. நெஞ்சு விம்மியது// ரசிகர்கள் அதிர்ச்சி, திரையுலகம் அதிர்ச்சி, தமிழகம் அதிர்ந்தது...இவைகளையும் சேர்த்துக்கோங்க. எனக்கென்னவோ ஒரு அதிர்ச்சியும் ஏற்படுவதில்லை. அதேபோல்தான் பெரும்பான்மையானவர்க்கும் என்று நம்புகிறேன்.

      நீக்கு
    2. சமீபத்தில் ஒரு காணொளி கண்டேன், முன்னாள் அதிமுக எம் எல் ஏ (திருநெல்வேலிப் பகுதி). அவர் சொல்றார், வெற்றி பெற்ற பிறகு அவர் டூ வீலர்ல போயிருக்கிறார். ஜெ. அவரிடம் வந்து, என்ன உடனே இடைத்தேர்தல்லாம் சந்திக்க விருப்பம் இல்லை என்று சொன்னவர், டக் என்று, ஆமாம் உங்களிடம் கார் இல்லை அல்லவா (அதாவது நேர் காணலில் சொன்னதை நினைவு வைத்திருந்தாராம்) என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாராம். மறுநாள் அதிமுக நிர்வாகி அவரிடம் வந்து, இந்த இந்த கார்களில் எது உங்களுக்கு வேண்டும் என்று கேட்டார்களாம். இத்தகைய ஜெ. பற்றிய நிகழ்வுகள் படிக்கும்போது மாத்திரம் வருத்தம் ஏற்படும், இன்னும் அவர் பத்து வருடங்கள் இருந்திருக்கலாமே என்று. அவர் இறக்கும் தருவாயிலும் எனக்கு ரொம்பவே வருத்தமாகவும், காணொளிகளைப் பார்த்து அதிர்ச்சியாகவும் இருந்தது.

      அதுவே ஜெ. ஒரு நடிகையாக மாத்திரம் இருந்திருந்தார் என்றால் அதிர்ச்சி ஏற்பட்டிருக்காது, எத்தனையோ பேர்கள் இறக்கிறார்கள் அதில் இவரும் ஒன்று என்று நினைத்துக்கொண்டிருந்திருப்பேன்.

      நீக்கு
    3. எனக்கென்னவோ ஒரு அதிர்ச்சியும் ஏற்படுவதில்லை. அதேபோல்தான் பெரும்பான்மையானவர்க்கும் என்று நம்புகிறேன்.//

      அதே...அதே

      கீதா

      நீக்கு
    4. நல்ல மனம் கொண்டவர்களின் நல்ல செயல்கள் பற்றிப் படிக்கும் போது நமக்கு ஏற்படும் உணர்வுகள் சிலிர்ப்பை ஏற்படுத்தும்.

      நீக்கு
  22. கேஜிஜி அவர்களின் மனைவி இறைவனடி சேர்ந்ததை அறிந்து வருந்துகிறேன். ஆழ்ந்த இரங்கல்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!