மருமகள்
துரை செல்வராஜூ
" இன்னொரு தோசை வெச்சிக்கிறீங்களா.. "
" இது போதும்.. "
" சேலத் துணி மாதிரி எவ்வளோ மெல்லிசா ஊத்தியிருக்கா... அந்தப் பொண்ணு.. "
அந்தப் பொண்ணு என்றால் வீட்டிற்கு வந்திருக்கின்ற மருமகள் ஜனனி... ஐந்து நாட்கள் தான் ஆகின்றன.
தொண்ணூறுக்குப் பிறகு பிறந்ததுகள்.. ஆனதால் அங்கேயும் இங்கேயும் சொந்தம் சோலி எல்லாம் மிகவும் குறைவு.. மூன்று அழைப்புகளிலும் கலகலப்பாக பேசிச் சிரிப்பதற்கும், தலை வாழையில் உண்டு மகிழ்வதற்கும் அதிக ஆட்கள் இல்லை..
சீர் செய்வதற்குத் தெரியவில்லை.. உறவு முறை எனும் பந்தங்களும் தலைமுறை வாழ்வில் இல்லை..
இப்பொழுதே இப்படி என்றாம் இனி அடுத்தடுத்த தலைமுறைகளில் என்ன நடக்கும்?..
அதுதான் தெரியவில்லை.
" எல்லாம் வீட்ல சொல்லிக் கொடுத்திருக்கிற பழக்கம்..
நீயுந்தான் இத்தனை காலம் ஊத்து ஊத்து ன்னு தோசை ஊத்தறே... தோசையா அடையா.. ன்னு கண்டுபிடிக்க முடியாத மாதிரி..
கீழடியில வச்சி தான் ஆராய்ச்சி பண்ணனும்!.. "
இதைக் கேட்டதும் கௌரியம்மாளின் முகம் வாடி விட்டது...
" சும்மா சிரிப்புக்குத் தான் சொன்னேன்.. இதுக்குப் போயி.. நீ வளர்த்த உடம்பு இல்லையா இது.. இத்தன வருசம் நீ செஞ்சு போட்டதைத் தின்னுட்டு உன் கைப் பக்குவத்தக் கேலி செய்வேனா?.. " - மாணிக்கம் மனைவியைத் தேற்றினார்..
" அந்தப் புள்ள காதுல விழுந்தா என்ன நெனைக்கும்?.. என்னத்த செஞ்சாலும் பொம்பளையா பொறந்த பொறப்புக்கு மட்டும்
செம்மத்துல நல்ல பேரே கிடைக்காது.. சரி.. சரி... தோசை வைக்கவா எடுத்துக் கிட்டுப் போகவா.. "
" காஃபியா.. டீ யா...?.. "
" எதுவும் இல்லை... "
" ஏன்.. என்ன ஆச்சு?.. "
" பால் கெட்டுப் போச்சு.. "
" பாக்கெட் பால் தானே.."
" பாக்கெட் பாலு ன்னா கெட்டுப் போகக் கூடாது ன்னு இருக்கா?.. "
" வழக்கமா வாங்கற பால் தானே... "
" ஆமாமா... காலை காஃபிக்கு வேணும் ன்னு நேத்து ராத்திரி வாங்கின பாலு.. அப்புறந்தான் தெரியுது.. நேத்து மத்தியானத்துல இருந்து அடுத்தத் தெருவு ல கரண்டு இல்லாம இருந்தது ன்னு... கடையிலயே பால் கெட்டுப் போய் இருந்திருக்கு... அவன் காசு பார்த்துட்டான்... நமக்குத் தான் நட்டம்..."
கௌரியம்மாளிடம் இருந்து பெருமூச்சு..
சாப்பிட்டு முடித்த சிறு பொழுதுக்கெல்லாம் சட்டையை மாற்றிக் கொண்டு கையில் பிளாஸ்க்குடன் - முதல் தெரு பிள்ளையார் கோயில் வளாகத்தை நோக்கிச் சென்றார் மாணிக்கம்...
சின்ன கடைத் தெரு மாதிரி.. மருந்தகம் உணவகம் காய்கறிக் கடை எல்லாம் இருக்கின்றன..
காபி குடித்து விட்டு நாலு வடை நாலு பஜ்ஜி வாங்கிக் கொண்டால் போதும்... மனைவிக்கும் மருமகளுக்கும் ஆகும்... மாணிக்கத்தின் மனம் அவருக்கு முன்னே ஓடியது..
இங்கே வீட்டில் -
" இன்னிக்கு என்ன குழம்பு வைக்கட்டும் அத்தை? . "
" உனக்கு எல்லாக் குழம்பும் வைக்கத் தெரியுமாம்மா!.. "
" தெரியுங்க அத்தை.. நேற்றைக்கே நான் சமைக்கிறேன் ன்னு சொன்னேன்.. "
" சரிம்மா ஜனனி... இன்னிக்கு காலிபிளவர் குருமாவும் பனீர் மசாலாவும் வெச்சுடு.. நாளைக்கு உருண்டைக் குழம்பு வெச்சுக்கலாம்... "
" சரிங்க அத்தை... அப்படியே செஞ்சிடலாம்... "
" ஏம்மா பத்து மணிக்கு காப்பி குடிக்கிற பழக்கம் இருக்கா உனக்கு?.. "
என்று கேட்பதற்கும் மாமனார் வடை பஜ்ஜி காஃபியுடன் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது..
கௌரியம்மாள் கைப்பையை வாங்கி சூடாக இருந்த வடை பஜ்ஜியை மூவருக்கும் பகிர்ந்தார்..
காஃபியுடன் பொழுது நகர்ந்து கொண்டிருந்த போது -
" மாமா.. ஒரு வார்த்தை சொல்வேன்... தப்பா எடுத்துக்கக் கூடாது.. " - என்றாள் ஜனனி..
" சொல்லும்மா... " மாணிக்கத்திற்கு ஆவலாகி விட்டது...
நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்து கொண்டார்...
" இது சொந்த வீடு தானே!... "
" ஆமாம்... "
" அப்போ நாம ஒரு பசு வளர்ப்போமா.. நமக்கும் பால் பிரச்னை தீரும்.. "
" பாலுக்காக பசு மாடா?... பாக்கெட் பால் காலத்துல இதெல்லாம் சரிப்பட்டு வருமா?.. "
" பாக்கெட் பால விட இது நல்லதாச்சே.. பாக்கெட் ல பால் வர்றதுக்கு முன்னால இப்படித் தானே இருந்தோம்... பால் ன்னா காஃபி மட்டும் தானா... தயிர் மோர் வெண்ணெய் நெய் எல்லாம் கிடைக்குமே!... "
" கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு... "
" நம்ம தேவைக்கு அது வாங்கலாம்.. இது வாங்கலாம்.. ஆரோக்கியத்தை வாங்க முடியுமா?.. "
' முடியாது!.. "
" அதுக்காகத் தான்!.. அதுவுமில்லாம இங்கே வசதி வாய்ப்பு இருக்கறதால தான் இந்த யோசனை.. "
ஜனனியிட்ம் புன்னகை..
கௌரியம்மாளிடம் மகிழ்ச்சியும் வியப்பும்..
" ஆனா மாட்டை வளர்க்கணுமே.... "
" ஏன்?... நான் இருக்கிறேனே... ரெண்டு வருசத்துக்கு முன்னால வரைக்கும் எங்க வீட்லயும் மாடு இருந்ததே... "
" பரம்பரையா மாடு வளர்த்தவங்களே விட்டுட்டு ஓடற கலி காலம் மா இது.. உனக்கு எதுக்கு தேவையில்லாத கஷ்டம்?.. நீ தான் படிச்சிருக்கியே இஷ்ட்ப்பட்ட வேலைக்குப் போய்ட்டு வா.. நாங்க எதுவும் சொல்லலை.. "
" வீட்டுக்கு வடக்கால காலி இடம் கிடக்கு...அந்தப் பக்கமா வாய்க்கால்.. பின்னாலயும் வீடு இல்லை.. இதப் பார்த்ததும் தான் எனக்கு மாடு வளர்க்கணும்ன்னு ஆசை வந்தது... யாரோட இடம் மாமா அது?.. "
" நம்மளோடது தாம்மா.. இந்த மனைப் பிரிவுல இது தான் கடைசி.. வந்த விலைக்கு வாங்கிட்டேன்... "
ஜனனிக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி...
" அப்போ நாளைக்கே மாடு வாங்கிடலாம்.. " - கை கொட்டிச் சிரித்தாள்..
' இந்தக் காலத்தில் இப்படியுமா!... ' பெரியவர்கள் இருவருக்கும் வியப்பு..
" எங்கேன்னு போய் மாடு வாங்கறது?.. "
" சரி ன்னு சொல்லுங்க.. ரெண்டே நாள் ல பசு வந்து நிற்கும்.. "
" மாடுங் கன்னும் தானே.. "
" ம்ஹூம்.. இளங்கன்றாக வந்து இங்கே வளர்ந்து ஆளாகி பலன்பட்டு கன்னு போடணும்.. அதுதான் நல்லது.. '
" சரிம்மா... உன் இஷ்டம்!.. " பெரியவர்களிடம் மகிழ்ச்சி ததும்பியது...
" மருமகள்னா மகாலக்ஷ்மி ன்னு சொல்வாங்க.." - என்றபடி திருஷ்டி கழித்தார் கௌரியம்மாள்..
ஃஃஃ
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குஅன்பின் அனைவருக்கும் நல்வரவு..
பதிலளிநீக்குவரவேற்போம்.
நீக்குகடைசிப் பகுதிலே, மருமகள்னா என்று திருத்திடுங்க.
பதிலளிநீக்குஜீ வி அண்ணா, அது பேச்சு வழக்கில் 'மருமக' என்று சொல்வதுண்டே அப்படி....
நீக்குஅதனாலதான் 'ன்னா' வைத் தள்ளிக் கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்,
'மருமக' இதை மட்டும் single inverted comma வில் கொடுத்தா போதும்னு நினைக்கிறேன்.
கீதா
பேச்சு வழக்கில் 'மருமகன்னாலே' சரியாக இருந்ததால் அப்படியே விட்டிருந்தேன். ஆனாலும் இப்போது மாற்றி விட்டேன்.
நீக்குஜூவி அண்ணா அவர்களுக்கு நல்வரவு..
பதிலளிநீக்கு//மருமக... ன்னா.. //
பதிலளிநீக்குஎன்று வந்திருக்க வேண்டும்...
கண்ணாடி இன்னும் சரியாக அமையாததால் ஏற்பட்ட பிழை.
///மருமகள் ..
ன்னா... ///
என்று அமைவதுவும் சிறப்பே...
அன்பின் ஸ்ரீராம் தயவு செய்து கவனிக்கபும்..
நன்றி..
//மருமகள்னா... ///
நீக்குஎன்று அமைவதுவும் சிறப்பே...
செய்து விட்டேன்.
நன்றி நன்றி
நீக்குகதை நன்று, துரை அண்ணா.
பதிலளிநீக்குகீதா
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ
இடம் இருக்கறதுனால இந்தச் சிந்தனை ஓகே. கணினித் துறையில் மற்றும் வேறு சில கார்ப்பரேட் துறைகளில் வேலை செய்பவர்கள் கூட அத்தொழிலை விட்டு விவசாயத்திற்குத் திரும்புகிறார்கள்தான். வாழ்க்கை சுழற்சி முறையில் இயங்கும்.
பதிலளிநீக்குஆனால் வயல்வெளிகள், வெற்று மனைகள் குறைந்து வரும் காலத்தில், .... வாழ்க்கை முறை மாறி வருவதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்...இதில் நம் வாழ்வியலுக்கு உகந்ததாக என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்....
இது கதைக்கு அப்பாற்பட்ட என் தனிப்பட்ட சிந்தானை.
கீதா
கணினித் துறை மற்றும் வேறு சில கார்ப்பரேட் துறைகளில் வேலை செய்பவர்கள் கூட அத்தொழிலை விட்டு விவசாயத்திற்குத் திரும்புகிறார்கள்தான். வாழ்க்கை சுழற்சி முறையில் இயங்கும்.///
நீக்குஉண்மை தான்...
ஆரோக்கியமச்ன சுய சார்புடைய வாழ்க்கை முறையை மக்கள் சிந்திக்கத் துணிந்து விட்டார்கள்..
வயல் வெளிகளை வீட்டு மனைகளாக்குவதைத் தடை செய்யும் காலம் நெருங்குகின்றது..
இனி வரவிருக்கின்ற பத்து இருபது ஆண்டுகளில் விவசாயமும் பசு வளர்ப்பும்
தழைக்கும்..
இதுவும் கதைக்கு அப்பாற்பட்ட என் தனிப்பட்ட சிந்தனை. சீர் என்பது என்னைப் பொருத்த வரை எதிர்பார்ப்புடன் வருவதால் உறவு முறைகளை முறிக்கும் ஒன்று. எதிர்பார்ப்பை உருவாக்கும் ஒன்று. நம் வாழ்வியல் தத்துவம் சொல்வது எதிர்பார்ப்புகள் கூடாது என்று. அதுதான் சிறந்த ஆன்மீகத்தை நோக்கிப் பயணிக்கும் வாழ்வியல்.
பதிலளிநீக்குஎதிர்பார்க்கும் சீர், அல்லது வழி வழியான பழக்கம் அது இது என்று சொல்லப்படும் சீர் செய்ய முடியாத சூழல் எனும் போது, அதுதான் குடும்பத்தின் அமைதியைக் கெடுக்கும் ஒன்று. அதை விட முக்கியம் அன்பும், குணமும் உறவும்....என்பது என் தனிப்பட்ட சிந்தனை.
கீதா
இப்போதைய நடுத்தர வர்க்கத்தில் சூழலுக்கு ஏற்ப சீர் செய்ய இயலாத குடும்பங்கள் என்பது மிகவும் குறைவு.. எல்லாரும் வசதி வாய்ப்புகளுடன் தான் இருக்கின்றனர்...
நீக்குஇப்படி ஜனனி மாதிரியான மருமகள்களையும் மாணிக்கம் மாதிரியான குடும்பங்களையும் காண்கின்றேன்... சற்று முன் பின் இருக்கலாம்... எங்கும் சிறப்பே..
மக்கள் ஆரோக்கியமான சுய சார்புடைய வாழ்க்கைக்குத் தயாராகின்றனர்..
அன்பின் வருகைக்கும் சிறப்பான கருத்துரைகளுக்கும் மகிழ்ச்சி..
நன்றி சகோ..
சிறப்பான கதை இதில் மகன் வரவேயில்லையே.....
பதிலளிநீக்குமகன் காலையிலேயே அலுவலகம் சென்று விட்டார்...
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஜி
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதைப் பகிர்வு மிக அருமையாக உள்ளது. காலங்களுக்கு ஏற்ப மரியாதை செலுத்தும் நல்ல குணவதியான மருமகள் ஒரு குடும்பத்தில் அமைவது சிறப்புத்தான். உறவு என்பதில் கூட விரிசல் காணுவது இக்காலத்திய மரபுகளில் சகஜமாகி விட்டது. அசலோ, உறவோ, தன் கணவனின் பெற்றோர்களையும், உறவுகளையும் தன் குடும்பமாக கருதும் ஒரு பெண்களை கையெடுத்து வணங்க வேண்டும்.
இக்கால முறைப்படி சேலைத்துணி போலவும் தோசை வார்க்க தெரிந்த அந்த மருமகளுக்கு, அந்தக்கால இயல்புபடி, வீட்டிற்கு நல்ல பால் கிடைக்க வேண்டுமெனவும், அனைவரும் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமெனவும், ஒரு பெரும் பொறுப்பை வலிய வந்து சுமந்து கொள்ளும் சிந்தனையுடனான அந்த பெருந்தன்மையை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். வாழ்க அந்த புது மருமகள்.
தன் இயல்புபடி நல்லதொரு கதையை தந்த சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// அந்தப் பெருந்தன்மையை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். வாழ்க அந்த புது மருமகள்.//
நீக்குஅன்பின் வருகையும்
இனிய கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..
பால் பொங்கி வந்ததைப் போல கதை..
பதிலளிநீக்குஇன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாம்..
கண்ணாடி இன்னும் சரியாக அமையாததால் கொஞ்சம் சிரமம்.
தட்டுத் தடுமாறி தட்டச்சு செய்து -
ஜனவரியின் முதல் வாரம் கிடைக்குமா என்று கேட்டதற்கு வருகின்ற வாரத்திலேயே போட்டு விடலாம் என்ற பதில் கிடைக்க -
அந்தக் கதை அப்படியே இருக்கின்றது...
இந்தக் கதையை
ஒரு மணி நேரத்தில் தட்டச்சு செய்தேன்..
எப்படியோ இந்தச் செவ்வாய் மகிழ்ச்சிக்கு உரியதாகி விட்டது...
வாழ்க தமிழ்
வணக்கம் சகோதரரே
நீக்கு/இந்தக் கதையை
ஒரு மணி நேரத்தில் தட்டச்சு செய்தேன்../
ஆகா.. இந்தச் செய்தியை படிக்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா? உங்களின் அபார திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வணக்கங்கள் சகோதரரே.
ஆம்.. சில சமயங்களில் எனக்கே கூட இந்த மாதிரியான நிகழ்வுகள் அதிசயமாக நடந்துள்ளது. அதுவே எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும். (அட....!உனக்குள்ளும் இத்தனை தெளிவா என என் மனது கேலி செய்து மகிழும். .) ஆனால், சில பதிவுகள் (கதைகள்கூட ) எழுத எனக்கு பல மாதங்கள் ரப்பராக இழுக்கும். அதற்குள் என்னுள் உதித்த கற்பனைகள் சிதறு தேங்காயாக உடைந்து போய் வேறு விதமான முடிவுகளை அக்கதை சந்தித்து விடும். ஹா ஹா ஹா.
உங்களின் மனம் திறந்த இந்த கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்த மாதிரி நிகழ்வுகளை கற்பனைக் கதைகள்லதான் பார்க்கமுடியும்னு நினைக்கிறேன். கதை நன்றாக இருந்தது
பதிலளிநீக்குகௌதமன் சாரிடம் படம் கேட்டு வாங்கிக் கோர்க்காத்து ஒரு குறை.
நிஜத்தில் இப்படியெல்லாம் நடக்கின்றது..
நீக்குநமக்குத் தான் தெரிய வில்லை..
தையல் கலை தெரிந்த பெண்ணால் வீட்டிற்கு சில ஆயிரங்கள் வருமானம்... மேலும் கூடுதல் வருமானம்...
மார்கழியாக இருக்கின்றது.. அடுத்து வரும் மூன்றாம் நாள் பசுக்களுக்கு உரியதாயிற்றே
கதை இப்படி இருக்கட்டும் என்று தான் அமைத்தேன்..
தவறென்றால் பொறுத்துக் கொள்க
காலைல டிபன் என்று வைத்துக்கொண்டாலும், மதியச் சாப்பாட்டிற்கு காலிஃப்ளவர் குருமாவும் பனீர் மசாலாவும் வைக்கும்படியாகவா காலம் மாறிவிட்டது?
பதிலளிநீக்குஇந்த சாம்பார், புளிக்குழம்புலாம் கடைகளில்தானா?
அன்பின் நெல்லை அவர்களுக்கு நல்வரவு
நீக்குமதியச் சாப்பாட்டிற்கு காலிஃப்ளவர் குருமாவும் பனீர் மசாலாவும்
இது இந்தப் பக்கம் எல்லாம் சாதாரணம்..
மகிழ்ச்சி.. நன்றி..
உடல் நலத்திற்காக தற்போதைய செயற்கை பனீர் எங்கள் வீட்டில் ஒதுக்கப்பட்டு விட்டது...
நீக்குகதை நன்றாக இருக்கிறது. மாட்டுபொண் மாடு வளர்க்க ஆசை படுகிறார். படிப்பு , சமையல் என்று மட்டும் அல்ல சகலகலாவல்லியாக இருக்கிறார். அந்த காலத்தில் எழுதபட்ட திருவிளக்கு வழிபாட்டு பாடலில் "பட்டி நிறைய பால் பசுவை தாரும் அம்மா, கொட்டைகை நிறைய குதிரைகள் தாரும்மா" என்று பாட்டில் இருக்கும் . அது தான் சொத்து.
பதிலளிநீக்குநல்ல மருமகள் அமைந்து இருப்பது மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
// நல்ல மருமகள் அமைந்து இருப்பது மகிழ்ச்சி //
நீக்குஅனைவரது இல்லத்திலும் இப்படியே அமையட்டும்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி
வாழ்க வளமுடன்
// கௌதமன் சாரிடம் படம் கேட்டு வாங்கிக் கோர்க்காத்து ஒரு குறை...//
பதிலளிநீக்குஉண்மை தான்..
அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்