அறியா எண்ணிலிருந்து அந்த ஃபோன் வந்தபோது, எடுத்து பேசியதும் ஆடித்தான் போனேன். 'அறியா எண் ஃபோன் என்றால் ஏன் எடுத்தே?' என்பீர்கள். காரணம் பின்னால் வரும்.
"இன்டேன்லேருந்து பேசறேன். உங்க இன்டேன் கனெக்ஷன் சம்பந்தமா பயோமெட்ரிக் எடுக்கணும்.. எப்போ வரலாம்?"
இது என்னடா ஸ்ரீராமுக்கு வந்த சோதனை!
"பயோமெட்ரிக்கா? என்ன செய்வீங்க?"
"உங்கள் ஆதார் கார்ட் செக் செய்து கண் இமைகளை போட்டோ பிடிப்போம்"
"யார் நீங்கள்?"
"சொன்னேனே... இன்டேனுக்காக.."
"இதுவரை இப்படி எல்லாம் வந்ததில்லையே... உங்கள் ஆபீஸ் எங்கே இருக்கிறது?"
"போரூர்"
"சரி... உங்கள் ஆபீஸ் அட்ரஸ் சொல்லுங்கள்.. நானே அங்கு வந்து விடுகிறேன்"
"அது முடியாது ஸார்.. நாங்கள் அலைந்து கொண்டே இருப்போம்..."
"இதோ பாருங்க... திடீர்னு ஒரு ஆள் தெரியாத நம்பரிலிருந்து ஃபோன் செய்து என் ஆதார் எண்ணையும், விரல் ரேகை, கண் இமை போட்டோ எடுப்பேன் என்று கேட்டால் நான் தர முடியாது.. எனக்கு சந்தேகமாயிருக்கிறது..."
"நீங்கள் உங்கள் Gas ஏஜென்ஸியில் கேட்டுக் கொள்ளுங்கள் ஸார்.. நம்பர் தருகிறேன்"
"கொடுங்க..."
ஆதாரைக் கொடுங்க.. அடுப்பங்கரைக்கு வர்றேன்னுகிட்டு...
கொடுத்தார். "கேட்டு வைங்க.. கேட்டுட்டு எனக்கு கால் பண்ணுங்க"
வைத்து விட்டார். அந்த எண்ணை எடுத்துக்கொண்டு இளையவனிடம் சென்றேன். அவன்தான் ட்ரூ காலர் வைத்திருந்தான். அவன் அந்த எண்ணை வாங்கி போட்டதும் ட்ரூ காலரில் எந்த விவரமும் காட்டாமல் தனசேகர் என்று (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மட்டும் காட்டியது.
அவர் தந்த எங்கள் காஸ் ஏஜென்ஸியின் எண்ணுக்கு அழைத்தேன். அந்த எண்ணையும் ட்ரூ காலரில் போட்டு ஏஜென்ஸி நம்பர்தான் என்று தெரிந்து கொண்டிருந்தேன். மேலும் அது ஒரு லேண்ட்லைன் நம்பர். யாரும் எடுக்கவில்லை.
சில நாட்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.
சைபர் க்ரைம் காரர்கள் எவ்வளவு எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தாலும், பொதுமக்களும், ஏன், போலீஸ் டிபார்ட்மெண்ட்காரர்களுமே கூட ஏமாந்து கொண்டிருந்த நேரம். ஒரு நீதிபதியையே ஏமாற்றினார்கள். இன்னொரு அரசு பெண் அதிகாரியை டிஜிட்டல் அரெஸ்ட்டில் அரைநாளுக்கும் மேல் வைத்து நிர்வாணப்படுத்தும் அளவு சென்றார்கள்.கிரேசி மோகன் நாடகங்களை இயக்கும் இயக்குனர் மௌலியின் சகோதரர் காந்தன் அவர் அனுபவத்தில் கிட்டத்தட்ட ஏமாந்துபோய், அதிர்ச்சியில் உறைந்து அக்கடைசி நொடியில் விடுபட்டு மக்களுக்கு விழிப்புணர்வாக ஒரு காணொளியை வெளியிட்டார்.
'அவர்கள்' நடத்தும் நாடகத்திலே 'இவர்கள்' எல்லாமே பாத்திரங்கள் ஆனார்கள் என்றால் நான் எம்மாத்திரம்! எனவே டபுள் மடங்கு எச்சரிக்கையாக இருந்தேன். தெரியாத, அறியாத எண்ணிலிருந்து சாதாரண போன் வந்தாலே எடுக்க மாட்டேன். போதாக்குறைக்கு என் போன் வேறு ACT. Airtel Health Insurance . போன்ற இடங்களிலிருந்து ஃபோன் வந்தாலே ஸ்பாம், ஃபிராட், பொட்டன்ஷியல் ஃபிராட் என்று தலைப்பிட்டுக் காட்டி பயமுறுத்தும். இந்த நிலையில் வாட்ஸாப் வீடியோ கால் வந்தால்? நான் ஏன் எடுக்கிறேன்?
அன்று தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸாப் வீடியோ கால் வந்ததும் கால்கள் நடுங்கிப் போனேன். கைகள் நடுங்க ஜாக்கிரதையாக அதை எடுத்து ஓரமாக டிஸ்டர்ப் செய்யாமல் வைத்தேன். தப்பித்தவறி கைதவறி கால் அட்டென்ட் ஆகிவிட்டால் என்ன ஆவது என்கிற பயம். என் மனக்கண்ணில் போலீஸ் உடை அணிந்த விறைப்பான டெல்லிவாலா ஒருவர் என்னை ஹிந்தியில் மிரட்டக் காத்திருந்தார். அவர் கையில் என் சம்பந்தப் பட்ட கட்டு காகிதங்கள் இருந் தன.
என் ஃபோன் திரையில் 'உன்னை அழைக்கும் இந்த நம்பர் உன் காண்டாக்ட் லிஸ்ட்டில் இல்லை' என்று கூடுதல் தகவல் சொல்லிக் கொண்டிருந்தது. பக்கத்தில் போலீஸ் ஸ்டேஷன் எங்கிருக்கிறது என்று மனதுக்குள் யோசித்துப் பார்த்தேன்.
அது அடித்து முடிக்கும் வரை அதையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
அவர்களும் விடுவதாக இல்லை என்று தெரிந்தது. அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டு மூன்று முறை அடித்தார்கள்.
நான் ஏன் எடுக்கிறேன்?! பயந்து கொண்டு எடுக்கவே இல்லை. பேசாமல் விட்டுவிட்டேன். என்னுடைய முன் ஜாக்கிரதையை நானே மெச்சி கொண்டேன்.
"உஷார்டா நீ..."
அடித்து ஓய்ந்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆனதும் ஃபோனுடன் மகன்களிடம் சென்றேன். என் முன்னெச்சரிக்கையைச் சொன்னேன்.
மகன்களும் கவனமாகக் கேட்டுக் கொண்டார்கள். மருமகள் உள்ளேயிருந்து வந்தாள்.
"அப்பா... பஹ்ரைனிலிருந்து என் சித்தப்பா உங்களுக்கு வாழ்த்து சொல்ல வாட்ஸாப் கால் பண்ணினாராம். நீங்க எடுக்கவே இல்லையாம்... இதோ லைன்ல இருக்கார்" என்றாள்.
"அவர் நம்பர் என்கிட்டே இல்லையேம்மா... யாரோன்னு நினைச்சு எடுக்கலை.."
வழியும் அசடைத துடைத்துக்கொண்டே ஃபோனை வாங்கி பேசினேன். முன்னரே சொல்லிவிட்டு அழைத்திருந்தால் உஷாராய் எடுத்திருப்பேன். காரணத்தை அவரிடமும் சொன்னேன். சிரித்தார்.
பிளாஷ்பேக் முடிகிறது. நிகழுக்கு வருவோம்... இன்டேன்.....
==================================================================================================
ஆண்பாவம் - Face Book பதிவொன்றிலிருந்து அப்படியே எடுக்கப்பட்டது.
"என் சாவுக்கு பிறகு கூட எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், என் உடலை எரித்து அதன் சாம்பலை ஜான்பூர் நீதிமன்றத்தின் சாக்கடையில் கலந்து விடுங்கள், அந்த அவமானம் காலத்திற்கும் சாட்சியாக இருக்கட்டும்"
அதுல் சுபாஷின் இறுதி வரிகள், கோடிக்கணக்கான மக்களின் மனசாட்சியை உலுக்கி எடுக்கும் வரிகள்.
அதுல் சுபாஷ் பெங்களூரில் ஒரு AI Engineer, வெல் எஜுகேடட்,
ஒரு பெண் நீதிபதி, அவரின் மனைவி, அவரின் மச்சினன், மாமியார், அந்த மனைவியின் அங்கிள்,
என்னத்தான் நடந்தது, !?
இவருக்கும் இவர் மனைவிக்கும் பிரச்சினை, அவரின் மனைவியும், மாமியார், மச்சினன், என அவரை மொத்த குடும்பமும் மிக மோசமான முறையில் கொடுமைப்படுத்தி உள்ளது.
லட்சகணக்கில் மனைவிக்கும் அவர் குடும்பத்தாருக்கும் அவர் உதவியுள்ளார், எந்தளவுக்கு என்றால் மனையின் தாய் தந்தை சொந்தமாக வீடு வாங்கும் அளவுக்கு அவரிடம் அவர்கள் பிடுங்கியுள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவர் அதை அவர் நிறுத்தி விடுகிறார், கோபம் கொண்ட மனைவி, அவரிடமிருந்து விவாகரத்து பெற போவதாக மிரட்டி குழந்தையுடன் சொந்த ஊரான உத்தரபிரதேசத்திற்கு சென்று விடுகிறார்.
அதன் பிறகு தான் அவருக்கு மன உளைச்சலை செய்யும் வேலைகளில் அந்த மனைவி ஈடுப்படுகிறார்.
அவர் மீது மிக மோசமான எட்டு பொய் வழக்குகள் பதியப்படுகிறது,
கணவர் அடித்து கொடுமைப்படுத்துகிறார், வரதட்சணை கொடுமை செய்துள்ளார், மாமனாரை கொலை செய்தார், இயற்கைக்கு மாற்றமான முறையில் செக்* செய்தார், என ஏகப்பட்ட பொய் வழக்குகள் பதியப்படுகிறது.
ஒவ்வொரு வழக்கிற்கும் பல மாதங்கள் பெங்களூருக்கும் உத்திரபிரதேசத்திற்கும் அலைகிறார்,
ஒவ்வொன்றையும் பொய் என நிரூபிக்கிறார், ஆனால் இவர்கள் வழக்கு போடுவதை நிறுத்தவில்லை,
நாற்பதுக்கும் அதிகமான முறை ஜான்பூர் நீதிமன்றத்தால் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த பெண் நீதிபதியிடம் வாதாடுகிறார், மாமனார் உடல்நிலை மோசமாக இருந்தால் தான் திருமணமே விரைவாக நடத்தினார்கள், அவர் இயற்கையாக மரணித்ததை குழப்பி கொலை குற்றம் சாட்டினார்கள்,
இயற்கைக்கு மாறாக எந்த உடலுறவையும் கொள்ளவில்லை, அதற்கான எந்த மருத்துவ ஆதாரமும் சமர்பிக்கப்படவில்லை,
மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதாக எந்த காயமும் ஆதாரமும் இல்லை,
வரதட்சணை கொடுமை செய்தேன் என்கிறார்கள், அது உண்மையில்லை, லட்சக்கணக்கில் அவர்களுக்கு நான் உதவியுள்ள ஆதாரம் தன்னிடம் உள்ளது,
என் ஒரே பிள்ளையை என் கண்ணில் காட்டாமல் நீதிமன்றத்திற்கு கூட அழைத்து வரமால் எங்க ஏங்க வைத்து விரட்டுகிறார்கள்,
என் மீதுள்ள எல்லா வழக்குகளும் நீதிமாக விசாரித்தால் பொய் என தெரியும்,
தயவு செய்து வழக்குகளை தள்ளுப்படி செய்யுங்கள், இப்படி மன ரீதியாக பிரஷ்ஷர் கொடுப்பதால் தான் பல ஆண்கள் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள் என கண்ணீர் வடிக்கிறார் சுபாஷ்,
அதற்கு நீதிமன்றத்திலே அவரின் மனைவி அப்போ ஏன் உயிர் வாழ்கிறாய் செத்து தொலைய வேண்டியது தானே என சொல்கிறார், அதற்கு அந்த பெண் நீதிபதியும் ஆமோதிப்பது போல் சத்தமாக சிரிக்கிறார்.
பின்பு நீதிபதி ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு இந்த வழக்கை எல்லாம் முடிப்பதாக டீலிங் பேசுகிறார், இல்லை எனில் வழக்கிற்காக அலைய வேண்டியது தான் என மிரட்டுகிறார்.
தான் எந்த தப்பும் செய்யாமல், நேர்மையாக வரி கட்டி உழைத்து சேர்த்த பணத்தை நீதிபதியும் மனைவியும் அவரின் குடும்பத்தார்களும் இப்படி பேய்களாக தன்னை சூழ்ந்து பணத்திற்காக எவ்வளவு மன உளைச்சலை தருகிறார்களே என கவலைக்கொள்கிறார்.
மேற்கூறிய விஷயங்களை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வீடியோ மற்றும் நாற்பது பக்கங்களுக்கு கடிதத்தை எழுதி வைத்து சுபாஷ் தற்கொலை செய்துக்கொள்கிறார்,
வடக்கு நீதிமன்றம் இந்திய சட்டப்படி நடந்துக்கொள்ளவில்லை என்றும், பெண்களுக்கு வழங்கப்பட்ட பிரதேயக சட்டங்கள் தவறாக வழி நடத்தப்படுகிறது என்றும், அப்பாவி ஆண்களுக்கு இந்த சட்டம் நீதியை பெற்று தரவில்லை என்றும், இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றும் கூறி அவர் உயிரை விட்டுள்ளார்.
இந்தியா எங்கும் இதை குறித்த விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளது.
குடும்ப வன்முறைக்கு பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் நடக்கிறது, இவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி போராடா யாரும் தயாராக இல்லை என்பதே உண்மை.
======================================================================================
நியூஸ் ரூம்
பானுமதி வெங்கடேஸ்வரன்
- டில்லியில் கடும் குளிர், பனி மூட்டம்; வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிவு
- ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்; விரைவில் அறிவிக்கிறது அரசு சென்னை : தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, 2013ம் ஆண்டு, 1.8 கி.மீ., துாரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய், காத்திருப்பு கட்டணம் ஐந்து நிமிடத்துக்கு 3.50 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது.
- புதுடில்லி,:பயண முகவரால் ஏமாற்றப்பட்டதை அடுத்து, 22 ஆண்டுகளாக பாகிஸ்தானில் வசித்து வந்த இந்திய பெண், நேற்று தாய் நாட்டிற்கு திரும்பினார்.
-
- முன் அனுமதியின்றி பணிக்கு வராத 36 அரசு டாக்டர்கள்! கேரளாவில் டிஸ்மிஸ்.
- எங்களுக்கு வரி விதித்தால், நாங்களும் வரி விதிப்போம்; எச்சரிக்கிறார் டிரம்ப்!
- விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி அபராதம்!
- பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே படைச்சேரி என்ற இடத்தில் ஜானகி, 84, என்பவரது வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற யானை, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த அரிசி உட்பட உணவு பொருட்களை எடுத்து ருசித்துள்ளது. ஒரு மணி நேரம் வீட்டிற்குள் யானை நின்றிருந்த நிலையில், அருகில் இருந்த அறையில், ஜானகியும், பேத்தி ரேஷ்மாவும், பீதியுடன் கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்தனர்.
- லண்டன்: தண்டி யாத்திரையின் பொழுது மகாத்மா காந்தி அணிந்திருந்த மாலையை ஏலத்தில் எடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. ஆனால் இந்திய அரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரும்பான்மையான கலைப் பொருள்கள் நல்ல விலைக்கு ஏலத்தில் எடுக்கப் பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- பெங்களூரு: தன் மகன் திருமணத்தன்று உடுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய 35,000 ரூபாய் பெறுமானமுள்ள பனாரஸ் பட்டுப் புடவையோடு இன்னும் இரண்டு பட்டுப் புடவைகளை ஜெயநகரில் உள்ள Band Box என்னும் உலர் சலவையகத்தில் சலவை செய்து, ரோல் பிரஸ்ஸிங் செய்வதற்காக கொடுத்திருக்கிறார் ஒருவர். ஆனால் பனாரஸ் புடவை கிழிந்த நிலையில் கொடுக்கப் பட்டிருக்கிறது. இதனால் மனமுடைந்த அனுபமா பட் என்னும் அந்தப் பெண்மணி, பலமுறை அந்தக் கடையை தொடர்பு கொண்டும் அவருக்கு எந்த நஷ்ட ஈடும் வழங்கப்படாததால், கன்ஸ்யூமர் கோர்ட்டின் உதவியை நாடிய அவருக்கு 45000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் என ஒரு வருடத்திற்குப் பிறகு தீர்ப்பு கிடைத்திருக்கிறது.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திடம் இருந்து கிட்டத்தட்ட 346 கோடி ரூபாய் மதிப்பிலான டீசல் பேருந்துகளை தயாரித்து, விநியோகிப்பதற்கான ஆர்டரை பெற்றுள்ளதாக அசோக் லேலண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
- தனியார் மருத்துவமனைகளில் மத்திய,மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுப்பதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
- திருச்சி மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் டாட்டூ போடும் நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். அவர் கண்ணுக்குள் ஊசி போட்டு கண்ணின் நிறத்தை மாற்றுவது, நாக்கின் நுனியில் கட் செய்து இரண்டு நாக்குகள் போல தோன்றச் செய்வது என்பவற்றை மும்பை சென்று கற்றுக் கொண்டு தன்னுடைய நாக்கை பிளவு படுத்திக் கொண்டு அதை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்ததோடு, தன் நண்பர் ஜெயராமன் என்பவருக்கும் செய்திருக்கிறார். உயிருக்கு ஆபத்தான இந்த செயலில் ஈடுபட்ட இந்த இருவரும் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.
- டில்லி: ரயில் நிலையம் செல்வதற்காக ஊபர் டாக்ஸி புக் பண்ணிவிட்டு காத்திருந்த பெண்ணுக்கு,"உன்னைக் கடத்தப் போகிறேன்" என்று டிரைவரிடமிருந்து மெசேஜ் வர, பயந்து வீட்டிற்குச் சென்ற அவர் ஊபரை கான்சல் செய்துவிட்டு, அந்த டிரைவர் அனுப்பிய மெசேஜை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். ஆங்கில மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழையும் இது நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்களாம்.
=================================================================================================
ஒரு தொழில்நுட்ப ஆர்வலர் என்கிற வகையில் சமீபத்தில் சந்தைக்கு அறிமுகமாகி உள்ள மஹீந்திரா BE6E எலக்ட்ரிக் கார் அடியேனை அசர வைக்கிறது. டெஸ்லா மற்றும் BYD வரிசையில் INGLO பிளாட்ஃபார்மில் களம் இறங்கி உள்ள ஒரு இந்திய கார் என்கிற வகையில் நம்மை பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
இந்த காரின் ஆராய்ச்சிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை மஹீந்திரா சிட்டியில் உள்ள உலகத்தரம் வாய்ந்த சோதனை மற்றும் ஆராய்ச்சி கூடத்தில் முழுக்க முழுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது நமக்கெல்லாம் பெருமை. மேலும் இதற்கு தலைமை தாங்கி இதை உருவாக்கியது வேலுச்சாமி எனும் இந்திய தமிழர்.
இந்த காரின் பேட்டரியை வெறும் இருபது நிமிட சார்ஜில் எழுபது முதல் 80 சதம் வரை சார்ஜ் செய்து விடலாம் என்பதுதான் ஹைலைட். இதன் பாட்டரியை உருவாக்க சீனாவின் byd நிறுவனத்தின் உலக பிரசத்தி பெற்ற பிளேடு பாட்டரி செல்கள் மட்டும்தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் 2026 முதல் வோல்ஸ் வேகனோடு ஒப்பந்தப்படி ஒருங்கிணைந்த பாட்டரி செல்களை இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளார்கள். இந்த வாகனம் சுமார் 80 கிலோவாட்டிற்கு, மிகப்பாதுகாப்பான லித்தியம் ஃபெரோ பாஸ்பேட் பேட்டரிகளை பயன்படுத்துகிறது.
இந்த கார் தயாரிப்பில் நூற்றுக்கணக்கான புதிய புதினங்கள் உருவாகி, அவை பேடண்டுகளை பெற்றிருக்கிறது.
இதில் மிக அற்புதமான ஒரு உருவாக்கம் என்றால் அதன் செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன்தான். சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் சென்று திரும்பினால் கூட வாகனத்திற்குள் எந்த மாற்றமும் தெரியாது. அதிநவீன ஸ்டியரிங் சிஸ்டமும் சொகுசு பயனத்திற்கு துணை நிற்கிறது. மேலும் மிகச்சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார் இது.
காரின் ஒவ்வொரு பகுதியையும் பார்த்து பார்த்து பல வல்லுனர்களின் ஆலோசனைகளோடு, செதுக்கி உள்ளனர். உதாரணத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் சென்று வாகனத்தின் சவுண்ட் சிஸ்டம் டிசைனிங்கில் பல ஆலோசனைகளை பெற்றதாக சொல்கிறார்கள்.
இந்த காரை உலகத்தரம் வாய்ந்த ஒரு சொகுசு காராக, மிக வேகமாக சார்ஜ் செய்துக் கொண்டு,
500 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கும் வகையில், அதே சமயத்தில் இந்தியர்கள் வாங்கும் அளவிற்கு விலையில் கிடைக்கச் செய்வதுதான் தாரக மந்திரம் என்கிறார் திரு வேலுச்சாமி அவர்கள். மேலும் ஏகப்பட்ட சென்ஸார் மற்றும் AI தொழில்நுட்பத்தோடு இந்த காரே ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் எனலாம்.
இந்த வாகனத்தின் வடிவமைப்பில், தலைமை பொறியாளரான டாக்டர் விக்ரமன் அவர்களின் பணி அசத்த வைக்கிறது. அது போலவே இதன் பேட்டரியின் வடிவமைப்புக்கு தனஞ்சயன் அவர்களை பாராட்டலாம். மேலும் ஆயிரக்கணக்கான பொறியாளர்களின் அசாத்திய உழைப்பு இதில் அடங்கி உள்ளது. குறிப்பாக ஆனந்த் மஹீந்திரா அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.
சுமார் 20 லட்சம் மதிப்பில் இது சந்தைக்கு வரும் என்கிறார்கள்.
அடியேன் டாட்டா நெக்ஸானை சென்னையில் இருந்து கோவைக்கு ஓட்டி
வரும் போதெல்லாம் துளியும் உடல் வலியை உணர்ந்ததில்லை. அந்த காரை விட மஹீந்திரா BE6E சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். யாரேனும் இந்த காரை ஓட்டிப் பார்த்திருந்தால் விவரம் தரவும்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
Prakash - Face Book
======================================================================================================
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புலியூர் சரோஜா
ரஜினி, கமல் என பெருந்தலைகளை எல்லாம் பெண்டு நிமிர்த்தி ஒரு காலத்தில் பிஸியான நடன இயக்குனராக கோலோச்சியவர் புலியூர் சரோஜா. விபத்து ஒன்றில் ஒரே மகனைப் பறிகொடுத்த சோகம் தாங்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி நிற்பவர். இப்போது மகன் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, தான் செய்து வரும் நல்ல காரியங்கள் மூலம் மகன் வாழ்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார். முரளி - ஜெயஸ்ரீக்கு நடனம் சொல்லித் தரும் இந்தப் படத்தை அவரிடம் காட்டினோம். முரளி தன்னை அரவணைத்துக் கொண்டிருக்கும் இன்னொரு படத்தைக் கொடுத்து நம்மிடம் பேசினார்...
‘‘ஊட்டியில் ‘காலமெல்லாம் உன் மடியில்’ படத்தின் பாடல் காட்சியை ஷூட் பண்ணினப்போ எடுத்த படம் இது. முரளியோட முதல் படமான ‘பூவிலங்கு’ படத்திலிருந்து நான் மாஸ்டராக வொர்க் பண்ணியிருக்கேன். என்னோட செல்ல மகன் இறந்த பிறகு, வாழ்க்கையின் எல்லா பக்கங்களும் இருண்டு போன உணர்வில் இருந்தேன். வளசரவாக்கத்தில் இருந்த என் பங்களாவை அப்படியே விட்டுட்டு, ஒரு சின்ன குடிசையில் என்னை நானே தனிமைப்படுத்திக்கிட்டு மூணு வருஷம் இருந்தேன். ரஜினி, கமல், விஜயகாந்த் எல்லாம் என்னை எப்படியாவது கவலையிலிருந்து விடுவிக்க முயற்சி செஞ்சாங்க. அதன் பிறகு என் மகன் பிறந்து வளர்ந்த அசோக் நகர் வீட்டுக்கு வந்தேன்.
இதயம்’ படம் ஆரம்பிச்சப்போ, முரளிகிட்டயிருந்து போன். ‘அம்மா... இந்தப் படத்தில் நீங்க வொர்க் பண்ணணும்’னு சொன்னார். நான் மறுத்தப்போ, ‘நானும் உங்க மகன்தானே... நீங்க கண்டிப்பா ஷூட்டிங் ஸ்பாட்டுக்காவது வரணும்’னு அன்பா கூப்பிட்டதால போனேன். ஸ்பாட்டுக்குப் போனப்போ ‘ஹய்யா! எங்க அம்மா வந்துட்டாங்க’ என்று என்னை கட்டிப் பிடிச்சிட்டு எல்லார்கிட்டேயும் சந்தோஷமா சொல்லிச்சு முரளி தம்பி. என் மகனே வந்து அரவணைச்ச மாதிரி பரவசப்பட்டேன். ‘என்னை அம்மான்னு கூப்பிட்ட இந்த ஒரு வார்த்தைக்காக நான் இந்தப் படத்தில் வொர்க் பண்றேன்’னு சொல்லி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இதயம்’ படத்தில் வொர்க் பண்ணினேன்.
‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா...’ என்று மைக் பிடிச்சி முரளி பாடும் பாடல் காட்சியில் என்ன மூவ்மென்ட் கொடுக்கணும்னு முரளியே எங்கிட்ட கேட்டுச்சு. ‘ ‘சிம்லா ஸ்பெஷல்’ படத்தில் ‘உனக்கென்ன மேலே நின்றாய்...’ பாடலில் கமலோட மூவ்மென்ட்டை ஞாபகம் வச்சிட்டு சின்னதா ரீயாக்ஷன் கொடு போதும்’னு சொல்லிக் கொடுத்தேன். அதே மாதிரி தம்பி பிரமாதமா பண்ணிடுச்சு. மைக் பிடிச்சு நடிக்கறதுல மோகனுக்குப் பிறகு முரளிதான் பெஸ்ட். முரளிக்கு டான்ஸ் மூவ்மென்ட் சொல்லிக்கொடுக்கும்போதே என் மகன் ஞாபகம் வந்துடும்.
‘இதயமே... இதயமே...’ பாட்டை ரெயின் எஃபெக்ட்ல எடுத்தாங்க. முரளிக்கு மூவ்மென்ட் சொல்லிக் கொடுத்துட்டு சீட்ல போய் உட்கார்ந்ததும் மகன் ஞாபகம் வந்து கண்ணீர் வரும். கட் சொன்னதும் முரளி என் பக்கத்தில் வந்து ‘ஏம்மா அழறீங்க?’னு கேட்கும். ‘நான் அழல... மழைத் தண்ணீர்தான் கண்ணுல பட்டுடுச்சு’ன்னு சமாளிப்பேன். ‘மனசு வடிக்கிற கண்ணீருக்கும் மழைத் தண்ணீருக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாதுன்னு நினைச்சீங்களா?’ன்னு முரளி என்னைத் தேற்றும். அந்தப் பாட்டு சீன்ல ஒரிஜினலாவே அழுது நடிச்சிருக்கும் முரளி. என்னோட சோகத்தை நினைச்சிக்கிட்டே அப்படி அழுது நடிச்சது. அம்மா அம்மான்னு இப்படி அன்பா இருந்த தம்பிய ஆண்டவன் ரொம்ப சீக்கிரமே கூட்டிட்டுப் போயிட்டான்.’’
- அமலன் - நன்றி: குங்குமம்
====================================================================================================
Charu Nivedita - இனி இப்படி வேண்டாம்… - September 12, 2024
சந்தா மற்றும் நன்கொடை அனுப்புபவர்களுக்கு நான் எப்போதுமே ஒரு ஆலோசனை சொல்லியிருக்கிறேன், பணக்கஷ்டம் உள்ளவர்கள் இதில் சம்பந்தமே வைத்துக் கொள்ளாதீர்கள் என்று. மாணவர்கள், என்னைப் போன்ற தினக்கூலிகள், விளிம்புநிலை மக்கள், இல்லத்தரசிகள் போன்றவர்கள் பணம் அனுப்ப வேண்டாம் என்று கூவிக்கொண்டே இருக்கிறேன். ஏனென்றால், என் இணைய தளத்தை 80000 பேர் படிக்கிறார்கள். அதில் ஒரு நூறு பேர்தான் நன்கொடை அனுப்புகிறார்கள். இந்த நிலையில் 79,900 பேரில் ஒருவராக இருந்து விட்டுப் போவதில் உங்களுக்கு ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன்.
இந்த நிலையில் ஒரு வாசகரிடமிருந்து ஒரு ஓலை. ”எனக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது, நான் போன மாதம் அனுப்பிய பணத்தைத் திருப்பி அனுப்புங்கள்.”
அன்னார் அனுப்பியது 1000 ரூ. கடிதம் வந்தது வாழை விமர்சனம் வெளிவந்த மறுநாள். உண்மையிலேயே அவருக்கு உடம்பு சரியில்லாமல் போயிருக்கலாம். அல்லது, என்னுடைய வாழை விமர்சனத்தைப் படித்து கோபத்தினால் உடம்பு சரியில்லாமல் போயிருக்கலாம். ஆனால் நெட்ஃப்ளிக்ஸில் அவர் இப்படிச் செய்ய முடியுமா? அல்லது, வேறு எந்த இடத்திலாவது செய்ய முடியுமா? எழுத்தாளன் என்றால் சமூகம் எந்த அளவுக்கு அவனை கேணப்பயலாக நடத்துகிறது என்பதற்கு இது உதாரணம். எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. அமெரிக்காவிலிருந்து ஒருவர் மாதம் ஐயாயிரம் ரூபாய் அனுப்பிக் கொண்டிருந்தார். அப்போது சங்கராச்சாரியார் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். ஆன்மீகவாதிகள் எந்த அளவுக்கு அப்பழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும் என்று நான் ஒரு கடுமையான கட்டுரை எழுதினேன்.
என் குருநாதரை நீங்கள் திட்டி விட்டீர்கள், இனிமேல் பணம் அனுப்ப முடியாது என்று ஐயாயிரம் ரூபாய் அனுப்புவதை நிறுத்தி விட்டார். இன்னொரு நண்பர் பதினைந்தாயிரம் ரூபாய் அனுப்பிக்கொண்டிருந்தார். மாதாமாதம். இப்படித்தான் இன்னொரு சாமியாரைத் திட்டி எழுதியதும் அந்தப் பணமும் நின்று போனது.
இனிமேல் சந்தா/நன்கொடையாக அனுப்பப்பட்ட பணம் திருப்பி அனுப்பப்பட மாட்டாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இது முதல் முறை என்பதால் ஆயிரம் ரூபாயை அந்த அன்பருக்குத் திருப்பி அனுப்பி விட்டேன்.
சினிமா பார்க்கப் போகிறோம். சினிமா நன்றாக இல்லை என்றாலோ, அடுத்த நாள் நமக்கு உடம்பு சரியில்லாமல் போனாலோ தியேட்டர்காரரிடம் சென்று பணத்தைக் கொடு என்று கேட்போமா? எப்பேர்ப்பட்ட கேடு கெட்ட சமூகம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இதில் வாழை ரசிகர்கள் வேறு கல்லெறிகிறார்கள். இவருக்கு நன்கொடை வேறு அனுப்ப வேண்டுமாம் என்று. ஏனய்யா, ஏழு கோடியில் படம் எடுத்து விட்டு, பத்தே நாளில் எழுபது கோடி எடுத்திருக்கிறார் அதன் இயக்குனர். அம்பானியால் கூட இப்படி முடியுமா என்று தெரியவில்லை. எழுத்தாளன் நாவல் எழுதினால் அது ஒரு நூறு பிரதி விற்கும். அதில் அவனுக்கு ஒரு ஐயாயிரம் ரூபாய் ராயல்டி கிடைக்கும். அப்படி இருக்கிறது எழுத்தாளனின் பிச்சைக்கார நிலைமை.
- நன்றி கந்தசாமி சார் பேஸ்புக்.
==================================================================================
பொக்கிஷம் :
பதிலளிநீக்குஇன்டேன் அனுபவம் எனக்கும் உண்டு. தற்போது KYC என்று பேங்க், காஸ், போன், என்று எல்லா இடத்திலும் இருந்து போட்டோ சகிதம் வர சொல்கிறார்கள். ஒரு பேங்குக்கு சென்று kyc கொடுத்தேன். இன்னுமொரு பேங்குக்கு செல்ல வேண்டும் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
இண்டேன் போன் செய்தப்போல் காஸ் கடைக்கு வரமுடியாது என்று பாஸ் கூறிவிட்டார். அதனால் அவர்கள் சரி நாங்கள் வீட்டுக்கு வருகிறோம் என்று கூறினார்கள்.
ஒரு பெண்மணி இண்டேன் என்ற மோடி ஜாக்கட் அணிந்துகொண்டு வந்தார். வந்தவர் ஒரு ID கார்டையும் கழுத்தில் தொங்க விட்டிருந்தார். அவர் KYC நிர்பந்தம் ஆதாரையும், காஸ் கனக்சன் நம்பரையும் இணைக்க வேண்டும் என்றும் அதற்கு ஆதார் அட்டை காட்ட சொன்னார். சொன்னவுடன் காஸ் user புக், aadhaar அட்டை காட்டினோம். ஆதார் எண்ணை அவருடைய மொபைல் வழியாக UIDAI சென்று login செய்தார். OTP என்னுடைய போனுக்கு அனுப்பினார்கள். OTP கொடுத்தவுடன் facial recognition செய்ய வேண்டும் என்று என்னை அவருடைய மொபைலில் போட்டோ பிடித்தார். அதாவது போட்டோ பிடிக்கும்போது நான் கண் இமைகளை பட படவென்று மூடி திறக்க வேண்டும். அவ்வாறு செய்தவுடன் UIDAI இல் இருந்து என்னுடைய போனுக்கு ஒரு மெசேஜ். aadhaar successfully verified.
அதன் பின் காஸ் அடுப்பு மற்றும் உபகரணங்களை சரி பார்க்கிறேன் என்று (inspection) கூறி ஒரு லைட்டர், மற்றும் அடுப்புக்கு ஒரு சின்ன stand (சின்ன பாத்திரம் வைக்க) கொடுத்து விட்டு 150 ரூ கேட்டார். கொடுத்து விட்டோம். காரணம் காஸ் கடைக்கு சென்று வர ஆட்டோவுக்கு 120 ரூ செலவாகும்.
இனி காஸ் கடைக்கு வர வேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டு சென்றார் இண்டேனில் இருந்தும் மெசேஜ்.
Dear customer, your Re-kyc request against ******* has been approved. INDANE.
இந்த kyc சங்கதி போன் கம்பெனியில் இருந்தும் வந்தது. நாங்கள் செல்லவில்லை.
Jayakumar
ஆமாம். எனக்கும் பேங்கிலிருந்து கால் வந்திருக்கிறது.
நீக்குஎங்களுக்கு பரவாயில்லை. நீங்கள் வரவேண்டாம். நாங்கள் வருகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
நீங்கள் சொல்வதில் பாதிதான் எனக்கு நடந்தது. மிச்சம் இன்னொரு சமயம் நடந்தது.மேலும் என்னுடைய காஸ் கனெக்ஷன் புத்தகத்தைக் கேட்டல் எங்கிருக்கிறியாது என்று தேடவேண்டும்!!
மற்ற விஷயங்கள் அதே... அதே...
Gas கம்பெனியில் நாங்களும் kyc கொடுத்தாச்சு இடையில் மெசேஜ் வந்தது அவங்ககிட்டருந்தே. நேரில் சென்று கொடுத்து வந்தோம்.
நீக்குகீதா
ஆட்டோ கட்டணம் பற்றிய செய்தி யாருக்காக? திருவனந்தபுரத்தில் இதுவரையில் நேராக மீட்டர் (மினிமம் 30 ரூ கி மி 15 ரூ) என்றிருந்தது. ஆனால் தற்போது மினிமம் 50 ரூ கி மி 20 ரூ என்று ஆட்டக்காரர்களால் வசூலிக்கப்படுகிறது. மேலும் சில்லறை இல்லை என்று கட்டணம் எப்போதும் 10 ரூ roundup யிலேயே வாங்குகிறார்கள்.
பதிலளிநீக்குயாருக்காகவாவது தனிப்பட்ட முறையில் செய்தி உண்டா என்ன... அரசு அடிக்கும் கூத்து.... அவ்வளவுதான். ஏதோ அவர்கள் அந்த கட்டணத்துக்குட்பட்டே கேட்பது போல...!
நீக்கு
பதிலளிநீக்குசின்ன சின்ன ஆசையா? பேராசையாகவல்லவா இருக்கிறது. ஆசைக்கோர் அளவில்லை தான்.
மலையை ஒற்றை விரலால் தூக்கிய கிருஷ்ணன் செயல் ஆசையில் வரவில்லை ஏன்?
இந்த வார பொக்கிஷ ஜோக்குகள் அரசியல், மற்றும் தேர்தல் சம்பந்தம் உள்ளவை யாயினும் சிரிக்க சிந்திக்க வகையை சார்ந்தவை. நன்று, நன்றி.
// சின்ன சின்ன ஆசையா? பேராசையாகவல்லவா இருக்கிறது. //
பதிலளிநீக்கு:)))
// சிரிக்க சிந்திக்க வகையை சார்ந்தவை. நன்று, //
__/\__
//லண்டன்: தண்டி யாத்திரையின் பொழுது மகாத்மா காந்தி அணிந்திருந்த மாலையை ஏலத்தில் எடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை//
பதிலளிநீக்குநேருவின் கடிதங்கள் நாட்டுக்கு சொந்தம் எனும் அரசு காந்தியின் மாலையை ஏன் ஏலம் விடவேண்டும். நாட்டுக்கு சொந்தம் என்று காந்தி மியூசியத்தில் வைக்க வேண்டியது தானே?
செய்யலாம்தான். லண்டனில் இருக்கிறது கொடுக்க மாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. வேறு சில பொருட்களை ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள் என்று செய்தியிலேயே இருக்கிறது.
நீக்குசரி, அரசை விடுங்கள்... மக்களுக்கு ஏன் அந்த ஆர்வம் வரவில்லை?
//மக்களுக்கு ஏன் அந்த ஆர்வம் வரவில்லை?// ஸ்ரீராம்.... உங்கள் பசங்களின் ஸ்கூல் யூனிஃபார்ம்ஸ், ஒரு நினைவுக்காக பத்திரமாக எடுத்து வைத்திருக்கிறீர்களா? நான் 4-5 வைத்திருந்தேன்...இப்போ ஒரு செட்டாவது எங்கேயாவது இருக்கும் என்று தோன்றுகிறது. காந்தி அணிந்த மாலை, செருப்பு என்று சேர்த்துவைப்பதால் என்ன பிரயோசனம்?
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. நானும் அறிமுகமில்லாத யாரிடமிருந்தாவது ஃபோன்கால் வந்தால் அதை எடுப்பதில்லை. அதை மகன்கள் ,மகள் பார்வைக்கு தந்து விடுவேன். இல்லை அவர்களே பார்த்து அதற்கு தகுந்த பதிலளித்து விடுவார்கள். தங்கள் தயக்கம் நியாயமானதுதான். கவனமாக இருப்பதில் பிழை ஏதும் இல்லையே..! தொடரும் பகுதிக்கும் காத்திருக்கிறேன்.
கவிதை நன்றாக உள்ளது. எத்தனையோ மிக சாதாரணமான ஆசைகளே நிறைவேறாத போது இதெல்லாம் நிறைவேறாத ஆசைகள் இல்லையா? ஆனாலும் படிக்கும் போது அவ்வுணர்வு மேலிட நமக்குள் ஒர் ஆனந்தம் தோன்றுகிறது. மற்றதையும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கவனமாக இருப்பதில் தவறில்லை. ஆனால் எதிர்பார்ட்டிக்கு அது புரிய வேண்டுமே...
நீக்குபேசிக்கொண்டிருக்கும்போதே கால் கட் ஆகும். அல்லது பேசுவது கேட்காது. சில உறவுகள், சில நட்புகள் என்னை கேட்கும் கேள்வி
"ஏன் பேசிக்கிட்டிருக்கும்போதே காலை கட் செய்துட்டே?"
சாதாரணமாகவே அது நெட்ஒர்க் பிரச்னை என்று எல்லோருக்கும் புரியும். ஆனால் கேள்வியை இப்படி அமைக்கும் ஆட்கள் உண்டு!
கவிதை பாராட்டுக்கு நன்றி.
முதல் பகுதி - நானும் தெரியாத நம்பர் வந்தா எடுகக்வே மாட்டேன் ஸ்ரீராம். ஆனா பாருங்க இப்படித்தான் தெரியாத நம்பர் சில சமயம் நம்ம நெருங்கிய நட்பு அலல்து உறவிடமிருந்து இருக்கும்.
பதிலளிநீக்குஏனோ இப்படிக் கூப்பிடுபவர்கள் ஒரு எஸ் எம் எஸ் கொடுக்கலாம்...நான் தான் அழைத்தேன் என்று. ஆனால் கொடுக்கறதில்லை. அப்புறம் கம்ப்ளெயின்ட்...நான் பல முறை கூப்பிட்டேன் எடுக்கவே இல்லை நீ ன்னு.....நான் விளக்குவேன் ....அப்புறம் அந்த எண்ணை சேமித்துக் கொள்வேன். ஆனா சிலர் நம்பர் மாத்திட்டே இருப்பாங்க ஸோ அவங்ககிட்ட சொல்லிடுவேன், நீங்க ஸ்திரமா ஒரு நம்பர்லருந்து கூப்பிட்டா எடுப்பேன் இல்லைனா எல்லா நம்பரையும் என்னால சேவ் பண்ணிக்க முடியாது...தயவு செய்து என்று சொல்லிவிடுவது வழக்கம். அது போல ஒரு வேளை ஏதேனும் டெக்னிஷியன் கூரியர் இப்படி ஆட்காரர்கள் நம்பர் அல்லது கார்டு கொடுத்தால், உறுதிப் படுத்திக்குவேன், இந்த நம்பர்லருந்துதானே கூப்பிடுவீங்க இல்லைனா நான் எடுக்க மாட்டேன்னு!
கீதா
வாங்க கீதா... உண்மைதான். அழைத்தது நான்தான்.. அழைப்பை எடு என்று மெசேஜ் அனுப்பியவர்கள் இருக்கிறார்கள். அது உத்தமம்.
நீக்குபொதுவாக என் நெருங்கிய வட்டம் என்றால் மட்டுமே எண்ணைப் பகிர்வதுண்டு. ரொம்ப முக்கியம் இல்லைனா பகிர்வது இல்லை.
பதிலளிநீக்குநான் யாரையேனும் அழைத்தால் ஒரு வேளை அவங்க எடுக்கலைனா இல்லை ரிட்டர்ன் கால் (என் கான்டாக்ட் லிஸ்டில் இருந்தா, ஏன்னா நமக்கு கொடுத்த நம்பர் ஒன்றாக இருக்கும் அழைப்பது வேறாக இருக்கும்) வரலைனா, முக்கியமான விஷயமா இருந்தா எஸ் எம் எஸ் கொடுப்பேன் நான் தான் அழைத்தேன் என்று.
கீதா
அதுதான் சரி. நாம் மற்றவர்களை சொல்வதை நாம் செய்ய வேண்டுமே...
நீக்குஃப்ளாஷ் பேக் முடிஞ்சு, (நிகழ்வே ஃப்ளாஷ் பேக் ஆகிடும் அடுத்த வாரம்!!!) நிகழ்வு இன் டே(ன்) நெக்ஸ்ட் டே க்கு ஒரு பதிவு ரெடி!
பதிலளிநீக்குகீதா
ஒருபதிவை இரு பதிவாக்கி நிம்மதி அடையும் கட்டம். இப்போது நான் படும் அவஸ்தை பலவிதங்களில் கடுப்பேற்றும் இருப்பு!!
நீக்குஆமாம் ஸ்ரீராம் ரொம்பவே கடினமான ஒன்று. புரிந்தது
நீக்குகீதா
பாங்கில் இருந்து வீட்டுக்கு வந்து kyc எடுப்பது கிடையாது. மற்ற சேவைகள் கேஷ், லைப் செர்டிபிகேட், செக் புக் போன்றவை கட்டணத்துடன் ஏஜெண்ட்ஸ் செய்வார்கள். ஆகவே பாங்கில் இருந்து kyc எடுக்க வீட்டுக்கு வருகிறார்கள் என்றால் எச்சரிக்கையாக இருங்கள்.
பதிலளிநீக்குJayakumar
நிச்சயம். வங்கி என்றால் நான் இரண்டு மடங்கு எச்சரிக்கையாக இருப்பேன். நேராக நானே வங்கிக்கு சென்றுவந்து விடுவேன்.
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குஉண்மையிலேயே குடும்பத்தில் பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களுக்கும் கொடுமைகள் நிகழ்வதுண்டு. திருமணமாகும் பெண் தன் தாய், தந்தை (மோசமான தாய் தகப்பனாக இருந்தால்) சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டு கணவனிடம் கணவன் வீட்டாரிடம் காட்டுவது என்பது மிக மோசமான ஒன்று.
பதிலளிநீக்குபெண்கள் சுதந்திரம், பாதுகாப்பு என்ற பெயரில் இருக்கும் சட்டத்தைத் தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்தும் பெண்கள் நிறைய உள்ளனர்.
//வடக்கு நீதிமன்றம் இந்திய சட்டப்படி நடந்துக்கொள்ளவில்லை என்றும், பெண்களுக்கு வழங்கப்பட்ட பிரதேயக சட்டங்கள் தவறாக வழி நடத்தப்படுகிறது என்றும், அப்பாவி ஆண்களுக்கு இந்த சட்டம் நீதியை பெற்று தரவில்லை என்றும், //
அதே.
இடையில் சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவைக் கொண்டு வந்ததே ஒரு 3, 4 வருடங்களுக்கு முன், ஆண்கள் பக்கமும் நியாயம் இருக்கும் அதையும் கவனிக்க வேண்டும், பெண்கள் யார் ஆணிற்குக் கொடுமை செய்தாலும் தண்டனை உண்டு என்று....
இந்தப் பெண் நீதிபதி பற்றி என்ன சொல்ல?
இப்ப எல்லாருமே கைதாகியாச்சு என்று நினைக்கிறேன் அப்படித்தான் செய்தி பார்த்த நினைவு
கீதா
இ
ஆம் நாணயத்துக்கு இரண்டு பக்கம். இப்படி அவஸ்தைப்படுபவர்கள் நிறைய உண்டு. அளவில்தான் மாறுபாடு.
நீக்குஜார்ஜியா நோக்கி நகரும் பனிப்பாறை லண்டன் நகரை விடப் பெரியது என்றால் நம்மமக்கள் சும்மா இருக்கமாட்டாங்களே அதை அப்படியே ஒரு கப்பல் போலாக்கி (உருகிடாமல் இருகக்த்தான் இப்ப நிறைய டெக்னாலஜி இருக்கே) கேளிக்கைகள் எல்லாம் உருவாக்கி வசூல் செய்திடப் பார்க்கலையோ?!! நகரும் பனிக்கப்பல் என்று!!
பதிலளிநீக்குஅரிசி ரோபோ ஆஹா!! ஆனா ரொம்ப விலையா இருக்குமே
யானை பாவம் பசி போல...நாமதானே அதுக்கும் காரணம்...
இங்கு பெங்களூரில் பேட்டரி பேருந்துகள் நிறைய விடத் தொடங்கியிருக்காங்க.
தனியார் மருத்துவமனைகளில் மத்திய,மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுப்பதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.//
தனியாருங்க கொள்ளை
இந்த டாட்டூ விஷயமெல்லாம் என்ன விஷயங்களோ? இயற்கைக்குப் புறம்பாக என்ன செய்தாலும் அது கண்டிப்பாக எதிர்மறைவிளைவுகளை உருவாக்கும்.
கீதா
ஆனால் அப்படி செய்து விடுவார்கள் என்கிற கற்பனையே சுவாரசியமாகத் தான் இருக்கிறது. கட்டணம் உண்டு என்றாலும் இப்படிப்பட்ட சாத்தியக்கூறுகள் மிகவும் சுவாரஸ்யமானவை தானே....
நீக்குஜோக்குகளை நிஜமாகவே படிக்கிறார்களா என்று தெரிந்துகொள்ள இரண்டு ஜோக்குகளை ரிபீட் செய்திருக்கிறீர்களா?
பதிலளிநீக்குஎனக்கு நான்கு ஐந்து நாட்களாக வித்தியாசமான பிரச்சனை நெல்லை!
நீக்குஅதில் அவஸ்தை பட்டுக் கொண்டிருக்கிறேன்.
மனிதனின் ஆயுட்காலமே நாற்பது வருடங்கள்தாம் பாக்கி. இதில் காந்தி போட்டிருந்த மாலை, காந்தி கடைசியாகுடுத்தியிருந்த துணி போன்றவற்றிலெல்லாம் யாருக்கு ஆர்வம் இருக்கும்?
பதிலளிநீக்குசில பணக்கார பைத்தியங்கள் இருக்கின்றனவே...
நீக்குசாரு நிவேதிதா பதிவு... நோ கமென்ட்ஸ். அவர் நேரடியாக்க் கேட்கிறார். கொடுக்க நினைப்பவர்கள் கொடுக்கட்டும். அதில் என்ன இருக்கிறது? கொடுத்ததைத் திரும்பக் கேட்பவர்கள் மெச்சூரிட்டி இல்லாதவர்கள்.
பதிலளிநீக்குவிமர்சிப்பது அவர் உரிமை. திருப்பி கேட்பது இவர்கள் உரிமை!!
நீக்குஇந்த இரண்டுமே நாம் செய்ய மாட்டோம்
கார் பற்றிய விவரம் சுவாரசியம் வாசிக்க நல்லாருக்கு...ஆனா நம்ம பாக்கெட்டுக்கு எல்லாம் out of focus
பதிலளிநீக்குகீதா
உண்மை!!
நீக்குஆண்பாவம்... இது அபூர்வமாக நிகழ்வது. எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் தற்கொலையைத் தேர்ந்தெடுத்தது விபரீதம்.
பதிலளிநீக்குநெல்லை, அபூர்வம் என்றில்லை. இந்த கேஸில் இப்படி என்றால், ஆண்களில் பலர் வெளியில் சொல்லாமல் மத்தளத்திற்கு இருபக்கமும் அடி என்பது போலவும் இருக்கும் ஆண்கள் உண்டு. வெவ்வேறு வகையான கஷ்டங்கள் வேறு வழியில்லாமல் அல்லது மனைவி பக்கம் சரிவதும் உண்டு. ஒரு சில மட்டுமே இப்படி கோர்ட்டிற்கு வருகிறது அது இவர் தற்கொலை செய்து கொள்ளும் முன் இப்படி எழுதி வைத்துவிட்டுப் போனதால் ஆதாரங்களுடன். ஆதாரம் வைக்காமல் போன கேஸ்களும் உண்டு.....அல்லது வீட்டை விட்டு ஓடியவர்களும் உண்டு.
நீக்குஎத்தனையோ வாய்ப்புகள் - நெல்லை தற்கொலைக்கு நானும் எதிரிதான்....ஆனால் அவர் தளர்ந்து போயிருக்கலாம் அவர் மனம் அந்த அளவு விரக்தி அடைந்திருக்கலாம் அவருக்கு வேறு வழிகள் அடைபட்டுப் போயிருந்திருக்கலாம்...அவர் சென்ற கோர்ட்டிலும் அந்த நீதிபதி சரியாக இல்லையே...வேறு அப்பீல் செய்திருக்கலாம்தான். ஆனால் அவருக்கு நிதி வேண்டுமே அதற்கும். மீண்டும் கேஸை நிரூபிக்க...மன உளைச்சல். நெல்லை பண விரயத்தை விட மன உளைச்சல் ரொம்பப் பொல்லாது. அது மனதை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்கும். கூடவே பண விரயமும் சேரும் போது....
கீதா
மன உறுதியாக இருப்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அதைவிட மன உறுதி இல்லாதவர்களின் சதவிகிதம் குறைவு தான் என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்!
நீக்குபுத்திரசோகம் கொடியது. அதுக்கு என்ன பண்ணமுடியும்? நம் தலைவிதியை நொந்துகொள்ள வேண்டியதுதான்.
பதிலளிநீக்குஅப்படி மனம் தளர்ந்து இருந்து விட வேண்டாம் என்று தான் முரளி முயற்சித்து இருக்கிறார்.
நீக்குசின்ன சின்ன ஆசைகள் ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம்....இதில் இன்னும் நிறைய உண்டே!! சரி முடியாத அதீதமான ஆசை என்றாலும் கற்பனையில் சிறகடிக்கலாமே இல்லையா ஸ்ரீராம்! அதுக்கென்ன காசா பணமா?!!
பதிலளிநீக்குகீதா
சும்மா ஒரு கற்பனை தானே கீதா.....!!
நீக்குபுதன் கேள்வி... இரட்டைக் குழந்தைகள் பிறப்பது லாபமா இல்லையா? இரண்டு குழந்தைகளோடு போதும், ஓரளவு ஒத்த மனதுடையவர்களாக இருப்பார்கள், நம் கடமைகளையும் ஒரே நேரத்தில் முடித்துவிடலாம். என்ன சொல்றீங்க?
பதிலளிநீக்குபதில் அளிப்போம்.
நீக்குஓரளவு ஒத்த மனதுடையவர்களாக இருப்பார்கள், நம் கடமைகளையும் ஒரே நேரத்தில் முடித்துவிடலாம். //
நீக்குஇல்லை, நெல்லை. ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கணும்னு இல்லை. குணங்களிலும்.....நம் ஜீன் வருவது பொருத்துதானே....அப்படி இல்லாதப்ப வளர்ப்பது கிட்டத்தட்ட இரு குழந்தைகள் உள்ளவங்க வளர்ப்பது போலதான் ஆனால் இரட்டையில் இன்னும் கொஞ்சம் சவால்.
ஆ! புதனுக்கான கருத்தை இபப்வே சொல்லிட்டேனோ?!
அதான் இங்க கேட்கக் கூடாது...ஹாஹாஹாஹா....கௌ அண்ணாவுக்கு ஒன் டு ஒன் ல போய் கொடுத்திருக்கணும்!
கீதா
குணங்களில் நம் ஜீன் வருவது சாத்தியம் என்றால், ஒரு குழந்தையிடம் நம்முடைய நெகட்டிவ் ஜீன் மட்டும் இன்னொரு குழந்தையிடம் நம் பாசிட்டிவ் ஜீன் மட்டும் அமைந்து விட்டால் எப்படி இருக்கும்?!!
நீக்குசின்னச் சின்ன ஆசைகள் அபத்தமாகத் தெரிகிறது எனக்கு. இந்தச் சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறும் அளவுக்கு ஆள் இவை எல்லாவற்றையும் விட பூதாகரமாக ஆகிவிடுவாரே பரவாயில்லையா?
பதிலளிநீக்குநாம் பெரிதாவோம் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும்? அவற்றை சிறிதாக்கிவிட்டால்..!!
நீக்குகற்பனைக்கு மேனி தந்து கவிதை வரிகள் ஆக்கிவிட்டேன். கைகளால் முடிகிறதோ இல்லையோ கற்பனையில் முடிகிறது!
புலியூர் சரோஜா - தகவல்கள் சுவாரசியம் அவரது பேட்டி ஒன்று பார்த்தேன் ஆனால் கேட்கவில்லை.
பதிலளிநீக்குஅந்த இரண்டாவது படத்துல இருக்கறவர் தான் அவரது கணவரா?!
கீதா
ஆமாம். அவரும் ஒரு நடிகர்.
நீக்குசாரு நிவேதிதா வின் ஆதங்கத்தில் ஒரு உண்மை இருக்கு அவர் சொல்லியிருக்கும் மற்ற விஷயங்களைத் தவிர்த்தால்...அதாவது பொதுவாக எழுத்தாளருக்கான மதிப்பு, புத்தகங்களுக்கான மதிப்பு என்பது சமூகத்தில் (அவரைச் சொலல்வில்லை) எப்படி இருக்கிறது என்பது...
பதிலளிநீக்குகீதா
எழுத்தாளர்களுக்கான மதிப்பு காலத்துக்கு காலம் மாறுகிறது் ஒரு நேரத்தில் தொலைக்காட்சி இல்லாத whatsapp இல்லாத பத்திரிகைகள் போல எழுத்தாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் போற்றப்பட்டார்கள், மதிக்கப்பட்டார்கள். இப்போது தெருவில் தடுக்கி விழுந்தால் எழுத்தாளர்கள். வாசகர்கள் மிகவும் குறைந்து போய்விட்டார்கள்!!
நீக்குஸ்ரீராம் சொல்றதைப் பார்த்தால் என்னையும்கூட எழுத்தாளர் லிஸ்டில் சேர்த்துவிட்டார் போலிருக்கு
நீக்குபொக்கிஷம் ஜோக்குகள் ஹையோ சிரித்துவிட்டேன் ஸ்ரீராம். செம ஜோக்ஸ்!
பதிலளிநீக்குரெண்டு ஜோ க் படம் மறுபடியும் வந்திருக்கு பாருங்க ஸ்ரீராம்.
கீதா
மூன்று முறை நீக்கினேன். இந்தமுறையாவது அது வெளியேறி இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்!
நீக்குபொக்கிஷம் ஜோக்ஸ் கருத்து கொடுத்திருந்தேனே....வரலையோ?
பதிலளிநீக்குஜோக்ஸ் எல்லாமே செம ....சிரித்துவிட்டேன்.
கீதா
வந்திருக்கிறதே...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஆண்பாவம் படித்தவுடன் மனதிற்கு வேதனையாக இருக்கிறது. முடிவை அவர் இவ்வளவு தவறாக எடுத்திருக்க வேண்டாம். ஆனால், அவரின் மன உளைச்சல்கள் அந்த முடிவுக்கு அவரை தூண்டியுள்ளது.
/குடும்ப வன்முறைக்கு பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் நடக்கிறது, இவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி போராடா யாரும் தயாராக இல்லை என்பதே உண்மை. /
உண்மை. இப்போதெல்லாம் ஆண்கள்தாம் பெண்களை விட இந்த வன்முறைகளுக்கு பலியாகிறார்கள். (சிலர் மனதளவில்.. சிலர் இந்த இறுதி முடிவின்படி..) மனதளவில் பாதிக்கப்படுகிறவர்கள் இறுதியில் ஹார்ட் சம்பந்தபட்ட நோயால், அவதியுறுவதோ, இல்லை உயிரை விடுவதோ நடக்கிறது.
பெண்களானாலும், ஆண்களானாலும் இப்படி ஒரு ஆத்ம வஞ்சனைகள் செய்து மிகப் பெரிய பாவம்...! மனதை கலங்க வைக்கும் சம்பவம்.
இன்றைய செய்திகள் அனைத்தும் படித்து தெரிந்து கொண்டேன். புதிது புதிதாக செய்திகள். தேடிப்பிடித்து தரும் தங்களுக்கும், சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும் நன்றிகள்.
/ஜார்ஜியா நோக்கி நகரும் பனிப்பாறை லண்டன் நகரை விடப் பெரியது என்றால் நம்மமக்கள் சும்மா இருக்கமாட்டாங்களே அதை அப்படியே ஒரு கப்பல் போலாக்கி (உருகிடாமல் இருகக்த்தான் இப்ப நிறைய டெக்னாலஜி இருக்கே) கேளிக்கைகள் எல்லாம் உருவாக்கி வசூல் செய்திடப் பார்க்கலையோ?!! நகரும் பனிக்கப்பல் என்று!!/
இந்த செய்தியை குறித்து சகோதரி கீதாரெங்கன் அவர்களின் கற்பனை நன்றாக உள்ளது. ஆனால், இதுவும் கூட நடக்க வாய்ப்பு உள்ளது. எல்லாமே பணம் படுத்தும் பாடு. கூடவே விஞ்ஞான யுகம். சகோதரியின் கருத்தை. ரசித்தேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அந்தத் தற்கொலை எல்லாருடைய மனதையும் அசைத்துப் பார்த்திருக்கிறது. என் அஸ்தியைக் கரைத்து நீதிமன்றத்தின் சாக்கடைகளில் ஊற்றுங்கள் என்கிற வார்த்தை மிகவும் ஸ்ட்ராங்கான வார்த்தை.
நீக்குகாய்ச்சல்
பதிலளிநீக்குஇன்னும் விட வில்லை..
வணக்கம் சகோதரரே
நீக்குதங்கள் கூற்று கண்டு மனம் வருத்தமடைகிறது. சட்டென மதிய உணவுக்குப் பின் ஒரு டோலோ மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள். இரு வேளை இப்படி எடுத்துக் கொண்டால் ஜுரம் உடனே குணமாகிறது. பிறகு ஆயுர்வேத மருந்துகளை தொடரலாம்.
என்னடா இவள்..! இப்படி அலோபதியை சிபாரிசு செய்கிறாளே என தவறாக எண்ண வேண்டாம். ஆயுர் வேதத்திலேயே, சித்தா, ஹோமியோபதி, யுனானி என பிரிவுகள் இருப்பதில்லையா...! அது போலத்தான் இதுவும்...! ஒரு சமயத்திற்கு தீர்வாக பயன்படுகிறது. காய்ச்சல் குணமானவுடன் மூலிகை மருந்தை தொடருங்கள். உங்களின் உடல்நலனுக்காக எனக்குத் தோன்றியதை ஒரு சகோதர உரிமையுடன் குறிப்பிட்டேன். தவறெனின் மன்னிக்கவும்
அலோபதி மருந்துகள் அனுபவம் இல்லாவிட்டால் வேண்டாம்... ஆயுர் வேத மருந்திலேயே பல அனுபவ மிக்க வைத்தியர்களை அணுகி மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.தங்கள் உடல் நிலை பரிபூரணமாக குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .
வருத்தமாக இருக்கிறது செல்வா அண்ணா... நீங்கள் ஏன் உடனே மருத்துவரை பார்க்க கூடாது?
நீக்குபோன் சமாச்சாரம் சுவாரஸ்யமான தகவல்கள் ஜி
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதம்பத்தில் நடன இயக்குனர் புலியூர் சரோஜா பற்றிய தகவலை தெரிந்து கொண்டேன். மஹிந்திரா கார் பற்றிய விபரமும் அருமை. மற்றொரு பகுதி இப்போது இணைத்திருக்கிறீர்களா? அரசியல் பற்றிய ஜோக்ஸ் அத்தனையும் அருமை. நன்றாக சிரிக்க வைத்தது.
ரோடிலேயே ராட்ஷச ராட்டணத்தில் ஓட்டு கேட்டபடி வரும் வேட்பாளர் அவரின் சின்ன வயது ஆசையை இப்போது நிறைவேற்றி கொள்கிறார் போலும்.. :)) அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
இல்லை கமலா அக்கா பிற்சேர்க்கையாக எதையுமே இணைக்கவில்லை. எல்லாமே முன்னரே இருந்ததுதான். இரண்டு முறை வெளியாகியிருந்த ஒரு ஜோக்கை மட்டும் நீக்கினேன்.
நீக்குதெரியாத போன்கால்கள் எடுக்காமல் இருந்தாலும் சில எடுக்க வேண்டியது இருக்கிறது. நீங்கள் சொல்வது போல உறவினர்கள் நமக்கு தெரியாத எண்ணிலிருந்து பேசுகிறார்கள்.மருமகளின் சித்தப்பா போல.
பதிலளிநீக்குஇன்று சாரின் போனிலிருந்து தெரியாத நம்பரில் அழைப்பு நானும் எடுக்க வேண்டாம் என்று தான் பார்த்தேன், அப்புறம் எடுத்தேன் சத்தம் இல்லை, ஹலோ என்றதும் பெண் குரல் இன்று சாருக்கு பிறந்த நாள் என்று ஆரம்பித்தது வைத்து விட்டேன்.
இன்று சாருக்கு பிறந்தநாள் இல்லை.
ஆம். நாம் எல்லா உறவினர்கள் பெயரையும் சேமித்து வைத்துக் கொள்ள முடியாது. தேவைப்படும் எண்களை மட்டுமே சேமித்துக் கொள்வோம்.
நீக்குமேலும் கணவன் அல்லது மனைவியின் உறவினர்கள் எங்களுக்கு அப்படியே. எனவே சட்டென அவர்களிடமிருந்து திருமபத்துக்கோ வேறு விசேஷத்துக்கோ அழைத்த கால் வந்தால் குழம்பி விடுவோம்!
ஆண்பாவம் செய்தி படித்தேன், தொலைக்காட்சியிலும் செய்தி வாசித்தார்கள். ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று வருத்தம் அடைத்தேன் . பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விட வேண்டியதுதானே! இப்படி நடந்து கொள்ள வேண்டுமா?
பதிலளிநீக்குநேற்று ஒரு செய்தி படித்தேன். ஒரு பெண் ஒன்பது பேர்களை மணந்து விவாகரத்து செய்திருக்கிறாராம், ஜீவனாம்சம் வாங்குவதற்காகவே... இதையே வயிறு வளர்க்க ஒரு பிழைப்பாக கொண்டு விட்டார் போலும்.
நீக்குடாட்டூ போடுவது பற்றி வானொலியில் கருத்து கேட்டார், இப்படி நாக்கில் போடுவது பற்றி கார சாரமாக மக்கள் பேசினார்கள்.
பதிலளிநீக்கு// நாக்கில் போடுவது பற்றி கார சாரமாக //
நீக்கு:))
உங்கள் கவிதை ஆசை சின்னதாக இல்லையே!
பதிலளிநீக்குபெரிய பெரிய ஆசையாக இருக்கிறதே!
பெரிதினும் பெரிது கேள்' என்று பாரதியார் சொன்னது போல இருக்கிறது.
முடியாத டாஸ்குகளை ஏதோ முடியும் என்பது போலவே கற்பனை செய்தேன்!
நீக்குதேர்தல் சிரிப்பு ரசிக்கும் படியாக இருக்கிறது
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குஸ்ரீமதி கமலா ஹரிஹரன்
பதிலளிநீக்கு// .தங்கள் உடல் நிலை பரிபூரணமாக குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன் //
தங்களது அன்பினுக்கு நன்றி.. எனது உடல் நிலையைக் குறிப்பிட்டு அனைவரையும் சங்கடப்படுத்தி விட்டேன்...
சிவப்பபு அணுக்கள் இரண்டு ஆண்டுகளாகக் குறைவு.. ஒவ்வாமையினால் சில உணவு வகைகளை உண்பதற்கு இயலவில்லை..
நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறைந்திருக்கின்றது...
தங்களது அன்பினுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
இறைவன் துணை..
வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே
நீக்குஇதில் சங்கடப்பட வைக்கும் அளவிற்கு என்ன சொல்லி விட்டீர்கள். நாம் ஒருவருக்கொருவர் ஆறுதலான வார்த்தைகளை அன்புடன் தெரியப்படுத்ததானே இந்த எ. பி குடும்பத்தில் இணைந்திருக்கிறோம். தங்கள் உடல்நலம் நன்றாக குணம் காண இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸ்ரீராம் அவர்களது அன்பினுக்கு
பதிலளிநீக்குநெஞ்சார்ந்த நன்றி..
இந்த மாலை வேளையில் சற்று நலமே..
இறைவன் துணை.
நன்றி செல்வாண்ணா.
நீக்கு