புதன், 11 டிசம்பர், 2024

திரைப்படங்களில் - இறை வேடத்தில் பெண் குழந்தைகளையே நடிக்க வைப்பது ஏன்?

 

KGG பக்கம் : 

Wah Wah! வா வா ! ( வாழ்த்துவோம் வாருங்கள்! ) 

அன்னை ஸ்வர்ணாம்பாள் சிறுகதை போட்டி -2024 முடிவுகள் அறிவிப்பு

இராய செல்லப்பா, சென்னை.   ) 

இனிய நண்பர்களே! இரண்டு மாதங்கள் முன்பு என் தாயார் அமரர் ஸ்வர்ணாம்பாள் நினைவாகச்  சிறுகதைப் போட்டி அறிவித்தேன். முடிவுத் தேதி 3-011-2024. 

வாட்ஸ்ஆப், முகநூல், மின்னஞ்சல் மூலமாக மட்டுமே விளம்பரப்படுத்தப்பட்ட இந்தச்  சிறுகதைப்  போட்டி உலகளாவிய கவனத்தைப் பெற்று, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களே அல்லாது, அமெரிக்கா ஆஸ்திரேலியா இலங்கை கனடா அபுதாபி போன்ற நாடுகளில் இருந்தும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இளம் எழுத்தாளர்கள் மட்டுமின்றி, பெரிய பத்திரிக்கைகளில் எழுதி அங்கீகரிக்கப்பட்ட மூத்த எழுத்தாளர்களும் இந்தப் போட்டிக்கு மனம் உவந்து எழுதி எங்களைக் கௌரவித்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது. 

போட்டி நடைபெறும் தகவலைப் பல்வேறு இலக்கியக் குழுக்களும் தங்களுடைய உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் முழுமனதோடு பகிர்ந்து கொண்டிருந்தால் மட்டுமே இத்தகைய வெற்றி சாத்தியமாகும். அவர்களுக்கு எங்கள் நன்றி உரித்தாகுக. இந்தப்  போட்டிக்கு மொத்தம் 355 கதைகள் வந்து சேர்ந்ததை பெருமகிழ்ச்சியோடு அறிவிக்கின்றேன். 

அதேசமயம் போட்டியின் அமைப்பாளர் என்ற வகையில் எனக்கு மிகப் பெரியதொரு வருத்தம் ஏற்பட்டது.  அது என்னவென்றால், இந்த 355 கதைகளில் வெறும் 10 கதைகள் மட்டுமே பரிசுக்கு உரியனவாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; வேறு வார்த்தைகளில் சொல்வதானால் 300 க்கும் மேற்பட்ட கதைகள் தேர்ந்தெடுக்கப்படாமல் விடுபட வேண்டும். பரிசு பெறப்போகும் 10 பேரின் நன்மதிப்பை நாங்கள் பெறும் அதேசமயத்தில், மிகுந்த எதிர்பார்ப்புடன் எழுதி ஆவலோடு முடிவுக்குக் காத்திருக்கும் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏமாற்றம் அளிக்க வேண்டிய துரதிஷ்டமான நிலை எங்களுக்கு ஏற்பட்டது.  

இந்த வருத்தத்தை ஓரளவு சரிக்கட்டுவதற்காக அறக்கட்டளையின் உறுப்பினர்களும் நடுவர்களும் தமக்குள் ஆலோசித்து, மேலும் 25 பேருக்கு “பாராட்டுக்குரிய கதைகள்”  என்ற அங்கீகாரத்தை வழங்கிடலாம் என்று  முடிவு செய்தார்கள் என்பதைத்  தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 25 பேருக்கும் சன்மானமாக, தலா ரூபாய் 1001 வழங்கப்படும் என்பதையும் நீங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன். 

ஏற்கெனவே அறிவித்தபடி இந்தக் கதைகள் அனைத்தும் தொகுப்பாக வெளியாகும். ரூ.5000 பரிசு பெறும் பத்துக் கதைகள் ஒரு நூலாகவும், மற்ற 25 கதைகளும் இன்னொரு நூலாகவும் வெளியிடலாம் என்று தற்காலிகமாக யோசிக்கிறோம். சென்னையில் எதிர்வரும் புத்தகக் கண்காட்சி காரணமாக நூல்களின் தயாரிப்பு சற்று தாமதமாகலாம் என்று தெரிகிறது. விரைவில் உரிய அறிவிப்பு வெளியாகும். 

மிகச் சிறந்த விழா நிகழ்வு ஒன்றில் பரிசுகள் வழங்கப்படும். 

பரிசு பெறாத நண்பர்கள்  எங்களைப் புரிந்துகொண்டு ஆதரிக்க வேண்டுகிறோம். 

இனி முதல் பட்டியலாக, ரூ.5000 பெறும் பத்துக் கதைகளின் விவரங்களைக் கீழே காணலாம்:

(கதைகள் எங்களுக்கு வந்துசேர்ந்த தேதியின் அடிப்படையிலான வரிசை இது. மற்றப்படி, எல்லாக் கதைகளுமே ஒரே தரத்தை உடையவை ஆகும்.)

எண் - கதையின் தலைப்பு   - ஆசிரியர்/ஊர் /மின் அஞ்சல் 

1 இன்றே இப்படம் கடைசி  அறிவுச்செல்வன், மணப்பாறை 

 arivuchelvan62@gmail.com

2  சந்தித்த வேளை  முத்துசெல்வன், முசிறி  

muthsan20@gmail.com

3  மகாராணி அவனை ஆளலாம்  ஜீவி (ஜீ. வெங்கடராமன்), சென்னை

jeeveeji@gmail.com

4  தங்கரதம்  ஹரணி (டாக்டர் அன்பழகன்), தஞ்சாவூர்  uthraperumal@gmail.com

5  சந்திரா  என். சிவநேசன், ஆரியப்பாளையம், சேலம்  மா.   nsivanesan1988@gmail.com

6  பின்னணி நட்சத்திரம்  பத்மினி பட்டாபிராமன், சென்னை  

patturamini@gmail.com 

7  முதல் மருத்துவர்  டாக்டர் ஜே பாஸ்கரன், சென்னை 

bhaskaran_jayaraman@yahoo.com

8  ஊடாடும் பெருநிழல்  யதார்த்தா பென்னேஸ்வரன், கிருஷ்ணகிரி  kpenneswaran@gmail.com

9  வேண்டுதல்  மீ. மணிகண்டன், டெக்சாஸ், அமெரிக்கா  nam.manikandan@gmail.com

10  முடிவு  கிரிஜா ராகவன், சென்னை  

girijaraghavanls@gmail.com

அடுத்த பட்டியலில் 25 கதைகளின் விவரங்கள் வெளியாகும். நீளமாக இருப்பதால், பட்டியல் மட்டும் தனியாக இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் வெளியாகும். 

அன்புடன்,

இராய செல்லப்பா, சென்னை.   

அலைபேசி 9600141807

= = = = = =

2) கீழுள்ள பட்டியலில் ரூ. 1001 பரிசு பெறும் 25  “பாராட்டுக்குரிய சிறுகதைக” ளின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.. 

எண்  கதையின் தலைப்பு  ஆசிரியர்/ஊர் /மின் அஞ்சல் 

1 சிங்கிள் பேரண்ட்  சாரதா ஸ்ரீநிவாசன், சென்னை sandhiv007@yahoo.com
2  விடுதலையின் தூரம்  சு ரகுநாத், மதுரை  
paaduvaasi@gmail.com
3  மஞ்சக் கலருல ஒருபுடவ   கமலா முரளி, சென்னை 
kamalamurali63@gmail.com
4  காட்சிப் பிழை  கல்பனா சந்யாசி, சென்னை
   kalpana.sanyasi@gmail.com
5  நீதிக்குத் தண்டனை  என். நித்யா, திருப்பூர்  
nithyanagaraj2020@gmail.com
6  நாடகம்  அகிலன் கண்ணன், சென்னை
akilankannanpersonal@gmail.com
7  நீங்காது பூமாது  லதா சுப்ரமணியம், சென்னை 
subramaniamlatha@gmail.com
8  மாலி  எஸ். ராமசுப்ரமணியன், சென்னை 
essorres@gmail.com 
9  வளையோசை  ரேவதி பாலு, சென்னை  
revathy2401@yahoo.com
10  அறம் செய்ய விரும்பு  சாந்தி சந்திரசேகரன், திருவாரூர் 
santhichandrashekaran@gmail.com  
11 சலூன்  சு சுரேஷ், கலிபோர்னியா 
shompens@gmail.com
12  வழித்துணை  இந்திரா நீலன் சுரேஷ், சென்னை  
sureshkrenganathan@gmail.com
13  சுரண்டல்கள்  நா. பா. மீரா, சென்னை 
parthasarathy.meera@gmail.com
14 காலம் என்ற நீட்சியுடன்  கே. எஸ். சுதாகர், ஆஸ்திரேலியா 
kssutha@hotmail.com
15 தையலின் தடம்  முகிலன் அப்பர், சென்னை 
paaventharrasigan@gmail.com
16 கரையேற்றம்  வசந்தா கோவிந்தராஜன், சென்னை 
vasanthagovindarajan4@gmail.com 
17 கீரோபதேசம்  உஷாதீபன், சென்னை ushadeepan@gmail.com
18 கிருஷ்ணன் என்னும் சாரதி  எச் என் ஹரிஹரன், சென்னை 
hariharan.hnh@gmail.com
19 சகரியதா  எஸ் எல் நாணு, சென்னை
slnaanu@gmail.com 
20 மார்ட்டின் வாத்தியார்  பி. ஸ்ரீராம் சென்னை
sri.esi89@gmail.com
21  குள்ளம்  அழகியசிங்கர், சென்னை 
azhagiyasingar.virutcham@gmail.com
22  மூன்றாம் தளம், 301 ஆம் வீடு  எம் சங்கர், சென்னை 
emyes_04@yahoo.co.in
23  ரேணுப்பாட்டியும் பாக்குவெட்டியும்  புலியூர் அனந்து, சென்னை 
puliyoor_ananth@yahoo.com
24  இரப்பன்  பரிவை சே குமார், அபுதாபி 
kumar006@gmail.com
25  ஒரு பிரியமான கதை  ஸ்ரீமதி ரவி, சென்னை  
srisriravichandran@gmail.com

அன்புடன்,
இராய செல்லப்பா, சென்னை.

= = = = = = = = = = = =

மகிழ்ச்சியான விஷயம் என்ன என்றால், மொத்தம் 355 கதைகளில் பரிசுக்கும், பாராட்டுக்கும் உரிய 35 கதைகளில் எ பி குடும்பத்தைச் சேர்ந்த 4 எழுத்தாளர்கள் - ஜீ வி, ஸ்ரீராம், உஷாதீபன், பரிவை சே குமார் - ஆகியோர் இடம் பெற்றிருப்பதுதான்! 

வாழ்த்துங்கள்; வாழ்த்துகள் !! 

செல்லப்பா ஸார் இந்த விவரங்களை அவர்  தளத்திலும் பதிவு செய்திருக்கிறார். இங்கு க்ளிக்குக 

ஜீ வி பதில்கள் 

= = = = = = = = = = =

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

1. கேள்வி:   நீங்கள் வாசித்த எந்த நாவல் சிதைக்கப்படாமல் படமாக்கப்பட்டிருப்பதாக கருதுகிறீர்கள்? மிகவும் ஏமாற்றமளித்த 
(நாவல்) படம் எது?

பதில்:  அடிப்படையிலேயே திரைப்படமும் நாவலும் வெவ்வேறு உருக்கொண்டவைகள்.  அவை சொல்லப்படும் நேர்த்தியில் வித்தியாசம் காட்டி  தோற்ற மயக்கம் கொள்ளச் செய்யும் ஜிகினா வேலைகள் இரண்டுக்குமே நிரம்ப உண்டு. .  உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான் என்ற இரண்டு நெடுங்கதைகளையும் எழுதிய ஜெயகாந்தனே அவற்றை திரைப்படங்களாக இயக்கியிருந்தார்.  உ.போ.ஒருவன் தேசிய விருது பெற்றது.  ஜெயகாந்தனின் வாசகர்களுக்குப் பிடித்திருந்த இந்த இரண்டு திரைப்படங்களும்  நாவல் வாசிப்பதைப் போலவே  அமைந்திருந்ததாலோ என்னவோ   வெகுஜனப் பார்வையில் வழக்கமான தமிழ்த்  திரைப்படங்கள் ரூபம் கொண்டு சோபிக்கவில்லை. ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்',  'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற இரு நாவல்களும் பீம்சிங் இயக்கத்தில் திரைப்படங்களாக வெளிவந்த பொழுது அவை திரைப்பட வார்ப்பு  பெற்ற திரைப்படங்களாக சோபிதம் கொண்டன.  சிதைக்கப்படுதல்  என்ற வார்த்தைப் பிரயோகம் கொள்ளாமல் எழுத்து, திரைப்படம் குறித்த ஒவ்வொரு காலகட்ட உருவாக்கங்களின் வெளிப்பாடாக இவற்றைக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.    தகழியின் 'செம்மீன்'  நாவல் அந்நாளைய திரைப்படமாகவும் வெளிவந்தது. அது பற்றி பின்னூட்டங்களில் கருத்துச் சொல்ல வேண்டுகிறேன்.

நெல்லைத்தமிழன்: 

2. கேள்வி:   மாற்றுக் கருத்தையும்,  கடுமையாக உங்கள் கருத்துக்களை எதிர்த்து எழுதுபவர்களையும் நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?  நேர்மையாக அவற்றை ஆராய்ந்து நம் கருத்து சரிதானா என்று யோசிப்பீர்களா இல்லை பொடிசுககுக்கு என்ன அனுபவம் இருக்கும் என்று மனதில் தோன்றுமா?

பதில்:  பொதுவான விஷயங்களின் கருத்துக்களை பொதுத்தளங்களில் எதிர் கொள்வதே சரியான அணுகுமுறையாக இருப்பதில்
நிறைய அனுகூலங்கள் இருக்கின்றன.  கருத்துக்கள் என்றைக்குமே குழு மனப்பான்மை கொண்டவை தாம்.   அதனால் அந்த பக்கம்  நான்கு என்றால் இந்த பக்கமும் நான்கு என்று ஆதரவு பெறுவது நிச்சயம்.  அதனால் புது நண்பர்கள் கிடைப்பது இயல்பு.   எந்தக்  கருத்தையுமே அந்த கருத்து வாழ்க்கையில் தன்னை பாதித்த விதத்தை வெளிப்படுத்த வாய்ப்பாகக் கருதுவோருக்கு எதிர் கருத்தின் பின்னணியில் உள்ள மனிதர்கள் மறைந்து தன் கருத்தைப் பதிவதே பிரதானப் பட்டுப் போகும்.  

3.  கேள்வி: மயிர், நாற்றம் போன்ற நல்ல தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்தோ இல்லை மாறுபட்ட அர்த்தத்திலோ பயன்படுவது மொழியின் சிதைவு தானே!  மொழி தன் வார்த்தையை விட்டு விட்டு வேறு மொழியிலிருந்து வார்த்தையை எடுத்துக் கொள்வதோ இல்லை பயன்பாட்டில் வைத்திருப்பதோ மொழியின் அழிவைத்தானே குறிக்கிறது?

பதில்: எந்த மொழியும் மக்களின் பயன்பாட்டில் இருக்கும் வரை தான் அவை வாழும் என்பது எழுதப்படாத விதி.  மக்களின் புழக்கத்தில் இருக்கும் பிற மொழி சார்ந்த வார்த்தைகளின் ஊடுருவல் குறுக்கீடுகளும் சேர்ந்தே எல்லா மொழிகளையும் பாதிக்கின்றன. மயிர், நாற்றம் போன்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்கள் மழுங்கிப் போனதும் இதனால் தான்.  
உலகிலேயே ஆங்கில மொழி பிற மொழிகளிடமிருந்து எடுத்துக் கொண்ட வார்த்தைகள் எக்கச்சக்கம் என்று சொல்கிறார்கள். அதனாலேயே ஆங்கிலத்திற்கு இந்த அளவுக்கு அகில உலக வளர்ச்சியாம்.  என் பதில்களிலேயேயே தமிழ் மாதிரியே தோற்றம் தருகிற வடமொழி வார்த்தைகள் இயல்பாகச் சேர்ந்திருப்பதையும் பார்க்கலாம்.   

4.  கேள்வி:  5--6 வயது சிறு வயது திருமணங்களின் காரணமே பிற மதத்தினரின் படையெடுப்பால் தான் நிகழ ஆரம்பித்த்து என்று படித்தேன்.  அப்படி இருக்குமா?

பதில்:  மணமானப் பெண்களைத் தொடலாகாது என்ற கட்டுப்பாட்டு உணர்வு படையெடுத்து வந்தவர்களுக்கு இருந்திருக்குமென்று நான் நினைக்கவில்லை,     இக்காலத்தில் கூட இல்லாத -- என்ற வரியையும் எங்கேயாவது உங்கள் இஷ்டப்படிச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

5.  கேள்வி:  கதை கட்டுரைகளில் விலாவாரியாக சாப்பாட்டு விஷயங்கள் எழுதப்படுவதை ரசிக்க முடிகிறதா?

பதில்:  கதைப் போக்கிற்கு உருத்தாமல் இருக்கும் வரை சரியே.   சாப்பாட்டு விஷயமே கதையாயிருப்பின் கேட்கவே வேண்டாம்.  ரசனையே ரசமாகி விடும்.  கட்டுரைகளைப் பொறுத்தவரை சம்பந்தமேயில்லாத விஷயங்களையும் தன் விருப்பம் போல சுவாரஸ்யமாக்கி உள்ளே நுழைத்து கொடி நாட்டுகிற சாமர்த்தியசாலிகள் நிறையவே நம்மிடம் உண்டு. 

6. கேள்வி:  ஜெயகாந்தன்,  ஜெயமோகன் இருவரையும் ஒப்பிட வேண்டாம்.  இருவரைப் பற்றியும் அவர்கள் படைப்புகள் பற்றியும் கூறுங்களேன்.

பதில்:  ஜெயகாந்தன் கட்டுக்குள் அடங்கிய கட்டுக்கோப்பான எழுத்துக்கு சொந்தக்காரர்.  அவரது பேச்சிலும் எழுத்திலும்  அவருக்கு வசமாகியிருந்த அந்த மணிப்பிரவாள நடை ராஜ கம்பீரத்துடன் வந்து உட்கார்ந்து அழகைக் கூட்டும்.  அவர் தன்னிலும் மேலாய்  நேசித்த பாரதியை தன்னிலேயே சுவீகரித்துக் கொண்டார் என்ற பிரமை அவருடன் பழகிய பலருக்கு ஏற்பட்ட உணர்வு.  ஜெகே பாசாங்கற்றவர்.  தமிழின் சிறுகதை இலக்கியத்திற்குப் பெருமை சேர்த்த அவர் காலத்து யுகப்புருஷர்.

கொசுறு:  ஜெயகாந்தன் அவர்களுடனான பழக்கத்தின் பாதிப்பில் என்னில் படிந்த ஒரு பழக்கமும் உண்டு.  சிறுகதைகளை எழுத ஆரம்பிக்கும் முன் அந்தக் கதைக்கான முடிவை தீர்மானித்து விட்டுத் தான் எழுதத் துவங்க்குவது.   பின் குத்து மதிப்பாக ஓரிடத்தில் ஆரம்பித்து தொடரும் கதைக்கு தொடர்பான இஷ்டப்பட்ட விஷ்யங்களைச் சேர்த்து முடிவு நோக்கி விரைகிற மாதிரி எழுதுவது.

ஜெயமோகனின் எழுத்தோ அவரின் கட்டுப்பாட்டிற்கே அடங்காத காட்டாற்று வெள்ளம்.  எளிய வாசகர்களுக்கு லேசில் புரிந்து விட முடியாத அளவுக்கு மிரட்டுபவை.  அதற்குத் துணையாக  மேற்கு  நாட்டு கலை இலக்கிய உலகின் பொதுச் சிந்தனை போக்கில் புரளும் வார்த்தைகளான  செவ்வியல் (Classical)  நவீனத்துவம் (modernism), பின் நவீனதுவம் (post-modernism), பின்னை பின் நவீனத்துவம் போன்ற வார்த்தைகளை வெகு சுலபமாக கட்டுரைகளின்  இடையிலிட்டு அவர் வரையறுக்கும் வாசிப்புலகில்  மாட்டிக் கொண்டால் அதெல்லாம் பற்றி அறியாதோருக்கு விழி பிதுங்கிப் போகும்.  வால்யூம் வால்யூமாக எழுதிக் குவித்த பெருமை கொண்டவர்.   அவரது விஷ்ணுபுரம் புதினமும் இலக்கிய வட்டமும் அவருக்காக வாழ்வது.  ஜெமோ  தொலைபேசி இலாகாவில் பணி புரிந்தவர் என்பதில்  அந்த இலாகா சார்ந்தோருக்கு இயல்பான ஒரு பெருமையும் உண்டு.

7. கேள்வி: பிற துறைகளில் அனுபவசாலிகள் கொண்டாடப்படும் பொழுது (அவருக்கு இந்த ஃபீல்டுலே எவ்வளவு எக்ஸ்பீரியன்ஸ் தெரியுமா?)  கலை உலகில் மட்டும் அந்த அனுபவம் செல்லுபடியாகாத காரணம் என்ன்?  ஒரு கலைஞன் காலத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொள்லவில்லை என்றால் இன்னும் அந்தக் காலத்திலேயே இருக்கிறார் என்று ஒதுக்கி விடுகிறார்களே?

பதில்: பொதுவாக இயல், இசை, நாடகம் சார்ந்த விஷயங்களை கலைத்துறையாக பாவிக்கும் பழக்கம் நம்மிடம்  இருக்கிறது.  இவற்றில் எது சார்ந்த எந்தத் துறையைக் குறிபிட்டு இந்தக் கேள்வி அமைந்திருக்கிறது என்று தெரியவில்லை. 
கலைத் துறையின் ஏகப்பிரதிநிதியாக திரைத்துறையையே முன்னிலைப்படுத்தும் துரதிர்ஷ்டம் தமிழ் நாட்டில் தான் உண்டு.
டிசம்பர் மாதத்தில் மட்டும் தவறாது சங்கீத சபாக்கள் களைகட்டி விடுகின்றன. கேரளத்தில், மராத்தி, மே.வங்கம், கர்நாடகம்,  தெலுகு பிரதேசங்களில் இன்றும் பல எழுத்தாசான்கள் மறக்கப்படாமல் நினைவு கொள்ளப்பட்டே வருகிறார்கள்.  சாகித்ய அகாதமி போன்ற அமைப்புகளும் இயன்றவரை இப்படியான போற்றல்களுக்குத் துணையாக இருந்து வரவே செய்கின்றன.  
என்ன தான் பழையன கழிதலும், புதியன புகுதலும் கால சம்பந்தப்பட்டவை ஆயினும்  தொன்மம் போற்றப்படாது மறக்கப்படுமாயின்  அந்தந்த இனக்குழு மக்களின்  நாகரிகமும், வாழ்வின் சரிதமும், அவர்களின் மொழி சார்ந்த வரலாற்றுச் சிறப்புகளும் அழிந்து  பட்டவையாகவே கொள்ளல் தகும்.

நெல்லைத்தமிழன் : 
8. கேள்வி:  கம்யூனிச சித்தாந்தங்கள் அடிப்படையிலேயே தவறாக இருக்கிறதல்லவா?  எல்லோருக்கும் எல்லாமும், அனைவருக்கும் எல்லாம் சமம் என்பதெல்லாம் கடும் தோல்வியடைந்த நிறைவேற்ற முடியாத சித்தாந்தங்கள் அல்லவா?

பதில்: இப்படி நாம் எல்லா தாத்பரியங்களையும்  மட்டைக்கு இரண்டாக தீர்வு கட்டிட இயலாது.  இக்காலத்து வாழ்க்கை முறைக்கு சாதகமாக இல்லாத ஒன்று இன்னொரு காலத்தில் போற்றித் துதிக்கப்படலாம்.    பொதுவுடமை சமுதாயத்தின் கூறுகள் தொன்ம தமிழ்த் திருநாட்டில் பழக்க வழக்கமாய் இருந்த ஒன்று தான்..  'இத்தகைய பண்பு நலங்கள் உள்ளவர்களால் தான் இவ்வுலகே இயங்குகிறது' என்று கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னன் பாடிய 'உண்டால் அம்ம இவ்வுலகம்'  மற்றும் 'நாம் சிறப்பாக வாழலாம் என்று எண்ணாது எல்லோர்க்கும் கொடுமதி மனைக்கிழவோயே' என்ற பெருஞ்சித்திரனாரது புறப்பாடல் எல்லாமே பொதுவுடமை சமுதாய மனப்பாங்கின் கூறுகள் தான்!   கம்பன் கண்ட இராமகாதை நெடுகவும் நாம் பொதுவுடமைச் சமுதாய வாழ்வியலைத் தரிசிக்கலாம்.   கம்ப ராமாயணம் அயோத்தி நகர் படலத்தில், 'கள்வர் இலாமை, பொருள் காவலும் இல்லை; யாதும் கொள்வார் இலாமை, கொடுப்பார்கள் இல்லை'   --  பொதுவுடமை சித்தாந்தங்கள் என்பது ஒரு வாழ்வியல் முறைதான், நெல்லை.   அந்த சிந்தாந்தத்தை அமுல் படுத்த ஆட்சிக்கு வந்த கட்சிகளின் ஒரு கால நடைமுறைத் தவறுகளையும், சித்தாந்தத்தையும் வேறுபடுத்திப் பார்க்க நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.  அவ்வளவு தான்.
        
9. கேள்வி:  காதல், பாசம், அன்பு, வாஞ்சை,  நம்பிக்கை என்பதெற்கெல்லாம் என்ன என்ன வேறுபாடு காண்கிறீர்கள்?

பதில்:  மன்னிக்கவும். கேள்வி புரியவில்லையே!    காதலில் ஆரம்பித்து வாஞ்சை ஈறாக நீங்கள் குறிப்பிட்டிருப்பவை எல்லாமே ஒரே தன்மைத்தான பொருள் கொண்டவைகளின் வெவ்வேறு சொரூபங்கள் தாம்!   

 நம்பிக்கை மட்டும் வேறு பொருள் கொண்டு இந்தப் பட்டியலில் இருந்து விடுபடுகிறது.

 10.  கேள்வி: பண்டை காலத்தில் அரசனை இந்திரன், சந்திரன் என்று வாய் வலிக்கப் பாடி பரிசில் பெற்ற புலவர்களுக்கும், 
ஜனநாயகத்தில் ஆளுபவர்களை கூசாமல் பாராட்டி பத்திரிகையில் எழுதும் பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?   
 
பதில்:  அந்நாளைய அரசர்கள் பலர் பாக்கள் இயற்றவும், புலவர் பாடும் பாடல்களைப் புரிந்து ரசிக்கவும் ஏன் அதில் தவறுகள் காணின் திருத்தவும் திறமை பெற்றிருந்தார்கள் என்று தெரிகிறது.  இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

11. கேள்வி:  ஒருவன் சம்பாதிப்பது அவனுடைய adult-ஆன வாரிசுகளுக்குப் போய்ச் சேராது, அவனுடைய மற்றும் அவன் மனைவியின் காலத்திற்கு அப்புறம் அரசாங்கத்தைச் சாரும், எந்த டிரஸ்டும் ஆரம்பித்தவரின் காலத்திற்கு அப்புறம் அரசாங்கத்தைச் சேரும் என்ற இரண்டு சட்டம் போட்டால் ஊழலே இருக்க வாய்ப்பில்லை அல்லவா?  அது போல அரசியல் அரசியல் கட்சிக்கும், தலைவர் மாறும் போது கட்சியின் சொத்து அரசாங்கம் வசமாகும் என்றும் சட்டம் வந்தால் ஊழலைப் பெருமளவு குறைக்கலாமே..  இது பற்றி உங்க்கள் கருத்து என்ன?

பதில்: அது சரி, சட்டம் இயற்றுவதற்கு முன் அது பற்றிய விவாதத்திற்குப் பிறகு வோட்டுக்கு விடுவாங்கள்லே?

12. கேள்வி: கல்கி எழுத்துக்கள் எல்லாம் காப்பி என்றெல்லாம் சொல்கிறார்களே.. இன்ஸ்பிரேஷன், அனுபவம், கேள்விப்பட்ட உண்மைத் தகவல்கள் இவையல்லாமல் ஒருவரால் நாவல், கதைகள் எழுத இயலுமா?

பதில்: எது காப்பியாம்?  பொன்னியின் செல்வனா?  பேராசிரியர் கல்கி அவர்கள் எவற்றிலிருந்து காப்பி அடிச்சாராம்?  ஹி..ஹி..  கல்வெட்டுகள்  செப்பேடுகள்,  ஓலைச்சுவடிகளிலிருந்தா?  கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள்!  ஒரு தவம் போல் எழுதியவர், பொன்னியின் செல்வனின் ஐந்தாம் பாகம் கடைசி அத்தியாயம் எழுதி முடித்து  நாவலின் தொடர்ச்சி இழையாக 9+9 என்று 18 குறிப்புகளை தன் அபிமான வாசகர்களுக்குக்  கொடுக்கிறார்.  பொ.செ. நாவலில் அவரது இறுதி வரிகள்:   "இக்கதையின் ஆசிரியரைக் காட்டிலும் அறிவிலும், ஆற்றலிலும், ஆராய்ச்சியிலும்  மிக்கவர் வருங்காலத்தில் சோழ சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட பல மகோன்னதமான  நவீனங்களை எழுதி தமிழகத்திற்கு மேலும் மேலும் தொண்டு செய்வார்கள் என்று நம்புகிறேன்" என்று முடிக்கிறார்.  இதல்லவா நல்ல ஒரு எழுத்தாளருக்கு அழகு!  காப்பி அடிச்சார் என்று  சொல்கிறவர் பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து அல்லது தன் தனிப்பட்ட படைப்பாய் சரித்திர நாவல் ஏதானும் சுத்த சுயம்பிரகாசமாய் எழுதறது தானே!..

அதெல்லாம் போகட்டும்..  2025 ஜனவரி இரண்டாவது வாரத்தில் சென்னையில் பிர்மாண்டமாக புத்தகத் திருவிழா தொடங்கி விடும்!
வழக்கம் போல வரும் ஆண்டும்  அதிகமாக மக்கள் வாங்கும் நாவல் பொன்னியின் செல்வனாகத்தான் இருக்கும்.  அதுவே தமிழ் மக்கள் கல்கி அவர்கள் படைத்த பொ.செ. மேல் கொண்டிருக்கும் அதீத அன்புக்கு எடுத்துக் காட்டு!

பானுமதி வெங்கடேஸ்வரன்

13. கேள்வி:  இப்பொழுது ரீ-மிக்ஸ் பாடல்கள் ஏன் வருவதில்லை?

      பதில்:  ரீ மிக்ஸ் புளிச்சிடுத்து போலிருக்கு!  அடுத்த மிக்ஸ் எதில் என்ற யோசனையில் இருக்கலாம்.

= = = = = = = =
எ பி பதில்கள் : 

நெல்லைத்தமிழன் : 

? எனக்குத் தெரிந்த சிலர், தினமும் தினப்பலன், தொலைக்காட்சி ஜோஸ்யர்கள் பேச்சுக்களைக் கேட்டு, அன்றைய உடை என்ன நிறத்தில் இருக்கணும் என்றெல்லாம் முடிவெடுக்கிறார்கள்.  இந்த மாதிரி ஜோஸியப் பிரியர்களை (நம்பிக்கையாளர்களை) கண்டிருக்கிறீர்களா? (நிஜ ஜோஸ்யத்தில் நம்பிக்கையுள்ளவர்களை நான் இங்குக் குறிப்பிடவில்லை)
  
# பல பேரைப் பார்த்திருக்கிறேன்  நியூமராலஜி சகுனம் சந்திராஷ்டமம் லாட்டரி சீட்டு வாங்க நல்ல ஹோரை என்று எல்லாவற்றுக்கும் பஞ்சாங்கத்தையும் ஜோசியர்களையும் நம்பின பல பேரை எனக்குத் தெரியும்.

& நானும் தினப்பலன், தொ கா ஜோதிடர்கள் சொல்வது எல்லாம் பார்ப்பது உண்டு. அது ஒரு பொழுபோக்குதான். அதன்படி நடப்பது - உடை அணிவது எல்லாம் இல்லை. கேட்டவுடன் மறந்துவிடுவேன்! 


? கேஜிஜி யாரென்றே தெரியாமல் இருப்பவருக்கு, கேஜிஜி வீட்டில் நல்லது நடந்தாலோ இல்லை தீயது நடந்தாலோ பாதிப்பு கிடையாது. ஆனால் அறிமுகம் என்ற ஒன்று வந்துவிட்டால், நமக்குத் தெரிந்தவருக்கு நடக்கும் நல்லது நமக்கு சந்தோஷமாக இருப்பதும், தீயது நடந்தால் மனது வருத்தப்படுவதும் எதனால் நடக்கிறது?

# மனதளவில் ஒருவருடன் பிணைப்பு என்பது நம் உணர்வுகளை பொருத்து அமையும் .  அவ்வாறான பிணைப்பு வந்துவிட்டால் அவர் மகிழ்ச்சி நமக்கு மகிழ்ச்சி.  அவர் வருத்தம் நமக்கும் வருத்தம் .  இது இயல்புதானே.

? தேனி கஷ்டப்பட்டு சேகரிக்கும் தேனை மனிதன் எடுத்துக்கொள்கிறானே... அப்படி இருக்கும்போது சக மனிதர்கள் தங்களுக்கு இல்லாததால் பிறர் பொருளை அபகரிக்கும்போது மாத்திரம் 'சட்டம்' பேசுவதும் அநியாயம் என்று கூவுவதும் நியாயமா?

# தேனீக்களுக்கு இந்திய குற்றவியல் சட்டம் பொருந்தாது அல்லவா ? இல்லாதவர் அபகரித்தால் தவறில்லை என்று வந்துவிட்டால் இல்லாதவர் என்பதற்கும் இருப்பவர் என்பதற்கும் மிகச் சரியான விளக்கத்தை தர வேண்டி இருக்கும் . அது அவ்வளவு எளிய காரியம் அல்ல.

? இன்று எங்கள் வளாக வாட்சப் க்ரூப்பில் ஒருவர் Pet Parents என்று ஒரு பதம் உபயோகித்திருந்தார். எனக்கு உடனே சிரிப்பாக இருந்தது.  குழந்தையைப் பெற்றுவிட்டு, அதனைப் பார்த்துக்கொள்ள வேலைக்காரர்களை நியமிப்பவர்கள் எப்படி தங்களை பெற்றோர் என்று அழைத்துக்கொள்ளும் உரிமை இருக்கும்? (Biological parents என்று சொல்லிக்கொள்வதில் தவறில்லை). அதுபோல நாயை நடத்தி, அதனுடைய தினக்கடன்களை வேலைக்காரர்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, வெறும் உணவைப் போட்டு வீட்டில் கட்டி வைப்பதால் பெற்றோர் என்று சொல்லிக்கொள்ளும் அருகதை வந்துவிடுமா?

# தங்கள் செல்வப் பிராணிகளுக்கு தம் குடும்பத்தில் ஒருவர் போல் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து  அவைகளோடு சம்பாஷணை நடத்துபவர்களையும் எனக்குத் தெரியும். அவ்வாறான சேவைகளை ஒரு ஆளை சம்பளத்துக்கு அமர்த்தி செய்வித்துக் கொண்டால் அதில் பெரிய தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் நாயைப் பிள்ளை போலவோ தம்மை அந்த நாயின் தந்தை போலவோ பாவித்துக்கொள்கிற  மனப்பான்மையின்மேல் எனக்கு மரியாதை இல்லை.

? தமிழ் படங்களில் சின்னவயது கதாநாயகனாகவோ இல்லை பையனாகவோ இல்லை இறைவனாகவோ (முருகன், கிருஷ்ணன்....) நடிக்க பெண் குழந்தைகளையே நடிக்க வைக்கிறாங்களே.. அதன் காரணம் என்ன? ஆண் குழந்தைகளோ இல்லை சிறுவர்களோ அழகாக இருக்கமாட்டார்கள் குரூபிகள் என்ற காரணமா?

# சிறுவர்களைக் காட்டிலும் சிறுமியர் கண்களைக் கவர்வது என் வரையில் உண்மைதான். ( காரணம் எனக்கு பேத்திகள் இல்லவே இல்லை என்பதாக இருக்கலாம். )

1947-50 சமயம் லலிதா பத்மினி‌ நடன நிகழ்ச்சிகளில் பெண் பாத்திரங்களுக்கு லலிதாவும் ஆண் பாத்திரங்களுக்கு பத்மினியும் நடனம் ஆடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

& ஏங்க நெல்லை - சினிமாவில் நான் ரசிக்கின்ற சில காட்சிகள் கூட இருக்கக் கூடாது என்ற எண்ணமா !! 


இந்தப் பாடல் காட்சியில், கோதையாக கு பத்மினிக்கு பதில் சிறுவன் கமல்ஹாசனை நடிக்க வைத்திருந்தால், அவன் வளர்ந்து கே ஆர் விஜயா ஆகாமல், எஸ் ஏ அசோகனாக மாறி, " கிருஷ்ணா - உன்னை கிறு கிறுக்க வச்சி, கோவர்த்தன மலையைத் தூக்கி உன் தலையில் வைத்து, தெருத் தெருவா அலைய வெக்கலைனா என் பேரு xxxx இல்லை " என்று வசனம் பேசினார் என்றால் பார்க்க பயமாக / அன்சகிக்கபிளாக இருக்காதா? 

கே சக்ரபாணி - சென்னை 28: 

? முன்பெல்லாம்  பெண் வீட்டார்  மாப்பிள்ளை பார்க்க வரும் போது  பையன். கைநிறைய  சம்பாதிக்கறான் ன்னு  சொல்வாங்களே . கைநிறைய  என்பது  எவ்வளவை குறிக்கிறது?  

# "கைநிறைய" என்பது தேவைக்கும் சற்றுக் கூடுதலாக என்ற பொருளில்தான் வழங்கி வருகிறது.

& ஒருவேளை பையனுக்கு கை நீளம் என்பதைக் குறிக்கிறதோ? கையூட்டு என்பதைக் குறிக்கிறதோ? 

? ஜி பே  என்று  ஒன்று  இருப்பது  சௌகரியமாகத்தான் இருக்கு. ஆனால்   செலவு செய்யும் போது நம்மைமீறி  அதிகம்  செய்து விடுகிறோம் தங்கள்   அனுபவம் எப்படி ? 

# Take care of the pennies, pounds will take care of themselves என்று சொல்வோமே.  அது பொருள் பொதிந்தது. " ஆற்றிலே கொட்டினாலும் அளந்து கொட்டு " என்பதும் கூட நமக்கு பரிச்சயமான ஒரு சொல்லாடல்தானே !

& நம் கையால் தொட்டுக் கொடுக்கும்போது, ஒவ்வொரு ரூபாயும் நம்முடைய கையிலிருந்து செல்வது நமக்கு ஒரு பிரிவுணர்வைத் தருவது உண்மைதான். ஆனால் GPay, PhonePe எல்லாம் அந்த உணர்வைத் தருவது இல்லை. படாஃபட் - அவ்வளவுதான். அப்புறம் மறந்துவிடும்! 

? ஜவுளி கடையில் நாம் விரும்பிய  துணிகளை வாங்கியதைவிட  அவர்களிடமிருந்து   . கட்டப்பை வாங்குவதே  மனதிற்கு  திருப்தியாக இருக்கிறது.  சரியா? 

# டெல்லியில் ஒரு கண்காட்சி. அதிலே ஒரு வெளிநாட்டு நிறுவனம் தமது பொருள்களைப் பற்றிய விளக்கங்களை தூண்டறிக்கைகளாக அச்சிட்டு அதை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு இலவசமாக வழங்கினார்கள். இதை வாங்குவதற்கு ஏகப்பட்ட கூட்டம் கூடிப் பெரிய தள்ளுமுள்ளு. காரணம், அந்தப் பை கொஞ்சம் தரம் உயர்வாக இருந்ததுதான்.‌ அந்த கண்காட்சி ஸ்டால் மேலாளர் என்னைப் பார்த்து, " ஒரு காகிதப் பைக்கு இப்படிப் பறக்கிறார்களே -என்ன ஜனங்கள் இவர்கள் " என்று சொல்லிவிட்டு அதற்கு மேல்  " பைகள் வழங்கப்படப் போவதில்லை " என்று அறிவித்து எடுத்து உள்ளே வைத்து விட்டார். நான் மிகவும் அவமானகரமாகவும் வெட்கக்கேடாகவும் உணர்ந்த தருணம்.‌

& ஏதோ ஒன்றாவது காசு கொடுக்காமல் நமக்குக் கிடைக்கிறதே என்ற சந்தோஷமாக இருக்குமோ? 
நகைக் கடைகளில் - நம்முடைய பர்ஸ்ல இருக்கிற பணத்தை எல்லாம் (நகைக்காக) உருவி எடுத்துக்கொண்டுவிட்டு - பில் செலுததும்போது நமக்கு ஒரு ஓ சி பர்ஸ் தருகிறார்கள். நாமும் அகமகிழ்ந்து அதை வாங்கிக்கொண்டு வீடு வருகிறோம் என்று எங்கோ படித்தேன்! (ஒருவேளை அது சக்ரபாணி (!) வாசகர் பக்கத்தில் முன்பு பகிர்ந்ததாக இருக்குமோ? ) 

= = = = = = = = 

52 கருத்துகள்:

  1. //கட்டப்பை வாங்குவதே//- இது பொதுவான மனித இயல்பு. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் சம்பந்தமான காணொளியில், இலவச குக்கரோ இல்லை பணமோ கொடுக்க வந்தவரிடம் ஓரளவு நல்ல வீட்டுக்குச் சொந்தக்கார்ர், எங்கள் வீட்டில் இத்தனை வாக்குகள் இருக்கின்றன என்று சொல்லி கறாராக வாங்குவதைக் கண்டேன். இதைப் பார்த்து, அவர்கள் பிச்சைக்கார்ர்களைவிடக் கேவலமானவர்கள் என்று சொல்லிவிட முடியாதில்லையா

    பதிலளிநீக்கு
  2. வெளிநாடுகளில் பல கான்ஃபரன்ஸ், எக்சிபிஷன்களில் பலவிதமான பொருட்கள் சில பல ஸ்டால்களில் கொடுப்பார்கள். இங்கிலாந்தில் அப்படிப்பட்ட எக்சிபிஷனில் (கணிணி சம்பந்தப்பட்டது) வருபவர்களுக்கு (விருப்பப்பட்டவர்களுக்கு) கழுத்து, உடம்பு பிடித்துவிட, இரண்டு அழகிய பெண்கள் அமர்த்தியிருந்தார்கள். அனுபவத்திற்காக புகைப்படம் எடுத்துக்கொண்டேன், பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் எடுத்தது, உங்களுக்கு உடம்பு பிடித்துவிடும்போதா அல்லது அதற்குப் பிறகா?

      நீக்கு
    2. எனக்குஅந்த அந்த மொமெண்டை நினைவு வைத்துக்கணும். அதனால் உடம்பு பிடித்துவிடும்போதுதான் (கழுத்து பிடித்துவிடும்போது)

      நீக்கு
    3. மச்சம்தான் உங்களுக்கு!!

      நீக்கு
  3. //செலவு செய்யும்போது அதிகம்//- இதெல்லாம் காலத்தின் மாற்றங்கள். வீட்டுப் பெரியவர்களிடம் சம்பளக் கவரைக்்கொடுத்துவிட்டு, செலவுக்குக் கேட்கும்போது ஒரு கன்ட்ரோல் இருந்தது. நம் கையில் பணம் புழங்கும்போது (வேலைக்குப் போகும் ஆரம்ப காலத்தில்) செலவழிப்பது அதிகமானது. பொறுப்பு வந்ததும் யோசித்துச் செலவழிக்கும் சுபாவம் வந்தது.

    இப்போதும் எனக்கு யூபிஐ மூலமாக பணம் அனுப்புவதென்றால் யோசித்து, பெயர் சோதித்து, அதிகமான பணம் என்றால் ஒரு ரூபாய் அனுப்பி கன்பர்ம் செய்துகொண்டுதான் அனுப்புவேன். ஆறு மாதங்களுக்கு முன் அவசரத்தில் அனுப்பி கொஞ்சம் மனக் கஷ்டம் அடைந்தது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனைவிக்குச் செய்யும், மற்றும் வீட்டுக்கு அவசியமான சிறு செலவுகள் தவிர, மற்றவற்றை மனைவியின் அல்லது பசங்களின் ஆலோசனை கேட்டு பிறகுதான் முடிவெடுக்கிறேன்.

      நீக்கு
    2. எனக்கு ஒரு ரூபாய் அனுப்புங்கள். நீங்க சொல்வது சரியா இல்லையா என்று சோதித்துப் பார்க்கிறேன்! (என்னுடைய வாட்ஸ்ஆப் எண் வேறு - gpay எண் வேறு !! ;))

      நீக்கு
    3. அந்த 1 ரூ, உங்களுக்கு 1000 ரூக்கு மேல் அனுப்பவேண்டும் என்றால்தான் வரும். ஹா ஹா

      நீக்கு
  4. //முன்பெல்லாம் பெண்வீட்டார்//- இப்போல்லாம், வீடு(கள்) சொந்தமா இருக்கா, சம்பளம் என்ன (ஆதாரத்துடன்), எக்ஸ்ட்ரா லக்கேஜ் உண்டா, கூடப் பிறந்தவர்களுக்கான கடமைகள் உண்டா, இஎம்ஐ எவ்வளவு, பேங்க் பேலன்ஸ் என ஏகப்பட்ட கேள்விகள் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்! ஆனால் லவ் செய்பவர்கள் இதெல்லாம் கேட்டுக்கொள்வது உண்டா?

      நீக்கு
    2. ஆண்பிள்ளைதான் அசடு என்பது என் எண்ணம். ஆனால் பெண், இதையெல்லாம் செக் செய்துகொண்ட பிறகுதான் பெரும்பாலும் காதலைத் தெரிவிப்பாள். அவர்களிலும் அசடுகள்தாம், ஆளைப் பார்த்து மாத்திரம் காதலில் விழுந்து வாழ்க்கையைத் தொலைப்பது என்பது என் எண்ணம்.

      நீக்கு
  5. இன்றைய பதிவு, அளவுக்கு அதிகமான நீளம், ஏகப்பட்ட கேள்விகள் உள்ளடக்கியதால் ரசிக்கவில்லை, அயர்ச்சி மற்றும் நீர்த்துப்போய்விட்டது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகிழ்ச்சியான விஷயம் என்ன என்றால், மொத்தம் 355 கதைகளில் பரிசுக்கும், பாராட்டுக்கும் உரிய 35 கதைகளில் எ பி குடும்பத்தைச் சேர்ந்த 3 எழுத்தாளர்கள் - ஜீ வி, ஸ்ரீராம், உஷாதீபன், பரிவை சே குமார் - ஆகியோர் இடம் பெற்றிருப்பதுதான்! //

      தன் தாயாரின் மீதுள்ள அன்பின் வெளிப்பாடாய் சிறுகதைப் போட்டியை நடத்திய நம் அருமை நண்பர் இராய. செல்லப்பா அவர்களே எபியுடன் தொடர்பு கொண்டவரும் தம் சொந்த படைப்புகளை மனமுவந்து எபி பிரசுரத்திற்காக அளித்தவர் தானே! ஆக, எபிக்கு எல்லாவிதங்களிலும் பெருமை தான்!





      நீக்கு
    2. ஆமாம். எங்கள் வேண்டுகோளுக்கிணங்க செல்லப்பா சார் கதைகளும் செவ்வாய் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.

      நீக்கு
  6. ​இந்த வார கேள்வி பதில்களில் சில கேள்விகளுக்கு பதில் என்ற முறையில் இல்லாமல் அவரவர் கருத்துக்கூறல் (அரட்டை, discussion) என்ற முறையில் அமைந்து விட்டது. ஜீ வி சாரின் பதில்கள் ஜெயமோகனின் பதில் போலவே நீண்டதாக அமைந்து விட்டது. பதில்களில் விளக்கம் நிறைய. ஆனால் கடைசியில் ஒன்றும் நினைவில் நிற்கவில்லை. அதாவது அரசு பதில்கள் போன்று இல்லை.

    கேள்வி பதில்கள் நிறைய ஆகிவிட்டதால் இந்த வாரம் kgs பற்றிய கட்டுரை இடம் பெற்வில்லை என்று தோன்றுகிறது.

    நெல்லையையும் பா வே யையும் விட்டால் வேறு எந்த வாசகர்களும் கேள்விகள் கேட்காதது ஒரு குறைதான்.


    Jayakumar

    பதிலளிநீக்கு
  7. அரசு பதில்கள் போல பதிலளிக்க எனக்கும் ஆசை தான்! அதற்கு நீண்ட பதில்களைக் கோறாத மாதிரி கேள்விகள் அமைய வேண்டும்.
    அப்படியான கேள்விக்கு நான் ஒரு வரியில் பதிலளித்தால் கேள்வி கேட்டவரை அவமதிப்பது போலாகி விடும்.

    அரசு பதில்களில் வருகிற மாதிரி சின்னச் சின்ன கேள்விகளைக் கேட்டு நீங்கள் கூட இந்தப் பகுதியை சூடேற்றலாமே ஜெஸி ஸார்.

    பதிலளிநீக்கு
  8. 6-வது கேள்வி பா.வெ. அவர்கள் கேட்டிருக்கும் கேள்வி. தவறுக்கு வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயமோகன்,ஜெயகாந்தன் பற்றிய கேள்வி என்று குறிப்பிட்டிருக்கலாம். திருத்த முடியாதா?

      நீக்கு
    2. ஜெயமோகன்,ஜெயகாந்தன் பற்றிய கேள்வி என்று குறிப்பிட்டிருக்கலாம். திருத்த முடியாதா?

      நீக்கு
    3. பானுக்கா...  சரி  செய்திருக்கிறேன், பாருங்கள்.

      நீக்கு
    4. நானும் கவனிக்கத் தவறிவிட்டேன். பா வெ மன்னிக்கவும். கேள்விகள் கேட்டவர்கள் பெயர்கள் சில இடங்களில் மாறி இருந்தது. அவற்றை கவனமாக சரி செய்தேன். ஆனால் இது விட்டுப் போய்விட்டது.

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. //தகழியின் 'செம்மீன்' நாவல் அந்நாளைய திரைப்படமாகவும் வெளிவந்தது. அது பற்றி பின்னூட்டங்களில் கருத்துச் சொல்ல வேண்டுகிறேன்.//
    ஜெஸி ஸார் உங்களை நினைத்துத் தான் என் பதிலில் இந்த வரியைச் சேர்த்தேன். செம்மீன் -- நாவல், அதன் திரைப்பட ஆக்கம் இரண்டும் குறித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​செம்மீன் நாவல் வாசித்ததில்லை. கயறு வாசிக்க முயற்சி செய்து இடையில் உறங்கி விட்டேன். பின்னர் வாசிக்கவில்லை. செம்மீன் திரைப்படம் கும்பகோணத்தில் படிக்கும் காலத்தில் பார்த்தது.

      நீக்கு
    2. செம்மீன் படம் மட்டும் பார்த்துள்ளேன். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை!

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    சகோதரர் இராய செல்லப்பா அவர்கள் தன் அம்மாவின் நினைவாக நடத்திய சிறுகதை பரிசு போட்டியில், பங்கு பெற்ற நம் எ. பி குடும்ப சகோதரர்கள் ஜீவி அவர்கள், ஸ்ரீ ராம் அவர்கள், பரிவை சே. குமார் அவர்கள் போன்றோர் பரிசு பெற்றது அறிந்து மிகவும் மனம் மகிழ்கிறேன். பரிசு பெற்ற சகோதரர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. ​திரை நடிகர்களை நட்சத்திரம் (star, suoer star) என்று குறிப்பிடுவது ஏன்?

    ​அச்சு புத்தகம், கிண்டில் புத்தகம் இரண்டில் எது வாசிப்பிற்கு சிறந்தது?

    மதவெறி மிகுந்தது ஏன்? அடுத்த உலகப்போர் மதத்தை முன் நிறுத்தி நடத்தப்படுமா?

    ஜீவி அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்துவிட்டாரா?


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கேள்விகள் ஜீவி ஸாருக்கா? எபி ஆசிரியர்களுக்கா? என்பதைக் குறிப்பிடவும்!

      நீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கங்கள்
    பரிசுப்போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். குறிப்பாக நமது குழுவில் இருக்கும்
    திரு. ஜீவி அவர்கள்
    திரு. ஸ்ரீ ராம் அவர்கள்
    திரு. பரிவை. சே. குமார் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  14. ஜீ.வி. சாரின் பதில்கள் பித்தளை டபரா டம்ளரில் கும்பகோணம் டிகிரி காபியை நுரைக்க ஆற்றி சூடாக குடித்த நிறைவைத் தந்தன. அதுவும் ஜெகா, ஜெமோ குறித்த கேள்விக்கான பதிலும், கம்யூனிசம் குறித்த கேள்விக்கான பதிலும் பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருந்தது!

    பதிலளிநீக்கு
  15. ரசனைக்கு நன்றி, பா.வெ.

    ஆற்றோட்டமான எழுத்து நடை என்பதன் ரகசியம் இது தான்.

    குடந்தை டிகிரி காப்பி பற்றி சொல்ல ஆரம்பித்தவுடனேயே
    பித்தளை டபரா-டம்ளர், நுரை பொங்கல் என்று தொடர்ந்தது அந்த பேஷ், பேஷில் முடிகிறது பாருங்கள்! நீங்கள் குறிப்பிடாமலேயே உசிலை மணியும், நரசுஸ் காபி விளம்பரமும் நம் நினைவுக்கு வரும்.

    எழுத எழுத நம்மில் படியும் எழுத்து ரகசியத்தின் அழகு பற்றி நினைக்க நினைக்க பெருமிதமாகத்தான் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  16. காலை எழுந்ததில் இருந்த உடல் நலக் குறைவு..

    சிறுநீர் அட்க்க முடியாமள் தடுமாற்றம்.. அதிக அளவில் சிறு நீர் பிரிகின்றது..

    சர்க்கரை கட்டுக்குள் தான் இருக்கின்றது..

    அன்பினொடு
    எனக்காக
    பிரார்த்தனை
    செய்து கொள்ளுங்கள்

    எல்லாம் எனை ஆளும் ஈசன் செயல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    2. நீர்ச்சுருக்கு என்ற உபாதையாக இருக்கலாம். எனக்கு முன்பு அடிக்கடி வந்தது உண்டு.
      என் அம்மா என்னுடைய இரண்டு கால் கட்டை விரல் நகம் மீதும் சுண்ணாம்பு பூசி, புளி கரைத்த நீரை நிறையப் பருக கொடுப்பார். ஒரே நாளில் இயல்பு நிலை திரும்பும்.

      நீக்கு
    3. இளநீர் கூட நிறைய குடிக்கலாம்.

      நீக்கு
    4. வணக்கம் சகோதரரே

      இப்போது தங்கள் உடல் நலம் எப்படி உள்ளது? நாளை சரியாகி விடும். நல்லெண்ணையை வயிற்றில் பூசிக் கொண்டால் உஷ்ண சம்பந்தபட்ட உபாதைகள் உடனே குணமாகும். தங்களுக்கு தெரியாததல்ல...! கவலை வேண்டாம். தங்கள் உடல் நலம் விரைவில் பூரணமாக குணமாக இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. இன்றைய வியாழன் பதிவில் கருத்தைக் கண்டு இங்கு வந்து பார்த்தேன். விரைவில் குணமாகப் ப்ரார்த்தனைகள்.

      நீக்கு
  17. இன்றைய கேள்வி பதில்கள் பல விடயங்களையும் தந்தன.

    சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற நமது பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. கம்யூனிஸம் பற்றிய நீண்ட கேள்வியிலேயே அவர் விருப்பப்படியே பதில் அமைய வேண்டும் என்பதற்காக நெல்லை ஒரு கொக்கி வைக்கிறார்.
    'கம்யூனிஸ சித்தாந்தம் என்பது அடிப்படையிலேயே தவறாக இருக்கிறதல்லவா' என்று
    தன் கருத்தைப் பதிந்து தான் விரும்புகிற பதிலை எதிர்பார்க்கிறார். கம்யூனிஸம் என்பது நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை, நெல்லை என்று சொல்வதற்கான பதிலாகவே அது அமைந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் விருப்பப்படியான பதிலை எதிர்பார்க்கவில்லை. உங்களை வம்புக்கு இழுத்து மேலதிகத் தகவல் பெறும் முயற்சி அது.

      நீக்கு
  19. குமுத அரசு பதில்கள் போல என்றால் அரசுக்கான குமுதக் கேள்விகள் போல் இருக்க வேண்டாமோ?

    இது தான் அடிப்படை கோளாறு. இது மாறினால் அதுவும் (பதிலும்) மாறும்.

    பதிலளிநீக்கு
  20. அடுத்த கேள்வி;

    'இத்தனை காலம் அரசு பதில்கள் மாதிரி' -- என்ற எதிர்பார்ப்பு இருந்ததில்லை.

    இப்பொழுது ஏன் புதுசாக அந்த எதிர்பார்ப்பு?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!