Wednesday, February 15, 2017

புதிர்களின் புதன் 170215


சென்ற  வாரக்  கேள்விகள் : 

1 )   புதன் கிழமை என்றால், வியாழன் என்ன? 

2 )  If a . x** 2 = x **3,  what is the value of x? 

3)  ஒரு தமிழ் சினிமாப் பாடலின் நடுவில், " அட தத்தாரித் தத்தாரித் தய்யா  ; அவன் தலையைப் பாரு கொய்யா " என்று வரும். அந்தப்  பாடலின் ஆரம்ப வரிகள் என்ன?


பதில்கள் :  

1 ) புதன் கிழமை என்றால் வியாழன் முதுமை.  சரியான பதில் : நெல்லைத் தமிழன்! 

2 ) a = x. சரியான பதில் : பெ சொ வி. 


3 )  அது அந்தக் காலத்து  ஜெய்ஷங்கர் படம். அந்தப் பாடலில் உடன் நடித்தவர் சோ. பாடலின் ஆரம்பம் யாஹூ என்று ஆரம்பிக்கும் "... கண்ணு மயங்கி மயங்கி தெரிஞ்சா (?) அதைத் தெளிய வைக்கணும் பார் என்று ஆரம்பிக்கும் பாடல். படம் பெயர் ..........?  (மறந்து போச்!) 


இனி இந்த வாரக் கேள்விகள் : 

1 ) அடுத்த எண் என்ன? 

234, 136, 127, --

2)  What comes next? 
     Vikramaditya, Viraat, 

3) இவைகள் என்ன? 

சாயா , சிலம்பு குகை, மலைநாடு இளவரசன், குமார தேவன். 14 comments:

பெசொவி said...

3. இவையெல்லாம் அந்தக் காலத்து அம்புலிமாமா, பாலமித்ரா கதைகளில் வரும் பெயர்கள்.

பெசொவி said...

2. Vikrant (All are INS Air Crafts)

திண்டுக்கல் தனபாலன் said...

ரைட்டு...

'நெல்லைத் தமிழன் said...

1. 234 தொகுதியையும் வென்றுவிடுவோம். அது 136 ல் கொண்டுவிட்டது. இப்போ 127 (நேற்றைய கணக்கு) ஆகிவிட்டது. அப்புறம் 126 ஆனது (செம்மலை சேர்த்து). இன்றைக்கு என்னவாகிறது பார்க்கலாம்.
3. அம்புலிமாமா விக்ரமாதித்தன் வேதாளம் கதை

athira said...

ஹா ஹா ஹா எங்கள் புளொக்கிற்கு என்ன ஆச்சூஊஊ?? போன வாரப் பதில்களும் சரி இந்த வாரக் கேள்விகளும் சரி படிச்சதும்ம்ம் அப்படியேஏஏஏ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக் கிட்னி தன் பாட்டில கழண்டு போய்த் தேம்ஸ்ல குதிக்கிறேன் எண்ணுதே.... ஹையோ முடியல்ல சாமீஈஈஈ......

athira said...

/////திண்டுக்கல் தனபாலன்February 15, 2017 at 7:30 AM
ரைட்டு.../////
ஹா ஹா ஹா இதுதான் ரைட்டூஊஊ:)

பாருங்கோ நேற்றுவரை நல்லா இருந்த நெ. த நுக்கும் என்னமோ ஆச்சு..... பதில் எழுத யோசிக்காததால் நேக்கு மட்டும் ஒண்ணும் ஆகல்ல சாமீஈஈ:) மீ சேவ்வ்வ்வ்வ்வ்:)

athira said...

Haa haa haa அவ்வ்வ்வ்வ்வ்வ் பூஸோ கொக்கோ:) கண்டுபிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்

2. Vikrant
ஊசிக்குறிப்பு:)- நான் எந்தக் கூகிளிலும் தேடிப் பிடிக்கவில்லை என்பதனை எங்கள் ஆத்தில் போகும் நேவி ஷிப் இன் மேல் அடிச்சு சத்தியம் பண்றேன்ன்ன்ன். 2ம் வினாவுக்கான 2 ம் பரிசை:)இப்பவே தந்திடுங்கோ, அடுத்தவாரம் நான் பிஸி:) ட் ரம்ப் அங்கிளோட செமினார் ஒன்றுக்கு போக அழைச்சிருக்கினம்:)

athira said...

முதலாவது கேள்விக்கான பதில்..... கெளதமன் அண்ணன் இப்போ வாசித்துக் கொண்டிருக்கும் "பொன்னியின் செல்வன்" புத்தகத்தின் பேஜ் நம்பேர்ஸ்:) அடுத்தது என்ன என்பது அவருக்கே வெளிச்சம்..... ஸ்ஸ்ஸ்ஸ் முடியல்ல சாமீஈஈஈ என்னை விடுங்கோ மீ காசிக்குப் போறேன்ன்ன்ன்ன்ன்ன்.)

Bhanumathy Venkateswaran said...

விக்ரமாதித்யா, விராட் இவை போர் கப்பல்கள். Let me be clear இவை போர் விமானங்களை தாங்கும் போர் கப்பல்கள். இதில் அடுத்தது விக்ராந்த் என்று நினைக்கிறேன்.

Asokan Kuppusamy said...

நாடே புதிரா இருக்கு ஆதனால, இந்த புதிர் வேறயா ?

Thulasidharan V Thillaiakathu said...

1. எங்க வீட்டுக்குப் பக்கதுல இருக்கற ஃப்ளாட் நம்பர் மாதிரி இருக்கு....ஹிஹி

2. ஐஎன்எஸ் விக்ராந்த். போர்க்கப்பல்கள் பெயர்கள் (எங்க சொந்தம் ஒருத்தது அதுல இருந்தாரு...அதனால்)

3. இதுக்கு ஒரு வரியில் ஒரு கதை வேணா சொல்லட்டா மலைநாட்டு இளவரசன் தன் தம்பி குமார தேவனுடன் படையெடுத்துப் பக்கத்து நாட்டுடன் போர் புரிந்து சிலம்பு குகையையும் வென்று கொடி நாட்டிவிட்டு வெற்றி வாகை சூடி வெற்றியைக் கொண்டாட சாயா குடித்தான்! ஹிஹிஹீ

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

டிடி சூப்பர்!! உங்கள் கேள்வியெல்லாத்தையுமே ரைட்டு என்று சொல்லிவிட்டார்...!!!!!

கீதா

'நெல்லைத் தமிழன் said...

1க்கு விடை 117.

'நெல்லைத் தமிழன் said...

மன்னிக்கவும். எழுத்துப்பிழை. விடை 122. (ஆதரவு எம்.எல்.ஏக்கள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!