Monday, April 2, 2018

"திங்க"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங்கன் ரெஸிப்பிஹாய்! ஹாய்! ஹாய்! எபி கிச்சன் ஷோ ரசிகர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்கள்! கொஞ்ச நாளா எங்கள் குழுவின் அ அ, ஏஞ்சல், ம த, காணாமல் போய்விட்டார்கள். எங்களின் சிறப்பு விருந்தினர் துரை செல்வராஜு அண்ணாவுக்கும் கை வலி வந்திட, அவருக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் அவரது உரையாடலைத் தொடரலாம் என்றிருக்கிறோம். என்றாலும் அவரும் எங்களுடன் கலந்து கொள்வார். ஷோ முடிந்ததும் இனிப்பு பற்றி கருத்து சொல்லுவார்.  ஹலோ நம்ம குழு கைஸ்! இன்றைய ஷோ வில் இடம் பெறும் பதார்த்தம் ஒரு பழமையான, இந்த இணையம் எல்லாம் நம் வீட்டிற்குள் நுழையும் முன் எங்கள் வீட்டில் என் அப்பா வழிப்பாட்டி அவ்வப்போது செய்து தந்த ஒரு இனிப்பு. ஒரு வருடமாக நினைவில் பின் தங்கிய இனிப்பு. ரொம்ப சிம்பிள்தான். நான் சொல்லற சாமான் எல்லாம் கிச்சன்ல இருக்கானு பார்த்து, இல்லைனா வாங்கி வைச்சுருங்க ஓகேயா! அப்பத்தானே படம் புடிச்சுக் காட்ட முடியும்.  அதுக்குள்ள எனக்கு இங்க கொஞ்சம் கதை விட இருக்கு. அளந்துட்டு வரேன்.


இது நம்ம கீதாக்கா, வல்லிம்மா, காமாட்சிம்மா, மனோ அக்கா, பானுக்கா, கோமதிக்கா போன்ற அனுபவ சீனியர்ஸுக்குத் தெரிந்த பதார்த்தமாகத்தான் இருக்கும். ஒரு வேளை உங்களது செய்முறை, அளவு மாறலாம். உங்களின் கருத்து எங்களுக்குப் பெரிது!  சரி அதன் செய்முறை பற்றிச் சொல்லும் முன் ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்.
சில நாட்கள் முன்…


“அண்ணி நீங்க கல்யாணம் ஆன புதுசுல மைசூர்பா செய்ய நினைச்சு சரிவராம ஏதோ கொழுக்கு மொழுக்குனு ஒன்னு திருபாகம்னு சொல்லி எங்களை எல்லாம் ஏமாத்தினீங்களே! அதைக் கொஞ்சம் செஞ்சு தர முடியுமா. அம்மாக்கும் (மாமியார்) ஈசியா இருக்கும் சாப்பிட.”


“ஏம்பா என்ன கொலைவெறி? இப்படிப் பப்ளிக்கா மானத்த வாங்கறீங்க!! இது மைன்ட் வாய்ஸ்…ஆனா நாம விடுவோமா….ஹலோ…என்ன? என்னனு கேக்கறேன். என்னாது மைசூர்பா சரிவராம செஞ்சு ஏமாத்தினேனா!! சொல்லுவீங்க…சொல்லுவீங்க..…”.ஆஹா!! அற்புதம்….அப்படியே வாயில போட்டா நழுவி உள்ள போயிடுது! வாவ்! சூப்பர்! ஸ்ப்ளெண்டிட்”..அப்படினு எல்லாம் சொல்லி நல்லா வளைச்சுக் கட்டிட்டு அப்புறமும் செய்யச் சொல்லிக் கேட்டுட்டு, போன தீபாவளிக்கு முந்தின தீபாவளிக்குக் கூடச் சென்சேனே! மறந்து போச்சா..இப்பவும் செய்யச் சொல்லிக் கேட்டுட்டு….கொழுப்பு ரொம்பக் கூடிப் போச்சுப்பா உங்களுக்கெல்லாம்…” "சரி சரி பொங்காதீங்க. மரியாதையா செஞ்சு கொடுங்க"


தன் வினை தன்னைச் சுடும்!! ஹா ஹா ஹா! மேலே சொன்னது பின் வினை. இதற்கான முன் வினை……….+2 படித்துக் கொண்டிருந்த காலம். நாங்கள் கஸின்ஸ் எங்கள் அப்பா வழிப் பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்குச் சென்ற சமயம்….”பாட்டி ஏதோ மணக்குதே! ஆஹா! மைசூர் பாகு!! இன்னிக்கு என்ன விசேஷம்?”


“அதெல்லாம் ரகசியம் சொல்ல முடியாது! பண்ணி முடிச்சதும் தெரியும்! இங்க எல்லாம் வந்து எட்டிப் பாக்கக் கூடாது…”


“எட்டிப் பாக்கக் கூடாதா ஹா ஹா ஹா…ஹான்! மைசூர்பாகு சரியா வராம ஏதாவது குளறுபடியாச்சுனா பாட்டி ஏதாவது ஒரு பெயர் சொல்லி நம்மள ஏமாத்துவா பாருங்களேன்….” என்று நான் என் கஸின்களிடம் சொல்லிக் கலாய்த்தேன். 


என் பாட்டி மைசூர்பாகு ரொம்ப அருமையாகச் செய்வார். இருந்தாலும் கலாய்ப்போம். இப்படித்தான் ஒரு முறை கடலை மாவு பாயாசம் என்று செய்து கொடுத்தார். அருமையாக இருந்தது இருந்தாலும் மைசூர்பாகு தண்ணியாயிடுச்சோனு சொல்லிப் பாட்டியை ஓட்டினேன். அப்பா வழி பாட்டிக்கு நான் செல்லம். என் தோழி போன்றவர்.
“போக்கிரி…போ அந்தப் பக்கம். அடுப்படிப் பக்கம் நீங்கல்லாம் வரப்டாது… போய் கிணத்தடியிலயோ, இல்ல ஆத்தங்கரையிலோ போய் குளிச்சுட்டு வாங்கோ. சாப்டலாம்”


வந்தால் என் அத்தை, அத்தையின் கணவர்…என் அத்தையின் நாத்தனார்கள் என்று ஒரே விருந்தினர்…….ஓ அதான் ஸ்வீட் போல!!!
எல்லோருக்கும் கையில் ஸ்வீட் உருட்டி வழங்கப்பட்டது! “பாட்டி இது என்னது  இது?


“திருபாகம்”


நான் சிரித்துவிட்டேன். 


“ஹா ஹா ஹா....பாத்தீங்களா நான் அப்பவே சொன்னேன்ல... பாட்டிக்கு மைசூர்பாகு சரியா வரலை போல! பாட்டி! மைசூர்பாகும் இல்ல, கடலைமாவு ஸ்வூட்டுமில்லாம “திரிசங்குபாகம்”நு சொல்லு!!!” என்றதும் “ஹை இந்தப் பெயர் கூட நல்லாருக்கே” என்று எல்லோரும் சிரித்தனர்.


"ஏதோ ஒன்னு...நீ என்ன வேணா பேர் வைச்சுக்கோ. நன்னாருக்கா இல்லையா அதச் சொல்லு...." எல்லோரும் நன்றாக இருக்கு என்று ரசித்துச் சாப்பிட்டனர். சில வருடங்களுக்கு முன் தான் தெரிந்தது இந்த ஸ்வீட் தான் பட்டர் பேப்பரில் வைத்து மடக்கி சுற்றப்பட்டு வருகிறது என்று திருநெல்வேலியில் இருக்கும் கஸின் சொன்னாள். நான் சாப்பிட்டுப் பார்த்ததில்லை.“எல்லாம் ரெடி. வாங்க கீதா” பாருங்க! நம்ம கிச்சன் எக்ஸ்பெர்ட்ஸ் ரொம்ப ஸ்மார்ட்! எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க!. சரி செய்முறைக்குப் போவோம். குழுவினரே குறிச்சுக்கங்க…


கடலைமாவு – 1 கப் (நீங்கள் எந்தக் கப்பினால் அளக்கின்றீர்களோ அந்தக் கப்பையே எல்லா பொருட்களுக்கும் அளவாக வைத்துக் கொள்ளுங்கள்.)


பால் – 2 கப் (தேவைப்பட்டல் கொஞ்சம் கூடவும் சேர்த்துக் கொள்ளலாம்)


சீனி – ஒரு கப் – நாட்டுச் சர்க்கரை என்றால் 1 ¼ கப். (நான் இங்கு இரு முறைகள் செய்திருக்கிறேன். விளக்கம் கீழே)


நெய் – ¾ - 1 கப். 


முந்திரிப்பருப்பு, - ஒரு கப். (பாட்டியின் செய்முறையில் இது ஒரு கப் கிடையாது. மிகவும் கொஞ்சம். என் மாமியாருக்கு முந்திரி பாதாம் சேர்த்துச் செய்வதுதான் ஸ்வீட். அதனால் சேர்த்துச் செய்வதுண்டு.)


பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, ஏலப்பொடி – எல்லாம் கொஞ்சம் படத்தில் உள்ளதுபோல்.


இம்முறை செய்து கொண்டே சொல்லிவிடுகிறேன் ஓகேயா. ஸோ, கைஸ் நீங்க இப்படி சுத்தி நின்னு பார்த்துக் குறிச்சுக்கங்க!
முதலில் நான் கொஞ்சம் மாற்றி, மாமியாருக்காகச் செய்த முறை. இந்தக் கப்புதான் இரண்டு முறைக்கும் நாம இப்ப இங்க யூஸ் பண்ணறோம். ஓகேயா! அந்தக் கப்புல ஒரு கப் கடலை மாவை அளந்து, அடுப்பு ஏற்றி அதில் வாணலியில் மாவைப் போட்டு கொஞ்சம் வெதுப்பிக் (பாட்டியின் வார்த்தை அதாவது மாவு வறுபடக் கூடாது. ஜஸ்ட் கொஞ்சம் லைட்டாக நன்றாகச் சூடாகும் வரை புரட்டணும்) கொள்ளுங்கள்.கடலைமாவு ஆறியதும். அதைப் பால் விட்டுக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். அப்படியே அதில் நாட்டுச் சர்க்கரை 1 1/4 கப் (படங்கள் அதிமாகும் என்பதால் இங்கு ஒரு கப் அளவுதான் காட்டியிருக்கிறேன். கூட கால் கப் சேர்க்க வேண்டும். நன்றாகக் கலந்துகொள்ளவும்.


ஒரு கப் முந்திரி பருப்பு பொடி செய்து அதில் கட்டியில்லாமல் கலந்து, மீண்டும் அடுப்பில் வைத்துக் கிளறவும். என் மாமியாருக்கு முந்திரி, பாதாம், தேவைப்பட்டால் குங்குமப்பூ சேர்த்துச் செய்வதுதான் ஸ்வீட். அதனால் சேர்த்துச் செய்வதுண்டு. குங்குமப்பூ சேர்ப்பதென்றால் பாலில் போட்டு வைத்துக் கொள்ளவும். இதில் முந்திரி பாதியும், பாதாம் பாதியும் சேர்த்துப் பொடி செய்தும் சேர்க்கலாம். என்னிடம் பாதாம் இல்லை அதனால் முந்திரி மட்டும் சேர்த்தேன். கலந்து மீண்டும் அடுப்பை ஏற்றி வாணலியை வைத்துக் கிளறவும்.

கிளறும் போது நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, அடுப்பை சிம்மில் வைத்துக் கிளறவும். கலவை திரண்டு கெட்டியாகி ஹல்வா போன்று வரும் சமயம், பச்சைக் கற்பூரத்தை விரலால் பொடித்து ஒரு பிஞ்ச் அளவு மற்றும் ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கிவிட வேண்டியதுதான். நாட்டுச்சர்க்கரை சேர்த்த திருபாகம் ரெடி. இதோ எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து என் பாட்டி செய்வது. அளவு, செய்முறை எல்லாம் அதே என்பதால் கொஞ்சம் படங்களும், விளக்கங்களும் மட்டும்.

பாட்டியின் செய்முறையில், கடலை மாவை வெதுப்பிக் கொண்டு பின்னர் ஆற வைத்து, அதில் 2 கப் பால், 1 கப் சீனி, மற்றும் 4 முந்திரி மட்டும் நன்றாகப் பொடித்துச் சேர்த்துக் கட்டியின்றி நன்றாகக் கலக்கிக் கொண்டு,  (நான் மேலே அலங்கரிக்கப் பயன்படுத்திய முந்திரியைப் பொடித்தேன்) அடுப்பில் ஏற்றிக் கிளற வேண்டியதுதான். என் பாட்டி முந்திரி இவ்வளவுதான் சேர்ப்பார். என் பிறந்த வீட்டில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ எல்லாம் இருக்காது. ஏலம், பச்சைக் கற்பூரம் மட்டும் தான் இருக்கும். 

கிளறும் போது 3/4 கப் நெய் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, சிம்மில் வைத்துக் கிளற வேண்டியதுதான். என் பாட்டி ஒரு கப் நெய் சேர்ப்பார். கெட்டியாகி வரும் போது ஒரு கால் ஸ்பூன் ஏலப் பொடி சேர்த்துக் கிளறி இதோ படத்தில் காட்டியபடி கொஞ்சம் கெட்டியாகி வந்ததும் இறக்க வேண்டியதுதான். பாட்டி அதை சின்னச் சின்ன உருண்டையாக்கித் தருவார்.ஏலப் பொடி                                            பாட்டி செய்யும் திருபாகம்

எனது குறிப்புகள்:பாட்டியின் செய் முறையில் செய்யும் திருபாகத்தை நான் நெய் தடவிய ப்ளேட்டில் இப்படிப் படத்தில் உள்ளது போல் பரப்பி ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு. அப்புறம் அதன் மீது வறுத்த நட்ஸ் எல்லாம் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொண்டு, ட்ரை ஃப்ரூட்ஸ் எல்லாம் பரப்பி, பாய் போல் சுருட்டிக் கட் குறுக்காகக் கட் செய்தும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும். என்னிடம் பருப்புகள் இல்லை எனவே படம் இல்லை. ஓகே நண்பர்களே, எங்களின் அடுத்த திங்க பதிவு வரும் வரை காத்திருங்கள். எபி ஆசிரியர்கள், ஷோ டைரக்டர் ஸ்ரீராம் எல்லோருக்கும் எங்கள் குழுவின் மனமார்ந்த நன்றி கூறி விடை பெறுகிறோம்.


Related image 


நண்பர் செல்லம்னு சொல்லறாங்களே தவிர எனக்கு யாருமே எதுவும் செஞ்சு தரமாட்டேன்றாங்க. அவங்க மட்டும் என்னெல்லாமோ செஞ்சு செஞ்சு நல்லா கொட்டிக்கறாங்க. லொள் லொள்! உனக்கு மட்டும் எங்கருந்து கிடைச்சுச்சு?

89 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க...

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் துரை அண்ணா எல்லோருக்கும்


அட திரிசங்கு வந்துருச்சா
நன்றி ஸ்ரீராம்
கீதா

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். ஆமாம்... வந்தே விட்டது!!

துரை செல்வராஜூ said...

சொல்லும் போதே நாவில் கரைகின்றது இனிப்பு....

என்னவொரு ஆனந்தம்...

வீட்டில் அனைவரும் கூடியிருக்க பெரியவர்கள் வழிகாட்டுதலில் அல்லது அவர்களுடைய கைப்பக்குவத்தில் இந்த மாதிரியான இனிப்பு வகைகளைச் செய்வது மகிழ்ச்சி என்றால்

அதை உண்ணும் வேளையில்
கூடிக் குளிர்ந்தேலோர் எம்பாவாய்!....- தான்....

காலைப் பொழுதின் இனிமையைக் கூட்டுகின்றது - பதிவு....

Thulasidharan V Thillaiakathu said...

துரைசெல்வராஜு அண்ணா என் அப்பா வழிப் பாட்டி வீட்டில் கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்தான்!!!! ஆனால் எனக்கு 7 ஆம் வகுப்பிலிருந்து அது வருடத்திற்கு ஒரு முறைதான் கிடைத்தது...

மிக்க நன்றி அண்ணா தங்களின் இனிய கருத்திற்கு..

கீதா

துரை செல்வராஜூ said...

/// கை வலி என்று.... ///

கைவலி எல்லாம் கடந்து போய் பல நாட்கள் ஆகின்றன...

இப்போது ஒரே பிரச்னை - இணையம் தான்...

மடி கணினியை திறந்தால் எட்டு நிமிடத்தில் ஒரு GB முடிந்து போகின்றது....

என்ன செய்வது புரியவில்லை....

மற்ற தளங்களுக்குச் செல்ல முடியவில்லை...

இது கேலக்ஸி வழியாக....

துரை செல்வராஜூ said...

இவ்வளவு மெனக்கெட்டு செய்த தாங்கள் அந்த சின்னப் பையனுக்கும் ஒரு கோப்பை தனியாக வைத்திருக்கலாம்...

வல்லிசிம்ஹன் said...

இது தின்ன
வேலி மைசூர் அல்வான்னு நாங்கள்
சொல்லுவோம்.ஹாஹா.
கீதா, எத்தனை அழகாப் படம் ,போட்டு,அளவு போட்டு
பாட்டி முறை ,மாமியார் முறை எல்லாம் நன்றாக
இருக்கிறது.

அம்மா வீட்டில் பால் கேக்காகவும் உருவாகும். நெய் குறைவு.
மாமியார் மூட நெய் பெய்தே எல்லாம் செய்யப்படும்.
குவைத்திருந்து நாத்தனார் வருவதால் பாதாம்,குங்குமப்பூ
நிறைய அகப்படும்.
முந்திரியைப் பொடித்தே செய்திருக்கிறீர்கள்
அருமையான வாசனையோடு இருக்கும்.
மிக அருமையான பக்குவம்,. நன்றியும் வாழ்த்துகளும் மா.

Thulasidharan V Thillaiakathu said...

துரை அண்ணா உங்கள் கைவலி பறந்து போனது பற்றி மிகவும் மகிழ்ச்சி!! இந்தப் பதிவு உங்களுக்குப் பிரச்சனை இருந்த நேரம் எழுதியது...

உங்கள் இணையப் பிரச்சனை சரியானதும் சொல்லுங்கள் உங்கள் உரையையும் நாம் தொடரலாம் அண்ணா...

இவ்வளவு மெனக்கெட்டு செய்த தாங்கள் அந்த சின்னப் பையனுக்கும் ஒரு கோப்பை தனியாக வைத்திருக்கலாம்...//

ஆமாம் வைத்திருக்கலாம் தான் ஆனால் அந்தச் சின்னப் பையன் வகையறாக்கள் ஸ்வீட்டுக்கு அலைவார்கள்தான்...எல்லாப் பண்டங்களுக்கும் அலைவார்கள்....ஆனால் அவர்களுக்கு இனிப்பும் கொடுக்கக் கூடாதே!! உப்பும் கொடுக்கக் கூடாது...! அது அவனுக்குத் தெரியாதே!!! அதனால் என்ன நாம் அவனுக்கு ஸ்பெஷலாகச் செய்து கொடுத்துடுவோம்...என்ன சொல்றீங்க அண்ணா..

கீதா

ஏகாந்தன் Aekaanthan ! said...

ஸ்வீட்டு நன்னா இருக்கும்போலத்தான் இருக்கு. ஆனா, இத முதல்ல சாப்பிட்டவங்க அடுத்தவங்களை சாப்பிடவிடாம என்னென்ன சேஷ்டை பண்ணுவாங்கங்கறதை, இப்படியா போட்டு உடைக்கணும் காலங்கார்த்தாலே..

KILLERGEE Devakottai said...

அப்புறமாட்டிக்கு வர்றேன்...

Thulasidharan V Thillaiakathu said...

ஹை வல்லிம்மா தின்னவேலிமைசூர் அல்வா!!! சூப்பர் பேரா இருக்குதே!!!...ஆமாம் இது தின்னவேலிப்பக்கம் ஸ்வீட்டுத்தான்...ஹா ஹா ஹா

ஆமாம் ஆமாம் பால் கேக்காகவும் உருவெடுக்கும்...

மிக்க நன்றி அம்மா கருத்திற்கு...புதுப்பெயர் தெரிந்து கொண்டேன்...ஒரே ஸ்வீட் ஒவ்வொரு வீட்டிலும் ஓரோரு பெயர் இல்லையா..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம்... வந்தே விட்டது!!//

ஹா ஹா ஹா ஆமாம் ஸ்ரீராம் திரிசங்கு நடுவில் அல்லாடாமல் (ப்ளாகர், என் கணினி எல்லாம் பிரச்சனை நடுவில் ரொம்பப் படுத்தியதே!!!!!) கீழே இங்கு வந்தே விட்டது!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வாங்க அப்புறமா...ஆனால் ஸ்வீட் கொஞ்சமாத்தான் இருக்கு தெரியும்ல.......வந்துருங்க...

கீதா

வெங்கட் நாகராஜ் said...

காலை வணக்கம். ஆஹா... இன்னிக்கு ஸ்வீட்டா? இதோ வந்துட்டேன்....

வெங்கட் நாகராஜ் said...

திரிசங்கு பாகம்! நல்லாத் தான் இருக்கு..... இந்த மைசூர்பாகு செய்வதில் கொஞ்சம் ஏமாந்தாலும் பல்லுடைக்கும் படி ஆகிவிடும்! இல்லை என்றால் ரொம்பவே சாஃப்ட்!

இது சாஃப்ட் ரகம் போல இருக்கு! ஆதிட்ட சொல்றேன். செஞ்சு பார்க்கச் சொல்லி..... நான் இங்கே செய்யப் போவதில்லை!

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம்! கீதா ரங்கன் அல்வா கொடுத்திருக்காங்களா?

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
சுவைத்துப் பார்க்கத் தூண்டுகிறது

Avargal Unmaigal said...

இதுவரை கேள்விப்படாத முறையாக இருக்கிறது... ஆனால் பால் ஊற்றி செய்வதால் இதை அதிக நாள் வைத்து சாப்பிட முடியாது என நினைக்கிறேன். சரிதானே

Avargal Unmaigal said...

ஈஸ்டர் முடிந்துவிட்டது அதனால் அதிரா &ஏஞ்சல் வரவை எதிர்பார்க்கலாம் அதுமட்டுமல்லாமல் ஈஸ்டருக்கு அவர்கள் செய்த களியை பற்றி பதிவுகள் எதிர்பார்க்கலாம் என்னடா ஈஸ்டருக்கு களியா என்று கேட்கிறீர்கள் அதெல்லாம் ஒன்றுமில்லை அவர்கள் செய்தை கேக்கைத்தான் களி என்று சொல்லுகிறேன்

athira said...

ஆவ்வ்வ்வ்வ்வ் இண்டைக்கு கீதா எல்லோருக்கும் ஃபிரீயாஆஆஆ அல்வாக் குடுக்கிறாவாம் என பிபிசில சொல்லிச்சினம்:) அதுதான் எழும்பி ஓடி வந்தேன்:)..

நான் ஆரூஊஊஊஊஊஊ?:). “பின் தூங்கி முன் எழும்பும்” பரம்பரையாக்கும்:)) நான் குட்மோனிங் சொன்னால்தான் சூரியனே வரும் எங்கட நாட்டுக்கு:)).. மீ ரொம்ப நல்ல பொண்ணு:))..

ஆனா என் செக்:) ஐப் பாருங்கோ:).. சூரியன் கிழக்கால உதிச்சூஊஊஊஊ மேற்கால சரியும்போதுதேன்ன் சைட்டால கண்ணைத்திறந்து பார்ப்பா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹையோ இண்டைக்கு வந்து குதிச்சிடுறாவோ தெரியலியே:))... வைரவா ஏதோ தெரியாம உளறிட்டேன் என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்:))..

athira said...

///எங்கள் குழுவின் அ அ, ஏஞ்சல், ம த, காணாமல் போய்விட்டார்கள்///

ஹலோ கீதா டார்லிங்:))... என்னைச் சொன்னீங்க அது ஓகேதான்:)) ஏனெண்டால் மீ ரொம்ப வயக்கெட்டுப்போயிட்டேன் ஜிம் க்குப் போய்:) அதனால என்னைப் பார்த்தாலும் தெரியாது:)).. ஏஞ்சல்.. அவ வையும் கொஞ்சம் காப்பாத்தி விடுவோம் எதுக்கும்:)).. ஆனா..

ட்றுத்தான் 96 கிலோ எடையோடு முன்னால நிற்கிறாரேஎ:) அவரைப் ப்பார்த்தபின்பும் எப்பூடி காணவில்லை எனச் சொன்னீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முதல்ல கண்ணாடியைப் போட்டிட்டுப் பாருங்கோ:)) ஹையோ படிச்சதும் கிழிச்சு டெல்லி ரெயின் கார்ட் பெட்டியில எறிஞ்சிடுங்கோ கீதா பீஸ்ஸ்ஸ்ஸ்:))..

athira said...

///ஒரு வருடமாக நினைவில் பின் தங்கிய இனிப்பு. ரொம்ப சிம்பிள்தான். நான் சொல்லற சாமான் எல்லாம் கிச்சன்ல இருக்கானு பார்த்து, இல்லைனா வாங்கி வைச்சுருங்க ஓகேயா! அப்பத்தானே படம் புடிச்சுக் காட்ட முடியும். அதுக்குள்ள எனக்கு இங்க கொஞ்சம் கதை விட இருக்கு.///

இருந்தாலும் நெல்லைத்தமிழன் சுவீட் சாப்பிடும்போது உறைப்பு ரெசிப்பியா போட்டுவிட்டு:) இப்போ அவர் சுவீட் ஐ நிறுத்திட்டேன் எனச் சொன்ன பின்பு சுவீட்ட்ட்ட்ட்டாச் செய்து போட்டு வெறுப்பேத்துவதற்கு என் வன்மையான கண்டனங்கள் கீதா:))..

அப்பம்மாவை அன்று நீங்க கலாய்ச்சீங்க இல்ல:) இன்று உங்களைக் கலாய்க்க நாங்க இருக்கிறோம்:))

Thulasidharan V Thillaiakathu said...

இத முதல்ல சாப்பிட்டவங்க அடுத்தவங்களை சாப்பிடவிடாம என்னென்ன சேஷ்டை பண்ணுவாங்கங்கறதை, இப்படியா போட்டு உடைக்கணும் காலங்கார்த்தாலே..//

ஹா ஹா ஹா ஹா

ஸ்வீட் நல்லாருக்கும் அண்ணா...மிக்க நன்றி கருத்திற்கு

கீதா

athira said...

///அந்தக் கப்புல ஒரு கப் கடலை மாவை அளந்து, அடுப்பு ஏற்றி அதில் வாணலியில் மாவைப் போட்டு கொஞ்சம் வெதுப்பிக்//

ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்ர்ர்:) வெதுப்புதல் என்றால் அவணில் வைத்து எடுப்பதைத்தான் சொல்லோணும்... கர்ர்ர்:) உதவிக்கு அப்பாவிப் பாட்டியை வேறு கூட்டி வந்திட்டா:)).. இது சட்டியில் போட்டு வறுக்காதீங்கோ சூடு பண்ணினால் போதும் என வருமாக்கும்:)) எனக்கு டமில்ல டி ஆக்கூஊஊஉம்ம்ம்:))...

ஹையோ எனக்கிண்டைக்கு என்னமோ ஆச்சூஊ.. ஈஸ்டர் எக் ஓவராச் சாப்பிட்டு விட்டேனோ:))..

Thulasidharan V Thillaiakathu said...

வெங்கட்ஜி ஹா ஹா ஹா ஹா...ஆமாம் இது ஸாஃப்ட் ரகம்....செய்வதும் எளிதுதான்....ஆதி உடனே செஞ்சு பார்க்கும் லிஸ்டில் என்னைப் போல ஹா ஹா ஹா ஹா...செஞ்சுருவாங்க...

மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஹா ஹா ஹா அஹா பானுக்கா ஆமாம்காலையிலேயே எல்லாருக்கும் அல்வா கொடுத்தாச்சு!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கரந்தை சகோ மிக்க நன்றி கருத்திற்கு...

கீதா

athira said...

//“அண்ணி நீங்க கல்யாணம் ஆன புதுசுல மைசூர்பா செய்ய நினைச்சு சரிவராம ஏதோ கொழுக்கு மொழுக்குனு ஒன்னு திருபாகம்னு சொல்லி எங்களை எல்லாம் ஏமாத்தினீங்களே!///

ஹா ஹா ஹா ஆரம்பம் வீட்டிலுள்ளோரை ஏமாத்தி:) இப்போ எங்களை ஏமாத்துறாவாம்:)) நோஓஓஓஓ அதிராவை ஆரும் ஏமாத்த முடியாதூஊஊஊ ... மிஸ்டர் பாகம்:)) அதுதான் மதிப்பிற்குரிய திரு.. பாகம் இந்தப் பெயர் எப்பூடி கடலைமா அல்வாவுக்கு வந்துதூஊஊஊஊ? இப்போ எனக்கு உண்மை தெரிஞ்சாகோணும்:))..

ஹையோ கீதா கம்பி மேலயோ:)) ஹா ஹா ஹா..

Thulasidharan V Thillaiakathu said...

மதுரை சகோ...வாங்க வாங்க...பால் விட்டுச் செய்வதால் அதிகநாள் வைத்திருந்து சாப்பிட முடியாதுதான்....ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் ....ஆனால் ஃப்ரிட்ஜில் வைக்கும் அளவுக்கு இருந்தால் தானே!! உடனே தீர்ந்துடும்....கொஞ்சமா செஞ்சு பாருங்க சகோ....நீங்க சுகர் ஃப்ரீயும் சேர்த்துச் செய்யலாம்..இது பதம் எல்லாம் இல்லையே ஹல்வா போன்றுதானே அதனால/...

ஆமாம் அதிரா வந்துட்டாங்க பாருங்க...ஏஞ்சலும் வந்துருவாங்க...களி ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ இதைப் பார்க்கலை போல அதிரா..!! ஹா ஹா ஹா

கீதா

athira said...

///“அதெல்லாம் ரகசியம் சொல்ல முடியாது! பண்ணி முடிச்சதும் தெரியும்! இங்க எல்லாம் வந்து எட்டிப் பாக்கக் கூடாது…”//

ஹா ஹா ஹா சுப்பர்:)) இதே முறையைத்தான் எங்கட சின்னவருக்கு சாப்பாடு தீத்தும்போதும் மீ சொல்லுவேன்:) பிளேட்டைப் பார்க்கக்கூடாது என:)) ஏனெனில் என்ன என்ன கறி இருக்கெனப் பார்த்தால்.. ஐ டோண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் வோண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் எனச் சொல்லுவார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

KILLERGEE Devakottai said...

கலாய்த்தலை இரசித்தேன்.
புகைப்படங்கள் பார்க்கவே ஆசையை தூண்டுகிறது.

athira said...

///இம்முறை செய்து கொண்டே சொல்லிவிடுகிறேன் ஓகேயா. ஸோ, கைஸ் நீங்க இப்படி சுத்தி நின்னு பார்த்துக் குறிச்சுக்கங்க! ///

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா இஞ்ச பாருங்கோ அஞ்சு இடிக்கிறா:) கர்ர்:) மீதான் முன்னால நிற்பேன்ன்:) இடிக்க வேணாம் எனச் சொல்லுங்கோ கீதா:)).. அதாரது என்னைத் தள்ளுறது டோண்ட் டச்சூஊ மீஈஈஈஈஈஇ கர்ர்ர்:)) வர வர ஒரு ரெசுப்பெட்டே:)) கிடைக்குதில்ல நமக்கு இங்கின:))

Thulasidharan V Thillaiakathu said...

ஹா ஹா ஹா ஆரம்பம் வீட்டிலுள்ளோரை ஏமாத்தி:) இப்போ எங்களை ஏமாத்துறாவாம்:)) நோஓஓஓஓ அதிராவை ஆரும் ஏமாத்த முடியாதூஊஊஊ ... மிஸ்டர் பாகம்:)) அதுதான் மதிப்பிற்குரிய திரு.. பாகம் இந்தப் பெயர் எப்பூடி கடலைமா அல்வாவுக்கு வந்துதூஊஊஊஊ? இப்போ எனக்கு உண்மை தெரிஞ்சாகோணும்:))..

ஹையோ கீதா கம்பி மேலயோ:)) ஹா ஹா ஹா..//

வாங்க வாங்க அதிரா.....ரொம்ப நாள் ஆச்சு உங்களோடு கதைத்து...மதியத்திற்கு மேல் வராமல் போனதால் உங்களுடன் கதைக்க முடியாமல் இன்று நீங்க காலையிலேயே வந்தாச்சு..

ஆமாம் இந்த ஸ்வீட் ஏமாற்றுதல் பரம்பரை பரம்பரையாய்..காலம் காலமாய்..ஹிஹிஹி..கடலைமாவு ஹல்வா கிட்டத்தட்ட அதுதான்...

திருபாகம் நு பெயர் வந்தது காரணம் எனக்குத் தோன்றுவது ஏனென்றால் இது மைசூர்பாகு போலவும் கட் செய்யும் கடலைமாவு ஸ்வீட் போலவும் அல்லாமல் இரண்டிற்கும் நடுவில் இருப்பதால் திரிபாகம் பெயர்...வந்திருக்கலாம் ஆனால் என் பாட்டி திரி என்றெல்லாம் சொல்லமாட்ட்டார் திரு என்று மரியாதை கொடுத்து ஹா ஹா ஹாஹா...

நோ மிஸ்டர் பாகம்...அப்புறம் மிஸ் பாகம் எங்கேனு கேள்விவரும்... ஹா ஹா ஹா ஹா...

கீதா

கோமதி அரசு said...

நீங்கள் குறிப்பிட்ட இனிப்பு பால் ஹல்வா என்று சொல்வார்கள், இதையே என் ஓர்படி இன்னும் கட்டியாக கிண்டி பர்பி போல் வெட்டி எடுத்து தங்கத்தாமரை என்று பெயர் வைத்தார்கள்.

அழகான படங்கள். அழகான பாசப்பிணைப்பு செய்திகள்.
எங்களை அழைத்து பேசிய விதம் எல்லாம் அருமை.
அதிரா ஒரு பதிவில் ஏஞ்சல் வர நாள் ஆகும் என்று சொல்லி வந்துபின்னூட்டம் போட்டார்.
சீனி, நெய் கலந்து செய்யும் இனிப்புகள் ருசிக்கு கேட்க வேண்டுமா?
அளவாக கொஞ்சமாய் செய்து காட்டியது அருமை.
செய்யும் ஆசையை தூண்டுகிறது படம்.

athira said...

சூப்பராக வந்திருக்கு கீதா திரிபாகம்.. பாட்டி செய்முறையும் சூப்பர், நீங்க மாமிக்குச் செய்து குடுத்ததும் சூப்பர்.. குங்குமப் பூச் சேர்த்ததுதான் நல்ல கலர் குடுக்குது.. இம்முறை சிம்பிள் அண்ட் ஈசியான குறிப்பு...

///ஷோ டைரக்டர் ஸ்ரீராம் /// சூட்டிங் முடிஞ்சுதோ?:) ஆளைக் காணமே:)

athira said...

///நண்பர் செல்லம்னு சொல்லறாங்களே தவிர எனக்கு யாருமே எதுவும் செஞ்சு தரமாட்டேன்றாங்க.///

ஹா ஹா ஹா ஆட்டைக் கடிச்சூஊஊஊஊஊஉ மாட்டைக் கடிச்சூஊஊஊ இப்போ அகப்பட்டது பூஸிட காதோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. சே..சே.. சாப்பிடும்போதுகூட ஒரு நிம்மதியாச் சாப்பிட விடுகினம் இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

athira said...

///Avargal Unmaigal said...
ஈஸ்டர் முடிந்துவிட்டது அதனால் அதிரா &ஏஞ்சல் வரவை எதிர்பார்க்கலாம் அதுமட்டுமல்லாமல் ஈஸ்டருக்கு அவர்கள் செய்த களியை பற்றி பதிவுகள் எதிர்பார்க்கலாம் என்னடா ஈஸ்டருக்கு களியா என்று கேட்கிறீர்கள் அதெல்லாம் ஒன்றுமில்லை அவர்கள் செய்தை கேக்கைத்தான் களி என்று சொல்லுகிறேன்///

ஹலோ ட்றுத்:))... இப்போ கீதா அமெரிக்காவுக்கு அம்பாஷிஸ்டர் காரில வந்து கேட்டாவோ அதிராவும் ஏஞ்சலும் என்ன கிண்டினவங்க என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

நீண்ட நாளைக்கு பின்பு வந்தா.. அதிரா நலமோ சுகமோ.. விண்டர் எப்பூடி ச்னோ எப்பூடி ஜிம் எல்லாம் எப்பூடிப் போகுது?:) வீட்டுச் செல்லங்கள் நலமோ :).. இப்பூடி அம்பா.. ஹையோ வெடி சொடி.. டங்கு ச்லிப்பாகுதே:) அன்பா விசாரிக்காமல்:) கழி கிண்டினாங்க கறி வச்சாங்க எண்டு சொல்லி ஒரு பப்புளிக்குப் பிளேசில ஒரு பிரபல ட்றம்ப் அங்கிளின் செக்கரட்டறியை[அது நாந்தேன்:)] இமேஜை டமேச் பண்ணிக் கொண்டு கர்ர்ர்ர்ர்ர்:))..

கீதாஆஆஆஆஆஆ ஒரு கை குடுங்கோ:) நயகராவில ஒராளைத் தள்ளோணும் இப்போ:))...

கோமதி அக்கா மீ ரொம்ப நல பொண்ணு:)) லீவெல்லாம் எடுக்காமல் வந்து கொண்டுதானிருக்கிறேன்:)).. அஞ்சுதான் பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் கேள்:)) லீவு எடுத்திட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா மீ எஸ்கேப்ப்ப்ப் அண்ட் குட்நைட்:))

Thulasidharan V Thillaiakathu said...

ஆவ்வ்வ்வ்வ்வ் இண்டைக்கு கீதா எல்லோருக்கும் ஃபிரீயாஆஆஆ அல்வாக் குடுக்கிறாவாம் என பிபிசில சொல்லிச்சினம்:) அதுதான் எழும்பி ஓடி வந்தேன்:)..//

ஆஹா! அப்ப புகழ் அங்க வரை எட்டி உலகத்துக்கே தெரிஞ்சுருச்சா!! பிபிசில எபி கிச்சன் புகழ் பரவிடுச்சு!!! ஹா ஹா ஹா

பாவம் ஏஞ்சல்!! இவ்வளவு நாள் ஈஸ்டர் சர்ச் ஆக்டிவிட்டிஸ்ல பிஸியா இருந்துருக்காங்க...வருவாங்க அவங்க வந்து உங்களை கவனிச்சுப்பாங்க...பார்ப்போம் இன்று வைரவர் யார் பக்கம்னு ஹா ஹா ஹா

சரி சரி பாவம் அந்தக் குட்டி வைரவர்...பூஸாரே அவருக்கும் கொஞ்சம் கொடுங்கோ...ஹா ஹா ஹா அப்பத்தான் வைரவர் உங்களைக் காப்பாத்துவார்னு சொல்லிருக்கார்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஹா ஹா ஹா சுப்பர்:)) இதே முறையைத்தான் எங்கட சின்னவருக்கு சாப்பாடு தீத்தும்போதும் மீ சொல்லுவேன்:) பிளேட்டைப் பார்க்கக்கூடாது என:)) ஏனெனில் என்ன என்ன கறி இருக்கெனப் பார்த்தால்.. ஐ டோண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் வோண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் எனச் சொல்லுவார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//

ஹா ஹா ஆமாம் அதிரா சின்னப்பிள்ளைகள் பலருக்கும் தட்டில் என்ன இருக்கு என்று சொன்னால் சாப்பிட மாட்டார்கள். அதனால் பல வகையில் ஏமாற்றித்தான் கொடுக்க வேண்டும்...சுவையாக இருந்தாலும் இது ஒரு மனதில் ஏற்படும் எண்ணம்...

எங்கள் வீட்டில் கிச்சனிற்குள் குழந்தைகளை விட மாட்டார்கள். ஏனென்றால் பாட்டிஸ் அண்ட் பெரியவங்க....ரொம்பவே கண்டிஷன்ஸ் சுத்தம் பார்ப்பாங்க....

நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது வாயில் கை வைத்திருப்போம் இல்லை ஏதேனும் வாயில் வைத்துக் கடித்துத் தின்றிருப்போம், கை சுத்தமாக இருக்காது, வெளியில் விளையாடிவிட்டு அழுக்காக இருப்போம் என்று பல காரணங்கள்...கிச்சனுக்குள் செல்ல வேண்டும் என்றால் குளித்து சுத்தமாக இருந்தால்தான் செல்ல முடியும் இதெல்லாம் அந்தக் காலம். அப்புறம் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துவிட்டது. குளிக்காமல் சென்றாலும், தலை முடியை நன்றாகக் கட்டிக் கொண்டு, முகம் கழுவி, கை கால் கழுவிவிட்டுச் செல்ல வேண்டும் என்று கொஞ்சம் தளர்ந்தது....ஆனால் அடுப்பில் சமைப்பது மட்டும் குளித்துவிட்டுத்தான் சமைக்க வேண்டும்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கலாய்த்தலை இரசித்தேன்.
புகைப்படங்கள் பார்க்கவே ஆசையை தூண்டுகிறது.//

மிக்க நன்றி கில்லர்ஜி....ரசித்தமைக்கு...உங்க பொண்ணுகிட்ட சொல்லுங்க செஞ்சு தரச்சொல்லி...ஈசிதான்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நீங்கள் குறிப்பிட்ட இனிப்பு பால் ஹல்வா என்று சொல்வார்கள், இதையே என் ஓர்படி இன்னும் கட்டியாக கிண்டி பர்பி போல் வெட்டி எடுத்து தங்கத்தாமரை என்று பெயர் வைத்தார்கள்.//

அழகான பெயர் கோமதிக்கா தங்கத்தாமரை!!! ஆமாம் பர்ஃபி போலவும் செய்யலாம்...ரொம்ப நன்றாக இருக்கும். அப்புறம் இதிலேயே பாலுக்குப் பதில் மில்க் பௌடர் சேர்த்து வெண்ணை சேர்த்துக் ஸ்வீட் செய்து பீஸ் போடலாம் அதுவும் ரொம்ப நன்றாக இருக்கும் அதில் பாதாம் கஷ்யூ அரைத்துச் சேர்த்தும் இப்படி நிறைய செய்யலாம்...

மிக்க நன்றி கோமதிக்கா தங்களின் கருத்திற்கு...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஹா ஹா ஹா ஆட்டைக் கடிச்சூஊஊஊஊஊஉ மாட்டைக் கடிச்சூஊஊஊ இப்போ அகப்பட்டது பூஸிட காதோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. சே..சே.. சாப்பிடும்போதுகூட ஒரு நிம்மதியாச் சாப்பிட விடுகினம் இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//

ஹா ஹ் ஆ ஹா இப்படத்தைச் சேர்க்கும் போது உங்களை நினைத்துக் கொண்டேதான் சேர்த்தேன் அதிரா....வைரவருக்குக் கமிஷன் கொடுத்துடுங்க ஓகேயா...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கீதாஆஆஆஆஆஆ ஒரு கை குடுங்கோ:) நயகராவில ஒராளைத் தள்ளோணும் இப்போ:))...//

ஹா ஹா ஹா ஹா வந்துட்டேன் வந்துட்டேன்...ஓடோடி வந்துட்டேன் அதிரா...நயகரா எதுக்கு அவரை குண்டுகட்டாத் தூக்கி தேம்ஸ் ல கொண்டு வந்து கட்டிப் போட்டுவிடுவோம்...ஒரே செல்வா போகும்....அப்போதான் அவ்வப்போது தூக்கிப் போட வசதியா இருக்கும்...ஹிஹிஹிஹிஹி...இப்ப மதுரை என்னை அடிக்காம இருக்கணும்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சூப்பராக வந்திருக்கு கீதா திரிபாகம்.. பாட்டி செய்முறையும் சூப்பர், நீங்க மாமிக்குச் செய்து குடுத்ததும் சூப்பர்.. குங்குமப் பூச் சேர்த்ததுதான் நல்ல கலர் குடுக்குது.. இம்முறை சிம்பிள் அண்ட் ஈசியான குறிப்பு...//

டங்க்யூ டங்க்யூ!!

//ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா இஞ்ச பாருங்கோ அஞ்சு இடிக்கிறா:) கர்ர்:) மீதான் முன்னால நிற்பேன்ன்:) இடிக்க வேணாம் எனச் சொல்லுங்கோ கீதா:)).. அதாரது என்னைத் தள்ளுறது டோண்ட் டச்சூஊ மீஈஈஈஈஈஇ கர்ர்ர்:)) வர வர ஒரு ரெசுப்பெட்டே:)) கிடைக்குதில்ல நமக்கு இங்கின:))//

ஹோ பூஸாரே ஹா ஹா ஹா ஹா ஹா...ஜெஸிக்கும் டெய்ஸிக்கும் மியாவ் மியாவ் சண்டையாக்குமோ...ஹா ஹா ஹா...ஏஞ்சல் பூஸாருக்கு நிறைய இடம் விடுங்கோ...ஹிஹிஹி காரணம் என்னனு தெரியும்தானே பின்னே நிறைய இடம் வேண்டுமே....ஹா ஹா ஹா.....

ஓ அதான் பூஸார் இப்போ ஜிம் எல்லாம் போய் இளைச்சுருக்காராமே....அப்ப அடுத்த ஷோவில ...பூஸார் கம்ப்ளெயின்ட்ஸ் இருக்காது...அவர் தள்ளினான் இவர் இடிச்சார்னு ஹா ஹா ஹா ஹா..ஏஞ்சல் நோட் திஸ்

கீதா

ஜீவி said...

கடலை மாவு+ நெய் + பால் கலக்கல்+ நட்ஸ் -- வதக்கி எடுத்தால் திருபாகம் ரெடியா?..

இவ்வளவு சிம்பிள் முயற்சியில் ஒரு ஸ்வீட் சொல்ல யாரால் முடியும்?.. சொல்லுங்கோ.

பரிவை சே.குமார் said...

ஆஹா...
இப்பவே சாப்பிடணும் போல இருக்கு... அவ்வளவு சுவீட்டா பதிவுல சொல்லிட்டீங்க அக்கா...

Thulasidharan V Thillaiakathu said...

இவ்வளவு சிம்பிள் முயற்சியில் ஒரு ஸ்வீட் சொல்ல யாரால் முடியும்?.. சொல்லுங்கோ.//

ஜீவி அண்ணா எல்லாமே நம்ம முன்னோர்....நம் வீட்டுப் பெரியவர்களின் உபயம்!!! அவர்களிடம் கற்றதுதானே இவை எல்லாம்...மிக்க நன்றி ஜீவி அண்ணா கருத்திற்கு..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா...
இப்பவே சாப்பிடணும் போல இருக்கு... அவ்வளவு சுவீட்டா பதிவுல சொல்லிட்டீங்க அக்கா...//

மிக்க நன்றி குமார் ஸ்வீட்டான கருத்திற்கு!!!

கீதா

ராஜி said...

புதுவித ஸ்வீட்.. செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்...
ஐ லவ் ஸ்வீட்ஸ்

Asokan Kuppusamy said...

ரெசிபி சுவை நன்று பாராட்டுகள் படிக்கும் போதே தெரிந்து விடுகிறது

G.M Balasubramaniam said...

மிக எளிதான ஒரு பதார்த்தத்தை நீட்டி முழக்கி எழுதுவதுதான் ரெசிப்பி செய்யும் முறைக்கு பலமோ

Angel said...

எல்லாருக்கும் வணக்கம் :)
கீதா // கீதாஆஆஆஆஆஆ ஒரு கை குடுங்கோ:) நயகராவில ஒராளைத் தள்ளோணும் இப்போ:))...//
என் கண்ணுக்கு மட்டும் நயாகரா நயன்தாராவா தெரியுது .
:)

Angel said...

கீதா 3சங்குபாகம் நல்லா இருக்கு :) எங்க வீட்ல ஒரேஒருத்தர்தான் ஸ்வீட் boy கொஞ்சூண்டு அளவில் செய்து பார்க்கணும் :)
ஆனா இங்கிருந்து 3 போர்ஷன்ஸ் எடுத்துக்கறேன் :)

Angel said...

என்னை தேடிய அன்புள்ளங்களுக்கு :) ஹையோ நிச்சயம் தேடியிருப்பிங்கன்ற நம்பிக்கைதான் :)

அது 3 இயர்ஸ் கழிச்சி எங்களுக்கு ஆலயத்தில் புது vicar அப்பாய்ண்ட் ஆகிறாரதனால் கூடுதல் பொறுப்பு எனக்கு அரேஞ்சிங் க்ளீனிங்ன்னு இன்னும் முழுசா நான் free ஆகல்லை ..நேரமிருக்கும்போது பூனை வாலை இழுக்க வருவேன் :)
எங்களுக்கும் ஈஸ்டர் விடுமுறைன்னு அந்த தேம்ஸ் கரையில் இருக்கவங்ககிட்ட சொல்லிடுங்க

Thulasidharan V Thillaiakathu said...

ராஜி ஸ்வீட் ரொம்பப் பிடிக்குமா அப்படினா கண்டிப்பா இதைச் செஞ்சு பாருங்க செமையா இருக்கும்...ஈசியும் கூட/...

மிக்க நன்றிமா கருத்திற்கு

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அசோகன் குப்புசாமி சகோ தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மிக எளிதான ஒரு பதார்த்தத்தை நீட்டி முழக்கி எழுதுவதுதான் ரெசிப்பி செய்யும் முறைக்கு பலமோ//

ஹா ஹா ஹா ஹா ஜிஎம்பி சார் அப்படியும் எடுத்துக்கலாம்...எனக்குப் பலருடன் சேர்ந்து சமைப்பது ரொம்பப் பிடிக்கும் சார். அவர்கள் உதவ வேண்டும் என்பதெல்லாம் இல்லை....அவர்கள் என்னுடன் பேசிக் கொண்டும் கலாய்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தால் போதும். சும்மா ரெசிப்பி சொல்லிக் கொண்டே போவதை விட ஏதேனும் சுவாரஸ்யமாய் சொல்லி அல்லது அந்த ரெசிப்பியுடன் ஆன என் நினைவுகளையும் இங்குச் சொல்லிச் சொல்லலாமே என்பதனால் வந்ததுதான்...

மிக்க நன்றி சார் கருத்திற்கு

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வாங்க வாங்க ஏஞ்சல்!!! ஹப்பா எவ்வளவுநாளாச்சு...நீங்க ஈஸ்டர் சர்ச் ஆக்டிவிட்டிஸ் என்பது தெரியும்....

//கீதா // கீதாஆஆஆஆஆஆ ஒரு கை குடுங்கோ:) நயகராவில ஒராளைத் தள்ளோணும் இப்போ:))...//
என் கண்ணுக்கு மட்டும் நயாகரா நயன்தாராவா தெரியுது .
:)//

ஹா ஹா ஹா ஏஞ்சல் செமையா சிரிச்சுட்டேன். அப்படினா கண்டிப்பா அவரை தேம்ஸ்க்குக் கடத்திடனூம்.....நோ நயந்தாரா ஓ மை காட் டங்க் ஸ்லிப்....நோ நயாகரா..

கீதா

நெ.த. said...

திருபாகம் செய்முறை நல்லா இருந்தது. அதிலும் பின்னணி, அதற்கான பின்னூட்டங்களை ரசித்தேன். கொஞ்ச வாரங்களில் மீண்டும் நலத்துடன் பின்னூட்டமிடுவேன்.

இப்போ சில நாட்களா, இனிப்பை ஒதுக்கக்கூடாதோ என்றும் மனதில் எண்ணம் (ஹெல்த்துக்கு).

இந்தப் பின்னூட்டம் சென்னையிலிருந்து.

Thulasidharan V Thillaiakathu said...

அது 3 இயர்ஸ் கழிச்சி எங்களுக்கு ஆலயத்தில் புது vicar அப்பாய்ண்ட் ஆகிறாரதனால் கூடுதல் பொறுப்பு எனக்கு அரேஞ்சிங் க்ளீனிங்ன்னு இன்னும் முழுசா நான் free ஆகல்லை ..நேரமிருக்கும்போது பூனை வாலை இழுக்க வருவேன் :)
எங்களுக்கும் ஈஸ்டர் விடுமுறைன்னு அந்த தேம்ஸ் கரையில் இருக்கவங்ககிட்ட சொல்லிடுங்க//

ஓ அப்போ ரொம்பவே இன்னும் கடமைகள் இருக்குனு சொல்லுங்க!! நல்ல விஷயம் ஏஞ்சல் இப்படிச் செய்வது எல்லாம்...

தேம்ஸ்காரங்க என்னடானா நீங்க தூங்கி எழுந்திருக்கவே நேரமாகும்னு கதைச்சுட்டு போயிருக்கார்...பூஸாரின் வாலை அப்ப்ப பிடிச்சு இழுக்கனும்...நானும் வரேன் இழுக்க....கொஞ்சம் அடங்கி ஒடுங்கி இருக்கும் பூஸார்...ஹா ஹா ஹா ஹா...
அது சரி ஏஞ்சல் பூஸார் என்னவோ ஜிம் எல்லாம் போய் ரொம்பவே பார்த்தால் அடையாளம் கூடத் தெரியாதபடி மாறியிருக்காங்களாமே!! அப்படியா...மெய்யாலுமா...சரி சரி விடுங்க எனக்காச்சு மேட்டருக்கு...ஹா ஹா ஹா ஹா...

கீதா

நெ.த. said...

எனக்குப் பலருடன் சேர்ந்து சமைப்பது ரொம்பப் பிடிக்கும் சார். -- கீதா ரங்கன்.... எனக்கு தயாராகும்வரை பொறுமை இருக்காது. இந்த இனிப்பு பால்கோவா, இளகிய மைசூர்பாக் போன்ற கலவையா இருக்கு. மீண்டும் இனிப்பு சாப்பிட ஆரம்பித்தால் உங்களைத்தான் குறை சொல்வேன் போலிருக்கு.

மீண்டும் காணாமல் போனவர்களை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி. அதுக்காக புதிதாக நயனதாரா எதுக்கு? துளசி டீச்சர் இப்போதான் நியாகரா என்று பாடம் எடுத்திருக்கார். நீங்க நயாகரா என்று ஆரம்பிக்கிறீர்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்ர்ர்:) வெதுப்புதல் என்றால் அவணில் வைத்து எடுப்பதைத்தான் சொல்லோணும்... கர்ர்ர்:) உதவிக்கு அப்பாவிப் பாட்டியை வேறு கூட்டி வந்திட்டா:)).. இது சட்டியில் போட்டு வறுக்காதீங்கோ சூடு பண்ணினால் போதும் என வருமாக்கும்:)) எனக்கு டமில்ல டி ஆக்கூஊஊஉம்ம்ம்:))...//

யுவர் ஆனர்!!!! பூஸாரே!!
ஹா ஹா ஹா இதை வாசித்தும் அப்போதே பதில் சொல்ல விடுபட்டுவிட்டது அதிரா...இதை எதிர்பார்த்தேன்...அடுமனையில் பயன்படுத்தப்படும் சொல் வெதுப்புதல்.பேக்கிங்க்...தமிழீழத்துச் சொல்.வெதுப்பி என்றால் ப்ரெட்...என் பாட்டி இலங்கையில் இருந்து நானும் அவருடன் இருந்திருக்கிறேனே...இங்கு வந்த பிறகும் என் பாட்டி அத்தைகள் நான் வரை இலங்கைத் அத்தமிழ்ச் சொற்ககளைப்பயன்படுத்தி வந்திருக்கோம்...
அது போல வெதுப்புதல் என்றால் இந்த அர்த்தமும் உண்டு...warm, heat gently; வாட்டுதல். தீயிலே வெதுப்பி யுயிரொடுந் தின்ன ((தாயு. சிவன்செயல்.)

யுவர் ஆனர் ஓகேயா!!!!!?? ஹா ஹா ஹா

கீதா

நெ.த. said...

வெதுப்புதல் - நன்றி அதிரா... நல்ல தமிழ்ச் சொல்லுக்கு. சிலசமயம் கடைகள்ல பார்த்திருக்கேன். ஆனா வாழ்க்கைல பேச்சு வழக்குல உபயோகப்படுத்தறதில்லை

Avargal Unmaigal said...

@அதிரா நான் என்று வயதில் 16 எடையில் 68 கிலோதான் அன்ன்ரும் இன்ரும் என்று அப்படியேதான் இருப்பேன் ஆனால் என்ன ஆண்டுகள் உருண்டோடிக் கொண்டு இருப்பதால் வாய் கொழுப்பு அதிகம் ஆகி கொண்டிருக்கிறது

Avargal Unmaigal said...

@கீதா குண்டுகட்டா தூக்கி போடனும் என்றால் அது தேம்ஸ் நதிக்கரையில் வசிப்பவரை சொல்லுவது ஒல்லிபாச்சனை தூக்கி போடுவது என்றால் நயாக்ரா ஆளை சொல்லனும் இரண்டையும் குழப்பி கொள்ளக் கூடாது.

Avargal Unmaigal said...

@ஏஞ்சல் நயகரா நயந்தாராவா மாறினால் சந்தோஷம் அதுக்கு அப்புறம் நீங்க தூக்கி போடனும் என்று அவசியமே இல்லை நானே போய் விழுந்துடுவேன்... நயன் மேல நான் இப்படி காதோலோட அலைந்தால் நயன் என்னவோ யாரோ ஒருத்தனை காதலிக்கிறதாக சொல்லி இருக்கிறார்... சிம்பு பிரபு தேவா மாதிரி இந்த காதலும் ஒடிப் போகப் போறான் அதுக்கு அப்புறமாவது என் காதலை புரிஞ்சுகிட்டு வருவாங்க

Avargal Unmaigal said...


@அதிரா என்னடா விண்டர் எப்படி இருந்துச்சு ஜிம்முக்கு போவது மற்றும் பூஸாரை பற்றி விசாரிக்காமல் இந்த மதுர இப்படி கருத்து போடுகிறார் என்று கேட்கிறீங்க.. நீங்க நம்ம்பினால் நம்புங்க விண்டர் சம்யத்தில் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அனைத்து ஜிம்மையும் கூப்பிட்டு விசாரித்தேன் அங்குள்ள மிஷின் கள் ஏதுன் உடைந்தா பாதுகாப்பாக இருக்கிறதா என்று ? மிஷின் முக்கியம் பாருங்க அது உடைந்தால் பலரும் உடற்பயிற்சி செய்ய முடியாதுல்ல

Avargal Unmaigal said...

@அதிரா @ஏஞ்சல் இரண்டு பேரும் நீண்ட நாட்களுக்கு அப்புற்ம் வந்து இருக்கிறார்கள் அதுவும் ஈஸ்டர் கொண்டாடிவிட்டு வந்து இருக்கிறார்கள் கேக் ஏது கொண்டுவந்து ஷேர் பண்ணுவார்கள் என்று எல்லோருக்கும் முன் வந்த் உட்கார்ந்து இருந்தால் இரண்டு பேரும் ஒன்றும் தெரியாத மாதிரி கம்முன்னு இருக்கிறாங்க ச்சே வைர நெக்லஸ்தான் இல்லை ஒரு கேக்கு கூடவா இல்லை ஹும்ம்ம்

திண்டுக்கல் தனபாலன் said...

விவரித்த விதம் சுவையோ சுவை...!

காமாட்சி said...

திரிசங்கு பாகம் படம்,பதம் எல்லாம் அருமையாக வந்திருக்கு. நல்ல திரட்டிப்பால் மாதிரி கடலைமாவு ஹல்வா. கையிலும் ஒட்டாமல். எல்லாவற்றையும் சேர்த்து பர்பி பதத்தில்செய்திருக்கிறேன். பால் பவுடர் உபயோகம். இது புதுசுதான். சாப்பிடவும் சுகமாக இருக்கும். மிகவும் நன்றி. அன்புடன்

Kamala Hariharan said...

திருபாகம் மிகவும் அருமையாக இருந்தது. மலரும் நினைவுகளுடன் இரண்டு விதமான திருபாகத்தை கிளறி தந்த சகோதரி கீதாரெங்கனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். செய்முறை விளக்கங்கள் படங்கள் மிகவும் நன்றாக இருந்தது. நானும் குறித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

இது முன்பு எங்கள் அம்மா வீட்டிலும் செய்து சாப்பிட்டுள்ளேன்.நான்தான் செய்ததில்லை. திருபாகம் என் மலரும் நினைவுகளையும் மலர்ந்திட செய்தது. மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

துரை செல்வராஜூ said...

காலையிலேயே சொல்ல நினைத்தேன்...

இந்த வெதுப்புதல் என்ற சொல்லைக் கேட்டு வெகு வருடங்கள் ஆகி விட்டன..

பள்ளி நாட்களில் -

அந்த சார் கிட்டே மாட்டினா அவ்வளவு தான்... வெதுப்பிடுவார்...

- ந்னு பேசிக் கொள்வதுண்டு....

மகிழ்ச்சி..

Thulasidharan V Thillaiakathu said...

மதுரை....நீங்க குண்டுனு நான் சொல்லவே இல்லையே!!! ஹாஹா ஹா ஹா...உங்களைக் கட்டித் தூக்கிக் கொண்டு (68 கிலோ தூக்க முடியுமா சொல்லுங்க!!!??) நானும் அதிராவும் தேம்ஸ்ல பெர்மனெண்டா வைச்சுக்கிட்டு...நீங்களே சொல்லிட்டீங்க வாய்க்கொழுப்புனு! ஹிஹிஹிஹி...ஸோ அப்பப்ப தூக்கிப் போட வசதியா இர்க்குமேனு தான் அதுவும் ஏஞ்சல் நயன்னு வேற சொல்லிட்டாங்க..ஸோ கண்டிப்பா பார்சல்தான்!! மாமிகிட்டயும் போட்டுக் கொடுத்துட்டு நயன் கிட்டருந்து காப்பாத்தனு சொன்னா அவங்க வேண்டாம்னா சசொல்லுவாங்க...ஹப்பாடா கொண்டு போங்கப்பா எனக்குக் கொஞ்ச நாள் பூரிக்கட்டைய தூக்கற பிசினெஸ் இல்லைனு ஜாலியா...இருப்பாங்க...ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஓ! நெ த சென்னை வந்தாச்சா!! வெல்கம் வெல்கம்!!!

உடல்நலனைக் கவனித்துக் கொள்ளவும்....

ஹா ஹா ஹா ஹா ஹா....ஸ்வீட் சாப்பிட்டா என் மண்டை உருளும் ந்றீங்க...ஹா ஹா ஹா ஹா உருளட்டும்!! ரசித்தேன் நெத...

நீங்க ரசித்ததுக்கும் மிக்க நன்றி...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மீண்டும் காணாமல் போனவர்களை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி. அதுக்காக புதிதாக நயனதாரா எதுக்கு? //

ஹா ஹா ஹா நெல்லை அது தெரியாதுல்ல உங்களுக்கு...இங்கு அனுஷ், தமனா மதுரைக்கு நயந்தாரா...ஹா ஹா ஹா ஹ..அதான் கலாய்ப்பு!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

டிடி மிக்க நன்றி கருத்திற்கு

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

காமாட்சிம்மா வாங்க....ஆமாம் நீங்க சொல்லிருக்கறதும் நல்லாருக்கும் அம்மா. நானும் கடலைமாவுடன் பால் பவுடர் சேர்த்தும் துண்டு போடும் ஸ்வீட் போல செய்திருக்கிறேன்....ஆமாம் அம்மா சாப்பிட சுகமாக இருக்கும்/.கடிக்க வேண்டாம்..அப்படியே வாயில் போட்டு முழுங்கிவிடலாம்...என் மாமியாருக்கு எளிது சாப்பிட...எந்தப் பாட்டி எனக்குச் செய்து கொடுத்தாரோ என் அப்பாவின் அம்மா என்னுடன் தான் இருந்தார் இறுதிக்காலம் வரை அப்போது அவருக்குச் செய்து கொடுத்தேன் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டார்..

..இதிலேயே பாலுக்குப் பதில் பால் பவுடர் சேர்த்தும் செய்யலாம்...இல்லை பால்கோவா சேர்த்தும் செய்யலாம் காமாட்சிம்மா...சர்க்கரை சேர்த்த பால்கோவா என்றால் சர்க்கரை சேர்ப்பது பார்த்துச் சேர்க்கணும்....சர்க்கரை இல்லாத பால்கோவா என்றால் சர்க்கரை இது போல சேர்த்துச் செய்யலாம்..இன்னும்..நன்றாகவே இருக்கும் காமாட்சிம்மா...எல்லாம் நம் கற்பனைதானே...ஒரு நுனி கிடைத்தால் போதுமே அப்புறம் விதம் விதமாகச் செய்திடலாம் தானே!!?
உங்களுக்கு இல்லாத அனுபவமா அம்மா!!

மிக்க நன்றி அம்மா கருத்திற்கு

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இந்த வெதுப்புதல் என்ற சொல்லைக் கேட்டு வெகு வருடங்கள் ஆகி விட்டன..

பள்ளி நாட்களில் -

அந்த சார் கிட்டே மாட்டினா அவ்வளவு தான்... வெதுப்பிடுவார்...

- ந்னு பேசிக் கொள்வதுண்டு....//

ஆமாம் துரை அண்ணா...இப்படியும் எங்களிடையே பயன்படுத்தியதுண்டு....

கீதா

Anonymous said...

//நயன் மேல நான் இப்படி காதோலோட அலைந்தால் //
https://cs8.pikabu.ru/post_img/2016/03/21/6/1458548954167360165.jpg


garrrr @)

Angel

Menaga sathia said...

மிக அருமை,பாட்டி செய்முறை ரொம்ப பிடித்திருக்கு !!

athira said...

//நெ.த. said...
வெதுப்புதல் - நன்றி அதிரா... நல்ல தமிழ்ச் சொல்லுக்கு. சிலசமயம் கடைகள்ல பார்த்திருக்கேன். ஆனா வாழ்க்கைல பேச்சு வழக்குல உபயோகப்படுத்தறதில்லை//

நாங்கள் பேச்சில் பாவிப்பதில்லை நெல்லைத்தமிழன்.. ஆனா பேக்கரி எனில் வெதுப்பகம் எனத் தெரியும்:)))

ஆனா சில பழங்கள் வெயிலில் ஒருவித சுவையில்லாமல் அவிந்திருந்தால், வெதும்பி விட்டது என்போம்.

athira said...

ஹா ஹா ஹா ட்றுத்தை 96 கிலோ எனச் சொல்லி விட்டோம் என்பதற்காகவே:) 4 கொமெண்ட்ஸ் போட்டு மனதை தேற்றியிருக்கிறார்ர்:)) ஹா ஹா ஹா.. கீதா .. கிரயின் ஒன்று ஓடர் குடுங்கோ தேம்ஸில் போடுவதெனில்:)) தூக்க எல்லாம் முடியாதே:) ஹையோ ஹையோ.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

திரிசங்கு பாகம்
நான் இப்ப தான் அறிகிறேன்.
படங்களுடன் அருமையான வழிகாட்டல்

Anuradha Premkumar said...

திரிசங்குபாகம்.. எனக்கும் புதுசு கீதாக்கா..

ரொம்ப ஈசி யாவும் இருக்கு...சிக்கீரம் செஞ்சு பார்த்து சொல்றேன்..

கடலை மாவில் என் அத்தை மைசூர் பாகு தான் செய்வாங்க...இது மாதரி யாரும் செய்தது இல்ல...அதனால் செய்யும் ஆவலை தூண்டுது..

Geetha Sambasivam said...

அநியாயமா இருக்கே! நான் ஏற்கெனவே இதைத் திரிபாகம்/திருபாகம் என்னும் பெயரில் போட்டு விட்டேனே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))))

Geetha Sambasivam said...

http://sivamgss.blogspot.in/2017/10/blog-post_16.html

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!