ஞாயிறு, 1 நவம்பர், 2009

இலக்கிய ரசனை 3

ஒரு பணக்காரர் அவருக்கு நண்பராக ஒரு புலவர். பணக்காரருக்கு ஒரு பெண் மேல் பிரியம் வந்தது.  ஆனால் அவள் அவரை கண்டுகொள்ள வில்லை. புலவரை தூது அனுப்புகிறார் ஹீரோ . 


புலவர் போய் பேசத் துவங்குகிறார்.


வெள்ளரிக்காயா, விரும்பும் அவரைக்காயா உள்ளமிளகாயா ஒரு பேச்சுரைக்காயா..


விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். முழுப்பாட்டும் எனக்கு நினைவில்லை. தேடிக் கண்டு பிடிக்கவும் முடியவில்லை.
****
முழுப்பாட்டு நினைவில் இருக்கும் ஒரு தகவல் இதோ. 


வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன 
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை -- மங்காத 
சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம் 
ஏரகத்துச் செட்டியாரே.   


திருவேரகம் என்ற தலத்தில் விளங்கும் இறைவனே , சூடு இருக்கும் வரை உயிர் வாழும் இந்த உடம்பு (வெம் காயம்) உலர்ந்து வற்றினால் (சுக்கு)  அயக்காந்த பஸ்பம் போன்ற (வெந்த அயம்) ஆவதுதான் என்ன ? அதன் பின் இந்த உடலை யார் தாங்குவார்கள்?  சிறப்பில் குறையாத சீர் மிகுந்த அகமாகிய கைலாயத்தைத் தருவீரேல் பெரும் காயம் (பரு உடல்) நான் ஒரு நாளும் வேண்டேன். 


பிரார்த்தனை எவ்வளவு சுவாரசியமாகச் செல்கிறது !!


***
இங்கிதமாய் இங்கனைவரும் வேண்டுவது யாதெனில் 
வெங்காயம் மணக்கின்ற சாம்பார் 


எனும் கிறளோடு முடித்துக் கொள்வோம். 

4 கருத்துகள்:

  1. சூப்பரா - சுவையா இருக்குங்கோ. இந்த சீரகப் பாடல் - எங்கே பிடித்தீர்கள்?

    பதிலளிநீக்கு
  2. இது கர்ண பரம்பரையாக வழங்கிவரும் பாடல. யார் பாடியதோ அறியேன்.

    பதிலளிநீக்கு
  3. அத்திக்காய் பாடலின் வரிகள் சங்க இலக்கியம் ஏதோ ஒன்றில் இடம் பெற்றதாகப் படித்திருக்கிறேன் - நினைவுக்கு வர மறுக்கிறதே?

    பதிலளிநீக்கு
  4. வாசிக்கும்போது தமிழின் அழகை இன்னும் ரசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!