LETTERBOX மொத்தம் ஒன்பது லெட்டர்ஸ் என்று கணக்குப் பண்ணி, முன் மொழிந்த மிடில்கிளாஸ் மாதவிக்கும், வழி(மொழி)ந்த மற்ற எல்லோருக்கும் பாராட்டுகள்.
இந்த வாரக் கேள்வி:
மிஸ்டர் எக்ஸ், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சமயம், அதாகப்பட்டது, கூகிள் மாப், அலைபேசி, தொலைபேசி, இத்யாதிகள் இல்லாத நாட்கள். நடை பயணம் சென்றார்.
அவர் X என்னும் ஊரிலிருந்து R என்னும் ஊருக்கு செல்லவேண்டியிருந்தது. திசைகாட்டிகளை நம்பி, பயணம் தொடங்கியிருந்தார்.
அவருடைய ஊரிலிருந்து, சற்றேறக்குறைய பத்து காத தூரம் சென்றால், ஒரு நாற்சந்தி வரும். அந்த நாற்சந்தியின் மத்தியில் ஒரு நால் வழிகாட்டி இருக்கிறது, அதன்படி சென்றால் R ஊரை அடையலாம் என்று சென்றார்.
ஆனால், அங்கு சென்றவுடன் அவர் கண்ட காட்சி, அவரை திகைப்பில் ஆழ்த்தியது.
அந்த வழிகாட்டி சமீபத்திய புயலில், வேரோடு விழுந்து உடைந்து கிடந்தது.
அந்த சுற்றுப்பக்கம் பதினெட்டுப் பட்டி தூரத்திற்கு ஆளரவமே இல்லை.
மிஸ்டர் எக்ஸ், அவர் செல்ல நினைத்த R என்ற ஊருக்குப் போய்ச்சேர உங்களால் உதவ இயலுமா?
எனது அறிவுக்கு..................... கொஞ்சம்....
பதிலளிநீக்குரொம்ப ரொம்ப பழைய புதிர். விடையும் சுலபம்தான்.
பதிலளிநீக்குபழைய புதிர் தான்... X வந்த வழி ஞாபகம் இருக்கும் புத்திசாலி X ஆக இருந்தால், அதை வைத்து அந்த வேரோடு விழுந்திருக்கும் நால் வழிகாட்டியை சரியாக வைத்து போக வேண்டிய பாதையை கண்டுபிடிப்பார்!!
பதிலளிநீக்குஅருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
பதிலளிநீக்குTamil News | Latest News | Business News
ஏங்க... சிறுவர் மலர் போல் புதன்புதிரை ஆக்கிட்டீங்க... வந்த வழி ஞாபகம் இருந்தால் அதுக்கேத்தபடி கைகாட்டியைத் திருப்பிவைத்துக் கண்டுபிடித்துவிடவேண்டியதுதான். ஆனால், கைகாட்டி மரத்தில், அவர் வந்த ஊர் மட்டும் காட்டப்படவில்லை. (அந்தப் பகுதி பாதிகூட இல்லாமல் உடைந்தது போன்று படத்தில் காண்பித்துள்ளார்) அந்த உடைந்த பகுதியை அவர் வந்த பாதை நோக்கி வைத்தால் தீர்ந்தது பிரச்சனை.
பதிலளிநீக்குஆனால் மி.கி.மா. உடைந்த கைகாட்டி மரப் படத்தைப் பார்த்ததுபோல் தெரியவில்லை. அதனால் இந்தத் தடவை பரிசு அவருக்கு நஹி.
// ஏங்க... சிறுவர் மலர் போல் புதன்புதிரை ஆக்கிட்டீங்க.. //
பதிலளிநீக்குI hail this.
@ நெல்லைத் தமிழன் - நன்றி :-)) //X வந்த வழி ஞாபகம் இருக்கும் புத்திசாலி X ஆக இருந்தால்// !!
பதிலளிநீக்குமுன்னாடி எல்லாம் ஆனந்த விடகன்ல மிஸ்டர் X என்று ஜோக் வருமே...அந்த X கொஞ்சம் நம்ம வடிவேலு ஸ்டைல்....அப்படியான எக்ஸ் ஆக இருந்தால்???!!! ஹிஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
சரி போனால் போகுதுனு கலந்துக்கப் பார்த்தா! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! X பேசாம அவர் ஊரோட பெயரை R னு மாத்திட்டுத் திரும்ப அங்கேயே போய்த் தூங்கட்டும்! :)
பதிலளிநீக்குஅடடே... (பின்னூட்டங்கள்...!)
பதிலளிநீக்குஏங்க... சிறுவர் மலர் போல் புதன்புதிரை ஆக்கிட்டீங்க..// என்ன நெல்லைத் தமிழன்...இப்படிக் கேட்டுபுட்டீங்க....ஏற்கனவே நான் எல்லாம் இதுக்கே பதில் சொல்ல முடியாம திணறிக்கிட்டுருக்கேன்!....நான், அதிரா, ஏஞ்சல் எல்லாரும் சின்ன புள்ளைங்கனு கேஜிஜி க்கு நல்லாவே தெரியுமாக்கும்...அதான்...ஹிஹிஹி...கீதா ஓடிக்கோ.!!
பதிலளிநீக்குகீதா
வந்த ஊரைச் சரிசெய்தால்
பதிலளிநீக்குசரியாகும்தானே
turn 90degree left and proceed
பதிலளிநீக்கு