வியாழன், 27 ஏப்ரல், 2017

சரயு




எங்கள் உறவுகளில் ஒருவர் எழுதியிருக்கும் புத்தகம்.  





துணிந்தவனுக்கு துக்கம் இல்லை என்பார்கள்.  அது போல துணிந்து ஒரு செயலில் இறங்கி விட்டால் வெற்றி அடையும் வரை விடமாட்டோம்.


பூஜ்யத்திலிருந்து தொடங்குவது வெற்றியின் ஒரு மையப்புள்ளி.  இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்னும் நிலையிலிருந்து தொடங்குவது மட்டும் அல்ல, தன்னை நிரூபிக்க ஒரு தேவை இருக்கும்போதும் வெற்றி சாத்தியமாகிறது.


ஒரு சாதாரண நிலையிலிருந்து சரயு வாழ்க்கையின் சவால்களை எப்படி எதிர்கொள்கிறாள், வெற்றி பெறுகிறாள்  என்று சொல்கிறது கதை.


ஒரு சுவாரஸ்யமான காதலும் ஊடாடுகிறது.


கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொன்னாலும் பிள்ளையார் மேல் ஒரு ஈடுபாடு வருவது அழகாகச் சொல்லப்பட்டுள்ளது.  எந்த எதிர்பார்ப்புமில்லாமல் ஆலயத்துக்குச் சென்று ஒரு உரையாடல் போல, ஒருவருக்குள் ஒருவர் பகிர்ந்து கொள்ளும் ஒரு நண்பனைப்போல பிள்ளையாரிடம் மனதால் உரையாடத் தொடங்கும்போது இருவருக்குள்ளும் ஒரு பந்தம், ஒரு நட்பு உருவாகிறது.  அது மனதுக்குள் விதைக்கும் நிம்மதி - சாந்தியும்- நம்பிக்கையும் கூட வெற்றிக்கு உதவுகின்றன.



முயலாமல் வெற்றி கிடையாது.  வெற்றி இல்லாமல் வசதி இல்லை.  லாட்டரியில் பரிசு விழுந்து பணக்காரனாகலாம் என்கிற சோம்பேறி எண்ணங்கள் இல்லாமல் தனது படிப்பால், அறிவால், உழைப்பால் வெற்றியின் படிக்கட்டுகளில் ஒவ்வொன்றாய் ஏறுவதுதான், அந்த வெற்றியிலேயே  மேலேயே நிலைத்து நிற்பதற்கும் வழி வகுக்கும்.  சரயு அதை சாதித்துக் காட்டுகிறாள்.



படிக்க விரும்புபவர்கள் இந்த லிங்க் கிளிக் செய்து புத்தகம் வாங்கிப் படிக்கலாம்.  


புத்தகமாக வாங்க 199 ரூபாய்.  


PDF ஆகப் படிக்க ரூபாய் 99 மட்டும்.

37 கருத்துகள்:

  1. சரயு நதியின் பெயரை வைச்சிருகாங்க. திரு லா.ச.ரா. நினைவில் வருகிறார். அவர் தான் இம்மாதிரிப் பெயர்களைச் சூட்டுவார். நீங்க எழுதி இருக்கிறதைப் பார்த்தால் ஓர் அறிவு ஜீவி எழுதின சுயசரிதையோனு தோணுது! வாய்ப்புக் கிடைத்தால் வாங்கிப் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ சரயு என்பது நதியின் பெயரோ? இப்போதான் அறிகிறேன், பெயர் வித்தியாசமாக இருக்கே என நினைச்சேன்.

      நீக்கு
  2. //கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொன்னாலும் பிள்ளையார் மேல் ஒரு ஈடுபாடு வருவது அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. எந்த எதிர்பார்ப்புமில்லாமல் ஆலயத்துக்குச் சென்று ஒரு உரையாடல் போல, ஒருவருக்குள் ஒருவர் பகிர்ந்து கொள்ளும் ஒரு நண்பனைப்போல பிள்ளையாரிடம் மனதால் உரையாடத் தொடங்கும்போது இருவருக்குள்ளும் ஒரு பந்தம், ஒரு நட்பு உருவாகிறது. அது மனதுக்குள் விதைக்கும் நிம்மதி - சாந்தியும்- நம்பிக்கையும் கூட வெற்றிக்கு உதவுகின்றன.//

    அருமை.

    பதிலளிநீக்கு
  3. சரயு... நல்ல தலைப்பு. நீங்கள் அறிமுகம் செய்த பவிதம் படிக்கத் தோன்றுகிறது. நன்றி ஸ்ரீராம். லிங்க் படித்துப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. எளிமையான விமர்சனம் தந்து இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  5. அவசியம் வாங்கிப் படிப்பேன் நண்பரே
    இதோ இணைப்பிற்குச் செல்கிறேன்
    நன்றி
    தம+1

    பதிலளிநீக்கு
  6. தன்னம்பிக்கை கட்டுரைப் போல் இருக்கிறது ,தலைப்பைப் பார்த்தால் :)

    பதிலளிநீக்கு
  7. ஆங்கிலப் புத்தகத்துக்கு விமரிசனமா? சமயம் வாய்க்கும்போது படித்துவிடலாம்.

    பதிலளிநீக்கு
  8. தமிழே தகராறு. இதுல ஆங்கில புத்தகமா?! ரைட்டு

    பதிலளிநீக்கு
  9. தமிழே தகராறு. இதுல ஆங்கில புத்தகமா?! ரைட்டு

    பதிலளிநீக்கு
  10. புத்தகம் பற்றி கொடுத்திருக்கும் விளக்கம் அனைவரையும் புக் படிக்க தூண்டுது, ஆனா பெரீஈஈஈய கதையாக இருக்கும்போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  11. ஹா ஹா ஹா மீயும் சரயு போலத்தான், கடவுளுக்கு நல்ல திட்டெல்லாம் கொடுத்து அப்பப்ப சண்டையும் பிடிப்பேனே... தங்கியூவும் சொல்லுவேன்:).

    புத்தக முகப்பு சூப்பர்...

    பதிலளிநீக்கு
  12. ஆங்ங்ங்ங்ங் சரயு வுக்கு(எனக்கு இந்தப் பெயர் ரொம்பப் பிடிச்சுப்போச்ச்ச்ச்ச்ச்ச்:) எனக்கு பிடிச்ச 4ம் நம்பர் வோட் பண்ணிட்டேன்ன்ன்ன்ன்ன்:).

    பதிலளிநீக்கு
  13. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    Tamil News

    பதிலளிநீக்கு
  14. புத்தகத்தை வாங்கணும் ..உங்க விமர்சனம் படிக்கும் ஆவலை தூண்டுகிறது ..//அது போல துணிந்து ஒரு செயலில் இறங்கி விட்டால் வெற்றி அடையும் வரை விடமாட்டோம்// கொஞ்சம் என் பொண்ணு கேரக்டர் மாதிரி இருக்கு :)

    நானும் கொஞ்சம் சரயூ டைப்தான் ..செய்தெ ஆகணும்னு கட்டாயம் ஏற்படும்போது பீனிக்ஸ் பறவையாய் எழும்பிடுவேன் :)
    எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கடவுளிடம் ப்ரண்ட் போல பழகுவது எனக்குப்பிடித்தது :) ....இதுவரை கடவுளிடம் எனக்கு எதுவும் கேட்டதில்லை ஆனா மற்ற எல்லாருக்கும் அதிலும் முக்கியமா 4 legged செல்லங்களுக்கு மற்றும் இதர செல்லங்களுக்கு கேட்பேன் :)

    பதிலளிநீக்கு
  15. சரயு ..மிக அழகிய பெயர் ..நதி போல ஓடிக்கொண்டிரு என பொருத்தமாக இருக்கு பெயர்

    பதிலளிநீக்கு
  16. நன்றி கீதாக்கா. ஆமாம். ஆங்கில நாவல்தான்.

    பதிலளிநீக்கு
  17. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  18. நன்றி அதிரா. நீங்கள் வாங்கிப் படித்து விட்டு ஒரு விமர்சனம் போடுவீர்கள் என்று நம்புகிறேன். (சும்மா போட்டு வைப்போமே...)

    சரயு மிக நல்ல பெயர்தான்.

    பதிலளிநீக்கு
  19. நன்றி ஏஞ்சல். நதிபோல ஓடிக்கொண்டிரு என்று நான் கூட தலைப்பு யோசித்தேன். ஏற்கெனவே அந்தத் தலைப்பில் போட்டிருப்பதால் மாற்றி விட்டேன். திராவிடம் கேட்டிருப்பது போல உங்களிடமும் ஒரு விமர்சனம் எதிர்பார்க்கலாம் என்று சொல்லுங்க...!!!!

    பதிலளிநீக்கு
  20. படித்தேன்!தங்கள் பதிவை மட்டுமே!

    பதிலளிநீக்கு
  21. நல்லதொரு அறிமுகம். லிங்க் சென்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. ///ஸ்ரீராம்.April 27, 2017 at 7:40 PM
    நன்றி அதிரா. நீங்கள் வாங்கிப் படித்து விட்டு ஒரு விமர்சனம் போடுவீர்கள் என்று நம்புகிறேன். (சும்மா போட்டு வைப்போமே...) ///

    ஓ மை கடவுளேஏஏஏஏ இது என்ன பிரித்தானியாவுக்கு வந்திருக்கும் சோதனை:) ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  23. ஹாஹா :) அதிராத்தான் விமர்சன வித்தகி :) அவங்ககிட்ட கற்றுக்கொண்டு நானும் எழுத முயல்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  24. ஆ...சரயு என் குணாதிசயங்கள் கொஞ்சம் சொல்வது போல இருக்கே...ஆனா சரயு அறிவு ஜீவி போல ..உங்கள் பதிவு வாசிக்கச் சொல்கிறது...முயற்சி செயறேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  25. நீங்கள் கொடுத்த புத்தகத்தை இப்போதுதான் படிக்கத் துவங்கி இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  26. ////AngelinApril 28, 2017 at 3:37 PM
    ஹாஹா :) அதிராத்தான் விமர்சன வித்தகி :) அவங்ககிட்ட கற்றுக்கொண்டு நானும் எழுத முயல்கிறேன் :)//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இனி பீஸ் தந்தாதான் நான் எழுதுவேனாக்கும்:)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!