உருளைக்கிழங்கு தேங்கா அரைச்ச கூட்டு எனக்கு எப்போதும் பிடித்தமானது. இது சாத்துமது, வெந்தய, வற்றல் குழம்புகளுக்கு ரொம்ப நல்லா சேரும். சமீபத்துல என் ஹஸ்பண்டும் பையனும் இங்க வந்திருந்தாங்க. அப்போ, இந்தக் கூட்டைப் பண்ணினேன். என் பையன் ரொம்ப நல்லா இருக்குன்னு ஆசை ஆசையாச் சாப்பிட்டான். சாதத்துக்கே தொட்டுக்கொண்டு சாப்பிடறேன் என்றான். சுலபமா செய்துவிடலாம். இப்போ செய்முறையைப் பார்ப்போமா?
உருளைக் கிழங்கை தோலோடையே, சதுரமாக சிறு சிறு துண்டுகளாக திருத்திக்கோங்க. ஒரு பாத்திரத்தில் காயைப் போட்டு, அதுக்கு கொஞ்சம் மேல் வரை தண்ணீர் இருக்கட்டும். உப்பும் மஞ்சப் பொடியும் சேர்த்துக்கோங்க. இப்போ கொதிக்கவைக்கவேண்டியதுதான். உருளைக்கிழங்கு வெந்திருக்கணும், ஆனால் ரொம்பக் குழைந்துவிடக்கூடாது.
இப்போ, 5 ஸ்பூன் தேங்காயும், ½ ஸ்பூன் ஜீரகமும், 1-2 வற்றல் மிளகாயும் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும். (அதிரா ‘செத்தல் மிளகாய்’ என்று குறிப்பிடுவார். பச்சை மிளகாய் செத்துப்போனாத்தான் வற்றல் மிளகாயா ஆறதுனால அப்படி இலங்கைல சொல்றாங்களா?)
உருளைக்கிழங்கு ஆனபின்பு (வெந்தபின்பு), அதோட இந்த பேஸ்டைச் சேர்த்து கலந்துகொண்டு, அடுப்பில் 1-2 நிமிடத்துக்கு சூடு செய்தால் போதும். ஒருவேளை, கூட்டில் தண்ணீர் ஜாஸ்தியாகிவிட்டால், அடுப்பை அணைப்பதற்கு முன்பு, 1 ஸ்பூன் அரிசிமாவைத் தண்ணீரில் கரைத்துச் சேர்த்துக்கவேண்டியதுதான்.
அடுப்பை அணைத்தபின், கடுகு, உளுத்தம் பருப்பு, 1 ஆர்க் கறிவேப்பிலை திருவமாறினால் போதும். கூட்டு தயார்.
எப்போவும் உருளைக் கிழங்கை ரோஸ்ட், கட் கறியமுது, பொடிமாஸ், மசாலா என்று செய்வதற்குப் பதிலாக இந்தக் கூட்டைச் செய்துபாருங்கள்
நான் உருளைக்கிழங்கு கூட்டு செய்த அன்று, கத்தரிக்காய் தொகையலும் வெள்ளரிப் பச்சிடியும் செய்தேன். என் பையன் வந்தபோது, முள்ளங்கி சாம்பாரும் உருளைக்கிழங்கு கூட்டும் செய்தேன்.
ஜெ. அவர்கள் மறைந்தபோது, அவருக்கு உருளைக்கிழங்கு கூட்டு ரொம்பப் பிடிக்கும், வீட்டில் அடிக்கடி அதைச் செய்யச்சொல்லி சாப்பிடுவார் என்று படித்தேன். அது இதுவாக இருக்குமா?
பின்குறிப்பு: உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவது, ‘உருளைக்கிழங்கின் வாய்வு’ தன்மையைக் குறைக்கும். எங்க அப்பா, பலாச்சுளை சாப்பிட்டபின், ஒரு சிறு துண்டு பலாக்கொட்டையைச் சாப்பிடுவது நல்லது என்று சொல்லுவார் (பலாக்கொட்டையையோ அல்லது நெல்லிக்காயையோ தண்ணீர் அருகில் இல்லாமல் சாப்பிடவேண்டாம். சமயத்தில் தொண்டையை அடைத்துக்கொள்ளும்)
நீங்களும் செய்துபாருங்கள்.
அன்புடன்,
[ எங்கள் பாஸ் உருளைக்கிழங்கு முட்டைகோஸ் போட்டு ஒரு கூட்டு சாம்பார் செய்வார். எனக்கு மிகவும் பிடிக்கும். அது பற்றி எங்கள் பிளாக் திங்கற கிழமையில் எழுதிய ஞாபகம்! இது உருளைக்கிழங்கு மட்டும் போட்டா? செய்துடுவோம்! - ஸ்ரீராம் ]
நான் உங்க ஊருக்கு வந்து இந்தக் கூட்டைச் சாப்பிட்டுப் போகிறேன். சரியா. ரொம்ப டெம்ப்டிங்கா இருக்கு. நானும் உ.கிழங்கைத் தோலுடன் தான் சமைப்பேன். நெதமி.
பதிலளிநீக்குஉருளைக்கிழங்கைத் தோலுடன் சமைத்தால் தான் ருசி, சத்து! :) இனிமே மத்தது பதிவு படிச்சப்புறமா.
பதிலளிநீக்குஉருளைக்கிழங்கைச் சேர்க்கும் உணவு வகைகளுக்கு மாவெல்லாம் விட வேண்டாம். பொதுவாகவே நான் சாம்பார், வற்றல் குழம்பு, மொளகூட்டல் வகைகளுக்கு மாவு விட மாட்டேன். பொரிச்ச கூட்டு வகைகளுக்கு மட்டும் கொஞ்சம் போல் மாவு விடுவேன். சப்பாத்திக்குச் செய்யும் கூட்டு வகைகளுக்கு உ.கி. சேர்த்தால் நோ மாவு! இல்லைனா எப்போவானும் கடலைமாவோ அல்லது சோள மாவோ கரைத்து விடுவேன்.
பதிலளிநீக்குஇது போல செய்ததுண்டு. அம்மாவும் செய்வார். எனக்கும் பிடிக்கும் இந்தக் கூட்டு!
பதிலளிநீக்குஉங்கள் பக்கத்தில் பார்த்தபிறகு செய்யத் தோன்றுகிறது.
பிடித்த கூட்டு...
பதிலளிநீக்குபின்குறிப்பு உண்மை...
தோலுடன் சாப்பிட பெரும்பாலானோர் விரும்புவதில்லை ஆனால் அதில் சத்து உள்ளது.
பதிலளிநீக்குஅடிக்கடி சுவைத்து சாப்பிடும் கூட்டு
பதிலளிநீக்குநன்றி நண்பரே
தம +1
நேற்று இது தான் .. இதே தான்!..
பதிலளிநீக்குஇங்கே மசாலா அரைத்துச் செய்வதற்கெல்லாம் வசதிப்படாது..
எனவே - நம்ம ஊரில் இருந்து வரும் பொடி வகைகள் தான்..
நல்ல குறிப்பு.. நலம் வாழ்க!..
இந்த உருளைக்கிழங்கு கூட்டை மூன்று விதமாக செய்ய முடியும்..
எனினும் - உருளைக் கிழங்கை அதிகம் சேர்த்துக் கொள்வதில்லை..
அல்வாவை தொதல் என்கிறார் ,செத்தல் மிளகாய் என்கிறார் ..அதிரா சொல்வதெல்லாம் அதிசயம்தான் :)
பதிலளிநீக்குநாங்களும் செய்வோம். கூட்டுகுறிப்புடன் சில பின் குறிப்புகளும் அருமை.
பதிலளிநீக்குசெஞ்சு பார்க்குறேன்.
பதிலளிநீக்குநீங்க செஞ்ச இஞ்சி, மா, நெல்லி தொக்கு செஞ்சேன். வீட்டுல செம வரவேற்பு
இப்படி நாங்கள் செய்தது இல்லை . இனி செஞ்சு பார்த்திட வேண்டியதுதான்
பதிலளிநீக்குஅருமையான ரெஸிப்பி...பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குTamil News
நன்றி எங்கள் பிளாக் ஸ்ரீராம். ஒவ்வொருத்தரும் பண்ணறதுல, சில ஐட்டம், அவங்களோட SIGNATURE DISHஆகிடுது இல்ல. அப்படிப்பார்த்தா ஒவ்வொருத்தரும் சமையல்ல திறமைசாலிதான் (அல்லது linage combination..அதாவது பரம்பரையா வர்ற செய்முறை சிறப்பா இருக்கும்). நீங்கள் சொன்னதைப் படித்தபோதுதான், எங்க அம்மா முட்டைக்கோஸும் உருளைக்கிழங்கும் போட்டுச் செய்யும் கூட்டு நினைவுக்கு வந்தது. அவங்க, முட்டைக்கோசும், கத்தரியும், கோஸும் கேரட்டும், புடலையும் கத்தரியும் என்று காம்பினேஷன் உபயோகப்படுத்துவார்கள். எனக்கு அவியல் தவிர, பெரும்பாலும் காய்கறிகளில் காம்பினேஷன் பிடிக்காது. உங்க வீட்டுல அன்னன்னைக்கு மெனு யார் தீர்மானிப்பார்கள்?
பதிலளிநீக்குநான் வந்துட்டேன்ன் வந்த வேகத்தில் மை வச்சிட்டேன்.. இதை முதலில் சொல்லிடோணும் கடமை முக்கியம் எனக்கு:).
பதிலளிநீக்கு/////
"திங்க"க்கிழமை : ///
அது “கக்” கிழமை இல்லை ”கட்” கிழமை ஆக்கும்:) எனக்கு டமில்ல டி ஆக்கும்:) என்னிடம் ஆரும் தமிழில் பிழை விட்டுத் தப்ப முடியாது... ஹையோ ஏன் முருங்கிமரம் ஆடுது:)..
///இது சாத்துமது// புதுப் பெயரா இருக்கு..
பதிலளிநீக்கு//சமீபத்துல என் ஹஸ்பண்டும் பையனும் இங்க வந்திருந்தாங்க///
உங்க வீட்டில ரெண்டு ஹஸ்பண்ட்டா?:) வைவ் இல்லயா?:) ஹையோ இண்டைக்கு எனக்கு சனி வந்து வாயில இருக்குதென முச்சந்திச் சாத்திரியார் சொன்னது சரியாகிடும்போல இருக்கே முருகா:) இருப்பினும் மனதில வரும் டவுட்டைக் கேட்பது டப்பாஆஆஆ?:).
///என் பையன் ரொம்ப நல்லா இருக்குன்னு ஆசை ஆசையாச் சாப்பிட்டான். //
இப்போ புரிஞ்சுபோச்சூ பிள்ளையில தப்பில்ல:)... போனதடவை உங்கட கர்ட்டூட் அல்வாவைப் பற்றி வாயே திறக்கல்ல அவர்:). சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) வந்த வேலையைப் பார்க்கிறேன்:).
உண்மைதான் உருளைக்கிழங்கை தோடுடன் தான் சமைக்க வேணும்.
இப்பூடி குட்டியா கட் பண்ணிட்டீங்க டக்கெனக் குழைந்திடுமே இது.. ஒருவேளை இங்கத்தைய கிழங்கோ தெரியவில்லை, ஒரு கொதியிலேயே கரைந்து விடுகிறது, அதனால நான் தாழித்து கிழங்கையும் கொட்டி வதக்கி, மெல்லிய நெருப்பில் 5 நிமிடம் மூடி விட்டால் போதும் அவிந்திருக்கும்.
குருமா கறிபோல சூப்பரா செய்திட்டீங்க பார்க்க மிக அருமையா இருக்கு, இப்படிக் கறிக்கு தாழிச்சுக் கொட்டியிருப்பதுதான் அதிக சுவை கொடுக்கும்.
///திருவமாறினால்// அப்பூடின்னா????:)
////நெல்லைத் தமிழன் said...
பதிலளிநீக்குநன்றி எங்கள் பிளாக் ஸ்ரீராம். உங்க வீட்டுல அன்னன்னைக்கு மெனு யார் தீர்மானிப்பார்கள்?///
ஹா ஹா ஹா ஸ்ரீராம் இப்போ அவங்க வீட்டு முருங்கி ல ஏறிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
/// எங்க அப்பா, பலாச்சுளை சாப்பிட்டபின், ஒரு சிறு துண்டு பலாக்கொட்டையைச் சாப்பிடுவது நல்லது என்று சொல்லுவார்///
பதிலளிநீக்குநானும் கேள்விப்பட்டிருக்கிறேன்..
///(அதிரா ‘செத்தல் மிளகாய்’ என்று குறிப்பிடுவார். பச்சை மிளகாய் செத்துப்போனாத்தான் வற்றல் மிளகாயா ஆறதுனால அப்படி இலங்கைல சொல்றாங்களா?)//
ஹா ஹா ஹா இருக்கலாம்.. செத்தல் எனச் சொன்னாலே அது சிகப்பு மிளகாய்தான், கடைகளில் செத்தல் எனத்தான் கேட்போம்.
வற்றல் என்றால் அது மோர் மிளகாய்.. அதாவது அவித்துக் காயப்போடும் அனைத்தையும் வத்தல் என்போம்.. சுண்டங்காய் வற்றல்/ மாங்காய் வற்றல்/ தேசிக்காய் வற்றல்.. இப்பூடி:).
///Bagawanjee KA said...
அல்வாவை தொதல் என்கிறார் ,செத்தல் மிளகாய் என்கிறார் ..அதிரா சொல்வதெல்லாம் அதிசயம்தான் :)///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) ஒரு மாதம் நான் தொடர்ந்து ரெசிப்பி போடப்போறேன்ன்:) அப்போதான் எங்கள் பாஷையை உலகமெல்லாம் பரப்பிய பெருமையாவது நேக்குக் கிடைக்கும்:).. ஹையோ நான் அப்பூடி என்ன சொல்லிட்டேன்ன்ன் ஏன் இப்பூடி ஓடுறீங்க எல்லோரும்:).
/// அது பற்றி எங்கள் பிளாக் திங்கற கிழமையில் எழுதிய ஞாபகம்! இது உருளைக்கிழங்கு மட்டும் போட்டா? செய்துடுவோம்! - ஸ்ரீராம் ]///
பதிலளிநீக்குவிடிஞ்சு இவ்ளோ நேரமாச்சே.. வீரவாகுதேவரை{சூரன்போரில் இடையிடையே ஒருவர் ஓடித்திரிவாரே முருகனுக்கும் சூரனுக்கும் இடையில்.. அவரைச் சொன்னேன்} இன்னமும் காணல்லியே என ஓசிச்சேன்ன்:) கடேசில ஒளிஞ்சிருக்கிறார்ர்:)...
திங்கிற கிழமை:) ஹா ஹா ஹா கரீட்டு:)
வாங்க வல்லி சிம்ஹன் மேடம்.. இந்தோனேஷியால இருந்து வந்திருக்கீங்க. முதல் கமென்ட் பார்க்க சந்தோஷம்.
பதிலளிநீக்குநன்றி கீதா சாம்பசிவம் மேடம். நீங்கள் எழுதியிருப்பது சரிதான். அனுபவம்தானே பேசுது.
பதிலளிநீக்குவெங்கட்.. உங்களுக்கும் இந்தக் கூட்டு பிடிக்கும் என்பது அறிய சந்தோஷம். நான் நினைச்சேன் இது புதுமையான கூட்டுன்னு. 'அம்மா மறக்கலை... யாருக்குத்தான் மறக்கமுடியும்'.
பதிலளிநீக்குவாங்க திண்டுக்கல் தனபாலன்.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி. தோல் நல்லதுதான். ஆனா இப்போல்லாம் எல்லாப் பழங்களிலும் (வாழைப்பழத்தைத் தவிர என்று நினைக்கிறேன்) தோல்ல பிளாஸ்டிக் பூச்சு. காய்களிலும் அது வர ஆரம்பிச்சாச்சு. சில தேசத்திலிருந்து வர்ற உருளைக்கிழங்கு, பளபளன்னு ரொம்ப அழகா அப்படியே சாப்பிடலாம் போல இருக்கும் (குறிப்பா ஹாலந்து. அதேபோல ஆஸ்திரேலியா கேரட்).
பதிலளிநீக்குநன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ. குவைத்லதானே இருக்கீங்க. மிக்சி இருக்கில்ல. அப்புறம் என்ன (நானும் குழம்புப்பொடி ஊர்லேர்ந்துதான் எடுத்துக்கிட்டு வருவேன்).
பதிலளிநீக்கு"இந்த உருளைக்கிழங்கு கூட்டை மூன்று விதமாக செய்ய முடியும்.." - இதைப் படிச்சவுடனே எனக்கு, தசாவதாரத்தில் வரும் 'இவர் தெலுங்கை 5 மொழில பேசுவார்' என்ற டயலாக் நினைவுக்கு வந்தது. நீங்களே அந்த விதங்களைக் குறிப்பிட்டிருக்கலாமே.
வாங்க பகவான்ஜி. இலங்கைத் தமிழை ரசிக்கலாம். நம்மகிட்ட வடமொழி கலந்திருப்பதுபோல், அவங்க தமிழ்ல (அதிலும் சில உணவு வகைகள், பூச்சி/விலங்குகள் போன்றவை) சிங்களம், மலையாளம் போன்றவை கலந்திருப்பதுபோல் தெரிகிறது. 'இலையான்', 'பாண்'. அதிரா சொன்ன 'தொதல்', 'செத்தல் மிளகாய்' 'புக்கை' (நமக்கு பொக்கை வாய்தான் தெரியும். பொங்கலுக்கு அவங்க புக்கைனு சொல்றாங்க) போன்று ஆரம்பத்தில் வித்தியாசமாகத் தெரிந்தாலும், படிக்கப் படிக்க ரசிக்கலாம்.
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம்.
பதிலளிநீக்குநன்றி ராஜி. 'இஞ்சி மா நெல்லித் தொக்கு' செய்முறை சொன்னது ஸ்ரீராமுடன் வேலைபார்க்கும் ஹேமா அவர்கள் சொன்ன செய்முறை. அவங்கள்லாம் தொழில்முறை விற்பன்னர்கள் (PROFESSIONALS). (அதிலும் எனக்குத் தோணுவது.. ஹேமா அவர்கள் பல உணவுவகைகளை ஸ்ரீராமுக்கும் சுவை பார்க்கக் கொடுக்கிறார். அதுல எது அசத்தலா இருக்கோ அதுக்கு செய்முறை வாங்கிப்போடறார்னு. உண்மை தெரியாது. ஒரு அனுமானம்தான்)
வாங்க மதுரைத் தமிழன். உங்கள் வேலையை எளிதாக்குவதற்காகத்தான் இந்த ரெசிப்பி. பாவம் எத்தனை நாள்தான் கஷ்டப்பட்டு செய்கிற உணவுவகைகளைச் செய்வீங்க.
பதிலளிநீக்குநன்றி ஹென்றிமார்க்கர்.
பதிலளிநீக்குவாங்க அதிரா. முச்சந்தி சாத்திரியார்கிட்ட கேட்டீங்கன்னா, உங்களுக்கு எண்டைக்குமே 'சனி' வந்து வாயில இருக்குன்னு சொல்லிறப்போறார். நீங்க சொன்னப்பறம்தான் எனக்கும் தோணுது. பையன், நல்லா இருக்குன்னா சொல்லிடுவான். இல்லைனா ஒண்ணும் சொல்லமாட்டான் (பாவம் கஷ்டப்பட்டு செய்திருக்கிறார்களே என்று. ஆனால் கடையில் வாங்குவது நல்லா இல்லைனா வெளிப்படையா சொல்லிடுவான்). என் பொண்ணு, எதிர்மறை கமென்ட் சாப்பாட்டைப் பொறுத்தவரை (நான் செய்யும்போது) சொல்லவே மாட்டாள்.
பதிலளிநீக்குநான் இங்கு வேலை பார்க்கிறேன். அங்க (சென்னைல) மனைவி, வீட்டு வேலை, வெளி விவகாரங்கள் என்று எல்லாம் பார்ப்பதால், அவள்தான் என் ஹஸ்பண்ட்.
'செத்தல்', 'வற்றல்' - உங்க விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.
'ஒரு மாதம் தொடர்ந்து ரெசிப்பி போடப்போறேன்' - போடுங்க. நீங்க என்ன எழுதினாலும் உங்களை 'ஓட்டறதுக்கு' நிறையபேர் காத்திருக்காங்க. 'ரெசிப்பி' போட்டீங்கன்னா இன்னும் நல்லாவே 'ஓட்டுவாங்க'.
//போடுங்க. நீங்க என்ன எழுதினாலும் உங்களை 'ஓட்டறதுக்கு' நிறையபேர் காத்திருக்காங்க. 'ரெசிப்பி' போட்டீங்கன்னா இன்னும் நல்லாவே 'ஓட்டுவாங்க'.//
பதிலளிநீக்குஅதிராவை ஓட்டுகிறவர் கூட்ட சங்க தலைவியே :)மீ தான்
ஒரு நாளைக்கு பத்து பேர் ஓட்டுங்க நெக்ஸ்ட் டென் அடுத்த நாள் இப்பிடி கேப் விடாம ஓட்டணும் :) அதிலேதான் த்ரில்லிங்
இதுவரைக்கும் தேங்காய் சீரகம் கிழங்கில் அரைச்சு செஞ்சதில்லை ..நாளைக்கே செய்றேன் ..இங்கே கிழங்கில் பல வெரைட்டிஸ் இருக்கு சிலது ரெட் தோல் சிலது பேக்கிங் வெரைட்டி சிலது சாலட் செய்ய சில ரோஸ்டுக்கு என விதவிதமா ..ஆனா ஜெர்மன் fruh kartoffel போல நான் இங்கே பார்க்கலை அதை சும்மா வேகவைச்சி சாப்பிடலாம் .
பதிலளிநீக்குஇங்கே பேபி பொடேடோஸ் நான் தோலுடன் தான் சமைப்பேன் .அப்புறம் ஜெர்சி ராயல் ஒன் பைட் சைஸ் கிழங்கு இருக்கு அம்மிணி கொழுக்கட்டை அளவுதான் இருக்கும் அதை தோலோட தான் சமைக்க முடியும் செம ருசி ..
நாங்க வீட்ல கன்டெய்னர்ல கிழங்கு வளர்த்தோம் இப்போவும் இருக்கு :)
கேரளத்தில் இஷ்டு என்றும் பிற இடங்களில் சொதி என்றும் சொல்லப்படுவதன் செய்முறையை எனது பூவையின் எண்ணங்கள்தளத்தில் எழுதி இருக்கிறேன் இந்த செய்முறையும்அதுபோல் இருக்கிறதா தெரியவில்லை இருந்தும் ஒற்றுமைகள் சந்தேகப்பட வைக்கிறது
பதிலளிநீக்கு//நெல்லைத் தமிழன் said...//
பதிலளிநீக்குசிங்களம் மலையாளம் மட்டுமில்லை... டொச் உம் கலந்திருக்கு.. ஒல்லாந்தர் ஆட்சியில் இருந்ததெல்லோ இலங்கை.. அதனால, கதிரை, அலுமாரி... இப்படிச் சில சொற்கள் உண்டு. கதிரை- செயார், அலுமாரி - கபேட்
///நெல்லைத் தமிழன் said...
பதிலளிநீக்குவாங்க அதிரா. முச்சந்தி சாத்திரியார்கிட்ட கேட்டீங்கன்னா, உங்களுக்கு எண்டைக்குமே 'சனி' வந்து வாயில இருக்குன்னு சொல்லிறப்போறார்//
சத்தியமா நேற்று சும்மா இருக்காமல், யூ ரியூப்ல என் ராசியின் குணங்கள் எப்படி என ஆராய்ஞ்சேஎன்ன்ன்.. என் ராசிப்படி.. சனி வந்து உதட்டில இருக்குதாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) {இப்போவெல்லாம் கர்ர்ர்ர்ர்ர் சொல்லவும் பயம்மாக் கிடக்கூ:) அது தன்னோட 12 வருட உழைப்பு .. அதுக்கு ராயல்டி.. ரோயல்ட்டி கேட்பேன் .. அதுவும் யூரோல கேட்பேன் என மிரரரட்டுறா கீதா சாம்பசிவம் அக்கா:).. என்னிடம் இருப்பது பவுண்ட்ஸ் எல்லோ.. யூரோவுக்கு மீ எங்கின போவேன் முருகா:) ஆனா பவுண்ட்ஸ் ஐ விட யூரோவின் பெறுமதி குறைவாக்கும்:).
அதனால நான் நெஞ்சால மனசால எல்லாம் நல்லதையே நினைச்சுச் சொல்ல வருவதை.. உதட்டில குந்திக்கொண்டிருக்கும் சனியார்ர்ர் டுவிஸ்ட்(சகோ ஸ்ரீராமுக்கு பிடிச்ச து) பண்ணிடுவாராமே... :)
உங்க பிள்ளைங்க ரொம்ப நல்ல பழக்கம்.. உங்க கஸ்பண்ட்டைப் போலவே:)... இப்போ தூரத்தில் இருப்போர் மட்டுமில்ல.. கூடவே இருக்கும் கணவன்மாருக்கும்.. இப்பூடியான வேலைகள் செய்வது அலுப்பாகத்தான் இருக்கு:) அதனால உங்களைப்போல இப்பூடி தெக்கினிக்கி வார்த்தைகளைச் சொல்லி [கொஞ்சம் இருங்கோ ஹையோ இந்த தெக்கினிக்கி தன்னோடது, எனக்கு ரோயல்ட்டி குடு என ஸ்ரீராம் கிளம்பப்போறாரே இப்போ:).. எங்கின போனாலும் அடிக்க வாறாங்க சாமீஈ:)}
பதிலளிநீக்குஉப்பூடி ஏதும் தெக்கினிக்கி வேர்ட்ஸ் சொல்லிச் சொல்லி உசுப்பேத்தியே மனைவியை வேலை வாங்கிடுறாங்க:).. இந்த தெக்கினிக்கி தெரியாத ஆண்கள் பூரிக்கட்டையால அடி வாங்குறாங்க:)... ஹையோ நான் அவர்கள் ட்றுத்தை ச் சொல்லல்லே:)..
@athira //டொச் உம் கலந்திருக்கு.. ஒல்லாந்தர் ஆட்சியில் இருந்ததெல்லோ இலங்கை.. அதனால, கதிரை, அலுமாரி...// its dutch ..not deutsch
பதிலளிநீக்கு///நெல்லைத் தமிழன் said...'ஒரு மாதம் தொடர்ந்து ரெசிப்பி போடப்போறேன்' - போடுங்க. நீங்க என்ன எழுதினாலும் உங்களை 'ஓட்டறதுக்கு' நிறையபேர் காத்திருக்காங்க. 'ரெசிப்பி' போட்டீங்கன்னா இன்னும் நல்லாவே 'ஓட்டுவாங்க'.////
பதிலளிநீக்குசமையல் குறிப்பெண்டில்லை, நான் என்ன போட்டாலும் ஓட்டுவதற்கென்றே ஒரு பயந்தாங்கொள்ளியை:) தலைவியாக்கி:) ஒரு கூட்டமே இருக்குது:)[நான் அஞ்சுவைச் சொல்லல்ல.. இது அஞ்சு வின் வல்லாரை சாம்பாறில் போட்ட செத்தல்மிளகாய் மேல் சத்தியம்:)].. இந்த தலைவி அறிமுகமாக முன்னமும்.. இப்பூடியேதான் எல்லோரும் என்னை ஓட்டுவாங்க.. நானும் ஓடுவதுபோல வடக்கு வாசலால ஓடி கிழக்கு வாசலால உள்ளே வந்திடுவேன்ன்..:) எங்கிட்டயேவா?:)..
///Angelin said...
@athira //டொச் உம் கலந்திருக்கு.. ஒல்லாந்தர் ஆட்சியில் இருந்ததெல்லோ இலங்கை.. அதனால, கதிரை, அலுமாரி...// its dutch ..not deutsch///
நான் சொன்னனே பார்த்தீங்களோ?:) எவ்ளோ நல்ல விசயத்தை எல்லாம், ஊத்தின நெஸ்டமோல்ட் ரீயைக்கூட குடிக்க மறந்து ரைப் பண்ணித் தள்ளினேன்.. அதெல்லாம் கண்ணுக்கு தெரியல்ல இது தெரிஞ்சுபோச்சாம்ம்ம் கர்ர்:).. சரி சரி விடுங்கோ மீயும் எவ்ளோ நேரம்தான் முருங்கி லயே இருக்கிறதாம்ம்ம்:).
//அது “கக்” கிழமை இல்லை ”கட்” கிழமை ஆக்கும்:) //
பதிலளிநீக்கு"கட் " கட் ஆகிவிட்டது!
:))
திருவமாறது என்றால் தாளிப்பது! சாத்துமது அல்லது சாத்தமது என்பது ரசம்.
பதிலளிநீக்குநெல்லைத்தமிழன்! எங்க வீட்டு மெனு அன்றன்றைய நிலையைப் பொறுத்து தன்னைத்தானே தீர்மானித்துக்கொள்ளும்! அதிரா.. "முருங்கி" மரத்துல ஏறமாட்டேன்! கம்பளிப்பூச்சி!
பதிலளிநீக்கு//தெக்கினிக்கி தன்னோடது, எனக்கு ரோயல்ட்டி குடு என ஸ்ரீராம் கிளம்பப்போறாரே இப்போ:)..//
பதிலளிநீக்கு@அதிரா... அது தக்கினிக்கி! உண்மையில் ஏதோ ஒரு படத்தில் தங்கவேலு சொல்வது என்று நினைவு!
@ athiraa //இந்த தலைவி அறிமுகமாக முன்னமும்.. இப்பூடியேதான் எல்லோரும் என்னை ஓட்டுவாங்க.. //
பதிலளிநீக்குமுன்னும் பின்னும் எல்லாமில்லை இப்பவும் ஸ்டெடியா மாரத்தான் ஓட்டத்தில் எல்லா ரவுண்டையும் ஓடறேன்ப்பாருங்க அது அதுதான் முக்கியம்
ஆமா ஆமா ....எவ்ளோ போராடி அந்த பதவியை தக்க வச்சிருக்கேன் :)
இருங்க இன்னொன்னும் சொல்லணும்இங்கத்தைய கிழங்கோ தெரியவில்லை, ஒரு கொதியிலேயே கரைந்து விடுகிறது, அதனால நான் தாழித்து// ழி ழி இல்லை ளி //
வணக்கம்.
பதிலளிநீக்குகூட்டுடன் பின்னூட்டமும் ரசிக்க வைக்கிறது.
சுவை.
நன்றி.
ஆவ்வ்வ்வ்வ் சகோ ஸ்ரீராம் லாண்டட்ட்ட்ட்:).
பதிலளிநீக்கு//ஸ்ரீராம். said...
திருவமாறது என்றால் தாளிப்பது! சாத்துமது அல்லது சாத்தமது என்பது ரசம்.//
ஓ இதென்ன கொடுமை.. இப்பூடியெல்லாம் தமிழ் பாவிக்கிறார் நெ.த:).
//அதிரா.. "முருங்கி" மரத்துல ஏறமாட்டேன்! கம்பளிப்பூச்சி!//
ஹா ஹா ஹா கொடுமை கொடுமை எண்டு கோவிலுக்குப் போனா அங்கொரு கொடுமை காத்திருந்ததாம்” அந்தக் கதையாயெல்லோ இருக்குதூஊஊஊ:)..
//கம்பளிப்பூச்சி/// நாங்க இவரை “மசுக்குட்டி” என்போம் அல்லது மயிர்கொட்டி எனவும் சிலர் சொல்வதுண்டு:).
குடுகுடுவென வெல்வெட் போர்த்தபடி சூப்பரா நல்ல ஒரு சிவப்பு கலரில குட்டியா போகுமே வண்டு.. அதைத்தான் கம்பளிப்பூச்சி.. என்போம்:).
//@அதிரா... அது தக்கினிக்கி! உண்மையில் ஏதோ ஒரு படத்தில் தங்கவேலு சொல்வது என்று நினைவு!//
நீங்க ரெரெரெரெரெம்ம்ம்ப நல்லவரு:) உண்மையைச் சொல்லி ரோயல்ட்டி கேட்காமல் போயிட்டீங்க:)... அதனால அஞ்சுவின் அடுத்த சமையல் டிஸ் உங்களுக்கே:).. உயிர் ஆபத்துக்கு மீ பொறுப்பல்ல என இதோ இந்த வெள்ளைப்பேப்பரில் கையொப்பட்டிடுறேன் இப்பவே:).
///Angelin said...
பதிலளிநீக்குஆமா ஆமா ....எவ்ளோ போராடி அந்த பதவியை தக்க வச்சிருக்கேன் :)
இருங்க இன்னொன்னும் சொல்லணும்இங்கத்தைய கிழங்கோ தெரியவில்லை, ஒரு கொதியிலேயே கரைந்து விடுகிறது, அதனால நான் தாழித்து// ழி ழி இல்லை ளி ////// ஹா ஹாஆஆஆஅ ஹக்க்க்க்க்க்க் கிக் கிக் கீஈஈஈஈஈ.. இப்பூடி பெரிசா சிரிச்சே சமாளிச்சிட வேண்டியதுதான்:)... இப்பெல்லாம் என் சிரிப்பைக்கூட டுவிஸ்ட் பண்ணிடுறாரோ சனிபகவான் என சந்தேகமாகவே இருக்குதெனக்கு:)..
//குடுகுடுவென வெல்வெட் போர்த்தபடி சூப்பரா நல்ல ஒரு சிவப்பு கலரில குட்டியா போகுமே வண்டு.//
பதிலளிநீக்குஆம். தெரியும்.. அதை வெல்வெட் பூச்சி என்போம்.
அன்பின் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு..
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
அதாகப்பட்டது என்னவென்றால் -
ஒவ்வொரு அறையிலும் நான்கு பேர் தங்கியிருக்கும்படியான தொகுப்பு தளங்களுடன் கூடிய பல (14) மாடிக்கட்டிடம்.. இது..
வாருங்களேன்.. எனது தளத்திற்கு.. உட்கார்ந்து பேசுவோம் - உருளைக்கிழங்கு மசாலாவைப் பற்றி!..
அன்புடன் அழைக்கின்றேன்...
படிக்கும் போதே சாப்பிட தூண்டுகிறது. பாராட்டுகள்
பதிலளிநீக்குஎன் அம்மாவும், அம்மாவின் அம்மாவும் புடலங்காயுடன் உகியைச் சேர்த்துச் செய்வதுண்டு. தனியாகவும் செய்வதுண்டு...மரச்சீனிக் கிழங்கை இப்படிச் செய்வதுண்டு. அது போல உகியையும்.....எனக்கு ரொம்பப் பிடிக்கும் இந்தக் கூட்டு. சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். இதில் ஒரே ஒரு பூண்டுப் பல்லும் சேர்த்து அரைத்து விட்டால் அது ஒரு டேஸ்ட்...அப்படியும் செய்வதுண்டு. தேங்காய் எண்ணையில் கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் இறுதியில் சேர்ப்பதுண்டு...
பதிலளிநீக்குஎனக்கும் ரொம்பப் பிடித்த ரெசிப்பி நெல்லைத் தமிழன்...ஆசையைத் தூண்டிவிட்டுட்டீங்க...நாளைக்கு மெனு. இப்பல்லாம் என்ன பண்ணறதுனு கன்ஃப்யூஷன் வந்தா எங்கள் ப்ளாக் ரெசிப்பிஸ், உங்க ரெசிப்பிஸ், வெங்கட்ஜி ரெசிப்பிஸ், ஏஞ்சல் ரெசிப்பிஸ் யாரு அப்பப்ப போடறாங்களோ அது ஹிஹிஹி...மண்டை கொயம்பிக் கெடக்கு..!!!
கீதா
பச்சைமிளகாயாகப் போட்டிருந்தால் உங்கள் கூட்டு அவியல் வகையில்ப் போய்ச் சேர்ந்திருக்கும். என்ன துளி தயிரையும் சேர்த்து விடலாம். தேங்காய்ப்பாலை சேர்த்து செய்தால் ஸ்டூ,ஓலன் இப்படி உருளைக்கிழங்கிற்கும் புது மாதிரி செய்முறை கொடுத்து விடலாம். கூட்டு நன்றாக இருக்கிறது. இதைப் படித்து விட்டு , இப்டிச் செய்யலாம்,அப்படிச்செய்யலாம் என்று, நீண்ட பதில் எழுதினால் ஓடியேப் போய்விட்டது.இதுவாவது போஸ்ட் ஆகட்டும். அன்புடன்
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சலின். கொஞ்சம் ஜீரகம் குறைவாகப் போடுங்க. BABY POTATO - எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்க சொல்ற மினி சைஸ் உருளைக்கிழங்கும் பார்த்திருக்கேன். பேபி பொடடோல உருளைக்கிழங்கு ரோஸ்ட் பண்ணினா ரொம்ப நல்லா இருக்கும் (அதுவும் வெங்காய சாம்பாரோ அல்லது தக்காளி ரசமோ). உருளைக்கிழங்குல பல வகை இருக்கு. ஒரு தடவை ரொம்ப அழகாக இருந்த பேபி பொடட்டோ, நிறைய வாங்கினேன். செய்துபார்த்தால் இனிக்கிறது.
பதிலளிநீக்குநன்றி ஜி.எம்.பி ஐயா. இஷ்டு வேறு இது வேறு. இஷ்டு நிமகே தும்பா இஷ்டமோ?
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஊமைக்கனவுகள்.
பதிலளிநீக்குமீள் வருகைகளுக்கு நன்றி ஆதிரா. முருங்கை மரத்தில் இருந்துகொண்டு, கம்பிளிப்பூச்சி தெரியாது என்று சொல்ற ஒரே ஆள், உலகத்திலேயே நீங்கதான். முருங்கை மரத்தில் ஒரே பிரச்சனை, கம்பிளிப்பூச்சி வருவதுதான். இன்னொரு பிரச்சனை, மற்ற மரத்தைப்போல், குழந்தைகள் ஏறி விளையாடமுடியாது.
பதிலளிநீக்குநன்றி துரை செல்வராஜு. உங்கள் செய்முறையைப் படித்தேன்.
பதிலளிநீக்குநன்றி அசோகன் குப்புசாமி.
பதிலளிநீக்குவாங்க கீதா ரங்கன். என் ஹஸ்பண்டுக்கு என்னோட இருக்கும்போது மெனுவைப் பற்றிய கவலை அவளுக்கு இருக்காது. என்ன என்ன பண்ணணும்னு நான் முதலிலேயே சொல்லிடுவேன். அதுக்கு ஏத்தமாதிரி காய்களையும் வாங்கிடுவேன். இந்தத் தடவை 10 நாட்கள் அவளும் பையனும் இங்கு வந்திருந்தபோது, என்ன செய்வது என்பதை நானே யோசித்துப் பண்ணியது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. (ஏன்னா என் பையனுக்குப் பிடிக்கணுமே) இல்லத்தரசிகள் பாடு உண்மையாகவே கஷ்டமானதுதான்.
பதிலளிநீக்குவாங்க வாங்க காமாட்சியம்மா. உங்கள் நெடிய பின்னூட்டம் காணாமல்போய்விட்டதா? எப்போ முடிந்தாலும், செய்முறை டிப்ஸ் எழுதுங்க. ரெண்டு வரிகளிலேயே ஸ்டுயூவும் அவியலையும் இந்தக் கூட்டையும் LINK பண்ணிட்டீங்க. 'சொல்லுகிறேன்'ல இன்னும் சொல்ல ஆரம்பிக்கலை. ஒரு புதுவருஷ போஸ்ட் போட்டுருங்க.
பதிலளிநீக்கு//கம்பளிப்பூச்சி/// நாங்க இவரை “மசுக்குட்டி” என்போம் அல்லது மயிர்கொட்டி எனவும் சிலர் சொல்வதுண்டு:).// அதிரா இலங்கைக்கும் கேரளத்திற்கும், கன்னியாகுமரிக்கும் (கன்னியாகுமரி ஒரு காலத்தில் திருவிதாங்கூர் சேர்ந்ததுதானே) நிறைய தொடர்பு உண்டு என்பது உறுதியாகிறது. முசுக்குட்டி இப்படித்தான் நானும் நாகர்கோவிலில் இருந்தவரை சொல்லிவந்தேன். கேரளத்திலும்...
பதிலளிநீக்குகீதா
என்னை
பதிலளிநீக்குவெறுமன வேக வைத்து, என் ஆடைகளை நீக்கி
உரித்த வெந்த வெள்ளைக் உருளைக்கிழங்காகவோ,
வருவலாகவோ
பஜ்ஜியாகவோ
போண்டாவாகவோ
சாம்பாரில் போடும் தானாகவோ
ருசியான பொடிமாஸாகவோ
பூரிக்கு வெங்காயத்துடன் கூடிய மஞ்சள் மஸாலாகவோ
செய்து கொடுத்தால் மட்டுமே நம் கோபுவுக்குப் பிடிக்குமாம்.
தனித்தன்மை வாய்ந்த என்னைப்போய் இவ்வாறு கூட்டாக கூட்டணியில் சேர்த்துள்ளது அவருக்குப் பிடிக்கவில்லையாம்.
ஸ்வாமீஜியிடம் இதைச் சொல்லத்தான் இங்கு நான் வந்தேன்.
இப்படிக்கு,
உருளைக்கிழங்கு
எங்கள் கூட்டத்திலிருந்து சிலரை மட்டும் பிரித்து நெல்லைத்தமிழனுக்கு எங்கள் சார்பில் மடல் எழுதலாமா கோபாலகிருஷ்ணன் ஐயா. இது அடுக்குமா? இது 140 பேர் உள்ள கட்சியிடமிருந்து பத்து பேரைப் பிரித்து ஆட்சியைக் கவிழ்க்கப்பாத்த கதையாகவல்லவா இருக்கிறது.
பதிலளிநீக்குநீங்கள் சாப்பிடும் ரோஸ்டில், எங்களைப் பிரித்து ஒவ்வொருவராக உள்ளே தள்ளுகிறீர்கள். பஜ்ஜி என்ற பெயரில், ஒவ்வொருவராக சீவிச் சீவி எண்ணெயில் வலிக்க வலிக்க பொரித்தெடுக்கிறீர். இல்லையென்றால் ஆட்சியை எங்கள் ஒருவருக்கே தராமல், சாம்பாரில் சேர்த்து கூட்டணி அமைக்கச் சொல்லுகிறீர். இல்லையென்றால், எங்களுக்கு எதிரியான வெங்காயத்துடன் சேரச் சொல்லுகிறீர்.
இந்த நெல்லைத்தமிழன் தான், எங்களுடைய எண்ணத்தைப் புரிந்துகொண்டு, எங்கள் எல்லோரையும் சேர்த்து, யார் யாரிடமிருந்து வந்தவர் (எந்த உருளைக்கிழங்கு) என்று தெரியாதபடி எங்களையெல்லாம் சேர்த்து நட்போடு கூடி, மனிதர்களுக்கு உணவாக இருக்கச் சொல்லுகிறார்.
எங்களை ஒரே அணியாக இருக்கவைக்கும் நெல்லைத்தமிழனிடம் எங்களுக்கு சினேகம் இருக்குமா அல்லது பிரிக்கத் துடிக்கும் உங்களிடம் எங்களுக்கு சினேகம் இருக்குமா?
இப்படித்தான் எங்கள் இன்னொரு உறவுமுறையான கத்தரிக்காய்களிடமும் சாதி பேதம் பார்த்து, அய்யம்பேட்டை கத்தரிக்காய் உசந்தது என்று சொல்லி, கத்தரிக்காய்களின் ஒற்றுமையை முன்னால் குலைக்கப்பார்த்தீர்.
வட இந்தியாவே நாங்கள் இல்லையென்றால் ஆடிப்போய்விடும். நீங்கள்வேறு எங்களை மதிக்காமல், ரொம்ப காலதாமதம் செய்து எங்களைப் பற்றிப்படிக்க வந்திருக்கிறீர்கள்.
மிகுந்த கோபம் வருகிறது. ஆனாலும் எங்கள் தோஸ்த் நெல்லைத் தமிழனுக்கு நீங்கள் ரொம்பவும் வேண்டியவராகப் போய்விட்டீர். அதனால் எங்கள் மற்ற உருளைக்கிழங்கு சகோதரர்களிடம் சொல்லி உங்களை பகிஷ்கரிக்கச் சொல்லப்போவதில்லை.
இப்படிக்கு
ஒற்றுமையைப் பேண நினைக்கும்
உருளைக்கிழங்குக்கூட்டம்
உருளைக்கிழங்கு என்றால்
பதிலளிநீக்குஎனக்கு விருப்பம்
அதைவிட
இந்தச் சமையல் நல்லா இருக்கு
அருமையான குறிப்பு. சற்றே வேறு விதமாகச் செய்வதுண்டு.
பதிலளிநீக்குநீண்ட நாட்களாகக் கேட்க நினைத்தது. உங்கள் மனைவியை ஹஸ்பெண்ட் எனக் குறிப்பிடுவதன் காரணம் என்ன எனத் தெரிந்து கொள்ளலாமா:)? ஆரம்பத்தில் உங்கள் ஐடியில் சில நேரம் அவரையும் எழுத வைக்கிறீர்களோ என நினைத்ததுண்டு. பின் முழுவதுமாய் வாசிக்கையில் அது நீங்களே எனத் தெரிய வரும்.