Saturday, April 15, 2017

வாட்ஸாப்பினால் ஆன பயனென்கொல்...1)  1982 இல் தீர்க்கமாய் சிந்தித்து, உறுதியாய் ஒரு முடிவினை எடுத்தேன்.    என் வகுப்பறை, ஐ.ஐ.டி யில், நான்கு சுவர்களுக்குள் இல்லை என்பது தெரிந்தது.     என் வகுப்பறை, கிராமங்களில், காடுகளில், வயல் வெளிகளில், ஆற்றங்கரைகளில் இருப்பது புரிந்தது.        என் மாணவர்கள் ஐ.ஐ.டி யில் இல்லை என்பதை அறிந்தேன்.      
  கிராமத்தில் எழுத்தறிவற்ற வெள்ளந்தி மனிதர்களும், பழங்குடியினருமே, என் மாணவர்கள் என்பதை உணர்ந்தேன்.        பேராசிரியர் பணியினைத் துறந்தேன்.         புதிய வகுப்பறை, புதிய மாணவர்கள், புத்தம் புது சூழல்.   முப்பத்து இரண்டு ஆண்டுகளாய், இம்மனிதர்களோடு இணைந்து என் வாழ்வு நகருகிறது.  அலோக் சாகர்.  (நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.)

2)  சகோதரனால் மனதில் வந்த துன்பம் மற்றவர்களுக்கு உதவியாய்... மருத்துவர் புல்லாராவின் சேவை.


3)  பிச்சை புகினும் மானத்துடன் வாழ்தல் நன்றே..  மகளின் பரீட்சைக்குப் பணம் கட்ட முடியவில்லை என்று மகள் வருத்தப்படுவாள்.  என்ன செய்ய?  வாழ்க்கையே ஒரு பரீட்சை என்பதை உணர்ந்திருக்கிறேனே..."  கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி.


4)  எடத்தெருவு.  இந்த கேரள கிராமம் குப்பை மேலாண்மையில் மற்ற கிராமங்களுக்கு முன்னோடியாய்த் திகழ்கிறது.


5)  வளர்ந்த கலையையும் மறக்கவில்லை.  இடத்தையும் மறக்கவில்லை.  தன்னைப்போலவே இருக்கும் மற்ற மாணவிகளுக்குப் பாடம் எடுக்கும் ஆர்த்தி.


6)  வாட்ஸாப்பினால் ஆன பயனென்கொல்..   ஆங்கோர் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க  உதவி ..7)  சகாய விலையில் இளநீர் ;  வேலைவாய்ப்புக்கும் இருக்கு வாய்ப்பு!  ஜெப்ரி ஜெயக்குமார்.

19 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்கள்
எனது பதிவு இடம் பெற்றமை கண்டு மகிழ்ந்தேன் நண்பரே
நன்றி
தம +1

KILLERGEE Devakottai said...

மாமனிதர்களை போற்றுவோம்.

வெங்கட் நாகராஜ் said...

போற்றுதலுக்குரியவர்கள்....

இளநீர் விற்பனை - இந்த சம்மருக்கு ஏற்ற விஷயம்.

Bagawanjee KA said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
வேண்டுகோள் உங்களுக்கு ...திருத்தம் செய்ய வேண்டுகிறேன் >>வளர்ந்த களையும் மறக்கவில்லை.. பிரசவம் பார்க்க உத்தவி:)

ஸ்ரீராம். said...

மாற்றி விட்டேன் பகவான் ஜி. நன்றி.

துரை செல்வராஜூ said...

அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

நெல்லைத் தமிழன் said...

அனைத்தும் நன்று. அதிலும் ஐ.ஐ.டி பேராசிரியர் பாராட்டுக்கு உரியவர். எல்லோரும் உடலைவிட்டு நீங்கவேண்டியவர்கள்தான். பிறருக்கு உபயோகமாக வாழ்ந்து மறைவது எவ்வளவு சிறப்பு.

G.M Balasubramaniam said...

ஒவ்வொருவரும் தனிப்பதிவு எழுதும் அளவுக்கு சிறக்கிறார்கள்

mohamed althaf said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

மனோ சாமிநாதன் said...

போற்றுதல்களுக்குரியவர்கள் இவர்கள்!

Geetha Sambasivam said...

எல்லாமே அருமை. போற்றப்பட வேண்டியவர்கள்.

athira said...

///
1) 1982 இல் தீர்க்கமாய் சிந்தித்து, உறுதியாய் ஒரு முடிவினை எடுத்தேன். என் வகுப்பறை, ஐ.ஐ.டி யில், நான்கு சுவர்களுக்குள் இல்லை என்பது தெரிந்தது. ///

சகோ ஸ்ரீராமின் வகுப்பறையாக்கும் என நினைச்சேன்ன்.. சே..சே.. அடிக்கடி இப்பூடி ஓடிவந்து வந்த வேகத்தில சுவரில மோதுவதே எனக்கு வேலையாப் போச்ச்ச்:)..

இப்படி ஒவ்வொரு கிழமையும் போடுமளவுக்கு எவ்ளோ நல்லுள்ளங்கள் இருக்கிறார்களே என வியக்க வைக்குது... அனைவரும் நல்லா இருக்கோணும்.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

சாதனைக்காரர்களைப் பாராட்டுவோம்!

திண்டுக்கல் தனபாலன் said...

கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி மனதை என்னவோ செய்து விட்டது...

Asokan Kuppusamy said...

நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவுகள்

கோமதி அரசு said...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள். போற்றுதலுக்கு உரியவர்கள்.

புலவர் இராமாநுசம் said...

போற்றுகிறேன்!உம்மையும்

aekaanthan ! said...

அலோக் சாகர் அவர்களைப்பற்றிப் படித்தது மனசுக்கு இதமாக இருந்தது. கரந்தை ஜெயக்குமாரும் விபரமாக எழுதிருக்கிறார். நல்ல மனிதர்களும் நாட்டில் இருக்கிறார்கள். என்ன, கொஞ்சம் தேடி அடையவேண்டியிருக்கிறது. பரவாயில்லை

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்துச் செய்திகளும் அருமை.

கீதா: விரிவாக எழுத முடியவில்லை. நெட் படுத்துகிறது..எடத்தெருவு போல மேகாலயாவில் ஒரு கிராமம் இருக்கிறது. பெயர் மாவ்லின்னாங்க்...வாட்சப்பில் வந்தது...
அநைத்தும் அருமை...முதல் செய்தி கரந்தை சகோ பதிவில் வாசித்தது. அதற்கு முன்னும் வாசித்த நினைவு உங்கள் தளத்திலா இல்லை வெங்கட்ஜி தளத்திலா தெரியவில்லை...

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!