இதை எழுதும்போதே ருசி என் நாக்கில் உணரமுடியுது. எப்போவாச்சும் செய்யற குழம்பு இது. கொஞ்சம் மெனக்கெட்டால், அப்புறம் அடுத்த வேளைக்கு என்ன செய்யறதுன்னு யோசிக்க வேண்டாம்.
பேசாம மோர் சாதமும், கொஞ்சம் குழம்போடு 4 உருண்டைகளும் சேர்த்துப் போட்டுவிட்டால், பசங்க பேசாம சாப்பிடுவாங்க. அவ்வளவு ருசியா இருக்கும்.
பேசாம மோர் சாதமும், கொஞ்சம் குழம்போடு 4 உருண்டைகளும் சேர்த்துப் போட்டுவிட்டால், பசங்க பேசாம சாப்பிடுவாங்க. அவ்வளவு ருசியா இருக்கும்.
நாங்க பண்ணற பருப்புருண்டைக் குழம்பில் பூண்டு, வெங்காயம், பெருஞ்சீரகம் (சோம்பு), கொத்துமல்லி இதெல்லாம் வராது. இந்தத் தடவை என் பையன் இங்க வந்தப்போ செய்யறதுக்கு சமயம் வாய்க்கலை. பண்ணியிருந்தால் அவனுக்கு ரொம்பப் பிடித்திருக்கும். இப்போ ‘எப்படிச் செய்யணும் மாமு’.
குழம்புக்கு – 1 டம்ளர் நீர்க்க புளிஜலம், 2 மீடியம் அளவு தக்காளி, 1 ஸ்பூன் குழம்புப்பொடி, கிள்ளிய பச்சை மிளகாய் 1, 1 ஆர்க் கருவேப்பிலை, கடுகு தாளிக்க.
குழம்புப்பொடிக்கு, நேரம் கிடைக்கும்போது, ½ கிலோ கொத்தமல்லி விரை, 200 கிராம் மிளகாய் வத்தல், 50 கிராம் மிளகு, ¼ கிலோ துவரம்பருப்பு, 50 கிராம் மஞ்சள். இவற்றைக் காயவைத்து, அரவை இயந்திரத்தில் அரைத்துக்கொள்ளவும். என் ஹஸ்பண்டின் சகோதரி சென்னை வந்திருந்தபோது செய்திருந்ததை நான் 1 டப்பா லவட்டிக்கொண்டு வந்தேன். (லவட்டி-இது என்ன மொழி)
பருப்பு உருண்டைக்கு - துவரம்பருப்பு – ½ கப், கடலைப்பருப்பு – ½ கப், மிளகாய் வற்றல் 3 அல்லது 4, கறிவேப்பிலை 1 ஆர்க், கொஞ்சம் கட்டிப் பெருங்காயம். (நான் எப்போதும் மிளகாய் கொஞ்சம் ஜாஸ்தி போடுவேன். மற்றவர்களுக்கு என்றால், 2 மிளகாயே போதும். ஆமாம் காரம் ஜாஸ்தி சேர்த்துக்கறவங்களுக்கு கோபம் அதிகம் வருமாமே. உண்மையா?)
இது எல்லாத்தையும் 1 மணி நேரம் (அல்லது அதற்கும் மேலாக) தண்ணீரில் ஊறவைக்கவும். இது எல்லாத்தையும் மிக்ஸில, கரகரன்னு தேவையான உப்பு சேர்த்து அரைச்சுக்கோங்க. வாணலில கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு தாளித்துவிட்டு, அதில் அரைத்த விழுதைச் சேர்த்து ஓரிரண்டு நிமிடங்கள் பிரட்டிவிட்டு, அடுப்பை நிறுத்தவும் (அணைக்கவும்னு எழுத நினைத்தேன். மதுரைத் தமிழன் வந்து நிஜமாகவே அடுப்பை அணைத்துவிட்டால்?). அரைத்த விழுதில் தண்ணீர்ப்பசை இருப்பதால், குழம்பு கொதிக்கும்போது அதில் உருண்டைகளைப் போட்டால், உடனே பிரிந்து கரைந்துவிடும். அதனால்தான் வாணலில பிரட்டிக்கறோம். வாணலிலேர்ந்து பிரட்டின விழுதை இன்னொரு அகலப் பாத்திரத்துக்கு மாற்றி, கொஞ்சம் ஆறவைக்கவும். ஆறினபின், சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
இப்போ ரெண்டு தக்காளியை எடுத்துக்கொண்டு, மிக்சியில் அடித்து ப்யூரி எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்துல புளிஜலம் 1 டம்ளர் எடுத்துக்கோங்க. நான், தக்காளியும் உபயோகப்படுத்தலாம் என்று நினைத்ததால், நீர்க்க எடுத்துக்கொண்டேன். அதுல அரைத்த தக்காளி விழுது, 1 ஸ்பூன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். புளி வாசனை போகணும். இதுலதான் பருப்பு உருண்டைகளைப் போடப்போவதால், தேவைனா கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். அனலைக் குறைத்துவிடலாம். (SIMல வைக்கணும்) முதல்ல ரெண்டு உருண்டைகளைப் போடவும். உள்ளே போன உருண்டை, வெந்ததும் மிதக்க ஆரம்பித்துவிடும். மூணு மூணு உருண்டைகளாகப் போட்டு கொதிக்கவிடவும். ரொம்ப கிளற வேண்டாம். (உங்கள் வேகத்துல உருண்டைலாம் உடைஞ்சுபோயிடாம). எல்லா உருண்டைகளையும் போட்டு வெந்தவுடன், அடுப்பை அணைக்கவும். பருப்பு உருண்டையில் மேலாப்பில் இருக்கும் பருப்பு குழம்பில் கரைவதால் குழம்பு பருப்பு சேர்ந்ததுபோலவே ஆகிவிடும். அதனால், கூடுதல் தண்ணீர் வைத்தாலும் தவறில்லை.
அப்புறம் கடுகு, கருவேப்பிலை திருவமாற வேண்டியதுதான்.
அடுத்த முறை செய்யும்போது, மினி ஜாமூன் சைஸுல உருண்டைகளைப் பண்ணிப்பார்க்கணும். இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது.
பின்குறிப்பு: சிலர் பருப்பு உருண்டைக்கு, சீரகம், கொத்துமல்லி, தேங்காய் துருவல் சேர்ப்பார்கள். நாங்கள் அதையெல்லாம் சேர்ப்பதில்லை. நாட்டுக்கோட்டை செய்முறையில் (காரைக்குடி), பூண்டும் சேர்ப்பார்கள். சிலர் வெங்காயமும் சேர்க்கிறார்கள். இந்தக் குழம்பு செய்யும்போது, தொட்டுக்க வெண்டை, புடலை, கத்தரி சாதாரண கரேமதோ, தேங்காய் அரைச்ச கூட்டோ நல்லாத்தான் இருக்கும். குழம்பிலேயே பருப்பு இருப்பதால், கிழங்குகளை உபயோகப்படுத்திச் செய்யும் கரேமதோ அல்லது பாசிப்பருப்பு கூட்டுகளோ சரிப்படாது.
செய்துபாருங்கள். நல்லா இருக்கும்.
அன்புடன்,
[ என் பாஸ் அடிக்கடி செய்வதுதான். ஆனாலும் நான் கம்மியாகத்தான் சாப்பிடுவேன். இதை பார்த்துதான் நான் வடைக்குழம்பு செய்து திங்கற கிழமையில் இரண்டு விதமாகப் பகிர்ந்தேன்! - ஸ்ரீராம் ]
எங்க அம்மா அடிக்கடி செய்வாங்க எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால்...
பதிலளிநீக்குஆகா
பதிலளிநீக்குஅருமை
மிகவும் பிடித்தமானது
நன்றி நண்பரே
தம +1
எங்கள் வீட்டிலும் செய்வதுதான் ஆனால் என்ன பருப்பு உருண்டையை நான் இட்லிதட்டில் வேக வைத்து குழம்பில் போடுவேன்.. பிடித்ததுதான் என்றாலும் என்னவோ தெரியவில்லை அடிக்கடி செய்வதில்லை
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு//அரைத்த விழுதைச் சேர்த்து ஓரிரண்டு நிமிடங்கள் பிரட்டிவிட்டு, அடுப்பை நிறுத்தவும்/// நல்லவேளை மதுரைத்தமிழனை அவ்ங்க வீட்டம்மா பிரட்டி எடுப்பது போல என்று சொல்லாமல் இருந்து என் மானத்தை காப்பாற்றியதற்கு நன்றி
//(அணைக்கவும்னு எழுத நினைத்தேன். மதுரைத் தமிழன் வந்து நிஜமாகவே அடுப்பை அணைத்துவிட்டால்?).///
பதிலளிநீக்குநீங்க நினத்ததை இங்கே சொல்லாமல் இருந்திருக்கலாம் இப்ப பாருங்க அதிரா ஏஞ்சல் கீதா எல்லாம் ஒன்று சேர்ந்து மதுரைத்தமிழன் நீங்க அடுப்பை அணைக்கும் வரை போராடப் போறாங்களே
//லவட்டி-இது என்ன மொழி///
பதிலளிநீக்குஅமுக்கி கீட்டு போயிட்டான் சுட்டுட்டு போயிட்டான் என்று சொல்லுவது போல இது மதுரை பக்கம் சொல்லுவது
மிகவும் பிடித்த குழம்பு. உருண்டைகளே போதும். அடிக்கடி செய்வதும் உண்டு... இதே ரெசிப்பிதான் என்ன தக்காளி சேர்த்துச் செய்ததில்லை. இனி அதுவும் சேர்த்துச் செஞ்சுட வேண்டியதுதான்....
பதிலளிநீக்குகீதா
(SIMல வைக்கணும்)// சிம் எல்லாம் கூட உண்டா??!!!! சிம் 1 ஆர் 2????ஹிஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
(SIMல வைக்கணும்)// ஐயையோ அப்புறம் ஃபோன் என்னாறது?
பதிலளிநீக்குஅதிரா, ஏஞ்சல் சீக்கிரம் ஓடிவாங்க!!! இங்க ஒரு மாபெரும் விஷயம் நடக்க இருக்கு. மதுரைத் தமிழன் அடுப்பை அணைக்கப் போறாராம்....கின்னஸ் ரெக்கார்டுக்காகவாம்.....கூட்டம் அள்ளினாத்தானே சாட்சி கிடைக்கும் ரெக்கார்டுல போட....ஹிஹிஹி
கீதா
நல்லவேளை மதுரைத்தமிழனை அவ்ங்க வீட்டம்மா பிரட்டி எடுப்பது போல என்று சொல்லாமல் இருந்து என் மானத்தை காப்பாற்றியதற்கு நன்றி// ஹலோ இதெல்லாம் சொலல்ணுமா என்ன? எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே னு நெல்லைத் தமிழனுக்குத் தெரியாதா என்ன? ஹஹஹ்
பதிலளிநீக்குகீதா
நல்லவேளை மதுரைத்தமிழனை அவ்ங்க வீட்டம்மா பிரட்டி எடுப்பது போல என்று சொல்லாமல் இருந்து என் மானத்தை காப்பாற்றியதற்கு நன்றி///தமிழன் அப்ப உங்க ரவுசுக்கு மாமி டெக்னிக்க மாத்திட்டாங்களா...பூரிக்கட்டை எல்லாம் இல்லையா....சரி சரி நாங்க (அதிரா, ஏஞ்சல் உங்களையும் நம்பித்தான் இதுல நாங்கனு சொல்லிருக்கேன் காப்பாத்துங்கப்பா..அப்பதான் மதுரைகிட்ட கூட்டா மாட்டிக்கலாம்ல....ஹிஹிஹி) இன்னும் டெக்னிக் எல்லாம் சொல்லித் தரோம் மாமிக்கு....
பதிலளிநீக்குகீதா
மிகவும் பிடித்தமானது..
பதிலளிநீக்குகுழம்புக்கு தக்காளி சேர்ப்பதில்லை.. தவிர தொட்டுக் கொள்வதற்கு என - வேறெதும் தேவைப்படாது என்பது சிறப்பு அம்சம்..
பருப்பு உருண்டைக் குழம்பு வாழ்க!..
//(அணைக்கவும்னு எழுத நினைத்தேன். மதுரைத் தமிழன் வந்து நிஜமாகவே அடுப்பை அணைத்துவிட்டால்?).//
பதிலளிநீக்குஹஹஹ் நெல்லைத் தமிழன் மிக்க நன்றி!!! இந்த வரிக்கு...கரீக்டா சொல்லிட்டீங்க...மதுரை மெய்யாலுமே கின்னஸ் ரெக்கார்ட் போடப் போறாராமே!!
கீதா
உருண்டைய நாங்க வாணலிலாம் பிரட்டமாட்டோம். அப்பிடியே குழம்புல போட்டுக்குவோம். சோம்பு, பட்டை போட்டு செய்வோம். செமயா இருக்கோம்
பதிலளிநீக்குஅருமையான ரெஸிப்பி...பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குTamil News
ஆஹா பருப்பு உருண்டைக் குழம்பா? இதைத்தானே வடைக்கறி எனவும் சொல்வதுண்டு[ஸ்ரீராம் டெல்லியிருக்கிறார் நீல மைல:)]? அல்லது வடைக்கறி என்பது வேறயோ?... எதுவாயினும் நானும் செய்வேனே... ஆனா ட்றுத் சொல்லியிருப்பதைப்போல.. இட்லித் தட்டல்ல.. இடியப்பத்தட்டில் வைத்து அவித்து எடுப்போம், கொஞ்சம் றிச் ஆக செய்ய விரும்பினால், அவித்ததை பொரித்தெடுத்து குழம்பில் சேர்ப்போம்...
பதிலளிநீக்குஅடிக்கடி செய்வதில்லை, ஆனா இப்படி ஒரேயடியாகச் செய்து பொரித்தெடுத்து, ஃபிரீசரில் போட்டு விடுவேன், தேவைக்கு அப்பப்ப குழம்பாக்கிடலாம்... இது என் புராணம்.. இருங்க உங்க ரெசிப்பியை மேய்ஞ்சிட்டு வாறேன்ன்:).
/// பெருஞ்சீரகம் (சோம்பு),// ஆவ்வ்வ்வ் பெருஞ்சீரகம் எங்கட பாஷை ஆச்சே.. நீங்களும் இப்படியா பாவிப்பீங்க?..
பதிலளிநீக்குசே..சே.. நீங்க தப்புப் பண்ணிட்டீங்க.. அணைக்கவும் என்றே எழுதியிருக்கோணும்... உடனே நாங்கள் எல்லாம் கச்சானும் வறுத்து பொப்கோனும் செய்திட்டு ஓடிவந்திருப்போம் ட்றுத் தின் புறுணம் பார்க்க:)..
// அரவை இயந்திரத்தில் அரைத்துக்கொள்ளவும். என் ஹஸ்பண்டின் சகோதரி சென்னை வந்திருந்தபோது செய்திருந்ததை நான் 1 டப்பா லவட்டிக்கொண்டு வந்தேன். (லவட்டி-இது என்ன மொழி)//
பதிலளிநீக்குஓ நாத்தனார்(கரெக்ட்டுத்தானே, நாங்கள் மச்சாள் என்போம்) செய்ததை சுருட்டிக் கொண்டு வந்து, இங்கே எங்களுக்கு அயகா செய்து காட்டி ரொம்ப சுவையாக இருக்குது என்றிட்டார்ர்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. சேர்டிபிகேட் அவவுக்கே சேரும் உங்களுக்கல்ல:) ஹா ஹா ஹா:)..
காரம் அதிகம் சாப்பிடுவோருக்கு கோபம் அதிகமாகும் எனத்தான் நானும் அறிஞ்சேன்.. நாங்களும் காரம் அதிகம் சேர்க்கும் பறம்பறை:) ஆக்கும்.. ஆனா கோபம் அதிகம் மாதிரி தெரியல்ல....:)
தக்காளி பியூரி சேர்க்கச் சொல்லிட்டீங்க... நாங்க தக்காழி சேர்க்க மாட்டோம்,,,, சேராது விட்டால் இப்படி தடிப்பா குழம்பு வருமோ தெரியல்ல.. பார்க்க சூப்பரா இருக்கு உங்களோட கறி.
பதிலளிநீக்குThulasidharan V Thillaiakathu said...
(SIMல வைக்கணும்)// ஐயையோ அப்புறம் ஃபோன் என்னாறது?///
ஆவ்வ்வ்வ் கடவுளே இப்போ யாரோட சிம்ல வைக்கப்போறாரோ... எங்கே என்ன்னோட சிம்ம்ம்ம்ம்.. ஆ இருக்கு.. ஆண்டவா நேக்கு சிம் முக்கியம்:) வேணுமெண்டால் அஞ்சுவோட சிம்ல வையுங்கோ.. மீக்கு ரைம் இல்லை பின்பு வாறேன்ன் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்:).
ருசியானரெசிபி
பதிலளிநீக்குஎனக்கு ஒரு சந்தேகம். நீங்க எழுதறீங்களா, இல்லை மறுபாதி எழுதறாங்களா.
பதிலளிநீக்குஹஸ்பண்ட்னா மனைவியா. ஹாஹா.
நிற்க. பருப்புருண்டைக் குழம்புக்குத் தக்காளி எல்லாம்
ஏன் சேர்க்கணும். why do we need to add tomatoe.
As such Paruppurundai is a top class recipe.
நீங்க சொல்லி இருக்கும் விதம் ரொம்ப அழகு.
குழம்புக்கு வத்தல் வடாம் பொரிச்சு
தொட்டுக்கலாம்.கரேமது கூட எனக்கு வேண்டாம்.ம்ம்ம்.
நீங்கஎழுதியிருப்பதுதான் முறை. ஆனால் சிலபேர் துளி அரிசியும் சேர்ப்பார்கள். உருண்டை கரையாது இருப்பதற்காக. ஆனால் வாணலியில் பிரட்டாமல் நேராக கொதிக்கும் குழம்பில் உருண்டைகளை மெல்ல நழுவ விடுவார்கள். சிலஸமயம் நன்றாகக் கைகொடுக்கும். நான் ஒரு ஆவி வேகவைத்துதான் போடுவேன்.கரைந்து விடுமோ என்ற யோசனையே இருக்காது. தக்காளி போடுவதால் நல்ல கலராகவும், ருசியாகவும் குழம்பு இருக்கும். எங்காத்தில் பருப்புருண்டை ரஸம் என்றுச் சொல்லுவோம். என்ன இந்தச் சீரகம்,பெருஞ்சீரகம்,தனியாவெங்காயம்,பூண்டெல்லாம் அரவர்கள் ருசியைப் பொருத்தது. ஸாம்பார்ப்பொடியில் கொத்தமல்லி இருக்கிறதே! ஆக மொத்தம் நன்றாகத் தேர்ந்தெடுத்து எழுதுகிறீர்கள். இவ்வளவுபக்குவமாக அம்மாவா,ஹஸ்பெண்டா யார் கொடுத்த டிரெயினிங்? அவர்களையும் சேர்த்து ஸபாஷ் சொல்லலாம். அன்புடன்
பதிலளிநீக்குஎனக்கு குழம்பை விட பருப்பு உருண்டை தான் ரொம்பப் பிடிக்கும் :)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@Avargal Unmaigal
//அதிரா ஏஞ்சல் கீதா எல்லாம் ஒன்று சேர்ந்து மதுரைத்தமிழன் நீங்க அடுப்பை அணைக்கும் வரை போராடப் போறாங்களே//
காலைல போன்ல படிச்சிட்டு மெகா சைஸ் விறகடுப்புக்கு தேடி அலைஞ்சேன் :) எல்லாமே இங்கே கிடைக்கிறது கிளாஸ் போட்டது உங்களுக்கு எங்கூர் பிரியாணி பாத்திரம் வைக்கிற அடுப்புதான் சரி :) அதையே அணைங்க ப்ளீச் :) நீங்க அணைக்காட்டி நான் உள்ளுணர்வு போஸ்ட்டா போடுவேன் சொல்லிட்டேன் அப்புறம் அதிரா ஆதிகாலத்து படங்களுக்கு ரிவ்யூ எழுத ஆரம்பிச்சிடுவாங்க அதனால் ல் ல் ல் ல் :) அந்த பெரிய நெருப்பு அடுப்பை அணைங்க
நானும் இரண்டு முறையில் செய்வேன் நீங்க சொன்ன மாதிரி வதக்கி செய்ததில்லை ஒன்று ஆவியில் ஸ்டிம் செய்து இல்லைன்னா கொஞ்சம் ஷாலோவா கிள்ளி போட்டு பொரிச்சி அதை குழம்பில் சேர்ப்பேன் ..எங்க வீட்ல இதை திக்கா செஞ்சிட்டு கூட ரசமும் வைப்பேன் இல்லைன்னா மோர்க்குழம்பு ..அதுதான் செம காம்பினேஷன் ..
பதிலளிநீக்குஎங்க வீட்ல கணவர்ஒருவர் மட்டுமே இதெல்லாம் சாப்பிடுவார் அதனால் எப்பவாதுதான் செய்வேன் ..
பொண்ணுக்கு ரசம் இல்லைனா வெஜ் ரைஸ் இப்படித்தான் ஆசை ..பருப்பெல்லாம் இக்கால பிள்ளைங்களுக்கு எதோ வேற்று கிரக பொருள் மாதிரிதான் வெளிநாட்டில் ..
அந்த குட்டி டேபிள் டென்னிஸ் பால் போல அழகா உருட்டிருக்கிங்க :)
அப்புறம் உருளைக்கிழங்கு கறி இதோட 3 டைம்ஸ் செஞ்சாச்சு வீட்டில் நல்ல வரவேற்பு ..விரைவில் பிளாக்கில் போடறேன் ..
காரத்துக்கும் கோபத்துக்கும் சம்பந்தம் இல்லைன்னுதான் நினைக்கிறேன் ..உணவில் ஆர்டிபிஷியல் கலர்ஸ் இல்லைனா வேற இன்க்ரிடியன்ட்ஸ் இருந்தா படபடப்பும் கோபமும் ஏற்படுத்தும் ..
மிளகாய் நம்ம உடம்புக்கு நல்லது அதெல்லாம் சாப்பிடறதாலதான் நிறைய நோய் அண்டரதில்லை
//வேணுமெண்டால் அஞ்சுவோட சிம்ல வையுங்கோ.. மீக்கு ரைம் இல்லை//
பதிலளிநீக்குgarrrr why my sim குண்டு கட்டா உங்களையே வச்சிட்டடா :)
நேத்திக்குச் சாயந்திரம் (இங்கே ஞாயிறு மாலை, அப்போ திங்கள் காலை இந்தியாவில் இந்தப் பதிவு வந்திருக்கும்) ரொம்பவே பிசி! ஆதலால் கணினி பக்கமே வர முடியலை. இப்போத் தான் பார்க்கிறேன். எங்க பக்கம் (மதுரை, திருநெல்வேலி) பருப்புருண்டைக் குழம்பு என்று புளி, சாம்பார்ப்பொடி சேர்த்துச் செய்வோம். தக்காளி சேர்த்ததில்லை. மாமியார் வீட்டில் காமாட்சி அம்மா சொன்னாப்போல் பருப்புருண்டை ரசம் என்பார்கள். அதோடு அங்கே பெரும்பாலும் பருப்புருண்டையில் மோர்க்குழம்பு தான் செய்வார்கள். நெல்லைத் தமிழனின் குழம்பு சமையல் குறிப்பு எங்க வீட்டு சமையல் குறிப்பிலிருந்து மாறுபடும். காமாட்சி அம்மா சொல்வது போல் பருப்பு வகைகளோடு கொஞ்சம் அரிசி வைப்பதுண்டு. அல்லது அரைத்து எடுத்ததும் அரிசி மாவு கலப்பது உண்டு.
பதிலளிநீக்குசாம்பார்ப் பொடி திரிக்க 200 கிராம் மிவற்றல் என்றால் அரைகிலோவிலிருந்து முக்கால் கிலோ வரை கொத்துமல்லி விதை போடுவேன். துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றோடு வெந்தயமும் சேர்ப்பது உண்டு. ஒரு கைப்பிடி கடலைப்பருப்பு மாமியார் வீட்டில் போடுவாங்க. சொல்லப் போனால் கடலைப்பருப்பு அதிகமாகவே இருக்கும். நான் கடலைப்பருப்பு அதிகம் சேர்த்தால் சாம்பார் ரொம்ப கெட்டியா ஆயிடும்னு சேர்ப்பதில்லை. அதோடு பொடி போட்டால் அதை சாம்பார்னு சொல்றதும் இல்லை. குழம்பு தான். அரைச்சு விட்டால் தான் சாம்பார்! :)))))
பதிலளிநீக்குhttp://geetha-sambasivam.blogspot.com/2013/04/blog-post_12.html
பதிலளிநீக்கு@நெ.த. உங்களோட புளி மோர்க்குழம்பு பதிவில் இந்த பருப்புருண்டைக் குழம்பு, பருப்புருண்டை மோர்க்குழம்பு பத்தி எல்லாம் விளக்கம் கொடுத்திருக்கேன். :)
பதிலளிநீக்குகாரசாரமான பருப்பு உசிலி பிடிக்கும். அதைத் தனியாக ஒரு பெரிய பாத்திரத்தில் வாங்கி அப்படியே ஒரு ஸ்பூன் போட்டு விரும்பி சாப்பிட்டு விடுவேன்.
பதிலளிநீக்குஉருட்டி குழம்பில் ஊறப்போடுவதெல்லாம் எனக்கு என்னவோ பிடிப்பதில்லை.
அதுபோல இந்தத் தயிர்வடை என்பதையும் நான் தொடுவதே இல்லை. தனியே தயிர் பிடிக்கும். சுடச்சுட மொறுமொறுன்னு உள்ள வடையும் பிடிக்கும். தயிரில் ஊறிய ’தயிர்வடை’ மட்டும் ஏனோ பிடிப்பது இல்லை.
’லவட்டி’கொண்டு வந்தது என்பது பலரும் சொல்லும் வார்த்தை தான். அபேஸ் பண்ணிக்கொண்டு வந்தது. உரிமையுடன் கேட்டு வாங்கி எடுத்துக்கொண்டு வந்தது. அதிரா பாஷையில் களவாடிக்கொண்டு வந்தது என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
பகிர்வுக்கு நன்றிகள், ஸ்வாமீ.
நன்றி எங்கள் பிளாக் ஸ்ரீராம். வடைகுழம்பு சட்டுனு நினைவுக்கு வரலை. ஆனா இந்தக் குழம்பின் தனித்தன்மை, அந்த உருண்டைகளை மோர் சாதத்துக்குச் சாப்பிட நல்லா இருக்கும்கறதுதான். நாங்க பண்ணற மோர்க்குழம்பு வடையும், மோர்சாதத்துக்கு நல்லா இருக்கும்.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி. அம்மாவை நினைவுகூற நமக்கெல்லாம் உணவை விட்டால் வேறேது.
பதிலளிநீக்குநன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.
பதிலளிநீக்குவாங்க மதுரைத்தமிழன். 'லவட்டி' அர்த்தம் தெரிகிறது. அதை மதுரையிலா உபயோகப்படுத்துகிறார்கள்.
பதிலளிநீக்குஉங்க வீட்டம்மா பூரிக்கட்டையால் அடிக்கிறார்கள், பிரட்டி எடுக்கிறார்கள் என்றெல்லாம் தொடர்ந்து சொல்லியிருக்கிறீர்கள். ஒருவேளை யாரிடமாவது அவர்களை introduce பண்ணும்பொழுது, உங்களைப் பிரட்டி எடுப்பார்களே அவர்கள்தானே, எனக்குத் தெரியுமே என்று சொல்லாமல் இருந்தால் சரிதான்.
வாங்க தில்லையகத்து கீதா ரங்கன். நானும் இந்த முறைதான் தக்காளி உபயோகப்படுத்தினேன். எனக்குப் பிடித்திருந்தது.
பதிலளிநீக்குநன்றி ராஜி உங்கள் வருகைக்கு.
பதிலளிநீக்குநன்றி ஹென்ரிமார்க்கர்.
வாங்க அதிரா. நீங்கள் சொல்லியிருப்பது வடைகறி. இரண்டுக்கும் கொஞ்சமாவது வித்தியாசம் இருக்கும் (ஏன்னா பருப்புருண்டையைப் பொரிக்க முடியாது). திருனெவேலிக்காரங்க, பெருஞ்சீராம் என்று தான் சொல்லுவோம். சோம்பு என்பது பிற்காலத்தில் நான் தெரிந்துகொண்டது.
பதிலளிநீக்குநீங்கள் 'மச்சாள்' என்று சொல்வதை, நாங்கள் 'மச்சினி' என்போம். உங்களுக்கு உங்கள் கணவரின் சகோதரி, 'நாத்தனார்' அல்லது 'நாத்தி' (அடி ஆத்தீ..)
நன்றி துரை செல்வராஜு. இதை நீங்க செய்தீங்கன்னா, ரெண்டு நாளைக்கு மோர் சாதத்திலேயே ஓட்டலாம்.
பதிலளிநீக்குநன்றி அசோகன் குப்புசாமி.
பதிலளிநீக்குவாங்க வல்லிசிம்ஹன் அம்மா. Traditionalஆ தக்காளி சேர்க்கமாட்டார்கள் இந்தக் குழம்புக்கு. (காபிரைட் கேட்டு ஒருவேளை கீதா சாம்பசிவம் மேடம் வந்துட்டாங்கன்னா?)
பதிலளிநீக்குஒரு வழியா உண்மையைக் கண்டுபிடிச்சுட்டீங்களே. என் ஹஸ்பண்ட்தான் நிறைய ரெசிப்பி சொல்லுவா. நான் அதைச் செய்துபார்க்கிறேன். நான்தான் மாப்பிள்ளை... ஆனால் போட்டிருக்கற சட்டை அவளோடது'ன்னு சொல்லவச்சிட்டீங்களே.
எனக்கு மட்டும் பண்ணும்போது, சமயத்தில் கரேமது, வத்தல், வடாம் பொரிக்க பொறுமை இருப்பதில்லை.
காமாட்சியம்மா.. உங்கள் வருகைக்கு நன்றி. எனக்கு சமைப்பதில் ஆர்வம். பெரும்பாலான ரெசிப்பி என் ஹஸ்பண்ட் சொன்னதுதான். உங்கள் பின்னூட்டம் சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது (தளர் நடை நடக்கும் குழந்தையை, ஆஹா. செமையா நடக்கிறான்' என்று பாராட்டுவதுபோல்)
பதிலளிநீக்குநன்றி பகவான்ஜி. உங்களுடைய பின்னூட்டம் எனக்கு ஒன்றை மனதில் நினைக்கவைத்தது. வீட்டுல சாப்பிடும்போது நமக்குப் பிடித்ததா நாம் சாப்பிட்டுவிடுவோம் (பெரும்பாலும்). குழந்தைகளும் அப்படித்தான். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் என்ன பண்ணியிருக்காங்களோ அதை எல்லோரும் பகிர்ந்து சாப்பிடுவோம் என்று நினைப்பதில்லை. அப்போ மீதமுள்ளதுதான் பெண்களுக்குப் போய்ச் சேருகிறது. 'தியாகம் செய்கிற பெண்களை' நினைத்துப்பார்க்க வைத்துவிட்டீர்கள்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஏஞ்சலின். வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும்னா, செய்கிறவர்களுக்குத்தான் கஷ்டம். என் வீட்டில், பையனுக்குப் பிடிப்பது, பெண்ணுக்குப் பிடிக்காது. அடை ஒருத்தருக்குப் பிடிக்கும், வெண்பொங்கல் இன்னொருத்தருக்குப் பிடிக்கும். இப்படி ஒவ்வொரு டேஸ்ட். ஆனா, ரெண்டுபேருக்குமே கலந்த சாதம் பிடிக்காது.
பதிலளிநீக்குஉருண்டையா உருட்டறது சுலபம்தான். அழகுணர்ச்சி இருந்தா இதெல்லாம் ரொம்ப சுலபம். நீங்கள் எத்தனை வெரைட்டியாக அழகான வாழ்த்து அட்டைகள் போன்றவை தயாரிக்கிறீங்க.பார்க்கவே ரொம்ப அட்டஹாசமா இருக்கு. இதெல்லாம் ஆர்வத்தைப் பொருத்தது என்பதைவிட, அழகுணர்ச்சியைப் பொருத்தது என்றே நினைக்கிறேன். (செய்வன திருந்தச் செய்)
நன்றி கீதா சாம்பசிவம் மேடம். ஆச்சு... நல்ல அக்னி வெயில் கொளுத்தும்போது யதாஸ்தானத்துக்கு வந்துடுவீங்கன்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குநீங்கள் எழுதியுள்ளது சரி. என் ஹஸ்பண்ட் டிரெடிஷனலாத்தான் பண்ணுவா. நான்தான் தக்காளி சேர்த்துப்பார்த்தேன். எங்க சமையல் அக்மார்க் திருநெவேலி (எங்க அம்மா வீட்டுல). என் ஹஸ்பண்ட், திருநெவேலி, கும்பகோணம் காம்பினேஷன். உங்க ரெசிப்பியெல்லாம் பார்ப்பேன். அதுல துளி ஜீரகம் அல்லது ஏதேனும் மாற்றி என்னோடதுபோல் 'திங்கக்கிழமையில்' எழுதணும்னு எண்ணம். (எழுதி உங்கள்ட்ட கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பின்னூட்டம் வாங்கணும்னுதான்)
என்ன கோபு சார்... பருப்புருண்டைக் குழம்பும் பிடிக்காதா? எனக்கு வெறும் வடையைவிட தயிர்வடை ரொம்பப் பிடிக்கும். அதுவும் பிடிக்காதுன்னு சொல்றீங்களே. அதையும் செய்து எழுதியனுப்பலாம் என்று நினைத்தேன்.
பதிலளிநீக்குநாலு தயிர்வடையும், ஸ்பூனும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒரு கதை எழுத ஆரம்பிங்க சார். கற்பனை ஊற்று பெருகும்.
வருகைக்கு நன்றி.
ஏஞ்சலின்... கார, மசாலா உணவுகள் அதிக உணர்ச்சியைத் (படபடப்பு, கோபம் போன்றவை) தூண்டும். பொதுவா, சாமியார்களுக்கு இவைகள் இல்லாத (அல்லது மிக மிகக் குறைவாக சேர்க்கப்பட்ட) உணவைத்தான் தருவார்கள்.
பதிலளிநீக்குஓ அப்படியா ஓகே .நான் காரம் ஒன்லி வத்த குழம்புக்கு மட்டும் சேர்ப்பேன் ..மோஸ்ட்லீ தேங்காய் சேர்த்த குழம்புதான் ..மேளம் பிராண்டில் முந்தா நேத்து தான் காஷ்மீரி சில்லி பவுடர் வாங்கி இருக்கேன் நிறம் செவப்பாருக்கு காரம் தெரில :)
பதிலளிநீக்குஆஆஆஆஆஆவ்வ்வ் அஞ்சு சூப்பர் மாட்டி... ஹா ஹா ஹா பொல்லுக்கொடுத்தே அடிவாங்குவோரும் இருக்கின்றனர்.... இனிமேலும் காரம் சாப்பிடுவீங்க??:)... ஹா ஹா ஹா நான் ஞானியாகிட்டேஏஏஏஏஏஎன்ன்ன்:)
பதிலளிநீக்குஅருமையான சமையல்
பதிலளிநீக்குஎன் விருப்ப உணவாச்சு
என் மனைவி எப்பவாவது செய்வாள் எனக்கு இவை அவ்வளவாக ருசிப்பதில்லை அதேபோல் ரசவடை தயிர் வடை போன்றவையும் அவ்வளவாகப் பிடிக்காது
பதிலளிநீக்குநன்றி ஜீவலிங்கம்.
பதிலளிநீக்குநன்றி ஜி.எம்.பி. சார். உங்களுக்குப் பிடிக்காது என்று எழுதியிருப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும் போலிருக்கிறது. அந்தக் காலத்தில் கீதாஞ்சலி ஹோட்டலில் (தி.நகர், ரங்கனாதன் தெருக்கு எதிர் வரிசைல) ரசவடை நல்லா இருக்கும். தயிர்வடை எனக்கு எப்போதுமே பிடிக்கும் (அதில் இனிப்பு சேர்த்தால் சுத்தமாகப் பிடிக்காது. சிலர் தயிரில் இனிப்பைச் சேர்ப்பார்கள்).