சனி, 8 ஏப்ரல், 2017

ராதிகாவும் ஒரு நல்ல போலீஸும்..




1)  அறிந்து கொள்ளுங்கள் ராதிகா கவாத்கரை




2)  ஐப்பசியில் பெய்த மழையில், சேகரிக்கப்பட்ட நீர் இன்னும் கைகொடுப்பதால், மற்ற கிராமங்களுக்கும் தண்ணீர் வழங்குவதை, இக்கிராம மக்கள் பெருமையாக கருதுகின்றனர்.

3)  தெருவோர வியாபாரிகளுக்கு சிறு (காலத்தால் செய்யும் உதவி) உதவிகள் செய்யும் ஆட்டோ ஓட்டுநர் ஓம்கார்நாத் கதாரியா.  

4)  கல்கத்தாவில் 17.5 கிலோமீட்டருக்கு ஒரே ரூபாய் செலவில் பேருந்துப் பயணம்.  இந்தியாவிலேயே மிகக் குறைந்த இந்தக் கட்டணம் எப்படி சாத்தியம்?  படியுங்கள்.

5)  சாலைவசதி கிடையாது.  மின்சாரம் கிடையாது இந்த மலையுச்சி கிராமத்தில்.  ஆனாலும் இங்கிருக்கும் பள்ளி சிறப்பாக இயங்கள் காரணமான மனிதர் மதன் யாதவ்.

6)  ஒரு அடடே வாசகசாலை... 



7)  செஸ் விளையாட்டும் ஒரு வகையான போதை தான். செஸ், மூளையை ஆக்கிரமித்துக் கொள்ளும். செஸ் விளையாட ஒருவர் உட்கார்ந்தால், முடிவு தெரிகிற வரைக்கும் வேறு எந்த சிந்தனையும், புத்தியில் இருக்காது. இந்த எங்கள் முயற்சிக்கு, நல்ல பலன் இருந்தது.
 
செஸ் விளையாட ஆரம்பித்த நிறைய பேர், குடிக்கும் நேரத்தை குறைத்தனர்; அதனால், குடிக்கும் அளவு குறைந்தது. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து, குடிக்கு அடிமையாக இருந்த பலர், அதிலிருந்து முற்றிலும் விடுதலையாயினர்.  கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், மரோடிச்சல் கிராமத்தில், மதுப்பழக்கத்தை துரத்த, சதுரங்க விளையாட்டை கிராம மக்களுக்கு அறிமுகப்படுத்தியவரும், தேநீர் கடை நடத்தி வருபவருமான உன்னிகிருஷ்ணன்.

8)  இதோ ஒரு நல்ல போலீஸ்...   நெயின்குபே மாரு.




 

19 கருத்துகள்:

  1. போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  2. தினமலர், முகநூல் செய்திகள் தவிர மற்ற அனைத்தும் புதிய தகவல்கள்... அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துகள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. நல்ல காரியத்தை தொடர்ந்து செய்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்!

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  4. அனைவருமே அற்புதமான மனிதர்கள்.... அனைவருக்கும் பாராட்டுகள்.....

    பதிலளிநீக்கு
  5. சிறப்புடைய மனிதர்களைப் பற்றிய இணைப்புகளுடன் அருமையான பதிவு..

    அன்பின் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  6. தங்கள் பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  7. ரதிகா பிரமிக்க வைக்கிறார். சிறந்த உதாரணம்.

    கொக்காடி கிராம மக்கள் முன்னோடிகள் பல கிராம மக்களுக்கு...

    நம்மைப் போன்றவர்கள் செய்யாததைக் கூட சாதாரண நிலையில் இருக்கும் ஓம்காரநாத் போன்றவர்கள் செய்து காட்டி உதாரணங்களாகின்றனர்.

    பயோகேஸ் முயற்சி மிக ம்கி நல்ல அற்புதமான முயற்சி

    கண்டெய்னர் லைப்ரரி சூப்பர் மற்றும் குடியை நிறுத்த செஸ் விளையாட்டினால் தீர்வு காணும் உன்னிக்கிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். அது போன்று கலக்குறீங்க குமாரு என்று சொல்ல வைக்கிறார் நெயின்குபே மாரு!!!

    எல்லோருமே ஹூரோக்கள் என்றாலும் ஹீரோ மதன்யாதவ் சொல்ல வார்த்தைகள் இல்லை அது போல ஹீரோயின் ராதிகா!

    அனைத்தும் அருமை


    பதிலளிநீக்கு
  8. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். நல்ல தேர்வு

    பதிலளிநீக்கு
  9. ஸ்ஸ்ஸ் வந்த வேகத்தில் கீயூவில முதலாவதா நிண்டு ஆறாவதா வோட் பண்ணிட்டேன்ன்:)..

    அந்த தண்ணீரைப் பார்க்க கஸ்டமாக இருக்கு... கல்கத்தா மஞ்சள் நிறத்தில் மின்னுது... கல்கத்தா என்றதும் கண்ணதாசன் அங்கிள் எழுதிய கதை ஒன்று நினைவுக்கு வந்திட்டுது...:(.

    இங்கும் இப்படி சேர்விஸ் இருப்பதாக அறிந்தேன்... 600 கிலோ மீட்டர் தூரம், நைட் பஸ்., இரவு 10 மணிக்கு புறப்பட்டால் காலை 6 மணிக்குச் சென்றடையும்.. ரிக்கெட் ...வன் பவுண்ட் மட்டுமே. இப்பவும் இருக்குமெனத்தான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அடடே வாசக சாலை/////
    ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் றீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈசர்ர்ர் ஓடியாங்கோ எங்கட ஸ்ரீராம் ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊ விட்டிட்டார்ர்.. நாம ஆரு?:) தமிழ்ல டி எடுத்தேனாக்கும்:).. என் கண்ணுக்கு இதெல்லாம் தெரியுமெல்லோ..:).. எனக்கு முக்கியம் கடமை நேர்மை எருமை ஆக்கும்..க்கும்..க்கும்..:).

    பதிலளிநீக்கு
  11. அருமையான மனிதர்கள். போற்றுவோம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. அனைவரையும் வாழ்த்துதல் தவிர வேறென்ன செய்ய முடியும்

    பதிலளிநீக்கு
  13. முதலிரண்டும் தவிர மற்றவை புதியவை! அனைவருக்கும் வாழ்த்துகள். தொடரட்டும் உண்மையான மனித நேயம்!

    பதிலளிநீக்கு
  14. போற்றத்தக்க மனிதர்களைப் பற்றிப் பகிர்கின்ற உங்களுக்கு பாராட்டு.

    பதிலளிநீக்கு
  15. நாட்டுநடப்பை அறிந்து கொள்ள டிவி மட்டுமே பார்ப்பதால் இவர்களைப் பற்றி அறிய முடியாத குறையை நீங்கள் தீர்த்து வைப்பதற்க்கு வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  16. தன்னம்பிக்கை பெண் ராதிகா .மழை நீரை சேகரித்து பயன்படுத்தும் கொக்கடி கிராம மக்கள் ,அன்றாடம் அல்லல்பட்டு உழைக்கும் வர்க்கத்துக்கு சிற்றுண்டியும் நீரும் தரும் ஓம்கார் ,பையோ கியாஸ் பஸ் குறைந்த செலவில் பயணம் ,பள்ளிசிறாருக்கு கற்புக்கும் மதன், கண்டெய்னர் வாசக சாலை குப்பை அள்ளும் நாகலாந்து கான்ஸ்டபிள் எல்லாம் அருமையான தகவல்கள் ..
    அந்த செஸ் போர்ட் ஒரு 100 நம்பர்ஸ் எல்லா டாஸ்மாக் வாசலிலும் வச்சி விட்டா நல்லாருக்கும் :)

    பதிலளிநீக்கு
  17. தங்கள் தேடல் வழியே
    இவ்வாறான - பல
    தன்னம்பிக்கை நிறைந்த
    வழிகாட்டிகளை
    அறிய முடிகிறது.
    இவர்களைப் போல
    நம்மாளுங்க முயன்றால்
    நாடு முன்னேறுமே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!