செவ்வாய், 18 ஏப்ரல், 2017

கேட்டு வாங்கிப்போடும் கதை :: மறப்பது மனித இயல்பு மன்னிப்பது இறை இயல்பு ஜி எம் பாலசுப்ரமணியம்



"சீதை ராமனை மன்னிக்கும்" கதைத் தொடரில் திரு ஜி எம் பி ஸாரின் கற்பனை இன்று..





மறப்பது மனித இயல்பு; மன்னிப்பது இறை இயல்பு
ஜி எம் பாலசுப்ரமணியம்



ஸ்ரீராமுக்காக

     நண்பர் ஸ்ரீராம் என்னிடம் எதைக் கண்டாரோ தெரியவில்லை. ஒரு அஞ்சல் அனுப்பி ஒரு கதை எழுத வேண்டி இருந்தார். கதை எழுதி விடலாம்தான்  ஆனால் ஒரு நிபந்தனையுடன்  கதை எழுத வேண்டி இருக்கிறார்.  


     கதை “சீதை ராமனை மன்னித்து விட்டாள்’ என்று முடிந்திருக்க வேண்டுமாம் நானும்  முயற்சி செய்கிறேன்  என்று  பதில் எழுதினேன் கதையில் ராமன் சீதை என்னும் பாத்திரங்களைக் கற்பனை செய்து ஏதோ கதை ஒப்பேற்றி விடலாம்தான் 


     ஆனால் எனக்கு அது சரியாகத் தோன்றவில்லை ராமன்  சீதை என்றாலேயே நம் மனதில் வருவது இராமாயணக் காப்பிய பாத்திரங்களே ராமாயணத்துக்கு யாரும் காப்பி ரைட் வாங்கி இருப்பதாகத் தெரியவில்லை. ராமனை ஒரு உதாரண புருஷனாகவே நம்  மக்கள் நினைக்கின்றனர் என்னால் அப்படி நினைக்க முடியவில்லை எல்லா குணங்களும் குறைகளும்  நிறைந்த பாத்திரங்களாகவே அணுகுகிறேன்  என் மனதில் தோன்றிய சில கருத்துகளுடன் கதை புனையத் தயார்படுத்திக் கொண்டேன்இருந்தாலும் அசல் கதையை சிதைக்கக் கூடாது என்னும்  முனைப்பும் இருந்ததுஅதுவே இந்த வடிவம் பெற்றுவிட்டது ராமாயணக் கதையை அநேகமாக எல்லோரும்  அறிந்துஇருப்பர் ஆகவே கதையை விளக்காமல் பாத்திரங்களை மட்டும்  அணுகுகிறேன்

 
     மறப்பது மனித குணம் மன்னிப்பதுஇறை குணம் என்று படித்த நினைவு
ராமனை மகா புருஷனாக நினைக்க விடாமல் தடுப்பது எது?நிறையவே உள்ளது ஆனாலும்   ராமாயண நிகழ்வுகள் சிலவற்றை கூர்ந்து கவனிக்க வேண்டும்
சீதையை ராவணன் கவர்ந்து சென்றான் அவளை மீட்க வனம்  முழுவதும் அலையும் ராமன்  ஜடாயுவிடமிருந்து ஒரு சில தகவல்கள் பெறுகிறான் தன்  தந்தைக்கு ஈமக் கிரியைகள் செய்ய முடியாமல் போன ராமன் ஜடாயுவுக்கு அதைச் செய்கிறான் பின் காட்டில் அனுமன்  மூலம்சுக்கிரீவன்  நட்பைப் பெறுகிறான் சீதையைத் தேட  அவன்  உதவியை நாடுகிறான் தவறில்லை ஆனால் சுக்கிரீவனை விட பலசாலியும்  பராக்கிரமும் மிக்க வாலியை மறைந்து நின்று கொல்கிறான் அதற்கும் ஒரு காரணம் கூறப்படுகிறது.  


     அது சுக்கிரீவனின்  வேண்டுகோள்  ஏழு மராமரங்களையும்  ஒரே அம்பினால் துளைக்கும்  சக்தி பெற்ற ராமன்  வாலியிடம்  நேருக்கு நேர் மோதாமல் கொன்றது தவறாகத் தோன்றுகிறது அதுவும் இதே வாலியின் வாலில் கட்டுண்டு கதறிய ராவணனை எதிர்க்க வாலியை விட சிறந்தவன்  இருக்க முடியுமா? 


     ஆனால் அதற்கும் பல சப்பைக் கட்டுகள் இருக்கும்  வாலியை வதம்  செய்த போது ராவணன் தான் சீதையைக் கவர்ந்து சென்றான்  என்பது ராமன் அறியாதது தன்  காரியம் நிறைவேற யாருடனும் கூட்டு வைத்துக் கொள்வது ராமாயண காலத்திலேயே இருந்திருக்கிறது


     வாலியை வதம்  செய்து குரங்குகள் உதவியுடன் இலங்கை செல்லும்  ராமன் சந்திக்கும்  பேர்வழி அண்ணனைத் திருத்தாமல்  அவன்  பதவிக்கு ஆசைபட்ட  விபீடணன் அவனுக்கு பட்டம் சூட்டுவதாக  வாக்களித்த ராமன் முதலில் எந்த காரியத்துக்காக இலங்கைக்கு ராவணனை கொல்ல வந்தானோ அந்த சீதையை மீட்கும்  பணியில் முதலில் ஈடுபடவில்லை போர் முடிந்ததும்  விபீஷணப் பட்டாபிஷேகமே முதலில் நடந்தது அதன்  பின்தான் சீதை பற்றிய நினைவே வந்தது சீதையை மீட்கும்  நினைவு குறைந்து அவள் மேல் ஒரு காழ்ப்பே வரத் துவங்கியது போல் இருக்கிறது விபீஷணப்பட்டாபிஷேகம்  முடிந்தபின்னும்  தான் தவற விட்ட காதல் மனையாள் சீதையைக் காணச் செல்லவில்லை“ அனுமனை அனுப்பி சீதையை கொணரச் செய்கிறான்  அவள் வந்ததும்  கம்ராமாயணப்படி

“இப் புறத்து இன எய்துறு காலையில்
அப் புறத்ததை யுன்னி அனுமனை
துப்புறச் செய்ய வாய் மணித் தோகைபால்
செப்புறு இப்படிப் போய் எனச் செப்பினான் “

     
     (இப்பக்கத்தில் இத்தகைய செயல்கள் நிகழ்ந்தபோது, இராமன், இனி நிகழவேண்டியதை எண்ணிப் பார்த்து அனுமனை நோக்கி பவழம்  போன்ற அழகிய வாயையுடைய அழகிய மயில் போன்ற சீதையிடத்தில் நீ சென்று இங்கு நடந்தவை எல்லாம் சொல்வாயாக  என்று மொழிந்தான் )

     நல்லியல்பு கொண்டவனானால் ராமன்  அல்லவா முதலில் சீதையைக் காணச் செல்ல வேண்டும் .போகட்டும் அதன்  பின்  அனுமன்  சீதையை அழைத்து வந்தபோது பரிவிலான சொற்களால் அவளைத் தேற்றி இருக்க வேண்டாமா ஆனால் தீ உமிழும் வார்த்தைகளால் அவளைச் சுடுகிறான்
 

     சுணங்கையுடைய இரட்டையான முலைகளின்  மேற்பக்கத்தில் கண்களிலிருந்து வடித்த வருத்தத்தைத் தெரிவிப்பதான மிக்க கண்ணீராகிய ஆறு பாய , வணங்கிய இயல்புடைய மயில் போன்ற சாயலை யுடையவளும்  கற்பறம்  வாழ்வதற்கு இடமானவளுமான சீதையைப் படம்  எடுத்த பாம்பைப்போல சினந்து பார்த்து

ஊன் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட
மாண்டிலை முறை திறம்பரக்கன் மாநகர்
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம்  தீர்ந்து இவண்
மீண்டது என் நினைவு ? எனை விரும்பும் என்பதோ


     (நீதி தவறிய அரக்கனின்பெரிய இலங்கை நகரமான அங்கு  நெடுங்காலம்  வாழ்ந்து அவன்  கீழ் அடங்கி இருந்தாய் அங்கு அறு சுவை யுள்ள உணவு வகைகளை விருப்புடன்  உண்டாய் உன் நல்லொழுக்கம் பாழ்படவும்  நீ இறந்தாயில்லை .இத்தகைய நீ அச்சம் இல்லாது இங்கு இப்போது மீண்டு வந்தது எது கருதி? இராமன் என்னை விரும்புவான் என்பது நின்  எண்ணமோ)

     நான் உன்னை மீட்டது எதற்காகவென்றால்  மனைவியைக் கவர்ந்து சென்றவனைக் கொல்லவில்லை என்னும் பழிச்சொல்லுக்கு ஆளாகாமல் இருக்கவே, 

யாது யான் இயம்புவது உணர்வை ஈடு அறச்
சேதியா நின்றது உன் ஒழுக்கச் செய்தியால்
சாதியால் அன்று எனின் தக்கது ஓர் நெறி
போதியால் என்றனன் புலவர் புந்தியான்


     நான் பலவற்றைக் கூறுவது ஏன்  ?உன்  தீயொழுக்கம் என் அறிவை வலிமையற அறுக்கின்றதுஆதலால் இப்போது நீ செய்யக் கூடியதுஎன்னவென்றால் இறப்பாயாக..!அங்ஙனமின்றேல்  உனக்குத் தக்கதொரு இடத்துக்குச் செல்வாயாக, என்று ஞானிகளின் மனதில் இருப்பவனான இராமன்  சொன்னான் 

     இத்தகைய சுடு சொற்களைக் கேட்ட சீதை ஒன்றும்  செய்ய இயலாதவளாக இறக்க முடிவு செய்கிறாள்  சிதை மூட்டித் தீக்குளிக்கிறாள் புடமிட்ட பொன்னாக மீள்கிறாள். இது ஒரு முறை அல்ல மீண்டும் அயோத்தியில் யாரோ சொன்ன பேச்சுக் கேட்டு அவளைக் கானகம் அனுப்புகிறான்  இராமன்  எங்கு எதற்கு என்று தெரியாமலேயே கானகம் செல்கிறாள் 

     
     பல நாட்களுக்குப் பின் இராமனுக்கும்  உலகுக்கும்  தெரிவிக்க மீண்டும் மண்ணில் புகுகிறாள் சீதை இராமன் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டே போவான்  ஒவ்வொரு முறையும்  சீதை தன்னை நிரூபிக்க வேண்டி இருந்தது தவறு செய்பவர் தண்டனை அனுபவிக்க வேண்டும்  இலக்குவனிடம் தவறாகப் பேசியதால் இராமனைப் பிரிந்த அசோக வனத்தில் இராவணனின்கட்டுக்குள் அடங்கி தண்டனை அனுபவித்தாள் இராமனை சீதையால் தண்டிக்க முடியவில்லை ஆகவே தானே தீக்குளித்தும்  பூமியில் புதைந்தும் தண்டனை ஏற்று இராமனை சீதை மன்னித்து விட்டாள்.

37 கருத்துகள்:

  1. இராமனை சீதையால் தண்டிக்க முடியவில்லை ஆகவே தானே தீக்குளித்தும் பூமியில் புதைந்தும் தண்டனை ஏற்று இராமனை சீதை மன்னித்து விட்டாள்.
    வேதனை

    பதிலளிநீக்கு
  2. தண்டிக்காமல் தண்டித்தாள்..

    நடந்தது என்றாலும் கற்பனை என்றாலும் - நமக்கே இப்படி மனம் நோகும்போது
    ராமனுக்கு எப்படி இருந்திருக்கும்!..

    மன்னித்தல் என்பதே மிகப்பெரிய தண்டனை..

    பதிலளிநீக்கு
  3. தன் குழந்தையின் தவறுகளை தாய் மன்னிக்கிறாள். அதனை அப்போதே மறந்தும்விடுகிறாள். இது பெண்ணின் பெருமை.

    நாம் வியக்கும் உதாரண புருஷர்களிடம் இருக்கும் குறைகளைப் புறம்தள்ளி குணங்களையே கொள்ளல் வேண்டும். மனிதனாக, அரசனின் பாத்திரத்தை ஏற்றிருக்கும் ஆத்மாவின் இயல்பைச் சொல்கிறது காதை. அதில் தவறுகளும் அடக்கம்தான்.

    அபலையான சீதைக்கு இந்தக் குற்றம் நேர்ந்துவிட்டதே, பழி வந்துவிட்டதே என்று உருகும் மனிதன், தன்னைச் சுற்றியுள்ள பெண்களைப் போற்றத் தலைப்படுகிறான். அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து அனுசரணையாக இருக்க எண்ணுவான். இதுதான் காதை வெளிப்படுத்த விரும்பிய செய்திகளுள் ஒன்று. இன்றைக்கும் கஷ்டத்தில் இருப்போரை, இல்லல் அகற்றும் சுந்தரகாண்டத்தை வாசியுங்கள் என்று சொல்கிறார்களே தவிர காப்பிய நாயகனின் வலிமையைப் போற்றும் யுத்தகாண்டத்தைப் படிக்கச் சொல்வதில்லை.

    கதை முடிவு "சீதை ராமனை மன்னித்தாள்" என்று இருக்கவேண்டும். நான்கூட, "சீதாராமன்" என்ற ஆண் கதாபாத்திரத்தை வைத்து, "சீதாராமனை மன்னித்தாள்" என்று கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஶ்ரீராம் ஒத்துக்கொள்வாரா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. உயிர் நீத்து மன்னிப்பு வேதனை ஐயா.

    பதிலளிநீக்கு
  5. >>> அபலையான சீதைக்கு இந்தக் குற்றம் நேர்ந்துவிட்டதே, பழி வந்துவிட்டதே என்று உருகும் மனிதன், தன்னைச் சுற்றியுள்ள பெண்களைப் போற்றத் தலைப்படுகிறான். அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து அனுசரணையாக இருக்க எண்ணுவான்.. <<<

    நெல்லைத் தமிழன் மிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  6. ஐயா... வரலாற்றில் இருந்து எடுத்து மிக அருமையான கதையைக் கொடுத்திருக்கிறார். இராமனை சீதை மன்னித்தாள்... வார்த்தைகளால்தான் மன்னிக்கனுமா என்ன... செயலால் காட்டினாள் என்பதை அருமையாச் சொல்லியிருக்கிறார்.

    அருமை...

    பதிலளிநீக்கு
  7. மன்னித்து இருந்தாலோ அல்லது தண்டித்திருந்தாலோ சீதை பத்தினியாய் புகழப்பட்டிருக்க மாட்டாள்

    பதிலளிநீக்கு
  8. பெண்ணி்ன் பெருமையை நிலைநாட்டி விட்டாள் சீதை என்பதை அழகாக பதிவின் வாயிலாக நிருபித்துள்ளதற்கு மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  9. பெண் இப்படித்தான் தன்னை மாய்த்து நிரூபிக்க வேண்டும் என்பது ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு :)

    பதிலளிநீக்கு
  10. கருத்துப் பகிர்வுக்கு நன்றி
    Tamil News

    பதிலளிநீக்கு
  11. ஒரு கம்பராமாயணப் பிரசங்கம் கேட்டதுபோல இருந்தது ஜிஎம்பி ஐயாவின் ... சீதை ராமனை மன்னிச்ச விஷயம்.

    பதிலளிநீக்கு
  12. விட்டால், கம்பராமாயணத்திற்கு புதிய உரை எழுதிவிடுவார் ஜிஎம்பி என்று தோன்றுகிறது. கதை கேட்டால் கட்டுரை தந்திருக்கிறார் என்று சொன்னால் கோபிப்பாரோ?

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  13. ஜிஎம்பி சார், கதையில் வரும் சில வாதங்கள் எனக்கும் பல தடவை தோன்றியதுதான்...அது உங்கள் தனிப்பட்டக் கருத்து...என்றாலும் சார் இது கதை என்பதிலிருந்து சற்று விலகி கொஞ்சம் கட்டுரை போன்று ஆனதோ என்று தோன்றுகிறது. ஒரு கதையை விமர்சனம் செய்யும் அளவிற்கு உங்களளவு எனக்குக் கதை எழுதும் அனுபவ அறிவும், வயதும் கிடையாதுதான். இருந்தாலும் கொஞ்சம் உரையாடல் பாணியில், பாடல்கள் சொல்லாமல், எழுதியிருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்குமோ என்று தோன்றியது சார். தவறாகச் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. மிக அருமையாக விளங்க வைத்திருக்கிறீர்கள் ..ஆனால் பாவம் சீதை போன்றோர் மன்னிப்பதாக நினைத்து தங்களை மாய்த்து ராமன் போன்றோரை காவியத்தலைவனாக்கி கொண்டிருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  15. ///கதை முடிவு "சீதை ராமனை மன்னித்தாள்" என்று இருக்கவேண்டும். நான்கூட, "சீதாராமன்" என்ற ஆண் கதாபாத்திரத்தை வைத்து, "சீதாராமனை மன்னித்தாள்" என்று கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஶ்ரீராம் ஒத்துக்கொள்வாரா என்று தெரியவில்லை.///

    நோ நோஓஓஒ நோஓஓஓஒ அதெல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டார் ஸ்ரீராம்:) அப்பூடி ஒத்துக்கொள்ளோனும் எனில் முடிவில் டுவிஸ்ட்:) வச்சு எழுதோணும் நீங்க:).. ஹையோஓஒ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்:) என்னைத் தேடாதீங்கோ:).. சே..சே..சே.. வர வர என் வாயிலிருக்கும் சனிபகவானின் (ஹையோ நான் பகவான் ஜீயைச் சொல்லல்லே:)) தொல்லை தாங்க முடியல்லியே:)..

    பதிலளிநீக்கு
  16. ஆண்கதாபாத்திரம் சீதாராமனாக இருக்கட்டும்.. பெண்ணின் பெயர் சீதா ஆக்கிடுங்கோ.. நெ,த.. எப்பூடி என் ஐடியா?:) இன்னும் ஏதும் ஐடியாக்கள் தேவை எனில்.. என் எக்கவுண்டுக்குப் பணம் அனுப்பவும்.. பெயர் விபரங்களுக்கு என் செக்கரட்டறி யைத் தொடர்பு கொள்ளவும்.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)..

    பதிலளிநீக்கு
  17. ராமனை சீதை மன்னித்துவிட்டாள். ஜிஎம்பி சாரின் கதை நன்றாக இருக்கிறது.

    சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அவர்கள் எழுதிய இராமாயணத்தில் ஒரு காட்சி:-


    //"குழந்தாய் !" என்று தசரதன் சீதையை நோக்கி, "ஏன் மகனை மன்னிப்பாய் ! உலக தருமத்தைக் காப்பதற்காக அவன் செய்த குற்றத்தை பொறுத்துக் கொள்வாய் உனக்கு மங்களம் !" என்றான்

    விவேகம் படைத்த தலைவர்கள் பாமரர்களைத் திருப்திசெய்ய அவர்களுடைய அதிவேகத்துக்கு இணங்கி நடப்பதை இந்தக் காலத்திலும் பார்க்கிறோம் அல்லவா? ராமச்சந்திரனுடைய காலத்திலும் இந்தக் குறை இருந்தாகக் காணப்படுகிறது. இதைதான் தசரதன் எடுத்துக்காட்டி "ஏன் மகனை மன்னிப்பாயாக குழந்தாய் " என்று சீதையைக் கேட்டுக் கொண்டான் . ?/
    சீதையும் இராமனை மன்னித்து விட்டாள்.

    பதிலளிநீக்கு
  18. என் மகனை மன்னிப்பாய் என்று வரவேண்டும் ஏன் என்று தவறுதலாய் வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  19. ஜி எம் பி ஸார் பயணத்தில் இருப்பதால் பின்னர் வந்து பதில் அளிப்பார் என்று நம்புகிறேன். நன்றி நண்பர்களே... இன்னும் ஜீவி ஸார் பின்னூட்டம் காணோம். இப்போதெல்லாம் வைகோ ஸார் வேறு வருவதில்லை!

    பதிலளிநீக்கு
  20. புரிதலில் நிறையத் தவறுகள்! உதாரணமாக விபீஷணன் ராவணனின் பதவிக்கு ஆசைப்பட்டு ராமனிடம் வரவில்லை. சொல்லப் போனால் ராவணன் பக்கம் போரிட்ட கும்பகர்ணன் கூட ராவணனுக்கு நல்ல புத்தி தான் சொல்கிறான். என்றாலும் அண்ணன் என்ற பாசத்தால் அவன் பக்கம் நின்று போரிடுகிறான். அவ்வளவு ஏன் ராவணனின் பட்டமஹிஷியும் பஞ்ச கன்னியரில் ஒருத்தியுமான மண்டோதரி கூடத் தன் கணவன் ராவணனுக்கு நல்ல புத்தி தான் சொல்கிறாள். சீதையும் நல்ல புத்தி தான்ராவணனுக்குச் சொல்கிறாள். மேலோட்டமாய்ப் படித்து விட்டுக் குறைகளை மட்டுமே பெரிது படுத்திச் சொல்லக் கூடாது. மேலும் ராமாயணத்தில் ராமனை ஓர் கடவுளாகக் காட்டி இருப்பது கம்பரே! வால்மீகி அப்படிச் சொல்லவில்லை.

    பதிலளிநீக்கு
  21. தகப்பன் தசரதனுக்கு ராமன் ஈமச் சடங்குகள் செய்யவில்லை என்றிருக்கிறார். இல்லை. தகப்பன் இறந்தது ராமனுக்கு முதலில் எப்படித் தெரியும்? பின்னர் தன்னை அழைக்க வந்த பரதன் மூலம் தெரிந்ததும் ராமன் உடனடியாகக் காட்டிலேயே ஈமச்சடங்குகள் செய்கிறான். இது குறித்து வால்மீகியில் வருகிறது.

    பதிலளிநீக்கு
  22. "Bring the crushed pulp of Ingudi Tree and bring a piece of bark for being wrapped about my loins and another for being used as my loins and another for being used as an upper garment, so that we may proceed to offer libations of water for our magnanimous father."

    Then, their faithful companion Sumantra versed in the spiritual science, endowed with great intelligence, kind, self-controlled and glorious, and deeply devoted to Rama, consoling him and his brothers, took Rama by the hand and helped him descend to the auspicious River Mandakini.

    he illustrious Rama and others painfully reached the River Mandakini, that stream of sacred fords, the enchanting one always covered with flowers, coming to a blessed ford, free from mud and offered the lustrual water to the king, saying "Father! May this prove agreeable to you."

    Holding together in the form of a hollow his palms full of water and turning his face turned towards the southern quarter and weeping the great prince pronounced the traditional words saying:
    O, Tiger among men! May this water without taint and incorruptible at the moment that I offer it to you, reach you in the region of your ancestors where you are."

    O, Tiger among men! May this water without taint and incorruptible at the moment that I offer it to you, reach you in the region of your ancestors where you are."



    பதிலளிநீக்கு
  23. O, Tiger among men! May this water without taint and incorruptible at the moment that I offer it to you, reach you in the region of your ancestors where you are."

    Thereafter, the glorious Rama, resending the bank of Mandakini River along with his brothers, offered balls of food to his father.

    Rama placed the pulp of the Ingudi tree mixed with the pulp of plums on a mat of Kusa grass and overcome with sadness, weeping, spoke the following words:

    O, Great King! Be pleased to partake of this, which we eat for, that which man eats, is also consumed by his gods."

    பதிலளிநீக்கு
  24. ராமன் ஓர் அரசன். அவன் அரசனாகத் தான் தன்னுடைய செயல்களைச் செய்து வந்திருக்கிறான். அரசனுக்கு முதலில் குடிமக்களே முக்கியம்! அதன் பின்னரே மற்றவர்! தான் செய்து கொடுத்த சத்தியத்துக்காக உடன்பிறந்த சகோதரன் லக்ஷ்மணனைக் கூடத் தான் ராமன் தியாகம் செய்கிறான். சீதையைத் துறந்த பின்னர் பட்ட மஹிஷி என்னும் பதவி காலியாகத் தான் இருந்திருக்கிறது. அந்த இடத்துக்கு ராமன் யாரையும் கொண்டு வரவில்லை. இந்தக் காலத்தில் கூட சமூகம் என்ன சொல்லுமோ, சுற்றத்தார், உற்றத்தார் என்ன சொல்வங்களோ என்று யோசிக்கும்போது ராமாயண காலத்தில் நாட்டில் பேசிக் கொள்வதால் தன் மனைவியைக் காட்டுக்கு அனுப்பினான் ராமன். தன் சொந்த விருப்பு, வெறுப்பைத் துறந்து நாட்டு மக்களின் கருத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான். ஆங்கிலத்தில் "சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்!" என்று சொல்வதைப் பாராட்டும் நம்மால் அதே போல் "ராமனின் மனைவியும் இருக்க வேண்டும்!" என்று ராமன் நினைப்பதைத் தவறாக இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  25. இப்படிச் சொல்பவர்கள் எல்லோருமே ராமாயணத்தையோ, ராமனையோ, சீதையையோ நம்பாதவர்கள் என்பது தான் வேடிக்கை! பலருக்கும் ராமாயணம் என்ற ஒன்று நடந்திருப்பதாகவே ஏற்க முடியவில்லை. ஆனால் இதை மட்டும் குற்றம் சொல்வார்கள். அவர்கள் பார்வையில் நடக்காத ஒன்றில் என்ன சொல்லி இருந்தால் என்ன? அதை அப்படியே ஏற்கும் மனப்பக்குவம் வேண்டாமா?

    பதிலளிநீக்கு
  26. கீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டங்களை ரசித்தேன்.

    இது கதை என்னும் வடிவத்தில் அடங்கவில்லை என்பதே என் தாழ்மையான அபிப்பிராயமும்.

    GMB ஸாரின் கருத்துகளையும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  27. பெண்கள் தியாகம் செய்தே அவர்களின் பெயர்களை இன்றுவரை நிலை நிறுத்த,என்றும் நிலைக்க வழி வகுத்தனர். ஒழுக்கங்கள் கடை பிடிக்க இதெல்லாம் அவசியமாக இருந்தது. அதனால் சீதை ராமனை மன்னித்தாள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  28. அருமையான எண்ணங்கள்
    சிறப்பான புனைவு

    பதிலளிநீக்கு
  29. வருகை தந்து வாசித்து பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றிகள் மறுமொழியாக ஒரு பதிவு என் வலைத்தளத்தில்

    பதிலளிநீக்கு
  30. சாமர்த்தியமாகக் கையாண்டிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  31. கீதா சாம்பசிவம் அவர்களின் கருத்துக்கள் சுவை (இணையம் வராமல் தொலைதவட்ருள் ஒன்று).
    இவர் பார்வையில் ராமன் தவறு செய்யவே முடியாது. செய்ய முடிந்தால் தானே மன்னிப்பு கின்னிப்பு எல்லாம்?

    பதிலளிநீக்கு
  32. @அப்பாதுரை, நீண்ட மாதங்கள்/வருடம்? பின்னர் மீள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. வால்மீகி எங்கேயுமே ராமனை ஓர் கடவுளாகச் சித்திரிக்கவில்லை. சாதாரண மனிதனாகவும் ஆசாபாசங்கள் நிறைந்தவனாகவுமே சித்திரித்திருக்கிறார். அதனால் தான் சீதையைத் தேடிப் புலம்பி அலைந்ததும், சீதை கிடைத்தவுடன் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதையும் உள்ளது உள்ளபடியே எழுதி இருக்கிறார். ஆனால் எங்கேயும் ராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதாக இல்லை. கம்பரும் அப்படி எழுதியதாகத் தெரியவில்லை. துளசி ராவணனோடு இருந்ததே சீதையின் மாயாத் தோற்றம் என்று சொல்லி விடுகிறார். ஆகக் காட்டுக்குப் போகச் சொன்னது தான் ராமன் செய்த தவறு, அதையும் ஓர் அரசனாக அவன் எடுத்த முடிவு என்றே கொள்ளலாம். இந்தக் காலத்து ஆட்சியாளர்களைப் போல் ஒரு மனைவி போனால் இன்னொருத்தி என்று இருக்கவில்லை. அதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். :))))) மற்றபடி வழக்கம் போல் உங்கள் பாராட்டுக்கு (!!!!!!!!) நன்றி. :)))))) நம்ம பக்கமும் வாங்க! இப்போ யு.எஸ்ஸில் தான் இருக்கேன். :))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!