செவ்வாய், 4 ஏப்ரல், 2017

கேட்டு வாங்கிப்போடும் கதை :: ஆஹா என்ன பொருத்தம் - வை. கோபாலகிருஷ்ணன்




     கிட்டத்தட்ட ஒன்றேகால் வருடம்.  




ஏதோ நினைத்து ஆரம்பித்து எப்படியோ தொடர்ந்து பதிவுலக நண்பர்களிடமிருந்து கேட்டு வாங்கிப்போட்டு கதை வெளியிடும் இந்தத் தொடர் பகுதி தொடங்கி ஒன்றேகால் வருடம் ஆகிறது. 


      முடிந்த வரை பழகிய பதிவர்கள் அனைவரிடமும் கேட்டு வாங்கிப் போட்டாகி விட்டது.  நணபர்கள் அனைவரும் நட்புடன் ஒத்துழைப்பு நல்கினர்.  அவர்களுக்கெல்லாம் எங்கள் நன்றி.  சில நண்பர்களால் அனுப்ப முடியாத சூழல்.  அனுப்புகிறேன் என்று சொல்லியும் அனுப்ப முடியாத சூழல்.   என்னைப்போலவே அவர்களுக்கும் அந்த வருத்தம் இருக்கும்.
     ராமலக்ஷ்மி, சாந்தி மாரியப்பன், ஏஞ்சல் போன்ற தோழமைகள் புதிய பதிவர்களின் தளங்களைக் குறிப்பிட்டு அவர்களிடம் கேட்டுப்பார்க்கலாம் என்று சொல்லி உதவியதையும் மறக்க முடியாது.


      இந்நிலையில் ஒரு வார்த்தையைக் கொடுத்து அந்த வார்த்தையில் கதையை முடித்து அனுப்புங்கள் என்று சில நண்பர்களைக் கேட்டபின் உடனே, முதலில் அனுப்பி வைத்தவர் நண்பர் வைகோ அவர்கள்.  அவரின் கதை இன்று இடம் பெறுகிறது.  இதே வரியில் முடியும் மற்ற நண்பர்களின் கதைகளும் தொடர்ந்து வெளிவரும்.


     நான் குறிப்பிட்ட அந்த கடைசி வரி  "சீதை ராமனை மன்னித்தாள்".  அது சில வருடங்களுக்கு முன்னால் எங்கள் குடும்பக் குழுமத்தில் இந்த வரியைக்கொடுத்து ஒரு பக்கக் கதையாக எழுத முடியுமா என்று என் அப்பா கேட்கச் சொன்ன வார்த்தை.   அப்போது நான் அதைச் செய்ய முடியவில்லை.  


     இதோ, 2017 ஏப்ரல் வந்து விட்டது.  இந்த மாதம் 22 ஆம் தேதி வந்தால் என் தந்தை மறைந்து ஓராண்டு ஆகப் போகிறது.   இப்போது அவர் சொன்ன அந்த வார்த்தையைச் சொல்லி நண்பர்களிடம் 'கேட்டு வாங்கி'ப் போடுகிறேன்.  ஆதரவளிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


     இந்தத் தொடரின் முதல் கதையை வெகு விரைவாக அனுப்பி வைத்துத் தொடங்கியிருப்பவர் நம் அருமைப் பதிவர் பிரபல வைகோ ஸார் அவர்கள்.  கீழே அவரின் (சின்னஞ்சிறு) படைப்பு வெளியிடப்படுகிறது.
 



===================================================================

’ஆஹா என்னப் பொருத்தம் ..... 
 நமக்குள் இந்தப் பொருத்தம்...’
வை கோபாலகிருஷ்ணன் 


   

இருவருக்கும் மிகவும் லேட் மேரேஜ் தான். 



இருப்பினும் ராமன்-சீதை என்ற பெயர் பொருத்தமும், ஜோடிப்பொருத்தமும் மிகவும் அருமையாகத்தான் உள்ளது என ஆசீர்வதிக்க வந்தவர்கள் அனைவரும், தங்களுக்குள் பேசிக்கொண்டபடியே, மேடையேறி, மலர்களையும் அக்ஷதையையும் தூவிவிட்டு, அடுத்தபடியாக டிஃபன், காஃபி, சாப்பாடு என முடித்துக்கொண்டு, முஹூர்த்தப்பைகளுடன் புறப்பட்டு விட்டார்கள். 



முதலிரவு நேரம் நெருங்க நெருங்க ராமனுக்கு மனதுக்குள் உள்ள படபடப்பும் பயமும் மிகவும் அதிகரித்து விட்டது. 


தனக்குள்ள இந்தக் குறையை அவளிடம் இன்றே சொல்லி விடுவதா அல்லது மெதுவாகப் பிறகு சொல்லிக்கொள்ளலாமா அல்லது கடைசிவரை சொல்லாமலேயே அப்படியே விட்டு விடுவதா என்ற கவலையிலேயே ஒரேயடியாக மூழ்கிப் போயிருந்தான், ராமன். 

பத்தாண்டுகளுக்கு முன்பு ஒருநாள் எதிர்பாராத சாலை விபத்தில் அவன் மாட்டிக்கொண்டு பிழைத்ததில், அவனுக்குப் படக்கூடாத இடத்தில் அடி பட்டு விட்டது. 

இல்வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ, வேறு எந்தப்பிரச்சனைகளும் இல்லாவிட்டாலும்கூட, மிக முக்கியமான நரம்பு ஒன்று கட் ஆகி விட்டதால், ராமனுக்கு வாரிசு உருவாக மட்டும் வாய்ப்பே இல்லை எனச் சொல்லிவிட்டார்கள், மருத்துவர்கள்.

இதனைப்பற்றி அப்படியே உள்ளது உள்ளபடி, தன் புது மனைவியிடம், முதல் நாள் இரவே, பக்குவமாகச் சொல்லியும் விட்டான் சத்திய சந்தனான அந்த ராமன். 



அவளுக்கும் இதுபோலவே, வெளியே சொல்லிக்கொள்ளவே முடியாத,  வேறொரு பிரச்சனை பிறவிக்கோளாறாகவே அமைந்துள்ளதாலும், அதைத் தன் வாய் விட்டு இப்போது அவரிடம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாமல், அவரே முந்திக்கொண்டு விட்டதாலும், மனசு நிம்மதி ஆனதில், ஏன் உங்களிடம் உள்ள இந்த மாபெரும் குறையை என்னிடம் முன் கூட்டியே சொல்லாமல் மறைத்து விட்டீர்கள் என்று அழுது புலம்பி சண்டை ஏதும் போடாமல் அந்த, சீதை ராமனை மன்னித்து விட்டாள்.    

oooooooooooo




...........................................


  


 

84 கருத்துகள்:

  1. ஆஹா புதுமையான மன்னிப்பு இவளே சீதை.

    பதிலளிநீக்கு
  2. நல்ல வேளை மணமகளுக்கும் குறை இருந்ததால் பிரச்சனை இல்லாமல் போனது.
    கதை சார் கொடுக்கும் பின்னூட்டத்தை விட சின்னதாக இருப்பது வியப்பை தருகிறது.
    புதுமையான முயற்சி வாழ்த்துக்கள் எங்கள் Blog ஸ்ரீராம்.
    சாருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. இவ்வளவு நுட்பமாக....மிகவும் அருமை..கதாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி. முயற்சி சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. சாதாரணமாக யாருக்கும் இப்படி சிந்திக்கத் தோன்றாது..
    வைகோ அண்ணாவின் கைவண்ணம் அருமை!..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  5. different thinking!!
    //கதை சார் கொடுக்கும் பின்னூட்டத்தை விட சின்னதாக இருப்பது வியப்பை தருகிறது.// :-))

    பதிலளிநீக்கு
  6. வித்தியாசமான கற்பனை.. சிக்கலான பிரச்சனை.. தீர்வு சுபமாய்.. திருமணம் முடிந்தபிறகு சொன்னால் மனைவி தன்னைவிட்டுப் போய்விடமாட்டாள் என்ற ராமனின் சாமர்த்தியம்.. பழியைத் தன்பக்கம் திருப்பிவிடாமல் எச்சரிக்கையாய் வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ளும் சீதையின் சாமர்த்தியம்.. என இரு சாமர்த்தியசாலிகளும் இணைபிரியாது வாழட்டும். நச்சென்று அரை பக்கத்தில் கதை முடித்த சாமர்த்தியம் கோபு சாருக்கு.. உடனடியாக கதையனுப்பியமைக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. இந்தக் கதையில் வரும் அந்த சீதை
    ராமனை மன்னித்து இருக்கலாம்.

    ஆனால் இந்த எழுத்தாளர் கோபு
    கதை வெளியிட்டாளர் ஸ்ரீராமை
    மன்னிப்பதாகவே இல்லை.

    இதே கதையின் சற்றே மெருகூட்டப்பட்ட பகுதியை
    வெளியிடுமாறு கரடியாகக் கத்தியும்,
    படித்துப் படித்துச் சொல்லியும்,
    காதில் வாங்கிக்கொள்ளாமல்
    பழைய பகுதியையே வெளியிட்டுள்ளார். :(

    இதனால் ......

    ’ஒவ்வொருவருக்கும்
    கோபு கொடுக்கும்
    பின்னூட்டத்தைவிட
    மிகச் சிறிய கதை இது’

    என்ற பொல்லாப்பு மட்டுமே பரிசாகக்
    கிடைத்துள்ளது கோபுவுக்கு.

    ஸ்ரீராமிடமிருந்து எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட, அதே மெயிலுக்கு என் ரிப்ளையாக அடுத்த ஐந்தாவது நிமிடமே, மின்னல் வேகத்தில் எழுதி அனுப்பி வைக்கப்பட்டது இந்த மிகச்சிறிய கதை என்பதை உங்கள் அனைவருக்கும் இங்கு நான் இப்போது தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  8. கோபு சார், போஸ்ட் கார்ட் கதை நல்லா இருக்கு. என்னது... இல்வாழ்க்கையின் அடிப்படையே ஆட்டம் காணுமளவு 'கரு' தோன்றியுள்ளது? எங்கள் பிளாக் ஸ்ரீராம், அவர் தந்தையை நினைவுகூர்ந்து, முதலாவதாக உங்கள் படைப்பை வெளியிட்டுள்ளார்... பார்க்கலாம் எப்படி வித்தியாசமாக ஒவ்வொரு படைப்பாளியும் சிந்திக்கிறார் என்று.

    பதிலளிநீக்கு
  9. சீதையின் குறை தெரியவரும்போது.......!

    பதிலளிநீக்கு
  10. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    தமிழ் செய்தி

    பதிலளிநீக்கு
  11. ஆஹா ஒன்றேகால் வருடத்தின் பின்பு கதையின் வடிவம் அப்டேட்பண்ணப்பட்டுவிட்டதோ?, ஒரு பக்க கதை என்பது எல்லோராலும் சுவாரஸ்யமாக எழுத முடியாத ஒன்று.

    ஆஹா அப்போ இனி ஒவ்வொரு செவ்வாயிலும் ராமனும் சீதையும் வருவார்கள், அதில் சீதை ராமனை மன்னிப்பார்ர்ர் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  12. சகோ ஸ்ரீராமின் அப்பா வின் நினைவு நாள் ஏப்ரல் 22 ஆ? எங்கள் அப்பா நம்மை விட்டுப் போனது ஏப்ரல் 17, கிட்டத்தட்ட தினமும் கனவில் வருவார்... மனம் இன்னும் ஏற்குதில்லை அவரது இழப்பை... சரி விடுங்கோ என்ன பண்ணுவது, நாமெல்லாம் எப்பவும் இருக்கவா போறோம்ம்...

    நான் கதை படிச்சிட்டு வாறேன்.

    பதிலளிநீக்கு
  13. கோபு அண்ணனின் கதை என்றதும், ஸ்ரோங் ரீயும் ஊத்தி பிரெட் ரோஸ்ட் உம் போட்டுக்கொண்டு வந்தேன் படிக்க... இப்பூடிப் பொசுக்கென முடிப்பார் என நான் எதிர்பார்க்கவே இல்லை.:).

    கோபு அண்ணனால இவ்ளோ குட்டியா கொமெண்ட்கூடப் போட முடியாதே இப்போ எப்படிக் கதையை முடிச்சார் ஹா ஹா ஹா.

    சோட் அண்ட் சுவீட் கதைகள்தான் எனக்கும் படிக்க பிடிக்கும். மிக அருமையாக முடிச்சிட்டீங்க.

    பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகிட்டுது சீதாவின் கதை:). பாவம் ராமன் அவசரப்பட்டு மாட்டுப்பட்டிட்டார், ஏதோ தியாகம் செய்கிறாவாமாம்ம்ம்ம்ம் ராமனை மன்னிச்சுட்டா ஹா ஹா ஹா.

    உண்மையில் நான் நம்பாமல் கீழே எல்லாம் மூவ் பண்ணி தேடினேன் கதை இன்னும் இருக்கோ என ஹா ஹா ஹா .

    பதிலளிநீக்கு
  14. இவ்வளவு எளிதாக நாம் சொன்ன குறையை ஏற்றுக்கொண்டு ஒரு ரியாக்க்ஷனும் முகத்தில் கூட காட்டவில்லையே எவ்வளவு சாந்தமான பெண் என்று, சீதைராமனை இப்படிதான் மன்னித்திருப்பாள், என்று தோன்றியது. வை.கோஸார்கதை,ஸ்ரீராம் அவர்களின் தேர்வு சொல்ல வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  15. இரத்தின சுருக்கமான கதையில்...மனம் விட்டு பேசுதலின் சிறப்பு காணப்பட்டது வாழ்த்துகளும் பாராட்டுகளும் பதிவிற்கும் எழுத்தாளருக்கும்

    பதிலளிநீக்கு
  16. //..... ஆனால் இந்த எழுத்தாளர் கோபு
    கதை வெளியிட்டாளர் ஸ்ரீராமை
    மன்னிப்பதாகவே இல்லை.

    இதே கதையின் சற்றே மெருகூட்டப்பட்ட பகுதியை
    வெளியிடுமாறு கரடியாகக் கத்தியும்,
    படித்துப் படித்துச் சொல்லியும்,
    காதில் வாங்கிக்கொள்ளாமல்
    பழைய பகுதியையே வெளியிட்டுள்ளார்....... :( //

    ஹா.... ஹா... ஹா.. வைகோ ஸார்! மன்னிச்சுக்கோங்க... இதோ, இப்போ மாற்றி நீங்கள் அனுப்பிய மெருகூட்டப்பட்ட காபியை இங்கு ஒட்டி விட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதோ, இப்போ மாற்றி நீங்கள் அனுப்பிய மெருகூட்டப்பட்ட காபியை இங்கு ஒட்டி விட்டேன்!//
      எங்கே?

      நீக்கு
  17. சுருக்கமான கதை! எப்படியோ நல்ல படியாக வாழ்க்கை அமைந்துவிட்டால் சரி.

    புதிய முயற்சிகள் தொடரட்டும்.....

    பதிலளிநீக்கு
  18. ரத்னச்சுருக்கமான கதை.
    நல்ல முடிவு.

    பதிலளிநீக்கு
  19. ஒரு வரி ஒரே பக்கத்தில் ..வாவ் !!நல்ல இருக்கே ..உங்கள் தந்தை தேர்ந்தெடுத்த ஒரு வரியில் உதிக்கப்போகும் பிறரது கதைகளை வாசிக்க ஆவலாக இருக்கு .
    அதற்குள் ஓராண்டு ஆகிடுச்சா .. என் தந்தையும் ஏப்ரல் தான் :(

    நம்பினால் நம்புங்கள் இன்னிக்கு காலை நான் கேட்டுவாங்கிப்போடும் கதை பகுதி பற்றி யோசித்து கொண்டே எழும்பினேன் ஆச்சர்யம் இன்று உங்கள் பதிவு அதைப்பற்றி

    பதிலளிநீக்கு
  20. ஹாஹாஹா கதையும் பின்னூட்டங்களும் ஜோர் ஜோர். வெகு நாளைக்குப் பிறகு பின்னூட்டங்கள் படித்துச் சிரித்தேன். கோபு சார் நாங்க உங்க மேலே வைச்சிருக்கிற நம்பிக்கை அப்பிடி. மெய்யாலுமே ஷார்ட் அண்ட் ஸ்வீட் கதைதான். சொன்னவுடன் எழுதி அனுப்பியது பிறவி எழுத்தாளருக்கே வாய்க்கும். இதுல பொல்லாப்பு எங்கே வந்தது. எல்லாமே பாராட்டுத்தான். :) அன்பும் வாழ்த்துகளும் சார் .. இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
  21. சிறுகதையாக இருந்தாலும் நல்லா இருக்கு.. எனக்கென்னமோ ராமன் மட்டுமே இக்கதையில் உயர்வாக தெரிகிறார் ..உண்மையை மறைத்த சீதை மன்னிப்பது என்பது என்னால் ஏற்க முடியவில்லை ..கதை மாந்தரை கடவுளராகவே நான் வரிந்து பார்த்ததால் இந்த மாதிரி தோன்றியதோ எனக்கு

    பதிலளிநீக்கு
  22. ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!

    இன்று ’ஸ்ரீராம நவமி’ யன்று என்னுடைய இந்தக்குட்டியூண்டு கதையை தங்களின் தந்தையாரை நினைத்துத் தாங்கள் வெளியிட்டுள்ளது, எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது.

    தாங்கள் பெயரவில் ஸ்ரீராமன்.

    நான் பெயரளவில் ஸ்ரீ கிருஷ்ணன்.

    என் நக்ஷத்திரமும், பிரபு ஸ்ரீராமனின் நக்ஷத்திரமும் புனர்பூசம் மட்டுமே.

    இன்றைய 04.04.2017 செவ்வாய்க்கிழமை வந்துள்ள நக்ஷத்திரமும் புனர்பூசமே.

    ஸ்ரீ கிருஷ்ணனுக்கான அஷ்டமியும்
    ஸ்ரீ ராமனுக்கான நவமியும்
    இன்று ஒரே நாளில் சேர்ந்து வந்துள்ளது.

    ‘ஆஹா .. என்னப் பொருத்தம் .... நமக்குள் இந்தப் பொருத்தம்’ என்ற தலைப்பும் ஜோராகவே அமைந்துவிட்டது. :)

    >>>>>

    பதிலளிநீக்கு
  23. புனர்பூசத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ ராமபிரான் போல ஒழுங்கானவர்களாகவும், அதே ஸ்ரீ இராமபிரான்போல வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுபவர்களாகவும் இருப்பார்கள் எனப் பொதுவாகச் சொல்லுவார்கள். சத்தியமாக நடந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் வாழ்க்கையில் வரத்தான் செய்யும்.

    எனக்குள் எவ்வளவு கஷ்டங்கள் இருப்பினும், என் பெயரில் ஸ்ரீ கிருஷ்ணன் இருப்பதால், எல்லோரிடமும் நானும் ஜாலியாகப் பழகிக்கொண்டு, அனைவருக்கும் என் மீது ஏதோவொரு பிரேம பக்தி ஏற்படுமாறு, ஸ்ரீ கிருஷ்ணன் போலவே நடந்துகொண்டு வருகிறேன். :)

    >>>>>

    பதிலளிநீக்கு
  24. ஸ்ரீ கிருஷ்ணனின் பால்ய லீலைகள் போலவே தங்களை வம்பிழுத்து மேலே ஒரு கமெண்ட் கொடுத்தும் விட்டேன்.

    தாங்கள் ஏற்கனவே வெளியிட்ட என் கதைக்கும் இப்போது வெளியிட்டுள்ள கதைக்கும் ஒன்றும் பெரிய வித்யாசங்களே இல்லை என்பதை நானும் அறிவேன்.

    ஏனோ நம் ஸ்ரீராம் தானே என ஓர் உரிமை எடுத்துக்கொண்டு, அதுபோல உங்களைக் கொஞ்சம் வம்பிழுத்துள்ளேன்.

    மேலும் என் அந்தப் பின்னூட்டம் இந்தக் கதைக்குப் பொருத்தமானதோர் (OPT) நகைச்சுவையாகவும் அமைந்துள்ளது, பாருங்கோ. அதனால் மட்டுமே அவ்வாறு எழுதினேன்.

    இதற்கெல்லாம் ’மன்னிப்பு’ என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் நமக்குள் எதற்கு ஸ்ரீராம்? அதனால் உங்களை என்னால் மன்னிக்கவே முடியாது :)))))

    >>>>>

    பதிலளிநீக்கு
  25. என் தகப்பனார் காலமானதும் ஓர் சித்திரை மாதம், சித்ரா பெளர்ணமி தாண்டி ஐந்தாம் நாள். சித்திரை - கிருஷ்ணபக்ஷ - பஞ்சமி.

    இந்த ஆண்டு அது இந்த மாதம் 16.04.2017 அன்று ஸ்ராத்தமாக வருகிறது. அவர் காலமாகும் போது என் வயது 24-25 மட்டுமே.

    விளையாட்டுப்போல பல வருடங்கள் ஓடிவிட்டன. எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் நம் அப்பா-அம்மாவை நம்மால் மறக்க முடியாதுதான்.

    இன்று நம்மால் இந்த உலகில் வாங்க முடியாததோர் பொருள் உண்டு என்றால் அது நம் அம்மாவும் அப்பாவும்தான்.

    மற்ற அனைத்தையும் இன்று நாம் காசு கொடுத்து மிகச்சுலபமாக வாங்கி விட முடியும்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  26. என்னிடமிருந்து கேட்டு வாங்கியதோர் குட்டியூண்டு கதையை இந்தத் தங்களின் புதிய தொடரினில் முதல் கதையாக வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  27. கோமதி அரசு said...

    //கதை சார் கொடுக்கும் பின்னூட்டத்தை விட சின்னதாக இருப்பது வியப்பை தருகிறது.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா. மிக்க நன்றி மேடம். இந்தக் குட்டியூண்டு கதை பிறந்ததற்குக் காரணமான அது ஒரு மிகப் பெரிய கதை. இப்போது இங்கு வேண்டாம்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  28. Dr B Jambulingam said...

    //இவ்வளவு நுட்பமாக....மிகவும் அருமை.. கதாசிரியருக்கு பாராட்டுகள்.//

    நுட்பத்தை உணர்ந்து நுட்பமாகவும், அருமையாகவும், பாராட்டிச் சொல்லியுள்ள முனைவருக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  29. துரை செல்வராஜூ said...

    //சாதாரணமாக யாருக்கும் இப்படி சிந்திக்கத் தோன்றாது.. வைகோ அண்ணாவின் கைவண்ணம் அருமை!..//

    என் சிந்தனையின் கைவண்ணத்தை அருமையாக எடுத்துச் சொல்லியுள்ள என் அன்பு பிரதருக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  30. middleclassmadhavi said...

    //different thinking!!// என different ஆகச் சொல்லியுள்ளதற்கும், திருமதி. கோமதி அரசு அவர்களின் வரிகளைப் பாராட்டியுள்ளதற்கும் என் நன்றிகள், MCM Madam.

    பதிலளிநீக்கு
  31. நன்றி வைகோ ஸார். நானும் புனர்பூசம்தான்! என் தந்தை மறைந்தது சித்ரா பௌர்ணமி அன்று. அதாவது மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கிய நாள். அவர் மறைந்ததும் மதுரையில்தான்.

    //ஸ்ரீ கிருஷ்ணனுக்கான அஷ்டமியும்
    ஸ்ரீ ராமனுக்கான நவமியும்
    இன்று ஒரே நாளில் சேர்ந்து வந்துள்ளது.//

    அடடே... ஆமாம். பொருத்தம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ..ஹே ராம்....ஸ்ரீராம்..ஹிஹிஹி. இஒன்னுமில்ல நீங்களும் புனர்பூசம் அப்டின்னாதுதான்.....

      கீதா

      நீக்கு
  32. நன்றி வைகோ ஸார்.

    //புனர்பூசத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ ராமபிரான் போல ஒழுங்கானவர்களாகவும், அதே ஸ்ரீ இராமபிரான்போல வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுபவர்களாகவும் இருப்பார்கள் எனப் பொதுவாகச் சொல்லுவார்கள். சத்தியமாக நடந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் வாழ்க்கையில் வரத்தான் செய்யும்.//

    இருக்கலாம். சோதனைகள் இல்லாவிட்டாலும் போரடித்து விடாதா என்ன! :))

    பதிலளிநீக்கு
  33. நன்றி வைகோ ஸார்.

    //ஏனோ நம் ஸ்ரீராம் தானே என ஓர் உரிமை எடுத்துக்கொண்டு, அதுபோல உங்களைக் கொஞ்சம் வம்பிழுத்துள்ளேன். //

    ஹா.... ஹா... ஹா... மகிழ்ச்சி ஸார்.

    பதிலளிநீக்கு
  34. நன்றி வைகோ ஸார்.

    //இதற்கெல்லாம் ’மன்னிப்பு’ என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் நமக்குள் எதற்கு ஸ்ரீராம்? அதனால் உங்களை என்னால் மன்னிக்கவே முடியாது :)))))//

    ஹா.... ஹா... ஹா... நமக்குள் இந்த பந்தம் என்றும் தொடரட்டும் ஸார்.

    பதிலளிநீக்கு
  35. நன்றி வைகோ ஸார்.

    //என்னிடமிருந்து கேட்டு வாங்கியதோர் குட்டியூண்டு கதையை இந்தத் தங்களின் புதிய தொடரினில் முதல் கதையாக வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம்.//

    உங்களிடமிருந்து தொடங்குவதில் எனக்கும் மகிழ்ச்சியே ஸார். "கேட்டு வாங்கிப் போடும் கதை"ப் பகுதி தொடங்கியது ஜீவி ஸாரின் கதையுடன் என்பது உங்களுக்கும் நினைவிருக்கும். அவர் கதை என்று நினைத்து பழைய ஆனந்த விகடனில் வந்த ஒரு கதையை நான் எடுத்துக் போடப்போக, அது அவர் கதை இல்லை என்று தெரிந்து பின்னர் அவரிடமிருந்து ஒரு கதையை கேட்டு வாங்கிப் போட்டதில்தான் இந்த "மெகா ப்ராஜெக்ட்" ( ! ) தொடங்கியது. நண்பர்களின் ஆதரவுடனும் உங்களை போன்ற மூத்த பதிவர்களின் நல்லாசியுடனும் நல்லபடி சென்று கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  36. ஹாஹாஹா கதையும் பின்னூட்டங்களும் ஜோர் ஜோர். வெகு நாளைக்குப் பிறகு பின்னூட்டங்கள் படித்துச் சிரித்தேன். கோபு சார் நாங்க உங்க மேலே வைச்சிருக்கிற நம்பிக்கை அப்பிடி. மெய்யாலுமே ஷார்ட் அண்ட் ஸ்வீட் கதைதான். சொன்னவுடன் எழுதி அனுப்பியது பிறவி எழுத்தாளருக்கே வாய்க்கும். இதுல பொல்லாப்பு எங்கே வந்தது. எல்லாமே பாராட்டுத்தான். :) அன்பும் வாழ்த்துகளும் சார் .. இருவருக்கும்.//

    தேனம்மை நன்றி .

    மாதவி நன்றி.

    வை.கோ சார், தப்பாக நினைத்துக் கொள்ளாமல் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  37. //அது சில வருடங்களுக்கு முன்னால் எங்கள் குடும்பக் குழுமத்தில் இந்த வரியைக்கொடுத்து ஒரு பக்கக் கதையாக எழுத முடியுமா என்று என் அப்பா கேட்கச் சொன்ன வார்த்தை. அப்போது நான் அதைச் செய்ய முடியவில்லை. //


    அப்பாவின் நினைவு நாள் வருகிறதா?
    அப்பாவின் நினைவு நாளில் அப்பாவின் ஒருபக்க கதை நிறைவேறுவது மகிழ்ச்சி.
    சார் உடனே அருமையான கதை எழுதி துவக்கி வைத்து விட்டார்கள். இனி வரும் கதைகளை படிக்க ஆவலாக உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  38. கீத மஞ்சரி said...

    //வித்தியாசமான கற்பனை.. சிக்கலான பிரச்சனை.. தீர்வு சுபமாய்.. திருமணம் முடிந்தபிறகு சொன்னால் மனைவி தன்னைவிட்டுப் போய்விடமாட்டாள் என்ற ராமனின் சாமர்த்தியம்.. பழியைத் தன்பக்கம் திருப்பிவிடாமல் எச்சரிக்கையாய் வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ளும் சீதையின் சாமர்த்தியம்.. என இரு சாமர்த்தியசாலிகளும் இணைபிரியாது வாழட்டும். நச்சென்று அரை பக்கத்தில் கதை முடித்த சாமர்த்தியம் கோபு சாருக்கு.. உடனடியாக கதையனுப்பியமைக்குப் பாராட்டுகள்.//

    மிக சாமர்த்தியமாக இங்கும் யோசித்து வெகு அழகாக ‘நச்’சென்று பின்னூட்டமிட்டுள்ள நம் *விமர்சன வித்தகி* வாயால் இவைகளைக் கேட்க அடியேன் மிகவும் தன்யனானேன்.

    ‘கீதா விருது’ எனக்கே கிடைத்தது போல மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது, மேடம். :) மிக்க நன்றி.

    * https://gopu1949.blogspot.in/2014/11/part-3-of-4.html*

    பதிலளிநீக்கு
  39. வர வர... சகோ ஸ்ரீராம் , அதிரா மாதிரியே சிரிக்கப் பழகிட்டார்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹாஆஆஆஆஆஅ:)

    பதிலளிநீக்கு
  40. 'நெல்லைத் தமிழன் said...

    //கோபு சார், போஸ்ட் கார்ட் கதை நல்லா இருக்கு.//

    மிக்க மகிழ்ச்சி, ஸ்வாமீ.

    //என்னது... இல்வாழ்க்கையின் அடிப்படையே ஆட்டம் காணுமளவு 'கரு' தோன்றியுள்ளது?//

    இல்வாழ்க்கையின் அடியில் (அடிப்படையில்) ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எல்லாம் தினமும் நடக்கணும் .... ஆனால் ’கரு’ மட்டும் தோன்றிவிடக்கூடாது, இதுதானே நம்மில் 99% நபர்களின் விருப்பமும், எதிர்பார்ப்புமாக உள்ளது?

    நெஞ்சைத் தொட்டு, யாரேனும் ஒருத்தராவது இதனை மறுத்துச் சொல்ல முடியுமா, ஸ்வாமீ.

    இந்த விசித்திரமான மிகச்சிறிய கதைக் ’கரு’ எனக்குள் தோன்றியதற்கு பின்னணியில் மிகப்பெரியதோர் உண்மைக் கதையே என்னிடம் உள்ளது, ஸ்வாமீ. :)

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  41. athira said...

    //கோபு அண்ணனின் கதை என்றதும், ஸ்ரோங் ரீயும் ஊத்தி பிரெட் ரோஸ்ட் உம் போட்டுக்கொண்டு வந்தேன் படிக்க... இப்பூடிப் பொசுக்கென முடிப்பார் என நான் எதிர்பார்க்கவே இல்லை.:).//

    ஸ்ரோங் ரீயும் ஊத்தி பிரெட் ரோஸ்ட் உம் போட்டுக்கொண்டு வந்ததை கதாசிரியரான எனக்காவது கொடுத்திருக்கலாம். எல்லாவற்றையும் முழுங்கிட்டு பேச்சைப்பாரு ..... கர்ர்ர்ர்ர்.

    //கோபு அண்ணனால இவ்ளோ குட்டியா கொமெண்ட்கூடப் போட முடியாதே இப்போ எப்படிக் கதையை முடிச்சார் ஹா ஹா ஹா.//

    எல்லாம் நம் அதிரடி/அழும்பு/அல்டாப்/அதிரஸ அதிரா போன்ற குட்டிகளின் பதிவுகள் பக்கம் போய் குட்டிக் குட்டிக்கதைகளைப் படிப்பதனால் மட்டுமேவாக்கும். :)

    //சோட் அண்ட் சுவீட் கதைகள்தான் எனக்கும் படிக்க பிடிக்கும்.//

    Short & Sweet Stories தானே. அதுதான் பெரும்பாலும் எல்லோருக்குமே பிடிக்கும்.

    //மிக அருமையாக முடிச்சிட்டீங்க.//

    மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, அதிரா.

    //பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகிட்டுது சீதாவின் கதை:). பாவம் ராமன் அவசரப்பட்டு மாட்டுப்பட்டிட்டார்,//

    பெரும்பாலான ஆண்களே இப்படித்தான். எதற்கும் அவசரப்பட்டு விடுவார்கள். பிறகு அவஸ்தையும் படுவார்கள் ..... உங்கட கோபு அண்ணன் போல.

    //ஏதோ தியாகம் செய்கிறாவாமாம்ம்ம்ம்ம் ராமனை மன்னிச்சுட்டா ஹா ஹா ஹா.//

    அழுத்தக்காரி ..... கெட்டிக்காரி ..... சமத்து அந்த தியாகம் செய்கிறாப் போல நடித்துள்ள சீதா ..... நம் அதிரா போலவே. :)

    //உண்மையில் நான் நம்பாமல் கீழே எல்லாம் மூவ் பண்ணி தேடினேன் கதை இன்னும் இருக்கோ என ஹா ஹா ஹா.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! மிக்க நன்றி, அதிரா.

    அன்புடன் கோபு அண்ணன்

    பதிலளிநீக்கு
  42. காமாட்சி said...

    //இவ்வளவு எளிதாக நாம் சொன்ன குறையை ஏற்றுக்கொண்டு ஒரு ரியாக்க்ஷனும் முகத்தில் கூட காட்டவில்லையே எவ்வளவு சாந்தமான பெண் என்று, சீதை ராமனை இப்படிதான் மன்னித்திருப்பாள், என்று தோன்றியது. வை.கோ ஸார் கதை//

    இருவருமே ஒருவரிடம் ஒருவர், உண்மையைச் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல், மூடி மறைக்கத்தான் நினைத்துள்ளனர். கடைசியில் அது ’ஜாடிக்கு ஏற்ற மூடியாக’வே அமைந்து போனது ஈஸ்வர சங்கல்ப்பம் மட்டுமே. மிக்க நன்றி, மாமி.

    பதிலளிநீக்கு
  43. Asokan Kuppusamy said...

    //இரத்தின சுருக்கமான கதையில்...மனம் விட்டு பேசுதலின் சிறப்பு காணப்பட்டது வாழ்த்துகளும் பாராட்டுகளும் பதிவிற்கும் எழுத்தாளருக்கும்//

    மிக்க நன்றி, ஸார்.

    மனம் விட்டுப்பேசுதல் எல்லாம் சரி.

    அதை அவர்கள் மணம் முடிப்பதற்கு முன்பே, மனம் விட்டுப் பேசியிருக்க வேண்டும் அல்லவா. அதுதானே நியாயம்?

    இதோ இந்த என் ’உண்மை சற்றே வெண்மை’ என்ற விறுவிறுப்பான கதையைப் படித்துப்பாருங்கள்:

    https://gopu1949.blogspot.in/2014/04/vgk-12.html

    பதிலளிநீக்கு
  44. ஸ்ரீ. வரதராஜன் said...

    //ரத்னச்சுருக்கமான கதை. நல்ல முடிவு.//

    மிக்க நன்றி, ஸார்.

    பதிலளிநீக்கு
  45. Thenammai Lakshmanan said...

    //ஹாஹாஹா கதையும் பின்னூட்டங்களும் ஜோர் ஜோர். வெகு நாளைக்குப் பிறகு பின்னூட்டங்கள் படித்துச் சிரித்தேன்.//

    மிக்க மகிழ்ச்சி. கதையிலோ பதிவிலோ என்ன இருக்கு வெங்காயம்? பின்னூட்டங்கள் மட்டுமே எனக்கும் பிடிக்கும். படிப்பேன். ரஸிப்பேன். சிரிப்பேன். :)

    //கோபு சார் நாங்க உங்க மேலே வைச்சிருக்கிற நம்பிக்கை அப்பிடி.//

    ஆஹா, என் மீது வைத்துள்ள நம்பிக்கை என்னைப் புல்லரிக்க வைக்கிறது. இப்போது சீப்பும் கையுமாக நான் .... புல்லரிப்பதால் சொறிந்துகொள்ள மட்டுமே ..... அந்த சீப்பு :)

    //மெய்யாலுமே ஷார்ட் அண்ட் ஸ்வீட் கதைதான்.//

    மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஹனி மேடம்.

    ‘மெய்யாலுமே’ என்று சொல்லியுள்ளதால் அது ’பொய்யாக’ இருக்க வாய்ப்பே இல்லை என நினைக்கிறேன்.

    //சொன்னவுடன் எழுதி அனுப்பியது பிறவி எழுத்தாளருக்கே வாய்க்கும். இதுல பொல்லாப்பு எங்கே வந்தது. எல்லாமே பாராட்டுத்தான். :) அன்பும் வாழ்த்துகளும் சார் .. இருவருக்கும்.//

    அடாடா. தங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் என்னை அப்படியே உச்சிக் குளிர வைக்கிறது.

    இங்கு திருச்சியில் கொளுத்தும் வெயிலில் நான் கடும் கம்பளியைப் போர்த்துக்கொள்ள வேண்டியதாக உள்ளது (உச்சிக் குளிர்ந்து போனதால்)

    பதிலளிநீக்கு
  46. அச்சச்சோ கோபு அண்ணனுக்கு இண்டைக்கு என்னமோ ஆச்சூஊஊஊஊ... ஏதோ இது சந்நிதான மடம் போலவும் தான் அந்த.......... நந்தா சுவானிகள் போலவும் நினைச்சு .... ஸூவாமி ஸூவாமி எனப் பேசத்தொடங்கிட்டார்ர்ர்....

    இப்பூடியே விட்டால் நம் புளொக்குகளுக்கு வந்து கொமெண்ட்டும் கொடுக்க மாட்டார்ர்ர்ர்:) இது சரிவராது ,,,, வேப்பங்குழை வைத்தியம்தான் இதுக்கு சரீஈஈஈஈஈஈ:).

    பதிலளிநீக்கு
  47. சின்னஞ்சிறிய கதை எழுதிவிட்டதாக வருத்தப்படவேண்டாம் நண்பர்களே! எதிர்காலத்தில், யாரிடமாவது, இதேபோல ஒருவரியைச் சொல்லி, அதற்கு ஒரு கதைகேட்டு, அந்த ஆசாமி மூன்று பகுதிகளாக நீஈஈஈளமாக எழுதிவிட்டால் compensate ஆகிவிடும் அல்லவா?

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  48. Angelin said...

    //சிறுகதையாக இருந்தாலும் நல்லா இருக்கு..//

    மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    //எனக்கென்னமோ ராமன் மட்டுமே இக்கதையில் உயர்வாக தெரிகிறார் ..//

    எனக்கென்னவோ இருவருமே அயோக்யர்களாகத் தெரிகிறார்கள். ஒருவரையொருவர் ஏமாற்றவே திட்ட மிட்டுள்ளனர். திருமணத்திற்கு முன்பே தன்னிடமுள்ள குறைகளை ஒருவருக்கொருவர் தங்களுக்குள் சொல்லியிருந்திருக்க வேண்டும் அல்லவா. திருமணம் முடிந்தபின் சொல்லி என்ன பிரயோசனம் .... சொல்லுங்கோ.

    //உண்மையை மறைத்த சீதை மன்னிப்பது என்பது என்னால் ஏற்க முடியவில்லை..//

    உங்களுக்கு உயர்வாகத் தெரியும் ஹீரோவைவிட, ஹீரோயினை எனக்கு மிகவும் ஏற்க முடிகிறது. அவள் ஒரு பெண் என்பதாலும்கூட இருக்கலாம்.

    அவளும் என்ன செய்வாள் பாவம்? ஏற்கனவே இருவருக்கும் லேட் மேரேஜ் என்று கதையின் ஆரம்பித்திலேயே சொல்லப்பட்டுள்ளது.

    //கதை மாந்தரை கடவுளராகவே நான் வரிந்து பார்த்ததால் இந்த மாதிரி தோன்றியதோ எனக்கு//

    கதை மாந்தர்களுக்கு கடவுள் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான். அவர்கள் எப்படி கடவுளாகி விட முடியும்? சுத்தமான சூப்பர் வழுவட்டைகள் மட்டுமே.:)

    https://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html

    பதிலளிநீக்கு
  49. கோமதி அரசு said...

    //வை.கோ சார், தப்பாக நினைத்துக் கொள்ளாமல் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.//

    இதில் என்ன மேடம் தப்பு இருக்கு? என் மனதுக்கு ஓரளவாவது மகிழ்ச்சியளிக்கும் கருத்துக்களைப் பின்னூட்டமாக இடுவோருக்கு, நானும் ரஸித்து பதில் கருத்து அளிப்பேன். இல்லாவிட்டால், இவர்களிடமெல்லாம் பேசிப் பிரயோசனமே இல்லை என்று நினைத்து நான் போய்க்கிட்டே இருப்பேன்.

    **இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!** என்று நம் ஸ்ரீராமே தன் பதிவின் கடைசியில், பின்னூட்டப் பெட்டிக்கு மேலே எழுதியிருக்கிறார் பாருங்கோ.

    பதிலளிநீக்கு
  50. athira said...

    //அச்சச்சோ கோபு அண்ணனுக்கு இண்டைக்கு என்னமோ ஆச்சூஊஊஊஊ... //

    எனக்கு எதுவும் ஆகவில்லை அதிரா.

    //ஏதோ இது சந்நிதான மடம் போலவும் தான் அந்த.......... நந்தா சுவாமிகள் போலவும் நினைச்சு .... ஸூவாமி ஸூவாமி எனப் பேசத்தொடங்கிட்டார்ர்ர்....//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நான் என்னைவிட உண்மையிலேயே அதிபுத்திசாலியான ஆண் பதிவர்களாகிய ஒருசிலரை மட்டுமே ’ஸ்வாமீ’ என்று அழைப்பேன்.

    அதில் இந்த ’நெல்லைத் தமிழன்’ என்பவரும் ஒருவர் என்ற இரகசியத்தை இன்று அதிராவுக்காக மட்டுமே சொல்லியுள்ளேன். இரகசியமான விஷயமாக நமக்குள் மட்டுமே இருக்க வேண்டியதானதால், இதைப் படித்ததும் கிழித்துப் போட்டுடுங்கோ அதிரா. வேறு யாரும் இங்கு வந்து அப்போ நான் ‘புத்திசாலி’ இல்லையா, முட்டாளான்னு கேட்டு சண்டைக்கு வந்துடப் போறாங்கோ. :)

    //இப்பூடியே விட்டால் நம் புளொக்குகளுக்கு வந்து கொமெண்ட்டும் கொடுக்க மாட்டார்ர்ர்ர்:)//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நான் உங்க புளொக்குக்கு வந்து கொமெண்ட்ஸ் போடாட்டி என்ன, இப்போது வேறு சிலர்தான் புதிதாக வந்துகொண்டு இருக்கிறார்களே :) போகப் போகத்தான் அதிராவுக்கும் தெரியவரும் .... யார் யார் எப்படி எப்படி என்று. எனக்கு எதற்கு, தேவையில்லாத ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்...... :)

    //இது சரிவராது .... வேப்பங்குழை வைத்தியம்தான் இதுக்கு சரீஈஈஈஈஈஈ:).//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! வேப்பங்குழை வைத்தியமா? அது என்னவோ? உங்கள் கோபு அண்ணன் வேப்ப மர இலைகளில் கொழுந்தாக எடுத்து அலம்பிவிட்டு, அப்படியே ஆடு மாடு போல தினமும் நிறைய சாப்பிடப் பிடித்தமானவர் என்பதை மறக்க வேண்டாம். :)

    பதிலளிநீக்கு
  51. ஆமால்ல :) நான் அப்படியே பேரில் மயங்கிட்டேன் ..இக்கதையில் வரும் ரர்ராமனும் ஸ்சீதையும் :) ரெண்டு பேரும் அய்யகோ அயோக்கியர்த்தான் :) கோபு அண்ணா அது என்னனா என் கண்ணுக்கு //அடுத்தபடியாக டிஃபன், காஃபி, சாப்பாடு என முடித்துக்கொண்டு, முஹூர்த்தப்பைகளுடன் புறப்பட்டு விட்டார்கள். //இதுதான் முதலில் பட்டது அந்த லேட் படாம போயிடுச்சி :)
    என்ன டிபன் காப்பின்னு அதுவும் நீங்க டிபன் காப்பினாலே ஒவ்வொரு நேரம் விதவிதமா சொல்லி பசியை தூண்டி விடுவீங்களே .அந்த யோசனையில் இருந்தததால் லேட் மிஸ்ஸாகிடுச்சி

    பதிலளிநீக்கு
  52. ////AngelinApril 4, 2017 at 8:03 PM
    ஆமால்ல :) ///
    கர்ர்ர்ர்ர்ர்ர் கீழே விழுந்தாலும் மீஈஈஈஈஈஈ.... ல மண் ஒட்டாத கதையா.... ஒத்துக்கொள்றாவோ பாருங்கோ..... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    பதிலளிநீக்கு
  53. ////இரகசியத்தை இன்று அதிராவுக்காக மட்டுமே சொல்லியுள்ளேன். இரகசியமான விஷயமாக நமக்குள் மட்டுமே இருக்க வேண்டியதானதால், இதைப் படித்ததும் கிழித்துப் போட்டுடுங்கோ அதிரா.////

    ஆஆஆஆஆஆவ்வ்வ்வ் இப்பூடி ரகசியங்களைப் பாதுகாப்பதில் நான் வலு உஷாராக்கும்... படிச்ச உடனேயே கிழிச்சு , புஸ்பா அங்கிள் கடையில வாங்கிய புகை வராத கற்பூரத்தின் மேல் வச்சுக் கொழுத்திட்டேன்ன்ன் .... எங்கிட்டயேவா....

    நீங்க என்னென்னமோ எல்லாம் சொல்றீங்க எனக்கு அடியும் புரியல்ல தலையும் புரியல்ல.... சரி வாணாம் ... எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).

    பதிலளிநீக்கு
  54. இவ்வளவு சின்னதாகக் கதை சொல்லும் கோபு சாருக்குப் பாராட்டுக்கள். இன்ஸ்டன்ட் கதை, மிக அருமை. தம்பதிகள் எல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

    கோபு சாருக்கு வாழ்த்துக்களும் ஸ்ரீராம் சாருக்கு நன்றிகளும்.

    பதிலளிநீக்கு
  55. மணமக்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள் ,ஏனென்றால் -+-=+தானே :)

    பதிலளிநீக்கு
  56. கடுகு சிறிது காரம் பெரிது
    இந்தக் கடுகுக் கதையின்
    கருப்பொருளே அதிகம்
    பெறுமதியானது என்பேன்!
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  57. ஷார்ட் அண்ட் ஸ்வீட்....ஆனா ராமன் உண்மை விளம்பி...சீதை....பொய் சொல்கிறாள்.எப்படி மன்னித்தாள்..னு..

    ஸ்ரீராம் எங்கே மெருகூட்டிய கதை..வைகோ சாரின் கதை ....
    கீதா

    பதிலளிநீக்கு
  58. ..ஆனா வைகோ சார் பாராட்டுகள் ஸ்ரீராமின் ரூல்ஸ்.. கரிக்ட்டா ஒரு பக்கத்துல முடிச்சுட்டீங்க..நாங்களோ.....பக்கம் பக்கமா எஸ்ஸே மாதிரி 75 மார்க்குக்கு எழுதுவோம்.....ஹிஹிஹஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  59. மின்னல் வேகக் கதையும் எழுதமுடியும் என்று நிரூபித்துள்ளார் கோபு சார்! இருவருக்கும் பிரச்சினை என்பதால் முடிவு சுபமாய் அமைந்து விட்டது. பாராட்டுகள் கோபு சார்!

    பதிலளிநீக்கு
  60. சார் பெரிய பிரச்சினைய கத்தல், கோபம் எதுவும் இல்லாமல்... எவளவு சிம்பிளா தீர்வு சொல்லிட்டீங்க.....அவர்களுக்கு மணக்கும் மண வாழ்க்கை அமையட்டும்....!!!!!

    பதிலளிநீக்கு
  61. மெருகூட்டி இருப்பதாகச் சொன்ன கதையைக் காணோமே! இதிலே சீதாவுக்கும் பிரச்னை என்பதால் ஜாடிக்கேத்த மூடி என்று சரியாப் போச்சு! இல்லை எனில்? சீதை ராமனை மன்னித்திருப்பாளா? சந்தேகமே!

    பதிலளிநீக்கு
  62. ஆனாலும் இப்படி உடனடியாகக் கதையை எழுதி அனுப்ப வைகோ சாரால் மட்டுமே முடியும்! :)

    பதிலளிநீக்கு
  63. சீதை ராமனை மன்னித்தது போக்கிரித்தனம்.
    ராமனாவது சொன்னான். இவள் அதையும் மறைத்துவிட்டாள்.
    மிக அருமையாகக் கதை பின்னி விட்டீர்கள் கோபு சார்..

    மின்னல் வேகத்தில் ஒரு கதை உங்களால் தான் முடியும். மனம் நிறைந்த பாராட்டுகள். பின்னூட்ட மன்னர்னு உங்களுக்குப் பெயர் வைக்கணும்.
    ஸ்ரீராமுக்கு வழக்கம் போல நன்றி. எங்கே அந்த மெருகூட்டப்பட்ட கதை மா. அதுதாங்க
    இதுன்னு சொல்லப் போறேளா.

    பதிலளிநீக்கு
  64. டி.என்.முரளிதரன்- மூங்கில் காற்று said...

    //அருமை வைகோ சார். முடிவு எதிர்பார்க்கவில்லை//

    மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  65. Angelin said...

    //ஆமால்ல :) நான் அப்படியே பேரில் மயங்கிட்டேன் .. இக்கதையில் வரும் ராமனும் சீதையும் :) ரெண்டு பேரும் அய்யகோ அயோக்கியர்த்தான் :) கோபு அண்ணா அது என்னனா என் கண்ணுக்கு

    //அடுத்தபடியாக டிஃபன், காஃபி, சாப்பாடு என முடித்துக்கொண்டு, முஹூர்த்தப்பைகளுடன் புறப்பட்டு விட்டார்கள்.//

    இதுதான் முதலில் பட்டது அந்த லேட் படாம போயிடுச்சி :)

    ’லேட்’ நான் எடுத்துச் சொன்னபிறகு ‘லேட்’டாக உங்கக் கண்ணுக்குப் பட்டிருக்குமோ என்னவோ. அதனால் பரவாயில்லை அஞ்சு. இந்த லேட் மேரேஜ் களிலெல்லாம், பொதுவாக பொண்ணு + மாப்பிள்ளை இருவரிடமும் சிற்சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். இதையெல்லாம் பெரிசு படுத்திக்கொண்டே இருந்தால், மேரேஜ் மேலும் மேலும் ‘லேட்’ ஆகும். பெண்ணுக்கு பக்குவமான 18 to 20 வயதுக்குள்ளும், ஆணுக்குப் பக்குவமான 21 to 23 வயதுக்குள்ளும் நடக்கும் மேரேஜ்களில் மட்டுமே ஒருவித 'த்ரில்லிங்' (பேரெழுச்சி) இருக்கும். மீதியெல்லாம் எழுச்சியே இல்லாத சுத்த வழுவட்டை மட்டுமே. :)

    பதிலளிநீக்கு
  66. athira said...

    **Angelin April 4, 2017 at 8:03 PM ஆமால்ல :)**

    //கர்ர்ர்ர்ர்ர்ர் கீழே விழுந்தாலும் மீஈஈஈஈஈஈ.... ல மண் ஒட்டாத கதையா.... ஒத்துக்கொள்றாவோ பாருங்கோ..... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)//

    நீங்க இப்படிச் சொல்வது மிகவும் கரெக்ட் அதிரா. வர வர இந்த அஞ்சு சரியில்லை. நீங்கதான் பார்த்து ஏதேனும் ’வேப்பங்குழை வைத்தியம்’ செய்யணும். இன்றைக்கே நல்லநாள் உடனடியா எழுச்சியா ஆரம்பித்து விடுங்கோ, அதிரா. :)

    ‘லேட்’ பண்ணாதீங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

    அன்புடன் கோபு அண்ணன்

    பதிலளிநீக்கு
  67. rajalakshmi paramasivam said...

    //இவ்வளவு சின்னதாகக் கதை சொல்லும் கோபு சாருக்குப் பாராட்டுக்கள். இன்ஸ்டன்ட் கதை, மிக அருமை. கோபு சாருக்கு வாழ்த்துக்கள்//

    ஆஹா, தங்களின் இந்தச் சின்ன + அருமையான இன்ஸ்டண்ட் வாழ்த்துகள் மகிழ்விக்கின்றன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். - அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  68. Thulasidharan V Thillaiakathu said...

    //..ஆனா வைகோ சார் பாராட்டுகள்//

    மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி //

    //ஸ்ரீ ராமின் ரூல்ஸ்.. கரிக்ட்டா ஒரு பக்கத்துல முடிச்சுட்டீங்க..//

    என்னிடம் அவர் இந்த ரூல்ஸ் பற்றியெல்லாம் ஒன்றுமே சொல்லவில்லை.

    ’சீதை ராமனை மன்னித்து விட்டாள்’ என்ற முடிவு வரிகளுடன் ஒரு கதை அனுப்ப முடியுமா என்று மட்டுமே என்னிடம் கேட்டிருந்தார். அவர் கேட்ட ஐந்தாவது நிமிடத்தில் நான் கதையையே எழுதி, அவரின் மெயிலுக்கு என் பதிலாக அனுப்பி விட்டேன். :)

    பதிலளிநீக்கு
  69. ஞா. கலையரசி said...

    //மின்னல் வேகக் கதையும் எழுதமுடியும் என்று நிரூபித்துள்ளார் கோபு சார்! இருவருக்கும் பிரச்சினை என்பதால் முடிவு சுபமாய் அமைந்து விட்டது. பாராட்டுகள் கோபு சார்!//

    இந்த மின்னல் வேகம் + மின்னூல் வெளியீடுகள் எல்லாம் பற்றி எனக்குச் சொல்லிக்கொடுத்துள்ள, இன்றைய என் ‘குருநாதர்’ நீங்கள் தானே மேடம்! :)

    தங்களின் பாராட்டுகளுக்கு என் நன்றிகள் மேடம். நன்றியுடன் கோபு

    பதிலளிநீக்கு
  70. Geetha Sambasivam said...

    //ஆனாலும் இப்படி உடனடியாகக் கதையை எழுதி அனுப்ப வைகோ சாரால் மட்டுமே முடியும்! :)//

    ஆஹா, உங்கள் வாயால் ....... இப்படி ஒரு பாராட்டா மேடம்!!!!!. மிக்க மகிழ்ச்சி. உங்களை திருச்சியிலோ, ஸ்ரீரங்கத்திலோ என் வலைப்பதிவுகள் பக்கமோ பார்த்து நீண்ண்ண்ண்ட நாட்கள் ஆச்சு. இப்போது இந்தியாவிலா அல்லது அமெரிக்காவிலா?

    நீங்க ..... எங்கிருந்தாலும் வாழ்க !

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  71. வல்லிசிம்ஹன் said...

    //மிக அருமையாகக் கதை பின்னி விட்டீர்கள் கோபு சார்.. மின்னல் வேகத்தில் ஒரு கதை உங்களால் தான் முடியும். மனம் நிறைந்த பாராட்டுகள்.//

    ஆஹா, தன்யனானேன். தங்களின் பாராட்டுகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

    //பின்னூட்ட மன்னர்னு உங்களுக்குப் பெயர் வைக்கணும்.//

    அதை உங்களிடமே பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கோ. என்னிடம் வைத்துக்கொள்ள எங்காத்தில் இடமே இல்லை. :)))))

    பதிலளிநீக்கு
  72. வைகோ சார், இப்போதைக்கு அம்பேரிக்கா தான்! ஶ்ரீராமன் அருளால் அடுத்த மாதம் சௌகரியமாக வரணும்! :)

    பதிலளிநீக்கு
  73. அதெல்லாம் முடியாது .அனுப்புனர் அனுப்பியாச்சு. பெறுனர் பெற்றுத்தான் ஆக வேண்டும்.
    நான் மீண்டும் திருச்சி பக்கமோ இந்தியா பக்கமோ வரும்போது சிறப்பிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  74. அடடா!
    எனக்கு நீங்க சொல்லவே இல்லையே. உங்க கதை இங்க பிரசுரமாகி இருப்பதை.
    அத்துடன் ஏப்ரல் 4ம் தேதி நானும், எங்காத்துக்காரரும் முக்திநாத் யாத்திரை சென்று விட்டு வந்தோம்.
    குட்டிக்கதை அது ஒரு சுட்டிக்கதை.
    இருவருமே ஒருவரை ஒருவர் மன்னித்திருக்கலாம்.

    கடைசிவரை சீதை மன உளைச்சலுடன் இருக்க மாட்டாளோ தன் பங்கு உண்மையை சொல்லாததால்.
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  75. Jayanthi Jaya said...

    //அடடா! எனக்கு நீங்க சொல்லவே இல்லையே. உங்க கதை இங்க பிரசுரமாகி இருப்பதை.//

    அடடா! வாங்கோ ஜெயா. இப்போதெல்லாம் நான் யாரிடமும் எதுவும் சொல்வதே இல்லை. நான் மாட்டுக்கும் தேமேன்னு சிவனேன்னு இருந்து வருகிறேனாக்கும். :)

    //அத்துடன் ஏப்ரல் 4ம் தேதி நானும், எங்காத்துக்காரரும் முக்திநாத் யாத்திரை சென்று விட்டு வந்தோம். //

    கொடுத்து வைத்த மகராஜி எங்கட ஜெயா. நீங்கள் இருவரும் ஜாலியாக முக்திநாத் ஹனிமூன் போகும் நேரமாகப் பார்த்து, ஏதோவொரு உள்நோக்கத்துடன், இதனை வெளியிட்டுள்ளார்கள் என நினைக்கிறேன். :) :)

    //குட்டிக்கதை அது ஒரு சுட்டிக்கதை.//

    மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ.

    //இருவருமே ஒருவரை ஒருவர் மன்னித்திருக்கலாம்.//

    சரி ..... நாம் இருவருமே ஒருவரை ஒருவர் மன்னித்துக்கொண்டு விடலாம். தகவல் தராததற்கும் ... தாமத வருகைக்கும். :) :) :)

    //கடைசிவரை சீதை மன உளைச்சலுடன் இருக்க மாட்டாளோ தன் பங்கு உண்மையை சொல்லாததால்.//

    அதெல்லாம் அப்படியெல்லாம் மன உளைச்சலுடன் இருக்கவே மாட்டாள். அவள் மிகவும் கெட்டிக்காரி .... அழுந்தச் சமத்து .... எங்கட ஜெயா போலவே. :) :) :) :)

    //ஜெயந்தி ரமணி//

    நீங்களும் ஏதோவொரு கதை எழுதி அனுப்பப்போவதாகக் கேள்விப்பட்டேன். அது வெளியிடப்படும் நாளும் வந்திடாதோ என ஆவலுடன் காத்திருக்கிறேன். 

    அன்புடன் கோபு அண்ணா

    பதிலளிநீக்கு
  76. தலைப்பு மிக மிக அருமை
    அந்த இராமரும் சீதையும்
    ஒருவகையில் பொருத்தம் என்றால்
    இவர்களும் ஒரு வகையில்...

    நல்ல துவக்கம்.. இந்தத் தொடர்கதை
    பதிவுகள் நிச்சயம் வெற்றித் தொடராக அமையும்..

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  77. நன்றி ரமணி ஸார். ஏன் நீங்களும் இந்தத் தொடருக்கு உங்கள் பங்களிப்பை வழங்கக் கூடாது? எதிர்பார்க்கலாமா? மெயில் முகவரி : sri.esi89@gmail.com

    பதிலளிநீக்கு
  78. Ramani S said...

    //தலைப்பு மிக மிக அருமை. அந்த இராமரும் சீதையும்
    ஒருவகையில் பொருத்தம் என்றால் இவர்களும் ஒரு வகையில்...//

    மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, Mr. RAMANI Sir.

    பதிலளிநீக்கு
  79. அப்பாதுரை said...

    //வைகோவா சும்மாவா.//

    மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!