ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ஞாயிறு 170917 : பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்...





அன்புள்ள ஸ்ரீராம்,

எனக்கு சில சமயம் ஞாயிறு படங்களைப் பார்க்கும்போது, நாமும் அனுப்பினால் என்ன என்று தோன்றியது (உண்மையில், சில சமயம், வேறு படங்கள் இல்லாததனால் போட்டிருக்கிறீர்களோ என்றும் தோன்றும்.. தவறாக எண்ணவேண்டாம்).

முதலில், எல்லாத் திணைகளிலும் (ஐந்திணை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என்ற தலைப்புகளில் அனுப்புவோமா என்று யோசித்தேன். அப்புறம், எதற்கு வம்பு, வெறும்ன படங்களைப் பகிர்ந்துகொள்வோம், பொருத்தமாக இருந்தால் வெளியிடுவார் என்று தோன்றியது. சில மெயில்கள் அனுப்புகிறேன். 


பொருத்தமில்லையென்றால் வெளியிட வேண்டாம்.

அன்புடன்

நெல்லைத் தமிழன்.



அன்னபூர்ணா மலைத்தொடர் (ஹிமாலயா) – நேபாள் – பொகாராவில்.



அடிக்கடி அங்கு கால நிலை மாறும். அதிகாலைத் தோற்றம், பனி மேகங்கள்,  மாலை வெயில் என ஒரு நாளிலேயே பல்வேறு மாதிரித் தோற்றங்களைக் கொடுக்கும்.



வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம்



வானத்தில் மிதக்கும் மேகம்....



பனி படர்ந்த சிகரங்கள் – தொட்டுவிடும் தூரத்தில் – பொகாரா/நேபாள் இருந்து முக்தினாத் ஹெலிகாப்டர் பயணத்தின்போது



பனி படர்ந்த மலையின் மேலே...



மலைராணி முந்தானை சரிய...  சரிய....




மலைச்சாரலில் இளம் பூங்குயில்.... 



மேகம் முந்தானை மூடுது முன்னாலே...



பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் திருக்குறள் படிக்கட்டுமா




மலைக்கோவில் வாசலில்....







தமிழ்மணத்தில் வாக்களிக்க.......

40 கருத்துகள்:

  1. அன்பின் திரு நெல்லைத் தமிழன்..
    தாங்களே பாட்டும் படங்களுமாக வழங்கி விட்டீர்கள்..

    அத்தனையும் அழகு..

    பதிலளிநீக்கு
  2. எழில் மிகு காட்சிகள்! பகிர்வுக்கு நன்றி.

    தமிழ்மணத்தில் வாக்களிக்க பதிவின் இறுதியில் கொடுத்திருக்கும் லிங்க் இந்தப் பதிவுக்கே திரும்ப இட்டுச் செல்கிறது. கவனிக்கவும்.

    பதிலளிநீக்கு
  3. திரு.நெ.த. அருமையான ரசனையுடன் எடுத்து இருக்கின்றீர்கள் தங்களிடமிருந்து இன்னும் படங்கள் வருமென ஆவலுடன் இருக்கிறேன். பொருத்தமான வார்த்தை ஜாலங்களிலும் விளையாடுகின்றீர்கள். வாழ்த்துகள்.

    ஸ்ரீராம்ஜி தமன்னா செயல் சரியில்லை.

    பதிலளிநீக்கு
  4. தம லிங்க் சரி செய்து விட்டேன். நன்றி கில்லர்ஜி, ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  5. கண்கொள்ளாக் காட்சி அழகோ அழகு!
    த ம 6

    பதிலளிநீக்கு
  6. நெல்லைத் தமிழன் ஞாயிறிலும் ஆசிரியரானது சந்தோஷம். படங்கள் அருமை, சில வரிகள் எனக்கு புதியது!!

    பதிலளிநீக்கு
  7. ஆஹா ஆஹா இம்முறை ஞாயிற்றுக்கிழமையை சில்ல்ல்ல்லெனக் குளிர்விப்பது நெல்லைத் தமிழனோ... ஹிமாலயா படங்கள் சூப்பர்...
    எங்கட அண்ணனும் ஹிமாலயா போகவென ரிக்கெட் புக் பண்ணினார் எல்லோருமாகச் சேர்ந்து தடுத்து விட்டோம் வேண்டாம் என:)...

    /////மலைராணி முந்தானை சரிய... சரிய/////
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் இது ஸ்ரீராமின் வரிகள் என நினைச்சு கர்ர்ர்ர்ர்ர் சொல்ல வந்தபின் மேலே பார்க்கிறேன் நெ. தமிழனுடையது ஹாஅ ஹா ஹா

    பதிலளிநீக்கு
  8. ////மேகம் முந்தானை மூடுது முன்னாலே/// ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர் ஒரு மேகத்தைப் பார்த்த மாத்திரத்தில் என்னா பாட்டெல்லாம் வருதூ நெ. த நுக்கு.... இப்படி எல்லாம் பாட்டிருக்கோ இல்லை இடையில் வரும் வசனமா இருக்குமோ... சரி அது போகட்டும் அத்தனையும் சூப்பர்... படங்களும் பாட்டுக்களும்...

    பதிலளிநீக்கு
  9. கயிலைப் பயணத்தோடு முக்திநாத்தும் அடக்கம். ஆகையால் இவை எல்லாமே நேரிலே பார்த்து ரசித்திருக்கேன். அப்போது இந்த டிஜிடல் காமிராவும் இல்லை; செல்ஃபோனும் இல்லை! ஃபில்ம் காமிரா கானன்! ஃபில்ம் இருந்தவரை படங்கள் எடுத்திருந்தோம். அப்புறம் தீர்ந்து போனதும் வாங்க முடியாமல் உயரத்தில் இருந்தோம். முக்திநாத் போனதோ அவசரம் அவசரமாக! பொகாரா போகாமல் நேரடியாகக் காட்மாண்டுவில் இருந்து முக்திநாத் போயிட்டு அன்றே திரும்பிட்டோம். ஏனெனில் அன்று மாலையே எங்களுக்கு தில்லி திரும்ப விமானப் பயணச் சீட்டு உறுதி செய்யப்பட்டு விட்டது! எங்கள் குழு ஒருங்கிணைப்பாளர் அவசரம் அவசரமாக எங்களை அனுப்பி விட்டார். மற்றொரு குழு தங்கி நிதானமாகப் பார்த்து விட்டு வந்தார்கள். நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவு தான்! :(

    பதிலளிநீக்கு
  10. ////ngelinSeptember 17, 2017 at 5:14 PM
    Nooooooo en comment kaanom////

    கர்ர்ர்ர்ர்ர் இவ விஜய் க்கு அடுத்தவ.... எங்க போனாலும் இதையே சொல்லிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்.... நாங்க இதை நம்போணும்?????:)

    பதிலளிநீக்கு
  11. அன்னபூர்ணா - ஹிமாலயா ப்ரமிக்கவைக்கும் காட்சி. ஹிமாலய மலைத்தொடர்கள் இந்தியாவின் தலை மீது கவிந்து இந்தியாவை ஆசீர்வதிப்பதுபோல் உள்ளன. இயற்கையின் அழகு, கம்பீரம்...

    பதிலளிநீக்கு
  12. இல்லா நான் போட்டேன் காணோம் என் கமெண்ட் @athiraaav !"£$$%^%*&$£"*))(223587522456

    நம்மூர் மலைக்கும் வெளிநாட்டு மலைக்கும் நிறைய வித்யாசம் அப்படி மானே தேனே ன்னு போட்டேன் இப்போ காணோம்

    பதிலளிநீக்கு
  13. ஸ்ரீராம்.. நான் எழுதினதை அப்படியே வெளியிட்டுவிட்டீர்களே... கேஜிஎஸ் சார் தவறா நினைச்சுக்கப் போறார். வெளியிட்டமைக்கு நன்றி. இது 2008ல் நான் சென்றபோது எடுத்த படங்கள். பொகாராவில், ஒரு நேபாளி டிரைவர், என்னையும் ஹஸ்பண்டையும் அன்னபூர்ணா மலையடிவாரத்துக்குக் கொண்டுசென்றுவிட்டு திருப்பிக் கொண்டுவருகிறேன் 600 ரூ கொடுங்கள் என்றார். நான், எதுக்கு ரிஸ்க் என்று போகாமல், கிடைத்த வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன். எனக்கு பனிசூழ்ந்த இடங்களில் பிரயாணிக்கவேண்டும் என்று அதீத ஆவல். பார்ப்போம் திரும்பவும் இதுபோல் வாய்ப்பு கிடைக்கிறதா என்று.

    படங்கள், நாங்கள் ஹெலிகாப்டரில் பிரயாணம் செய்தபோது எடுத்தவை. அதன் உணர்வு சொல்லிப் புரியவைக்க முடியாது. கிட்டத்தட்ட 30 அடி கீழே பனி சூழ்ந்த மலை. காற்றின் காரணமாக ஆடும் ஹெலிகாப்டர். இது ஒரு தனி அனுபவம்.

    பதிலளிநீக்கு
  14. ஹப்பா அழகான படங்கள்! நான் எல்லாம் கிட்டக் கூடப் போவேனா என்று தெரியவில்லை. இப்படியே பார்த்து ரசித்துக் கொள்கிறேன்...

    கீதா: நெல்லை கலக்கிடட்டீங்க!! செம! ஹிமாலயாஸ் ஹிமாலயாஸ்தான்! அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை எனலாம்....அதன் பழம் பெருமையும், அழகும், கதைகளும் கம்பீரமும், இன்னும் என்னென்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையும் இட்டுக் கொள்ளலாம்....பிரம்மாண்டம். அப்படியே நின்றுவிடலாம் அங்கு...நான் செல்ல நினைத்திருக்கும் பகுதி..எப்போது வாய்க்குமோ தெரியவில்லை...மிகமிக ரசித்தேன் சில்லென்று !!!

    பதிலளிநீக்கு
  15. எனக்கு பனிசூழ்ந்த இடங்களில் பிரயாணிக்கவேண்டும் என்று அதீத ஆவல்.// ஹையோ நெல்லை எனக்கும் அந்த ஆவல் உண்டே!!!! ம்ம்ம் எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை...ரொம்பப் பிடிக்கும்....

    கீதா

    பதிலளிநீக்கு
  16. துரை செல்வராஜு சார்.. சில இடங்களில் பாட்டு சேர்த்திருப்பது, இசையில் ஆர்வம் உள்ள ஸ்ரீராம்தான். எனக்கு அந்த இடங்களைப் பார்க்கும்போது இருந்த பரவசம் சொல்லி மாளாது. வாய்ப்பு இருந்தால் அந்த மலைகளில் நடந்துபார்க்கவேண்டும் என்றும் ஆவல்.

    பதிலளிநீக்கு
  17. வாங்க கரந்தை ஜெயக்குமார் சார்.

    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  18. வருக கில்லர்ஜி.. வாய்ப்பு இருந்தால், பதிவர் குழுக்கள் (மைனஸ் டாஸ்மாக்) இந்த இடங்களுக்குப் போய்வரலாம். மீண்டும் மீண்டும் 'தமன்னா'வைக் குறை சொல்கிறீர்களே.

    பதிலளிநீக்கு
  19. வாங்க புலவர் ராமானுசம் ஐயா.

    வாங்க மி.கி. மாதவி. எல்லாம் ஸ்ரீராம் தரும் இடம்தான்.

    பதிலளிநீக்கு
  20. வருகைக்கு நன்றி அதிரா. ஏன் ஹிமாலயாஸ் போக விரும்பியவரைத் தடுத்தீர்கள்? சொன்னால் வியப்பா இருக்கும், எனக்கு ஹரித்வார் போன்ற இடங்களுக்குச் செல்ல மிகவும் ஆசை. Body Fitness இல்லை என்றாலும், எனக்கு மலைப் பாதைகளில் பயணிக்கணும், அங்கு இருக்கிற புராதன கோவில்களில் தரிசனம் செய்யவேண்டும் என்றும் ஆசை.

    பதிலளிநீக்கு
  21. அதிரா- வரிகளைச் சேர்த்தது ஸ்ரீராம். எனக்கும் கவிதைக்கும் கன தூரம். ஆனாலும் 'கர்ர்ர்ர்ர்' என ஏன் நினைக்கவேண்டும்? எல்லாம் நம் பார்வையில்தானே இருக்கிறது?

    பதிலளிநீக்கு
  22. ஸ்காட்லாண்ட் யார்டுக்கு அனுப்பற மெயிலை இங்க அனுப்பியிருக்கீங்க ஏஞ்சலின். அவங்கள்ட சொன்னாலாவது கண்டுபிடிச்சுத் தருவாங்க.

    மலைல என்ன வித்தியாசம் இருக்கு? என்ன ஒண்ணு, அது பனி படர்ந்து இருக்கறதுனால பார்க்கிற நமக்கு ரொம்ப குளுமையா இருக்கும். கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். உங்கள் கயிலைப் பயணத்தை வாசித்த ஞாபகம் இருக்கு. எந்த தரிசனமுமே நமக்கு அமைவதுதான். எதுவுமே நமக்கு முழுத் திருப்தி தருவதில்லை. எனக்கு இன்னும் ஒருமுறை இந்த இடங்களுக்குப் போய்வரவேண்டும் என்று ஆசை. கயிலை சென்றதில்லை, செல்லவேண்டும் என்ற எண்ணம் உண்டு. அந்த இடங்கள்னா என்னைக் கூப்பிடவேண்டும்.

    பதிலளிநீக்கு
  24. வாங்க ஏகாந்தன். உங்கள் ரசனையைப் பாராட்டுகிறேன். வெள்ளிப் பனி மலையின் மீது உலாவுவோம்.

    பதிலளிநீக்கு
  25. வருகைக்கு நன்றி தில்லையகத்து துளசி, கீதா ரங்கன். என்றைக்கேனும் ஒரு குழுவாகக் கிளம்புவது என்று தீர்மானித்தால் நானும் கலந்துகொள்வேன். இதுக்காகவே வாழ் நாளில் ஒரு முறை கனடா, அதுவும் குளிர்காலத்தில், ஒரு மாதமாவது இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  26. மலைக்கோவில் வாசலில்....ஒரே பனிமயம் .இதில் வாசல் எங்கே :)

    பதிலளிநீக்கு
  27. இருபத்தாறுவருஷங்கள் காட்மாண்டு வாஸம். நிறைய பனிமலைகள் பார்த்த அனுபவம். உங்களது கவிதைகளுடன்,காணரம்யமாக உள்ளது. இப்போதும் ஆல்ப்ஸ் காட்சிகள் ரஸிக்கலாம். குளிர்,குளிர் என்ற எண்ணம் மனதைப் பிடித்துக்கொண்டு விட்டது. எல்லா வகைகளிலும் தேர்ந்த படங்கள். ரஸிக்க அருமை.அன்புடன்.

    பதிலளிநீக்கு
  28. காமாட்சியம்மா... ஜாம் இடுகையில் உங்களைப் பார்த்தவுடனேயே இங்கு எழுதியிருக்கிறீர்களா என்று பார்த்தேன். நீங்கள் நேபாளவாசியாக இருந்தவரல்லவா? ஆல்ப்ஸையும் பார்த்து ரசித்திருப்பீர்கள். அங்கு, ஆப்பிள் மற்ற பழங்கள் freshஆக ஜெனீவாவில் கிடைக்கும் என்று எழுதியதைப் படித்தபோதே, இந்த மாதிரி பழமரங்கள் இருக்கும் நாட்டுக்கு எப்போது செல்வோம் என்று தோன்றியது. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. பகவான்ஜி... கடைசிப் படத்தின் மலைச்சரிவில் இறங்க, கோவில் வாசல் வந்துடும்னு எடுத்துக்கவேண்டியதுதான். நீங்க எழுதியிருப்பதைப் பார்த்தால், நீங்க இருக்கற ஏரியா பக்கம் எந்தக் கவிஞரும் வந்துடக்கூடாதுன்னு நினைக்கறேன். டிக்சனரியைத் தூக்கிட்டு, இந்த வரி ஏன் வந்தது, இதை ஏன் எழுதினீர்கள் என்று கேட்பீர்கள் போலிருக்கிறது. கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. இந்த பொகாரோ இந்தியா அணுகுண்டு சோதனை செய்தைடமில்லை என்றே நினைக்கிறேன் போகா
    இடங்கள் ஒரு ஏக்கத்தை உண்டுசெய்கின்றன

    பதிலளிநீக்கு
  31. //இந்த பொகாரோ இந்தியா அணுகுண்டு சோதனை // இல்லை ஐயா, உண்மையில் நேபாளில் இருக்கும் அந்த ஊரின் பெயர் போக்ரா ஆகும். திரு நெ.த. பொகாரா என எழுதி இருக்கவே நானும் அப்படியே குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் சொல்வது ராஜஸ்தானில் உள்ள பொகாரோ! அங்கே தான் அணுகுண்டு சோதனை செய்தார்கள். மேலே இருப்பது நேபாளத்தில்! இந்தியா அல்ல! :)

    பதிலளிநீக்கு
  32. ஜி.எம்.பி சார்... கருத்துக்கு நன்றி. ஒரு எழுத்துப் பிழைல, அருமையான போக்ராவை, அணுகுண்டு வெடித்த பாலைவனமா நினைக்கவச்சுட்டேனே.

    பதிலளிநீக்கு
  33. கீதா சாம்பசிவம் மேடம்-விளக்கத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. ஸ்ரீராமிற்கான கடிதப் பகுதியில்:

    முதலில் எல்லாத் திணைகளிலும் (ஐந்திணை) என்று மாற்றி விடவும். ஐந்து திணைகளோடு, ஐந்திணையும் சேர்ந்து கொண்டு ஆறாவது திணை மாதிரி காட்சி தருகிறது.

    பனிபடர்ந்த மாமலைக் காட்சிகள் பார்க்கப் பார்க்கப் பரவசம்.

    மன்னும் இமயமலை எங்கள் மலையே
    மாநில மீதது போல் பிரிதில்லையே..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!