செவ்வாய், 7 நவம்பர், 2017

கேட்டு வாங்கிப்போடும் கதை : பேக்கு ராமனும் பேகம் சீதாவும் - அப்பாதுரை - சீதை - 26


     இந்த வாரம் அப்பாதுரை படைக்கும் சீதை ராமனை மன்னிக்கிறாள்!



பேக்கு ராமனும் பேகம் சீதாவும்

அப்பாதுரை



ராமன் இடது கண்ணால் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தான்.  திருதிருவென்று விழித்த சாதனை முடிந்ததும்  தேவையில்லாமல் சரமாரியாக யோசிக்கவும் தொடங்கினான்.

உடன் வந்த மனைவி சீதாவைக் காணவில்லை. இதோ வருவதாகச் சொல்லி அவள் பின்னே போன சகோதரன் லக்ஷ்மணனையும் காணவில்லை.  

இரண்டு பேரும் சேர்ந்து ஓடியிருக்க சாத்தியமில்லை.  லக்ஷ்மணனுக்கு சீதாவைக் கண்டாலே ஆகாது. சீதாவுக்கு லக்ஷ்மணனை காணாவிட்டாலும் ஆகாது.   எங்கே போயிருப்பார்கள் இருவரும்?

நடுத்தெரு என்றில்லாவிட்டாலும் தெரு ஓரமாக எத்தனை நேரம் நிற்பது?  எக்கச்சக்கமாக சாப்பிட்டக் காரணத்தால் வயிறு ஓசை கிளப்பியது. சாப்பிட்டாலும் ஓசை பட்டினியானாலும் ஓசை - வயிற்றையும் ஓசையையும் வைத்து 'வயிறென்ப ஓசை வளத்தன' என்று வள்ளுவர் ஏதாவது குறள் கிறள் எழுதியிருப்பாரா என்றுத் தேவையில்லாமல் யோசிக்கையில், திருதிருவென்று விழித்த இடது கண் வேறு வேதனை கொடுத்தது. திருதிருவென்று விழிக்காத வலது கண்ணோ வேருடன் வேதனை கொடுத்தது. இது வேரு அது வேறு.  தமிழில் மட்டுமே இப்படி மொழி நயத்தோடு புலம்ப முடியும் என்று மறுபடியும் தேவையில்லாமல் யோசிக்கையில் காலை டிபன் சாப்பிடும் போது சீதை கடிந்தது நினைவுக்கு வந்தது:  "உங்க தமிழ் பற்று பெருமை எல்லாம் ஊர்ல வச்சுக்குங்க.. இங்க ஹூப்லி வந்து இதெல்லாம் வேண்டாம்.. சொன்னா கேளுங்க.. இதுக்கு மேலும் அடிபடாம ஊருக்குப் போய்ச் சேரணுமா வேணாமா? ஒழுங்கா சாப்பிட்டு எந்திரிங்க"

"என்ன இவங்க எதுக்கெடுத்தாலும் என்னைப் பாத்து பேக்கா பேக்கான்றாங்க? இவங்கதான் பேக்கு.."

"ஆமா.. ஒவ்வொரு ஊர்க்காரனையும் ஏதாவது சொல்வீங்க.. பத்ராசலம் போனப்ப வார்த்தைக்கு வார்த்தை ஒரு லு சேர்த்து கிண்டல் பண்ணீங்க.. குருவாயூர் போனப்ப  ல்லல்லோ முல்லல்லோனு வேணுமுன்னே மூக்கால பேசி நக்கல் செஞ்சீங்க.. வடக்கே போனப்ப எதுக்கெடுத்தாலும் அநியாயத்துக்கு கோபப்பட்டிங்க"

"இதப்பாரு.. கொல்டிப்பசங்க அப்படி இருந்தா நான் என்ன செய்ய? சேட்டனுங்க பத்தி வேணாம்..  அதும் இந்திக்காரனுங்க இருக்கானுங்களே.. நம்மளை இடிக்கிறதே வேலை.. அவங்களுக்கு கொல்டிங்களும்  பேக்குங்களும் எத்தினியோ மேல்..."

"ஆமா.. அவங்க தமிழாளுங்களை எப்படி கூப்பிடுறாங்க தெரியுமா? அரவாளு.. விஷ ஜந்துக்கள்னு அர்த்தம்.. பாம்பு ஜாதி."

"யாரு இந்திக்காரனா அப்படிச் சொல்றான்? மீசையில்லாத பசங்க.."

"இல்லே கொல்டிங்க தான் அப்படி சொன்னது.." திருத்திக் கொண்டாள் சீதா "ஐயோ.. கஷ்டம்.. உங்களோட சேர்ந்து எனக்கும் தொத்திக்கிச்சு.."

"அப்படி சொல்ல முடியாதுணா.. இப்ப மோடிக்கு பாரு.. மீசை இருக்கே?"  இடையில் புகுந்தான் லக்கி என்கிற லக்ஷ்மணன். 

"மோடி இந்திக்காரனாடா? லூசு. மோடி குஜராத்தி. குஜ்ஜுனு சொல்வாங்க"

"போதும்  நிறுத்துங்க.  நீங்க என்னமோ லூசு மோடி குஜராத்தினு சொன்னதா தப்பா புரிஞ்சுக்கிட்டு  எவனாவது உங்களைப் பிடிச்சு ஜெயில்ல தள்ளிடப் போறான்.  இப்பல்லாம் அரசாங்கம் ரொம்ப ஒட்டுக் கேக்குதாம்.."

"ஜெயில்னு தனியா வேறே எதுக்கு? அதான் அண்ணா உங்களை கல்யாணம் செஞ்சிக்கிட்டது பத்தாதா?"

"ஆமா..  உன்னை மாதிரி எசகா ஏதோ சொல்லித்தான் ஆட்டோக்காரன் உங்க அண்ணா வலது கண்ல குத்திட்டான்..  தடிச்சு வீங்கிக்கிடக்கு. நாள் முழுக்க ஆஸ்பத்ரில கெடந்தாரு" என்றாள் சீதா.

"குத்திட்டானா? என்ன இப்படி சாதாரணமா சொல்லிட்டீங்க? நோண்டிட்டான்னு சொல்லுங்க..  வேரோட பிடுங்கி எடுத்துட்டான் அண்ணி.. டாக்டர் என்ன சொன்னாரு மறந்துட்டீங்களா? மிச்சத்தையும் எடுத்துட்டு அந்த இடத்துல கண் மாதிரி வரைஞ்சு அனுப்பிடவானு கேக்கலே?"

"இவனுக்கும் அந்த ஆட்டோக்காரன் மொகரையில ரெண்டு போட்டிருந்தா இப்படிப் பேசுவானா? நல்ல குடும்பமா இருக்காங்கனு எங்கப்பா உங்க வீட்டுல என்னை கட்டிக் கொடுத்தாங்க.. நீங்க சாமர்த்தியமா பக்கத்து வீட்டுப் பையனை உங்க தம்பினு காட்டி ஏமாத்தினது தெரியாம போயிருச்சே?"

ராமன் சமரசம் செய்ய முனைந்தான். "சரி சரி.. இப்ப என்ன கேட்டேன்? கெட்டி சட்னி கேட்டா இப்படி கல்லைக் கொணாந்து போட்டு.. அதைச் சாப்பிட்டு விக்கி உசிர் போகுது.. கொஞ்சம் தண்ணி குடுப்பானு கேட்டா இந்த சர்வர்காரன் என்ன செய்றான் பாத்தியா? கைல தண்ணியை வச்சுக்கிட்டு யாரு பேக்கு யாரு பேக்குன்னு பிரசாரம் பண்ணறான்.. யாரு பேக்கு? இவன்தான் பேக்கு.. இவங்கப்பன் பேக்கு.. இவங்க பரம்பரையே பேக்கு.. நம்ம காவேரித் தண்ணியை எடுத்து வச்சுக்கிட்டு நம்மளையே கிண்டலா?" என்றான்.

"ஹலோ.. காவிரி அவங்களதுதான்.. நம்மது இல்லே.. அவங்க ஊர்லதான் உருவாகுது"

"பூகோளத்தையே  மாத்திப்புட்டானுங்களே.." என்றான் லக்கி.

"அண்ணன் தம்பிக்கு அறிவுதான் இல்லே.. இங்கிதம் கூட இல்லேன்னு அடிக்கடி எடுத்துக் காட்டணுமா?  இதுல பேரு பொருத்தம் வேறே!"

"அண்ணி.. உங்களுக்கும் சீதானு பேரு.. அண்ணனுக்கு பொருத்தமாதான் இருக்கு. என்ன பிரயோசனம்? அந்தம்மா நல்லம்மா.. முசுக்குனா  காட்டுக்கு போனாங்க.. தீக்குளிச்சாங்க.. பூமியைப் பொளந்துகிட்டு... ஹும்..  எல்லாத்துக்கும் கொடுத்து வச்சிருக்கனும்ணா.."

"எருமை.." என்றாள் சீதா காபி சாப்பிட்டபடி.  முறைத்த லக்ஷ்மணனை அலட்சியம் செய்து "எருமைப் பால் காபி" என்றாள் எருமையை மீண்டும் அழுத்தி. "பவுடர் பால் இல்லாம இருந்தா சரிதான்"

"கழுதை" என்றான் லக்கி சளைக்காமல்..  "நல்ல வேளை.  வண்ணாரப்பேட்டையா இருந்தா கழுதை பால்ல காபி குடுத்திருப்பாங்க" .

"அண்ணன் தம்பி ரெண்டு பெரும் நல்லா கொட்டிக்கிட்டு யார் கிட்டேயாவது உதையும் வாங்கிட்டு வாங்க". விருட்டென்று எழுந்து நடந்தாள் சீதா. "நான் வாசல்ல பஸ்ஸுக்கு நிக்குறேன்.." 

ராமன் பதறினான். "டேய்.. லக்கி.. போடா.. கோச்சிட்டு வண்ணாரப்பேட்டைக்கு அவங்க அப்பா வீட்டுக்கு போயிடப்போறா.  அந்தாளு ரிடையர்டு மிலிடரி.  வந்து சுட்டாலும் சுட்டுருவான்.. போடா.. ப்லீஸ்". தம்பியை அவசரப்படுத்தினான். "பார்சலை நான் வாங்கிட்டு வரேன்"

"ஆமாண்ணா..  மிலிடரி ஓட்டல்ல தோசை சுட்டவன்லாம் ரிடையர்டு மிலிடரின்றான்.. நீதான் சொல்லிக்கணும்.." என்றபடி லக்கி எழுந்து விரைந்தான்.  "பார்சல்ல எனக்கு ரெண்டு மெது வடை. மறந்துடாதே"

பத்து நிமிடம் பொறுத்து மெள்ள எழுந்து, பார்சலுக்கும் சாப்பிட்டதற்கும் பணத்தை கட்டிவிட்டு கல்லாக்காரனை முறைத்தபடி வெளியே வந்த ராமன் சுற்றுமுற்றும் பார்த்தான்.  'ஹூப்லியைச் சுற்றிக்காட்ட வரும் சுற்றுலா சொகுசு வண்டியைக் காணோமே?  இன்னுமா வரலே? லக்ஷ்மணனைக் காணோம்.. சீதாவும் காணோம்..  எங்க போனாங்க?' என்று கதை தொடக்கத்தில் போல திகைத்தபோது தெரு முனையிலிருந்து தம்பி வருவதைப் பார்த்தான். "என்னடா.. எங்கே சீதா?"

"கண்டேன் சீதையை" என்றான் லக்கி. "அதோ அந்தப் பக்கமா சிவப்பு கார்ல சர்ர்ர்ர்ர்னு போறதை" என்றான்.

"என்னடா.. கோச்சிட்டு போயிட்டாளா?"

"கார்லதான போறாங்க? இப்ப என்ன காட்டுக்கா போறாங்க?  விடுங்கணா.. இன்னிக்கு நல்ல நாள்னு டிவியில ஹரிகேசநல்லூர் சொன்னப்பவே நினைச்சேன்.. இது மட்டும் பலிக்கலேனா மவனே நேரா ஹரிகேசநல்லூருக்கே ட்ரிப் அடிச்சுற வேண்டியது தான்னு.. நல்ல வேளை பலிச்சிடுச்சு"

"சும்மா இருடா" என்ற ராமனை நோக்கி எங்கிருந்தோ ஒரு சிறுவன் பிரேக் பிடிக்காத வண்டி போல் வேகமாக ஓடி வந்தான். சட்டென்று ராமன் கையில் ஒரு சீட்டைத் திணித்து ஓட்டம் பிடித்தான்.  "டே" என்று ராமன் சுதாரிப்பதற்குள்  தெருமுனைக்கு ஓடிவிட்டான்.  விவரம் புரியாமல் "பிக்பாகெட்.. டே.. லக்கி பிக்பாகெட்ரா" " என்று ராமன் கூவ, உடனே அந்தச் சிறுவனைத் தொடர்ந்து ஓடினான் லக்ஷ்மணன்.   பத்தடி ஓடிவிட்டு திரும்பினான். "மின்னலா ஓடிட்டான்". 

"பிக் பாகெட் இல்லேடா.. இந்த சீட்டைக் கொடுத்துட்டு ஓடிட்டான்"  என்றான் ராமன்.  தம்பியிடம் சீட்டைக் கொடுத்து, "கன்னடத்துல எழுதியிருக்கான் போலருக்கு" என்றான். 

சீட்டைப் பிடுங்கி  'ನಿಮ್ಮ ಹೆಂಡತಿಯನ್ನು ಜೀವಂತವಾಗಿ ನೋಡಬೇಕೆಂದು ಬಯಸಿದರೆ, ದಯವಿಟ್ಟು ಒಂದು ಗಂಟೆಯೊಳಗೆ 99640 10763 ಕರೆ ಮಾಡಿ, ಪ್ರೀತಿಯಿಂದ ರಾವನ್' என்று எழுதியிருந்ததைப் பார்த்த லக்கி, "அட.. தெலுங்கு!" என்றான்.

"நமக்குத்தானா சீட்டு? வேறே யாருக்காவது தர வேண்டியதை நம்ம கிட்டே கொடுத்துட்டு ஓடிட்டானா பையன்? இப்ப இந்த ஆள்கிட்டே கொடுத்து படிக்கச் சொன்னா மறுபடி பேக்குனுவானே?"  என்றவாறு கல்லா அருகே சென்றனர்.  கல்லாக்காரர் வழக்கம் போல் "ஏனு பேக்கு?" என்றார். 

"நிறைய பேக்கு, எல்லாத்தையும் சொல்ல முடியுமா?   மொதல்ல இந்த சீட்டை படிச்சு மாடி பேக்கு" என்றான் ராமன் பதட்டத்துடன்.   சீட்டைப் படித்த கல்லாக்காரர் சற்று கலங்கி "நிம்ம ஹென்ட்தியன்னு ஜீவந்தவாகி நோடபேக்கெந்து.." என்று தொடங்க, லக்ஷ்மணன் மறித்தான்.. "யார்ராவன் உடனே பேக்குன்றான்..  தமிழ்ல சொல்லு மாடி" என்றான். கல்லாக்காரர் விழித்தார். "நனகே தமிள்ளு.." என்று தயங்கிப் பிறகு "நோடி.. வொய்பு டேஞ்சரு.. ஈ நம்பரு கர.. ஆ.. கால் மாடி.. வொய்பு டேஞ்சர் டேஞ்சர்"

"சீட்டைப் படிச்சு சொல்லுடானா வொய்பு டேஞ்சர்றானே.. வொய்புனாலே டேஞ்சர்தான்.. இதில ஒரு பொருட் பன்மொழி தேவையா?" என்று கல்லாக்காரனை செல்லமாகக் குத்தப் போனான் ராமன். "சீட்டைப் படிச்சு சொல்லுயா"

அவசரமாகப் போலீசை அழைத்த கல்லாக்காரர்  இவர்களை "கூத்கொள்றி" என்றபடி உள்ளே யாரையோ கூவி அழைத்தார்.  "என்ன கூத்தோ போ!" என்று ராமன் உட்காரவும் உள்ளிருந்து வந்த ஆள்  சீட்டை படித்து விட்டு "சார்.. நிம்ம வொய்பு டேஞ்சர்ல இருக்கு.. கடத்தல் போயிட்டாங்க.. பிராண அதா உயிரோட பார்க்கணும்னா இந்த நம்பர் போன் பண்றீங்கோ" என்று தடுமாறி விளக்கினார்.

"என்னடா லக்கி, என்ன சொல்றான் இவன்? சீதாவுக்கு ஏதாவது டேஞ்சரா.. ஒண்ணும் புரியலியே?"

"இந்த ஹரிகேசநல்லூர் ஆசாமி.. சும்மா சொல்லக்கூடாதுணா.." என்று பெருமையுடன் தொடங்கிய லக்ஷ்மணனை தலையில் ஓங்கித் தட்டிய ராமன் "டேய்!" என்றான். அதற்குள் இரண்டு போலீஸ் ஆட்கள் பந்தாவாக மிரட்டியபடி அங்கே வர, சீட்டை அவர்களிடம் கொடுத்தார் கல்லாக்காரர். பிடுங்கிப் படித்த இன்ஸ்பெக்டர் போலிருந்தவர்  "நிம் ஹென்ட்தினா?" என்றார். கல்லாக்காரர் பதட்டத்துடன் "நன் ஹென்ட்தியல்லா சார்.. இவுர.. இவுர.. நோடி சார்" 

"இப்புருகா?"  ஆச்சரியப்பட்டார் இன்ஸ்பெக்டர். 

"இல்லா சார்.. ஒப்புருகே.. இவர ஹென்ட்தி.. அவுரு யாரோ கொத்தில்லா.. சொல்ப சகாய மாடி சார் தயவிட்டு". சற்று குரல் தணித்து, "கொங்கா சார்".

'ம்ம்' என்றபடி ராமனிடம் வந்த இன்ஸ்பெக்டர், கடைக்காரர் கொடுத்த சீட்டை அலட்சியமாகத் தட்டியபடி கேட்டார் "உங்க ஒய்ப் பேரென்னா?"

"மிஸஸ் நிர்மலா சீதாராமன்" 

சடாரென்று தடுமாறிய இன்ஸ்பெக்டர் ஒரு பெரிய சல்யூட் ஒன்று அடித்து "சாரி சார்.. எஸ் சார்" என்றார்.

எதுவும் புரியாத ராமன் பயந்து பதில் சலுயூட் அடித்தான்.

அருகிலிருந்த மற்ற போலீஸ்காரர் இன்ஸ்பெக்டர் காதில் ஏதோ சொல்ல, "டில்லில இதாரா? கொத்து மேன்.." என்று சல்யூட் செய்த கையை எடுத்தார்.  ராமனை முறைத்தார்.

"என் பேரு ராமன். அவ முழு பேரு நிர்மலா சீதா.  சுருக்கமா சீதானு கூப்பிடுவேன்.. நிர்மலா சீதா நிர்மலா சீதானு கூப்பிட்டா வாய் வலிக்கும் பாருங்க.. இதுக்கு போயி சல்யூட் எல்லாம் அடிக்க வைக்கறீங்களே  சார்?"
  
"ம்ம்ம்" என்றார் இன்ஸ்பெக்டர் சுதாரித்து.  "ஆயித்து" சீட்டை மறுபடி படித்துப் பைக்குள் போட்டுக்கொண்ட இன்ஸ்பெக்டர் அருகிலிருந்த மற்ற போலீஸ்காரரிடம் ஏதோ சொல்லி ஹோட்டல் உள்ளே அனுப்பினார். பிறகு  ராமனைத் தோளில் கை போட்டு "என்னா ஊரு?.. ச்செந்நாயா? இங்கே என்னத்துக்கு வந்திங்க..?" என்றார்.

"செநாயில்ல சார்..  சென்னை..  ரெண்டு தடவை சொல்லிப் பாருங்க வரும்.  ஹுப்லி  சுத்திப் பாக்க வந்தோம்"    

இன்ஸ்பெக்டர் குறும்புடன் கண் சிமிட்டினார்.  "ம்ம்.. இங்க வந்து கன்னடாகாரங்களை பேக்குனு கிண்டல் செஞ்சீங்களா?"  

"ஆஹா.. நீங்க நம்மூரா.. நல்லதா போச்சு.. உங்களுக்குத்தான் சார் புரியும் எங்க நிலமை" என்றான் ராமன் நிம்மதியுடன்.

ராமன் தோளிலிருந்து கைகளை எடுத்து திடீரென்று நிமிர்ந்த இன்ஸ்பெக்டர், "நம்முரு கிம்மூரூ எதுமில்ல..  நன்னெஸ்ரு ஸ்ரீவத்சன்.. இன்ஸ்பெக்டர் ஸ்ரீவத்சன்.. தமிள் தெரிம்.. சீட்டுல என்ன எள்திருக்குது தெரிமா?"

"தெரியாது சார்"  என்றான் ராமன். மனதுள்: "தெரிஞ்சா நானே படிச்சிருக்க மாட்டனா? இதான் பேக்குன்றது.. இது தெரியாம இவன்லாம் போலீஸ். என்ன பெரிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீவத்சன் வேண்டிக்கிடக்கு?"

"படிக்கிறேன் கேளு" என்ற இன்ஸ்பெக்டர் சீட்டை கண்ணெதிரே உயர்த்தி "உங்க பெண்டாட்டியை உயிருடன் பார்க்கனுமின்னா ஒரு மணி நேரத்துல 99640 10763 நம்பருக்கு போன் செய்யுங்க.. அன்புடன் ராவன்" என்றார்.  "இதான் எள்திருக்கு புரியுதா?". ஒரு கணம் அமைதி காத்த இன்ஸ்பெக்டர் "நீங்க கிண்டல் செய்திங்களே ஓட்டல்காரர்.. என்ன சொல்றாரு தெரிமா?" என்றார்.

"அய்யயோ அவரு ஏதாவது பொய் சொல்வாரு சார்.. சாப்பிட்டதுக்கு காசு கொடுத்தாச்சு சார்"

"அடச்சீ.. உங்க வொய்பு காணாம போன மெசேஜ் கொடுத்து என்னை இப்போ ஹெல்ப் பண்ணச் சொல்றாரு.. இதான்யா கன்னடா காருண்யம்.. என்னா சொல்றே இப்போ எங்களைப் பத்தி?"

"ரொம்ப சரி..  இல்லே ரொம்ப சாரி..  இனிமே கிண்டல் பண்ண மாட்டேன்.. மன்னிச்சுருங்க.. என் சீதாவுக்கு  என்னாச்சு சார்?"

"யாரு சீதா?"

"அது இவர் வொய்ப் சார்.. டேஞ்சர் டேஞ்சர்" என்று பதறினான் லக்கி.

"ஒ.. ஹென்ட்தி.. ஒகே.. ஒகே.. நீ யார்யா? டவுசர்ல ஓணான் ஏறிக்கின மாதிரி குதிக்கிறே? நீதான் ராவனா?"

"அய்யோ நான் லக்கி. இவரோட பிரதர் சார்.  இவரு ராமன். இவரோட டேஞ்சர்தான் சீதா.  எந்த அவசரமும் இல்லே.. நிதானமா தேடுங்க சார்.. டேக் யுவர் டைம்.." என்ற லக்கி செல்லமாக இன்ஸ்பெக்டர் தோளில் கை போட்டு, "ஆமா கடத்தல் செஞ்சுட்டு அது என்ன அன்புடன் ராவன்னு எழுதியிருக்கான்? ரொம்ப பணிவான கடத்தல்காரன் போலருக்கு. எங்க அண்ணியைப் பத்தி தெரிஞ்சா அப்படி எழுதியிருக்க மாட்டான்.." 

"ஷட் அப். தோள் மேல கை எடு மேன்.  உன் பேர் என்ன சொன்னே? லக்கி.. இனி பேசினே வாய் இள்த்து கொக்கி மாட்டிருவேன்.." என்ற இன்ஸ்பெக்டர் ராமனிடம் திரும்பி, " மிஸ்டர் ராமன்.. இங்கே வந்த மேலே உங்க வொய்பு ஹெஸ்ரேனு.. சீதா.. கலிதாயிடுச்சா? காணாத் போயிடுச்சா? இல்லே ஓடிப் போச்சா?" பதிலுக்கு காத்திராமல் சிரித்தார். "நீங்க ராமன். இந்தாளு லக்ஷ்மன். ராமன் வொய்பு சீதா. கிட்னாப் செஞ்சாரு ராவன்.  ரைட்டு.   ஏதாவது டிராமா ட்ரூப் கம்பெனியா? இன்ஸ்பெக்டர் வச்சு ரியல் டைம் காமெடி பண்றீங்களா? டபுள் முட்டிக்கு டபுள் முட்டி. ஜாக்ரதா"

"சத்தியமா டிராமா இல்லே சார். ஊர் பாக்க வந்தோம்" என்றான் ராமன். "ஸ்ரீரங்கம் போலாம்னு சொன்னேன் சார்.  கேக்காம ஹுப்லி வரணும்னு குதி குதின்னு குதிச்சா சார். அவ வெயிட்டுக்கு அப்படி குதிச்சா வீடு தாங்குமா? அதான் ஒத்துக்கிட்டு இங்கே வந்தேன்"

"மிஸ்டர் ராமன்.. எனக்கு என்னவோ உன்னைப் பாத்தா உன் வொய்ப் ஓடிப் போயிருப்பானு தோணுது.."

"இல்லே சார்.. சீதா ராமனை விட்டு ஓடவே மாட்டா.  ராமாயணம் படிச்சதில்லையா நீங்க ஸ்ரீவத்சன் சார்?" என்றான் லக்கி. சட்டென்று வாயைப் பொத்திக் கொண்டான்.

"ஹா.." என்றார் ஸ்ரீவத்சன் உணர்ச்சி வசப்பட்டு. "ராமாயணம்! ராமனை விட்டு சீதா ஓடியிருக்கணும் மேன்.. டீச் ஹிம் எ லெசன்.. ஓடியிருந்தா எத்தன சீதைங்க நாட்டுல சித்ரஹிம்சே ஆவாதிருப்பாங்க!"

ராமன் "இல்லே சார்.. இந்த சீதா இந்த ராமனை விட்டு ஓடவே மாட்டா சார்.." என்றான். "என்னைக் கழுத்தறுக்கவே பொறந்தவ சார். கொஞ்சம் கண்டுபிடிங்க சார்"

சிரித்து விட்டார் இன்ஸ்பெக்டர். "தமாஷ் ஆளு. சரி. யார் கொடுத்தாங்க இந்த சீட்டு?"

"ஒரு சின்னப் பையன் சார்.."

"சின்னப் பையனா? எப்படி?"

"மூணடி ரெண்டு அங்குலம் இருப்பான் சார்.. சின்ன.." என்று அளந்து காட்டினான்.

"டேமிட் மேன்.. எப்படி கொடுத்தான்.. எங்கருந்தான்..?"

"அதோ அந்தப்பக்கதுலந்து  ஓடி வந்து கொடுத்தான் சார்"

"ஆமேலே?"

"கொடுத்த உடனே இதோ இந்தப்பக்கமா ஓடிட்டான் சார்"

"யூஸ்லெஸ்" என்று கடுத்தார் இன்ஸ்பெக்டர்.. "சரி..  முகம் பாத்திங்களா?"

"இல்லே சார்.. ராமன் வில் முறிச்ச மாதிரி.. கொடுத்தது கண்டோம்.. அடுத்தது காணோம்" என்றான் லக்கி.

"வில்லா? என்னா வில்? யாரு முறிச்சாங்க?"

"விடுங்க சார், அது ராமாயணம்"

"என்னா மேன் கிண்டலா?  இவரு வொய்ப் உயிர் பத்தி எவனோ ரேன்சம் நோட்டு எள்திருக்கான்.. நீ என்னா என் கிட்டே ராமாயணம் படிக்கிறே? ஸ்டேசன் கூட்டிப்போய் பின் பக்கம் கையக் கட்டி முட்டிக்கு முட்டி தட்னா எல்லாம் சொல்வே.. உன்னைப் பார்த்தா நீதான் கடத்தல் ஆள் போலத் தெரிது.. " என்றபடி லக்கியின் வாயைப் பிடிக்கப் போனார்.

"ஐயோ கோவிச்சுக்காதிங்க பல்ராம் நாய்டு சார்.." என்ற லக்கி ராமனைச் சுட்டி, "இவனாச்சு.. இவன் பெண்டாட்டியாச்சு.. ஆளை விட்ருங்க" என்றான். 

"சார்.. வந்த வேலையை கவனிங்க.. ஒண்ணு நீங்க விசாரிங்க.. இல்லே அந்த நம்பருக்கு போன் செஞ்சு நானே விசாரிக்கறேன் சார்.. கொடுங்க.." என்றான் ராமன்.

"பாடியை என்ன செஞ்சாங்கனு கேளுணா"

"டே.. அவ மட்டும் வரலேனா உன் பாடியை என்ன செய்றேன் பாரு" என்றபடி ராமன் செல்போனை எடுத்தான். "நம்பர் சொல்லுங்க இன்ஸ்பெக்டர்.. ப்லீஸ்.. ஒரு மணி கெடுவுல அரை மணி  வெட்டி அரட்டை அடிச்சாச்சு.  இனிமேலாவது வேலையைக் கவனிப்போம்.. நம்பர் சொல்லுங்க சார்"

ஹோட்டலுக்குள் சென்ற போலீஸ்காரர் அப்போது திரும்பி வந்தார். அவருடன் ஒரு நடுத்தர வயது தம்பதியரும் வந்தனர். "சார்.. நிம்ம அனுமான சரியாகித்து.. இவர மகளு இவத்து பெளகே ஓடித்தாரே சார்.. " என்றார் ஸ்ரீவத்சனிடம்.

"சக்சஸ் ஸ்ரீவத்சன், சக்சஸ்" என்று உரக்கக்கூவிய இன்ஸ்பெக்டர் தனக்குத்தானே முதுகில் தட்டிக் கொண்டார்.  "கேஸ் க்லோஸ்ட்"

"யோவ் பல்ராம் நாயுடு.. என்னய்யா இது..? என் பெண்டாட்டிய எவனோ கடத்திட்டு போயிருக்கான். நம்பர் குடுயானா இந்த போலீஸ்காரன் என்னவோ சொல்றான்.. உனக்கு நீயே சபாஷ் போட்டுக்குறே?"  ராமனுக்கு கடுப்பு.

"மிஸ்டர் ராமன்.. உங்க வொய்ப்  கொஞ்ச நேரத்துல வருவாங்க பாருங்க"  

"என்ன சொல்றீங்க?"

"ஆள் மாறாட்டம் நடந்திருக்குது.. இதோ பாருங்க.." என்ற ஸ்ரீவத்சன், மற்ற போலீசை பார்த்து "ஹெஸ்ரேனு?" என்றார்.

"கோவிந்த நாராயன் சார்"

"சீ.. உன் பேர் இல்லையா.. இந்த அம்மா பேரு என்ன?"

"சீதாலட்சுமி" என்றார் பெண்மணி. "கூப்பிடுறது சீதா"

"ஐயா பேரு?"

"சீதாராமன்" என்றார் ஆண்மணி. "கூப்பிடுறது சீதா"

"வொய்ப் பேரு சீதா.. ஹஸ்பென்டு  பேரும் சீதா.. என்னா வேதனை.. நாட்டுல பேர் கிடைக்லியா உங்க அம்மா அப்பாவுக்கு?  எங்கே அவுங்க?"

"செத்துட்டாங்க சார்"

"அவுங்க இல்லே.. நாட் பேரென்ட்ஸ் மேன்.. அவுங்கனா.. உடுகி.. உங்க மகளு.. எங்கே அவுங்க..  வேர் இஸ் யுவர் டாட்டர்?"

"ஓடிப் போயிட்டா சார்..  லவ் பண்ணின ஆளைக் கல்யாணம் பண்ணிக்கறதா எழுதி வச்சுட்டு ஓடிட்டா சார்.. இன்னிக்கு சாயந்திரம் சந்த்ரமொலீஸ்வரர் கோவில்ல அவளுக்கு இன்னொருத்தரோட கல்யாணம் ஏற்பாடு செய்திருந்தோம்.. ஆனா ஓடிப்போயிட்டா சார்""

"சக்சஸ் ஸ்ரீவத்சன், சக்சஸ்" என்றார் ஸ்ரீவத்சன் மறுபடி. "என்னா கோவிந்த்?"

"அவுது சார்.. சக்சஸ்" என்று முதுகைக் காட்ட, ஸ்ரீவத்சன் செல்லமாக அவருக்கு ஒரு ஷொட்டு வைத்தார்.

"ஏன் சார்.. இவரு ஒய்ப் காணோம்.. அவங்க பொண்ணு காணோம்.. எந்தப் பொண்ணு காணாத போனாலும் சக்சஸா?" என்றான் லக்கி. 

"இன்னொரு வாட்டி எவனாவது சக்சஸ்னு சொன்னீங்க.. எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன்.. என் சீதா எங்க சார்? போலீஸ்னா கொஞ்சமாவது போலீஸ் வேலை பார்க்க வேண்டாம்?" என்றான் ராமன்.

"காம் டவ்ன் மிஸ்டர் ராமன்.."  என்று ஸ்ரீவத்சன் சொல்லவும் ஒரு சிவப்பு நிறக் கார் ஹோட்டல் வாசலில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.  முன்னிருக்கை டிரைவரும் ஆசாமியும் ஒத்திகை பார்த்தாற்போல் கதவைத் திறந்து ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தனர். 

பின்னிருக்கையிலிருந்து ஒரு இளம் தம்பதி மாலையும் கழுத்துமாய் இறங்கினர். தொடர்ந்து.. சீதா இறங்கி வர, ராமன் உடனே ஓடினார்  "சீதா!".  

மணமக்கள் சீதாராமசீதாலட்சுமி தம்பதியினர் காலில் விழுந்து வணங்கினர்.  பெண்ணைத் தழுவிக் கொண்ட பெற்றோர் "பாத்திமாமேரி.. பாத்திமாமேரி.." என்று உருகினர்.

"அப்பன் சீதா.. அம்மா சீதா.. சரி.. பொண்ணு பேரு பாத்திமாமேரியா?"  என்றான் லக்கி.  

"அதானே?" என்றார் ஸ்ரீவத்சன்.  

"அதே கேள்தினி நானு" என்றார் கோவிந்த் நாராயன்.

"ஆமா சார்.. கல்யாணம் ஆகி ரொம்ப வருஷமா  எங்களுக்கு பிள்ளையே பொறக்கலே.. இந்துக் கடவுள் அத்தனையும் பல வருஷம் வேண்டி வேண்டி டயம் வேஸ்ட் ஆயிடுச்சு. லாயக்கில்லேன்னு கிறுஸ்தவ முஸ்லிம் கடவுள் கிட்டே வேண்டினோம்.. உடனே பலனாயிடுச்சு.. எந்த கடவுள் ஹெல்ப் பண்ணிச்சுன்னு தெரியாம இதுல பாதி அதுல பாதி.. அதான் பாத்திமாமேரி.." என்றார் சீதாராமன்.

"நல்ல வேளை சார்.. முதல்லயே மூணு கடவுளையும் வேண்டிப் பலன் கிடைச்சிருந்தா பாத்திமாமேரிதுர்கசந்த்ரிகானு பேர் வச்சிருப்பாங்க.." என்றான் லக்கி. "அடென்டன்ஸ் எடுத்த ஸ்கூல் டீச்சர் எல்லாம் வேலையை விட்டுருப்பாங்க.."

அதற்குள் சீதாவும் ராமனும் இன்ஸ்பெக்டரிடம் வந்தனர்.  "ரொம்ப தேங்க்ஸ் இன்ஸ்பெக்டர்.. என் வொய்ப் கிடைச்சுட்டா" என்று கை குலுக்கினான் ராமன்.  சீதாவிடம், "சீதா.. இன்ஸ்பெக்டர் கில்லாடி தெரியுமோ? நீ வந்துருவேன்னு அசால்டா சொன்னாருனா பாரேன்.. அலட்டிக்கவே இல்லேங்கறேன்..?!"

இன்ஸ்பெக்டர் பெருமையுடன்  "இதெல்லாம் இப்ப ருடீனாயிருச்சு மிஸ்டர் ராமன்.. கல்யாணப் பொண்ணு அம்மாவைக் கடத்தல் பண்றது... ஆமேலே மிரட்டிக் கல்யாணம் பண்றது.. ருடீன்.. கன்னடா பாஷைல சீட்டையும் உங்க முகத்தையும் நோடி தக்ஷ்ணா மேட்டர் புரிஞ்சிடுச்சு. அதான் கோவிந்த் உள்ளே அனுப்பி விசாரிக்க சொன்னேன்.. ஓடிப்போன பொண்ணு மேட்டர்  ஏதா இருக்குதானு.. சக்சஸ்" என்றார். 

"ஆமாங்க" என்றாள் சீதா. "காலைல உங்க கிட்டே கோவிச்சுகிட்டு வாசல்ல வந்தேனா? சிவப்பு கார்ல ரெண்டு பேர் வந்து சீதாவானு என்கிட்டே கேட்டாங்க.. ஆமான்னதும் சட்னு என்னை பின் சீட்ல திணிச்சு சர்ர்ர்னு கெளம்பிட்டாங்க.. ரெண்டு மைல் தள்ளி கிருஷ்ணர் கோவில் இருக்கு.. என்ன அழகான கோவில்ன்றீங்க?"
"ரொம்ப முக்கியம்.. விஷயத்தை சொல்லு" என்றான் ராமன்.

"கிருஷ்ணர் கோவில்ல இறக்கிவிட்டு இதோ இருக்காரே மாப்பிளை.. இங்க வாப்பா" என்றாள்.  மணமக்கள் அருகில் வந்தனர். "இவர் தான் மாப்பிள்ளை. பேரு ராவன். இந்த ராவனும் நானும் கோவில்ல இறங்கினோம். ஒரு சீட்டு எழுதி டிரைவர் கிட்டே கொடுத்தார்.  அப்புறம் எங்கிட்டே வந்து.. நனகு நிம்ம மகளே மதுவெனு ஏதோ சொன்னார்..  என்னப்பா விஷயம்.. எதுவானாலும் இங்லிஷ்லயோ இந்திலயோ சொல்லுப்பா.. ஏன்னா நான் தமிழ்நாட்டுக்காரினேன்.. இப்பவே உன் மகளை எனக்கு கல்யாணம் பண்ணி வை, இல்லின்னா உன்னைக் கொன்னுருவேன்னார் இங்லிஷ்ல... உன் புருசனுக்கு சீட்டு அனுப்பியிருக்கேன்னார். எனக்கு இரண்டு தடவை சிரிப்பு வந்துடுச்சு.. எதுக்கு சிரிக்கிறீங்கனார்.. கொன்னுடுவேன்னாலும் ரொம்ப பணிவான பையன் தெரியுமோ..?"

"விஷயத்துக்கு வாங்க மேடம்" என்றார் ஸ்ரீவத்சன்.

"எனக்கு மகளே கிடையாது அதான் சிரிச்சேன்னு சொன்னேன்.  வொய் செகன்ட் டைம்னார்.. என் புருசனுக்கு கன்னடம் தெரியாது அதான் மறுபடி  சிரிச்சேன்னேன்.. விஷயம் புரிஞ்சதும் ரெண்டு பேரும் சிரிச்சோம்..  அப் க்யா கரேன்.. வாட் டு டுனார்..  டோன்ட் வொரின்னேன்..  அவங்க லவ்வை புரிஞ்சுக்கிட்டு  நான் பொண்ணுக்கு போன் போட்டு ஹோட்டல்லந்து தப்பிச்சு அப்பா அம்மாவுக்குத் தெரியாம ஓடிவரச் சொன்னேன்.."

"திவ்யம்.." என்றான் லக்கி.

"மாப்பிள்ளையோட தம்பி பாருங்க ஊமையாம்.. உங்களுக்கு அப்படி வாய்க்கக் கூடாதோ? ஹும்.." என்று லக்கியை முறைத்த சீதா, "அப்புறம் நானே முன்னால நின்னு கல்யாணம் செஞ்சு வச்சேன்.. என்னை ரொம்ப அன்பா நடத்தி ஒரு தங்கச் சங்கிலி வேறே வெத்தல பாக்கோட கொடுத்து அனுப்பினார் மாப்பிள்ளை.. நல்லா இருங்க ரெண்டு பேரும்னு ஆசீர்வாதம் செஞ்சு இங்கே அழைச்சுட்டு வந்தேன்".

"பார்த்திங்களா மிஸ்டர் ராமன்.. கன்னடா ராவன் எவ்ளோ கண்ணியம்னு.. வெல்டன் மிசஸ் சீதா.. உங்களாலே ஒரு சூயிசைட் அவாயிட் ஆயிருக்குதுனு சொல்லலாம்.." என்றார் ஸ்ரீவத்சன்.  "ஆயித்து கோவிந்த்.. நாம போலாம். கேஸ் க்ளோஸ்.  சக்சஸ்!".  ஜீப்பில் கிளம்பினார்.

ராமன் சீதாவின் காலில் விழுந்து வணங்கிய மணமக்கள் "நாங்க வரோம்.. எங்களுக்கு பெண் பிறந்தா சீதானு பேர் வைக்கிறோம்"  

"அய்யய்யோ!" என்றான் லக்கி.

"சும்மா இருடா லூசு" என்று லக்கியை அடக்கிய சீதா, ராமனிடம் "பாத்தீங்களா..  பேக்கு பேக்குன்னிங்களே.. அந்தப் பையன் என்னை எவ்ளோ பணிவா நடத்தினான்! நம்ம கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கறாங்க.. கல்லாக்காரர் பதறிப்போய் உதவி செஞ்சாருன்றீங்க.. இன்ஸ்பெக்ட்ர் உடனே வந்தாருன்றிங்க "

"ஆமாண்ணி.. இனிமே இந்திக்காரனை மட்டும் திட்டுறதுனு வச்சுக்குறோம்.." என்றான் லக்கி. 

"நீ சொல்றது சரிதான் சீதா.. என்பேர்ல தான் தப்பு.. என்னை மன்னிச்சுரு.. நீ சுர்ருன்னு கிளம்பிப் போனதும் பதறிட்டேன்" என்றான் ராமன்.  


"போயிட்டு போவுது.. இந்த சங்கிலிக்கு மேச்சா எட்டு பவுன்ல வளையலும் வைரத்தோடும் வாங்கிக் கொடுத்துடுங்க சரியாயிடும்" என்ற சீதை ராமனை மன்னித்தாள்.







45 கருத்துகள்:

  1. பூவாய்ப் பூத்திருக்கும் செவ்வாய்..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. இளங்காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  3. டவுசர்க்குள்ளே ஓணான்...

    நல்ல ரசனை... இருந்தாலும் எட்டு பவுன் வளையலும் வைரத்தோடும் அதிகமில்லையோ....

    பரவாயில்லை... நம்ம சீதா தானே...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஸ்ரீராம்... வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  5. ம்ம்ம்ம்ம் என்ன இருந்தாலும் நம்ம ராமாயணத்தையும், மஹாபாரதத்தையும் கடவுள்களையும் தான் எவ்வளவு வேணாலும் கிண்டல் பண்ணலாம்! தாங்கிப்போம்! :)

    பதிலளிநீக்கு
  6. நல்ல நகைச்சுவைக் கதை. இதுக்கு ஓவியர் செல்லமோ ராமுவோ நல்லா படம் போட்டிருப்பாங்க. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. துளசிதரன்: அப்பாதுரை சார்!!! செம காமெடி! நையாண்டி! சிரிப்பு வெடி போங்க!! ரசித்தோம்!!! பாராட்டுகள் சார்!

    கீதா: ஹா ஹா ஹா அப்பாதுரை சகோ பின்னிப்புட்டீங்க!! கலக்கிட்டீங்க! ஒவ்வொரு வரியும் சிரிச்சு முடில. எல்லா டயலாக்குலயும் ஒவ்வொணு கோட் பண்ணலாம் அத்தனை சரவெடி!!! 10தௌசன்ட்வாலா!!!?? சிரிச்சு முடிலப்பா...நிறைய இடங்கள் தலவர் சுஜாதாவை நினைவுபடுத்தியது!!! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ரசித்து வாசித்தேன் ஒவ்வொரு டயலாக்கையும் இரண்டு மூன்றுமுறை....இன்றைய காலைப் பொழுதில் நல்ல ஒரு ரிலாக்ஸேஷன்! ஸோ உங்களுக்கு ஒரு பொக்கே!

    ஸ்ரீராம் மிக்க நன்றி. நான் என்னடா அப்பாதுரை சகோவின் கதை வரலியே இன்னும்..ரெண்டு நாள் முன்னாடி கூட உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சுருந்தேன்...ஒரு வேளை அவருக்கு நேரமில்லையோனு நினைச்சேன். வந்துருச்சு...

    பதிலளிநீக்கு
  8. விறுவிறுப்பான ஒரு குறும்படம் எடுக்கலாம்...! அசத்தல்...!

    பதிலளிநீக்கு
  9. அப்பாதுரை சார், இதே மாதிரி மேரி மாதா, நபி ஸல், குரு நானக் ஆகியோரின் பெயர்களை உபயோகித்து ஒரு நகைச்சுவைக்கதை எழுதினால் தக்க சன்மானம் கிடைக்கும். மல்லாந்து படுத்துக்கொண்டு துப்புவதில்தான் நம்மவர்களுக்கு எவ்வளவு பெருமை! எங்கள் பிளாக்-ல் இப்படியொரு கதையா? வருந்துகிறேன். மிகவும் வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அப்பாதுரை சார் செம சூப்பர் செம kk நல்ல ஓடவிட்டு இருக்கீங்க மொழி மோடி போலீசுனு சல்யூட்டு....... நக்கல் கலக்கல்....... கதையும் நல்ல பேக்கு ஆயிருக்கு (இது இங்கிலிஷ் பேக்கு) 'சீதா ஓடி இருக்கனும் டூ டீச் ஹிம் லெசன்'..... பாத்திமாமேரி ஹா ஹா சிரிச்சேன் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  11. பேகு,பேகு ஈ தரா கதைகளுபேகு. சிரிப்புக்கு பஞ்சமே இல்லை.எட்டுபவுன் வளையலும்,வைரத்தோடும் மன்னிப்பிற்கு. அதிகம்தான். அன்புடன்

    பதிலளிநீக்கு
  12. ஹா ஹா ஹா சிரிச்சுச் சிரிச்சுப் படிச்சதில் பாதிதான் படிக்க முடிஞ்சுது மீதிக்கு கொஞ்சத்தால வாறேன்:).. லக்கி... நல்ல ஷோட் நேம்:).. இதை லக்குமணன் பார்த்தாரோ அவ்ளோதேன்:)..

    கமல் அங்கிள் சிவனாக வரும் படம் பார்த்த பீலிங்கா வருது... ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  13. வாய் விட்டு சிரிக்க வைத்த கதை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  14. ஒரிஜினல் நகைச் சுவை இத்துடன் சீதை ராமனை மன்னிப்பது நிற்குமா அப்பாதுரையின் எழுத்தின் லாவகமே வேறு அந்த தளம் அவருக்கே உரியது பாராட்டுகள் அப்பாதுரை சார்

    பதிலளிநீக்கு
  15. சகோ அப்பாத்துரையை முதன்முதலில் கோபு அண்ணனின் பக்கம்தான் படம் பார்த்தேன்.. அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் வித்தியாசங்கள் 6 இருக்கின்றன:).. மிகுதி எல்லாம் பேசமாட்டேன்ன்... அம்மம்மா சொல்லியிருக்கிறா எனக்கு.. ஆம்பிளைப்பிள்ளைகளோட பேசக்கூடாது அதிரா என:) அதனால பேசாமல் போறேன்ன்:)... ஹையோ படிச்சதும் கிழிச்சு கூவத்தில போட்டிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:).

    பதிலளிநீக்கு
  16. ஹா ஹா ஹா கதை கலக்கல்...

    //"போயிட்டு போவுது.. இந்த சங்கிலிக்கு மேச்சா எட்டு பவுன்ல வளையலும் வைரத்தோடும் வாங்கிக் கொடுத்துடுங்க சரியாயிடும்" என்ற சீதை ராமனை மன்னித்தாள்.


    //
    ஹா ஹா ஹா வைரத்தோடு வாங்கித்தருவேன் என முருகனுக்குச் சொல்லி நேர்த்தி வச்சு வச்சுத்தானே மீயும் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்:)..

    பதிலளிநீக்கு
  17. //G.M Balasubramaniam said...
    ஒரிஜினல் நகைச் சுவை இத்துடன் சீதை ராமனை மன்னிப்பது நிற்குமா ///

    ஹா ஹா ஹா ஐயா நீங்க எந்த உலகத்தில வாழ்ந்து கொண்டிருக்கிறீங்க?:) சீதை ராமனை மன்னிப்பது நின்று விட்டால்ல் உலகில் குடும்பம் என்ற ஒன்றே இருக்காது தெரியுமோ?:) ஹையோ ஹையோ:)... ஹா ஹா ஹா படிச்சதும் கிழிச்சு வைகை ஆத்தில வீசிடுங்கோ ஐயா.

    பதிலளிநீக்கு
  18. கமல் அங்கிள் சிவனாக வரும் படம் பார்த்த பீலிங்கா வருது... ஹா ஹா ஹா - ஓ... அந்தப் படத்துலதான் சிம்ரன் ஆன்டி நடிச்சாங்களோ?

    படிச்சதும் கிழிச்சு வைகை ஆத்தில வீசிடுங்கோ ஐயா. - அவர் பாவம் காவிரி ஆத்தை பத்திரமா தமிழ் நாட்டுக்கு வந்துடாம பாத்துக்கிட்டிருக்கிறார். அவர்கிட்ட எங்கோ இருக்கிற வைகை ஆற்றை, அதிலும் தண்ணியும், மணலும் இல்லாத வைகை ஆத்துல வீசச் சொல்றீங்களே.

    வைரத்தோடு வாங்கித்தருவேன் என முருகனுக்கு - முருகனுக்கா? ஆண்களுக்கு 'கடுக்கன்'தானே... தோடு எங்க என்று எழுத நினைத்தேன். அப்புறம்தான், 'தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடி' ஞாபகம் வந்தது. இத்தனை காலமாச்சு.. முருகனுக்குத் தெரியாதா உங்கள் 'நேர்த்தி' பற்றி.

    பதிலளிநீக்கு
  19. ஒரு முழுநீள ஈஸ்ட்மன் கலர் தமாஷு. கன்னடம், கடத்தல், கல்யாணம் எனும் திரிகோண சிக்கலில் பேக்குத்தமிழன்! கதையைப் படித்துகொண்டிருக்கையில், தமிழன் ஹிந்திப் படிக்காட்டியும் கன்னடம் படிக்கிறது நல்லது-ன்னு தோணிச்சு. வாட்டாள் நாகராஜுக்கு தெரியவந்தால் உங்களுக்குப் பரிசு நிச்சயம். எங்கள் ப்ளாகின் புகழும் ப ர வு ம் !

    பதிலளிநீக்கு
  20. படித்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும் (பொறுமைக்கும் அருமைக்கும் :-) நன்றி.

    பதிலளிநீக்கு
  21. அவர்களைப் பற்றிய சாயலான ஜோக்கையே தணிக்கை செஞ்சுட்டாங்க.. இதுல மதம் கடவுள் பத்தி நான் இன்னும் பதில் எழுதினா ஸ்ரீராம் அடிக்கவே வந்துருவாரு..

    ஒன்று தெளிவானது... இதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்... அடுத்தவர் கடவுள் என்று வரும் பொழுது அத்தனை ஆத்திகர்களும் நாத்திகர்கள் தான் :-)

    பதிலளிநீக்கு
  22. //அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் வித்தியாசங்கள் 6 இருக்கின்றன:)

    ஹிஹி.. கண்ணாடியைச் சொல்றீங்களா? அது கையால வரைஞ்சது.. ஹிஹி..

    பதிலளிநீக்கு
  23. ஹாஆஹா :) விழுந்து புரண்டு சிரித்தேன் :)

    பதிலளிநீக்கு
  24. என்ன இருந்தாலும் துரை, துரை தான். அவருக்குன்னு ஒரு 'இது' இருக்கு, பாருங்க!

    எது?.. அடையாளம்.

    கதைத் தலைப்பே இதைச் சொல்ல வைச்சிடுத்து. முழுக் கதையையும் படிச்சிட்டு வர்றேன்...

    பதிலளிநீக்கு
  25. @ அதிராவ் //கமல் அங்கிள் சிவனாக வரும் படம் பார்த்த பீலிங்கா வருது... ஹா ஹா ஹா//

    கர்ர்ர்ர் :) வந்து மலை உச்சிலருந்து தள்ளி விட்ருவேன் உங்களை அங்கிள்னு சொன்னதுக்கு

    பதிலளிநீக்கு
  26. அதிரா உங்களை எங்க பசுமைத் தீர்ப்பாயம் பிடிச்சு வைச்சுக்கும்....எங்க கூவத்துல ஏற்கன்வே குப்பை மிதக்குது..அடுத்த வீட்டு நதில குப்பை போடறதா அதெப்படி நியாயம் வேணும் எனக்கு! எ பி நாட்டாமை பஞ்சாயத்த கூட்டுங்க!!! அதிரா..நீங்க ஸ்காட்லாந்துலருந்து இங்க எங்க கூவத்துல குப்பை போடச் சொல்றீங்க...நாங்கல்லாம் சேர்ந்து கூவிடுவோமாக்கும்!!!ஹாஹாஹாஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  27. நெல்லைத் தமிழன் said...
    //. அந்தப் படத்துலதான் சிம்ரன் ஆன்டி நடிச்சாங்களோ?//
    ஸ்ஸ்ஸ்ஸ் சிம்ரன் பணக்காரப் பெண் தெரியுமோ?:) ஆண்டி எண்டெல்லாம் சொல்லப்புடா:)..

    ஹா ஹா ஹா அப்போ வைகையில தண்ணி இல்லயா இப்போ?.. மழை கொட்டுது என்றார்களே?:).. நேக்கு ஒண்ணுமே பிரியல்ல:).

    //முருகனுக்கா? ஆண்களுக்கு 'கடுக்கன்'தானே... தோடு எங்க என்று எழுத நினைத்தேன்.//
    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் லேடீஸ் கோட்ஸ் க்குத்தான் வாங்கிக் கொடுப்பேன்:) ஆனா வள்ளிக்குப் போடுவேன் என முருகனுக்கு சொல்லி வைப்பேன்:) ஹா ஹா ஹா:).. உவ்வளவும் பேசுற நேரம் ஒரு வைர நெக்லெஸ் வாங்கி திருப்பரங்குன்றத்து வள்ளிக்குக் குடுத்து .. இது அதிராவின் நேர்த்திக்கடன் பாக்கி:) எனச் சொல்ல முடியுமோ நெ.தமிழன்?:) ஆனா ஒண்ணு:) இந்த விசயம் நமக்குள் இருக்கட்டும்:) அஞ்சுட கண்ணில பட்டிட வாணாம்ம்ம்:))..

    பதிலளிநீக்கு
  28. கமல் அங்கிளா? அதிரா அதுவும் உங்களுக்கு!!! நீங்களே பாட்டி!! ஏஞ்சல் எங்க சொல்லுறது.இதை!!?..நெல்லை வேற அதிராவுக்கு சிம்ரன் ஆண்டி ந்றாரு...ஏஞ்சல்..இங்க என்ன ந்டக்குது??!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  29. ///Angelin said...
    ஹாஆஹா :) விழுந்து புரண்டு சிரித்தேன் :)///

    ஹலோ நீங்க விழுங்கோ புரளுங்கோ தவழுங்கோ ஏன் குத்திக்கரணம் கூட அடிங்கோ.. நாங்க ஒண்ணும் வாணாம் சொல்லலியே:) ஆனா.. இதை எல்லாம் எங்கள் புளொக்கில வச்சுப் பண்ணக்கூடா:) பிக்கோஸ் அவிங்க இன்னும் இன்சூரன்ஸ் எடுக்கல்லியாம்:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)...

    ஊசிக்குறிப்பு:
    அஞ்சு, கீதா கொஞ்சம் சகோ அப்பாதுரையின் படத்தில் இருக்கும் 6 வித்தியாசங்கள் கண்டு பிடிங்கோ:)... சரியாகச் சொல்வோருக்கு.. கீதாக்காவின்(4 அ சேஞ்:)) கமெரா பரிசாக அளிக்கப்படும்:).. ஹா ஹா ஹ:)..

    பதிலளிநீக்கு
  30. இப்ப பஞ்சாயத்தை கூட்டியே ஆகனூமாக்கும்!! கூவம் வைகை எல்லாத்தையும் அதிரா குப்பையாக்குறாங்கனு ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  31. Thulasidharan V Thillaiakathu said...
    ///எ பி நாட்டாமை பஞ்சாயத்த கூட்டுங்க!!! அதிரா..நீங்க ஸ்காட்லாந்துலருந்து இங்க எங்க கூவத்துல குப்பை போடச் சொல்றீங்க..//

    அவ்வ்வ்வ்வ்வ் இதென்ன புயு வம்பாக்கிடக்கூஊஊஊஊ.. இப்போதான் நெல்லைத்தமிழனின் புளியோதரை செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.. இங்கின பஞ்சாயத்து எண்டதும் தொண்டையில கஜூ சிக்கிட்டுது கர்ர்ர்:) ஒரு மனிசர் நிம்மதியா ஒருவேளையாவது சாப்பிட முடியுதா இங்கின:).. முருகா கொஞ்சம் லெவ்ட் ஐ யைத்திறந்து பாருங்கோ:))..

    ///கமல் அங்கிளா? அதிரா அதுவும் உங்களுக்கு!!! நீங்களே பாட்டி!! ////

    ஹா ஹா ஹா... கிக் கிக் கீஈஈஈஈ:).. ஹையோ ஹையோ.. அதை நீங்களும் நம்பிட்டீங்களோ கீதா?:) அது வந்து கமல் அங்கிள் என்னை எப்பவும் செல்ல்ல்ல்ல்ல்லமாப் பாட்டி எண்டுதான் கூப்பிடுவார்:))..

    ஹா ஹா ஹா ஹையோ வழி விடுங்கோ வழி விடுங்கோ... மீ ரன்னிங்:))

    பதிலளிநீக்கு
  32. அதிரா அதெல்லாம் முடியாது எனக்கு நீங்க டிஎஸ்எல்ஆர் கேமரா கொடுத்தாதான் வித்தியாசம் சொல்லுவேன்...இதுல அப்பாதுரை டி ஷர்ட்டுக்கு மேச்சா ப்ளூகலர் கண்ணாடி போட்டுருக்கார்...அதிரா நீங்க வேற ஃபோட்டோ கொடுக்கலையே அப்புறம் எப்படி வித்தியாசம் சொல்ல முடியும்?!! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  33. //அதிரா அதெல்லாம் முடியாது எனக்கு நீங்க டிஎஸ்எல்ஆர் கேமரா கொடுத்தாதான் வித்தியாசம் சொல்லுவேன்......அதிரா நீங்க வேற ஃபோட்டோ கொடுக்கலையே அப்புறம் எப்படி வித்தியாசம் சொல்ல முடியும்?!! ஹிஹிஹி

    கீதா////

    நான் சொன்னனே:) என் வாய்தேன் நேகு எடிரி:).. பிச்சை வாணாம் நாயைப் பிடிச்சாலே போதும் என்ற கதையாயிட்டுதே என் கதை:).. வைரவா.... மரமேறி வந்திடுவேன்ன் திருப்பரங்குன்றத்துக்கு என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்:)

    http://www.cutecatcoverage.com/news/wp-content/uploads/2011/05/004.jpg

    பதிலளிநீக்கு
  34. நல்ல தமாஷ். காத்தாடி ராமமூர்த்தி ரேஞ்சில வசனங்கள்.
    துரை துரை தான்... மாறவேயில்லை.

    பதிலளிநீக்கு
  35. அது என்னமோ தெரியலை. என்னோட டாஷ்போர்டில் இருந்தோ, பின் தொடரும் பின்னூட்டங்களில் இருந்தோ எங்கள் ப்ளாக் வலைப்பக்கம் வரவே முடியலை! தலையைச் சுத்தி மூக்கைத் தொடறாப்போல் முகநூல் போய் அங்கே ஶ்ரீராம் கொடுத்திருக்கும் லிங்கிற்குப் போய் அப்புறமா வர வேண்டி இருக்கு! :)))))) எவ்வளவு சுத்து!

    பதிலளிநீக்கு
  36. இன்னும் புதிரலையா? அல்லது புதிர் எதுவும் தெரியலையா?

    பதிலளிநீக்கு
  37. நான் விடியற்காலையில் இருந்தே காத்திருக்கிறேன்..

    புதிர் விடுவிக்கும் புலி அல்ல..
    இருந்தாலும்....

    பதிலளிநீக்கு
  38. அப்பாதுரை சாரின் வித்தியாசமான நகைச்சுவை அட்டகாசம்.

    பதிலளிநீக்கு
  39. நகைச்சுவையும் நடையும் நன்று

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!