சனி, 11 நவம்பர், 2017

ஐந்து லட்சத்து எழுபத்தைந்தாயிரத்து எழுநூற்றிருபது





1)   தினமும் யாராவது ஒருவருக்கு மனிதநேயத்துடன், எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், செய்யும் உதவியில் பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து, தளராமல் உதவி செய்து வருபவர் அருப்புக்கோட்டை காந்தி நகரை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் பிருத்திவிராஜ்,32. அருப்புக்கோட்டை புளியம்பட்டி வி.ஏ.ஒ., வாக உள்ளார். தனது அறையில் 'லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்' என்ற போர்டை மாட்டி உள்ளார். (ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம்தான்.  அவர் இன்னும் மாறவில்லை.)   அவர் செய்யும் சேவைகள் இன்னும் கூட இருக்கிறது.






2)   பத்து ரூபாய்க்கு மருத்துவமும் பார்த்து, மருந்தும் கொடுக்கும் மருத்துவர் தெரியுமா?









3)  பிரசவத்திற்கு பின், உயிருக்கு போராடிய பெண்ணை, 10 கி.மீ., துாரம், கட்டிலில் சுமந்து சென்ற டாக்டருக்கு பாராட்டுகள் குவிகின்றன.  ஒடிசாவில்...







4)  லட்சங்களுக்கு அல்ல, லட்சியத்துக்கே அடிமை.







தமிழ்மணம்.

18 கருத்துகள்:

  1. இளங்காலைப் பொழுது அனைவருக்கும் இனிமையாகட்டும்..

    பதிலளிநீக்கு
  2. நல்லார் ஒருவர் உளரேல்...

    நன்மை விளைவதற்கு இவர்களைப் போல இன்னும் ஆயிரம்.. ஆயிரம்..

    அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஸ்ரீராம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  4. நான்காவது தவிர மற்றவை படிச்சது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. மனிதாபிமானத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல! வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  6. அனைவரையும் உளமாரப் பாராட்டுகிறோம்

    பதிலளிநீக்கு
  7. கடைசி இரண்டு செய்திகள் வாட்ஸ்-அப்-பில் உலா வருகின்றன. நல்லோர்கள் வாழ்க !

    பதிலளிநீக்கு
  8. அனைத்தும் படித்த செய்திகள். இருந்தாலும் தொகுப்பாக, உங்கள் பாணியில் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. போற்றுதலுக்கு உரியவர்களைப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல மனம் கொண்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். தொடரட்டும் பாசிட்டிவ் செய்திகள்.

    பதிலளிநீக்கு
  11. துளசி: அனைத்துச் செய்திகளும் அருமை. மருத்துவச் செய்திகளைப் பற்றி என் மகனுக்குச் சொல்லவேண்டும்....நல்லதைச் சொல்லிவைப்போம். என்றேனும் ஒரு நாள் அவன் மனதில் பதிவதைச் செயல்படுத்துவான் என்ற நம்பிக்கையுடன்...

    கீதா: பொய்யாமொழி!!! பெயருக்கேற்ப பொய்யா மொழியாய் நிற்கிறார்!! 10 ரூபாய் மருத்துவர் மற்றும் மருத்துவர் ஓம்கார் எவ்வளவு பாராட்டினாலும் முடிவில்லை....பாரட்டுகள் வாழ்த்துகள்

    பிருத்விராஜ் ஆம் முன்னாடி சொன்ன நினைவு இருக்கு கிராம அலுவலர் அவர்களின் நற்பணிகள் தொடரட்டும் மேலும் ...

    பதிலளிநீக்கு
  12. ஹப்பா காலைலருந்து அடிச்சு அடிச்சு ஒவ்வொரு வார்த்தையும் வருவதற்கே 15 நிமிஷம் 20னிமிஷம் ஆகி அதுவும் தப்புத் தப்பாவந்து இப்பதான் ஒழுங்கா வந்திருக்கு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. வாழ்வை பற்றிய நம்பிக்கையை கொடுக்கும் அறிமுகங்கள் வாழ்த்துவோம் நாமும் இம்மாதிரியானவர்களுக்கு தோள் கொடுக்க முயற்சிப்போம்

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் தலை வணக்கம் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  15. வறுமையிலும் செம்மை, பொய்யாமொழி அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. அனைவரும் போற்றுதலுக்கும் பாராட்டுக்களுக்கும் உரியோர் .
    பகிர்வுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  17. உடனுக்குடன் பாராட்டப்படுபவர் பற்றியசெய்தி எங்கள் ப்ளாகில் தமிழ்மண ரேங்க் ஒன்றாகி விட்டதே

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!