வியாழன், 2 நவம்பர், 2017

பாதுகாப்பு மந்திரியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்...



நேருவின் காலம் கடந்த ஞானம் :

-----------------------------------------------------

     கரியப்பாவின் யோசனையைக் குறிப்பிட்டுப் பாராட்டியது :


     சீனாக்காரன் நம் நாட்டின்மீது படை எடுத்ததும் கரியப்பா சொன்னார். "நாம் நம் கடமையைச் செய்வதில் தயங்கினாலோ, தாமதப்பட்டாலோ, சீனாக்காரன் இன்னும் சர்வ சுதந்தரமாக நம் எல்லையைக் கடந்து பல பகுதிகளை ஆக்கிரமிப்புச் செய்ய வாய்ப்பு ஏற்பட்டு விடும். பஞ்சசீலமோ பஞ்சசீல விரோதமோ, அஹிம்சையோ, ஹிம்சையோ எப்படியானாலும் சரி, நாம் மனிதர்களாக நடந்து கொள்ள வேண்டும். உடனே செயல் புரிய வேண்டும். நம் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. வெறும் காகிதத்தில் மரியாதையாய்க் கண்டனம் செய்து கொண்டிராமல், நம் எல்லையைப் பாதுகாக்க வேண்டும்"


     மேலும் அவர், "வடக்குப் பிராந்தியத்தில் உபயோகப் படுத்தாமல் இருக்கும் நம் விமான தளங்களை உடனே திறக்க வேண்டும்" என்றார். "இதனால் நல்ல போக்குவரத்து வசதி கிடைக்கும்;  சீனாக்காரனை எதிர்க்க ஒன்று சேர வேண்டும்.  இந்தியா, பாகிஸ்தான் இரண்டின் ராணுவப் பாதுகாப்பும் வேறு வேறாய்ப் பகுக்க முடியாத ஒன்று.  இரண்டும் கூட்டுச் சேர்வதால், இந்தியாவின் கூட்டு சேராக் கொள்கைக்கு ஒன்றும் ஊறு ஏற்பட்டுவிடாது. அரசாங்கம் தைரியமாகத் திட உறுதியோடு செயல் புரிய வேண்டும்" என்று கூறினார்.


     கரியப்பா இப்படிச் சொன்னதைக் கேட்டு நேருவுக்கு வெகு எரிச்சலாய்ப் போயிற்று. பத்திரிக்கை நிருபர்களின் கூட்டம் ஒன்றில் 1959 நவம்பர் 5 இல் "கரியப்பா தடம் புரள்கிறார்" என்று சீறினார். "இந்தியாவும் பாகிஸ்தானும் கூட்டாக ராணுவப் பாதுகாப்பு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அப்படி ஒன்றும் அபூர்வ ஞானம் இல்லை. கரியப்பா இப்படிப் பேசியும், எழுதியும் வருவது எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது" என்றார்.


     அதே நேரு, பின்னர் இந்தியா சீனாவிடம் தனது பகுதிகளை விட்டுக் கொடுத்த பிறகு 1963 அக்டோபர் 17 ஆம் தேதி அலிகட் சர்வகலாசாலை மாணவர்களிடையே பேசுகையில் சொன்னார்.  "நான் ஒரு பாடத்தை வாழ்நாளில் கற்கத் தவறி விட்டேன். அல்லது மறுத்து விட்டேன். அந்தப் பாடத்தைச் சீனாக்காரர்கள் மூலம் கற்க முடிந்தது.  மனசை எந்த விஷயத்திலும் குரங்குப் பிடி போல ஒரே உறுதியாக வைத்துக் கொள்ளக் கூடாது என்பது முக்கியம். இந்த படிப்பினையை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இன்னொரு படிப்பினை இது:  பலமில்லாத (சக்தி குறைந்த) நாடுகளுக்கு இந்த உலகத்தில் இடமில்லை. இதைத்தான் சீனாவின் படையெடுப்பால் நாம் அறிந்து கொண்டோம்"


    அதற்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் தேசீய ஒருமைப்பாட்டு நாளை டெல்லியில் ஆரம்பித்து வைத்துப் பேசுகையில் அவரே சொன்னார், "இந்த நாளில் ஒரு விஷயத்தை நாம் நினைவு கூர வேண்டும். நம் நாட்டைப் பாதுகாக்க நாம் மறந்து விட்டோம். இனி நம்மில் ஒவ்வொருவரும் எதிரியின் தாக்குதலிலிருந்து நம் நாட்டைப் பாதுகாப்பதுதான் முதல் கடமை என்று மதிக்க வேண்டும்"


     நேரு, அப்போதைய பாதுகாப்பு மந்திரியை மாற்றாமல் காலம் தாழ்த்திய சம்பவத்தை பின்வரும் சில துக்கடாக்களுக்குப் பிறகு தொடர்ந்திருக்கிறேன்.





======================================================================



     கில்லர்ஜி பதிவும் இப்போது நான் அதற்குப் போட்ட பின்னூட்டமும் நினைவுக்கு வருகிறது!



     அப்போது பகிர்ந்த (இணைத்த) படம்தான்.   ஆனால், அப்போது  அ. மியாவைத் தெரியாது எனக்கு!

****************************************************************************************************


  கவிதை சொல்லாமல் விடலாமா?  அதுவும் 'வெசாளக்கிளமை..' !!  ஆனால்   பழசுதான்!  மழை தமிழகத்தை - குறிப்பாக சென்னையை - உலுக்கி வரும்போது பொருத்தமாய் இருக்கட்டுமே.... (ரொம்பத் தேவை என்று முணுமுணுப்பது யார்?!)


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

'ரொம்ப' சிந்தனை செய்த நேரத்தில் எழுந்த துளி!!!! அப்பல்லாம் இப்படி அடிக்கடி செய்வேனாக்கும்!




()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()





.......நாளுக்கு நாள் சீனாக்காரன் இந்திய எல்லைக்குள் ஊடுருவவே, நேருவின் நம்பகமான பாதுகாப்பு மந்திரியான கிருஷ்ண மேனனைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஜனங்கள் கடுமையாய்க் கிளர்ச்சி செய்தார்கள். பல பிரமுகர்களும் கிருஷ்ண மேனனைப் பதவியை விட்டு வெளியேற்றும்படி கோரினார்கள். நாடு அபாய கட்டத்தில் இருக்கும்போது பாதுகாப்பு மந்திரியாக அவர் இருக்கக் கூடாது என்று நூற்றுக்கணக்கான பத்திரிகைகள் எழுதின. நாட்டைக் காப்பதற்குப் பதிலாகக் கிருஷ்ண மேனனையே நேரு காத்தார்.


     கடைசி எதிர்ப்பு நேருவுக்குத் தம் சொந்தக் காங்கிரஸ் பார்லிமெண்டரிக் குழுவிடமிருந்தே வந்தது. நேருவே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூட அந்தக் குழுவினர் கேட்பார்கள் போன்ற இக்கட்டான சூழ்நிலையும் வந்தது. ஜனாதிபதி ராதாகிருஷ்ணனும், மேனனை இனிப் பதவியில் வைத்திருக்கக் கூடாது என்று பிரதமர் நேருவுக்கு ஆலோசனை கூறினார்.


     இந்தச் சமயத்தில் பல ஆயிரக் கணக்கான இந்திய வீரர்கள் சண்டையில் இறந்தார்கள்; பலர் எதிரியிடம் சிறைப் பட்டார்கள். 1962 நவம்பர் 20 இல் சீனாக்காரர்கள் வெற்றிகரமாக அஸ்ஸாம் சமவெளிக்குள்்புகுந்து விட்டார்கள். அப்போதுதான் கிருஷ்ண மேனன் தனது பதவியிலிருந்து நீக்கப்பெற்றார்.





     தாற்காலிகமாகப் பாதுகாப்பு மந்திரிப் பொறுப்பை நேரு ஏற்றுக் கொண்டார். சண்டை நிறுத்த ஏற்பாட்டுக்குச் சீனா வருவதற்குள் இந்தியா பல இடங்களில் தோற்றது. நேபாவில் நாம் தோற்றதற்குக் காரணம் கண்டுபிடிக்க இதன்பின் ஒரு குழுவை நியமித்தார்கள். அதன் தீர்ப்பைப் பற்றி நேரு பார்லிமெண்டில் சொன்னார் : "ஓய்வு பெற்ற பல ராணுவ தளபதிகள் முன்பே எல்லையைக் காக்கும்படி அரிய யோசனைகளை அப்போதைக்கப்போது சொல்லி வந்தார்கள்.  அவற்றைப் பாதுகாப்பு அமைச்சரகம் படித்துப் பார்த்து ஆராய்ந்து ஏற்ற முறையில் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிலை நமக்கு வந்திருக்காது" என்றார் நேரு.


     கிருஷ்ண மேனனுக்குப் பிறகு ஒய்.பி சவான் பாதுகாப்பு மந்திரியானார்.


      ..... சீனத் தலைவர்கள் தாமாகவே படைகளைப் பின்வாங்கச் செய்து சாமாதானத்துக்கும் உடன்பட்டு வந்தார்கள்....


.
படித்ததிலிருந்து...



80 கருத்துகள்:

  1. வெள்ளி முளைத்தது வியாழன் என்று..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. வரலாற்றின் உட்பக்கங்களால் தான் கடந்த காலச் செய்திகள் பலவற்றையும் அறிந்து கொள்ள முடிகின்றது..

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. காதல் சாரல்!...

    அதுவும் கூட இல்லை என்றால் எப்படி?...

    பதிலளிநீக்கு
  5. அதுக்குள்ளே துரை செல்வராஜு வந்துட்டார்!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹெஹெஹெஹெ, என்னோட கருத்தை வெளியிட்டமைக்கு நன்னி ஹை! இன்னிக்கு என்ன சீனாக்காரன் மேலே! :) என்றாலும் அர்த்தமுள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
  6. பதிவு வரலாற்றை அரிய வைத்தது நன்றி
    கத்துக்குட்டியின் பெயரை அறிமுகப்படுத்தியது நன்றி.
    அர்த்தமுள்ள துணுக்குகள் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அறியாத செய்திகளைத் அறிந்துகொண்டேன் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  8. வாங்க துரை செல்வராஜூ ஸார்... வெளியிடும் ஃபார்மாலிட்டிஸ் முடியும் முன்பே முத்தாக உங்கள் பின்னூட்டம். நன்றி. கடந்த கால வரலாற்றிலிருந்து பாடம் படித்திருக்கிறோமா!! காதல் சாரலில் உடன் நனைந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாங்க கீதாக்கா... துரை செல்வராஜூ ஸார் அந்நேரத்தில் பணியிலிருப்பாராம்.
    கொஞ்ச நாட்களாக இங்கு பதிவிடும் நேரம் அறிந்து ஓடிவந்து முதல் ஆதரவை வழங்கி விடுகிறார்.

    நன்றிக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. வாங்க கில்லர்ஜி.... கத்துக்குட்டியா? யார்? நீங்களா? அவையடக்கமா?

    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  12. வரலாற்றின் முக்கிய நிகழ்வு. அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டியது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...

    பதிலளிநீக்கு
  14. "மேகமாய் நீ.... பூமியாய் நான்... உனக்கு உன்மத்தம் அதிகமாகும்போது...என் குடிமக்களைக் காக்க முடியாமல்..... த(க)ண்ணீரில் கரைந்துபோகிறேன்" -- இதுதானே இன்றைய தினத்துக்கான கவிதை...

    நேருவின் அதீத நம்பிக்கை, அளவுக்கதிகமான மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையால் இருந்திருக்குமோ?

    வாய்ப்புக் கிட்டும்போது "நள்ளிரவில் சுதந்திரம்" மின்னூல், உங்களிடம் இல்லையானால் தருகிறேன். நீங்கள் சில வாரங்களுக்குப் பிறகு ஃபார்முக்கு வந்ததறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க நெல்லை... உன்மத்தமாய் இறங்கினாலும் கடமையைச் செய்கிறது வான்மழை. அதை எதிர்கொள்ளும் முன்னச்சரிக்கைகளைச் செய்யாதவர்களை என்ன சொல்ல?

    //நேருவின் அதீத நம்பிக்கை, அளவுக்கதிகமான மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையால் இருந்திருக்குமோ?//

    இருக்கலாம். மகாத்மாவுக்கு படேல், நேரு மேல் எல்லாம் அதிருப்தி இருந்தது என்று படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. நேரு பாதுகாப்பில் மட்டுமல்ல காலம் கடந்த ஞானம். அவரது பொருளாதாரக் கொள்கை உட்பட....காந்தியுடன் சில கொள்கைகளில் அவர் முரண்பட்டதால் குறிப்பாக விவசாயத்தில்...அடிப்படையே ஆட்டம் கண்டு சுதந்திரம் பெற்று இந்தியா தன் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கிய போது இட்டிருக்க வேண்டிய அஸ்திவாரம்..அதன் பின் அதன் மேல் எழுப்பப்பட்ட இந்தியா எப்படி இருக்கும்? அடிப்படையே சரியில்லாத போது... இப்போது நாம் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிக் கூவிப் பயன் இல்லை. பாதுகாப்பும் தான்..இதற்கு உங்கள் நேற்றைய சுவடுகள் ரொமப்ப் பொருத்தம்.

    சிந்தனைச் சிதறல்கள் அருமை. காதல் சாரல் சென்னைக்கு ரொம்பவே வேண்டும் என்றாலும், அடித்துக் கொண்டுப் போய்விடாமல் இருந்தால் சரி. எனக்கு ரொம்பவே ஒரு சந்தேகம் வெள்ளம் என்றால் என்ன? சென்னையில் வெள்ளமா? வெள்ளம் வெள்ளம் என்று சொல்லுகிறார்களே! முறைகேடான கட்டுமானங்கள், முறைகேடான நிலம் விற்பனை அதனால் வீடுகள் என்று...இன்னும் சென்னை பாடம் கற்கவில்லை.. இதைப் பற்றி பதிவு எழுத நினைத்துக் கருத்துகள் வந்தாலும் coherent ஆக எழுத முடியவில்லை இப்போது.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. வாங்க கீதா....

    மிக ஆரம்ப கால ஆட்சியில் எல்லாவற்றையும் முன் யோசனையுடன் செய்திருக்க முடியுமா? நாம் ரொம்ப குறை சொல்கிறோமா என்றும் தோன்றும்! காஷ்மீர் விவகாரம் கூட இதே போல. காஷ்மீருக்குத் தரப்பட்ட தனி அந்தஸ்தை இதுநாள் வரை திரும்பப் பெற முடியவில்லை.

    சாலைகளில் மழைநீர் தேங்காமல் செய்ய முடியாதா? 2015 வெள்ளத்துக்குப் பின் பாடம் படித்திருக்க வேண்டாமா? குடி மராமத்து வேலைகளில் கூட ஊழல் நடந்திருப்பதாய் எதிர்க்கட்சி தலைவர் சொல்லி இருக்கிறார். உண்மைதான். அதை அவரால்தானே உணரவும் முடியும்? கீழக்கட்டளை, பள்ளிக்கரணை பகுதியில் மழை தொடங்கியபின்தான் கரைகளை பலப்படுத்தும் வேலை நடப்பதை இன்றைய செய்தித்தாளில் படம் எடுத்துக் போட்டிருக்கிறார்கள்.

    மக்கள், நான் உட்பட, கவலைப்படாமல் (பிளாஸ்டிக்) குப்பைகளை சாலைகளில் வீசி எறிந்துவிட்டு, அவை தண்ணீர் செல்லும் சல்லடைகளை அடைத்தபின் அரசைக் குறை கூறுவதில் வல்லவர்கள்.

    பதிலளிநீக்கு
  18. அதுபோது எனக்கு அரசியல் அறிவு அதிகம் இல்லை!

    பதிலளிநீக்கு
  19. நல்ல பதிவு ஸ்ரீராம். நீங்கள் சொல்லியிருகும் நேற்றின் சுவடுகள், இன்றைய நம் நாட்டின் நிலைமையைச் சொல்லுகிறதோ? சென்னையில் சில தூரல்கள் போட்டாலே நாறிவிடுமே. அதுதான் காதல் சாரலோ? உங்கள் வரிகள் அருமையாக இருக்கிறது ரசித்த வரிகள். நன்றாகக் கவிதை எழுதுகிறீர்களே! எனக்கும் கவிதைக்கும் வெகுதூரம்.

    நள்ளிரவில் சுதந்திரம் வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  20. வரலாற்று செய்திகள் ...

    அறிந்துகொள்ள வேண்டியவை....

    பதிலளிநீக்கு
  21. வியாழக்கிழமையும் அதுவுமாக 'நேரு-மேனன் முந்தாநாள் உப்புமா'-வைக் கொஞ்சம் எண்ணைவிட்டுக் கிண்டியிருக்கிறீர்கள்.

    எண்பதுகளின் இறுதியில் சிலவற்றைப் படிக்க நேர்கையில் நான் அறிய ஆரம்பித்தேன் : நமது so-called leaders-தேசத்தலைவர்கள்- எப்படி மத்திய அரசினால் மக்களுக்குக்காட்டப்பட்டார்களோ, பாடப்புத்தகங்களில் எழுதப்பட்டிருந்தார்களோ உண்மையில் அப்படி இல்லை அவர்கள் என. இந்த நேர்மையற்ற நேரு&Co-வை இப்படி tit-bits-களினாலும், சின்ன சின்ன comments-களினாலும் கடந்துவிடமுடியாது. அதற்காக ஒரேயடியாக நேருவின் Special Assistant M.O. மத்தாய் (Reminiscences Of The Nehru Age) ஆக மாறி, புஸ்தகம் போட்டுக்கொண்டிருக்கமுடியாதுதான்! பிறகு வருகிறேன் கொஞ்சம் சொல்ல..

    பதிலளிநீக்கு
  22. //நேருவின் அதீத நம்பிக்கை, அளவுக்கதிகமான மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையால் இருந்திருக்குமோ?//

    நெ.த. இந்த உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன். :)

    பதிலளிநீக்கு
  23. //மிக ஆரம்ப கால ஆட்சியில் எல்லாவற்றையும் முன் யோசனையுடன் செய்திருக்க முடியுமா? நாம் ரொம்ப குறை சொல்கிறோமா என்றும் தோன்றும்! காஷ்மீர் விவகாரம் கூட இதே போல. //

    ஆரம்பத்தில் தான் இன்னும் கவனமாக இருந்திருக்கணும்! உண்மையில் 12 மாநிலக் கமிட்டிகள் (காங்கிரஸ் காரியக்கமிட்டி) அல்லது அதற்கும் மேலே பிரதமராக வருவதற்கு வல்லபாய் படேலைத் தான் தேர்வு செய்திருந்தன. நேருவின் பெயரே அதில் இல்லை! காந்திக்கே இதைப் பார்த்து அதிர்ச்சி! நேருவுக்குக் கோபம்! கோபத்தில் அவர் என்ன செய்வாரோ என்ற எண்ணம் காந்திக்கு இருந்ததோ? தெரியலை! ஆனால் நேருவின் பெயரை முன்மொழிய காந்தி தான் சொல்லி உடனடியாகக் காரியக் கமிட்டியைக் கூட்டி ஏகமனதாக அகில இந்தியக் காங்கிரஸ் காரியக் கமிட்டி நேருவைப் பிரதமராக ஏற்க அழைக்கப் போவதாக அறிவிக்கச் செய்தார். அதே போல் நேருவுக்கு ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசுத் தலைவராக வருவதில் விருப்பம் இல்லை! ஆகையால் படேலிடம் சொல்லி அவரை விலகிக் கொண்டு ராஜாஜியின் பெயரை முன்மொழியச் சொல்லும்படி கேட்டுக் கொள்ள படேல் மறுத்துவிட்டார். ராஜாஜி தேர்தலில் நின்றால் அப்போது பார்த்துக்கலாம் என்பது படேலின் முடிவு! ஆனால் ராஜாஜி பொறுப்பேற்க மறுத்துவிட்டார் என எண்ணுகிறேன். பிரசாத் குடியரசுத் தலைவர் ஆனார்! நேருவுக்கும் அவருக்கும் பனிப்போர் ஆரம்பித்தது! படேலைப் பல விதங்களிலும் அவமரியாதை செய்தார் நேரு! அவருடைய உள்துறை விவகாரத்தில் படேலைக் கலந்து ஆலோசிக்காமலேயே பல முடிவுகளை எடுக்கச் செய்தார்!

    பதிலளிநீக்கு
  24. காஷ்மீர் விஷயத்தில் அதை ஐநாவுக்குக் கொண்டு போக வேண்டாம் என்று படேலும் கரியப்பாவும் பல முறை சொல்லியும் கூட கேட்காமல் அதை ஐநாவுக்கு எடுத்துச் சென்று சர்வ தேசப் பிரச்னையாக்கியது நேருதான்!

    பதிலளிநீக்கு
  25. காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தானியர்களை ஒட்ட விரட்டி விடலாம் என்ற கரியப்பாவின் யோசனையை நிராகரித்தவர் நேரு! இல்லை எனில் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் என்பதே இருந்திருக்காது!

    பதிலளிநீக்கு
  26. ஏகாந்தன் என்ன சொல்லப் போகிறார் என்பதற்குக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  27. நவகாளி யாத்திரை காந்தி செய்த இன்னொரு தவறு! :(

    பதிலளிநீக்கு
  28. வாங்க ஏகாந்தன் ஸார்... முந்தா நாள் உப்புமா என்றாலும் இன்னும் சூடான உப்புமா என்பதற்கு கீதாக்காவின் அடுத்தடுத்த பின்னூட்டங்களே சாட்சி.

    பதிலளிநீக்கு
  29. ஏகாந்தன் ஸார்.. நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதற்கு நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  30. கீதாக்கா...

    //நவகாளி யாத்திரை காந்தி செய்த இன்னொரு தவறு//

    காந்தியின் அஹிம்சை பற்றி சொல்லும்போது ஜவர்லால் சமீபத்தில் முக நூலில் சொல்லி இருந்தது நினைவுக்கு வருகிறது. 'என் உயிரைக் கூட எடுத்துக் கொள்ளுங்கள்' என்றால் அஹிம்சை. 'உங்கள் உயிரை எடுக்க அவர்கள் வந்தால் கொடுத்து விடுங்கள்' என்று அடுத்தவர்களுக்குச் சொல்வது ஹிம்சை என்று சொல்லி இருந்தார்.

    பதிலளிநீக்கு
  31. ஶ்ரீராம், காந்தி அதைத் தான் சொன்னார். நவகாளியில் நடந்த கலவரத்தில் குடும்பம் முழுவதும் இழந்த ஒருவன் வந்து காந்தியிடம் அழுதபோது அவர் அப்படித் தான் சொன்னார்!

    பதிலளிநீக்கு
  32. காந்தி "எமோஷனல் ப்ளாக்மெயில்" பண்ணினார் என்பதே பலரும் சொல்லுவது! அவர் ஆங்கிலேயருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார் என்பதை விடத் தன் நாட்டு மக்களுக்கு எதிராகவே இருந்தார் என்பதே சரி! :( கசக்கத் தான் செய்யும். ஆனால் உண்மை இது தான்!

    பதிலளிநீக்கு
  33. பயனுள்ள பதிவுக்கு மிகவும் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  34. தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று உண்மைகள்

    பதிலளிநீக்கு
  35. நான் அடுத்து சொல்ல நினைத்த கருத்துகளை சகோ ஏகாந்தனும், கீதாக்காவும் சொல்லிவிட்டார்கள். காஷ்மீருக்குள் ஊடுருவிய வரை...

    ஏகாந்தன் சகோ அடுத்து என்ன சொல்லப் போகிறார் தெரிந்து கொள்ள ஆசை..

    கீதா

    பதிலளிநீக்கு
  36. ஏதாவது தவறு நேர்ந்தால் பழிபோட சில ஸ்கெப் கோட்கள் தேவைதானே எல்லாக் காலத்திலும்

    பதிலளிநீக்கு
  37. நேருவை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டுமெனில், அப்போதைய அரசாங்கத்தினால் விளம்பரக் கட்டமைக்கப்பட்ட 1) சமாதானப் புறாக்களைப் பறக்கவிடுதல் 2) கோட்பாக்கெட்டில் நித்ய ரோஜாப்பூ 3) குழந்தைகளை தூக்கிக் கொஞ்சுதல் போன்ற நமக்கு சிறுவயதில் அடிக்கடிக் காட்டப்பட்ட அவரது படங்களை, முதலில் மனச்சுவரிலிருந்து கழற்றிக் கடாசுங்கள் மூலையில். இவை அவரது அசல்ரூபத்தை நம்மை அறியவிடாது தவிர்ப்பவை. உண்மையின்மேல் தொங்கவிடப்பட்ட கருப்புத்திரைகள்.

    நேருவின் அபத்த புராணத்தை இந்திய சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கமுடியும். பின்னூட்டம் பதிவாகிவிடும். வேண்டாம் (இப்போதே நீள ஆரம்பித்துவிட்டது). சுருக்கமாகச் சிலதை சொல்கிறேன்: ஒரு நாட்டிற்கு- இந்தியா போன்ற ஒரு பல-மத, பல-இன, பல-மொழி நாட்டிற்கு- உலகின் பெரும் ஜனநாயகத்துக்கு உலக அரங்கில் தலைமைதாங்க நிச்சயமாகத் தகுதியில்லாதவர் நேரு. வெறும் வாய்ச்சொல்வீரர். (எதைப்பற்றியும் மணிக்கணக்காக ஹிந்தியில், அழகாக ஆங்கிலத்தில் பேசமுடியும் – காங்கிரஸின் கொள்கைப்பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கலாம். –ஆனால் ‘’எதற்காக ஆரம்பித்தோமோ அந்த நோக்கம்(இந்திய சுதந்திரம்) பூர்த்தியடைந்தது. இனி காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிடலாம்’’ என்றல்லவா காந்தி சொன்னார். நேரு கேட்டாரா?). சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக காந்தியின் முட்டாள்தனமான தேர்வு ஜவஹர்லால் நேரு. (தவிர்க்கமுடியாக் காரணங்கள் இருந்திருக்கூடும் என்பதை மறுப்பதற்கில்லை).

    காந்தியின் தேர்வே இந்த லட்சணமென்றால், நேருவின் தேர்வைப்பற்றி என்ன சொல்ல? குறிப்பாக நாட்டின் இந்தியப்பாதுகாப்புக்கு இன்றியமையாத ராணுவ மந்திரியாக யார்? வி.கே.கிருஷ்ணமேனன்! எங்கேயிருந்து பிடித்தார் இந்த ஆளை நேரு? நேரு சேறாகிப்போனது இந்தப்புள்ளியில்தான். பறந்துபோன சமாதானப்புறாக்கள் திரும்பி வந்து நேருவைக் கொத்தோ கொத்தென்று கொத்தியது இங்கேதான்.

    பதிலளிநீக்கு

  38. எவ்வளவு குறைத்தும் நீளமாகத்தான் வருகிறது; பொறுமைகாட்டிப் படிக்கவும்..

    தனது மூன்றாவது கேபினெட்டில் (1957-62), வி.கே.கிருஷ்ணமேனனை பாதுகாப்பு மந்திரியாக நியமித்தார் நேரு. நமது நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைந்தது முக்கியமாக இந்தக் காலகட்டத்தில்தான். மேனன், வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர், மேல்நாட்டில் படித்தவர் என்பதே நேருவின் aristocratic attitude-க்குப் போதுமானதகுதியாக தோன்றியிருக்கும். அதற்கே உரிய மெத்தப்படித்த மேதாவித்தனம், தான்தோன்றித்தனம், அடாவடித்தனம் மேனனிடம் நிறைய இருந்தன. தனது துறைசார்ந்த ஞானம் ஐயாவுக்கு இருக்கவில்லை. மேனனின் இந்தப் பொறுப்பில்லா மேதாவித்தனம் குறித்து மௌலானா கலாம் ஆஸாத் நேருவை எச்சரித்தார். நேரு கேட்டால்தானே? ராணுவ விஷயங்களில் நிபுணர்களின் அறிவுறுத்தலை அலட்சியம் செய்தல், ஏடாகூடமாக முடிவெடுத்தல் என ஆரம்பத்திலிருந்தே ராணுவத்தில் குழப்பங்களை ஆரம்பித்தார் மேனன். ஜெனரல் திம்மையா ராணுவ நிர்வாகத்தில் மேனனின் முறைகேடான குறுக்கிடல்பற்றி பிரதமர் நேருவிடம் குறைகூறி, தகுந்த ஆலோசனை கூறியுள்ளார். அதனால் அவர்மீது கடும் கோபத்தில் இருந்தார் மேனன். (ஃபீல்ட் மார்ஷல் மானேக்ஷா அப்போது மேஜர் ஜெனரலாயிருந்தார். ஜெனரல் திம்மையாவுக்கெதிராக எழுதிக்கொடுக்கும்படி மானேக்ஷாவையும் மற்ற ஜூனியர் ஆஃபீஸர்களையும் வற்புறுத்தியவர் பாதுகாப்புமந்திரி மேனன்! மானேக்ஷா மறுத்ததினால் அவருடைய வேலைக்கே உலைவைக்கும் அளவுக்குப் போனார் மேனன் என்பது கூடுதல் செய்தி (Field Marshal Sam Manekshaw, The Man and His Times) ஆனால் கிருஷ்ணமேனனுக்கு எதிராக யார், எதைச்சொன்னாலும் கேட்பதில்லை என்று நேரு கங்கணம் கட்டியிருந்தார்.

    விளைவுகளை 1962 வரிசையாகப் படித்தது. 1957-லிருந்தே ராணுவஉளவுத்துறை பாதுகாப்பு மந்திரியான மேனனை, சீன ராணுவத் திட்டங்கள் பற்றி முறையாக எச்சரித்துவந்தது. அந்த ரகசிய ரிப்போர்ட்டை அலட்சியம் செய்தார் கிருஷ்ண மேனன். அப்படியெல்லாம் சீனா நம்மைத் தாக்காது என்றார் நேருவிடம். வெளிநாட்டுப்பயணம், ஐநாவில் பேசுவது, தன்னை பெரும் சர்வதேச அரசியல்வாதியாக, ஆலோசகராக, ஸ்டேட்ஸ்மனாகக் காட்டிக்கொள்வது என வேறு உலகத்தில் அப்போது உலவியவர் மேனன். 1947 லிருந்து 1962 வரை தளவாட இறக்குமதி இல்லை; இந்திய ராணுவம் போர்-ஆயத்தநிலையில் வைக்கப்படவில்லை. நேரு-மேனனின் மோசமான அலட்சியப்போக்கே காரணம். முதலில் ஜெனரல் திம்மையா, பின்னர் ஜெனரல் கரியப்பா என ராணுவத்தின் அவசியத் தேவைகளென நவீன ஆயுதங்கள், கருவிகள், விமானங்கள் என தேவைப்பட்டியலை அடுக்கியும், பாதுகாப்பு மந்திரியோ, பிரதமரோ கண்டுகொள்ளவேயில்லை. ஆனால், நேருவையும், மேனனையும் சரியாகக் கணக்கிட்டிருந்த சீனா, 1962 அக்டோபரில் ராணுவத் தயார்நிலை இல்லாத, உலக நாடுகள் ஆதரவும் இல்லாத இந்தியாவை அசால்ட்டாகத் தாக்கியது. ( நேரு-கிருஷ்ணமேனன் முன்னிறுத்திய நடுநிலைக்கொள்கையினால் அமெரிக்காவோ, சோவியத் யூனியனோ கண்டுகொள்ளவில்லை). வீரமிருந்தும் போதிய ஆயுத வசதியின்றி போரிட்ட இந்திய ராணுவத்தை வென்று, சீன ராணுவம் அசாம்வரை முன்னேறி, இந்திய நாட்டை அவமானப்படுத்தியது. இந்திய மக்கள் கொதித்தனர். நேரு-மேனனுக்கெதிரான கோஷங்கள் நாட்டில் கிளம்பின. கிருஷ்ணமேனன் பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது முதலில் நேரு அலட்சியப்படுத்த முயன்றார். பிறகு காங்கிரஸ் கட்சியே தீர்மானம் இயற்றிக் கண்டிக்க மேனன் கழட்டிவிடப்பட்டார்.

    பதிலளிநீக்கு
  39. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ... "நித்தம் போனா முத்தம் சலிக்கும்"... ஹையோ இது வேற முத்தம்:).. என.. திருவள்ளுவர் தாத்தா... திருக்குறளின் 4ம் பாலில்... 475 ஆவது அத்தியாயத்தில் சொல்லியிருக்குதென , எங்கட அவ்வைப் பாட்டியின் மூத்த சிஸ்டரான அஞ்சு எனக்குச் சொல்லி மிரட்ட்ட்ட்ட்டினா:)....
    ஹையோ ஏன் இப்போ லெக்கூகான்ஸ்சு எல்லாம் ஆடுது... ஓ அது பீவர் ஹை ல இருக்கு:)...

    பூஸார் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது ரகசியமாகப் படமெடுத்ததுமில்லாமல்:) அதைக் கொண்டுபோய்ப் பப்புளிக்கில் போட்டவருக்கு... சைபர் கிரைமில் வழக்குப் போடப்போறேன்ன்ன்ன்ன் தோஓஓஓஒ புறப்பட்டு விட்டேன்ன்ன்ன்:)...

    முதலாவதா வந்த துரை அண்ணன்... இதை எல்லாம் "தட்டி" க் கேய்க்க மாட்டீகளா?:)...

    பதிலளிநீக்கு
  40. எங்கள் புளொக்கில் அரசியலும் ஆரம்பமோ?:).. வாழ்த்துக்கள்...

    "விசாளக்கிளமை" யாமே:)... நேக்கு டமில்ல டி ஆக்கும்:).. யாராவது டமிலைக் கொன்றால் மீக்குப் பிடிக்காது பொயிங்கிடுவேன்ன்ன்:).. எங்கே போயிட்டாங்க நெல்லைத்தமிழனும் அஞ்சுவும்:)... , அதிராவின் எழுத்தை மட்டும்தான் கண்ணில விளக்கெண்ணை விட்டுப் படிப்பாங்க போல கர்ர்ர்ர்ர்ர்:)...

    பதிலளிநீக்கு
  41. நேக்கு டமில்ல டி ஆக்கும்:).. - இதை விளக்கமாகச் சொல்லுங்க. எங்க ஊர்ல கிரேடு, A, B. C, D. அப்ப D கிரேடு என்றால் அனேகமாக பெயிலாக்கும். ஒருவேளை அதைத்தான் சொல்றீங்களா?

    அதிரா.... நீங்க பிரித்தானியா கோர்ட்ல (ஸ்காட்லன்டில் இல்லை) உங்க, 'ஊசிக்குறிப்பு', 'படங்கள்' போன்ற FORMATஐ காப்பி அடித்தற்கு ஸ்ரீராம் மேல வழக்குப் போட்டீங்கன்னா, சாட்சி சொல்ல நான் வர்றேன்.

    பதிலளிநீக்கு
  42. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆகா ஏகாந்தன் அண்ணனுக்குள் தூங்கிக்கொண்டிருந்த அந்த அனிமலைத் தட்டி விட்டாச்சுப்போல இருக்கேஏ :)...

      ஒன்றாகப் போட்டேன் அது சிலநேரம் புரியாமல், ஏகாந்தன் அண்ணனுக்குப் போட்டதாகிடுமோ எனும் பயத்தில் டிலீட் பண்ணி புறிச்சுப் போடுறேன்:)... இப்பெல்லாம் வாய் திறக்கவே நேக்குப் பயம்மாக்கிடக்கூஊ:) நேக்கு ஏழரைச் சனி நடுக்கூறு நடக்குதிப்போ:)..

      நீக்கு
  43. /////அதிரா.... நீங்க பிரித்தானியா கோர்ட்ல (ஸ்காட்லன்டில் இல்லை) உங்க, 'ஊசிக்குறிப்பு', 'படங்கள்' போன்ற FORMATஐ காப்பி அடித்தற்கு ஸ்ரீராம் மேல வழக்குப் போட்டீங்கன்னா, சாட்சி சொல்ல நான் வர்றேன்/////

    வாஆஆஆஆவ்வ்வ்வ் பார்த்தீங்களோ பார்த்தீங்களோ.... இப்போ நெல்லை தமிழன் என் பக்கம்:)....அஞ்சுட பக்கம் இல்லையாக்கும்....:) ஹா ஹா ஹா சந்தோசம் பொயிங்குதே.... சந்தோசம் பொயிங்குதே.....:)... அதுக்கு மட்டுமில்ல நெல்லைத் தமிழன் இன்னும் நிறைய மட்டேர்ஸ் க்காகவும் வயக்குப் போடப்ப்போறேன்:)... ஆனா எனக்கொரு டவுட்டூ:)... எனக்குச் சார்பாகத்தானே சாட்சி சொல்லுவீங்க:) கடசில கூண்டிலே ஏறி நிண்டு... அதிராவைக் கவுத்திட மாட்டீங்கதானே?:)...

    பதிலளிநீக்கு
  44. ஹையோ இது அந்தமாதிரி டி அல்ல:) இது ஏஸ்டார் டி ஆக்கும் கர்ர்ர்ர்ர்:)...எங்களுக்கு கம்பராமாயணத்தில் ஒரு புல் கேள்வி.. ராமாயணத்தில் ஒரு புல்ல்ல்ல் கிளவி ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே கேள்வி வரும்... அதெல்லாம் மீக்கு ஜூஜூபி:)... 100 க்கு 100 வாங்கிடுவேன்:)... ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  45. "பெரும்பாலான சமயங்களில்... பிறருக்கு நாம் விளக்கமளிப்பதாக நினைச்சு, நமக்கு நாமே சமாதானமாகிவிடுகிறோம்... ஆனால் அதனால் பிறர் மனம் புண்படுவதை அறியாமல்".... ஹா ஹா ஹா இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:)..

    பதிலளிநீக்கு
  46. ராமாயணத்தில் 100 க்கு 100 வாங்கிடுவேன்:) - உங்களுக்கு அதில் சந்தேகம் இருந்தாலும் எங்களுக்கு அதில் சந்தேகம் இருந்ததே இல்லை. பீஷ்மர் கதையைச் சொல்லி, மிச்சத்தை ராமாயணத்தில் படிச்சுக்கச் சொன்னவங்களாச்சே நீங்க..... :)

    இருந்தாலும், நீங்க நிறைய பாடல்களின் சில வரிகளை அவ்வப்போது குறிப்பிடும்போது நானே ஆச்சர்யப்பட்டிருக்கேன். பின்னூட்டங்களிலும் சொல்லியிருக்கேன் என்று நினைக்கிறேன். எனக்கும் தமிழார்வம் அதிகம். பாரட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///எங்களுக்கு அதில் சந்தேகம் இருந்ததே இல்லை. பீஷ்மர் கதையைச் சொல்லி, மிச்சத்தை ராமாயணத்தில் படிச்சுக்கச் சொன்னவங்களாச்சே நீங்க..... :)///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ:),, இல்லை எனில் இப்போ ஒராள் ஹீல்ஸ் ஐக் கழட்டி எறிஞ்சு போட்டு மின்னல் வேகத்தில ஓடி வருவா ஹை பை க்கு:)... கடவுளே அதிராட விசயங்களில் மட்டும் ஆருக்குமே மறதியைக் கொடுக்கிறாயே இல்லையே முருகா:).. அதனால வள்ளிக்குப் போட இருக்கும் வைர மூக்குத்தி கான்சல்ட்:)... எங்கிட்டயேவா:)?... ஹையோ முருகனின் பேஸ் அங்றி பேஸ் ஆ மாறுதே:)... என்னைக் காப்பாத்த்துங்ங்கோ சிவனே:)....

      நீக்கு
    2. ////இருந்தாலும், நீங்க நிறைய பாடல்களின் சில வரிகளை அவ்வப்போது குறிப்பிடும்போது நானே ஆச்சர்யப்பட்டிருக்கேன். பின்னூட்டங்களிலும் சொல்லியிருக்கேன் என்று நினைக்கிறேன். எனக்கும் தமிழார்வம் அதிகம். பாரட்டுக்கள்.////

      ஆஅவ்வ்வ்வ்வ் இதைச் சத்தமாச் சொல்லுங்கோ ஸ்கொட்லாந்து மலையில எதிரொலிச்சு:) சிலரின் காதில் ஈயம் ஊத்தியதுபோலாகட்டும்:)..

      எனக்கு தமிழ் பற்று/ ஆர்வம் என்றெல்லாம் இல்லை நெல்லைத்தமிழன்... ஆனா என்னை அறியாமல் இருக்கோ தெரியல்ல.. இருப்பினும்... பழமொழிகள், பொன்மொழிகள், தத்துவம், இப்படியானவை பயங்கரமாப் பிடிக்கும்.. ரொம்ப டாங்ஸ்...

      நீக்கு
  47. அரசியல் எனக்கு எட்டாக்கனி

    பதிலளிநீக்கு
  48. திருக்குறள் நான்காம் பால் னு சொல்லும்போதே தெரிலயா நெல்லைத்தமிழன் :) மேடம் D அதேதான் failed :)

    அப்புறம் லவனையும் குசனையும் சீதைக்கு தம்பி ஆட்கள்னு சொன்னதை மறந்திட்டீங்க நெல்லைத்தமிழன் :)

    பதிலளிநீக்கு
  49. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வில்லையாம் :( நேரு அங்கிளை திட்டி தீர்த்தார் இங்கே சந்தித்த ஒரு சீக்கிய தாத்தா .
    ஏகாந்தன் சாரின் பின்னூட்டங்கள் அனைத்தும் அருமை நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்

    பதிலளிநீக்கு
  50. ஸ்ரீராமின் சிந்தனை சிதறல் .எனக்கும் ஏற்பட்ட அனுபவம் .
    அங்கே மெட்றாஸில் மழை வெள்ளமாய் கொட்டுதாம் :) இதில் காதல் சாரலா :)
    அ .மியாவ் பிறந்து 2 நாளில் எடுத்த படமா அது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ////
      அ .மியாவ் பிறந்து 2 நாளில் எடுத்த படமா அது :)////

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர் விடுங்கோ விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்:).. நேக்கு ஷை ஷையா வருதே வைரவா:)..

      நீக்கு
  51. ///அப்புறம் லவனையும் குசனையும் சீதைக்கு தம்பி ஆட்கள்னு சொன்னதை மறந்திட்டீங்க நெல்லைத்தமிழன் :)///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) அவர் மறந்துபோனதை இப்பூடி நினைவு படுத்துறாவே கர்ர்ர்ர்:)... நான் ஜொன்னனே.. நேக்கு எடிரி வெளில இல்ல:) வீட்டுக்குள்ளயேதேன்ன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
  52. @அதிராவ் மியாவ்

    //ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) அவர் மறந்துபோனதை இப்பூடி நினைவு படுத்துறாவே கர்ர்ர்ர்:)... நான் ஜொன்னனே.. நேக்கு எடிரி வெளில இல்ல:) வீட்டுக்குள்ளயேதேன்ன்ன்ன்:)..//
    டெய்லி வல்லாரையும் நெல்லிக்காயும் ஸ்மூத்தியா குடிக்கிறவங்களை செக்கரடறியா வைச்சா இப்படித்தான் முன்ஜென்ம பின் ஜென்ம நினைவுகள் வரும்

    பதிலளிநீக்கு
  53. /ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர் விடுங்கோ விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்:).. நேக்கு ஷை ஷையா வருதே வைரவா:)..//

    சரிசரி வெக்கபடாதீங்க நான் இன்னும் முடிக்கலை பிறந்து ரெண்டு நாள்னா

    60 வருஷம் 11 மாசம் 24 ஆவது நாளில் எடுத்த படம் :)

    பதிலளிநீக்கு
  54. //60 வருஷம் 11 மாசம் 24 ஆவது நாளில் எடுத்த படம் :)//

    ippo kooti kazhichi paarunga 61 years :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமாக்கும் ம்ஹூம்ம்ம்ம்ம்:).. அதாவது 15 வருடம் 363 ஆவது நாளுக்கு முன்பு எடுத்ததென தெளிவா சொல்லோணும்:) இல்லை எனில் தப்பா நினைச்சிடுவாங்க மீயைத் தெரியுமோ கர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
  55. //காந்தி அதைத் தான் சொன்னார். நவகாளியில் நடந்த கலவரத்தில்.... //

    கீதாக்கா... ஆம், படித்திருக்கிறேன். அதனால்தான் சொன்னேன்!

    பதிலளிநீக்கு
  56. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  57. மீள் வருகைக்கு நன்றி கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  58. நன்றி ஜி எம் பி ஸார்.. என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  59. நீண்ட விளக்கங்களுக்கு நன்றி ஏகாந்தன் ஸார். கொஞ்சம் படித்திருக்கிறேன். இப்போது கூட பாகிஸ்தான் பிரிவினை, பாகிஸ்தான் போர் என்று இரண்டு புத்தகங்கள் படித்து வருகிறேன்!

    பதிலளிநீக்கு
  60. வாங்க அதிரா... உடல்நிலை சரியில்லையா? எனக்கும்!

    பூஸாரை நான் அறியுமுன்னே பகிர்ந்ததாக்கும் அது யுவர் ஹானர்!

    அரசியல் இல்லை இது.. வரலாறு! வரலாற்றின் ஒரு சிறு துளி!

    பதிலளிநீக்கு
  61. வாங்க நெல்லை...

    //'படங்கள்' போன்ற FORMATஐ காப்பி அடித்தற்கு ஸ்ரீராம் மேல வழக்குப் போட்டீங்கன்னா, //

    என்ன சொல்லணும்? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... சரிதானே?

    பதிலளிநீக்கு
  62. கம்ப பாரதம் பற்றியும், மஹாராமாயணம் பற்றியும் சொல்லியிருப்பதற்கு நன்றி அதிரா....!!

    //இப்பெல்லாம் வாய் திறக்கவே நேக்குப் பயம்மாக்கிடக்கூஊ:) நேக்கு ஏழரைச் சனி நடுக்கூறு நடக்குதிப்போ:)..//

    பயப்பாடாதீங்கோ.... நீங்கள் வழமை போலவே கதைக்கலாம்!

    // ஆனால் அதனால் பிறர் மனம் புண்படுவதை அறியாமல்".... ஹா ஹா ஹா இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:).. //


    என்னை விடுங்கோ..... என்னை விடுங்கோ... நான் போய் கூவத்தில் குதிக்கிறேன்...''

    பதிலளிநீக்கு
  63. நெல்லை...

    // எனக்கும் தமிழார்வம் அதிகம். //

    அது யார் அது தமிழ்? உங்க வீட்டுக்குத் தெரியுமா இது?!!.

    பதிலளிநீக்கு
  64. வாங்க ராஜி நன்றி. இது அரசியல் இல்லையாக்கும். நடுவிலிருந்த கவிதையாயாவது பார்த்திருக்கக் கூடாதோ? அதை யார் கவிதை என்று ஒத்துக்கொள்கிறார்கள் என்கிறீர்களா? அதுவும் சரிதான்!

    பதிலளிநீக்கு
  65. வாங்க ஏஞ்சலின்.. சீக்கியர்கள்தானே பிரிவினையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்? "பொயிங்க" மாட்டாரா என்ன!


    //அங்கே மெட்றாஸில் மழை வெள்ளமாய் கொட்டுதாம் :) இதில் காதல் சாரலா :) //

    என்ன செய்ய? குளிருதே!!!!

    பதிலளிநீக்கு
  66. மீள் மீள் மீள் வருகைக்கு நன்றி அதிரா, ஏஞ்சலின்....!!!

    பதிலளிநீக்கு
  67. ஏகப்பட்ட வரலாற்று உண்மைகள். கீதாவுக்கு, ஏகாந்தனுக்கும் ,உங்களுக்கும் மிக மிக நன்றி.
    இத்தனை வரலாற்றுக்கு நடுவே அழகான கவிதைகள்.

    ஸ்ரீராம் நலமோடு இருங்கள். எங்க நாளைய ஹீரோக்கள் சாம் மனெக்ஷாவும், கரியப்பாவும். இப்படிப் பந்தாடப் பட்டார்களே என்ற வருத்தமே மிஞ்சுகிறது. விகடனில் எல்லாம் மேனனை விமர்சித்துக் கார்ட்டூங்கள் வரும்.

    நல்லதோர் வீணை இனியாவது நலம் பெறட்டும். மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  68. ஸ்ரீராமின் சிந்தனை சிதறல் நன்றாக இருக்கிறது.
    வரலாறு படித்தேன்.
    எல்லோர் பின்னூட்டங்க்களும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  69. ஸ்ரீராம் நான்சொல்ல வந்தது புரியலையா இப்போது வரும் கருத்துகள் எல்லாமே on hind sight அற்வு ஜீவிகளாக தங்களை நினைத்துக் கொண்டு நிகழ்வுகளின் காலம் எதுவும் பர்க்காமல் சகட்டு மேனிக்கு காந்தியையும் நேருவையும் பழி போடுகிறார்கள் குற்றம்சொல்லாவர்களுக்கு யாரோ எதையோ எப்பவோ எழுதியதையே நம்பும் இவர்கள் அவர்களைப்பற்றி ஏதும் அறியாதவர்களே இதுவும் இன்னமும் பேசுவார்கள் யாரோ எப்பவோ எழுதியதை நம்புமிவர்களை நான் கண்டு கொள்வது இல்லை அதையே சுருக்கமாகப் பின்னூட்டமிட்டேன் இப்போதாவதுபுரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  70. சுவாரஸ்யமான பதிவும் பின்னூட்டங்களும். கீதா தில்லையகத்து கருத்துக்களை நானும் வழி மொழிகிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!