புதன், 19 டிசம்பர், 2018

181219 : புதன் பிடித்த பத்துப் புத்தகங்கள் எவை?



கீதா சாம்பசிவம் :

இந்த zomato விஷயம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


அந்த zomato ஊழியர் செய்தது சரிதான் என வாதாடுபவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? 

என்னதான் அவருக்குப் பசியாக இருந்தாலும் வாடிக்கையாளருக்கு என அனுப்பப்பட்ட உணவில் இருந்து எடுத்து எச்சல் பண்ணிச் சாப்பிடுவது சரியா? 

            
கொண்டு வரும் உணவு பொட்டலத்தை ஒருவர் ருசி பார்ப்பதை மிகச் சரியாக ஒருவர் படம் பிடிக்கிறார் என்றால் அது நம்பக்கூடியதாக இல்லை.  போட்டி, பொறாமை காரணமாக இப்படி எல்லாம் படம் வெளி வரலாம்.





இந்த எச்சல், பத்து பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?  


எச்சில், பற்று என்று ஒதுக்குவது சரியான அடிப்படையில்தான் செய்யப் படுகிறது.

இப்போப் பலரும் வீட்டில் சமைக்காமல் வெளியில் சாப்பிடுவதையே கௌரவமாக நினைக்கின்றனர்! அது சரியா? 


இது கௌரவம் கருதி இல்லை.. வசதிக்காக. 

இது சோம்பல் மிக்க , காசு பணம் நிறைந்த காலம்.  வெளியில் இருந்து கொழுக்கட்டை, இட்லி மிளகாய் பொடி தேங்காய் சட்னி என்றெல்லாம் வாங்க ஆரம்பித்து விட்டோம் 

பெண்களுக்கு முன்னெல்லாம் கட்டாயமாய் சமையல் தெரிந்திருக்க வேண்டும் என்பார்கள்! இப்போ அப்படி எல்லாம் இல்லை! மாறி விட்டது! இது நல்லதா? 
       
இது நல்லதா இல்லையா என்று ஆண்கள் கருத்து சொல்வது நியாயமாகாது. 


சிட்டுக்குருவிகள் அழிந்ததுக்கு செல்ஃபோன் டவர்கள் காரணம் என்பது பற்றிய உங்கள் கருத்து? கும்பகோணம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தபோது இத்தகைய டவர்களில் குருவிகள் கூடு கட்டி இருப்பதைப் பார்க்க நேர்ந்தது. மற்றப் பறவைகள் எல்லாம் நன்றாக இருக்கும்போது சிட்டுக்குருவிகள் மட்டும் அழியும் இனமாக ஆனது ஏன்? 

செல்போன் டவர்களால் சிட்டு மட்டும் தான்  அழியுமா   அதுவேறு சிறு பறவைகளை ஏன் பாதிக்கவில்லை என்பது சரியாகத்  தெரியவில்லை.

 காலப்போக்கில் ஏற்படும் விஞ்ஞான முன்னேற்றங்கள் காரணமாக பல விதமான  வசதிகளும் உண்டாகின்றன. அவற்றைப் பயன்படுத்த தொடங்கி ஒரு நிலையில் அவை இல்லாவிட்டால் நமக்கு வாழ்க்கையைக் கழிப்பதே கஷ்டம் என்கிற நிலை கூட வந்து கொண்டிருக்கிறது .  இது அவ்வளவு ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை தான் என்றாலும் சில விஷயங்கள் குறித்து நாம் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.

 சினிமா பார்ப்பதற்கு முன்னெல்லாம் ப்ளாக் டிக்கெட் என்னும் ஒரு முறை உண்டு. கவுன்டரில் டிக்கெட் கொடுப்பவரோடு கூட்டு வைத்துக் கொண்டு சில, பல டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கிக் கொண்டு தியேட்டர் வாசலில் விற்பார்கள்! கூடுதல் விலைக்குத் தான்! அதையும் வாங்கிக் கொண்டு பார்க்கச் செல்வார்கள்! அது பற்றிய உங்கள் கருத்து என்ன? நாங்க ஒரு முறை போனப்போ இப்படித் தான் ப்ளாக்கில் தான் டிக்கெட் இருக்குனு சொன்னாங்க! என்ன படம்னு நினைவில் இல்லை! வீட்டுக்கு வந்துட்டோம்! அப்படியானும் அந்தப் படத்தைப் பார்த்தால் கிடைக்கப் போவது என்ன? 
இப்போதெல்லாம் சினிமாவுக்கு ஆட்கள் வந்தால் போதும் எங்களை நிலை வந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது ஆன்லைன் டிக்கெட் வந்தபிறகு  பிளாக்கில் டிக்கெட் வாங்குவது அல்லது விற்பது நடப்பதில்லை என்று தான் நினைக்கிறேன் ஒரு சினிமாவுக்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா என்று நான் நினைப்பதுண்டு .  பெருநகரங்களில் பெரும் செலவு செய்து கொண்டு சினிமா பார்க்க என்று கிளம்பியபின்,  எப்படியாவது பார்த்தாக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. சினிமா பார்த்துதான் ஆகவேண்டுமா என்கிற கேள்விக்கு அவரவர் வயதைப் பொறுத்துதான் பதில் அமையும்.
    
ப்ளாக் டிக்கெட் என்பதெல்லாம் முறையாக வந்த வழக்கம் அல்ல. சுலபமாகப் பணம் சம்பாதிக்க, சில கிரிமினல் ஆசாமிகள் கண்டுபிடித்த குறுக்குவழி. பிச்சைக்காரர்கள், மக்களின் தயாள குணத்தைப் பயன்படுத்தி காசு வாங்குவது போன்று, பி டி விற்பவர்கள், மக்களின் அவசர தேவையைப் பயன்படுத்தி, காசு பார்க்கிறார்கள். நான் என்றுமே பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்த்தது இல்லை. (என்னுடைய பணத்தைக் கொடுத்தும் அதிகம் படம் பார்த்ததில்லை!) 
     
நடிகர்கள் கட் அவுட்டுக்குப் பால் அபிஷேஹம், கற்பூரம் ஏற்றுவது குறித்து உங்கள் கருத்து?


வடிகட்டிய, பைத்தியக்காரத்தனம். 

நடிகர்கள் என்று மட்டும் இல்லை அரசியல் தலைவர்கள் மதகுருமார்கள் இவர்களையும் கூட மிதமிஞ்சி பாராட்டுவதோ  ஆராதனை செய்வதோ நல்லதில்லை என்பது என் கருத்து. பாராட்டோ மரியாதையோ மிதமிஞ்சினால் போலியாக இருக்கும்.


வாட்ஸ் அப் : 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

உங்களுக்கு பிடித்த பத்து சினிமாக்களை குறிப்பிடுங்கள் என்று முகநூலில் ஒரு விஷயம் வலம் வந்து கொண்டிருக்கிறது. அது போல உங்களுக்கு பிடித்த பத்து நாவல்களை அல்லது புத்தகங்களை கூறுங்களேன்.

தி.ஜானகிராமனின் "அன்பே ஆரமுதே"  மோகமுள். நளபாகம்,  கிட்டத்தட்ட எல்லா சிறுகதைகளும்.

சுஜாதா ரங்கராஜன் எழுதிய காகிதச் சங்கிலிகள் குருபிரசாத்தின் கடைசி தினம்,  நிறைய கட்டுரைகள் ரொம்பவும் பிடிக்கும்.

இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் குருதிப்புனல் நாவல் நான் ரசித்துப் படித்தவை.

ஆங்கிலத்தில் சாமர்செட் மாம் எழுதிய பல சிறுகதைகள், பல நாவல்கள் of human bondage, கேக்ஸ் அண்ட் ஏல், எ பாரிஸ் ஹாலிடே , (Link:-) Ashenden stories.



பெர்னாட்ஷா: மேன் & சூப்பர் மேன், பிக்மாலியன்,  Mrs warren's profession.
    
நமது புராணங்களில் வரும் அசுரர்கள் தாங்கள் சாகாமல் இருப்பதை வேண்டித்தானே தவம் புரிந்து, மரணிக்க வேண்டுமென்றால் இவை இவைதான் அதற்கு காரணமாக வேண்டும் என்று ஏகப்பட்ட நிபந்தனைகளை போடுகிறார்கள். அதனால் அவர்களை கொல்ல கடவுளே வரவேண்டியிருக்கிறது. அது குறித்த புராண கதையை நாம் இன்று வரை படிக்கிறோம், கேட்கிறோம். ஒரு வகையில் அவர்கள் வேண்டுதல் பலித்து விட்டது எனலாமா?

அசுரர்களின் கதைகள் குறிப்பிட்ட விஷயத்தை கோடிட்டுக் காட்டுவதற்காக எழுதப்பட்டவை . அந்த நோக்கம் நன்றாகவே நிறைவேறியுள்ளது. 

57 கருத்துகள்:

  1. அன்பின் KGG, ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. வழக்கம்போல் எழுந்தாலும் கணினிக்கு வர தாமதம் ஆகி விட்டது. வரவேற்ற வரவேற்கப் போகும் அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கம்.

      நீக்கு
  2. இன்றைய தொகுப்பு அருமை..

    ஆனாலும் பிறகு வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  3. ஏஞ்சலோட கேள்வி பதில்கள் இல்லாமல் பதிவு வெறிச்! :( இப்போல்லாம் அவங்க வரதே இல்லை. வந்தாலும் எ.பிக்கும், அதிராவோட பதிவுக்கும் மட்டும் தான் வரார். கிறிஸ்துமஸ் கழிந்ததும் வர முடியும்னு நம்பறேன். பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  4. இம்முறை ஒரே ஒருத்தர் பதில் தான் வந்திருக்கு. யாருனு யூகம் செய்ய முடிகிறது. கௌதமன் சார் கச்சேரிகளில் பிசியோ அல்லது கான்டீன் பக்கம் போய் உட்கார்ந்துட்டாரோ? :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேஜிஜி சார்தான் தெளிவாச் சொன்னாரே 45+ வருஷத்துக்கு அப்புறம் டிசம்பர் சீசனை மிஸ் பண்ணப் போவதாக. எதுவும் சரியா படிக்கிறதில்லை...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    2. கேஜிஜி இங்கே பதிவிலே சொன்னதாய்த் தெரியலை. ஒருவேளை வாட்சப்பிலோ?

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை வணக்கம். என் கேள்வி. ஓடும் பஸ்களை நல்ல நிலைக்குக் கொண்டு வராமல் சென்னை முழுவதும் தோண்டிச் சுரங்க ரயில் விடப்போவது அவசியமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா.. கர்நாடகா பஸ்கள் அருமையா இருக்கு. தமிழ்நாட்டில் பஸ் வாங்க, மெயின்டெயின் செய்யக்கூட மூளையில்லாத தலைவர்கள்னு சொல்லலாமா

      நீக்கு
    2. உண்மை நெ.த. கர்நாடகாவில் பேருந்துகளின் பராமரிப்பு மட்டுமில்லாமல் ஓட்டுநர், நடத்துனர்களின் சேவையும் குறிப்பிடத் தக்கது. அதிலும் இருவருக்குமே பேருந்து ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும். நடத்தவும் தெரிந்திருக்க வேண்டும். முதலில் ஓட்டுபவர் களைத்தால் மற்றவர் அவர் இடத்துக்குத் தான் சென்று அவருக்கு ஓய்வு கொடுப்பார். பயணிகளிடமும் அன்பாக நடந்து கொள்வார்கள். முக்கியமாகத் தொலைதூரப் பயணங்களில் கேட்டுக் கொண்டால் கழிவறை சுத்தமாக இருக்கும் இடம் பார்த்து நிறுத்தி அனைவரும் போய்விட்டு வரும் வரை பொறுமை காத்து அழைத்துச் செல்வார்கள். இதைப் பல முறை கண்டிருக்கேன்.

      நீக்கு
  6. மகிழ்வான காலை மற்றும் இனிய நாள் வணக்கம், ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்

    வல்லிம்மா! இனிய மாலை வணக்கம்…

    கீதா
    கணினி ஸ்டக் 5.30 லிருந்து முயற்சி....இப்பவும் கருத்து அடிக்க முடியலை....ஸோ அப்பால கணினி ஆஃப் செய்து அப்புரமா வரேன்...

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம்அனைவருக்கும், மதுரை மீனாட்சி மேடம் உள்பட, எங்க ஊர் கீதா ரங்கன்(க்கா), பாலைவன துரை ராஜு சார், கில்லர்ஜி... அட எழுத ஆரம்பித்தால் முடிவே இல்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை மீனாட்சி மேடம் உள்பட,///அது யாரு புதுசா? இஷ்டத்துக்கும் பெயரை எல்லாம் மாத்தாதீங்க! :))))))

      நீக்கு
    2. காலைல எழுதும்போது, மதுரை மீனாட்சி அம்மனை மனதால் நினைப்பதும் குற்றமா? என்ன கொடுமை சரவணன்...

      நீக்கு
  8. என்று மக்கள் அதிக பணம் கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்க ஆரம்பித்தார்களோ...

    அதுதான் நடிகர்களின் சம்பளம் கோடிகளை தொட்டதின் அடிப்படை காரணம்.

    பதிலளிநீக்கு
  9. ஜொமோட்டோ படத்தை நான் போடலாம்ன்னு டிராஃப்ட்ல வச்சிருந்தேன். சுட்டுட்டீங்களே!

    பிடித்த பத்து புத்தகத்தை தொடர்பதிவாக்கிடலாமா>! தொடர்பதிவு வந்து ரொம்ப நாளாச்சுதே!

    பதிலளிநீக்கு
  10. ஸொமாட்டோ பற்றி ஆசிரியர் கருத்துதான் என் கருத்தும். அது பற்றி பதிவும் எழுத ஆரம்பித்தேன், தொடர முடியாத சூழ்நிலை.

    பதிலளிநீக்கு
  11. பிடித்த பத்து புத்தகத்தை தொடர்பதிவாக்கிடலாமா>! தொடர்பதிவு வந்து ரொம்ப நாளாச்சுதே!
    எ.பி.யை பொருத்தவரை நல்ல விஷயங்களுக்கு என்றுமே தடை கிடையாது. ஸ்டார்ட்.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  13. கேள்வி, பதில்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    பிடித்த புத்தகப் பகிர்வும் முகநூலில் வந்து விட்டது.
    பஸ்கள் எல்லாம் சரியாக இல்லை. ஷேர் ஆட்டோக்கள்தான், .
    ஓலோ ஆட்டோக்கள்தான், மதுரை முழுவதும்

    பதிலளிநீக்கு
  14. சிட்டுக்குருவிகள் எங்கல் குடியிருப்பு வளாகத்தில் இருக்கிறது. கோவையில் ஆனைகட்டி என்ற இடத்தில் கூட்டமம் கூட்டமாய் குருவிகள் மரம் செடிகளில் அமர்ந்து இருப்பதை உறவினர் அனுப்பினார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா மர்ங்கள் இருந்தால் அங்கு சிட்டுக்குருவிகள் நிறைய இருக்கும் அந்த க்ளைமேட் அவற்றிற்கு ஒத்து வந்தால்...

      கீதா

      நீக்கு
  15. பங்களூரில் எங்கள் வீட்டுக்கு அருகில் சிட்டு குருவிகளை பார்க்க முடிகிறது. ஆனால் எங்கள் கிராமத்தில் நோ சிட்டு குருவிகள்.

    பதிலளிநீக்கு
  16. @கீதா சாம்பசிவம் மேடம்

    //வீட்டில் சமைக்காமல் வெளியில் சாப்பிடுவதையே // - இதில் பெரும்பாலும் கெளரவம் காரணம் இல்லை. அவசியத் தேவைக்குத்தான் அப்படி ஆர்டர் செய்யும் நிலை வருகிறது. சில சமயம் சமையல் செய்ய போரடிக்கும், இல்லை கொஞ்சம் ருசியான ஈசியான உணவு சாப்பிடலாம்னு தோணும். அந்த சுலபத்தின் காரணமாக, சில சமயம், பொடி தடவிய இட்லி, பஜ்ஜி, தோசை போன்றதும் வாங்க நேரிட்டுவிடுகிறது. உபர், ஸ்விக்கி போன்றவை, பல சமயங்களில் நிறைய டிஸ்கவுண்ட் தருவதால், ஒரு வேளையின் உணவு 70-110 ரூபாய்க்குள் உட்கார்ந்த இடத்திலேயே முடிந்துவிடுகிறது (ஒருவருக்கு). எங்கயும் போய் சாப்பிடவேண்டாம். இந்த சவுகரியம்தான் ஆர்டர் செய்து சாப்பிடுவதற்கான அடிப்படைக் காரணம்.

    //சமையல் தெரிந்திருக்க வேண்டும் என்பார்கள்! இப்போ அப்படி எல்லாம் இல்லை! மாறி விட்டது! இது நல்லதா?// - இதுவும் நல்ல கேள்வி. மாறிவரும் இந்த காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் பகிர்ந்து வேலை செய்து தாங்கள் சமைத்துக்கொண்டால் (பாத்திரம் அலம்புவது முதற்கொண்டு) வீட்டில் சமைப்பது ஆரோக்கியம்தான். ஆனால் இருவரும் வேலைக்குச் சென்றால், அதன் பிறகு வீட்டுக்கு வந்து சமைத்து.... இது பல சமயங்களில் கஷ்டமாகிவிடும். 'சமைப்பது' என்பது ஒரு டாஸ்க்தான். குறைந்த அளவு நாலட்ஜ் இருந்தால் போதும். யூ டியூப் போன்றவற்றைப் பார்த்து எப்போது வேணும்னாலும் கத்துக்கொண்டுவிடலாம்.

    //செல்போன் டவர்களால் சிட்டுக்குருவி அழியும்// - எனக்கு இது ஒரு பிராடு தகவலாகத்தான் தெரிகிறது. சிட்டுக்குருவி உயிர்வாழ என்ன தேவை? அதற்கு கூடு கட்ட இடம், நெல்மணிகள், அப்புறம் காச் மூச் என்று பறந்து விளையாட இடம். கிராமத்தில் ஓட்டுவீடுகளில் இதற்கான வாய்ப்புகள் இருந்தன. நகரத்தில் கான்க்ரீட் ஜெயில்கள். மரங்கள் எல்லாம் வெட்டியாச்சு. நெல்/தானியம் போன்றவை காயப்போடுவதில்லை. இடையில் இடமே கிடையாது. இதில் சிட்டுக்குருவி எங்கிருந்து வாழும்? கிராமங்களில் இவ்வளவு புறாக்கள் கண்டிருக்கிறோமா? இப்போது அவைகளுக்கு நகரங்கள் தோதுவான இடங்களாக இருப்பதால் அவை பல்கிப் பெருகுகின்றன.

    @எ.பி. ஆசிரியர் - டொமடோ, சொமடோ படத்தை ரசித்தேன். இந்தத் தடவை பதில்கள் சீரியசாக அதே சமயம் உண்மையாக இருப்பதால், பதில் சொல்லியது கேஜிஜி ஸ்ரீராம் இல்லையோன்னு ஒரு எண்ணம். ஆனால் டொமடோ படத்தைப் பார்த்தால் கேஜிஜியாக இருக்கலாமோன்னும் தோணுது. கேஜிஜி சார் எப்போதும் சீரியசா பதில் சொல்லமாட்டாரே.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உண்மையாக இருப்பதால், பதில் சொல்லியது கேஜிஜி ஸ்ரீராம் இல்லையோன்னு ஒரு எண்ணம்.// நாங்க உலகமகா பொய்யர்களா!

      நீக்கு
    2. நெல்லை, சிட்டுக்குருவிகள் அழிவதற்குக் காரணம் செல்ஃபோன் டவர்கள் மட்டுமே காரணம் என்று சொல்வதற்கில்லை என்றாலும் அதுவும் ஒரு காரணம் என்பதை என் மகனின் நண்பன் கல்கத்தா வெட்னரி காலேஜில் எம்விஎஸ்ஸி செய்யும் போது ஆய்வு செய்து பேப்பர் ப்ரெசென்ட் செய்துள்ளார்.

      நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்கள் மெயினானவை தான்...ஆனால் செல்ஃபோன் டவர் பறவைகளின் கம்யூனிக்கேஷன் ஃப்ரீக்வென்ஸியை பாதிக்கிறது என்பதையும் அந்தப் பேப்பர் சொல்லுகிறது. சிட்டுக் குருவி என்றில்லை பல பறவைகளின் கம்யூனிக்கேஷன் ஃப்ரீக்வென்சியை.

      மரங்கள் அழிவதும் பல எண்ணற்ற பறவைகள் அதாவது எவை எவை மரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றனவோ அவை எல்லாம் இனப்பெருக்கம் செய்ய இயலாத நிலையில் எக்ஸ்டிங்க்க்ட் பட்டியலில் இடம் பெறுகின்றன. இல்லை அடாப்டேஷன் என்ற முறையில் பல உரு மாற்றங்கள் அடைகின்றன...இறுதியில் காணாமல் போகின்றன..ஈமு இனம் அழிந்து வருது. ஃப்ளை கேச்சர் தூக்கணான் போன்ற இனங்கள் மற்றும் தேனீக்கள்....மாக்னெட்டிக் ஃப்ரீக்வென்சி யினால் அதன்முட்டைகள் குறைந்து வருதுன்னு.

      மோஆ, ஆஸ்ற்றிச், இன்னும் சொல்லலாம்....இவை பறாக்காதவை...

      நெல்லை எதுவானாலும், இயற்கைக்குப் புறம்பான எந்த டெவெலப்மெண்டும் அழிவை நோக்கித்தான் என்பது உறுதி...living in tune with nature is the blessed life...ஆனால் அது இனி அரிது...கூடியவரை இயற்கையோடு ஒத்து வாழ முயற்சி செய்யலாம்..

      ஆசிரியர் பதிலில் சொல்லியிருப்பது போல் சில வளர்ச்சிகளை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது...

      கீதா

      நீக்கு
    3. பதில் சொல்லியது கேஜிஜி ஸ்ரீராம் இல்லையோன்னு ஒரு எண்ணம்.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை....ஹா ஹா ஹா ஹா...

      நெல்லை எபியின் ட்ரேட் மார்க்கே ஒரு குறும்பும், நகைச்சுவையும், சொல்லாடல்களும் இழையோடிருப்பதுதானே!!!

      //நாங்க உலகமகா பொய்யர்களா!//

      அதானே அப்படிக் கேளுங்கோ கௌ அண்ணா!!!! அதிரா வந்தாலும் நெல்லைக்கு ஒரு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லுவார்...

      கொஞ்சம் தமாஷா, நகைச்சுவையா பதில் சொன்னா என்னன்றேன்.......ஹா ஹா ஹா ஹா ஹா...

      //கேஜிஜி சார் எப்போதும் சீரியசா பதில் சொல்லமாட்டாரே.//

      அதுதானே நமக்கு ஓட்டறதுக்கு நல்லாருக்கும்....ஹிஹிஹி...

      நெல்லை நகைச்சுவையோடு அதுல கருத்தும் வந்துருமே...நீங்க பாத்திருப்பீங்களே....

      கௌ அண்ணா இந்த நெல்லை இப்படித்தான் சீண்டி விளையாடுவார்...பாருங்க காலங்காத்தால கீதாக்காவை சீண்டிருக்கார்...ஹா ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      நீக்கு
    4. கேஜிஜி சார்... 'உண்மையான' என்பதற்கு சீரியசான சின்சியரான பதில் என்று சொன்னேன். நீங்க பொதுவா நகைச்சுவையினால் பதிலை கொஞ்சம் ஜாலியாக்கிடுவீங்க.

      அதுக்கு 'பொய்யர்கள்' என்ற பெரிய வார்த்தையை உபயோகப்படுத்தலாமா? இதோ... இன்றே உங்கள் வீட்டுக்கு நீதி கேட்டு நெடிய பயணம் மேற்கொள்கிறேன். ஜெ.பி நகர்லேர்ந்து எவ்வளவு மணி நேரம் ஆகும் 'நடைப் பயணத்தில்' உங்க வீட்டுக்கு வந்து சேர?

      நீக்கு
    5. ஹா ஹா ஹா ஹா ஹா....நெல்லை அதுவும் அவர் தமாஷ் தான் செஞ்சுருக்கார் நெல்லை...நிஜம்மா சிரிச்சுட்டேன் உங்க பதில் பார்த்து...அதுவும் நடைப்பயணம் என்றதும்...

      நடைப் பயணமா!!!! ச்சே ச்சே...உங்க வீட்டுக்குப் பக்கத்துல ஏதேனும் ஏரி இருந்தா பூஸார் போல அங்கேயே உண்ணாவிரதம்...அல்லது குதித்தல் இப்படியான தக்கினிக்குகள் இருக்கே!! உங்களுக்கு நீஞ்சத் தெரியுமா!!!!? கூட்டத்துக்கு ஆள் சேர்க்க பூஸாரை அழையுங்க!!!! ஹா ஹா ஹா..

      கீதா

      நீக்கு
    6. கீதா ரங்கன்... என் தெக்கினிக்கு புரியலையா? நடந்தால், நடைப்பயிற்சி ஆச்சு. அவங்க வீட்டுக்குப் போயாச்சுன்னா, ரவா தோசை இன்ன பிற செய்து கொடுக்காமல் அனுப்பிடுவாரா கேஜிஜி சார் (இல்லை அவற்றைக் கொடுக்காத வரை நான் தான் அங்கிருந்து கிளம்புவேனா?). நல்லா சாப்பிட்டால், செரிக்க திரும்பவும் நடந்து வந்துடலாம். (இதை உங்க வீட்டுக்கு நான் ஃபாலோ பண்ணமுடியாது. இன்னைக்குப் புறப்பட்டால் இரண்டு நாள் கழித்துத்தான் உங்க வீட்டுக்கு வரமுடியும். புளியோதரை (அல்லது புளிக்காச்சல்) போன்றவை வழிநடைக்கு நீங்கள் எனக்குக் கட்டித்தர நானென்ன வெங்கட்டா? வெறும்ன, 'பார்க்கலாம்'னு கதவைச் சாத்திடுவீங்க. ஹாஹாஹா.

      நீக்கு
    7. ஹா ஹா ஹா ஹா ஹா நெல்லை வாங்க கண்டிப்பா கட்டித் தரேன்....போனவாரம் கூட சென்னைக்குப் போகும் போது புளிக்காச்சல் எடுத்துக் கொண்டு போனேன்..

      நெல்லை கௌ அண்ணா வீட்டுக்குப் போனா கண்டிப்பா கௌலாப்ஜாமூன் போல ஒன்னு கிடைக்கும்...நீங்க அதுக்கு ரெடினா கண்டிப்பா நடந்து போங்க!!! 8 கிலோமீட்டர் தானே!!! ஹா ஹா ஹா ஹா...கௌ அண்ணா கண்டிப்பா நெல்லைக்கு புதுசா ஏதாவது செஞ்சு கொடுங்க...ஹிஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  17. எனக்குப் பிடித்த நாவல் என்று கேட்டால், உடனே எனக்கு, 'பொன்னியின் செல்வன்', 'துப்பறியும் சாம்பு', இமயமலையில் ஒரு இதய குரு, சுவாமி ராமாவின் அனுபவங்கள், வாலி/சிவகுமார்/உ.வே.சா/நாமக்கல் கவிஞர் போன்றோரின் தன் வரலாறு இவைகள்தான் மனத்தில் எழுகின்றன. படிக்கச் செலவழிக்கும் நேரம் இன்வஸ்ட்மெண்ட் என்று இந்தப் புத்தகங்களைப் படித்த போது எனக்குத் தோன்றியது. பெரும்பாலும் ஒவ்வொருவருடைய தன் வரலாறும் சுவையாகத்தான் இருக்கும் (கங்கை அமரன், பஞ்சு அருணாசலம், கதாசிரியர் கலைஞானம், கண்ணதாசன் போன்று)

    பதிலளிநீக்கு
  18. பத்து தானே...! 'பத்து' போடும் அளவிற்கு 133 இருக்கு...!

    பதிலளிநீக்கு
  19. கேள்விகள் அனைத்தும் அருமை...அதற்கான பதில்களும் நல்லாருக்கு...

    ஜொமாட்டொ விஷயம் மிக மிக அசிங்கம்...அதிரா சொல்லியிருந்தது போல் அது வேண்டுமென்று எடுக்கப்பட்டதோ....இல்லை உண்மையான நிகழ்வோ...கண்டிப்பாக நமக்கு வெளியில் சாப்பிடும் எண்ணத்தை அசைத்துப் பார்க்கும்.

    அது போல எபி க்ரூப்பில் வந்த ஒரு ஃப்ளைட்டில் ஏர்ஹோஸ்டஸ்??? அப்பெண் சாப்பிடுவது....அதுவும் அதே ஸ்பூனால் உவ்வே....இந்தக் காணொளியும் ஃப்ளைட்டில் கண்டிப்பாக நெகட்டிவ் விளைவுகளை ஏற்படுத்தும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  20. கொண்டு வரும் உணவு பொட்டலத்தை ஒருவர் ருசி பார்ப்பதை மிகச் சரியாக ஒருவர் படம் பிடிக்கிறார் என்றால் அது நம்பக்கூடியதாக இல்லை. போட்டி, பொறாமை காரணமாக இப்படி எல்லாம் படம் வெளி வரலாம்.//

    அதே அதே அதே .. என் கணிப்பும் ஏறக்குறைய இதேதான் அத்தனை பிசி ரோடு அது ..சரி அவர் பசியால் சாப்பிட்டார்னு சொல்லி இருப்பவங்க கொஞ்சம் யோசிச்சா உண்மை புரியும் .இப்படி நடு ரோட்டில் ஒருவர் எல்லார் கண்ணும் படுறமாதிரி சாப்பிடுவாரா ?? வெஹிக்கிள்ஸ் சத்தம் ஓங்கி ஒலிக்கும் குரல்கள் வெகு அருகாமையில் செல்லும் பிற வாகனங்கள் எதுக்கும் அசையல்லியே அவர் :) நம்மை யாரவது நமக்கு தெரியாம பார்ப்பது நம்ம உள்ளுணர்வுக்கு அலாரம் அடிச்சி காட்டி கொடுக்கும் எதுக்குமே அசையாத அந்த ஊழியர் பார்த்தா அவர் போஸ் கொடுத்திட்டு சாப்பிடற மாதிரி இருந்தது
    இது எதிர் கம்பெனிக்காரங்க வேணும்னே செய்ய வைச்சது என்பதற்க்கெல்லாம் அப்பால் அந்த கம்பெனியே தனக்கு பப்லிசிட்டிக்காக செய்யவும் வைச்சிருக்கலாம் .புதிய பாக்கிங் சிஸ்டம் tamper எவிடண்ட் /tamper proof சீல் வைத்த கண்டெய்னர்ஸை அறிமுகம் செய்ய இதை ஒரு விளம்பரமாகவும் செஞ்சிருக்கலாம் ..
    விளம்பரத்துக்காக இப்படி செய்வாங்களான்னு கேள்வி எழலாம் ..செய்ய மாட்டாங்கன்னு என்ன உத்திரவாதம் ??
    எல்லார் மனசிலும் பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் இரண்டு விதங்களில் இடம் பிடிக்கலாம் ..இந்த காணொளியை பார்த்து ஒன்னு ரெண்டு நாள் வாங்காம இருப்பாங்க அப்புறம் மீண்டும் வாங்க ஆரம்பிப்பாங்க ..என்ன அவங்க குடுக்கற பிளாஸ்டிக் ஸ்பூன்கள் மட்டும் குப்பைக்கு போகும் :)
    அப்புறம் இந்த மாதிரி செய்திகள் வரும் வேகத்தில் ஒரு வாரத்தில் காணாம போயிரும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் ஜோமாட்டோ விஷயஹ்தை விடுங்கள் ஃப்ளைட்டில் இப்படி டேஸ்ட் பார்ப்பது வந்திருக்கே!!

      சரி அதையும் விடுங்கள் ஹோட்டல்களில் டேஸ்ட் பார்ப்பவர்கள் உண்டு...அங்கு எச்சல் பார்ப்பதில்லை...இன்னும் சில சுகாதாரமற்ற வேலைகளும் உண்டு...எனக்குத் தெரிந்த ஒருவர் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஹோட்டலில் வேலை செய்பவர் அதுவும் கிச்சனில்...ஸ்டார் ஹோட்டல்....ஸ்ரீராம் சொல்லியிருந்தது போல் ஹோட்டல் கிச்சனைப் போய்ப்பார்த்தால் தெரியும்....நான் சில பார்த்திருக்கேன்...பார்த்துவிட்டால் கண்டிப்பாக..நமக்குச் சாப்பிடப் பிடிக்காது.

      இந்த வீடியோ வந்ததும் கண்டிப்பாக அது பொய்யாகவே இருக்கட்டும்...போட்டியில் விளைந்தததாகவே இருக்கட்டும்... கண்டிப்பாக நமக்கு சந்தேகம் வருதா இல்லையா? இனி வாங்க யோசிப்போமா இல்லையா?! வியாபார உலகம் ஏஞ்சல்...முன்பு விளம்பரங்களில் ஹார்லிக்ஸ் மற்றும் காம்ப்ளான் போட்டியில் ஒன்று மற்றதைக் கேலி செய்யும் விளம்பரங்கள் வந்தன. அப்புறம் அப்படியான விளம்பரங்கள் வரக் கூடாது என்று சொல்லப்பட்டது.

      இப்ப இப்படி சமூக வலைத்தளங்கள் ஓங்கி நிற்பதால் இப்படியான வீடியோக்கள் வெளியிடப்படலாம்...அது ஜோமாட்டோ ஃபுட் ஆகவே கூட இல்லாமல் இப்பத்தான் வீடியோ டெக்னாலஜியில் என்னவெல்லாமோ செய்யுறாங்களே ஆள்மாறாட்டமே செஞ்சு மனைவி வேறு ஒருவருடன் இருப்பது போல ஃபோட்டோ பண்ணி குடும்பத்துக்குள்ள குழப்பம் விளைவிக்கும் வில்லன்கள் போல இதுவும் இருக்கலாம் தான்...

      ஆனால் சந்தேகம் வந்துவிட்டால்??!!!

      கீதா

      நீக்கு
    2. நான் தான் ஹோட்டலுக்கே போறதிலேயே :) நம்ம உணவு அலர்ஜி பிரச்சினையில் ஆல்வேஸ் வீட்டு சமையல் தான் கீதா..
      ஹ்ம்ம் ஏர்ஹோஸ்டஸ் மேட்டர் இப்போதான் கேர்ள்விப்படறேன் !! என்னமோ போங்க இப்போல்லாம் மனுஷங்களுக்கு மனசாட்சி இல்லியோனு தோணுது

      நீக்கு
  21. கேள்விகள் நிறைய மனசில் இருக்கு வரேன் அப்புறமா :) கணை தொடுக்க

    பதிலளிநீக்கு
  22. ம்ம் அப்புறம் சிட்டுக்குருவிங்களோ இல்லை பிற பறவைகளோ அழிவுக்கு காரணம்செல்போன் இல்லை மனுஷங்க மரத்தை வெட்டினதே .அதோட அளவுக்கதிகமா பூச்சிக்கொல்லி மருந்துகள் பயிர்கள் மீது தெளிப்பதும் காரணம் அடுத்தது அவற்றின் predators
    எலலா உயிரினத்துக்கும் ஒரு predator உண்டு நம் ஹோமோ சாபியான்சுக்கு மட்டும் அவர்களேதான் அவங்களுக்கு எதிரி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. eaves போன்ற அமைப்பு நம்மளோட முந்தைய காலத்து ஒட்டு வீடுகளில் இருக்கும் அதில் கூடுகட்டி குஞ்சுகளை பொரித்து வளர்க்கும் சிட்டுக்கள் .இப்போ ப்லாட்ஸில் அதுக்கெல்லாம் இடமில்லை அதோட கம்பி போல் அந்த இடுக்குகளிலும் வைக்கிறாங்க அப்போ பறவைகள் எங்கே முட்டையிட்டு பெருகும் ??

      நீக்கு
  23. 1, அற்ப விஷயங்களையெல்லாம் சர்ச்சை ஆக்குவது யார்? இதன்னால் யாருக்குஆதாயம் ?

    2, மாற்றங்கள் அவசியமா ? சில மாற்றங்களை ஏற்க மனம் மறுக்கிறதே ? ஏன் ?

    3, ஒருவரை நமக்கு மிகவும் பிடித்துபோகிறது இன்னொருவரை எதோ காரணத்தால் அவர் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கிறது .இந்த இரண்டில் எது முக்கியம் அவசியம் ???

    4, சின்ன வயசில் கோலி கில்லி கேரம் லூடோ போன்ற விளையாட்டுக்கள் விளையாடும்போது சீட்டிங் செஞ்சதுண்டா ?? உங்களிடம் அதிகம் ஏமாந்தது யார் ?
    எனக்கு அப்படி சந்தர்ப்பமே அமையல்ல அதான் கேட்கிறேன் ??
    5, வேலை வெட்டி இல்லாதவன் அப்டிங்கறாங்களே ? இதில் வேலை தெரியும் வெட்டி அப்டின்னா என்ன ??

    6, வலி நமக்கு உணர்த்துவது எதை ? வலிகள் நம்மை பலப்படுத்துமா இல்லை பலவீனமாக்குமா ??

    7, உலகம் உருண்டை , ஆப்பிள் உருண்டை பிஸ்கட் சதுரம் செங்கல் செவ்வகம் ஓகே இப்போ ஆகாயம் என்ன ஷேப் ??

    8, இந்த சினிமா நடிகைகள் பல படங்களில் உதாரணத்துக்கு மௌனராகம் ரேவதி துவங்கி சமீபத்து நடிகைகள் சில்லியாக ஐ மீன் முகத்தை சுழித்து குழந்தை போல் நடித்து silly ஓவர் ஆக்டிங் செய்கிறார்களே ? இதை பற்றி தங்கள் மேலான கருத்து ???
    இவற்றை உண்மையில் படம் பார்ப்போர் ரசிக்கிறார்களா ??

    இந்த கேள்வியை படிக்கும்போது ஜோ ,தமன்னா கீர்த்தி சுரேஷ்லாம் உங்க கண்ணு முன்னாடி வந்து பயங்காட்டினா நான் பொறுப்பில்லை :)))))))

    9, CHICK PEAS ..நியாயமா இதை கோழி குஞ்சு கடலை என்றுதானே சொல்லணும் எதுக்கு கொண்டை கடலைனு சொல்றாங்க ??

    10, தொலைபேசி மணி அடித்து நீங்க ரிசீவரை /கால் அட்டென்ட் பண்ணு முன்னர் எதிர்பக்கம் இருப்பவர் அவசர குடுக்கை ...ஹலோ போலீஸ் ஸ்டேஷனா ? ஹலோ சரவணா பாவனா சே சே பவனா :) ?? என்று கேட்டால் எப்படி உணர்வீர்கள் ? என்ன பதில் தருவீங்க ??

    11, ரோட்டில் எச்சில் துப்புவோர் ,எந்நேரமும் சூயிங்கம் மெல்வோர் ,மிக்ஸர் அதுவும் நார்த் வெரைட்டி ஒரு மசாலா வாசனை ஊரெல்லாம் பரவ சாப்பிட்டுக்கொண்டே பேசுவோர் , இவங்களுக்கு என்ன தண்டனை தருவீர்கள் ?








    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கேள்விகள். பதில் அளிப்போம்.

      நீக்கு
    2. இருங் இருங்க 8வது கேள்வியில் சில நேம்ஸ் ஒன்றெண்டு விட்டுப்போச்சு ஹன்சிகா மொத்வனி :) அப்புறம் ஸ்ரீராமின் ஆஸ்தான ப்ரிய ஹீரோயின்ஸில் கே ஆர் விஜயா :) இவங்க ஒரு படத்தில் பழையதை சாப்பிடும் ஸீன் ஒண்ணு இதெல்லாம் உங்க மனக்கண் முன்னாடி வந்தே ஆகணும் :)

      நீக்கு
    3. ஏஞ்சல் கண்டிப்பா நீங்க கேள்வியின் நாயகியேதான்!!! ஸ்ரீராம் கௌ அண்ணா அண்ட் ஆசிரியர்கள் எபி சார்பில் ஒரு மேடை போட்டு இந்தப் பட்டத்தை மாலை போட்டு மரியாதை செய்து பொன்னாடை போர்த்தி பூஸாரின் காதில் புகை வர கொடுத்துடுவோம்!!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    4. மீ blushing :))))))))) தாங்க்யூ தாங்க்யூ

      நீக்கு
    5. 12, நீங்கள் ஹோட்டலுக்கு போனால் menu கார்டை பாக்காமல் ஒரு குறிப்பிட்ட உணவை ஆர்டர் குடுப்பது எதை ? ஏன் ?

      13, மனம் என்பது உணர்வா ?

      14, ஒரு நட்பு அல்லது உறவு உங்களருகில் அமர்ந்திருப்பவரிடம் உங்கள் கைபேசியில் உள்ள ஒரு புகைப்படத்தை காட்டுகிறீர்கள் உடனே அவரை மற்ற படங்களையும் பார்க்கலாமா என்றதும் என்ன சொல்வதென்று புரியாமல் தலையாட்ட அந்த இங்கிதம் தெரியா நட்புறவு எல்லா படங்களையும் பார்க்கிறார் .இப்போ உங்க மன நிலை என்ன ?
      இப்படி பட்டவர்களை எப்படி டீல் செய்வது ?

      15 , மினி இட்லி சாப்பிடும்போது உண்மையில் மனசு உணவை உண்ட திருப்தி அடைகிறதா ??
      பின் குறிப்பு இது வரைக்கும் படத்தில் மட்டுமே பார்த்திருக்கேன் மினி இட்லிஸ் சாப்பிட்டதில்லை அதாங் கேட்டேன் வேறொன்றுமில்ல :)






      நீக்கு
    6. ஏஞ்சல்,நான் ஹோட்டலில் பொதுவாக மினி இட்லி சாம்பாரோ அல்லது மினி டிஃபனோ தான் ஆர்டர் பண்ணுவேன். எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். ஆகவே அதிகம் வயிற்றைத் தொந்திரவு செய்யாது.

      நீக்கு
    7. படத்தில் குட்டியூண்டா இருக்கே அக்கா .ரெண்டு இட்லி மாவை பத்து பைசா அளவுக்கு ஊத்தி செய்றாங்களோ :)

      லண்டன் போனா சரவணபவானில் ட்ரை பண்ணனும்

      நீக்கு
  24. //இவங்க ஒரு படத்தில் பழையதை சாப்பிடும் ஸீன் ஒண்ணு இதெல்லாம் உங்க மனக்கண் முன்னாடி வந்தே ஆகணும் :) // ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!