சனி, 15 டிசம்பர், 2018

வீரன்... படு சூரன்... நான் கட்டபொம்மன் பேரன்...





1)  மதுரை மணப்பட்டி கண்ணன்:   மணப்பட்டி, இளமனுார், மிளகனுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேய்ச்சலுக்கு ஏற்ற பகுதிகளுக்கு 2,000 மாடுகளை அழைத்து செல்வோம். அன்று இரவு தேவைப்படுவோரின் வயல்களில் கிடைய் அமர்த்துவோம். குறிப்பிட்ட தொகை வருமானம் கிடைக்கும். மாட்டு சாணத்தை உலர வைத்து கேரளா தேயிலை எஸ்டேட்டுகளுக்கு வாரந்தோறும் டன் கணக்கில் அனுப்புகிறோம். 50 கிலோ கொண்ட மூடை 75 ரூபாய்க்கு விற்கிறோம் என்றார்.....






2)   தினமலர் வாரமலரிலிருந்து...





3) இவரைப்பற்றி ஏற்கெனவே ஒரு செய்திக்காக இந்தப் பகுதியில் சொல்லி இருக்கிறோம்.  அதைத்தவிர அவரைப்பற்றி மேலும் சில செய்திகள். கருணை உள்ளம், கடவுள் வாழும் இல்லம் என்பார்கள்.  "கண்கண்ட சாமி" என்று தலைப்பு கொடுத்திருப்பது முற்றிலும் பொருத்தம்.  இது போன்று சினிமாவில் நடித்து பேர் வாங்கிப் போகிறார்கள் "ஹீரோ"க்கள்! இவர்தான்  நிஜ ஹீரோ,  இல்லை நிஜமான மனிதர்.






4)  "வீரன்...   படு சூரன்...   நான் கட்டபொம்மன் பேரன்...   "   

மத்தியப் பிரதேசத்தில் அனுமதி பெற்று உத்தரப் பிரதேசம் சோன்பத்ராவில் உள்ள சோன்(தங்க) நதியில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இங்கு நேற்று இரவு திடீர் சோதனை நடத்திய தமிழரான மணிகண்டன் ஐஏஎஸ், 11 லாரிகளுடன் மணல் மாஃபியாவை கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.





5)  நேர்மையாக இருப்பதே பெருமையான பேசுபொருளாய்....   நாமும் பாராட்டுவோம் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி பெண் தாசில்தார் சொர்ணம் அவர்களை.....


19 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் வலைத்தள ஜாம்பவான்கள் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  2. கண்கண்ட சாமி கந்தசாமி...
    சிறப்பு.. வெகு சிறப்பு..

    மக்களைக் காத்து நிற்கும்
    கந்தசாமி அவர்களை
    மாமயிலோன் கந்தசாமி
    எந்நாளும் காக்கட்டும்!...

    பதிலளிநீக்கு
  3. நேர்மையான உள்ளங்கள் இன்னும் வாழத்தான் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  4. கந்தசாமி, நம் சொந்தசாமி என்பதைப் பற்றிய விபரங்கள் தவிர்த்து மற்றவை புதியது. பகிர்வுக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள். (கௌதமன் சார்! கவனிக்க! எனக்குத் தெரியும்னு நான் சொல்லவே இல்லை!)

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    கண்கண்ட சாமிக்கு முதலிடம்.
    விவசாயிகள் கதையை இப்பொழுதுதான் முடித்து பப்ளிஷ் செய்தேன். இங்கேயும், வயதான பெற்றோருக்கு மகன் களால் தொல்லை. அதைத்தீர்த்துவைத்த அதுவும் ஒரு வாரத்தில் செய்த அதிகாரிக்கு மனம் நிறை வாழ்த்துகள்.
    வயலில் உண்மை உரம் சேர்க்கும் நிஜ மனிதர்களுக்கும் நன்றி.
    தமிழகத்திலிருந்து சென்ற ஆட்சியர் மணற்கொள்ளையை தடுத்தது இன்னோரு நல்ல செய்தி.
    மொத்தத்தில் நேர்மை அதிகாரி சொர்ணம் அம்மாவுக்கும் நன்றி சொல்லி பாசிடிவ் செய்திகளுக்கு நன்றி சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  7. சேலம் ரோகிணி மாதிரி விளம்பரத்துக்காக இல்லாம நிஜமாவே எங்க ஊர் கலெக்டர் நல்லது பண்றார். ஆட்சியாளர்களால் அவர் கை கட்டப்படலைன்னா இன்னும்கூட நல்லது பண்ணுவார். ஏழை மக்களின் கோரிக்கை உடனுக்குடன் பரிசீலிக்கப்படுவது கண்கூடாய் பார்க்கிறேன்

    அனைத்து நல்லவர்களுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  9. கண்கண்ட சாமிக்கு வாழ்த்துக்கள், வணக்கங்கள்.
    முதியீர்களுக்கு மகங்களிடமிருந்து நிலத்தை மீட்டு கொடுத்தமைக்கு.
    பாலுமகேந்திரா கதையை பொதிகையில் வைத்தார்கள்,சுகாஷிணி டைரக்ட் செய்த கதை. அதில் இப்படித்தான் தனக்கு என்று வைத்துக் கொள்ளாமல் பிள்ளைகளுக்கு சொத்து, வீடு , நிலம் எல்லாம் பிரித்து கொடுத்து விட்டு அவதி படுபவர் கதையை.
    இருவரும் எங்கோ போய்விடுவார்கள் முடிவில்.
    இப்போது சட்டம் முதியோர்களுக்கு உதவி செய்கிறது, வெகு விரைவில் நடவடிக்கை எடுத்த கண்கண்ட சாமிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. நல்ல மனிதர்களைப் பற்றி படிக்கும்பொழுது வாழ்க்கை மேல் நம்பிக்கை வருகிறது. வாழ்க!

    பதிலளிநீக்கு
  13. மதுரை மணப்பட்டி செய்தி தவிர மற்றவற்றை படித்துள்ளேன். விடுபட்ட செய்திகளை உங்களின் பதிவு மூலமாக அறிந்துகொள்ள நல்வாய்ப்பு தருகின்றீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  14. உயர்ந்தோர் கதைகளைப் பதிவிடும் நீங்கள் பாராட்டுக்குரியவர்

    பதிலளிநீக்கு
  15. அனைத்துச் செய்திகளும் அருமை.

    கல்யாணம், மகளின் யூத் ஃபெஸ்டிவல் போட்டிகள், அண்ணன் ஒருவர் உடல் நலம் மிகக் குறைவாக இருப்பதால் அவரை பார்க்க எர்ணாகுளம் வரை என்று இந்த வாரம் இன்று வரை பயணம் தான். எனவே விரிவாகக் கருத்து எழுத இயலவில்லை ஸ்ரீராம்ஜி.



    பதிலளிநீக்கு
  16. கண்கண்ட சாமி திருவண்ணாமலை கலெக்டர் பற்றிய செய்திகளை முன்பே வாசித்த நினைவு. இப்போதையது மட்டும் புதிது.

    மணிகண்டன் ஐஏஎஸ் சூப்பர்...இரு ஐஏஎஸ் ஹீரோக்கள்!!!

    மாட்டுச் சாணம் உரமாக்கப்பட்டு இயற்கை முறையில் விவசாயம் மீண்டும் தொடங்கியிருப்பது எல்லாம் அருமையான விஷயங்கள்.

    எல்லாச் செய்திகளும் அருமை...

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!