திங்கள், 24 டிசம்பர், 2018

திங்கக்கிழமை : பைங்கன் பர்தா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி



பைங்கன் பர்தா


தேவையான பொருள்கள்:

பெரிய கத்தரிக்காய் - 1
வெங்காயம்               -  2
தக்காளி                      -  2
பச்சை மிளகாய்        -  4
இஞ்ஜி                         -  ஒரு சிறிய துண்டு 
பூண்டு                         - 4 பல் 
இதற்கு பதிலாக இஞ்சி பூண்டு விழுது ஒரு டீ ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.
எண்ணெய்              - 4 அல்லது 5 டேபிள் ஸ்பூன் 
உப்பு                         - 1 1/2 டீ ஸ்பூன் 
மஞ்சள் பொடி, தனியா தூள், காரப்பொடி - தலா 1/4 டீ ஸ்பூன்.
சீரகம்                      - 1 டீ ஸ்பூன் 

செய்முறை:



முதலில் கத்தரிக்காயை அடுப்பில் மெல்லிய தீயில் சுட்டுக் கொள்ளவும். சூடு ஆறியதும் மேல் தோலை உரித்துவிட்டு நன்றாக கழுவி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். 



கத்தரிக்காயை சுடும் நேரத்தில் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி இவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 




அடி கனமான கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணை  ஊற்றி, அது காய்ந்ததும் சீரகம் போட்டு அது வெடித்ததும், வெங்காயத்தை போட்டு அது கண்ணாடி போல் ஆனதும் தக்காளி, பூண்டு, இஞ்சி இவைகளை போட்டு வதக்கவும்.  





அவை நன்கு வதங்கியதும் உரித்து. கழுவி வைத்துள்ள கத்தரிக்காய், உப்பு, மஞ்சள் தூள், தனியாதூள் இவைகளை சேர்த்து ஒரு கரண்டியால் நன்கு மசிக்கவும்.  எண்ணை குறைவாக இருந்தால் இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். சப்பாத்தி, பூரி போன்றவைகளுக்கு சுவையான, எளிமையான சைட் டிஷ் ரெடி.








இதில் காரப்பொடி, தனியா தூள் போன்றவை அவரவர் விருப்பம். என் மருமகள் பச்சை பட்டாணியும் சேர்த்தாள். அதை தக்காளி, பச்சை மிளகாய் போடும் பொழுது சேர்த்து விட வேண்டும். 

34 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா, தொடரும் அனைவருக்கும்

    வல்லிம்மா! இனிய மாலை வணக்கம்…

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. வரவேற்ற, வரவேற்கப் போகும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்.

      நீக்கு
  3. ஹை பைங்கன் பர்த்தாவா....எங்கள் வீட்டில் மிகவும் பிடித்த ஒன்று போனியாகிடும்...

    வரேன் விளக்கம் வாசிக்க....

    இங்கு திருனெல்வேலி சொதி....ரொம்ப சீக்கிரமா மிக்ஸி அரைத்தால் அடுத்தடுத்து இருக்கும் வீடுகள் தூங்குபவர்களுக்கு ஒரு வேளை தூக்கம் கலைந்து விடுமோ என்று 6 மணிக்கு அப்புறம் தான் மிக்ஸி வேலை மட்டும் வைத்துக் கொள்வென்..

    ஸோ அப்புறமா வரேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஆஹா இன்றைக்கும் வட இந்திய உணவு வகை. மகிழ்ச்சி. நானும் செய்வது உண்டு.

    பதிலளிநீக்கு
  5. பைங்கன் பர்த்தா இங்கேயும் அடிக்கடி செய்வோம். பூண்டு சேர்க்காமல். பூண்டு பிடிப்பதும் இல்லை, ஒத்துக்கொள்வதும் இல்லை. அசிடிடியைக் கிளப்பி விடுகிறது.கரம் மசாலாத்தூள், அம்சூர்ப் பொடி,கசூரி மேதி ஆகியன சேர்ப்போம். தக்காளியை நறுக்கி வதக்குவதற்குப் பதிலாய் ப்யூரி சேர்ப்பதும் உண்டு. எலுமிச்சம்பழம் பிழிந்தால் அம்சூர் தேவை இல்லை. கொத்துமல்லி நறுக்கி நிறையச் சேர்ப்போம். ஒரு சிலர் சாதத்தோடு கூடச் சாப்பிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  6. காரம் பிடிக்கும் எனில் கத்திரிக்காயைச் சுடும்போதே பச்சைமிளகாய், பூண்டு ஆகியவற்றைக் கத்திரிக்காயைக் கீறி உள்ளே வைத்து நெருப்பில் சுடலாம். பின்னர் தோலை உரித்து அவற்றையும் சேர்த்து மசிக்க வேண்டும். இது பஞ்சாபியர் முறை! சமீபத்தில் யூ ட்யூபிலும் யாரோ பகிர்ந்திருந்த்தைப் பார்த்தேன். ஆனால் கரி அடுப்பு எனில் இன்னமும் சுவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா இதை நான் என் தங்கை வீட்டில் அவர்கள் வீட்டில் சமையல் செய்யும் பெண்மணி செய்வதைப் பார்த்து தெரிந்து கொண்டு செய்தும் பார்த்தேன் நன்றாக இருந்தது. சின்னக் கீறல் போட்டு உள்ளே அடைத்துவிட்டார்....

      கீதா

      நீக்கு
  7. இன்னிக்கு என்னோட வலைப்பக்கம் நானும் ஒரு சமையல் குறிப்புப் பகிர இருந்தேன். எ.பி.க்குப் போட்டியா! ஆனால் பானுமதியின் பதிவு படிச்சதில் மனசு சரியில்லை என்பதால் எதுவும் போடப் போறதில்லை! :( விரைவில் அவர் குடும்பத்துப் பிரச்னைகள் தீரப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ் கீதாக்கா....பானுக்கா வீட்டுப் பிரச்சனைகள் கஷ்டமாகிப் போச்சு...பிரார்த்திப்போம் நாம்..

      கீதா

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் இன்றைய "திங்க"பதிவு மிகவும் நன்றாக உள்ளது. படங்களும் செய்முறை விளக்கங்களும் மிகவும் அருமை. நான் கத்திரியில் இதுபோல் செய்ததில்லை. வெறும் துவையல் மாதிரி செய்துள்ளேன். புதுமையாக இந்த மாதிரி செய்து காண்பித்த அவருக்கு பாராட்டுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

  9. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  10. என் வீட்டில் கத்தரிக்காய் எப்போது ஸ்டாக் இருக்கும் பிடித்த காய்களில் அதுவும் ஒன்று

    பதிலளிநீக்கு

  11. பானுமதி அவர்களின் பதிவு மிகவும் நன்றாக உள்ளது. படங்களும் செய்முறை விளக்கங்களும் மிகவும் அருமை

    பதிலளிநீக்கு
  12. பைங்கன் பர்தா அழகான செய்முறை படங்களுடன் நன்றாக இருக்கிறது.
    இஞ்சி, பூண்டு சேர்த்து இருப்பதால் சப்பாத்தி, பூருக்கும் நன்றாக இருக்கும்.
    செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. இது எஜிப்தியன் ஸ்டைலாக தெரிகிறதே...

    பதிலளிநீக்கு
  14. பானுக்கா பைங்கன் பர்த்தா இதே செய்முறைதான்...நான் செய்வதும்...மசாலா கிடையாதே இதில்...ஸோ எங்கள் வீட்டில் வெ...பூ சாப்பிடாதவங்களுக்கு தனியா செய்யறதுண்டு. அதுல கசூரி மேத்தி சேர்த்துச் செய்தால் ஃப்ளேவர் கிடைக்குமேன்னு. அப்படிச் செய்தது ஃபேளேவர் பிடித்திட வெ பூ சேர்த்துச் செய்வதிலும் கசூரி மேத்தி சேர்த்துச் செய்யலாம் நல்லாருக்கும்....

    அப்புறம் கடைசில பச்சைக் கொத்தமல்லி தழை கொஞ்சம் சேர்த்தாலும் நல்லாருக்கும் அக்கா.

    இதுலயே கொஞ்சம் ரிச் ஆக்கனும்னா கொஞ்சம் கேஷ்யூ ஊற வைத்து வெ த பூ வதக்கும் போது அரைத்துச் சேர்க்கலாம்...

    தக்காளி சேர்க்காமலும் செய்தா அதுவும் நல்லாருக்கு பானுக்கா...

    எங்க வீட்டுல இது நல்லா போனியாகும். இங்கு வந்து செய்யலை கேஸ் இன்னும் வந்தபாடில்லை அதான்...பெரும்பாலும் இன்னிக்கு மாலை இங்கு கேஸ் புக்கிங்க் வேலை நடக்கும் என்று நினைக்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. படங்கள் குறிப்புகள் எல்லாம் சூப்பர்ப் பானுக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
  16. ரசித்தேன், ருசித்தேன். வித்யாசமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  17. பார்க்க நல்லா இருக்கு. ஆனா பாருங்க, எனக்கு இது பிடிக்காது. நான் கடையிலேயே வாங்கிச் சாப்பிடமாட்டேன். நான் மட்டர் பனீர், கடாய் வெஜ், மலாய் கொஃப்தா அப்புறம் பனீர் சேர்த்த சைட் டிஷ்தான் வாங்குவேன்.

    பதிலளிநீக்கு
  18. இதுவரை சமைத்ததில்லை. எனக்கென்னமோ பெரிய சைஸ் கத்திரிக்காய பார்த்தாலே காண்டாகும்.

    பதிலளிநீக்கு
  19. பானுக்கா நாம வீட்டுல செஞ்சா எண்ணெய் குறைவாக விட்டுச் செய்யலாம். நன்றாகவே வரும். ஆனால் ஹோட்டல்களில் இதன் மீது எண்ணைய் மிதக்கக் கொடுப்பாங்க.

    உங்க மருமகள் சூப்பர்!! பட்டாணியும் சேர்க்கலாம். அவங்களுக்கு வாழ்த்துகள் சொல்லிடுங்க அக்கா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆளே இல்லாத வீட்டில தனியே நிண்டு பேசுவது போல இருக்கு கீதாவைப் பார்க்க:)) ஹா ஹா ஹா.. ஹையோஓஓஓஓ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊஊ கீதா பக்கம் ஓடுறேன்ன்ன்.. அவங்க வீட்டுக்குள்ளயே பதுங்கிட்டால்தான் சேஃப்:)..

      நீக்கு
  20. //பைங்கன் பர்தா//
    பைத்தன் பா..............பு:) என்பதைப்போல இருந்துது:)).. ஹா ஹா ஹா.

    சூப்பர் டிஸ், கத்தரிக்காயில் எது பண்ணினாலும் சுவைதான், அதிலும் இப்படிச் சுட்டுச் செய்தால் அதன் சுவையே தனி... அழகிய குறிப்பு.

    பதிலளிநீக்கு
  21. ரசித்து, பாராட்டிய அத்தனை பேருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வெகு அழகான முறையில் சமையல் பதிவைக் கொடுத்து இருக்கிறீர்கள்.
    பார்க்க அமைப்பாக இருக்கிறது. இதே கத்திரிக்காயைத் தொகையலாக செய்வோம். பூண்டு சேப்பதில்லை. மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
  23. சாப்பிட்டது போல் இருந்தது///

    பதிலளிநீக்கு
  24. கும்பகோணத்தில் கொத்சு, செட்டிநாட்டில் கோஸ்மல்லி, இந்தப் பதிவில் பைங்கண் பர்த்தா (இது எந்த ஊரில்). சுவை ஒன்றுதான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!