செவ்வாய், 1 ஜனவரி, 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை : படர் கொடியின் நகர்வு பட்டு - விமலன்படர் கொடியின் நகர்வு பட்டு
விமலன்  வீட்டில் போய் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்றிருந்த எண்ணம் நேரத்தைக் கூட்டிக் காட்டிக் கொண்டே போகிறதாய்,
நேரமாக நேரமாக விருட்சம் கொண்டு வளர்ந்த பசி வயிற்றினுள் அழுத்தம் கொண்டு  தனது கரங்களை அழுத்தமாக ஊன்றி நாலாபக்கமும் விரித்து அட்டெண்சென், ஸ்டேண்டடீஸ், அபெவ்ர்டெர்ன்,,,,,என நினைத்த ரூபத்தில் உருவெடுத்துக் காட்டியது,
கூட வந்தவன் பட்ட அவசரம் இருக்கிறதே, உலக அவசரமாய் இருக்கிறது. அவன் இவனது மாப்பிள்ளை ,
மாப்பிள்ளை என்றால் அத்தை பையனோ, அக்கா பையனோ இல்லை. வேறு வழிகளில்வந்த சொந்த மாப்பிள்ளையும் இல்லை. சொந்தக்காரனும் இல்லை.
வேற்று ஜாதிகளுக்குள் உறவு முறையை முடியிட்டு பாதுகாத்து வைத்திருக்கும் கிராமங்களில் இவனது ஊரும் ஒன்று,
புழுதி படர்ந்த கிராமத்தின் செம்மண்ணும்,கரிசல் தரையும் அதன் சாயத்தில் இருந்த தோட்டமும் காடுகளும் வயல்களும் அது தரும் விளைச்சலும் ரத்தத்தை வியர்வையாயும் உழைப்பாயும் மாற்றி காடுகளையும் தோட்டங்களையும் வயல்களையும் பொன்னாய் விளையச் செய்கிற உழைப்பாளிகளும் அவர்களின் நிழலில் வளர்ந்த ஆடுகளும் மாடுகளுமாய் நின்ற மண்ணில் பாவி படர்ந்திருந்த செடிகளாயும் கொடிகளாயும் பூத்துமலர்ந்திருந்த பூக்களாயும் படர்ந்தோடிய வேர்களாயும் பிணை கொண்டிருந்த மண்ணின் மைந்தர்களாய் இவனும் இவனது மாப்பிளையுமாய் குடி கொண்டிருந்தார்கள்.
குடி கொள்ளலின் வேர்கள் உரங்கொண்டு முளைத்த நாட்கள் எது என இவனுக்கு சரியாகத் தெரியா விட்டாலும் கூட முளைத்த இடம் எது எனத் தெளிவாக ஞாபகம் இருப்பதாக...
ஒரு வெயில் நாளின் உக்கிரத்தில் உடல் நலமில்லாமல் போன அம்மாவை டவுன் ஆஸ்பத்திரி கொண்டு போக கைகொடுத்தவன் அவனே,/
அன்று தனக்கு காய்ச்சல் இருப்பதாக யாரிடமும் சொல்லவில்லை அம்மா.  வழக்கம் போல் மல்லிக்குளத்தார் கடையில் காய்ச்சலுக்கென வாங்கிப் போடும் மாத்திரையையும் கடுன்டீயையும் குடித்து விட்டு படுத்திருக்கிறாள்,
இரண்டு நாட்களாய் இப்படித்தான் இருந்திருக்கிறது. இரண்டு நாட்களும் சாப்பாடு தண்ணி சரியாய் எடுத்துக் கொள்ளாமல் மல்லிக்குளத்தார் கடை மாத்திரை யையும் கடுன்டீயையும் குடித்துவிட்டுப்படுத்திருக்கிறார்கள்,
யாரிடமும் தனக்கு காய்ச்சல் என சொல்லவும் இல்லை, அதோடுதான் மூணாவது வீட்டுக்காரர் தோட்டத்துக்கு களை எடுக்கப் போயிருக்கிறார்கள். நிறை தோட்டமாய் நின்ற மிளகாய்ச் செடியின் ஊடே குறை பட்டுக் காணப்பட்ட பசலைச் செடிகளையும் மற்ற மற்றதான களைகளையும் வெட்டி விட்டு வந்து வீட்டில் இவனுக்கும் தம்பிக்குமாய் சமைத்து சாப்பாடு போட்டுவிட்டு படுத்தவளின் காய்ச்சலை மல்லிக் குளத்தார் கடை மாத்திரையும் கடுன்டீயும் ஒன்றும் ஆற்றுப்படுத்தி விடவில்லை.
நடு ராத்திரியில் வாசல் திண்ணையில் போர்வைக்குள் முகம் போர்த்திப் படுத்திருந்தவனை அம்மாவின் முனகல் சப்தம் எழுப்ப வீட்டின் உள்ளே போய்பார்த்திருக்கிறான்,
உடலெல்லாம் வேர்த்துக்கொட்டி கட்டியிருந்த புடவையின் நுனியும் அணிந்திருந்த ஜாக்கெட்டும் நனைந்து போக உடல் நடுங்கிப் படுத்திருந்தாள்.
எப்பொழுதும் அம்மாவின் அருகிலேயே உறங்கும் தம்பி  இன்றைக்கு அத்தை வீட்டில் போய் தூங்கபோய் விட்டான்,
அத்தையின் மகனும் இவனும் ஒரே வகுப்பில் படிப்பதால் வீட்டுப் பாடங்கள் எழுதவும் படிப்பை பகிர்ந்து கொள்ளவும் தோதாய் இருக்கும் என அம்மாதான் அனுப்பி வைத்தாள் அங்கு போய் படிக்க.
அத்தையின் பையனை இங்கு வந்து படி எனச் சொன்னதற்கு  மாட்டேன் என்று விட்டான்,  ”சரி  இப்ப என்ன அதனால அவன் இங்க வராட்டி  நீ அங்க போயிரு..." என்ற சொல் உருவான நாளிலிருந்து இன்று வரை அங்குதான் போய் படித்துக் கொண்டிருக்கிறான்,
அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.
”நாலாப்புப் படிக்கிற  பயல இன்னும் பச்சப்புள்ளபோல ஓங் மடி மேலயும் தோளுக்குப் பக்கத்திலயும் தூங்க வச்சிக் கிட்டு இருந்தா எப்பிடி.../ அவுத்து விடு கண்ணுக்குட்டிய நாலுபக்கம் போயி வந்து தனியா தூங்கட்டும்” என அக்கம் பக்கத்தார்களும் அம்மா வயது பெண்களும் கேலி பேசிய நாளிலிருந்து தம்பியை அத்தை வீட்டுக்கு போக அம்புக் குறியிட்டாள்.
'நல்ல வேளை இப்பயாவது அனுப்புனயே...' என்ற சிரிப்பொலிக்கு மத்தியில் அவன் அத்தை வீட்டுக்கு போன நாளிலிருந்து இன்று வரை அங்கேயே படித்து விட்டு அங்கேயே படுத்தும் விடுவான்,
அத்தையும் 'இருக்கட்டும் ஏம் புள்ள போல வளரட்டும் என்ன இப்ப' என்பாள். அவளும் தம்பி தனது வீட்டில் சாப்பிடாமல் வருகிற இரவுகளில் சாப்பாடு போட்டு விடுவாள்.
அவள் மகன் மேல் இருக்கிற அக்கறையை விட இவனது தம்பி மீது கொஞ்சம்  கூடுதல் பிரியம் இருக்கும் அத்தைக்கு. காரணம் நிறை மாதமாய் இருக்கிற அத்தைக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் இவனுக்கு கொடுத்து விடலாம் என்கிற ஆசையே...
அத்தையையும் சும்மா சொல்லக்கூடாது, தம்பியை மட்டும் வைத்து கவனிக்கும் அத்தை அவ்வப்பொழுதாய் ஓய்ந்த பொழுதுகளில் அம்மாவையும் வந்து பார்த்துக் கொள்வாள். அவளுக்கும் ஆசைதான், அம்மா வீட்டிலிருக்கிற நேரங்களில் வந்து அம்மாவுக்கு ஒத்தாசையாய் இருந்து அம்மாவை கவனித்துக் கொள்ள வேண்டும் என. ஆனால் அவள் பாடு அவளுக்கு,
இந்த வயதிலும் உழைத்துச் சாப்பிடவும் முடிந்த வரை பிறர் கையை நம்பாமலும் வாழ வேண்டும் என அவள் முடியிட்டு வைத்திருந்த வைராக்கியம் அவளை யார் உதவியும் அற்று தனியாகவே இருக்கச் செய்துவிட்டது,
இவனும் தம்பியும் சின்னப் பிள்ளைகளாக இருக்கும் போதே பெயர் தெரியாத கொள்ளை நோயில் அப்பா இறந்து போன நாளிலிருந்தே ஏதோ வைராக்கியம் பூண்டவளாயும் பாறை துளைத்து வந்த காட்டுச் செடியாயும் இருந்து விட்டாள். உறவுகளும் நட்புகளும் தோழமைகளும் அவள் அப்படியே இருக்கட்டும் மனம் பிடித்தது போலவே என விட்டு விட்டார்கள்,
அவ்வப்பொழுதுமாயும் அதிக நேரங்களில் இல்லாமலுமாய் வந்து செல்லும் அத்தைக்கும் இது புடிபட சரி என்கிற அளவில் அம்மாவுக்குப் பிடித்தது போல் நடந்து கொண்டு போய் விடுவாள்.
அம்மாவுக்கு காய்ச்சல் கண்ட அன்று முதலில் ஓடி வந்தவள் அத்தைதான், அத்தைக்குதான் முதலாவதாய் தகவல் சொன்னான், அத்தை வந்தபிறகுதான் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்தார்கள்,
”அப்பொழுதான் அங்கு வந்த மாப்பிள்ளை என்ன இது ஏன் இப்பிடி போட்டு வச்சிருக்கீங்க, மொதல்ல மாதவன் ஆட்டோவ வரச்சொல்லுங்க, டவுன் ஆஸ்பத்திரிக்கி கொண்டு போவோம், என அவனே தனது செல் போனில் போன் பண்ணினான் உள்ளூர் ஆட்டோக்காரரான மாதவனுக்கு/
“ஏம்மா சுத்தி இத்தனை பொம்பளைங்க நிக்குறீங்களே, அவுங்களுக்கு பொடவை சட்டைய மாத்திவிட்டு தலைய சீவி விடக்கூடாதா” என அவனே சீப்பை எடுத்து தலை வாரி விட ஆரம்பித்ததும் சுற்றி நின்ற பெண்களில் சிலர் இவனையும் இவனது மாப்பிள்ளையையும் வெளியில் அனுப்பிவிட்டு புடவை மாற்றி தலை சீவி விட்டு ஆட்டோவுக்காக காத்திருந்த வேலையில் உள்ளூர் ஆட்டோ வந்து விட்டிருந்தது,
அன்று மாப்பிள்ளைதான் அம்மாவை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு போய் ஆட்டோவில் உட்கார வைத்தான். கூடவே ஆஸ்பத்திரிக்கும் வந்தான். அம்மாவுக்கு உடல் நிலை சரியாகும் வரை மூன்று நாட்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து வந்து போனான். ஒரு நாள் ராத்திரி ஆஸ்பத்திரியிலேயே தங்கி விட்டான். அம்மாதான் சொல்லியிருக்கிறார்கள் அவனை இவனுடன் துணைக்குத் தங்கும் படி சொல்லி விட்டிருக்கிறாள்.
அம்மாதான் சொன்னாள் அவனைப்பற்றி, ”அவன் நமக்கு சொந்தம் கெடையாது, அவுங்க அப்பாவும் ஒங்க அப்பாவும் ரொம்ப நல்ல பழக்கமுள்ளவுங்க, ஆதியிலயிருந்தே அவுங்க குடும்பத்துக்கு ஒண்ணுன்னா ஒங்க அப்பா ஓடுவாரு, ஒங்க அப்பா குடும்பத்துக்கு ஒண்ணுன்னா அவரு ஓடி வந்துருக்காரு. ஒங்க அப்பா என்னைய கைபுடிச்சதுக்கப்புறமும் தொடர்ந்துருக்கு அவுங்க பழக்கமும் உறவும்/”
”அவுங்க அப்பான்னா தங்கச்சி தங்கச்சின்னு ஏம் மேல உயிரா இருப்பாரு, அன்னைக்கி அவுங்க அப்பா ஓடி வந்த அதே யெடத்துல இன்னைக்கி மகன் வந்து நிக்கிறான். அன்னைக்கி மொளைச்ச மாமன் மச்சான் உறவு இன்னைக்கி வரைக்கும் தொடர்ந்துக்கிட்டு இருக்கு” என/
அன்றைக்கு அம்மாவை கையில் ஏந்தியதற்கு எந்தவித குறை பாடும் இல்லாமல் தன்னை பாசத்தாலும் அரவணைப்பாலும் அன்பாலும் ஏந்தி நிற்கிறான் மாப்பிள்ளை,
அவன்தான் அவசரம் காட்டினான்.
“என்னைய்யா மாப்புள இவ்வளவு நேரமா ஒரு மீட்டிங் முடிச்சி வர்றதுக்கு?” என்பவனின் மேல் வைத்திருக்கும் மதிப்புப் போலவே இவன் சார்ந்திருக்கிற இயக்கத்தின் மீதும் பெரும் மதிப்பு வைத்திருப்பவன்,
ஆனால் ”என்ன என்றால் என்ன” என்பதோடு மட்டுமே வைத்துக் கொள்வான்,
கேட்டால் ”மாப்புள இந்தா பாரு நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது... ஆமா போக ஓம்  பழக்க வழக்கம் வேற,  ஏம் பழக்கம் வேற, நீயி படிப்பு புத்தகம் கொண்ட கொள்கையின்னு இருக்குறஆளு, நான் அப்பிடியில்லை, இருந்த வரைக்கும் போன வரைக்கும்ன்னு இருக்குற ஆளு, ஒன்னைய ஒருகட்டுக்குள்ள புடிச்சி அடைச்சிறலாம்,இல்ல அது கூட வேணாம் ஒனக்கு நீயே ஒரு கட்டுப்பாட்ட விதிச்சிகிட்டு ஒரு கட்டுக்குள்ள இருக்குற ஆளுதான். நான் அப்பிடி யில்ல. நாக்கும் மனசும் ஏதாவது நமநமன்னு இருக்குது வையி, அப்பிடியே கெடக்குறது கெடக்கட்டும்ன்னு போயி தண்ணியடிக்கப் போயிருவேன். தண்ணி யடிச்சிட்டு அப்பிடியே கால் போன போக்குல சினிமா கினிமான்னு போயி ஒக்காந்துட்டு போதை தலைய விட்டு யெறங்கவும் வீட்டுக்குப்போயிருவேன், “நீ அப்பிடியெல்லாம் இல்ல, கையக் காலப்புடிச்சி கட்டி வச்சிக்கிட்டு ஊத்துனாலும் ”வேணாம் இது ஆயினு துப்பீர்ற ஆளு”/
”ஒன்னையும் என்னையும் ஒன்னு சேத்து பாக்க முடியுமா சொல்லு மாமன் மச்சான்ங்குறதுக்காக எல்லாம் ஒத்துப்போயிருமுன்னு அர்த்தமா, இங்க பாரு நான் வேணாம் வேணாங்க நீயி வம்படியா கூட்டிக்கிட்டு வந்து இங்க ஒக்கார வச்ச, எனக்கு என்னவோ மனசுல ஏறல, அப்பிடியே நைசா ஒனக்குத் தெரியாம ஒண்ணுக்கு இருக்கப்போறவன் மாதிரி வெளியில போயிட்டு இப்பத்தான் மீட்டிங் முடியப்போறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தேன்,
”அதுக்காக எனக்கு மீட்டிங் புடிக்கல அங்க பேசுற விஷயம் நல்லாயில்லைன்னு இல்லை, என்னால அங்க பேசுற விஷயங்கள கிரகிச்சிக்கிற முடியல, அங்க ஒக்காந்துருக்குற நேரம் என்னால முழு மனசோட அங்க இருக்க முடியாது. ஒடம்பு மட்டும்தான் அங்க இருக்கும் மனசு பூராம் வேற எங்கயோ இருக்கும். அப்பிடியான நேரங்கள்ல ஒண்ணு ஒன்னையயப்போட்டு பெராண்டுவேன், இல்ல எரிச்சல்ல ஒன்னைய மனசுக்குள்ள கெட்ட வார்த்தைகளால திட்டுவேன். இதுதான் நடக்கும். அது எதுக்கு ஏம் மாப்புளைய நானே வஞ்சிக்கிட்டுன்னு போயிருவேன் அப்பிடியே/
அன்னைக்கி நீயும் நானும் சினிமாவுக்குப் போனம். நல்லாயிருந்துச்சின்ன.  நானும் பாதி நேரம் படம் பாத்துக்கிட்டும், பாதி நேரம் ஒன்னையப் பாத்துக்கிட்டுமா இருந்தேன். தெறந்த வாய் மூடாம படம் பாத்துக்கிட்டு இருந்த நீ கொஞ் சநேரம்சிரிக்கிற, கொஞ்ச நேரம் அழுகுற, கொஞ்ச நேரம் சீரியஸ் ஆகுற, கொஞ்ச நேரம் அப்பிடியே ஒரைஞ்சி ஒக்காந்துர்ற, எனக்கு ஒன்னையப்பாத்த கொஞ்ச நேரம் ஒண்ணும் புரியல, ஏன்னா அன்னைக்கித்தான் ஓங்கூட மொத மொதலா படம் பாக்க வந்துருக்கேன்,ஒரு மனுசன் இப்பிடியுமா படம் பாப்பான்னு அன்னைக்கித்தான் யோசிச்சேன்,
“நானெல்லாம் படத்துக்குப்போனா கொஞ்சம் சிரிச்சேன் கொஞ்சம் ரசிச்சேன்னு எந்திரிச்சி வந்துருவேன், போதும் குடுத்த காசுக்கு நாம படம் பாத்ததுன்னு...  ஆனா நீ அப்பிடியான ஆளு இல்லைனு தெரிஞ்சிச்சி, ஓங் தோள் தொட்டும் தோள் ஒரசியுமா பாத்த நானு நீயி அசையாம படம் பாக்குறதப்பாத்துட்டு நாலாபக்கமுமா அலைபாய்ஞ்ச ஏங் மனச இழுத்துக்கூட்டிகிட்டு வந்து இறுக்கக் கட்டி ஒக்காரவச்சேன் ஒரு கூட்டுக்குள்ள/
”அப்புறம் என்ன ஒன்னையப் போலவே அழுகவும் சிரிக்கவும் ரசிக்கவும் படத்தோட ஒன்றிப்போகவும் கத்துக்கிட் டேன். அப்பிடி படம் பாக்குறதும் நல்லாத்தான் இருந்துச்சி. எதுக்காக காசு குடுத்து டிக்கெட் எடுத்து படத்துக்கு போனோமோ, அது பிரயோஜனப்படணுமில்லங்குற கணக்கு அன்னைக்கிதான் எனக்கு பிடிபட்டுச்சி,”
“அதுபோல ஓங்கூடஎப்பவாவதும் என்னைக்காவதும் வர்ற மீட்டிங்கையும் முழுசா ஒக்காந்து கேக்குற அளவுக்கு வந்துருவேன், அதுக்கு கொஞ்சம் நாளாகும், அந்த நாள் வரைக்கும் இந்த மாப்புள்ளைய இப்பிடியே இருக்க அனுமதிக்கணும் பெரிய மனசுப்பண்ணி” என்றவனை கண்ணீர் வராத குறையாக கட்டியணைத்தவன் ”நான் என்ன மாப்புளை புண்ணியம் பண்ணுனேன்...? ஒன்னையப் போல ஒருத்தன் இந்த ஜென்மத்துல மாப்புளையா கெடைக்கிறதுக்கு”/ என்றவனை ஏறிட்டவன் கண்களில் ஈரம் சுற்றியது,
நான் பாக்க இப்பிடியே ஒத்துமையா இருக்குற நீங்க ஏங் கண்ணுக்குப் பின்னாடியும் இப்பிடியே இருக்கணும்ப்பா என்ற இவனின் அம்மா இறந்த பின்னும் அவளது ஆசையை நிறைவேற்றுபவர்களாய் இன்னும் தோள் தொட்டும் மனம் படர்ந்தும்/

93 கருத்துகள்:

 1. ஹப்பி நியூ இயர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் அதிரா... நினைத்தேன்.. உங்கள் வருகை முதலாவதாக இருக்கும் என்று!

   நீக்கு
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம்..

   நானூஊஊஊஊஊஊஊ கஷ்டப்பட்டு வந்தேனாக்கும் நம்மூர்லருந்து!!!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இணையம்...

   கீதா

   நீக்கு
  3. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் ஸ்ரீராம் கேக்கூ எடுத்திட்டேன்ன் 1ஸ்ட்டா வந்தேனெல்லோ அதுக்கு:).. கீதாவுக்கு இல்லையாக்கும் ஹா ஹா ஹா :)) உசுப்பேத்துவதிலும் ஒரு அலாதி ஹாப்பி:)

   நீக்கு
  4. இது மாபெரும் சதி :) என்னை அங்கே விட்டுட்டு ஓடி வந்திருக்கு குண்டு பூனை :)

   நீக்கு
  5. கீதாவுக்கு இல்லையாக்கும் ஹா ஹா ஹா :)) உசுப்பேத்துவதிலும் ஒரு அலாதி ஹாப்பி:)//
   ஹா ஹா ஹா ஹா அதானே!!! அப்பூடி கேளுங்கோ! அதிரா இதல்லோ நட்பூஊஊஊஊஉ எனக்கு நீதி நியாயம் நேர்மை ...சரி சரி வேண்டாம்...உங்க காதைக் கொண்டாங்கோ...நான் நேற்று எங்க நேரப்படி ஸ்ரீராம் வீட்டுக் கேக் சாப்பிட்டாச்சாக்கும்!!! ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ!!!)

   கீதா

   நீக்கு
  6. ஆனாலும் நியூ இயர் கேக்கு எனக்குத்தானே கிடைச்சுதூஊஊஊஊஊஉ:).. ஹா ஹா ஹா இல்ல உங்களுக்கும் தாறேன்ன்ன் கீதா:))

   நீக்கு
  7. ஹா ஹா ஹா ஹா அதானே ஏஞ்சல் பாருங்க பெர்சனல் செக்கரட்டரி இல்லாம ஹெட் எல்லாம் போகுமோ...!!!

   இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஏஞ்சல்!

   சரி சரி எல்லாரும் க்ளாஸ்ல கும்மி அடிச்சது போது அங்க பாருங்க போர்ட...சப்ஜெக்டுக்கு போவோம்...அப்புறம் எபி டீச்சர்ஸ் நம்மள பெஞ்ச் மேல ஏற வைச்சுருவாங்க ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 2. இனிய புத்தாண்டு காலை வணக்கம் நட்பூக்கள், அக்காஸ், அண்ணாஸ், தம்பிஸ், தங்கைஸ் அனைவருக்கும்..
  இப்புத்தாண்டு எல்லோரையும் மகிழ்வாய் வைத்திருக்கப் பிரார்த்தனைகளுடன்
  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் கீதா ரெங்கன். வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 3. இது ஆரு என்னைத் தள்ளீக் கொண்டு முன்னே வந்து சத்தம் போட்டு....விஷ் செய்வது!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட! இன்று விமலன் சகோவின் கதையா....வருகிறேன்...

   கீதா

   நீக்கு
  2. // இது ஆரு என்னைத் தள்ளீக் கொண்டு முன்னே வந்து சத்தம் போட்டு....விஷ் செய்வது!!!
   //

   ஹா... ஹா... ஹா...

   நீக்கு
 4. ஆஆஆஆஆஆஆவ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:) ஸ்கொட்லாட்டூஊஊஊஊஊஉ முந்திட்டுது ஹா ஹா ஹா

  குட் மோனிங் ஸ்ரீராம்.

  குட்மோனிங் கீதா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூஸார் உங்களுக்கு புதுவருடம் நிமிடங்கள் நெருங்கிக் கொண்டு இருக்குதல்லோ!!

   அதான் எனர்ஜி லெவலை சேவ் செஞ்சுட்டுருக்கீங்களோ!!!

   நேற்று உறக்கமாமே!!! ரெஸ்டாமே!! காற்றில் செய்தி வந்துச்சூஊஊஊஊஊஊ!!!!!

   கீதா

   நீக்கு
  2. இல்ல கீதா உங்கள் 5.30 க்கு எங்களுக்கு பிறந்திட்டுது.. அதனாலதான் அதை பார்த்துவிட்டு இங்கு ரெடியானேன் முதல் வருகைக்கு... கிக்கிக்கீஈஈஈஈஈஈ ஜந்தோசம் பொயிங்குதே.. ஜந்தோசம் பொயிங்குதே... என்ன கீசாக்கா துரை அண்ணனை இன்னும் காணம்:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
  3. https://uploads.disquscdn.com/images/1cbecf293b87fa3de0f20a8a49861b048b74cd13cc5b0b4c2a8cc4ef78d75c63.gif

   நீக்கு
  4. ஹையோ எலி வளர்ந்து நியூஇயரில டொங்கியாச்சே:) ஹா ஹா ஹா..

   நீக்கு
  5. ஆமாம் பார்த்துட்டேன் பூஸார் உங்க நெரம் இப்ப விண்டர் டைம் அல்லோ...அது சட்டுனு போயிருச்சு ஆனா உங்களை நானும் எதிர்பார்த்தேன் அதான் ஓடி ஓடி ஓடி வந்தேன் ....ஆனா ஹூம் இந்த இணையம் ...சரி விடுங்கோ...உங்க வாலைப் பிடிச்சுக்கிட்டுத்தானே வந்தேன்....

   உஷ்ஷ் உஷ்ஷ்....வகுப்பு தொடங்கிருச்சு...

   கீதா

   கீதா

   நீக்கு
  6. ஆமாம் பார்த்துட்டேன் பூஸார் உங்க நெரம் இப்ப விண்டர் டைம் அல்லோ...அது சட்டுனு போயிருச்சு ஆனா உங்களை நானும் எதிர்பார்த்தேன் அதான் ஓடி ஓடி ஓடி வந்தேன் ....ஆனா ஹூம் இந்த இணையம் ...சரி விடுங்கோ...உங்க வாலைப் பிடிச்சுக்கிட்டுத்தானே வந்தேன்....

   உஷ்ஷ் உஷ்ஷ்....வகுப்பு தொடங்கிருச்சு...

   கீதா

   கீதா

   நீக்கு
  7. ///ஆனா உங்களை நானும் எதிர்பார்த்தேன் அதான் ஓடி ஓடி ஓடி வந்தேன் ....ஆனா ஹூம் இந்த இணையம் ...சரி விடுங்கோ...உங்க வாலைப் பிடிச்சுக்கிட்டுத்தானே வந்தேன்....

   ..//

   ஹா ஹா ஹா கொட்டும் மழைக்காலம்ம்ம்ம்ம் உப்பு விற்கப்போனேன்ன்..
   காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்ன்ன்ன்... அது ஒண்டுமிலை கீதா பிபிசில சிட்டுவேஷன் சோங் போகுது.. நீங்கள் வகுப்பிற்குப் போய் வாங்கோ ஹா ஹா ஹா:)..

   நீக்கு
 5. ஆஆஆஆஆஆஆஆஆஆஆவ் கீதா இடிச்சதில மீ கீழே விழுந்து கால் நோகுதூஊஊஊ இப்போ மசாஜ்ஜர் ஊஸ் பண்ணோணும் மீ:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னாது நான் இடிச்சேனா!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

   இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அதிரா!!!

   கீதா

   நீக்கு
  2. //இப்போ மசாஜ்ஜர் ஊஸ் பண்ணோணும் மீ:).//

   ஹா... ஹா... ஹா... ஹா... ஹா... ஹா...

   நீக்கு
  3. நான் சுத்தி சுத்தியாக்கும் வந்தேன்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னை சுத்த விட்டுப்புட்டீங்க பூஸார்...சரி சரி போனா போகுது ஒரு நாள்தானே!!!

   சரி சரி பூசார் வேகமா போய் மசாஜ்ஜர் ஊஸ் செஞ்சு உங்க எனர்ஜி லெவல்ல தேத்துங்கோ!!!!

   கீதா

   நீக்கு
  4. பூஸார் ஓ உங்க மசாஜர் புதுசுதான் அதுக்காக இப்பூஊஊஊஉடியா பின் கேப்ல கூடச் சொல்லிக்கணுமாக்கும்...ஹா ஹா அஹ ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  5. ஹா ஹா ஹா பின்ன கீதா:) சைக்கிள் ஹப்பில நம்மிடம் இருப்பதையும் சொல்லிடோணும்.. இல்லாட்டில் அடுத்தவர்களோ வந்து சொல்லப்போகினம்.. ஸ்ரீராம் இன்னும் வாங்குறாரில்லை கர்ர்ர்ர்:).. கீதா நீங்க ஒண்டு வாங்குங்கோவன்...

   நீக்கு
  6. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதா, நன்றி.

   நீக்கு
  7. ஸ்ரீராம் அதை வாங்குவதற்கு அரசாங்கத்தின் நிதி உதவியை எதிர்பார்க்கிறார்!!! அம்மாடி.. எம்புட்டு விலை!!

   நீக்கு
  8. ///ஸ்ரீராம் அதை வாங்குவதற்கு அரசாங்கத்தின் நிதி உதவியை எதிர்பார்க்கிறார்!!!///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 2019 இன் முதல் ஜோக் ஏ இதுதான் ஹா ஹா ஹா

   நீக்கு
  9. //ஸ்ரீராம் அதை வாங்குவதற்கு அரசாங்கத்தின் நிதி உதவியை எதிர்பார்க்கிறார்!!! அம்மாடி.. எம்புட்டு விலை!!//

   ஸ்ரீராம் ஹைஃபைவ்!!!! சிரித்துவிட்டேன்!!! அப்படியே நானும் டிட்டோ செய்யறேன்.....ஹா ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  10. ஸ்ரீராம் உங்களுக்கு அரசாங்கம் நிதி உதவி செய்யுறேன்னு சொல்லிச்சுனா மறு நிமிஷம் மீ க்கும் சொல்லனுமாக்கும் சொல்லிப்புட்டேன்...இல்லனா எனக்கும் சேர்த்து ஆர்டர் கொடுத்துருங்க.....ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  11. ஸ்ரீராம் அரசாங்க நிதி கிடைச்சுச்சுன்னானு நேக்கும்னு சொல்லிப்புட்டேனாம்... இந்த ப்ளாகர்/இணையம் ரெண்டும் சேர்ந்து என்னம்மா சதி பண்ணுது இந்தக் கமெண்டை நான் காலைல போட்டும் ப்ளாகர் பப்ளிஷ் பண்ணவே இல்லை....இப்ப போட்டப்பவும் சுத்தி சுத்தி யோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓசிச்சுப் போடுது!!!!!!!

   கீதா

   நீக்கு
 6. https://static.boredpanda.com/blog/wp-content/uploads/2018/03/cute-miniature-baby-donkeys-15-5aaa277ac4000__605.jpg

  அனைவருக்கும் ஹாப்பி நியூ இயர் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி ஏஞ்சல் . உங்களுக்கும்
   உங்கள் குடும்பத்தாருக்கும்
   மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும்
   இனிய ஆங்கிலப் புத்தாண்டு
   நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 7. விமலன் அவர்கள் இதுக்கு முன்பும் இங்கு கதை எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்.

  மாப்பிள்ளைக் கதை நன்று... அம்மா இருப்பதுபோல முடிச்சிருக்கலாமோ என எண்ணுகிறேன்ன் தேவையில்லாமல் அந்த அம்மாவை அனுப்பியாச்சுப்போல இருக்கெனக்கு:)... ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் விமலன் அவர்களுக்கு இந்த தளத்தில் இது முதல் கதை.. இனி தொடர்ந்து எழுதுவார் என்று எதிர் பார்க்கலாம்!

   நீக்கு
  2. ஓ அப்போ அவர் என்பக்கம் வந்திருக்கிறார் என நினைக்க்கிறேன்ன்.. எங்கயோ பார்த்திருக்கிறேனே:)..

   நீக்கு
  3. எனது பக்கமும் வந்திருக்கார் :) நான் அதான் அவர் வலை லிங்க் கேட்டேன்

   நம்ம யங் மூன் பதிவிலும் பார்த்திருக்கிறேன்

   நீக்கு
  4. ஆமாம் ஸ்ரீராம் நான் எதிர்பார்கக்வில்லை!!!

   தொடர்ந்து கே வா போவில் அவர் கதை இடம் பெறட்டும்!!

   கீதா

   நீக்கு
 8. அழகான கிராமிய மணம் வீசும் நட்புக்கு பெருமை சேர்க்கும் கதை ..
  துவக்கத்தில் இருந்து படிச்சிட்டே //அவசரப்பட்டான் //வார்த்தை பார்த்து நம்ம மனமும் அவசரமா யோசிச்சிடுச்சி ..ஆனால் அழகான கதை மனதுக்கு இதமாய் இருந்தது.பாராட்டுக்கள் விமலன் சகோ .

  பதிலளிநீக்கு
 9. துருவங்கள் திசைகள் வேறானாலும் அன்பெனும் கோட்டில் இணைந்த நட்புக்கள்

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  புத்தாண்டு வாழ்த்துகள் 🎊

  பதிலளிநீக்கு
 11. விமலன் அவர்களின் வலைப்பூ லிங்க் எங்கே ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுதான் அவர் பதிவுப்பக்கத்தின் லிங்க். பதிவிலும் சேர்க்கிறேன்.

   https://vimalann.blogspot.com/

   நீக்கு
  2. சேர்த்துவிட்டேன். நன்றி ஏஞ்சல், நினைவு படுத்தியதற்கு.

   நீக்கு
  3. ஏஞ்சல் விமலன் சகோவை நாங்கள் தொடர்ந்து வாசித்து வந்ததுண்டு இப்பத்தான் சமீப காலமாய் பல தளங்கள் போக முடியாம....போகுது...

   அவருடைய எழுத்துகள் எளிமையான மனிதர்கள், மண் என்று மிக நுண்ணிய உணர்வுகளைச் சொல்லும் எழுத்து. ஒரு சிறு நிகழ்வைக் கூட..அந்த நிகழ்வில் என்ன இருக்கு என்று தோன்றலாம் ஆனால் அவர் மைன்யூட் டீடெய்ல்ஸ் கொடுத்து எழுதுபவர்...அதை வாசிக்கும் போது ஓ இப்படியும் இருக்குது இல்லையா என்று தோன்றும்...

   இனி அவர் வலைப்பூவை மீண்டும் தொடர வேண்டும்....

   கீதா

   நீக்கு
  4. ஆமாம் கீதா .நான் பிசி ஆனா என் பக்கத்தையே மூடி வச்சிடுவேன் அதில் நிறைய மிஸ்ஸாகுது .இனி தவறாமல் தொடரனும் அனைவரையும்

   நீக்கு
 12. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. விமலன் சகோ இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  நல்ல கதை. இரு தலைமுறையாகத் தொடரும் நட்பு...அது இனியும் தொடரட்டும்...புதுவருடத்திற்கு நல்ல விஷயம் சொல்லும் கதை...வாழ்த்துகள், பாராட்டுகள்!

  ஸ்ரீராம் இக்கதையை இன்று வெளியிட்ட்துக்கும் நன்றி பாராட்டும்...

  வேலை முடித்துவிட்டு வரேன் மீண்டும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 14. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஸ்ரீராம்ஜி, எபி ஆசிரியர்கள் மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும்.

  கதாசிரியர் நண்பர் விமலன் அவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  கதை வாசித்துவிட்டு வருகிறேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும், மற்றும் நம் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  கதை படைத்த சகோதரருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  சிறப்பான எழுத்தாளரால் உண்டான அருமையான கதை. கண்டிப்பாக சிறப்பான தாகத்தான் இருக்கும்.
  நிதானமாக படித்து விட்டு பிறகு வருகிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 16. வலையுலக நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 17. வேற்று ஜாதிகளுக்குள் உறவு முறையை முடியிட்டு பாதுகாத்து வைத்திருக்கும் கிராமங்களில் இவனது ஊரும் ஒன்று,//

  இப்படியான கிராமமும் இருக்கிறது என்பதே மகிழ்ச்சியான ஒன்று...

  உலக அவசரமாய் இருக்கிறது.//

  அதேதான்..அருமையான வரிகள்...அந்த அவசரத்தில் பல சமயங்களில் அருகிலிருக்கும் நபரின் கஷ்டம் கூடப் பார்க்காமல் நகர்ந்துதான் விடுகிறது...

  கீதா

  பதிலளிநீக்கு
 18. பிணை கொண்டிருந்த மண்ணின் மைந்தர்களாய் இவனும் இவனது மாப்பிளையுமாய் குடி கொண்டிருந்தார்கள்.//

  ஹப்பா இதற்காச் சொல்லப்பட்டிருக்கும் கிராமத்தின் வடிவம் வேரூன்றிச் செல்கிறது..இந்த வேர்கள் இப்படியே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...

  //குடி கொள்ளலின் வேர்கள் உரங்கொண்டு முளைத்த நாட்கள்// இவ்விருவரின் வாழ்வில் இந்த நாட்கள் இன்னும் ஆழமாய் வேரூன்றிடட்டும் என்றே மனதும் விழைகிறது..

  கீதா

  பதிலளிநீக்கு
 19. மல்லிக்குளத்தார் கடை மாத்திரை யையும் கடுன்டீயையும் குடித்துவிட்டுப்படுத்திருக்கிறார்கள்,//

  அப்படியே கிராமம் கண் முன்!

  எந்தவித சொந்தபந்தம் என்று இல்லாமல் தந்தை காலத்தில் உருவான நட்புறவு அடுத்தும் தொடர்கிறது! ஆழமான நட்பு! உறவுகள் கூட இப்படி இருக்குமா? மிக மிக அருமை சகோ.

  சொல்லிச் சென்ற விதம்....மூன்றாம் வீட்டுத் தோட்டத்தில் களை பிடுங்க...அங்கு குறைப்பட்டுக் கிடந்த பசலை என்றும், அத்தையின் பிணைப்பையும்...அந்த அன்பையும்...என்று .கதையின் ஊடே கிராமத்து மண்ணின் வாசத்தையும், அம் மனித உணர்வுகள், உறவுகள் என்றும்.......என்னதான் கிராமத்திலிருந்து வந்திருந்தாலும்...நகரத்து வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுப் போனதாலோ என்னவோ ஏதோ வேறொரு உலகை ஒரு நேசமான உலகைக் கண் முன் கொண்டு வந்தது போன்ற உணர்வு...

  அருமை விமலன் சகோ..

  கீதா

  பதிலளிநீக்கு
 20. கில்லர்ஜி உங்களிடம் இப்படியான இதே போன்ற ஒன்று உண்டே... அதை அப்படியே கதையாக்கிவிடலாமே எபி க்கு!!!!! என்ன சொல்றீங்க?!!!

  கீதா

  கீதா

  பதிலளிநீக்கு
 21. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏகாந்தன் அண்ணா இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

   கீதா

   நீக்கு
  2. @ கீதா: புத்தாண்டுப்பூவிலிருந்து புதுமணம் கமழட்டும் !

   நீக்கு
 22. அனைவருக்கும் அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 23. மண் வாசம் தவழ்கின்றது - திரு விமலன் அவர்களது கதையில்...

  இப்படியான கதைகளை வாசிக்கும்போது மனம் - நாற்பதாண்டுகளுக்குப் பின்னே
  இயல்பாகவே சென்று விடுகின்றது...

  பதிலளிநீக்கு
 24. நண்பர் விமலன் எழுதும் ஸ்டைல் தனி.

  அவர் வலைத்தளம் வாசித்திருக்கிறேன்.

  இங்கும் அவர் கதை அருமை. இருவரின் தொடரும் நட்பை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார். கிராமத்து மனிதர்களின் வடிவில் அவர்களது மன எண்ணங்களில், உணர்வுகளில் சொல்லியிருப்பது அருமை.

  வாழ்த்துகள், பாராட்டுகள் விமலன் அவர்களுக்கு

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 25. பெரும்பாலும் விமலன் சகோ கதைகளில் பெயர்களே இருக்காது. சிறு சிறு நிகழ்வுகள், உணர்வுகள், அன்றாடம் நடப்பவை இவைகளைன் அடிப்படையில் இருப்பதால் கதை மாந்தர்களும் குறைவாகத்தான் இருப்பார்கள். பெயர்கள் இல்லை என்றாலும் கதை மாந்தர்களின் மூலமே புரிந்து கொண்டுவிட முடியும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 27. சகோ விமலன் கதை மிக அருமை.
  நட்பின் உன்னதத்தை சொல்லும் கதை.

  //அன்றைக்கு அம்மாவை கையில் ஏந்தியதற்கு எந்தவித குறை பாடும் இல்லாமல் தன்னை பாசத்தாலும் அரவணைப்பாலும் அன்பாலும் ஏந்தி நிற்கிறான் மாப்பிள்ளை,//

  மாப்பிள்ளை உயர்ந்து நிற்கிறார்.

  வாழ்த்துக்கள் விமலன்.

  இனி அடிக்கடி கதை எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 28. /இவனின் அம்மா இறந்த பின்னும் அவளது ஆசையை நிறைவேற்றுபவர்களாய் இன்னும் தோள் தொட்டும் மனம் படர்ந்தும்///

  அம்மா அவர்களை ஆசீர்வாதம் செய்து கொண்டு இருப்பார்.
  என்றும் தோள் தொட்டும் மனம் படர்ந்தும் இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது கதைக்கு இவ்வளவு எதிர்வினைகளும் பாரட்டுக்களும் வரும் என எதிர்பார்க்கவில்லைதான்,
   எதிர்பாரா திசையிலிருந்தும் எதிர்பாராதவர்களிடமிருந்தும்
   வருகிற பாராட்டும் விமர்சனமும் கண்களில் நீரை வரவழைத்து விடுகிறதுதான்,
   மற்றபடி எனது எழுத்து இந்த சமூகம் தந்த கொடை என்று சொல்லலாம்,
   சமூகத்தின் நிகழ்வுகளே எனது கதையின் பதிவுகளாக/
   பாரட்டிய அனைவருக்கும்,கதையை வெளியிட்ட ஸ்ரீராம் சார் அவர்களுக்கும்
   நெக்குருகுகிற நன்றி/

   நீக்கு
 29. இந்த உறவுகள் இறுதிவரை நிலைக்கட்டும்

  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 30. எனது கதைக்கு இவ்வளவு பாராட்டுக்களும் எதிர்வினைகளும்
  வரும் என எதிர்பார்க்கவில்லைதான்,
  எதிர்பார்பாராத திசையிலிருந்தும் எதிர்பாரதவர்களிடமிருந்தும்
  வந்த பாராட்டுக்களும் விமர்சனமும் நெகிழ்ந்து போகச்செய்கிறதாயும்
  கண்களில் நீரை வரவழைத்து விடுகிறதாயும்/
  எனது கதைகள் யாவும் இச்சமூகம் தந்த கொடை என சொல்லலாம்,
  கதையை வெளியிட்ட ஸ்ரீராம் சார் அவர்களுக்கும் கதை
  படித்து கருத்து வெளியிட்ட அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றி/

  பதிலளிநீக்கு
 31. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
 32. கதைக்கு வந்திருந்த பின்னூட்டங்களில் பெரும்பாலனவை கதை சம்பந்தப்பட்டதுஅல்ல சிறுகதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் எண்ணம்ம்கொண்டவர்களும்சும்மா ஒப்பேற்ற வருகை தந்திருக்கிறார்கள்விமலன் பேராளியின் கதையை முதன் முதலில் வாசிக்கிறேன் எபியில் வரும்கதி போல் இல்லை அவரெழுத்து அவர்சொல்வதுப்[ஓல் சமூகம்தந்த கொடை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி எம் பி ஸார் நீங்க முதல்ல வந்த கருத்துகளை மட்டும் தான் பார்த்திருக்கிங்கனு நினைக்கிறேன். தயவாய் கீழே வந்திருக்கும் கருத்துகளையும் பாருங்கள். முதலில் வந்தவை வெகு காலையில் அது ஒரு ஜஸ்ட் புத்தாண்டு கொண்டாட்டத்தின் நட்புகள் நாங்கள் பேசிக் கொண்டது அவ்வளவே.

   அதன் பின் கதைக்கு வந்திருக்கும் கருத்துகளைப் பாருங்கள் சார். நல்லதைப் பார்ப்போமே சார்...

   சார் நீங்கள் கதை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே சார்.

   கீதா

   நீக்கு
  2. மற்றொன்று இன்று பலரும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இருக்கலாம்...சிலர் பிஸியாக இருக்கிறார்கள்...அதனால் வழக்கமான அளவு கருத்துகள் வரவில்லையாக இருக்கலாம் சார்.

   உங்கள் கருத்தும் மிஸ்ஸிங்க்...

   கீதா

   நீக்கு
  3. ஜி.எம்.பி. சார்.... பின்னூட்டங்கள் வெறும் 'கதை விமர்சனம்' என்பது மட்டுமல்ல. அதையும் மீறிய ஒரு கொண்டாட்டம் என்றே எடுத்துக்கொள்ளணும்.

   கதையை எல்லோரும் படிப்பார்கள், சில சமயங்களில் நேரம் கிடைக்கும்போது. ஆனாலும் முதலில் வருகையைப் பதிவு செய்வார்கள்.

   கதை, தங்கள் எண்ணத்தில் தாக்கம் ஏற்படுத்தினால், பின்னூட்டம் தானாகவே வந்துவிடும்... இந்தக் கதை உள்வாங்கிக்கொண்டு பின்னூட்டம் இடவேண்டிய கதை.

   நீக்கு
  4. நெல்லை சூப்பர்!!!!!! உங்கள் கருத்தை அப்படியே டிட்டோ செய்யறேன்..

   கீதா

   நீக்கு
  5. ///சார் நீங்கள் கதை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே சார்.

   கீதா///
   ஹா ஹா ஹா கீதா விடாதீங்கோ:) தான் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே மற்றவர்களைக் குறை சொல்றார் ஜி எம் பி ஐயா.....:) ஹையோ மீ ரன்னிங்:)...

   நீக்கு
  6. கதை படிப்பவர்களெல்லாம் பின்னூட்டப் புலிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லையே. பின்னூட்டம் போடலாம். போடாதும் ஓடலாம். அவரவர் preference, choice! (இது திரு. விமலனுக்கானது அல்ல!).

   முதலில் பின்னூட்ட சுவாரஸ்யங்கள், சர்ச்சைகள்,குஸ்திகள் இதையெல்லாம் ரசித்துவிட்டுத்தான் பதிவு/கதைக்குள் நான் நுழைவது வழக்கம். புத்தாண்டு நாள் ரவுண்டு போய்விட்டு இப்போதுதான் திரும்பியிருக்கிறேன். மெல்லப் படிக்கிறேன்..

   நீக்கு
 33. விமலன் அவர்களது கதை, கிராமத்தைத் தழுவுகிறது. மென்மையான, ஆக்ரோஷமான கிராமத்துக்கே உரிய உணர்வுகள். வித்தியாசமான நடை. இந்தமாதிரியான நட்பை நான் நிறையச் சந்தித்திருக்கிறேன்... சொன்னால் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். இத்தகைய நட்புணர்வு, கல்லூரி செல்லும் காலம் வந்தபிறகு மறைந்துவிடும், அல்லது குறைந்துவிடும். அதற்கப்புறம் அற்றே போய்விடும். பள்ளியில் படித்துமுடிக்கும்வரை இல்லாத 'சாதி' உணர்வு, அதற்கப்புறம் மனதில் துளிர்விடுவதனால் இருக்குமோ?

  தொடர்ந்து எழுதுங்கள் விமலன். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையான நட்பாக இருந்தால் அதில் சாதி குறுக்கிடாவே செய்யாது நெல்லை...

   கீதா

   நீக்கு
 34. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  இருவேறு ரசனனை கொண்ட இருவரின் கனமான நட்பை அழகாக சொன்ன கதை. முதல் முறையாக எ.பிக்கு வருகை அதுவும் நல்ல கதையோடு.ஸவிமலன் அவர்களை பூங்கொத்தோடு வரவேற்கிறோம்💐

  பதிலளிநீக்கு
 35. அனைவருக்கும் இனிய புத்தாண்டு எல்லாவளங்களையும்,ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும்.

  திரு விமலன் எழுத்தை இன்றுதான் படிக்கிறேன்.ஆழ உழப்பட்ட வயல் போல ,அதிலே முளைத்த பசும் நாற்றுகள் போல இனிமையாக பதிவாகியிருக்கும் நட்பு.
  கிராமங்களில் கிடைக்கும் உறவுகள். அம்மாவுக்கு மாற்றுத் துணி உடுத்தி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லும் அருமை, மாப்பிள்ளை உறவாக ஒரு தோழன்.,மிக அருமையான எழுத்து விமலன் பேராளி..
  இனித் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.
  கதையை வெளியிட்ட ஸ்ரீராமுக்கும் மனம் நிறை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 36. இனிய கதைப் படித்தேன் புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 37. தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!