வெள்ளி, 29 மார்ச், 2019

வெள்ளி வீடியோ : எந்த வேதனையும் மாறும் மேகத்தை போல : தொடர்கதை 2

வாணி ஜெயராம் குரலில்,

எம்  எஸ் வி இசையில்,

கண்ணதாசன் பாடல்.

அபூர்வராகங்கள்.   1975 இல் வெளிவந்த திரைப்படம்.  கமல் படம், ஸ்ரீவித்யா படம் என்றெல்லாம் சொல்லமுடியாது!  பாலச்சந்தர் படம்.

இந்தப்படத்தின் "என்னுடைய அப்பா...   யாருக்கு மாமனாரோ..." புதிர் ரொம்பப் பிரபலம் அப்போது.

நாகேஷின் பாத்திரத்தை ரொம்ப ரசித்தேன் அப்போது.  அதிராவின் அங்கிள் கண்ணதாசன் ஒரு காட்சியில் வருவார்!

படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் நிறைய உண்டு.  அவற்றை நீங்கள் விரும்பினால் இங்கு படிக்கலாம்.

வரிகளை மிக ரசிக்கலாம்.  செம பாடல்.   அழகிய ஸ்ரீவித்யா.

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்டு எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
நமக்காக நம் கையால் செய்வது நன்று

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க

நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
வேதனையும் மாறும் மேகத்தை போல
வேதனையும் மாறும் மேகத்தை போல
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்



=========================================================================================



நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே

- - - - - - - - - - - - - - - - -




ஸ்ருதி  :


சேலத்தில் கச்சேரி. அப்புறம் கோயில் கச்சேரி. இரண்டிற்கும் ப்ராக்டிஸ் செய்ய வேண்டும். ஆனால், என்னவோ இன்னது என்று சொல்ல முடியாத ஒரு டல்னெஸ். சமீப காலமாகத்தான். என்னென்னவோ எண்ணங்கள் வந்து அலைமோதியது. திருமணத்திற்கு முன் கொஞ்சம் யோசித்திருக்கலாமோ?

இரு வருடங்களுக்கு முன் டிசம்பர் கச்சேரி சீஸன். எல்லோரும் என் கச்சேரியை சிலாகித்து எழுதியிருக்க, முதல்தடவை என் கச்சேரியை அத்தனை விமர்சனம் செய்திருந்தார் ஒருவர் துலாஎன்ற பெயரில். நான் அன்று பாடிய சுத்த தன்யாசியில் ஆபேரி எட்டிப் பார்த்ததாம். ரொம்பவே விமர்சித்து ஏழு மணி ஸ்லாட்டுக்கு நிறைய உழைக்கணும் என்று பஞ்ச் வேறு போட்டிருந்தார்!

வயது முதிர்ந்தவர். இசையில் மிகுந்த அறிவும், நுணுக்கங்களும் தெரிந்த அனுபவசாலி போலும். அதான் கீறு கீறுன்னு நக்கீரர் போல என் பாட்டை மட்டுமல்ல பல சீனியர் வித்வான்களையும்தான் கிழித்திருந்தார். சீனியர்களையே போட்டுத் தாக்கிய போது வளர்ந்து வரும் என்னை விமர்சித்ததில் வியப்பில்லைதான் என்று நினைத்து அவர் யாரென்று தெரிந்து கொண்டு சந்திக்க நினைத்தேன். நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளத்தான். யாரென்று என்னால் அறிய முடியவில்லை. நான் மிகவும் பிஸியாகவும் இருந்ததால் மறந்தும் போனேன்..

மேட்ரிமோனியலில் என் விவரங்களைக் கொடுத்திருந்தற்கு வந்த ப்ரொஃபைல்ஸ் என்று பொருந்திய சிலவற்றை அப்பா என்னிடம் காட்ட, கச்சேரி, ப்ராக்டீஸ் என்று இருக்கும் என்னைப் புரிந்து கொள்பவன் வந்தால்தானே நல்லது? ஈகோ மிகுந்த ஆணாக இருந்தால் எப்படி செட் ஆகும்? என்ற தயக்கத்துடன் பார்த்த போது ஃபோட்டோ இல்லாத ஒரு ப்ரொஃபைல் ஈர்த்தது. ஷ்ரவண். நல்ல வேலை, நல்ல சம்பளம் அதை விட இசையில் மிகுந்த ஆர்வம். பாடவும் செய்வான், கீ போர்ட் வாசிப்பான் என்ற குறிப்புகள் ஸ்வாரஸ்யமாகப்படவே அந்த ப்ரொஃபைலுக்கு ஓகே என்றேன். பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். அவர்களுக்குச் சம்மதம். நாங்கள் இருவரும்தான் சந்திக்க வேண்டும்.

டிசம்பர் சீசன் தொடர்க் கச்சேரிகள் முடிந்து ஆங்காங்கே சில கச்சேரிகள் என்று வந்த சமயத்தில் ஒரு சபாவில் கச்சேரி முடித்ததும் என் அருகில்,

கச்சேரி நன்னா இருந்ததுமா.என்ற குரல்.

தாங்க்யூ

ஸ்ருதி இது ஷ்ரவண், இவா ஷ்ரவணோட அம்மா அப்பா. உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கா.என்று அப்பா அறிமுகம் செய்து வைத்தார்.

எனக்கு ஆச்சரியம்! அந்த ப்ரொஃபைல்ஷ்ரவண்…!

நாங்க பேசிண்டாச்சு. நீங்க ரெண்டு பேரும்தான் பேசி ஒங்க முடிவை சொல்ல ணும். இங்க இல்லாம வெளில எங்கியாவது கூட போய் நீங்க பேசிக்கலாம்…..நீ ஃப்ரீதானேம்மாஎன்று ஷ்ரவனின் பெற்றோர் கேட்க,

இப்படியே வேண்டாம். நீங்க காஷுவல் ட்ரெஸ் சேஞ்ஜ் பண்ணிட்டு வந்தா கம்ஃபர்டபிளா இருக்குமேனு பார்க்கறேன்என்று அன்று ஷ்ரவண் சொன்னது ஒரு வேளை நான் ஒரு பாடகியாக அவனோடு வெளியில் போவது அவனுக்கு அப்பவே பிடிக்கலையோ? அதை அவன் அப்பவே வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாமே.

வெளியில் சந்தித்தோம். ஒரு காஃபி ஷாப்பில்.

ஹாய்!என்ற சில பரிமாற்றங்களுக்குப் பிறகு அவன்தான் சட்டென்று தொடங்கினான்.

என்ன காஃபி வேணும்? ஹாட் ஆர் கோல்ட்?”

ம் ஹாட் காஃபி சர்க்கரை கம்மியா….” அவன் தனக்குக் கூல் காஃபி ஆர்டர் செய்தான்.

பெயருக்கேத்தாப்போல ஸ்ருதி சுத்தமா பாடறீங்க

தாங்க்ஸ்

நீங்க ராகம் தானம் பல்லவி பாடறதுல எக்ஸ்பெர்ட்டா இருக்கீங்க. அதுவும் பெரும்பாலும் ஆர்டிபில ராகமாலிகையாகவேதான் பாடறீங்க. ப்ரில்லியன்ட். இன்னிக்குக் கூட ஆர்டிபி கரகரப்பிரியா அண்ட் ரசிகப்பிரியால பாடி எல்லாரையும் கட்டிப் போட்டு ரசிகர்களாக்கிட்டீங்க.

ஓ! தாங்கஸ் அகேய்ன்என்ற எனக்கு……அப்படினா இவன் எனது முந்தைய கச்சேரிகளையும் கேட்டிருக்கிறான் என்று தோன்ற அப்ப நீங்க என் கச்சேரிகளைத் தொடர்ந்து கேக்கறீங்களா?”

அப்படியும் சொல்லலாம்என்றவன் தொடர்ந்து, “செங்கல்பட்டு ரங்கநாதன்கிட்ட கத்துக்கிட்டீங்களோ? லயத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார். உங்க பாட்டுல நல்ல லயம் இருக்கு. லயம் ஒரு ராகத்தோட அழகைக் கொடுக்கும் எல்லா ராகத்தையும் எல்லா லயத்துலயும் பாட முடியாதே. அவர் நல்ல குருவா இருந்தார் பலருக்கும்…!”

தாங்க்யூ ஃபார் யுவர் குட் வேர்ட்ஸ். ஆமா பல்லவி பாடறதுக்கு அவர்தான் குரு. ஐ மிஸ் ஹிம் எ லாட். அது சரி அவரை உங்களுக்குப் பெர்சனலா தெரியுமா!

ம்ம்ம் யா. நான் அவர்கிட்ட கொஞ்ச காலம் கத்துக்கிட்டேன்..என்று அவன் அடுத்து சொல்வதற்குள்.

என்னது அவர் உங்களுக்கும் குருவா! ஓ! பல்லவிக்கு மட்டுமா இல்ல….ரெகுலர் குருவா?”

அட்வான்ஸ்டா கத்துக்க, பல்லவி எல்லாத்துக்கும். அதிருக்கட்டும், உங்களைப் பத்தி நல்ல விமர்சனங்கள் வருதே! அடுத்த வருஷம் மெயின் ஸ்லாட் கிடைச்சிரும் போல. வாழ்த்துகள்

ம்..தெரியலை. பார்க்கலாம். ஆனா, துலா ன்னு ஒருத்தர் க்ரிட்டிசைஸ் பண்ணி விமர்சிச்சிருந்தார். எங்களுக்குள்ள கொஞ்சம் விவாதங்கள் வந்துது. ஆனா அவர் ரொம்ப வித்வத் உள்ளவர்னு தெரியறது. ஸோ அவரை எப்படியாவது மீட் பண்ணனும்…..”

ஓ யெஸ் மீட் பண்ணலாமே!ஷ்ரவணால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஏன் சிரிக்கறீங்க? இந்த துலா கொஞ்சம் அப்போதைய சுப்புடுனு தோணித்தோ?”

அப்ப நான் இப்போதைய சுப்புடுன்றீங்க நீங்க?”

ஒரு நிமிடம் வியப்பில் வாயடைத்துப் போனேன். ஓ மை காட்! இஸ் இட்? அப்ப நீங்கதான் துலா? உண்மையாவா?”

யெஸ்!

இந்தச் சிறிய வயதில் பெரிய அனுபவ இசையறிஞர் போல இத்தனை நுணுக்கமான இசை அறிவா என்று. பார்க்க மட்டுமல்ல இசை அறிவிலும் சித் ஸ்ரீராம் போல இருக்கானோ? அவனிடம் ஏதோ ஒன்று என்னைக் கவர்ந்தது. என் எண்ணத்தை நினைத்து எனக்கே வியப்பாக இருந்தது அப்போது....

நான் இன்னிக்கு உங்க கச்சேரிக்குக் கொஞ்சம் லேட். அம்மா அப்பா முதல்லேயே வந்துட்டாங்க. நீங்க எப்ப வருவாரோ எந்தன் கலி தீர்க்கஆரம்பிக்கற சமயத்துல நான் ஹாலுக்குள்ள என்ட்ரி. என்ன? சினிமால வர ஹீரோ என்ட்ரி சீன் மாதிரி இருக்கோ?” என்று சிரித்தான்.

நான் இன்னும் வாரணமாயிரம் பாடவே தொடங்கலையே

ஓ! ஸாரி. இட்ஸ் ஓகே!என்று சொன்னாலும் அவன் தன்னைப் பற்றிச் சொன்னான்.

நீங்கதான் எல்லாரையும் நக்கீரர் போலக் கீறுறீங்களே என் பாட்டையும் தான்…” என்று சொல்லிச் சிரித்தேன்.

ஹா ஹா…… இன்னிக்கு நீங்க சாரங்காவையும், ஹமீர்கல்யாணியையும் நல்லா ஹேண்டில் பண்ணீங்க. ஒண்ணுக்குள்ள ஒண்ணு நுழையவிடாம….”

ஓ! தாங்க்யூ….உங்க விமர்சனத்துலருந்து தப்பிச்சேன்…”

ஹா ஹா….ஸாரி! நீங்க உங்க திறமைக்கு இன்னும் மேல வரலாம்…. வரணும்னு தோணித்து. ஸோ….ம்ம்ம் இன்னொன்னும் சொல்லிடறேன். சப்போஸ் நீங்க ஓகே சொல்லிட்டீங்கன்னா நான் உங்க கச்சேரி பத்தி பத்திரிகைல விமர்சிக்க மாட்டேன். ஆனா வீட்டுல விமர்சனம் தொடரும்ஓகேதானே?.”

ஷ்யூர்! நல்லதுதானே! அது என்னை இம்ப்ரூவ் பண்ணிக்க உதவுமே

நானும் எனது இசைக்கனவுகள்,  இசையில் சில ஆராய்ச்சிகள் செய்ய விரும்புவது எல்லாமும் சொன்னேன். இந்திய இசை, உலக இசை என்று பேசினோம். நேரம் சென்றதே தெரியவில்லை. 

அப்போதுதான் எனக்கு உறைத்தது. நான் என்னை அறியாமலேயே ஈர்க்கப்பட்டு அவன் வீட்டில் விமர்சனம் தொடரும் ஓகேயாஎன்றதற்கு ஷ்யூர்என்று சொல்லியது நான் திருமணத்திற்கு ஓகே சொன்னது போலத்தானே!

ஒரு சுபயோக சுப தினத்தில் நாதஸ்வரத்தின் ஆனந்தபைரவியில், தவிலின் தாள, லயத்துடன் கல்யாணியும், மோகனமும் இணைந்து மோகனகல்யாணியாய் ஆனது எங்கள் வாழ்க்கை. ரிசப்ஷனுக்கு நிறைய விஐபிக்கள், பெரிய பெரிய பாடகர்கள், டிவிக்காரர்கள் என்று வந்து பிரபலமான டிவியில் கூட எங்கள் கல்யாணம் பேசப்பட்டது……

ஆனால்? கொஞ்சம் யோசித்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏனோ வருகிறது. வேண்டாம் நெகட்டிவ் சிந்தனை. கச்சேரிக்குப் ப்ராக்டீஸ் செய்ய வேண்டும். சிந்தனைகளைப் புறம் தள்ளினேன்.



------மீட்டல் தொடரும்....

189 கருத்துகள்:

  1. மகிழ்வான காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, மற்றும் தொடரும் எல்லோருக்கும்!

    பாட்டு அட! பொருத்தமான பாட்டு! சூப்பர் ஸ்ரீராம்! மிகவும் பிடித்த பாட்டும் கூட

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஓ! இன்று கதையின் நாயகியின் பார்ட்டா?! ஸ்ருதி! இந்தப் பெயர் பார்த்த்தும் கமல் பெண் நினைவுக்கு வந்தார். ஆனா எபில ஸ்ருதிக்கு யாரும் காத்து வீசறதில்லையே அதனால அந்தப் படம் போணியாவாது.

    ஸ்ருதி என்ன சொல்லுகிறாள்னு பார்த்துட்டு வரேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமல் பொண்ணு ஸ்ருதி...

      அப்படி ஒருத்தர் இருக்காங்களோ!

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எனக்கே தெரியும் கமல் பெரிய பொண்ணு ஸ்ருதினு! சூரியாவோட கூட ஒரு படத்திலே நடிச்சிருக்காங்க! ஏழாம் அறிவு? அல்லது ஏழாம் மனிதன்? இஃகி,இஃகி, வந்து எட்டு வருடங்கள் இருக்குமா? அம்பேரிக்காவில் பார்த்தேன் இந்தப் படத்தை! சின்னப் பொண்ணு அக்ஷராவும் நடிக்க வந்தாச்சு! :)))))

      நீக்கு
    3. ஆஹா கீதாக்கா அப்டேட்டட் ஆ இருக்காங்க!!! அதிரா, ஏஞ்சல், ஸ்ரீராம், நெல்லிய, பானுக்கா நோட் திஸ்! (அதிரா இந்த பாயின்டை பொறுக்கி எடுத்துக்கோங்க!!)

      கீதா

      நீக்கு
    4. கீசாக்கா மூக்கால அழுதழுதே முழுப்படமும் பார்த்து, முழு விடுப்ஸ் உம் தெரிஞ்சுதான் வச்சிருக்கிறா:)...

      ஆனா கீசாக்காவில இப்ப ஒரு முன்னேற்றம் என்னஎனில்:)..... எனக்கு சினிமா தெரியாது என முன்பு அடிக்கடி சொல்லும் வசனத்தை நிறுத்திட்டா:)... அந்தப் பெருமை அதிராவையே சேருமாக்கும் கீதாக்கு இல்லை:)....
      ஹையோ மாமாவுக்கு சாப்பாடு குடுத்துப் பாதியில விட்டிட்டு என்னைக் கலைக்கிறா கீசாக்கா மீ ஓடப்போறேன்ன்ன்ன் இன்று அதிராவுக்கு ஸ்கூஊஊஊஊஉல்ல்ல்ல்ல்ல்ல் லாச்ட் டே:)..

      நீக்கு
    5. தீர்க்கி! இப்போவும் அப்போவும் எப்போவும் சொல்றேன். ஏதோ ஒரு சில திரைப்பட நாயக, நாயகியரைத் தெரிந்திருப்பதால் திரைப்பட அறிவு எனக்கு அதிகமா இருப்பதாய் நினைக்காதீங்க! திடீர்னு ஏதேனும் கேட்டுத் தேர்வு வைச்சீங்கன்னா சொதப்பிடுவேன். :))))

      நீக்கு
    6. கமல் பொண்ணு ஸ்ருதி என்று தெரியும். ஸ்ருதி என்று சொன்னதும் அவர் நினைவுக்கு வரும் விஷயம் ஒன்று இருக்கிறதோ என்று கேட்டேன். அவ்வளவுதான். அதற்குள் அக்காவை எல்லோரும் கலாய்க்கிறீர்களே!

      நீக்கு
    7. //அப்படி ஒருத்தர் இருக்காங்களோ!// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நல்ல சமாளிப்ஸ்! :)))))

      நீக்கு
    8. ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் நம்ம கீதாக்கா!!! அதான்!

      அதிரா அண்ட் கீதாக்கா உங்க ரெண்டு பேர் கமென்டும் பார்த்து அதுவும் கீதாக்கா ஸ்ரீராமை கலாய்த்து நு நான் சிரிச்சு முடிலை...

      ஸ்ரீராம் நல்லாவே சமாளிக்கிறார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஸ்ரீராம் நோட் திஸ்!!

      கீதா

      நீக்கு
  3. முன்பு பாட்டு கேட்டதோடு சரி ஸ்ரீராம். வரிகள் எதுவும் அத்தனை கவனித்தது இல்லை. அதிகம் கேட்கும் வாய்ப்பு இல்லாததால். பாடல் வரிகள் இப்பத்தான் பார்த்தேன். அருமையான வரிகள். அழகான வரிகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ஒரு பாடல் இது தெரியுமா? என்ன வரிகள்... எப்போதும் ரசிக்கும் பாடல். வாணி ஜெயராமின் குரலும் அருமையாக இருக்கும்.

      நீக்கு
    2. யெஸ் ஸ்ரீராம் அழகா அமைஞ்ச பாட்டு. வாணியின் குரல் செமையா இருக்கும். ஹை பிச்!

      ஸ்ரீவித்யா அழகு இல்லையா? இதுல கொஞ்சம் டக்குனு ஸ்ரீதேவி போல இருக்காங்கனு தோனுது. அந்தத் திருத்தப்பட்டப் புருவத்தினால் இருக்குமோ..எனக்கு அப்படித் தோணுதோ என்னவோ...

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீவித்யாவின் அழகில் கால் பாகம் கூடத் திரைப்படங்களில் வந்திருக்காதுனு நினைக்கிறேன். எனக்கு இவரைப் பத்திப் படிக்கும்போதும், நடிக்கும் படங்களைப் பார்க்கும்போதும், இவர் அந்தக் கால விகடன் அட்டைப்படத்தில் ஸ்ரீவித்யா மூர்த்தி என்னும் பெயரில் இடம் பெற்றதும், பரத நாட்டிய அரங்கேற்றம் நடந்ததும் குறிப்பிட்டிருந்ததும், ஒரு சில நடன நிகழ்ச்சிகள் குறித்துப் படித்ததும் நினைவில் வரும். சுருதி சுத்தமாய்ப் பாடவும் செய்வாராம்! பாவம்! :((((( ஏமாற்றப்பட்டு மனம் உடைந்து போனார்! :((((( எம்.எல்.வி. சரியாய்க் கவனிக்கலையோனு நினைப்பேன். சுதா ரகுநாதனுக்குக் கொடுத்த முக்கியத்துவம் பெண்ணுக்குக் கொடுக்கலையோனும் தோணும்! :( என்ன சொல்ல முடியும்! தலைவிதி என்பது இதுதான் போல!

      நீக்கு
    4. கீதாக்கா யெஸ் கண்டிப்பா சொல்லலாம். அவருக்கும் நன்றாகப் பாடவரும். இசையிலேயே கூடப் போயிருக்கலாம். அவர் விரும்பியவரைத் திருமணம் செய்வதில் எம் எல் விக்கும் அவருக்கும் கொஞ்சம் கருத்து வேறுபாடு வந்தது என்று நினைக்கிறேன். மதம் மாறியதாலும் அதன் பின்னர் திருவனந்தபுரத்தில்தானே இருந்தார்.

      எனக்கும் தோன்றியதுண்டு அக்கா எம் எல் வி தன் பெண்ணை இன்னும் கொஞ்சம் கவனிச்சுருக்கலாம்னு...

      ஸ்ரீவித்யா திரைப்படங்களில் சில பாடல்களும் பாடிருக்கார். அவர் கர்நாடக சங்கீதமும் நன்றாகப் பாடுவார்.

      https://www.youtube.com/watch?v=qw_XlVUf8rk மலையாளம் அபடம் அயலாதே சுந்தரி

      https://www.youtube.com/watch?v=2KzYUO1-y1M

      தமிழ்ப்படம் அமரன் அதிலும் ஒரு பாட்டு பாடிருக்காங்க...

      கீதா

      நீக்கு
    5. கீசா மேடம்.. மேடைக் கச்சேரி என்றால் சர்வ சாதாரணமாக நினைச்சுட்டீங்க போலிருக்கு. அதுக்கு அசுர உழைப்பும் டெடிகேஷணும் தேவை. ஶ்ரீவித்யாவுக்கு அதில் ஆர்வம் இல்லை. அவருக்கு நடிப்பில்தான் ஆர்வம். எம்எல்வி வருந்தியபோதும், மகள் கமலைத் திருமணம் செய்துகொள்ளப் போகும் மகிழ்ச்சியில் இருந்தார். அதுவும் வாய்க்கவில்லை. ஶ்ரீவித்யா, தான் தேடிச் சென்ற வாழ்க்கையை வாழ்ந்து கஷ்டப்பட்டார். சேர்த்த செல்வம் வீணானது. கமல் கடைசிவரை நட்புடன் இருந்தார்.

      நீக்கு
    6. ஶ்ரீவித்யா ஆரம்பத்தில் உழைத்தார் என்றே சொல்லலாம். நடுவில் திரைப்பட அறிமுகமும், கமல்ஹாசன் அறிமுகமும் அவர் கொடுத்த பொய்யான உறுதிகளும் அவரைக் கனவுலகில் ஆழ்த்தி விட்டன. எம் எல்.வி என்னமோ நிச்சயமா நம்பி இருந்தார். ஶ்ரீவித்யா இந்த வாழ்க்கையைத் தேடிச் செல்லவில்லை. அவர் அந்த வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அம்மா எச்சரித்தும் வீம்பாகச் சென்றார். சந்தோஷமாக இல்லை! அதன் உள்ளார்ந்த காரணங்கள் புரிந்தால்! சிலவற்றை வெளியே சொல்ல முடியாது! அவற்றில் இதுவும் ஒன்று. ஆனால் தான் பெண்ணாகப் பிறந்து பல வகைகளிலும் ஏமாற்றப்பட்டதை நினைத்து நினைத்தே அவர் உடல் நலம்பாதிக்கப்பட்டது. ஏதோ ஒரு திரைப்படத்தில் கமலோடு தான் அவர் நடித்திருப்பார். தன் முன்னாள் கணவனை விவாகரத்து செய்துவிட்டுப் புது வாழ்க்கையைத் தேடிப் போகும்போது முன்னாள் கணவன் (ரஜினியோ) திரும்ப வந்து ஏற்றுக்கொள்வதாகச் சொல்லி ஏமாற்றுவார். அதில் ஏமாந்த ஶ்ரீவித்யா இங்கே தனக்காகக் காத்திருப்பவரையும் விட்டுவிட்டு தன்னந்தனியாக வாழ்க்கையில் நிற்பார்! கிட்டத்தட்ட அந்தத் திரைப்படம் ஶ்ரீவித்யாவின் சொந்தக்கதை! உணர்வு பூர்வமாக நன்றாகவே நடித்திருப்பார் என்றாலும் மனதைக் கலக்கிய சில படங்களில் இதுவும் ஒன்று. இப்போது நினைத்தாலும் மனதில் வேதனை வரும்.

      நீக்கு
    7. கீதா அக்கா... நீங்கள் சொல்லி இருக்கும் படம் 'அவர்கள்' . அதில் கதாநாயகி சுஜாதா.

      இப்போது நான் பகிர்ந்திருக்கும் படத்தில் திரும்பி வரும் கணவனாக நடித்திருப்பது அறிமுக ரஜினி!

      நீக்கு
    8. இல்லை ஶ்ரீராம், ஶ்ரீவித்யா தான்! கமல்ஹாசன் அந்தப் படத்தில் ஏதோ ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு பேசுவார். பொம்மை பேசுவது போல நமக்குத் தெரியும். அந்த மாதிரியான ஆட்டத்திற்கு ஓர் நல்ல பெயர்! மறந்துட்டேன்! ஆர்ச்சி காமிக்ஸில் அடிக்கடி வரும். :))))) நான் சொன்ன இந்தப் படம் முடிவில் ஶ்ரீவித்யா அழுது கொண்டே ரயில் ஏறுவார். கமல் வழி அனுப்பி வைப்பார். கமல் ஶ்ரீவித்யாவைக் காதலிப்பதைக் கடைசி வரை சொல்லவே மாட்டார்! தியாகி!க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))) நான் சொல்லுவது ஓர் மலையாளப் படமோ? அதுதான் நன்றாக எடுப்பாங்க! (இஃகி, இஃகி)

      நீக்கு
    9. கிர்ர்ர்ர்ர்ர்... தமிழ்.... தமிழ்... நீங்கள் சொல்லி இருப்பது தமிழ் 'அவர்களே'தான்!

      நீக்கு
    10. "கோஷிஷ்" ஹிந்திப்படம் தானே தமிழில் "அவர்கள்"! கதாநாயகனும், நாயகியும் வாய் பேச முடியாதவர்கள். ஹிந்தியில் சஞ்சீவ்குமார், ஜெயபாதுரி நடித்த பெயர் பெற்ற படத்தைத் தமிழில் எடுத்துக் கெடுத்தார் கே.பி. அதில் தான் கமல், சுஜாதா! நான் சொல்லுவது வேறே படம்னே தோணுது! இஃகி, இஃகி, திரைப்பட நாயகி மன்னியிடம் கேட்டால் எடுத்துக் கொடுப்பார். அவரைப் பிடிக்கவே முடியறதில்லை இப்போல்லாம்! :)))))

      நீக்கு
    11. இஃகி,இஃகி, அ.வ.சி.விக்கி,விக்கிப்பார்த்ததிலே "அவர்கள்" கதை ஶ்ரீராம் சொன்னது தான் என்பது உறுதி, உறுதி, உறுதி! முக்கா முக்கா மூணு தரம் சொல்லியாச்சு! நான் வாபஸ்! நாளைக்கு வரைக்கும் இந்தப்பக்கமே எட்டிப் பார்க்க மாட்டேனே! :))))))

      நீக்கு
    12. //"கோஷிஷ்" ஹிந்திப்படம் தானே தமிழில் "அவர்கள்"! கதாநாயகனும், நாயகியும் வாய் பேச முடியாதவர்கள். //

      கீதாக்கா...

      முன்னால் எல்லாம் குமுதத்தில் குப்பாச்சு குழப்பாச்சு என்று ஒரு பகுதி வரும். அது படித்திருக்கிறீர்களோ?!! அது போல இருக்கிறது!

      நீங்கள் சொல்லும் அதாவது இப்போது சொல்லும் படம் உயர்ந்தவர்கள். அதில் ''இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட'' (யேசுதாஸ் வழக்கம் போல விலையாட என்று பாடுவார்!) என்கிற பாடல் பேமஸ்.

      அடுத்து என்ன படத்தை இங்கு அறிமுகப்படுத்துகிறீர்கள் என்று காத்திருக்கிறேன்!!!

      நீக்கு
    13. //விக்கி,விக்கிப்பார்த்ததிலே "அவர்கள்" கதை ஶ்ரீராம் சொன்னது தான் என்பது உறுதி, உறுதி, உறுதி! முக்கா முக்கா மூணு தரம் சொல்லியாச்சு! நான் வாபஸ்! //

      அது!

      நீக்கு
    14. அவர்கள் படத்தில் கமலஹாசன் ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு சுஜாதாமுன் பாடுவது சரி.
      ஜூனியர் என்று பாட்டு தொடங்கும் தான் பேசி அது பொம்மை பேசுவது போல் உள்ள பொம்மை.
      கீதா படத்தின் பேரை தப்பாய் சொன்னார். பொம்மை சரி.

      நீக்கு
    15. அவர்கள் படத்தில் முன்னாள் விரும்பியவர் ஒருவர் (நடிகை சுமித்திராவின் கணவர் )பெயர் நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது. ஏதோ குமார் என்று முடியும்.

      இப்போது விரும்பும் கமல், கல்யாணம் செய்து கொண்ட கண்வர் ரஜினி.
      அங்கும், இங்கும் என்று ஆரம்பிக்கும் பாடல் இன்று நீ எந்த பக்கம் என்று வரும்.

      நீக்கு
    16. சுமித்ராவின் கணவர் ரவிகுமார்! ஆரம்ப காலங்களில் (அதாவது தொலைக்காட்சித் தொடர்கள் ஆரம்பித்த காலங்களில்) தொடர்களில் நடித்து வந்தார். இப்போக் காணோம்! :)))))

      நீக்கு
    17. நாளை வரை இந்தப் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன்னு காவேரிப்பக்கம் எஸ் ஆன அக்கா வந்துட்டாங்க போல ஹா ஹா ஹா

      அக்கா அந்த ஆர்ட் பெயர் அதாவது பொம்மை பேசுவது போலான ஆர்ட் பெயர் வென்ட்ரிலோகிஸ்ட் ventriloquist

      கீதா

      நீக்கு
    18. தமிழ் ல டிவி ஷோ நடத்தின வென்ட்ரிலோகிஸ்ட் மங்கி வெங்கி நாங்க சென்னைல இந்திராநகர்ல குடியிருந்தப்ப மாடில அவர் இருந்தார். நாங்க அந்த வீட்டை காலி பண்ணும் முன் அவர் வேறு வீடு மாறிட்டார். அப்ப அவர் நிறைய ஷோ எல்லாம் கூட நடத்துவார். அதுக்கு அப்புறம் தெரியலை. அவர்கள் ல அந்த ஜீனியர் பாட்டுல பேசுபவர் மதன் எனும் ஆர்ட்டிஸ்ட் என்று நினைக்கிறேன்.

      கீதா

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  5. இது எம் எஸ் வி இசை இல்லைனு ஞாபகம். சங்கர் கணேஷா இருக்குமோ? பார்க்கிறேன்.

    உலக அதிசயமாக நல்ல ஹிட்டான, விருது பெற்ற பாட்டைப் போட்டிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லைத்தமிழன்...

      என்னது... சங்கர் கணேஷா? ஆ! எனக்குத் தெரிந்து கேபி படங்களுக்கு சங்கர் கணேஷ் இசை அமைத்ததாய்த் தெரியவில்லை! எனக்குத் தெரிந்து!

      நீக்கு
    2. நெல்லை என்னாச்சு?!! இப்படிச் சொல்லிட்டீங்க...தி க்ரேட் மெல்லிசை மன்னர்.எம் எஸ் வியேதான்...அதுவும் இந்தப் பாட்டு அவர் இசையமைத்து மற்றொரு பாட்டு அதிசய ராகம் அபூர்வ ராகத்தில் போட்டுருக்கார் இதெல்லாம் ரொம்ப ஃபேமஸ்! எம் எஸ் வி புகழ், திறமை (அவர் பேக் க்ரவுன்ட் எந்த இசையும் கற்கலையே!) அவர் புகழ் பாடும் பாட்டுகள் நெல்லை....நாங்க அப்பவே இந்த ரெண்டு பாட்டும் கேட்டு வியந்துருக்கோம்!

      அது போல உனக்கென்ன மேலே நின்றாய் அருமையான பாட்டு எம் எஸ் வி இன்னும் இசையமைப்பு பற்ரி நிறைய பாடல்கள் சொல்லலாம்..

      கீதா

      நீக்கு
    3. ஶ்ரீராம்.. நான் கன்ஃப்யூஸ்்ஆகிட்டேன். வாணி ஜெயராமின் “மேகமே மேகமே” பாடல்தான் மனதில் ஓடியது. அது சங்கர் கணேஷ் இசையமைத்த பாலைவனச் சோலை.

      இரண்டுமே விருது பெற்ற பாடல்கள்னு ஞாபகம்

      நீக்கு
    4. அநேகமா வி.குமார் என்பவர் தான் பாலசந்தரின் ஆரம்பகாலப்படங்களுக்கு இசை. வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இருந்து (???) எம்/எஸ்/வி. என எண்ணுகிறேன். அதற்கு முன்னாலும் இசை அமைத்திருக்கலாம். தெரியலை!

      நீக்கு
    5. எம் எஸ் வி அதிசய ராகம் பாடலுக்காக பாலமுரளி கிருஷ்ணாவிடம் கலந்து பேசினார் என்று படித்த நினைவு.

      நீக்கு
    6. // அநேகமா வி.குமார் என்பவர் தான் //

      என்ன அநியாயம்! எவ்வளவு புகழ்பெற்ற இசையை அமைப்பாளர் அவர்... அவர் இசையில் எம் எஸ் வி ஒரு பாடல் பாடி இருக்கிறார் தெரியுமோ... (உனக்கென்ன குறைச்சல்...)

      நீக்கு
    7. ஸ்ரீராம் எம் எஸ் வி பாலமுரளி யிடம் கலந்து பேசியிருக்கலாம். ஏன்னு கேட்டீங்க்னா...முதல் பாரா ராகம் மஹதி....இந்த ராகம் ஸ்வரம் போட்டு பெயர் வைத்தவரே பாலமுரளிதான் அவர் உருவாக்கிய ராகம்.

      கீதா

      நீக்கு
    8. தெரியும் கீதா... அரைகுறையாய் தெரியும் என்பதால் தவறாகி விடுமோ என்று சொல்லாமல் விட்டேன்.

      நீக்கு
    9. //ராகம் மஹதி....இந்த ராகம் ஸ்வரம் போட்டு பெயர் வைத்தவரே// - ஏதோ சொல்றீங்க. நாங்க கேட்டுக்கறோம். எனக்குத் தெரிந்த மஹதி, 'அழகான பாடகர் மஹதி'தான். நீங்க மஹதி என்று எழுதாம 'சொதி' என்று எழுதியிருந்தாலும் எனக்கு ஒன்றும் தெரிந்திருக்காது.

      நீக்கு
  6. ஹூம் ஷ்ரவண் ஸ்ருதி வீட்டுக்குப் போய் பார்த்திருந்தா பஜ்ஜி சொஜ்ஜி கேசரி கிடைச்சுருக்கும்! புதன் கேள்வில கூட நெல்லை கேட்டிருந்தாரே. இப்பல்லாம் பஜ்ஜி சொஜ்ஜி குறைந்து போச்சேனு வருத்தமா…!! நெல்லைய இங்க மீடியேட்டரா போட்டிருந்தா, நாங்க உங்க வீட்டுக்கு வந்து தான் எங்க வீட்டுப் பையனுக்குப் பொண்ணு பார்ப்போம்னு சொல்லிருந்திருப்பார் ஹா ஹா ஹா. பஜ்ஜி கேசரி போச்சே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... கேசரி பஜ்ஜி செய்ய அலுப்புப் பட்டு வெளியில், ஹோட்டலில் வைத்து விட்டார்களோ!

      நீக்கு
    2. இப்பலாம் அதான் காரணமா இருக்கும் போல இருக்குமோ!!ஹ ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. நம்ம பெண் பார்க்கும் ப்ராசஸ் சரியில்லை. நாம் நம்ம கலாச்சாரத்திலும் இல்லாம மேலைக் கலாச்சாரத்திலும் இல்லாம இடைல இருக்கோம் (பெரும்பாலும்). இன்னொருத்தர் வீட்ல பெண் பார்க்கன்னு போய் சாப்பிட்டு வருவதை நினைத்தால் எனக்கு அருவருப்பா இருக்கு. அதுவும் தெரியாதவங்க வீட்டில். இதுக்கும், நகைக் கடைக்கு நாம போகும்போது, இவங்க நகை வாங்குவாங்க என்ற எதிர்பார்ப்பில் கொடுக்கும் கூல்டிரிங்ஸ்க்கும் என்ன வித்தியாசம்?

      —————-
      பெண்ணைப் பெற்றவர்கள் சைடில்: என்ன.. உங்களுக்குப் பிடிச்சிருக்கா? பையன் என்ன சொல்றார்?
      பையன் சைடு: நல்லாருக்கு. எங்களுக்கு திருப்தி. பையன் கேசரில நெய் ஜாஸ்தின்னான். வெங்காய பஜ்ஜி போடலையான்னான். ஆனா எங்களுக்கு திருப்தியாத்தான் இருந்தது. மத்த வீடுகளைவிட ருசி நல்லா இருந்தது

      நீக்கு
    4. பொது இடத்தில் வைத்துப் பெண்ணுக்கே தெரிஞ்சும் தெரியாமலும் பெண் பார்ப்பதைக் கடைப்பிடிப்பதே நல்லது....

      நீக்கு
    5. என் நாத்தனார் பெண்ணைப் பார்க்கப் பிள்ளை வீட்டார் வந்தப்போ 86 ஆம் ஆண்டில் நாங்க மைசூர்ப்பாகும், போண்டா, ரவா கிச்சடி செய்து கொடுத்தோம். எங்க பெண்ணைப் பார்க்க வந்தப்போ 90 களின் கடைசியில் மைசூர்ப்பாகு, இட்லி, மாம்பழ ஶ்ரீகண்ட், சேவை, இன்னொரு ஸ்வீட் என்ன? இஃகி, இஃகி,மறந்து போச்சு! ஏன் இப்படின்னா அவங்க அன்னிக்கே தாம்பூலம் மாத்திக்கணும்னு சொல்லிட்டாங்க.நாங்களும் ஓரளவுக்குத் தயாராத் தான் இருந்தோம். :)))))

      நீக்கு
    6. பெண்ணைப் பெற்றவர்கள் சைடில்: என்ன.. உங்களுக்குப் பிடிச்சிருக்கா? பையன் என்ன சொல்றார்?
      பையன் சைடு: நல்லாருக்கு. எங்களுக்கு திருப்தி. பையன் கேசரில நெய் ஜாஸ்தின்னான். வெங்காய பஜ்ஜி போடலையான்னான். ஆனா எங்களுக்கு திருப்தியாத்தான் இருந்தது. மத்த வீடுகளைவிட ருசி நல்லா இருந்தது//

      ஹா ஹா ஹா ஹா ஹாஹ் ஆ....சிரிச்சுட்டேன் நெல்லை...

      எனக்கும் இது பிடிப்பதில்லை. அப்பவேலருந்தே அதாவது என்னைப் பார்க்க வந்த போதே...பொம்மை மாதிரி நிக்கச் சொல்லி. எனக்கு அது ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு....ஏதோ காட்சிப் பொருள் மாதிரி...கை வளையப் பார்க்கறது...காது பார்க்கறது..ஒரு சிலர் வைரத் தோடு டிமான்ட் செஞ்சது. எட்சற்றா எட்சற்றா.....நான் இதாற்கு டெட் எகைன்ஸ்ட். வீட்டுல சண்டையே நடந்துச்சு...அதெல்லாம் ஒரு கதை...

      எனக்குச் சுத்தமா பிடிக்காத ஒன்று

      கீதா

      நீக்கு
    7. பெண் பார்க்கும் படலம் பற்றிய நெல்லையின் கருத்துக்கு நான் ஆதரவு தருகிறேன். அதனால்தான் நான் பெண்பார்க்கச் செல்லும் வழக்கத்தைத் தொடாமலேயே - - - - - - திருமணம் புரிந்து விட்டேன்!

      நீக்கு
    8. /வழக்கத்தைத் தொடாமலேயே - - - - - - // - அடடா.. எதுக்கு பஜ்ஜி/சொஜ்ஜியை எடுத்துக்கணும், பெண்ணையே கவர்ந்து வந்துடலாமே என்று செய்துட்டீர்களா? ஹாஹா. வாழ்த்துகள், வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருப்பதற்கு. எல்லாம் இறை செயல்....

      நீக்கு
    9. ஸ்ரீராம் - இதுல சில ஆச்சர்யமான சம்பவங்களைச் சந்தித்திருக்கேன். நான் இங்கே வேலை பார்த்தபோது, அந்தக் கம்பெனியில் இருந்த ஒருவர், அவரது உறவினர் பெண்ணுக்காக என்னை அப்ரோச் செய்தார். அப்புறம் என்னிடம் ரொம்ப நல்லா பேசிக்கிட்டிருந்தார். ப்ராசஸ் மூவ் ஆகலைனு தெரிந்தபிறகு பேசுவதை நிறுத்திவிட்டார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்தக் கம்பெனியிலேயே எனக்கு மூன்று வெவ்வேறு அனுபவங்கள் இதில். சில கம்பெனிகளில் கன்சல்டண்ட் ஆக இருந்தபோதும், இந்த மாதிரி சம்பவங்கள் நடந்திருக்கு. சிலரிடம் நான் ஆரம்பத்திலேயே, 'இது நடக்காது' என்று சொல்லிடுவேன்.

      நீக்கு
    10. மாப்பிளைகளை பெண்ணைப் பெற்றவர்கள் தேடி வந்த பொற்காலம் அது நெல்லை!

      நீக்கு
    11. @கீதா ரங்கன்(க்கா)//அதாவது என்னைப் பார்க்க வந்த போதே..// - அடடா... நானும் உங்களைப் பெண்பார்த்தவர்களோடு வந்த உறவினனாக இருந்திருந்தால், 'அப்படீக்கா நேர நடங்க.. கொஞ்சம் லெஃப்ட் சைடுல பத்தடி நடந்து காட்டுங்க. பாடுங்க. உச்சஸ்தாயில பாட முடியுதான்னு செக் பண்ணணும். அப்புறம், ஒரே தீக்குச்சில பெருமாள் விளக்கேத்துங்க.. பெண்ணுக்கு வேகமா சமைக்கத் தெரியுமா, என்னென்ன தெரியும்'ன்னு கேட்டுக் கலாய்ச்சிருக்கலாம். அப்புறம் உறவினர் பெண்ணைப் பார்த்து, அவங்க முடி 'சவுரி' இல்லையான்னு கொஞ்சம் இழுத்துப் பாருங்க, கண்ணு நல்லாத் தெரியுதான்னு இந்தப் பக்கத்தை படித்துக்காட்டச் சொல்லுங்க என்றும் சொல்லி வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கலாம்.

      கல்யாணத்தின்போதே, நகைகளை, ஆசாரி கொண்டு தங்கம்தானா என்று செக் செய்ததையும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வயித்தெரிச்சல்லதான் இப்போ பெண் கிடைக்காம அலையறாங்க எல்லாரும்.

      நீக்கு
  7. காலை வணக்கம் ஸ்ரீராம்.

    நல்ல பாடல்.

    தொடர்கதையும் சிறப்பாகத் தொடர்கிறது. தினமும் ஒரு பகுதி.... நல்ல விஷயம். இடைவெளி இருந்தால் தொடர்வதற்கு கடினம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் வெங்கட்.

      தினமும் ஒரு பகுதிதான்..

      ஆனால் சில நாட்களில் கடினம்!

      திங்கள், செவ்வாய் பதிவுகளில் இதை இணைப்பது பற்றி வாசகர்கள் கருத்தை அறிய முற்படுகிறேன். படிக்க சிரமமாய் இருக்குமா? இரண்டுக்கும் படித்து போதுமான பின்னூட்டங்கள் அளிப்பது சிரமமாய் இருக்குமா என்று அறிய ஆவல். எல்லோருமே பதில் சொல்லுங்களேன்.

      நீக்கு
    2. திங்கள், செவ்வாய்க்கிழமைப் பதிவுகள் தனித்தன்மை கொண்டவை. திங்களாவது பரவாயில்லை. "திங்க"ற சமாசாரம். ஆனால் செவ்வாய்? கே.வா.போ.க. எழுதறவருக்கு மனதை உறுத்தாதா? இந்தத் தொடரின் முக்கியத்துவம் தன் கதையின் வாசகர்களைக் குறைத்துவிட்டதாகவோ அல்லது தன் கதைக்கு முக்கியத்துவம் கிடைப்பதில் பிரச்னை இருப்பதாகவோ நினைக்கலாம். இது என்னோட கருத்து! எனக்கு அப்படித் தோன்றும் என்பதால் சொல்லி இருக்கேன். பெருந்தன்மையுடன் இருப்பவர்களும் உண்டு.

      நீக்கு
    3. கீதாக்கா அப்படியே வழி மொழிகிறேன். டிட்டோ டிட்டோ!

      ஸ்ரீராம் இங்கு நாம் பலரது எழுத்துகளையும் ஊக்குவிக்கத்தானே இப்படி சில ஸ்லாட் வைச்சு எபி ஆசிரியர்கள் போடுறீங்க...ஸோ கீதாக்கா கருத்தே நானும் சொல்வேன்...குறிப்பா செவ்வாய்!

      கீதா

      நீக்கு
    4. செவ்வாயில் கைவைத்தால் தவறு. (அவளுடைய அனுமதி இல்லாமன்னு புரிஞ்சிக்காதீங்க). செவ்வாய், கேவாபோ கதை. அதுல கதை எழுதும் பெரும்பாலானவர்கள் தங்களுக்கான இணையதளம் இருந்தும் நட்புக்காக எழுதறாங்க. அதுல வேறு எதுவும்வருவது உறுத்தலா இருக்கும் என்பது என் அபிப்ராயம்.

      தனிப்பட்ட முறையில், பு,வி,வெ,ச,ஞா பகுதிகளில் மட்டும் வருவது நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    5. @ நெல்லைத் தமிழன் Said..

      >>>> தங்களுக்கான இணையதளம் இருந்தும் நட்புக்காக எழுதறாங்க. அதுல வேறு எதுவும்வருவது உறுத்தலா இருக்கும் என்பது என் அபிப்ராயம்.

      தனிப்பட்ட முறையில், பு,வி,வெ,ச,ஞா பகுதிகளில் மட்டும் வருவது நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்..<<<<

      அதே.. அதே.. சபாபதே!...

      நீக்கு
    6. ///செவ்வாயில் கைவைத்தால் தவறு. (அவளுடைய அனுமதி இல்லாமன்னு புரிஞ்சிக்காதீங்க). /////

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... ஹா ஹா ஹா பிறகு அது செக்‌ஷன் 234 படி ரேப் கேஸ் ஆகிடும் அப்பூடித்தானே நெ தமிழன்:).... ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)

      நீக்கு
    7. அதிரா.. யாரோ எழுதியிருந்தாங்க. 30 வினாடிகள் பெண்ணை முறைத்துப் பார்ப்பதே சட்டப்படி குற்றமாம். ஈவ் டீசிங் கேசில் புக் பண்ணலாமாம். ஆண்கள் மட்டும் அவங்க வேலையை மட்டும் பார்த்து 21 வயது வரை பெண்களைப் பார்ப்பதே இல்லைனு விரதம் எடுத்துக்கிட்டாங்கன்னா, பெண்கள் பரீட்சைகளில் 100க்கு 180 மதிப்பெண்கள் வாங்கிடுவாங்க (ஏன்னா தினமும் மேக்கப்புக்கு செலவழிக்கும் 8 மணி நேரத்தை மிச்சப்படுத்தி அதிலும் படிக்கலாம் இல்லையா?). இன்னும் நிறைய எழுதி உங்க எல்லோரின் நட்பைக் கெடுத்துக்கொள்வானேன்

      நீக்கு
    8. செவ்வாயில் கைவைத்தால் தவறு. (அவளுடைய அனுமதி இல்லாமன்னு புரிஞ்சிக்காதீங்க). //

      ஹா ஹா ஹா ஹா ஹா...அதுக்கு நீங்க "செவ்" வாயில்னு சொல்லிருக்கோனும்...டமில்ல டி கண்ணுல படல!!!! போல...

      நெல்லை அந்தக் கண்ணும் கண்ணும்நோக்கியா....அது கேரளத்தில் சொல்லப்பட்டதுனு நான் சொன்ன நினைவு...எங்கேனு தெரியலை...

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ஃபார் அடுத்த வரிகள்....அதெல்லாம் இல்லாட்டாலும் பெண்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கறாங்க!! எடுப்பாங்க!!

      கீதா

      நீக்கு
    9. ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே...

      புரிந்தது.

      ஆனால் எனக்கும் அதே தர்ம நியாயங்கள் இருந்ததால்தான் வாக்குக்கு விட்டேன் என்று புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!

      நீக்கு
    10. @நெ.. டமிலன்:)
      ///30 வினாடிகள் பெண்ணை முறைத்துப் பார்ப்பதே சட்டப்படி குற்றமாம். ///

      ஹா ஹா ஹா குற்ரத்துக்கு முன் எயிட்ஸ் வந்தலும் வந்திடுமாக்கும் ஹா ஹா ஹா.. எதுக்கு தேவையில்லாமல் ஒரு பெண்ணை முறைக்க வெளிக்கிடுறீங்க கர்ர்ர்:)).

      //பெண்கள் பரீட்சைகளில் 100க்கு 180 மதிப்பெண்கள் வாங்கிடுவாங்க (ஏன்னா தினமும் மேக்கப்புக்கு செலவழிக்கும் 8 மணி நேரத்தை மிச்சப்படுத்தி அதிலும் படிக்கலாம் இல்லையா?).//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தப்புக் கணக்குப் போட்டிட்டீங்களே:)) பரீட்சையில பெயிலாகிடுவினம் தெரியுமோ?:)) எதுக்கு என்னை ஆருமே பார்ப்பதில்லை எனும் கவலையிலயே படிக்காமல் இருந்து யோசிப்பினம் ஹா ஹா ஹா:)..

      உண்மையைத்தானே சொல்றீங்க இதில பயப்பட என்ன இருக்கு:) எனக்குத்தேவை நீதி நேர்மை கடமை எருமை:).. ஹா ஹா ஹா.. நீங்க சொல்வது உண்மைதான்.

      என் உறவினர் அண்ணா ஒருவரோடு இப்படித்தான் வம்புச் சண்டை போடுவேன் அப்போ கேட்டேன் எதுக்கு நீங்க எல்லாம் பெண்களைப் பார்த்து வர்ணிக்கிறீங்க என...

      அப்போ அவர் சொன்ன பதில் என்னைச் சிந்திக்க வச்சது:)).. அதாவது பெண்கள் மேக்கப் போடுவதே.. தம்மை எல்லோரும் பார்க்கோணும் என்றுதானே.. அப்போ நாம் பார்க்கவில்லை எனில் பாவம்தானே என்றார் ஹா ஹா ஹா:))..

      ஒருவிதத்தில உண்மைதானே.. ஆண்கள் பார்க்க மட்டும் என்றில்லை, அடுத்தவர்கள் பார்க்கோணும் எனத்தானே ஆண்களும் சரி பெண்களும் சரி அழகாக அலங்கரிப்பது:))

      நீக்கு
  8. எனக்கு பிடித்த் பாடல். ஸ்ரீவித்யா அவ்ர் அம்மா போல் பாடிக்கொண்டு இருந்து இருக்கலாம் என்று தோன்றும்.
    அந்த கண்கள் என்னால் மறக்க முடியாத கண்கள்.
    பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கண்கள்.... ஆமாம் கோமதி அக்கா.. பதிவில் நானும் சேர்க்க மறந்த வரிகள்!

      நீக்கு
    2. அதே அதே கோமதிக்கா.அண்ட் ஸ்ரீராம்.கண்கள் அழகான கண்கள். எக்ஸ்ப்ரசிவ் கண்கள்...

      கீதா

      நீக்கு
  9. சினிமாவிலயும் சரி, கதையிலரும் சரி காஃபி ஷாப்தான் காட்டுவாங்க போல! இங்கயும் அதே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சினிமாவைப் பார்த்து 'காபி' அடித்து விட்டார்கள் என்கிறீர்களா?

      நீக்கு
  10. வாரணமாயிரம் பாடவே தொடங்கலையேனு சொல்லிக்கிட்டே ஸ்ருதி ஷ்ரவண்கிட்ட ஃப்ளாட் ஆயிட்டா போல!! ஹா ஹா ஹா..

    சரி கடமை அழைக்கிறது வரேன் அப்பால

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரணமாயிரம்...

      என்ன ஒரு அழகான பாடல் இல்லை?

      நீக்கு
    2. ஆனா பாருங்க... அந்தப் பாடல் எழுதிய ஆண்டாளுக்கும் அது கனவுப் பாடல்தான்

      நீக்கு
    3. ஆண்டாளுக்கும் என்றால்? கனவுப்பாடல்?

      நான் பகிர்ந்திருப்பது கனவுப்பாடல் இல்லையே...

      அபுரி நெல்லை!

      நீக்கு
    4. ஆண்டாளின் கனவு தானே "வாரணமாயிரம்" பாடலாகப் பாடினாள்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இந்த அழகிலே நான் தமிழுக்கு விரோதியாம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    5. ஸ்ரீராம் நெல்லை சொல்லிருக்கறது கரெக்டுதானே...கீதாக்க சொல்லிட்டாங்க நான் நெல்லை கமென்ட் பார்த்து வந்தா கீதாக்கா சொல்லிருக்காங்க...அதேதான்

      கீதா

      நீக்கு
    6. கீசா மேடம்/ஸ்ரீராம் - வாரணமாயிரம் முழுமையாக அறிந்தவன். அது 'வைணவர்களுக்கு, பெண்கள் அதைப் பாராயணம் செய்தால் விரைந்து திருமணம் நடக்கும்' என்ற நம்பிக்கைக்குரிய பாடல். அதில் குறிப்பிட்ட ஒன்றும் ஆண்டாளுக்கு நடக்கவில்லை (நடப்பதாக கற்பனை செய்திருந்தார்). பிறகு அரங்கன் முன்னிலையில் அவருடன் ஐக்கியமானார். உங்களுக்கான ஒரு செய்தி... இதிலும் தாலி கட்டும் சடங்கு என்பதைக் குறிப்பிடவில்லை ஆண்டாள்.

      பொதுவா படங்கள்ல, விஸ்தாரமா திருமணம் ஆவதுபோல கனவுக் காட்சி காண்பித்தாங்கன்னா, படத்தில் திருமணம் ஆகாது.

      நீக்கு
    7. கீதா அக்கா... ஆண்டாளின் கனவுதான் அது.. இல்லங்கலை!

      நான் பகிர்ந்திருக்கும் பாடல் கனவுப்பாடல் இல்லை... ஆண்டாளுக்கும் என்று 'ம்' விகுதி வேறு... எனவே நான் அபுரி சொன்னேன். இன்னமும் புரியவில்லை என்றால் நான் அம்பேல்!

      நீக்கு
    8. நெல்லை பாசுரத்திற்கு விளக்கம் சொல்லிக் கொடுத்த எங்கள் குரு சொன்னது அக்னி சாட்சியாக தான் அப்போது அன்றைய சமூகத்தில் கல்யாணம் என்று. அதானால் தான் வாய்நல்லார் நல்ல பாசுரத்தில் தீவலம் செய்ய னு பாடிட்டு அடுத்த பாசுரம் இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நு சொல்லி அம்மி மிதித்து, அப்புறம் வரிசிலையில் அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கைவைத்து பொரிமுகம் தட்ட அவ்வளவுதான்...கைத்தலம் பற்றுவது...அன்றைய சமூகத்தில் தாலி, சகோதரன்வந்து பொரி எடுத்துக் கொடுத்தல் இல்லை அதெல்லாம் பின்னர் வந்தது என்று விளக்கம் கொடுத்தார்..

      கீதா

      நீக்கு
    9. நெல்லை எங்களுக்குப் பாசுரம் விளக்கம் சொல்லிக் கொடுத்த குரு சொன்ன விளக்கம்....வாய்நல்லார் முன்பு கைத்தலம் பற்றி, வாய்நல்லாரில் அக்னி சாட்சியாக (இதுதான் முக்கியமாகக் கருத்தப்பட்டது) தீவலம் செய்து, இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்று சொல்லி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து இது அடுத்த முக்கியம் ...அடுத்து வரிசிலையில் பொரிமுகம் தட்டி.. அவ்வளவுதான் கைத்தலம் பற்றியாச்ஹ்கு. அன்றைய சமூகத்தில் தாலி என்பதெல்லாம் இல்லை...அது போல பொரிதட்ட சகோதரன் என்பதெல்லாம் இல்லை இதெல்லாம் பின்னர் சமூகத்தில் வந்தவை என்று சொன்னார். அதனால்தான் ஆண்டாள் அதைச் சொல்லவில்லை என்று. மத்தளம் கொட்ட வில் கூட கைத்தலம் பற்றுவதைத்தான் சொல்கிறாள்....

      கீதா

      நீக்கு
    10. ஒன்று சொல்ல விட்டும் போச்சு. நெட் படுத்தல் வேர்டிலிருந்து காப்பி பேஸ்ட் செய்து போட்டு...போட்டு பப்ளிஷ் ஆகாமல்...

      காப்பு நாண் கட்டுவது பற்றியும் சொல்கிறாள்..

      கீதா

      நீக்கு
  11. இந்த சந்தோஷமெல்லாம் வளர்ந்து வரும் இளம் பாடகியான ஸ்ருதியை நான் திருமணம் செய்து கொள்ளும் வரைதான் நீடித்தது. //
    நேற்று கதையில் அவர்களுக்கு திருமணம் ஆனது உறுதி செய்யப்பட்டு விட்டது.

    //நான் உங்க கச்சேரி பத்தி பத்திரிகைல விமர்சிக்க மாட்டேன். ஆனா வீட்டுல விமர்சனம் தொடரும்…ஓகேதானே?.”

    “ஷ்யூர்! நல்லதுதானே! அது என்னை இம்ப்ரூவ் பண்ணிக்க உதவுமே”//

    இன்று கதையில் நடந்த உரையாடல் மூலம் மேலும் உறுதியாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்பவங்கள் வேகமாக செல்வதைப் பார்த்தால் வேறு ஏதோ இருக்கும் போலவே....

      நீக்கு
    2. இருக்கும் தான் , கொஞ்சம் ஸ்ருதி பேதம் ஏற்பட்டாலும் மீண்டும் சரியாக வாய்ப்பு இருக்கிறது


      நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே என்ற தலைப்பு சேர்ந்து பயணிக்கவும் விலகி ஒரே தடத்தில் பயணிக்கவும் சாத்தியம் உள்ளது.
      கதை ஆசிரியர் கையில் இருக்கு.

      நீக்கு
    3. ஆமாம் கோமதி அக்கா... தலைப்பு இரண்டு பக்கமும் பேசுகிறது.

      நீக்கு
  12. பார்ட்னர் ஒரு துறைல பெரிய ஆளாகணும்னா, இன்னொருத்தர் ரொம்ப விட்டுக் கொடுக்கணும், வளர்ச்சியை ரசிக்கணும், தங்களுக்குன்னு ஸ்பேஸ் ஒதுக்கிக்கொள்ளத் தெரியணும்... இது சுலபமல்ல. ஒன்றுல பெரிய ஆளா வருகிறவர்கள், நிறைய இழந்தால்தான் சாத்தியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. நிறைய பேர்களால் நிஜ வாழ்வில் இது சாத்தியப்படுவதில்லை. ஒரு சமீபத்திய தற்கொலை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

      நீக்கு
    2. உண்மை நெல்லை.
      குடும்பம் ஒத்துழைக்கவில்லை என்றால் பெரிய ஆளாக முடியவே முடியாது.

      நீக்கு
    3. //ஒரு சமீபத்திய தற்கொலை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.// ??????????????????????

      நீக்கு
    4. க்ண்ணோடு காண்பெத்தலாம் கண்களுக்கு தெரிவது இல்லை ,
      இப்போது தெரிகிறதா கீதா?

      நீக்கு
    5. நெல்லை உங்கள் கருத்தை கன்னா பின்னானு வழி மொழிவேன்.

      கோமதிக்கா, கீதாக்காவுக்கு இப்படி எல்லாம் க்ளூ கொடுத்தால் அங்கருந்து வரும் பதில் இஃகி இஃகி தான்!!! ஹா ஹா ஆ ஹா

      கீதா

      நீக்கு
    6. ஆஆஆங் அதேபோலத்தான் புளொக் குடும்பத்தில் இருப்போரும் அதிராவுக்கு ஜப்போட் பண்ணினால்தான் அதிரா புளொக்கில பெரியாளாக முடியும்:)... ஹையோ இதை என் செக் இடம் ஜொள்ளிப்போடாதையுங்கோ:)...

      நீக்கு
    7. நித்யஶ்ரீக்கு நடந்தது விபத்துன்னு சொல்றாங்க. நான் மனைவி கச்சேரி செய்வதால் வரும் இடைஞ்சல்கள், பிரச்சனைகள் பற்றி விரிவா எழுதுவதைத் தவிர்க்கிறேன்.

      நீக்கு
    8. அதிரா.. நீங்கள் எழுத நினைத்தது, “கணவன் சமையலில் பெரும் உதவியா இருந்தால்தான் மனைவி செய்முறை பிளாக் நடத்தமுடியும்” என்பதா?

      நீக்கு
    9. அதிரா இப்பவே நீங்க பெரிய ஆள்தானே ப்ளாகில்!!

      கீதா

      நீக்கு
    10. ஓ, கோமதி, நித்யஶ்ரீயா? அது பல வருடங்களாகத் தொடர்ந்து இருந்து வந்தது தானே! அவர் மாமியாரும் ஒரு காரணம் எனக் கேள்விப் பட்டிருக்கேன். அவங்க கர்ப்பமா இருந்தப்போக் கூடச் செத்துப் பிழைச்சாங்க! ஃபெலோப்பியன் ட்யூபில் குழந்தை இருந்ததால்! அப்போக் கூடப்பெற்றோர் தான் கவனிச்சதாய்க் கேள்வி! போகட்டும் பழசை எல்லாம் மறந்து இப்போத் தன் பெண்களை முன்னுக்குக் கொண்டு வருவதில் முனைந்திருக்கிறார்.நல்லபடி இருக்கட்டும்.

      நீக்கு
    11. ஆனால் அது சமீபத்தில்னு சொல்ல முடியாது! ஆறு அல்லது ஏழு வருடங்கள் இருக்கலாம். :( கனவு போல் ஆகிவிட்டது.

      நீக்கு
    12. ///நெல்லைத் தமிழன்29 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 12:33
      அதிரா.. நீங்கள் எழுத நினைத்தது, “கணவன் சமையலில் பெரும் உதவியா இருந்தால்தான் மனைவி செய்முறை பிளாக் நடத்தமுடியும்” என்பதா?//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நாங்க எல்லாம் முந்தூஊஊஊஊஊஊஊஉங்கிப் பின் எழும் பரம்பரையாக்கும்... ஹையோ மாறிச் சொல்லிட்டனே கடவுளே வைரவா... பின் தூஊஊஊஊஊங்கி முன் எழும் பறம்பறை:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  13. நான் விரும்பி கேட்கும் மிக அற்புதமான பாடல் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி...

      அப்படியே தொடர் கதையையும் படித்துக் கருத்துக் சொல்லி விடுங்கள் ஜி...

      நீக்கு
  14. // நீங்க “எப்ப வருவாரோ எந்தன் கலி தீர்க்க” ஆரம்பிக்கற சமயத்துல நான் ஹாலுக்குள்ள என்ட்ரி. என்ன? சினிமால வர ஹீரோ என்ட்ரி சீன் மாதிரி இருக்கோ?” என்று சிரித்தான்.//

    சினிமாவில் கதைக்கு ஏற்றார் போல் பாடல் போடுவது போல தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செயற்கையாக இருக்கிறது என்று நீங்கள் சொல்வதாக பதிவு செய்து கொள்ளலாமா கோமதி அக்கா?

      ஹா... ஹா....ஹா...

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கோமதிக்கா செம பாயின்டு!!!!

      ஸ்ரீராம் ஆசிரியர்கள் கருத்துகளுக்கு கடைசில பொதுவாகவேனும் பதில் சொல்லுவாங்கதானே!!!

      கீதா

      நீக்கு
    3. இந்த அனுபவம் எனக்கே புதுசு கீதா...

      ஆசிரியர்களுக்காக நானே பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் அவர்கள் பின்னர் ஒவ்வொருவரும் வந்து ஆங்காங்கே பதில் சொன்னாலும் சரியாய் இருக்காதே... எனவே அவர்கள் பின்னால் மொத்தமாக சொல்லிக் கொள்ளட்டும்!

      நீக்கு
  15. பாடல் நிறையக் கேட்டிருக்கேன். ஆனால் இந்தப் படத்தை நான் இன்னமும் பார்த்தது இல்லை. அதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.// - பாவம் கீசா மேடம்... அந்தக் காலத்தில் ஆபீஸ் வேலையில் தட்டச்சிய ஆபீஸ் கடிதங்கள் மீண்டும் நினைவுக்கு வந்து அந்த ஞாபகத்திலேயே எழுதியிருக்காங்க போலிருக்கு.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா நெல்லை இன்னிக்கு கீதாக்கா மாட்டிக்கிட்டாங்க போல!!

      அக்காவின் இஃகி இஃகி காணலையே!! நான் ரசிக்கும் ஒன்று! செமையா இருக்கும்!! அக்காவின் ட்ரேட் மார்க், ராயல்டி!!

      கீதா

      நீக்கு
    3. ஹாஹாஹா தி/கீதா, கண்ணாடியை நன்றாகத் துடைத்துப் போட்டுக்கொண்டு பார்க்கவும்! இஃகி, இஃகி!

      நீக்கு
    4. கண்ணாடி துடைக்காமலேயே கண்ணுல பட்டுருச்சு கீதாக்கா!!! ஹிஹி!

      கீதா

      நீக்கு
  16. ஸ்ருதியின் கோணத்தில் கதை தொய்வில்லாமல் செல்கிறது. ஸ்ருதி பிசகுவதையும் கோடி காட்டி விட்டது. அடுத்து ஸ்வரண்? அவர் எந்த எழுத்தாளரின் கை வண்ணத்தில் என்ன சொல்லப் போகிறார்? காத்திருக்கேன் ஆவலுடன்.

    பதிலளிநீக்கு
  17. நல்ல பாடல். ஶ்ரீராம், நேற்று நான் லக்ஷ்மி சுப்பிரமணியன் கதை பற்றி குறிப்பிட்டதை வைத்து இந்த பாடலை போட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை பானு அக்கா.

      சும்மா நண்பர்களின் கதை ஓட்டத்துக்குப் பொருத்தமாக சில பாடல்கள் தெரிவு செய்தேன். முதலிடம் இந்தப் பாடலுக்கு.

      நீக்கு
  18. மிகவும் அருமையான ஒரு பாடல்.
    தொடர்கதையை தொடர்ந்துகொண்டு இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  19. @நெல்லை தமிழன்: அபூர்வ ராகங்கள் படத்திற்கு எம.எஸ்.வி.தான் இசை. இந்த பாடல் காட்சியில் சிம்பிளான ஆதி தாளத்தை தவறாக போடுவார் ஶ்ரீவித்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நான் பாலைவனச் சோலை, மேகமே மேகமே பாடலை நினைத்துவிட்டேன்

      நீக்கு
    2. அப்படியா?

      எனக்கு அந்த ஞானமெல்லாம் கிடையாது! நான் அவர் கண்களில் விழுந்தவன் எழவேயில்லை!

      நீக்கு
    3. ஆமாம் நெல்லை... சங்கர் கணேஷ் இசையில் மேகமே மேகமே ஒரு செம பாடல்.

      நீக்கு
  20. அற்புதமான படம் அமைந்தது ஸ்ரீவித்யாவின் கண்களால். அந்தக் காலத்தில் ஒரு பவிமர்சனம் வந்தது. ஸ்ரீவித்யாவின் கண்களுக்குள் ஒரு செட் போட்டுவிடலாம் என்று.
    அவரும் ஜெயசுதாவும் பாடும் பாடலும் மிக அருமையான விதத்தில் எடுத்திருப்பார் கெ பி.
    அருமையான பாடல் வரிகள். விஸ்வனதன் என்றே நினைக்கிறேன்.
    கதையின் அடுத்தபகுதி விஸ்தாரமாகப் போகிறது.
    ஸ்ருதி ஷ்ரவண் பெயர்ப் பொருத்தம் அற்புதம்.
    ஷ்ரவணம் என்றால் கேட்பது என்றும் அர்த்தம் வருகிறதே.

    பேதம் இல்லாமல் தொடரட்டும். திருப்பம் வந்து விட்டது.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...

      ஆம். கடல் போன்ற கண்கள்.

      கண்ணதாசன் வரிகளுக்கு எம் எஸ் வி இசை.

      நீக்கு
  21. இசைஞானம் உள்ளவர்களுக்கு நல்ல தீனியான விசயம் இப்பகிர்வு.

    எனக்கும்கூட சற்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி...

      இசையைத்தவிர உணர்வுகளும் வருகிறதே...

      நீக்கு
  22. நண்பர் john durai asir chelliah அவர்களின் பதிவு...

    எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு “சொல்லத்தான் நினைக்கிறேன்” இருக்கத்தான் செய்கிறது...!

    தமிழில் கமலஹாசனும், ஸ்ரீவித்யாவும் இணைந்து நடித்த முதல் படம்
    கே.பாலசந்தர் இயக்கிய ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ [1973]

    அந்தக் கால கட்டத்தில் ஸ்ரீவித்யாவும் கமலிடம் ஏதோ சொல்லத்தான் நினைத்திருக்க வேண்டும்... ஆனால்... திடீர் என 1978 ல் கமல்-வாணி கணபதி திருமணம் நடந்தது...

    இதன் பின்னர் கமலும், ஸ்ரீவித்யாவும் 1986ல் வெளிவந்த ‘புன்னகை மன்னன்’ வரை, கிட்டத்தட்ட 8 ஆண்டு காலம் இருவரும் இணைந்து நடிக்கவில்லை...!

    அதற்கு சிலகாலம் பின், ஸ்ரீவித்யா உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு, திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் வந்தன... ஸ்ரீவித்யா யாரையும் பார்க்க விரும்பவில்லை என்றும் சொன்னார்கள்...!

    ஆனால் ஸ்ரீவித்யாவின் “வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்” நிலையை உணர்ந்த கமல் ,உடனடியாக திருவனந்தபுரத்தில் ஸ்ரீவித்யா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் செல்ல, கமல் வருவதை அறிந்த ஸ்ரீவித்யா, அவரை உள்ளே அனுப்புமாறு டாக்டர்களிடம் தெரிவித்தார்...

    ஸ்ரீவித்யாவைப் பார்த்ததும் கமல் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி விட்டாராம்...

    “பின்னிய கூந்தல் கருநிற நாகம்..பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்..." என்று அபூர்வ ராகங்கள் படத்தில் ஸ்ரீவித்யாவைப் பார்த்து பாடிய கமல் அங்கே தனி அறையில் கண்டது :-

    பின்னிய கூந்தல் உதிர்ந்து போய், மின்னிய தேகம் மெலிந்து போய் மிகவும் பரிதாபகரமான நிலையில் காணப்பட்ட ஸ்ரீவித்யாவை...!

    அழுது கலங்கிய ஸ்ரீவித்யாவுக்கு ஆறுதல் கூறினார், கலங்கிய கண்களுடன் கமல்ஹாசன்....!

    இருவரது சந்திப்பும் மிகவும் உருக்கமாக இருந்ததாம்...

    இறுதி ஆசை நிறைவேறிய ஸ்ரீவித்யாவும் சில நாட்களில் இறந்து விட்டார்... எப்படியோ ஸ்ரீவித்யாவின் கடைசி ஆசையை கமல் நிறைவேற்றி விட்டார்...!!!

    ஆம்.. எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு “சொல்லத்தான் நினைக்கிறேன்” இருக்கத்தான் செய்கிறது...!

    "நேரில் நின்றாள் ஓவியமாய்
    என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்
    நான் பாதி அவள் தான் பாதி என கலந்தாளோ
    கண்ணில் மலர்ந்தாளோ
    நெஞ்சில் கலந்தாளே கண்ணில் மலர்ந்தாளோ

    சொல்லத்தான் நினைக்கிறேன்
    உள்ளத்தால் துடிக்கிறேன்
    வாய் இருந்தும் சொல்வதற்கு
    வார்த்தையின்றி தவிக்கிறேன்”

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி நானும் ஸ்ரீவித்யாவின் கடைசி நாட்க்ள் பற்றி சொல்ல வந்தேன் குறிப்பாகக் கமல் வந்து சந்தித்தது பற்றி நீங்களே சொல்லிட்டீங்க...

      //ஆம்.. எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு “சொல்லத்தான் நினைக்கிறேன்” இருக்கத்தான் செய்கிறது...!//

      அருமையான வரி டிடி. யெஸ் யெஸ் என்று இதனை அப்படியே வழி மொழிவேன்.

      நல்ல ஒரு பாடலையும் கோட் செஞ்சுருக்கீங்க...டிடி

      இன்னிக்கு இந்தப் பாட்டு, ஸ்ரீவித்யாவின் படம் எல்லாம் பார்த்ததும் உடனே எனக்கு நினைவு வந்த பாடல் அதிசய ராகம்...பின்னிய கூந்தல் கருநிற நாகம்...அதில் சொல்லப்படும் வர்ணனைகள்...

      கீதா

      கீதா

      நீக்கு
    2. ஆஆஅ சொல்லத்தான் நினைக்கிறேன் பாட்டு நன்கு கேட்ட பாட்டு ஆனா அதே பெயரில் படம் கேள்விப்படவில்லை... பெயரே நல்லா இருக்கு ... பார்க்கோணும்....

      கமல் அங்கிள் ஶ்ரீவித்தியாவை கல்யாணம் பண்ணியிருந்தால்கூட நிலையாக நின்ரிருப்பாரா அவவோடயே என சொல்ல முடியாதே:).. ஆனாலும் அவ பாவம்தான்...

      நீக்கு
    3. ஶ்ரீவித்யா, கேன்சரில் பாதிக்கப்பட்ட பிறகு தன்னை யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என உத்தரவு போட்டிருந்தாராம். போட்டோ எடுத்தால் தற்கொலை செய்துகொள்வேன் என்றாராம். கமல் சந்தித்தபோதும் ஶ்ரீவித்யா புகைப்படம் வரவில்லை

      நீக்கு
    4. நன்றி DD. அருமையாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.

      நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் இந்த சம்பவங்கள்.

      குட்டி பத்மினி எப்போதோ ஒரு பேட்டியில் கமலுக்கும் அவருக்கும் ஒரு இது இருந்தது என்று சொன்ன நினைவு. ஸ்ரீப்ரியாவையும் சொல்வார்கள்!

      என்னவோ போங்க... ஆனால் ஸ்ரீவித்யா கதை கலங்க வைப்பது.

      நீக்கு
    5. //மல் அங்கிள் ஶ்ரீவித்தியாவை கல்யாணம் பண்ணியிருந்தால்கூட நிலையாக நின்ரிருப்பாரா அவவோடயே என சொல்ல முடியாதே:).. ஆனாலும் அவ பாவம்தான்...//

      சரியாய் சொன்னீங்க அதிரா..

      நீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    வெள்ளியன்று அழகான பாடல்.. பலமுறை கேட்டு ரசித்திருக்கிறேன். அப்போதெல்லாம், கூடவே பாடி வரிகளும், நினைவில் நிற்கின்றன. எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். வாணி ஜெயராமின் குரல் அவ்வளவு நன்றாக இருக்கும். இந்தப் படம் தொலைக்காட்சியில் தான் பார்த்ததாக நினைவு. இதில் அனைவரின் நடிப்பும் நன்றாக இருக்கும். கே.பி படங்கள் மிகவும் விருப்பம். அவர் நடிகர்களின் நடிப்பாற்றலை நல்ல முறையில் வெளிக்கொணரும் திறமையான இயக்குனர்.

    இந்த தொடர் தினமுமா? நல்ல கதை.. மிகவும் ஸ்வாரஸ்யமாக நகர்கிறது. நேற்று ஸ்வரன், இன்று ஸ்ருதியாக அவரவர்களின் மனதின் எண்ண வெளிப்பாடுகளை கொண்டு அருமையாக பயணிக்கிறது. நல்லபடியாக இருவரும் சேர்ந்து வாழ பிரார்த்திக்கிறேன். நல்லதொரு தொடர் கதையை தந்து ஸ்ருதி பிசகாமல் மீட்டிக்கொண்டிருக்கும் (எழுத்தாளர்கள்?) அனைவருக்கும் தங்களுக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      இந்தப் பாடலைப் பிடிக்காதவர்கள் யார் இருக்கக் கூடும்!

      அவர்கள் இணைந்து வாழ இதை எழுதுபவர்கள் அருள் புரியட்டும் அக்கா!

      ஹா.. ஹா... ஹா...

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      /அவர்கள் இணைந்து வாழ இதை எழுதுபவர்கள் அருள் புரியட்டும் அக்கா/

      அந்த எழுதுபவர்களில் நீங்களும் ஒருவர் என நான் அனுமானிக்கிறேன். நீங்களும் நன்றாக இசை அறிந்தவர். இசையோடு கீதமாக ஒரு,அல்லது பல பகுதிகளையும் தாங்களும் உருவாக்கியிருக்க கூடும் என நினைக்கிறேன்.

      இந்த இரு தினங்களும் கருத்துரைகள் மிகவும் ஸ்வாரஸ்யமாக உள்ளது. அசாதாரணமாக இருநூற்றை எட்டிப்பார்க்கும் கருத்துக்கள் பிரமிக்க வைக்கிறது. தேனீக்களாக வந்து (சுறுசுறுப்புக்கு உ.ம்) கருத்துரைகளை வழங்கியவர்களுக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  24. தம்புரால ஒரு தந்தி அறுவது போல இருக்கே! யாராச்சும் ரிப்பேர் பண்ணிக் கொடுப்பாங்களா?!!!! ஆசிரியர்களேதான் ரிப்பேர் பண்ணனுமோ?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் தம்புரால ஒரு தந்தி அறுந்துச்சுனா ஸ்ருதி சரியா மீட்ட முடியாதே! வாழ்க்கையும் அப்படித்தானே......அது போல கதைல கொஞ்சம் பிரச்சனை வருது போல ஸோ அதைத்தான் சொன்னேன் ஸ்ரீராம்..

      கீதா

      நீக்கு
    2. கடவுளே.. !!!

      எங்கேயோ போயிட்டீங்க....!

      நீக்கு
  25. கதை தேஜஸ் எக்ஸ்பிரஸ் போல நல்ல வேகம். இன்றைய பகுதியின் இறுதி முடிச்சு அடுத்தது என்ன என்று எதிர்பார்க்க வைத்து விட்டது. கதாசிரியருக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களும் படித்துக் கொண்டுதானே இருப்பார்கள்... அது சரி.. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஒன்றும் பெரிய வேகம் இல்லையே பானு அக்கா... வைகியை விட கொஞ்...சம்....

      நீக்கு
  26. கதையின் தொடர்ச்சியை வெளியிடுவது குறித்து கீதா அக்கா சொல்லியிருப்பது சரிதான். திங்கள் கிழமை படித்துக்கொண்டே சாப்பிடலாம். ஏற்கனவே ஒருவருக்கு கொடுத்து விட்ட செவ்வாய் கிழமையில் பங்கு கேட்பது நியாயம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அதே எண்ணம்தான் என்றாலும் நண்பர்கள் கருத்தையும் அறிய நினைத்தேன்.

      நீக்கு
  27. கே.பாலசந்தரின் பல படங்களுக்கு வி.குமார் இசையமைத்திருக்கிறார். எம்.எஸ்.வி., மரகதமணி(அழகன்), ஏ.ஆர்.ரஹ்மான்(பார்த்தாலே பரவசம்) இசையமைத்திருக்கிறார்கள். சங்கர் கணேஷ்..? இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. ஆஆஆஆஆஆஆ மை சோங்ங்ங்ங்....... படமும் பார்த்திட்டேனே....... பல பல தடவைகள் கேட்டு ரசிச்சு சுசிச்ச... சுசிச்சுக்கொண்டிருக்கும் பாடல்.... வசனங்கள் எல்லாம் அப்படியே மனதை என்னமோ பண்ணும்.....

    கண்ணதாசன் அங்கிளின் “வனவாசம்” கிண்டிலில் வாங்கிப் படிச்சு முடிச்சும் விட்டேன் ஶ்ரீராம்.... ஆனா நினைச்ச அளவு நல்லாயில்லை... பின் முக்கால்வாசியும் அரசியல் அரசியல்.....:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா.. நீங்க படிக்கவேண்டியது அவரின் “மனவாசம்”-வாழ்க்கைக் குறிப்புகள். தமிழக அரசியல் நல்லாத் தெரிஞ்சவங்களுக்குத்தான்்”வனவாசம்” புத்தகம்

      நீக்கு
    2. வனவாசம் எல்லோராலும் ரசிக்க முடியாது அதிரா...

      நீக்கு
    3. உண்மைதான்.. ரசிச்சுப் படிச்சேன் எனச் சொல்ல மாட்டேன்ன்.. ஆனா அங்காங்கு நிறைய தத்துவ வசனம் சொல்லுவார்.. அதுக்காகத்தான் அவருடைய எழுத்துக்களை விரும்பத் தொடங்கினேன். இதிலும் அப்படி நிறைய வருது.

      நான் கண்ணதாசன் அங்கிள் எழுதியதெனில்.. அது என்னவாயினும் படிக்க விருப்பம்... என் குறிக்கோள் அவருடைய எழுத்துக்கள் எதையுமே நான் மிஸ் பண்ணக்கூடாது என்பதே:).. வாழ்க்கை வரலாறு என நினைச்சே வனவாசம் ஆரம்பித்தேன்.. ஆனா அது பார்த்தால் கருணாநிதித்தாத்தாவையும், அண்ணாதுரை அவர்களையும் திட்டித்தீர்ப்பதற்காகவே எழுதியது போல இருக்கு:)...

      ஓ நெல்லைத்தமிழன் அப்போ மனவாசம் நன்றாக இருக்குமோ? இதைப் படிச்ச பயத்தில அதைப்படிக்க யோசனையாக இருக்கு:)..

      நீக்கு
  29. கதை படிச்சு கொமெண்ட் லேட்டாத்தான் போடுவேன்... எழுத்தாளரை சொல்ல மாட்டீங்கதானே இன்று? நேற்று எழுதியவர் இல்லையே இன்று?

    பதிலளிநீக்கு
  30. ஆஆஆங்ங் பானுமதி அக்கா... ஶ்ரீராம் ... நான் ஒ கை டயரி படம் பார்த்திட்டனே நேற்றுக் கிடைச்ச லீவிலேயே:).... அஞ்டு இன்னும் பார்க்கவில்லை என்பதனை இங்கு ஆணித்தரமாகப் பதிவு செய்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்:)... அவ நித்திரையாகிட்டா பின்னேரம் , அதிரா நப் எடுக்காமல் மூவி பார்த்தேன்ன்ன்ன்ன்ன்:).... மீ இஸ் எ குட் சுவீட் 16:).... ஹையோ கல்லுகள் விழும் ஜத்தம் கேய்க்குதே:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே நினைச்சேன் ஜெர்ரியை வம்புக்கிழுக்காம டாம் போக மாட்டாரேன்னு!!! ஜெர்ரி வந்து உங்களுக்கு ஒரு ஷாக் கொடுத்தாலும் கொடுப்பார் பாருங்க....நான் பார்த்துட்டேன் அப்படினு!! டாம் தான் ஜெர்ரியிடம் எப்பவுமே பல்பு வாங்குமே ஹெ ஹெ ஹெ ஹெ...

      கீதா

      நீக்கு
    2. நான் ஹிந்தி வெர்ஷன் பார்க்கணும்னு நினைச்சுருக்கேன் அதிரா...முக்கியமா க்ளைமேக்ஸ். ஸ்ரீராம் சொல்லிருந்தார். தமிழ் க்ளைமேக்ஸ் பாக்கியராஜ் சொன்னதை பாரதிராஜா மாத்திட்டார் ஸோ ஹிந்தில பாக்கியராஜ் தானே அதை எடுத்தது. தன்னோட க்ளைமேக்ஸ் சீன் தான் வைச்சிருந்தார் நு.

      ஸோ அது மட்டும் பார்க்கணும்னு நினைச்சுருக்கேன்...ஆக்ரி ராஸ்தா படம் பெயர்..AAKHREE RAASTA

      கீதா

      நீக்கு
    3. ஹா ஹா ஹா கீதா, ஜெரி வரும்போது மீ தேம்ஸ்க்கு ஓடிடுவேனே:)...

      நீக்கு
    4. ஹா ஹா ஹா அதிரா நீங்க எங்க ஓடினாலும் ஜெர்ரி உங்க வாலைப் பிடிச்சு இழுத்துடுவாரேஏஏஏஏஏஏஏஏஏஏ! (என்ன சந்தோஷம் இந்த கீதாவுக்கு!!!!)

      கீதா

      நீக்கு
    5. ஓகே அதிரா ஓகே கைதியின் டைரி பார்த்து விட்டீர்கள் ஓகே. ஹிந்தி வெர்ஷன் க்ளைமேக்ஸ் பார்த்தீர்களா?

      நீக்கு
    6. நான் ஹிந்தி க்ளைமேக்ஸ் பார்த்துவிட்டேனே! (என்பதை பூஸாருக்குக் காதுல விழறா மாதிரி சொல்லிக்கறேன்!!!)

      அதுவும் நல்லாருந்துச்சு. தமிழ்ல கமல் போலீஸ் அதிகாரியிடம் பேசும் சீன் அதுல அமிதாப் பேசுவது அதுலருந்தே வித்தியாசமாத்தான் இருக்கு..

      கீதா

      நீக்கு
    7. நான் புரியாத பாஷையில படம் பார்க்கப் போவதில்லை:))...

      நீக்கு
    8. ​​உங்கள் விருப்பம்! ஆனால் பாஷை முக்கியமில்லை. பாக்கியராஜ் க்ளைமேக்ஸ்... அதற்காகச் சொன்னேன்! ஆனால் பார்க்காமல் இருப்பதால் நீங்கள் பெரிதாக ஒன்றும் இழந்து விடப்போவதில்லை!

      நீக்கு
  31. ஜேசுதாஸ் அவர்களுக்கு உச்சத்தைக் கொடுத்த பாடல் இந்தப் படத்தில் தான்...

    வேதத்தின் சாரமாக இந்தப் பாடல்.... அந்த கால கட்டத்தில் இந்தப் பாடலைக் கேட்டவர்கள் அனைவரும் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போயினர்....

    கடைத்தெரு தேநீர்க் கடைகளில் இந்தப் பாடல்களைக் கேட்பதற்காக காத்துக் கிடந்ததும் உண்டு..

    மற்றொரு பாடல் - கேள்வியின் நாயகனே...

    அதுவும் ஒரு பிரம்மாண்டம்....


    பழனி மலையிலிருக்கும் வேல் முருகா - சிவன்
    பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா!...

    இதெல்லாம் கவியரசர்.. அவர் ஒருவராலேயே முடியும்...

    கதையும் காட்சியும் பாடலும் இசையும் நடிப்பும் முப்பரிமாணமாக விவரிக்க இயலாதது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளி விடுமுறையா துரை அண்ணா லேட்டு இன்று...

      கீதா

      நீக்கு
    2. ஆமாம் ஜேசுதாஸிற்கு இந்தப் பாடல் மற்றும் கூந்தலிலே மேகம் வந்து மழைதருமா அந்தப் பாடல் எல்லாம் டாப்பிற்குக் கொண்டு சென்றவை. இன்னும் சில பாடல்கள் உண்டு இப்ப டக்கென்று சொல்ல முடியலை..
      கேள்வியின் நாயகனேவும் ஆமாம் செம பாட்டு அதூவ்ம்..

      கீதா

      கீதா

      நீக்கு
    3. >>> வெள்ளி விடுமுறையா துரை அண்ணா லேட்டு இன்று..<<<

      அதெல்லாம் இல்லை... 5.30 க்கெல்லாம் எழுந்தாயிற்று... வெள்ளிக் கிழமை கூட்டத்துக்கு முன் சமையல் முடிக்க வேண்டும்.. முடித்தாயிற்று..

      ஓலைக்குடிலுக்குள் ஒட்டகம் நுழைய இருப்பதாகக் கேள்விப்பட்டதும் ஏதோ மாதிரி இருந்தது...

      மற்றபடி மனமெல்லாம் மகிழ்ச்சியே...

      வாழ்க நலம்...

      நீக்கு
    4. கேள்வியின் நாயகனே பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் அந்த வரிகளுக்காகவே...

      நீக்கு
  32. முதலில் ஒரு அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி முகங்காட்டாத பதிவர்கள் போல் பெயர் சொல்ல விரும்பாத கதாசிரியர்களா யூகத்துக்கு விட க்லூ ஏதும் இல்லையே வலை ஆசிரியர்களின் கதையா எபி குடும்பத்தில்பெரும் பாலானவர்கள் சங்கீத ஞானமுடையவர்கள் என்று தெரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எம் பி ஸார்...

      நண்பர்கள் எழுத்தைப் படித்திருந்தால் கண்டு பிடித்து விடக்கூடிய எழுத்தாளர்கள்தான்!

      நீக்கு
  33. அபூர்வ ராகங்கள் பாலச்சந்தரின் மாஸ்டர்-க்ளாஸ். பாடல் அதிப்ரபலம்,

    ஸ்ரீவித்யா ஒரு அழகி -அவரை
    வாழ்க்கை வஞ்சித்துவிட்டது ஏதேதோ பழகி..

    பதிலளிநீக்கு
  34. ஸ்ரீவித்யாவின் தந்தை விகடம் R கிருஷ்ணமூர்த்தி அவர்கள், என் இரண்டாவது அக்காவின் மாமனார் வழிச் சொந்தக்காரர் (என்னும் தகவல் ஸ்ரீராமுக்கே தெரியாது என்று நினைக்கிறேன்)

    பதிலளிநீக்கு
  35. //ஸ்ரீவித்யாவின் தந்தை விகடம் R கிருஷ்ணமூர்த்தி அவர்கள், என் இரண்டாவது அக்காவின் மாமனார் வழிச் சொந்தக்காரர்// அப்படியென்றால் வெண்ணிற ஆடை ஸ்ரீகாந்தும் உங்கள் அக்காவுக்கு உறவினரா? ஏனென்றால் ஸ்ரீவித்யாவும், ஸ்ரீகாந்தும் கசின்ஸ் என்றும் அதை ஸ்ரீவித்யாவே ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார் என்றும் படித்த ஞாபகம்.


    பதிலளிநீக்கு
  36. "மேகமே மேகமே .." பாடல் ஜக்ஜித் சிங், பாடியிருக்கும் |"ஹம் நஹி தும் நஹி ஷராப் நஹி.." என்று துவங்கும் கஜலின் அப்பட்டமான காபி. தேவாவுக்கு முன் ஹிந்தி பாடல்களை தமிழுக்கு தரவிறக்கம் செய்த இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ். தேவர் படங்களுக்குத்தான் நிறைய இசையமைத்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூலப்பாடல் இதுதான் என்று தெரியாது. ஆனால் சங்கர் கணேஷ் இயல்பு தெரியும்!

      நீக்கு
  37. அபூர்வ ராகங்கள் படம் அந்த கால கட்டத்தில் ஒரு மாறுதல். இப்போது பார்க்கும்பொழுது பெரிதாக ஒன்றும் தோன்றாது. சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல், சொல்லத்தான் நினைக்கிறேன் போன்றவை இதை விட சிறப்பாக இருக்கும். நாகேஷ் ஒரு ஆறுதல். ஜெயசுதா டோட்டல் வேஸ்ட். அந்த கதாபாத்திரத்தை புரிந்து கொள்ளாமல் கெடுத்திருப்பார். கமலின் ஸ்நேகிதியாக இருந்ததால் வாய்ப்பு கிடைத்ததோ என்னவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //// கமலின் ஸ்நேகிதியாய் இருந்ததால்...////

      என்ன கொடுமை சரவணா!....

      நீக்கு
    2. இன்னும் எவ்வளவு சிநேகிதிகளோ!

      நீக்கு
  38. இன்றைய கதை படிக்க எனக்கு நெல்லைத்தமிழனின் சாயல்[எழுத்து:)] வருது:)... ஆனா நிச்சயமாக ஒன்று மட்டும் தெரியுது.. ஸ்ரீராம் நம்மைப் பேய்க்காட்டுகிறார்:).. அதாவது கதை எழுதுவது உங்களில் ஒருவர் எனச் சொல்லிட்டீங்க.. அப்பூடி எனில் இங்கு கொமெண்ட் போட்டுக் கும்மி அடிப்போரில் ஒருவர் எனில்தான் நம்மால் கண்டு பிடிப்பது இலகுவாக இருக்கும். ஆனா இது அப்படி இல்லை என்றே நம்புகிறேன்.. இது எ.புளொக் குரூப்பில் ஒருவர் அல்லது வெளியே இருக்கும் , இங்கு கொமெண்ட்ஸ் இல் கலக்காதவர்களாகவே இப்போதைக்கு எழுதுகிறார்கள் எனவும் எண்ணுகிறேன்.

    சரி எதுவாயினும் கதை சீரியல் போல நகருது. ஏனெனில் சீரியல்களில்தான், மக்களின் கொமெண்ட்ஸ் படிச்சுப்போட்டு மிகுதிக் கதையை எழுதுவார்களாம்:).. அப்போதானே கதையை எப்படியும் மாற்றி அமைக்க முடியும் ஹா ஹா ஹா அப்படித்தான் போல இதுவும் போகப்போகுது...

    விரைவாக ஸ்ருதிக்கு கல்யாணத்தைக் கட்டி வச்சிட வேண்டுகிறேன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ருதி கல்யாணம் முடிந்தது என்றே வைத்துக் கொள்ளுங்கள் அதிரா... உங்கள் விருப்பம் இன்று நிறைவேறும்!

      நீக்கு
  39. நல்ல பாடல்.

    ‘யோசித்திருக்கலாமோ’ என ஸ்ருதி நினைத்தது எதனால் என்பது வரும் நாட்களில் தெரிந்து போகும். தொடர்.. தொடருகிறேன்:).

    பதிலளிநீக்கு
  40. இந்தப் படமும் பார்த்திருக்கிறேன்.

    எல்லாப்பாடல்களுமே இதில் நன்றாக இருக்கும். இந்தப் பாடல் உட்பட. கொஞ்சம் வித்தியாசமான உறவு முறைக் கேள்விகள் கேட்கப்படும் படம்.

    கதையைத் தொடர்ந்து வருகிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!